Monday, April 20, 2015

அன்பே உன் பேர் என்ன ரதியோ? - அத்தியாயம் - 3

செல்வா ஹோட்டல் பார்க்ஷெரட்டன் அடைந்தபோது , 5 நிமிடம் லேட் ஆகி விட்டது, வருங்கால மாமியாருக்கு லேட்டாக வந்ததுக்கு சாரி சொல்லி விட்டு எதிர் சீட்டில் அமர்ந்தான்.


காஞ்சனா தன் வருங்கால மருமகனை ஒரு தடவை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள். என் பொண்ணுக்கேத்த ஜோடிதான். நான் செலக்ட் பண்ணிருந்தா கூட இந்த அளவுக்கு நல்ல மாப்பிள்ளை அமஞ்சுருக்குமா? தெரியல என்று நினைத்தாள்.


செல்வா சிரித்தான். "என்னமேடம்இப்படிபாக்கிறிங்க". காஞ்சனாவுக்கும் சிரிப்பு வந்தது.

"இல்ல வருங்கால மாமியார மேடம்னு கூபிட்ற முதல் மருமகன் நீங்கதான்னு நினைக்கிறேன்."

"இன்னும் நடந்த சம்பவங்கள்ள இருந்து என் மனசு விடுபடல. என்ன செல்வானே கூப்பிடுங்க ப்ளீஸ"


"ஓகே செல்வா ஆனா உங்க கல்யாணம் முடிஞ்ச பின்னாடி நா உங்கள மாப்ளன்னுதான் கூப்பிடுவேன், நீங்களும் என்னை அத்தைன்னு கூப்பிடனும்" என்று அன்புடன் நிபந்தனை போட்டாள்.


சிரித்தபடி ஓகே சொன்னான் செல்வா.

"சொல்லுங்க என்ன விஷயம்"

"அது சரியாய் தவறா இல்லை உண்மையா பொய்யா அப்பிடிங்கரத பத்தி நான் பேச வரலை. உங்கள பத்தி நாலு இடங்கள்ள விசாரிச்சேன்.

அதுனால உங்க மேல எனக்கு நம்பிக்கை வந்துருக்கு.

உங்க கிட்ட காயதிரிய பத்தி சில விஷயங்கள் நான் பேச வேண்டி இருக்கு"


அவள பத்தி என்ன பேச வேண்டி இருக்கு, என்று எரிச்சல் ஆனான் செல்வா. சரி நம்மள நம்பி, மதிச்சு ஏதோ சொல்ல போறாங்க என்னன்னுதான் கேக்கலாம் என்று உன்னிப்பாக கவனித்தான்.

"நானும் என் husband மூர்த்தியும் 25 வருஷத்துக்கு முன்னால love marriage பண்ணிகிட்டோம். ரெண்டு பேரும் வேற ஜாதி மற்றும் மொழியே வேற. ஒரு பொதுநண்பர்கள் மூலம் பழக்கம்.

அவர் சென்னைல இருந்து வந்து பெங்களூர்ல காலேஜ்ல படிக்கும்போது அவர சந்திச்சேன். அவரோட நல்லமனசு, என் சித்தியோட கொடுமை, அவர் ஆறுதலாக பேசியது, என் கிட்ட உண்மையா நடந்துக்கிட்டது, எல்லாம் எனக்கு புடிச்சிருந்தது.

ரெண்டு பேரும் நண்பர்கள் உதவியோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்கள பார்த்து கிண்டல் பண்ணுன சொந்தகாரங்க பாத்து பொறாமபடனும்னு நாங்க ரெண்டு பெரும் கடுமையா உழைச்சோம். நாங்க உடனே குழந்த வேணாம்னு தள்ளி போட்டோம். நாலு வருஷம் கடுமையா உழைச்சு பெங்களூர்ல வீடு வாங்கினோம் அப்பதான் முதல் குழந்தை காயத்ரி பொறந்தா.

சின்ன வயசுலிருந்து அவள் நல்ல சூடிகையாக இருந்தாள். என் இறந்து போன அம்மா மாதிரி ஜாடை, புத்திசாலிதனம் எல்லாம் இருந்தது. அவர் பிசினஸ்ல கால் ஊன நிறையநாள் எடுத்தது, எனக்கும் ஒரு ஹாஸ்பிடல வேலை. வேலை அதிகம் இருந்ததால அவளோட நிறைய நேரம் செலவழிக்க முடியலை. அதுனால ஒரு வேலைக்காரிய வேலைக்கு வச்சோம். தினமும் எங்க ஒருத்தர்ல யாராவது வீட்டு வந்த பின்னால வேலைக்காரி அவ வீட்டுக்கு கிளம்புவா. பொதுவா இரவு 8 இல்ல 9 மணி ஆயிடும்.


காயத்ரி அப்போ ஒன்னாவது (5 years) படிச்சுக்கிட்டு இருந்த சமயம், ஒருநாள் வழக்கம் போல நான் 8 மணிக்கு வீட்டு வந்தேன.வீட்ல காயத்ரி அழுது கொண்டிருந்தா? வீடு தொறந்து கிடந்தது. வீட்டில பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. வேலைக்காரியை வேற காணவில்லை.


என்னம்மா என்ன ஆச்சு? வேலைக்காரி எங்க போனா? என்ன கண்ணா ? என்று என் பொண்ணுகிட்ட கேட்ட போது, என் husbandவந்துட்டார். அழுதுகிட்டு இருந்த குழந்தைய தூக்கிகிட்டு, போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் குடுத்தோம். எங்களுக்கு நகைகள் திரும்ப கெடைக்கும்னு நம்பிக்கை இல்லை.

அடுத்தநாள் ஸ்கூல்ல இருந்து எனக்கு போன் வந்தது. காயத்ரியோட கிளாஸ் மிஸ் பேசுனாங்க. காயத்ரி அழுது கிட்டே இருக்கா.புதுசா யார பாத்தாலும் பயப்புடுரா. உடனே கிளம்பி வாங்க. நானும் உடனே அலறி அடிச்சுகிட்டு போனேன்.

அங்கே ஸ்கூலில் அழுதுகொண்டே இருந்த காயத்ரியிடம் என்னம்மா என்ன பிரச்னை அப்படின்னு கேக்க அவள் அழுது கொண்டே எனக்கு பயமா இருக்கும்மா, உவ்வா (vomit) வருது, என்னம்மா என்ன பிரச்னை என்று கேட்டதற்கு சரியான பதில் இல்ல.
நான் டாக்டர் என்கிறதால எனக்கு சந்தேகம் வந்தது. எதுக்கும் காயத்ரிய குழந்தை நல மருத்துவர் கிட்ட காண்பிக்க்கலாம்னு முடிவு பண்ணினேன்.


டாக்டரும், முழுக்க செக் பண்ணிட்டு, குழந்தை ஏதோ பாத்து பயந்திருக்கு, எதுக்கும் மனநல மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போக சொன்னார்.

இது பெண் குழந்த சம்பந்தப்பட்ட விஷயம் அப்படிங்கரதல நானும் என்னோட டாக்டர் நண்பர்கள் மூலமாக புகழ்பெற்ற மனநல மருத்துவ நிபுணர் பர்வதம்மாகிட்ட appointment வாங்கினேன்.

மனநல மருத்துவர் பர்வதம்மா அவளை செக் பண்ணிட்டு, ஹிப்னோடிசம் உதவியோட என்ன நடந்து
நடந்ததுன்னு கண்டு புடுச்சாங்க".

அந்த இடத்தில் நிறுத்திய காஞ்சனா தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்தார்.

"வேலைக்காரிக்கு எங்க வீட்டு மேல ரொம்ப நாளா ஒரு கண். நாங்க ரெண்டு பேரும் லேட்டா வர்றது அதுக்கு வசதியா போச்சு.அவள் எங்க வீட்டில் திருட திட்டம்போட்டாள். அவள் புருஷன் ஒரு கைதேர்ந்த திருடன். பொண்டாட்டியும் புருஷனும் சேர்ந்து திட்டம் போட்டு பலவீடுகள்ல திருடி இருக்காங்கன்னு எங்களுக்கு பின்னால தெரிய வந்தது.

அன்றைய தினம் அவன் வந்து வீட்ல பீரோவ ஒடச்சு திருடும் போது காயத்ரி பாத்துட்டா. என்ன பண்றிங்க uncle, என்று கேட்டவளை அந்த திருடன் கண்ட எடத்துல கை வச்சுருக்கான்.

சின்ன பொண்ணு விபரம் தெரியாதவ, அதுனால காயத்ரிக்கு என்ன நடக்குதுன்னு தெரியல. வலிக்குது அங்கிள் விடுங்க அங்கிள் என்று அவ அழ ஆரம்பிக்க," இந்த இடத்தில காஞ்சனா அழ ஆரம்பித்தாள். செல்வாக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை,கண் கலங்கினான்.


அதற்குள் கண்களை துடைத்து மேலும் தொடர்ந்தாள்.

"அப்போது மற்ற ரூமில் இருந்து வந்த வேலைக்காரி என்னையா குழந்தைகிட்ட என்ன அசிங்கம் பண்ணுற என்று சண்டை போட்டு அவனை விரட்டி அடித்திருக்கிறாள.


அந்த அதிர்ச்சியில் இருந்து காயத்ரி விடுபட 3 மாதம் treatment கொடுத்தோம். அவள் முழுக்க குணம் அடைந்தாலும், இந்த கொடூர அனுபவத்தால காயத்ரிக்கு புதிய ஆட்கள, அதிலும் குறிப்பா ஆண்களை கண்டால் பயம். ஆண்களில் குறிப்பாக அப்பா, மற்றும் தெரிந்தவர்கள் என்றால் மட்டும் பேசுவாள். "

காலேஜ் படித்த போது நிறைய ஆண்களை தனக்கு பின்னால் அலைய வைத்தது இதுக்கெல்லாம் காரணம், அந்த சம்பவம் அவ மனதுள ஆழமான காயமா பதிஞ்சதுதான்.

இப்போ கூட நீங்க தப்பு பண்ணிருக்க மாட்டிங்கன்னு எனக்கு தெரியும். அதுக்கு காரணம் அவள் சொன்ன statements முன்னுக்கு பின் முரண்பாடாக இருந்தது. ஒரு அம்மாவா அவள நான் நம்பலாம், ஆனா ஒரு டாக்டரா அவள நான் நம்ப மாட்டேன்.

ஆனா என்ன, உங்க அப்பா பொண்ணுங்க 'அந்த விஷயத்துல' பொய் சொல்ல மாட்டாங்கன்னு, கொஞ்சம் செண்டிமெண்டா நம்பி உங்களைய நம்பாம போய்ட்டார்.

இப்போ கூட கல்யாணத்த என்னால நிறுத்த முடியும். ஆனா என் பொண்ண பத்தி புரிஞ்சவங்க அவள கல்யாணம் பண்ணிக்க யோசிப்பாங்க. நீங்க என்ன சொல்றிங்க."

செல்வாவுக்கு மனது கனத்தது, இப்படி ஒரு காயம் காயத்ரிக்கு இருக்கும் என்று அவன் நினைத்து பார்கவில்லை. இப்போது கல்யாணத்தை நிறுத்தினால் விளைவுகள் கடுமையாக இருக்கும். காயத்ரிக்கு எதிர்காலத்தில் கல்யாணம் நடக்குமா என்பது கேள்விக்குறி ஆகிவிடும்.

இந்த திருமணம் என்பது இரண்டு குடும்பங்களின் சேர்க்கை. இப்போ நடக்கிற இந்த கல்யாணத்தால் பாதிக்கபட போறது நான் மட்டும்தான். கல்யாணம் நடக்கட்டும், காயத்ரி மனதை மாற்ற நான் முயற்சி செய்கிறேன். ஒரு வேளை, முடியவில்லை என்றால் இருவரும் பிரிந்துவிட வேண்டியதுதான்.



இப்போதைக்கு இதுதான் சிறந்த முடிவு என்று நினைத்த செல்வா காஞ்சனாவை பார்த்து " இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க அத்தை" என்றான்.

முகத்தில் சிரிப்பு மலர "நன்றி மாப்பிள்ளை. முதல்ல என்ன அத்தைன்னு கூப்பிட்டதுக்கு, ரெண்டாவது அப்பிடி சொன்னதன் மூலம் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கு. என் ஒரேஆசை என்னன்னா உங்க மனசு புரிஞ்சு உங்களோட அவ குடும்பம் நடத்தணும், எனக்கு பேரனோ பேத்தியோ நீங்க ரெண்டு பேரும், சீக்கிரத்தில் ரெடி பண்ணி கொடுக்கணும்" அவன் வெக்கபடுவதை பார்த்து சிரித்தாள் காஞ்சனா.

"அத்தை உங்ககிட்ட இன்னும் கொஞ்சம் விஷயங்கள கேக்கணும்".

"என்ன தெரிஞ்சுக்கணும் மாப்பிள கேளுங்க."

"காயத்ரியோட விருப்பு வெறுப்பு, புடிச்ச மற்றும் புடிக்காத விஷயங்கள் எல்லாம் எனக்கு சொல்லணும். இப்போ முடிஞ்சா சொல்லுங்க இல்ல போன்ல சொன்னாலும் ஓகே தான்."

"இப்போ ஓகே மாப்பள, ஆனா நாளைக்கு டைம் இருக்காது, கல்யாணத்துக்கு அப்புறம் அவள பத்தி நிறைய சொல்றேன்"

அவர்கள் இருவரும் ஒரு மணி நேரம் பேசிய பிறகு, காஞ்சனா எழுந்திரிக்க முயல, செல்வா "அத்தை ஒரே ஒரு விஷயம். இந்த கவர்ல முக்கியமான டாகுமென்ட் வச்சிருக்கேன். நான் என்னைக்கு இத காயத்ரிகிட்ட கொடுக்கணும்னு சொல்றிங்களோ அன்னைக்கு, அவ கிட்ட நீங்க கட்டாயம் குடுக்கணும். இது என் விருப்பம். "

"அவளுக்கு எதாவது கிப்டா? "

"ஆமா அது மாதிரி தான்" என்று சொல்லி, சிரித்து கொண்டே கிளம்பினான் செல்வா.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாள் மட்டுமே இருப்பதால் மூர்த்தி காஞ்சனா தம்பதியினர் திருவேற்காடு கோவிலுக்கு சென்று திருமண ஏற்பாடு செய்தனர். திருமணத்துக்கு வேண்டிய பூ, பழம், மற்றும் கோவில் பூஜைக்கு தேவியான பொருட்களையும் கோவிலுக்கு அருகில் உள்ள கடையில் வாங்க ஏற்பாடு செய்தனர்.

இடையில் இன்னும் ஒருநாள் மட்டும் இருக்க மூர்த்தி காஞ்சனா தம்பதியினர், ஜம்புலிங்கம் பார்வதி தம்பதியினரை சந்திக்க காலை 9 மணிக்கு செல்வா வீட்டுக்கு வந்தனர்.

கல்யாண வேலைகளை பெண் வீட்டார்கள் பார்ப்பதால் மாப்பிள்ளை வீட்டுக்கு வேலை இல்லை. மொத்தம் 30 -35 பேர் கல்யாணத்துக்கு வருவார்கள் என்று இருதரப்பினரும் ஒரு லிஸ்ட் ரெடிசெய்து இரண்டு கார்களில் பத்திரிகை வைக்க தனி தனியாக சென்றனர்.

செல்வாவுக்கு வீட்டில் தனியாக இருக்க போரடித்தது. அவன் உயிர்நண்பன் செந்தமிழ் செல்வன் அவனை பார்க்க வந்திருந்தான்.செந்தமிழ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அவன், நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவன். அவன் அருகில் இருந்தால் செல்வாவுக்கு பொழுது போவதே தெரியாது. அவனுக்கு காலையில் தான் தன் திடீர் திருமணத்தை தெரிவித்தான் செல்வா.

" ஏன்டா எனக்கு தெரியாம எப்பிடிடா புடிச்ச? காலேஜ்ல பொண்ண கண்ட ஒடுவ? அப்பா அம்மா பாத்த பொண்ணதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு படம் காம்பிச்ச? இப்ப என்னடா ஆச்சு?".

செல்வாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சமாளிக்க முடிவு செய்தான். "ஆபீஸ்ல தான் அவள பார்த்தேன்.எனக்கு புடிச்சதால, அம்மா அப்பா கிட்ட சொல்லி சீக்கிரமே முடிச்சுட்டோம். எனக்கு 28 வயசு அடுத்த மாசம் ஆரம்பிக்கிறதால ஜோசியர் ஆலோசனைப்படி இந்த அவசர ஏற்பாடு" என்று சொன்னான்.


"சரி பொண்ணு பேரன்ன? என்ன படிக்கிறா? அப்பா அம்மா என்ன பண்றாங்க? கூட பிறந்தவர்கள் விபரம் சொல்லு" என்று கேள்விகளை அடுக்கினான். செல்வா தனக்கு தெரிந்த விபரங்களை வைத்து சமாளித்தான்.

"டேய் நாளைக்கு காலைல 6 .30 - 7 .30 முகூர்த்தம், நீ இன்னைக்கு நைட்டே வந்திடு". செல்வா எல்லார் கூடவும் நன்றாக பழக கூடியவனாக இருந்தாலும் அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் ஒருசிலரே. செந்தமிழ் உள்ளூர் என்பதால் அடிக்கடி பார்க்க வந்து விடுவான்.

"சரிடா நான் இரவு வருகிறேன்" என்று சொல்லி விட்டு கிளம்பினான் செந்தமிழ்.

இதுக்கு இடையில் செல்வாவின் அலைபேசியில் அழைப்பு வர, யார் அழைப்பது என்று யோசித்து கொண்டே போனை எடுக்க,காஞ்சனா " என்ன மாப்பிளை போர் அடிக்குதா" என்று சிரித்தபடி விசாரிக்க, "இன்னும் ஒரு நாள்தான் கவலைபடாதிங்க, அப்புறம்24 மணி நேரமும் உங்களுக்கு பத்தாது," என்று கிண்டல் செய்தாள்.

"போங்க அத்தை நீங்க வேற? என்ன விஷயமா கூப்பிடிங்க?"

"மாப்பிள்ளை உங்க அம்மா அப்பா கிட்ட நாளைய ப்ரோக்ராம் பத்தி சொல்லிட்டேன். உங்ககிட்ட அதை பத்தி சொல்லலாம்னுதான் கூப்பிட்டேன். நீங்க 3.30-4 மணிக்கு எழுந்து குளித்து 5 மணிக்கு கிளம்பி கோவிலுக்கு 6 மணிக்குள்ள வந்துடனும். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. உங்களுக்கு, அப்பாவுக்கு பட்டு வேஷ்டி சட்டை. அம்மாவுக்கு பட்டுபுடவை.உங்களுக்கு
தங்க சங்கிலி மோதிரம் எல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்தில உங்ககிட்ட வந்து சேரும். "

"எதுக்கு அத்த செயின் மோதிரம் எல்லாம். எனக்கு போட்டு பழக்கம் இல்ல" என்று மறுத்த செல்வாவிடம்,

" இல்ல மாப்ள இது சம்ப்ரதாயம் நீங்க மறக்காம ஏத்துக்கணும் ப்ளீஸ் என்றாள் காஞ்சனா." சொன்னது போல் அனைத்தும் வந்து சேர்ந்தன.

இதற்கிடையில் செல்வாவுக்கு காயத்ரியை பத்தி நினைக்கையில் டென்ஷன். அவ இதை பத்தி நினைப்பாளோ? ஒரு வேலை எனக்கு மட்டும்தான் டென்சனா இருக்கா? அவகிட்ட இருந்து ஒரு போன்கால் கூட வரலையே என்று யோசித்தான்.

ஆம்பள பையன் நாமளே இன்னும் அவள கூப்பிடல, அவமட்டும் எப்படி கூப்பிடுவன்னு எதிர்பார்க்கலாம் என்று தன்னைதானே சமாதானபடுத்தி கொண்டான்.
திரும்ப யோசித்து பார்த்ததில் அவளை பொறுத்த வரையில் இது கட்டாய கல்யாணம். அதனால நாம ஒன்னும் எதிர்பார்க்க முடியாது. சீக்கிரமா அவ மாறுவா-ன்னு எதிர்பார்ப்பது தவறு. சரி, சில விஷயங்களை அதிரடியாக செய்வோம் என்று மனதுக்குள் முடிவெடுத்தான்.

காலை 7 மணி அளவில் திருமணம் திருவேற்காடில் எளிய முறையில் முடிய. புதுமண தம்பதியினர் இருவரையும் கடவுள் முன்னிலையில் நண்பர் மற்றும் உறவினர் வாழ்த்தினர்.

ஜோடி பொருத்தம் ஜோர் என்று செந்தமிழ் சொல்ல அனைவரும் ஆமோதித்தனர்.

தாலி கட்டும்போது தான் செல்வா காயத்ரியை கூர்ந்து கவனித்தான். அகலமான கண்கள், மைதீட்டியதால் இன்னும் அழகானது.நீண்டநாசி. சிறிய இதழ்கள்லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்திருந்தது. மெல்லியஉடல். மெலிந்த இடை. அளவான அழகியமார்பு.மொத்தத்தில் அவள் ரதி போல அவன் கண்ணுக்கு தெரிந்தாள்.

காயத்ரி ஓர கண்ணால் செல்வாவை பார்த்தாள். செல்வா எப்போதுமே பெண்கள் ஒருமுறை பார்த்தால் மற்றொரு முறை பார்க்க வைக்கும் வசீகரமான தோற்றம். காலேஜில் அனைவரும் அவனை Mr பெர்பெக்ட் என்று அழைப்பது வழக்கம்.

கூட இருந்த செந்தமிழ் கலாட்டா செய்து எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தான்.

ஜம்புலிங்கதுக்கு சொந்தமான நீலாங்கரையில் உள்ள பங்களா மற்றும் பார்ம்ஹவுஸ் இடத்தில மாலை 5 மணிக்கு receptionஏற்பாடு செய்து இருந்தார். மாப்பிள்ளை வீடு செலவு என்பதால் ரிசப்சனுக்கு பணத்தை தண்ணீர செலவழித்தார் ஜம்புலிங்கம்.இரு தரப்பில் இருந்தும் 1000 பேர் எதிர் பார்க்கப்பட்டனர். 4 மணியில் இருந்தே கூட்டம் கலை கட்டியது. லக்ஷ்மன்ஸ்ருதி musical nights ஏற்பாடு செய்து இருந்தார்.

சரியாக 5 மணிக்கு கோட்சூட்அணிந்து செல்வாவும், பளபளக்கும் பட்டுபுடவையுடன் காயத்ரியும் ரிசப்சன் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தனர். செந்தமிழ் எல்லாரையும் கலாய்க்க, செல்வாக்கு சிரிப்பு தாங்கவில்லை. மனம் விட்டு சிரிக்கும் செல்வாவை புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தாள் காயத்ரி.

6 மணிக்கு ஆரம்பித்த பாட்டு கச்சேரி சுவையாக களைகட்ட, 8 மணி அளவில், செந்தமிழ் மேடை மீது ஏறினான்.

" அன்பு நண்பர்களே ஒரு முக்கிய அறிவிப்பு. இப்போ நான் ஒருத்தர பாட வைக்க போறேன். அவருக்கு சின்ன வயசிலே இருந்து கர்நாடிக் சங்கீதம்னா உயிர். அவர் காலேஜ்ல கொஞ்சம் ஹிந்துஸ்தானி மியூசிக் கத்துகிட்டார். இப்போ சூப்பர் சிங்கர் போட்டியில,அடுத்த மாதம் நடக்க போற இறுதி போட்டிக்கு ஏற்கனவே தேர்வானவர். அவர் இந்த மேடைல பாடணும்னு இங்க கூடி இருக்கிற1000 க்கும் மேலான ரசிகர் சார்பாக கேட்டுக்கிறேன். He is none other than செல்வா."

கூட்டத்தில் இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்ப "செல்வா செல்வா செல்வா" என்று கூட்டம் மந்திரம் இசைத்தது.

செல்வாவுக்கு பாட தெரியுமா? காயத்ரிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளுக்கு ஓரளவு சங்கீத ஞானம் உண்டு. அம்மா கட்டாயபடுத்தி கர்நாடிக் மியூசிக் கத்துக்க சொன்னதால் சிலவருடங்கள் கத்து கொண்டாள். தொடர
முடியாமல்விட்டுவிட்டாள்.

செல்வா மேடையில் இருந்து இறங்கி தன்னிடம் வந்த செந்தமிழை பார்த்து "ஏன்டா உனக்கு அறிவில்லையா? ஏன் இப்படி பண்ணுற" என்று திட்ட ஆரம்பிக்க. காயத்ரியை பார்த்து "தங்கச்சி நீதாம்மா என்ன காப்பாத்தனும். கொஞ்சம் இவன் கிட்டசொல்லு please."



"சாரிடா, நீ என் நண்பன்கிரதால உரிமை எடுத்து சொல்லிட்டேன். அட்லீஸ்ட் ஜனகனமன பாடி என் மானத்தை காப்பாத்து". என்று கெஞ்சினான். காயத்ரியை பார்க்க அவள் please என்று கண்ணால் கெஞ்ச, சரி புது பொண்டாட்டிக்காக ஒரு பாட்டு பாடலாம் என்று மேடைக்கு ஏறினான.

"நண்பர்களே இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. இதை என் மனைவி காயத்ரிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்," என்று சொல்ல,கூட்டத்தின் ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆனது.

" சம்சாரம் என்பது வீணை,
சந்தோஷம் என்பது ராகம்,
சலனங்கள் அதில் இல்லை,
மனம் குணம் ஒன்றான முல்லை."

என்று பாட ஆரம்பிக்க, குண்டூசி போட்டால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தம். அந்த பாடல் அனைவறைவும் கட்டி போட்டது.தேனினும் இனிய செல்வாவின் குரலில், கூட்டம் மதி மயங்கி நின்றது. காயத்ரி தன் கண்களை தன்னாலே நம்ப முடியவில்லை.இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

பாடல் முடிந்த போது எல்லோரும் எழுந்து நின்று கை தட்ட, காயத்ரி சுயநினைவுக்கு வந்து கைதட்ட ஆரம்பித்தாள். தன் இருக்கைக்கு திரும்பிய செல்வாவுக்கு கை கொடுத்தாள். unbelievable , superb . இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே அவள் வாயில் இருந்து வந்தது. 


No comments:

Post a Comment