Monday, April 27, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 11

இத்தனையும் நடந்த பிறகு இன்னமும் சிவா தன்னை காதலிப்பான் என்ற நம்பிக்கை அவள் மனதில் இல்லை.

செல்வி மரகதத்திடம், "ஆண்டி. தயவு செஞ்சு இங்கே நடந்ததை சிவாகிட்ட சொல்லாதீங்க. நான் அந்தக் கேடு கெட்டவனை லவ் பண்ணறதுக்கு முன்னாடி ஒரு வேளை சிவா என்னை காதலிச்சு இருக்கும். ஆனா இப்போ 
அதுக்கு என் மேல பரிதாபம்தான் இருக்கும். நீங்க கேட்டா நீங்க சொல்றதுக்காக என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கும். அப்பறம் காலம் பூரா அதுன்னால சந்தோஷமா இருக்க முடியாது. அதுவா என்னை லவ் பண்ணினா நான் நிச்சயம் ஒத்துப்பேன்"

மரகதம் மலர்ந்த முகத்துடன், "அவ்வளவுதானே. இன்னும் கொஞ்ச நாள்ல அவனே உன்கிட்ட சொல்லுவான் சரியா. நான் அவனாண்டே ஒண்ணியும் சொல்லலை சரியா" என்றபடி முகத்தில் குறும்புத்தனம் துள்ள விஜயாவை ஓரக் கண்ணால் பார்த்தாள்.

செல்வி, "சரி"



மரகதம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் சென்றாள்.

~~~~~~~~~

சிவாவின் அடுத்த வாராந்திர விடுமுறை தினத்தன்று ...

சிவா செல்வியை அழைத்துக் கொண்டு இந்திரா நகர் ஹண்டரெட் ஃபீட் சாலையில் இருந்த காஃபீ டே உணவகத்துக்குச் சென்றான்.

செல்வி, "என்னாத்துக்கு இங்கே கூட்டிட்டு வந்து இருக்கே சிவா? இங்கே எல்லாம் ரொம்ப காஸ்ட்லி"

சிவா, "பரவால்லை. எப்பாவுது ஒரு தடவைதானே?"

சற்று நேரத்தில் சற்று குள்ளமாக, குண்டாக சோடா பாட்டில் கண்ணாடி அணிந்த ஒரு வாலிபன் அங்கு வந்தான்.

சிவா, "ஹெல்லோ ஜெயகர். எப்படி இருக்கீங்க?"

ஜெயகர், "சாரி கொஞ்சம் லேட்டா ..." அவனது வாக்கியத்தை முடிக்க விடாத சிவா, "நான் உங்களை இங்கே மீட் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை"

ஜெயகர், "ஓ! ஆமா ... நானும் ஏதேட்சையாத்தான் இங்கே வந்தேன்"

சிவா, "வாங்க எங்க கூட ஒரு காஃபி சாப்பிட்டுட்டுப் போகலாம்"

ஜெயகர், "ஓ! அதுக்கென்ன! ஜோரா சாப்பிடலாமே"

நால்வர் அமரும் அந்த மேசையில் சிவாவும் செல்வியும் எதிரெதிரே அமர்ந்து இருந்தனர். ஜெயகர் செல்வியின் இடது புறம் அமர்ந்தான். அவனது கழுகுப் பார்வை செல்வியை அருவெறுப்பில் ஆழ்த்தியது.

மனதுக்குள் செல்வி, 'சே! இன்னைக்கா பாத்து புடவை கட்டிட்டு வந்து இருக்கேன். வெக்கங்கெட்டவன் எப்படி பார்க்கறான்' என்று அவனை வசை பாடினாள்.

சற்று நேரத்தில் சிவா, "செல்வி, சாரோட பேசிட்டு இரு. இங்கே ஒரு சின்ன வேலை இருக்கு. இதோ வந்துடறேன்" என்ற படி செல்வி எதுவும் சொல்வதற்கு முன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

செல்வி மௌனமாக அமர்ந்து இருந்தாள்

ஜெயகர், "ஹெல்லோ ஐ ஆம் ஜெயகர்"

செல்வி, "ஐ ஆம் செல்வி"

ஜெயகர், "தெரியும். ஐ.பி.எம்மில் சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்கேன். எங்க சொந்த ஊர் வேலூருக்கு பக்கத்தில். எங்க அப்பா பஞ்சாயத்து ஆஃபீஸ் க்ளார்க். அம்மா ஹவுஸ் வைஃப். எனக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. நான் பி.ஈ முடிச்சுட்டு வேற கம்பெனியில் ரெண்டு வருஷம் வொர்க் பண்ணினேன். இப்போ மூணு வருஷமா ஐ.பி.எம்மில் இருக்கேன். லாஸ்ட் ஒரு வருஷமா யூ.எஸ்ஸில் ஆன் சைட் போயிருந்தேன். இப்போ அங்கேயே என்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ணறாங்க. இன்னும் மூணு மாசத்தில் திரும்ப அமெரிக்காவுக்கு போகப் போறேன்." என்று தன் சுய சரிதையை ஒப்பித்தான்.

செல்வி, "ஓ!"

ஜெயகர், "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க"

செல்வி, "தாங்க்ஸ் ..."

ஜெயகர், "நான் உங்களை நிறைய தடவை பாத்து இருக்கேன். ஆக்சுவலி, சைட் அடிச்சு இருக்கேன். சாரி"

செல்வி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மௌனம் காத்தாள். பிறகு அவனிடம், "ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்" என்றபடி சட்டென எழுந்து அந்த உணவகத்துக்கு வெளியே வந்தாள். வெளியில் சற்று தூரத்தில் சிவா நின்று கொண்டு இருந்தான்.

செல்வி, "ஏதோ வேலை இருக்குன்னு சொன்னே. இங்கே நின்னுட்டு என்னா பண்ணிட்டு இருக்கே"

அசடு வழிய சிவா, "ஒண்ணியும் இல்லை செல்வி. ஒரு தம்மடிக்கலாம்ன்னு"

செல்வி, "உள்ளே போலாம் வா"

இருவரும் மறுபடி உள்ளே சென்றனர். ஜெயகர் சிவா ஆர்டர் செய்த காஃபியை சிரத்தையுடன் குடித்துக் கொண்டு இருந்தான்.

சிவா, "என்னங்க ஜெயகர். எப்போ ஸ்டேட்ஸுக்கு போகப் போறீங்க?"

ஜெயகர், "இன்னும் மூணு மாசத்தில். விசா வந்ததும் மொதல்லு உங்ககிட்ட கொண்டு வந்து காமிக்கறேன்" என சிவாவிடம் பய பக்தியுடன் பதிலளித்தான்.

சிவா தன் தலையைக் குனிந்து கொண்டு செல்வியின் கண்களை தவிற்தான்.

காஃபியை முடித்ததும் செல்வி, "சிவா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் போறேன் நீ பேசிட்டு மெதுவா வா" என்றபடி சிவாவின் பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து சென்றாள்.

சற்று நேரத்தில் நடந்து கொண்டு இருந்த செல்விக்கு சற்று முன்னால் சாலையோரம் சிவா ஸ்கூட்டரை நிறுத்தினான். அவனருகே வந்த செல்வி எதுவும் பேசாமல் ஸ்கூட்டரில் அமர்ந்து, "ம்ம்ம் .. போலாம்"

சிவா, "உனக்கு எங்கே போகணும்?"

செல்வி, "நீ எங்கே போகப் போறே?"

சிவா, "எனக்கு சைட்டில் கொஞ்சம் வேலை இருக்கு"

செல்வி, "சரி, நானும் வரேன்"

சிவா, "எதோ வேலை இருக்குன்னு சொன்னே?"

செல்வி, "அப்போ இருந்துது. இப்போ இல்லை. என்னை உன் சைட்டுக்கு கூட்டிட்டு போக இஷ்டம் இல்லைன்னா நீ போய்க்கோ நான் வீட்டுக்கு போறேன்"

சிவா, "ஐய்யோ! இன்னாத்துக்கு இப்போ கோவம். போலாம் வா"

அடுத்த ஒரு மணி நேரம் பயணத்தில் கழிந்தது.

சிவா வாங்கி இருந்த இடத்தின் ஒரு மூலையில் ஒரு மிகச் சிறிய கட்டிம் எழும்பி இருந்தது.

செல்வி, "நீ சொல்லவே இல்லை? இதை எப்போ கட்டினாங்க?"

சிவா, "இது ஒரு சின்ன ஷெட். அப்பறம் வீடு, கடை எல்லாம் கட்டும் போது சிமிட்டி மத்த சாமான் எல்லாம் வெக்கறதுக்காக கட்டினேன். கே.ஈ.பி கனெக்ஷன் வாங்கறதுக்காகவும்தான். இப்போ, கே.ஈ.பி மீட்டரும் போர் வெல் ஸ்விட்ச்சும் மட்டும் அதுக்குள்ளே இருக்கு"

செல்வி, "என்னா பூட்டி இருக்கு?"

சிவா, "ஒரு நிமிஷம் இரு"

சற்று நேரத்தில் ஒரு வயதானவர் அங்கு வந்தார்.

சிவா, "இன்னா சார். இன்னைக்கு வேற டாங்கர் எதுவும் இல்லையா?"

அவர், "இருக்குங்க சிவா. இப்பத்தான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி ஒரு டாங்கர் ஃபில்லப் பண்ணி அனுப்பினேன்"

சிவா, "செல்வி, இது ஷண்முகம். இங்கே பக்கத்தில் அவரோட மகன் வீட்டில் இருக்கார். போர் வெல்லெ தண்ணி ரொம்ப இருக்கு. இங்கே தண்ணி கிடைக்க மாட்டேங்குது. அதனால் போர் வெல்லில் இருந்து தினமும் தண்ணி டாங்கர்காரங்களுக்கு ஃபில்லப் பண்ணிக் கொடுக்க ஒத்துகிட்டேன். சார் தான் அதை பாத்துக்கறார்"

செல்வி, "பாத்துக்கறார்ன்னா?"

ஷண்முகம், "காலைல இருந்து சாயங்காலம் வரைக்கு வர்ற தண்ணி டாங்கருக்கு தண்ணி ஃபில்லப் பண்ணி கொடுத்து அவங்க கிட்ட பேமெண்ட் வாங்கிக்கறது என் வேலை"

செல்வி, "ஒரு டாங்கருக்கு எவ்வளோ சிவா"

சிவா பதிலளிக்குமுன் ஷண்முகம், "சின்ன வண்டின்னா நூத்தி ஐம்பது. பெருசுன்னா இருநூறு" என்றவர் சிவாவிடம், "சார், இன்னைக்கு கலெக்ஷன் நீங்க வாங்கிட்டு போறீங்களா"

சிவா, "இல்லை. நீங்க டெய்லி செய்றா மாதிரி பேங்கில் போட்டுடுங்க" என்றவன் செல்வியிடம், "நான் நினைக்கவே இல்லை செல்வி. மொதல்ல நூத்து நாப்பது அடில பெரிய பாறையா இருக்குன்னு சொன்னாங்க. இன்னும் அறுபது அடி தோண்டினா தண்ணி வரலாம்ன்னு சொன்னாங்க. நான் ஒரு கெத்துல தோண்டுங்கன்னு சொன்னேன். ஜாக்பாட் அடிச்சா மாதிரி அந்த பாறைக்கு கீழே ரெண்டு அடிக்கு தண்ணி நிக்குது. அது நெலத்துக்கு அடில இருக்கற ஒரு பெரிய ஏரி மாதிரின்னு வெச்சுக்கோயேன். வேணும்ன்னா நானே ரெண்டு மூணு டாங்கர் வாங்கிப் போட்டு தண்ணி சப்ளை பண்ணலாம்ன்னு சொன்னாங்க. நான் தண்ணி சப்ளை பண்ணினா என் ஃப்ரெண்ட் ஒருத்தன் டாங்கர் வாடகைக்கு எடுத்து ஓட்டறேன்னு சொன்னான். சரின்னு, ஷண்முகம் சார் என்னோட இன்னோரு ஃப்ரெண்டோட மாமா. வீட்டில் சும்மா இருக்கார்ன்னு சொன்னான். அவருக்கு மாசம் அஞ்சாயிரம் சம்பளம். ஒரு நாளைக்கு அஞ்சு ஆறு டாங்கருக்கு ஃபில்லப் பண்ணறார்"

அவனது வருமானத்தை மனதில் கணக்கிட்ட செல்வி, "இந்த மாதிரி எப்பவும் சப்ளை பண்ணிட்டே இருக்கலாமா?"

சிவா, "வோணுன்னா பண்ணலாம். ஒன்ஸ் வீடு கட்டி ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சதுக்கு அப்பறம் இன்னா செய்யறதுன்னு யோசிக்கறதுன்னு இப்போதைக்கு ஒரு நாளைக்கு பத்து டாங்கர் வரைக்கும் சப்ளை பண்ண் ஒத்துட்டு இருக்கேன். மாசத்துக்கு இருபத்தி அஞ்சு ஆயிரம் வரும்ன்னு நினைக்கறேன். நான் நினைச்சதை விட இன்னும் சீக்கரமா இங்கே ஸ்டார்ட் பண்ணப் போறேன்"

அவனது கடும் உழைப்புக்கும் நேர்மைக்கும் கடவுள் தரும் சிறு சிறு வரங்களை கண்டு செல்வியின் கண்கள் பனித்தன.


இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு முன்னிரவில் செல்வியும் சிவாவும் பணியாற்றும் உணவகத்தில் ...

சிவா சமையலறையில் இருந்து செல்வியில் பில்லிங்க் கௌண்டருக்கு வந்தான்.

சிவா, "செல்வி, டேபிள் நம்பர் ஃபைவுக்கு பில் போடும் போது என்னை கூப்பிடு"

செல்வி, "ஏன்?"

சிவா, "தெரிஞ்சவங்க. நான்தான் வரச் சொன்னேன். என்னோட சொந்த கெஸ்ட்ன்னு வெச்சுக்கோயேன்"

செல்வி, "சரி"

சற்று நேரத்தில் எத்திராஜ் அங்கு வந்து, "செல்வி, உனக்கு ஜெயகர் அப்படின்னு ஒருத்தனை தெரியுமா?"

செல்விக்கு முதலில் யாரென்று புலப் படவில்லை. பிறகு யோசித்த போது சிவா சில தினங்களுக்கு முன் அறிமுகப் படுத்தியவன் என்று உணர்ந்தாள்.

செல்வி, "ம்ம்ம் ... சிவாவோட ஃப்ரெண்ட். எதுக்கு கேட்டே?"

எத்திராஜ், "டேபிள் நம்பர் ஃபைவில் உக்காந்துட்டு ப்ன்னி மாதிரி தின்னுட்டு இருக்கான். கேஷா கார்டான்னு கேட்டப்ப். ரெண்டும் இல்லைன்னு சொல்றான்"

செல்வி, "இப்போதான் சிவா வந்து அந்த டேபிளுக்கு பில் போடறதுக்கு முன்னாடி சொல்லச் சொல்லிட்டுப் போச்சு"

எத்திராஜ் பக்கத்தில் இருந்த சமையல் அறைக்குள் தலையை மட்டும் நுழைத்து, "சிவா, இங்கே கொஞ்சம் வா"

சில கணங்களில் சிவா அங்கு வந்தான்.

எத்திராஜ், "யாரு அது டேபிள் நம்பர் ஃபைவில்?"

சிவா, "அது என் ஃப்ரெண்ட்" என்ற பிறகு செல்வியிடம், "அவர் பில்லை என் அக்கௌண்டில் போட்டுடு செல்வி" என்றபிறகு சமையல் அறைக்குச் சென்றான்.

சற்று நேரத்துக்குப் பிறகு ஜெயகர் செல்வி இருந்த இடத்துக்கு வந்தான்.

ஜெயகர், "ஹல்லோ. சௌக்கியமா?"

செல்வி, "ஹல்லோ"

ஜெயகர், "எப்போ உங்க வீட்டுக்கு வரது?"

செல்வி, "எதுக்கு?"

ஜெயகர், "மேரேஜ் டேட்டை டிஸைட் பண்ணத்தான்"

செல்வி "யாரோட மேரேஜ்?"

ஜெயகர், "நம்முதுதான்"

செல்வி, "எனக்கு உங்களை கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்லை"

ஜெயகர், "ஏன்?"

செல்வி, "எனக்கு சொல்ல விருப்பம் இல்லை"

ஜெயகர் இன்னும் நெருங்கி நின்று, "நான் பார்க்க நல்லா இல்லைன்னு எனக்கு தெரியும். ஆனா கவலைப் படாதே என்னால உன்னை சந்தோஷமா வெச்சுக்க முடியும்" என்றவன் மேலும் நெருங்கி, "யூ நோ பெட்ல சொன்னேன் ... "



செல்வி தன் குரலை சற்று உயர்த்தி, "தள்ளி நில்லுங்க. இல்லைன்னா செருப்பு பிஞ்சுடும்" என்றவள் அங்கிருந்து நகர்ந்து சமையல் அறைக் கதவைத் திறந்து "சிவா, நீ இப்போ உன் ஃப்ரெண்டை இங்கே இருந்து போகச் சொல்றியா இல்லை நான் செக்யூரிட்டியை கூப்பிடணுமா"

வெளியில் வந்த சிவா, "இன்னா செல்வி"

அவனுக்கு பதிலேதும் பேசாமல் ஜெயகரின் பக்கம் கையைக் காட்டினாள்.

சிவா ஜெயகரை அழைத்து வெளியில் விட்டு விட்டு வந்தான். அவனுக்கு முகம் கொடுத்துப் பேசாமல் செல்வி தன் பணியைத் தொடர்ந்தாள்.

இரவு வீடு திரும்புமுன் சிவா அவளிடம், "நைட்டு இன்னா சாப்படறே?"

செல்வி, "எனக்கு ஒரு மண்ணும் வேணாம்"

இருவரும் எதுவும் பேசாமல் ஸ்கூட்டர் நிறுத்தி இருந்த இடத்துக்கு வந்தனர்.

சிவா ஸ்கூட்டரைக் கிளப்புமுன் ...

செல்வி, "எப்போ இருந்து இந்த மேரேஜ் ப்ரோக்கர் வேலை ஆரம்பிச்சு இருக்கே?"

சிவா, "இன்னா செல்வி? அவரை உனக்கு புடிக்கலையா?"

செல்வி தன் குரலை மேலும் உயர்த்தி, "என்னைக் கேக்காம எதுக்கு அவன் கிட்ட பேசினே?"

சிவா பரிதாபமாக, "அம்மாதான் இந்த பையனைப் பத்தி விசாரிச்சு சொல்லுச்சு. ஆண்டிகிட்டயும் பேசி இருப்பாங்கன்னு நினைக்கறேன். சாரி"

இது மரகதமும் விஜயாவும் சேர்ந்து போட்ட திட்டம் என உணர்ந்த செல்வி, "உங்க அம்மாகிட்டயும் என் கல்யாண விஷயத்தில் தலையிட வேண்டாம்ன்னு சொல்லி வை. வண்டியை எடு போலாம்"

ஸ்கூட்டரில் ஏறி சிவாவுக்கு பின்னால் எப்போதும் அமருவதை விட மேலும் நெருக்கமாக அமர்ந்தாள். சிவா நெளிவது தெரிந்தது. முகத்தில் தோன்றிய குறும்புப் புன்னகையை தலை குனிந்து மறைத்தாள்.

அடுத்த வாராந்திர விடுமுறை தினத்தன்று காலை மரகத்தை அழைத்துக் கொண்டு சிவா வெளியில் செல்வதை செல்வி பார்த்தாள்.

ஓரிரு மணி நேரத்துக்குப் பிறகு இருவரும் திரும்பி வர மரகதம் அவளது வீட்டுக்கு வந்தாள்.

விஜயா, "இன்னா மரகதா? அம்மாவும் பையனும் நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு எங்கேயோ போயிட்டு வந்தா மாதிரி இருக்கு?"

மரகதம் செல்வியை ஓரக் கண்ணால் பார்த்த படி, "ஆமா விஜயா. போன காரியம் நல்ல படியா முடிஞ்சுது"

விஜயா, "என்னா காரியமா போனீங்க?"

மரகதம், "சிவாவுக்கு பொண்ணு பாக்க போயிருந்தோம். அவங்களுக்கு எல்லாம் சிவாவை ரொம்ப பிடிச்சுப் போச்சு. நாங்க ஓ.கேன்னு சொன்னா அடுத்த மாசமே கல்யாணம் வெச்சுக்கலாம்ன்னு சொன்னாங்க"

இதுவரை யாரிடமும் சொல்லாமல் இருந்தாலும் சிவாதான் தன் கணவன் என முடிவு செய்து இருந்த செல்வி அளவு கடந்த கோபத்துடன் மரகத்திடம், "சிவா என்னா சொல்லுச்சு?"

மரகதம், "அவன் இன்னா சொல்றது? என் பையன் நான் சொன்ன சொல்லை மீற மாட்டான். இப்போ நீ இன்னாத்துக்கு மொறைக்கறே?"

மேலும் அவளிடம் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியில் வந்து சிவாவின் வீட்டுக்குள் சென்றாள். பின்னால் மரகதத்தின் நமட்டுச் சிரிப்பை கவனிக்கவில்லை.

லேசாக மூடியிருந்த கதவைத் தள்ளி உள்ளே சென்ற செல்வி அப்போதுதான் உடை மாற்றி பனியனும் லுங்கியுமாக நின்று இருந்த சிவாவிடம், "என்னா தைரியம் இருந்தா நான் இருக்கும் போது வேற பொண்ணைப் போய் பாத்துட்டு வந்து இருப்பே?"

சிவா, "இன்னா சொல்றே நீ?"

செல்வி, "அம்மாவை கூட்டிட்டு போய் பொண்ணு பாத்துட்டு வந்தியே அதைச் சொன்னேன்"

சிவா, "இல்லையே. முன்னாடி என் கூட வேலை செஞ்சுட்டு இருந்தவனோட கல்யாணம் அதுக்கு போயிருந்தேன்"

அப்போதுதான் மரகதம் தன்னை ஏமாற்றி இருக்கிறாள் என்று உணர்ந்தாள்.

செல்வி, "ஓ! சரி ..." என்றபடி வெளியில் செல்ல எத்தனித்தாள்.

சிவா, "நில்லு. நீ அப்போ இன்னா சொன்னே?"

செல்வி, "ஒண்ணும் இல்லை"

சிவா, "இன்னா ஒண்ணும் இல்லை. நான் பொண்ணு பாக்க போயிருந்தேன்னு கோவமா கேட்டியே?"

செல்வி, "ஆண்டி என் கிட்ட அப்படி பொய் சொல்லி இருக்காங்க. நீ என் கிட்ட சொல்லாம் போய் பொண்ணு பாத்துட்டு வந்தியோன்னு கோவப் பட்டேன்"

சிவா, "அப்பறம் எதுக்கு நான் இருக்கும் போதுன்னு சொன்னே?"

செல்வி பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள்.

சிவா, "செல்வி, நான் உனக்கு தகுதியானவன் இல்லை"

செல்வி அவனைக் கூர்ந்து பார்த்து, "அதை நான் தான் சொல்லணும்"

சிவா, "உன் தகுதிக்கு இன்னா கொறைச்சல்? உன்னை கட்டிக்க என்னை விட நல்லா படிச்சு ஃபாரின்ல செட்டில் ஆனவங்க க்யூவில் நிப்பாங்க"

செல்வி, "ஆமா, உங்க அம்மா கூட்டிட்டு வந்தாங்களே? சோடா பாட்டில் கண்ணாடியோட கத்திரிக்காய்க்கு கையும் காலும் மொளைச்சா மாதிரி யாராவுது"

வாய் விட்டு சிரித்த சிவா, "சரி, நெக்ஸ்ட் டைம் இன்னும் நல்லா இருக்கறா மாதிரி ஆளை கூட்டிட்டு வர்றேன்"

செல்வி, "ஒண்ணும் வேண்டாம்"

சிவா அவளை நெருங்க அவனுக்கு முதுகு காட்டி சுவற்றைப் பார்த்து நின்றாள்.

பின் புறம் இருந்து அவள் இடையை வளைத்து குனிந்த் அவள் கழுத்தை முகர்ந்தபின் அவள் கன்னத்தோட கன்னம் இழைத்த படி சிவா நின்றான்.

செல்வி, "என்னை கல்யாணம் செஞ்சுக்க உனக்கு ஓ.கேவா?"

சிவா, "ஏய், நீ பி.யூ.ஸில இருந்தப்போல இருந்து நான் உன்னை லவ் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா?"

செல்வி, "ஏன் என் கிட்ட சொல்லவே இல்லை"

சிவா, "சொல்லலாம்ன்னு நினைச்சப்போதான் நீ ஃபாரின் மாப்பிளை வோணும்ன்னு சொன்னே"

செல்வி, "அந்த மாதிரி எல்லாம் யோசிக்கறது தப்புன்னு நீ எனக்கு புத்திமதி சொல்லி இருக்கணும்"

அவளை முன்புறம் திருப்பிய பின் இறுக அணைத்தான். தன் நெஞ்சில் முகம் புதைந்து இருந்த முகத்தை நிமிர்த்தி அவளது அதரங்களை சுவைக்கத் தொடங்கினான். அந்த முத்தம் நெடு நேரம் நீடித்தது.

சிவா, "எனக்கு நீ இப்பவே வேணும்"

செல்வி, "உன் முன்னாடிதானே இருக்கேன்"

சிவா, "முழுசா வேணுண்டீ" என்றபடி இறுக்கி அணைத்தான்.

செல்வி, "அப்படின்னா மொதல்ல என் கழுத்தில் ஒரு மஞ்சக் கயித்தை கட்டு"

வெளியில் பேச்சுக் குரல் கேட்க இருவரும் அவசரமாக விலகி நின்றனர்.

வீட்டுக்குள் வந்த மரகதம், "இன்னாடி இன்னாவோ ரொம்ப கோவமா வந்தே"

செல்வி, "ஆமா, வந்து என்னா விஷயம்ன்னு கேக்க வந்தேன்"

மரகதம், "கேட்டியா?"

செல்வி, "ம்ம்ம் .. கேட்டாச்சு. இனிமேல் அந்த மாதிரி எல்லாம் போவ மாட்டேன்னு உங்க புள்ளையும் என் தலையில் அடிச்சு சத்தியம் பண்ணாரு" என்றபடி தன் வீட்டுக்கு ஓடினாள்.

~~~~~~~~~~~~


அடுத்த நாள் ஸ்கூட்டர் அவர்களது சேரியை தாண்டிய அடுத்த கணம் செல்வி சிவாவை அணைத்து அவன் முதுகில் தலை சாய்த்தாள்.

அலுவக வாசலில் அவளை விட்டு சிவா உணவகத்துக்கு வேண்டியவற்றை வாங்க மார்கெட்டுக்கு சென்றான்.

லிஃப்ட்டுக்கு செல்லும் பாதையில் அவளை மறித்த படி நந்தகுமார் நின்று இருந்தான்.

செல்வி அவனைக் கண்டதும் பொங்கி வந்த கோபத்தை அடக்கியபடி அவனை தவிற்த்து மேலும் நடக்க முயன்றாள். அவளுக்கு குறுக்கே கையை நீட்டிய நந்தகுமார், "என்னம்மா வேற ஆளை செட் அப் பண்ணிட்ட மாதிரி இருக்கு?"

செல்வி, "கையை எடு. நான் போகணும்"

நந்தகுமார், "ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச ஆட்டத்தை எப்போ முடிக்கலாம்ன்னு சொல்லு"

செல்வி, "அதுக்கு வேற ஆளைப் பாரு"

அதற்குள் அங்கு அவள் அலுவகத்தில் பணியாற்றுபவர்கள் சிலர் வர அவர்களுடன் போகத் தொடங்கினாள்.

நந்தகுமார் அவளருகே வந்து, "நீயே வந்து என் கிட்ட கெஞ்சப் போறே. பாத்துட்டே இரு"


No comments:

Post a Comment