Tuesday, April 21, 2015

அன்பே உன் பேர் என்ன ரதியோ? - அத்தியாயம் - 6

உச்சித் குமார் பற்றி தெரிய நாம் இரண்டு வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

அப்போது சென்னையின் நந்தனத்தில் உள்ள புகழ் பெற்ற இருபாலர் பயிலும் கலை கல்லூரியில் B .Com இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தாள் காயத்ரி. எல்லோரையும் தனது அழகால் கவர்ந்த காயத்ரியை சுற்றி எந்நேரமும் வாலிபர்கள் கூட்டம்,அங்கு அவள் ஒரு கனவு கன்னியாக ஆராதிக்கபட்டாள்.

உச்சித் குமார் ஒரு வட இந்திய இளைஞன், கல்லூரியில் M .Com படித்துகொண்டிருந்தான். பிறந்து வளர்ந்தது ஊட்டியில். அவன் அப்பா ஊட்டி மற்றும் குன்னூரில் டீஎஸ்டேட் ஓனர். அவனுக்கு பல பெண் நண்பர்கள் உண்டு. அழகான பெண்களை மயக்கி சீரழிப்பதே அவன் பொழுது போக்கு.

காயத்ரிக்கு சின்ன வயதில் ஏற்பட்ட அனுபவத்தால் ஆண்களிடம் இருந்து தள்ளி இருப்பாள். அவளின் நெருங்கிய பிரெண்ட் பூஜா மட்டுமே, மற்ற பெண்களுடன் அவள் ஹாய் சொல்லும் அளவுக்கு பழக்கம். மற்ற பெண்களுக்கு காயத்ரி அழகை பார்த்து பொறாமை அதிகம் என்பதால், காயத்ரியுடன் அதிகம் பேசுவதில்லை.



ஒருநாள் சீனியர் farewell பார்ட்டி அருகில் இருந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எல்லாரும் கட்டாயம் போக வேண்டியிருந்ததால் காயத்ரியாலும் தவிர்க்க முடியவில்லை, அம்மாவிடம் போன் செய்து லேட் ஆகும் என்று தெரிவித்தாள்.
மாலை ஏழு மணிக்கு, ஆரம்பித்த பார்ட்டியில் இருந்த நண்பர்கள் உச்சித்தை கிண்டல் செய்து விளையாடி கொண்டு இருந்தனர்.

உச்சித் பாத்ரூம் சென்று திரும்பி வரும் வழியில் காயத்ரியை கண்டான். அவனுக்குள் வியப்பு இந்த அழகி எப்படி இத்தனை நாள் நம்ம கண்படாமல் இருந்தாள்? சரி நாம போய் பேச வேண்டியது தான் என்று முடிவு செய்து, காயத்ரி அருகில் வர, பூஜா அவனை கண்டு "ஹாய் உச்சித், எப்படி இருக்கீங்க" என்று நலம் விசாரித்து, காயத்ரியிடம் "இது நம்ம சீனியர் உச்சித் குமார், MCOM பைனல் இயர், நல்ல டான்ஸ் ஆடுவார், இவருக்கு நிறைய நண்பர்கள்" என்று அறிமுகபடுத்தி வைத்தாள்.

உதடு பிரியாமல் சிரித்தவளை கண்டு தேன் குடித்த வண்டு போல ஆனான் உச்சித். "ஓகே பை பை" சொல்லி விட்டு தனது நண்பர்களுடன் சேர, அங்கே டான்ஸ் பார்ட்டி ஆரம்பமானது. ஹிந்தி பாட்டுக்கு சிறப்பாக நடனம் ஆடிய உச்சித்தை பார்த்து அனைவரும் கைதட்டி உற்சாகபடுத்தினர். காயத்ரியும் அந்த பாராட்டில் கலந்து கொண்டாள்.

உச்சித் தன்னை அடிக்கடி திரும்பி பார்ப்பதை அறிந்த காயத்ரி அவனிடம் கொஞ்சம் விளையாடி பார்க்கலாம் என்று நினைத்து அவனுக்கு ஹாய் என்று SMS அனுப்பினாள். திரும்ப ஹாய் என்று பதில் அளித்த உச்சித், யாரது என்று கேட்க, காயத்ரி என்ற பதில் வந்ததும் உற்சாகமானான். பக்கத்தில் இருந்த பூஜாவிடம் அவன் பதிலை காண்பிக்கஅவளோ "வேணாண்டி பிரச்னை ஆயிடும். அவன் பொம்பளபொறுக்கி, பணக்காரன் வேற" என்று சொல்ல, "சரிதான் போடி பெரிய பயந்தான்கொள்ளி, இப்ப பாரு வேடிக்கைய" என்று சொல்லி, I miss you என்று SMS செய்ய, I too என்ற பதில் வந்தது.

திரும்ப பதில் அனுப்பாமல் தனது செல்போனை ஆப் செய்து வைத்தாள். உச்சித்க்கு பதில் வராமல் போக, காயத்ரியை தேடி அவள் இடம் வந்து சேர்ந்தான். "ஹாய்" என்று சொல்லி விட்டு, "Can you join with me for a dance? (நாம கொஞ்சம் டான்ஸ் ஆடலாமா)"என்று கேட்க "ஓகே" என்று பதில் சொல்லி அவனுடன் ஆட போனாள். 


அவனை பார்த்து ஏன்டா? பொண்ணுங்கன்னா கிள்ளு கீரையா, உனக்கு இன்னைக்கு நல்ல பாடம் புகட்டுறேன்னு நினைத்து கொண்டே, அங்கே இசைக்கப்பட்ட பாடலுக்கு நடனம் ஆட தொடங்க, உசித்துக்கு நம்ப முடியவில்லை. ஒரு அழகான பெண் அதுவும் இந்த கல்லூரியின் கனவு கன்னி தன்னுடன் ஆடுகிறாள் என்று. எல்லா இளைஞர்களும் அவனையே பொறாமையாக பார்ப்பது போல் நினைத்தான்.

நடனம் உச்ச கட்டத்தை அடைய, ஏற்கனவே மது அருந்தியதால் இருந்த போதையை விட காயத்ரியின் அருகாமை அதிக போதையை தர, தடுமாற ஆரம்பித்தான். அவள் இடுப்பில் கைவைத்து ஆட இழுக்க காயத்ரிக்கு கோபம் தலைக்கு ஏறியது,அரங்கமே அதிர பளார் என்று அறைந்து, "பொறுக்கி ராஸ்கல், கண்ட எடத்தில கை வைக்கிற" என்று கத்த, அவளது கிளாஸ் நண்பர்களும் , உச்சித் மேல் பொறாமையில் வெந்த அவன் கிளாஸ் நண்பர்களும் அவனை புரட்டி எடுத்தனர்.

அவமானத்தில் வெந்த உச்சித் அவளை முறைச்சு பார்க்க "போடா" என்று கை அசைத்து அவனை வெளியேற சொன்னாள். அந்த சம்பவத்திற்கு பிறகு உச்சித் கல்லூரிக்கு வருவது குறைந்தது. கடைசி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் எழுத வந்து விட்டு ஊட்டி திரும்பினான். இருந்தாலும் அவன் மனதில் அந்த அவமானம் அழியாத தழும்பாக பதிந்தது.

அதற்கு பிறகு காயத்ரியை பற்றி தினமலர் நாளிதழை பார்த்த போது திரும்ப அவன் பட்ட அவமானம் நினைவுக்கு வந்தது.

"இதுதான் சரியான சந்தர்ப்பம், விட கூடாது". அவள் அனுப்பிய I miss you என்ற SMS ஐ அவன் save செய்து வைத்திருந்தான். அதை இப்போது காயத்ரி புருஷன் கிட்ட காண்பித்து அவளோட வாழ்கையை பாழ்படுத்தலாம். அந்த நினைப்பே அவனுக்கு இனிமையாக இருந்தது. தினமலர் நாளிதழை படித்து மேலும் விபரங்கள் அறிந்து கொண்டு, தனது காரில் தாஜ் ஹோட்டலை நோக்கி விரைந்தான்.

காலை உணவை முடித்து விட்டு 10 மணி அளவில் தங்கள் ரூம் திரும்பிய செல்வா, காயத்ரி இருவரும் இன்று எங்கே போகலாம் என்று பிளான் செய்ய, அதற்குள் அவன் ஆபிசில் இருந்து அவன் செகரட்டரி ரமா போன் செய்து "சார் ஒரு வெளிநாட்டு buyer கிட்டVC இருக்கு, MD அட்டென்ட் பண்ணனும் டைம் ஆயிடிச்சு, அவர் நம்பர் நாட் ரீச்சபிள்ல இருக்கு. நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் manage பண்ணுங்க , அதுக்குள்ள நான் MDயை கனக்ட் பண்ணிடுவேன், உங்கள ஹனிமூன்ல தொந்தரவு செய்ய கஷ்டமா இருக்கு" என்று சொல்ல. "இட்ஸ் ஓகே. VC எப்போ நான் எங்க அட்டென்ட் பண்ணனும்" என்று கேட்க. "சார் நான் ஏற்கனவே ஹோட்டல் ரிசப்சன்ல பேசிட்டேன் அங்கே VC வசதி இருக்கு, நீங்க உடனே போனா நல்லா இருக்கும்" என்று சொல்ல, "சரி நான் பாத்துக்கிறேன்" என்று சொல்லி, "காயத்ரி ஒரு அஞ்சுநிமிஷம் வெயிட் பண்ணு ரிசப்சன் கிட்ட ஒரு VC அட்டென்ட் பண்ணிட்டு வந்துடுறேன்", என்று சொல்ல அவன் போனில் பேசியதை வைத்து அவனது அவசரம் புரிய "நோ problem போயிட்டு வாங்க, நான் காத்துரிக்கேன்" என்று சொன்னாள்.


கீழே ரிசப்சன் நெருங்கி VC இருக்கும் அறை எங்கே இருக்கிறது? என்று செல்வா விசாரிக்க, அதற்குள் ரிசப்சனில் ஒரு சிவப்பான உயரமான வட இந்திய இளைஞன் "காயத்ரி எங்க stay பண்ணி இருக்காங்க" என்று விசாரிக்க, ரூம் நம்பர் சொல்லப்பட்டவுடன் லிப்டுக்கு விரைந்தான். இவன் ஏன் காயத்ரியை விசாரிக்கிறான் என்று அவனை உற்று கவனித்து, பிறகு VC ரூமிற்குள் நுழைய அதற்குள், அவனுடைய அப்பா போனில் கூப்பிட்டார், "செல்வா நான் VC log in பண்ணிட்டேன். நீ VC அட்டென்ட் பண்ண வேண்டாம்" என்று சொல்லி கட் செய்தார். சரி அப்பா வந்துட்டார், இனி கவலை இல்லை ஆனாலும் சரியாய் பேசமாட்டேன்கிறாரே, " என்று நினைத்தவாறே தனது ரூமிற்கு திரும்பி, கதவை தட்ட போனபோது உள்ளே இருந்து காயத்ரியின் கோப குரல் கேட்டது.

"ஏன்டா உனக்கு அறிவு இல்லையா? அப்போதானே நீ அறை வாங்கின, இன்னுமா உனக்கு புத்தி வரல" என்று ஆவேச குரல் எழுப்பினாள். இதற்கு அந்த வட இந்திய இளைஞன் "ஏண்டி நீ எனக்கு அனுப்பின SMS இருக்கு அது போதும், உன் கல்யாண வாழ்க்கைய நாசம் பண்ணுறதுக்கு. நீ எனக்கு வேணும், அதுக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்" என்று எச்சரித்து "உன்ன போன்ல கூப்பிடறேன், இடத்த நான் முடிவு பண்ணுறேன் , அங்கே நம்மளோட முதல் இரவை வச்சிக்கிடலாம்" என்று சொல்லி விட்டு அவன் வரும் ஓசை கேட்டு செல்வா அருகில் இருந்த ஹாலுக்கு விரைந்து செல்ல, அந்த இளைஞன் லிப்டுக்கு அருகில் வந்து காத்திருந்த நேரத்தில், அவனுக்கு தெரியாமல் அவனை செல்போனில் போட்டோ எடுத்தான் செல்வா.

உடனே அதை MMS மூலம் செந்தமிழுக்கு அனுப்பி விட்டு அவனை போனில் கூப்பிட்டான் . செந்தமிழ் இரண்டாவது ரிங்கில் போனை எடுக்க, செல்வா அவனிடம், "செந்தமிழ் நான் ஒருத்தனோட போட்டோவை அனுப்பிச்சி இருக்கேன். நீ உடனே பூஜாவை காண்டாக்ட் பண்ணி டீடைல்ஸ் வாங்கு, ரகு கிட்ட பேசி அவனோட ஸ்கூல் மேட் யாரோ ஊட்டில DSP இருக்கார். அவரோட உதவியோட இவனை பத்திய முழு தகவல் வேணும் அப்பிடின்னு சொல்லு" என்று உத்தரவு பிறப்பிக்க. "என்ன மச்சான் என்னproblem? "என்று கேட்டபோது," காயத்ரியோட காலேஜ்ல படிச்சவன் மாதிரி இருக்கான். அவள ப்ளாக் மெயில் பண்ணுறான்.அவனை வாழ்நாள் முழுக்க காயத்ரியை நினைக்காத அளவுக்கு எதாவது பண்ணனும், அதால சீக்கிரம் details கண்டு பிடிச்சு என்னை கூப்பிடு" என்று சொல்லு போனை கட் செய்தான்.

பிறகு அவன் ரூமிற்குள் நுழைய காயத்ரி கண் கலங்கி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவள் பார்வை கதவை வெறித்து பார்த்து கொண்டிருந்தது. அவள் நிலை அறிந்த செல்வா, மேலும் சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருக்க "என்ன காயத்ரி ஒரு மாதிரியா இருக்க. உடம்பு சரியில்லையா" என்று நெற்றியை தொட்டு பார்த்து, "உன்னால முடியலேன்னா நாம நாளைக்கு ஊட்டி போகலாம், எனக்கு ஆட்சேபனை இல்லை" என்று சொல்ல, காயத்ரிக்கு அப்போது இருக்கும் நிலைமையில் வெளியே செல்ல பிடிக்கவில்லை.




நடந்ததை செல்வாவிடம் சொல்லி விடலாமா என்று நினைக்க, அவளது மனமோ வேணாம் எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். செல்வா கிட்ட உச்சித் பத்தி சொன்னா தன்னை பற்றி சந்தேகபடுவான் என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறினாள்.

செல்வாவை பார்க்கும் போது அவனிடம் சொல்ல வேண்டும் என்று தோணும், அவள் மனமோ வேண்டாம் என்று சொல்லும்.அவள் தவிப்பை உணர்ந்த செல்வா அவளை கட்டி அணைத்து "என் கண்ணு குட்டிக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்க அவள் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். செல்வா பதறி தவித்து "என்ன பிரச்சனை?" என்று திரும்ப கேட்க, "இல்லை எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு" என்று சொல்ல, "நீ மொதல்ல அம்மாகிட்ட பேசு, பிறகு அவங்கள மீட் பண்ணுறத பத்தி யோசிக்கலாம்" என்று செல்வா காஞ்சனா நம்பர் டயல் செய்து காயத்ரியிடம் கொடுத்து விட்டு, அவள் தனியாக பேசட்டும் என்று எண்ணி ரூமை விட்டு வெளிய வந்தான்.

காயத்ரி அம்மாவிடம் உச்சித் வந்து தன்னை மிரட்டி விட்டு போனது, சொல்ல, காஞ்சனாவோ அவளை "நீ யாருக்கும் கவலைபடாதே. நீ செல்வா கிட்ட நேரடியாக பேசு. எந்த பிரச்சனையா இருந்தாலும் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம்.மாப்பிள்ளையும் நல்ல மாதிரி. அவர் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டார்" என்று சொன்னாள். காயத்ரிக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது, பிரச்னையை சமாளிக்கலாம் என்று தைர்யம் வந்தது.

போன் காலை முடித்து விட்டு செல்வாவை தேட, கதவை திறந்து கொண்டு வெளியில் இருந்து வந்தான். "என்ன இப்போ ஓகே வா. சரியான அம்மா கோண்டுவா இருக்கியே", என்று அவளை சீண்டினான். "இப்போ நான் ஓகே. எங்க வேணா போகலாம்" என்று காயத்ரி சொல்ல, "இப்போ ஊட்டிக்கு கிளம்பலாம் நேரம் ஆகுது" என்று அவளை அவசரமாக கிளப்பினான்.

சரி செல்வாவிடம் பிறகு தனிமையில் பேசலாம் என்று விட்டு விட்டாள்.

அன்றைய பொழுது எப்படி கழிந்தது என்றே தெரியவில்லை. இதற்கு இடையில் செல்வாவுக்கு செந்தமிழ் மற்றும் ரகுவிடம் இருந்து call வந்தது. இடை இடையே அட்டென்ட் செய்து காயத்ரியிடம் இருந்து விலகி பேசி வந்தான். காயத்ரி என்னவென்று கேட்க, "ஒண்ணுமில்லை செந்தமிழ் ஒரு போலீஸ் பிரச்சனைல மாட்டிகிட்டான், அதுக்குத் தான் நான் ரகுகிட்ட பேசிகிட்டு இருக்கேன்" என்று சொன்னான்.

உண்மையில் உச்சித்குமார் விஷயத்தை செந்தமிழ் மற்றும் ரகுவுடன் பேசி கொண்டு இருக்கிறோம் என்பதை அவளுக்கு இப்போ சொல்ல வேண்டாம், பிரச்சனையை முடிச்சிட்டு சொல்லலாம் என்று நினைத்தான்.

அன்று போடனிகல் கார்டன், படகுதுறை, தொட்டபெட்டா சென்று ஹோட்டல் திரும்பினர். மறுநாள் முதுமலை மற்றும் கோத்தகிரி சென்று தாஜ்ஹோட்டல் திரும்பினர். செல்வாவிடம் உச்சித்குமார் பற்றி பேச வேண்டும் என்பதையே மறந்து விட்டாள் காயத்ரி.

ஹனிமூன் தொடங்கி ஆறாவது நாள் அன்று மதியம் குன்னூரில் இருந்து கிளம்பி, இரவு கிளம்பிய மேட்டுபாளையம் எக்ஸ்ப்ரஸில் சென்னை திரும்பினர்.

வீட்டுக்கு திரும்பிய புது மண தம்பதியினருக்கு செல்வா வீட்டில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. காயத்ரி தன் மாமியார், மாமனார் மற்றும் செல்வா மனம் கோணாமல் நடந்து கொண்டாள்.

தலைதீபாவளிமூர்த்திகாஞ்சனாவீட்டில்சிறப்பாககொண்டாடினர்செல்வாகாயத்ரிதம்பதியினர்காயத்ரிதங்கைதிவ்யாஅப்படியேகாயத்ரியின்சிறியவயதுசெராக்ஸ்போலஇருந்தாள். 10 வது பப்ளிக் எக்ஸாம் ஆனதால் அவளுக்கு மாத்ஸ் எக்ஸாம் சம்மந்தபட்ட சந்தேகம் எல்லாம் செல்வாவிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். செல்வா 10 வது மற்றும் 12 வது கணக்கு பாடத்தில் 100 மற்றும் 200 மதிப்பெண்கள் எடுத்தவன். அவனை கணக்கு புலி என்று அவன் ஆசிரியர்கள் அளிப்பது வழக்கம்.

திவ்யா சில சமயம் செல்வா வீட்டுக்கு வந்து சந்தேகம் கேட்பதும், சில நேரம் செல்வா காயத்ரி வீட்டுக்கு வரும்போது திவ்யா சந்தேகம் கேட்டு தீர்ப்பதும் வழக்கம்.
ஒரு ஞாயிறு அன்று திவ்யா அல்ஜிப்ராவில் சந்தேகம் கேட்க போனில் விளக்கி புரியாததால், செல்வா நேரடியாக செல்ல முடிவு செய்தான், காயத்ரி பார்வதி உடன் கோவிலுக்கு போய்விட்டதால் அவன் தனது பைக்கில் செல்ல வீட்டில் திவ்யா மட்டும் தனியாக இருந்தாள். "திவ்யா அம்மா எங்கே" என்று கேட்க "இன்னும் அரைமணி நேரத்தில கிளினிக்ல இருந்து வருவாங்க" என்று சொல்லி, "மாமா நீங்க சொல்லி குடுங்க" என்றாள்.

Algebra விளக்கி முடித்தவுடன், "மாமா நாளைக்கு நாங்க எல்லாம் மகாபலிபுரம் பிக்னிக் போறோம்".

"எப்படி போறீங்க" என்று கேட்க

"பைக்ல தான்".

" யாரு பைக்ல".

"என்னோட கிளாஸ் பசங்களோட தான்".

"சரி எப்போ போயிட்டு திரும்ப வரிங்க" என்று கேட்க,

"மாலைல போயிட்டு காலைல வர போறம்", என்று சொல்ல,

"என்ன புரியாம பேசிறியா? வீட்டுக்கு தெரியுமா" என்று கேட்க,

"நானும் என்னோட சேர்த்து எட்டு பொண்ணுங்க, பசங்க சேர்ந்து போறோம், வீட்டில யாருக்கும் தெரியாது, இது ஒரு த்ரில் தான் இல்ல" என்று கேட்க,

செல்வாவுக்கு கோபம் உச்சந்தலையில் ஏறியது." திவ்யா என்ன பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறியா? நீ ஒரு பொண்ணு, ரிஸ்க் எடுத்தா பாதிக்கபட போறது நீ மட்டும் இல்ல,நம்ப குடும்பமும் தான். நீ போக கூடாது. நான் உன்னோட அம்மாகிட்ட இதை பத்தி சொல்ல போறேன்",

"நீங்க என்ன சொல்றது, நான் உங்கள பத்தி, நீங்க என்ன மகாபலிபுரம் கூப்பிட்டதா சொல்லுவேன்".


இதை கேட்டு கொண்டே உள்ளே நுழைந்த காஞ்சனா "என்னடி, மாப்பிள்ளை கிட்ட மரியாதை இல்லாம பேசுற. உன் வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க" என்று சொல்லி பளார் என்று அறைந்தார்.

"அத்தை வளர்ந்த பெண்ணை அடிக்காதிங்க. அவள் புரிஞ்சு பேசுற மாதிரி தெரியல. நீங்க கொஞ்சம் அவளோட உக்கார்ந்து பேசுங்க. என்னை பொறுத்த வரையில் அவளோட சேர்க்கை சரியில்லை. அவளோட நண்பர்கள் கூட்டத்தை கவனிங்க. முடிஞ்சா ஸ்கூல் மாத்துங்க இப்போதைக்கு இதுதான் solution, சாரி திவ்யா" என்று சொல்லி விட்டு, கிளம்பினான்.

வரும் வழியில் அவனுக்கு பலத்த சிந்தனை "இந்த மீடியாவின் தாக்கத்தினால் எல்லாரும் பாதிக்கபட்டு இருக்காங்க. சிலர் அதை தவறான பாதைக்கு போக ஒரு கருவியா உபயோகிக்கிறாங்க. நல்ல வேளை திவ்யாவை மகாபலிபுரம் போகாம காப்பாத்தியாச்சு"என்ற நிம்மதியுடன் வீட்டுக்கு திரும்பினான்.

செல்வா காயத்ரியின் தாம்பத்ய வாழ்வு தடை இல்லாமல் சென்றது. செல்வா வின் மற்றவர்களை புண் படுத்தாத நல்ல எண்ணம், அவள் மனதை புரிந்த தன்மை, இவை அவர்கள் இருவரையும் மனம் ஒத்த தம்பதியினர் என்று சுற்றமும் நட்பும் வாழ்த்தியது. காயத்ரிக்கு செல்வா ஆபீஸ் ல இருந்து வர சிறிது நேரம் தாமதம் ஆனாலும் மனம் பர பரக்க ஆரம்பித்து விடும். இருவருக்கும் இடையில் என்ன ஊடல் வந்தாலும் கடைசியில் செல்வா தான் விட்டு கொடுப்பான். கேட்டால் ஒருவர் பொறை, இருவர் நட்பு என்று சொல்லி சிரிப்பான். காயத்ரிக்கு அவனை பார்த்தால் பெருமையாக இருக்கும், சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும்.


ஜம்புலிங்கமும் அவர் மனைவி பார்வதியும் சிங்கப்பூர் மலேசியா டூர் நவம்பர் கடைசி வாரத்தில் சென்றனர்.

வரும் டிசம்பர் 6 காயத்ரி பிறந்த நாள். என்ன பரிசு கொடுக்கலாம் என்று சிந்தனை செய்தான். அவளுக்கு பிடித்த 1000 பாடல்களை புதிய ஆப்பிள் ஐ போடில் ஏற்றி, பிறகு அவளுக்கு பிடித்த புத்தகங்களையும் பரிசாக கொடுக்க முடிவு செய்தான்.

இதை அவளுக்கு சர்ப்ரைஸ் கிப்டாக கொடுத்தால் அவள் எப்படி சந்தோஷபடுவாள் என்று நினைத்து பூரிப்படைந்தான்.

அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 7 தனது பிறந்த நாள் வருவதும் அவனுக்கு மிக சந்தோசமாக இருந்தது.

காயத்ரி பிறந்த நாளுக்கு முந்தைய நாளான டிசம்பர் 5 மாலை முதல் செல்வா-க்கு ஆபீசில் இருப்பு கொள்ளவில்லை. எப்போது ஆறு மணி ஆகும் என்று காத்து கொண்டிருந்தான்.



அதே நேரத்தில் வீட்டில் காயத்ரியின் செல்போனுக்கு அந்த கால் வந்தது. இதென்ன தெரியாத நம்பரா இருக்கே, என்று தயக்கத்தோட தனது செல்போனை எடுத்தாள். அழைத்தது உச்சித்குமார், "என்னடி, என்ன முடிவு பண்ணி இருக்க, நான் இப்போ சென்னைல தான் இருக்கேன், நாளைக்கு உன் பிறந்த நாள் அப்பிடின்னு எனக்கு முன்னாலேயே தெரியும். அதே நாள்தான் நீ எனக்கு விருந்தாகுற நாள். சீக்கிரம் முடிவு பண்ணு. என்ன தான் நல்ல புருஷனா இருந்தாலும் தன் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னால இன்னொருத்தனோட பழகுனவ-ன்னு தெரிஞ்சா சந்தேகபடாம இருக்க மாட்டான். அதுனால நம்ம விஷயத்த உன் புருஷன் கிட்டே நான் சொல்றதா இல்ல வேணாமாங்கிறது உன் சம்மதத்தை பொறுத்துதான் இருக்கு. நான் நாளைக்கு காலைல 10 மணிக்கு போன் பண்ணி எங்க வரணும்னு சொல்லுறேன் ரெடியா இரு" என்று சொல்லி போனை கட் செய்தான்.

கலங்கி போன காயத்ரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, குழப்பம் மனதை சூழ செல்வா-க்கு போன் செய்வதா இல்லை வேண்டாமா என்று யோசித்தாள்.



No comments:

Post a Comment