Saturday, September 5, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 10

அந்த பால்நிலா முகத்தில் குழப்பமில்லை, பயமுமில்லை தெளிவு இருந்தது, “ என்ன கேட்கனும் கேளுங்க சொல்றேன்” என்றாள் புன்னகையோடு

கபடற்ற அவள் புன்னைகை நெஞ்சை சுட, “ நீ ஏன் மான்சி வாடகைத்தாயா வந்த,, அப்படியென்ன உனக்கு பணக்கஷ்டம் வந்தது?,, எதனால இவ்வளவு சின்னவயசுல இப்படி ஒரு முடிவுக்கு வந்த?” என்று அவளிடம் கேட்டான் சத்யன்

இப்பவும் மான்சியின் முகத்தில் குழப்பமில்லை, ஆனால் இவ்வளவு நேரம் இல்லாத வெறுமை முகத்தில் வந்தது,, அவள் மறக்க நினைத்ததை சத்யன் ஞாபகப்படுத்திவிட்டது போல சத்யனைப் பார்ப்பதை விடுத்து தன் குழந்தையை வெறித்து நோக்கினாள்

“ சொல்லு மான்சி எனக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சே ஆகனும், என்னம்மா நடந்துச்சு? ” என்று சத்யன் வற்புறுத்த..



“ சொல்றதுக்கு என்ன இருக்கு,, அருணாக்கா உங்ககிட்ட சொல்லிருப்பாங்களே,, எங்கம்மா எல்லார் வீட்டு அழுக்கையும் எடுத்து ஆத்துல துணி துவைக்கிற வேலை பாத்தாங்க,, அதாங்க வண்ணாத்தி வேலை,, அதுல அவ்வளவா காசு வராது, மழை பேஞ்சா,, ஆத்துல வெள்ளம் வந்தா ரொம்ப கஷ்டப்படுவோம்,, ஒருநாள் முழுக்க சாப்பிடாம இருப்போம்,, ஒருநாள் எனக்கு காலேஜுக்கு கட்ட பணம் இல்ல,, எங்கம்மாவுக்கு காச்சல் வந்துருச்சு அதுக்கு ஆஸ்பத்திரிக்கு போக காசில்லை, அப்போ அம்மா அருணா அக்காவோட சித்தி வீட்டுல போய் அம்பது ரூபாய் பணம் வாங்கிட்டு வரசொல்லுச்சு, எனக்கு யாரு வீட்டுலயும் போய் காசு வாங்க புடிக்காது, அன்னிக்கு அம்மாவை பாக்க பாவமா இருந்துச்சு, அதனால நானும் போனேன், அப்போ அந்த ஆச்சி தூங்கிகிட்டு இருந்தாங்க, அருணா அக்காதான் வந்து கதவை திறந்தாங்க,, நான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி அம்பது ரூபா கேட்டதுக்கு அருணா அக்கா நூறு ரூபா குடுத்து ஆஸ்பத்திரிக்கு போகச்சொன்னாங்க, ரொம்ப நல்லவங்க அந்தக்கா” என்று சத்யனுக்கு தெரியாத தகவலைச் சொல்வது போல விழிகளை விரித்து அதிசயமாக மான்சி சொல்ல

வேகமாக ஏதோ சொல்லவந்து பிறகு நிதானித்து அவளையே பரிதாபமாக பார்த்த சத்யன் “ ம்ம் மேல சொல்லு மான்சி” என்றான்

“ அப்புறமா அவுகவீட்டு வேலைக்காரி வரலைன்னு அஞ்சு நாளைக்கு வேலைக்கு வரச்சொன்னாங்க, எனக்கு அப்ப ஒரு யோசனை தோனுச்சு இவங்ககிட்டயே ஏதாவது வேலைக்கு கேட்டு கோயமுத்தூருக்கு வந்துடலாம்னு நெனைச்சு அதை அருணாக்கா கிட்ட கேட்கனும்னு நெனைச்சேன்,, அப்பத்தான் கடைசிநாள் அன்னிக்கு அருணாக்கா பேசனும்னு சொல்லி பொருள்காட்சிக்கு கூட்டிட்டுப் போனாங்க, அங்க எல்லாமே இருந்துச்சு தெரியுமா? பெரிய ராட்டினம், காரு, அப்புறம் பெரிய அப்பளம் கூட வித்தாங்க,, ஆனா நாங்க வாங்கி தின்னலை, அருணாக்க அழுவுற மாதிரி இருந்தாங்களா நானும் வேற எதையும் பாக்கலை,, ஒரு ஓரமா உக்காந்து அங்கதான் சொன்னாங்க,, அவங்களுக்கு பாப்பாவே பொறக்காதுன்னு, அதுக்கு பொண்ணு மூலமா பாப்பா பெத்துக்க மதுரைக்கு வந்தாங்களாம் அதுக்காக ரெண்டு பொம்பளைகளைப் பாத்தாங்களாம், ரெண்டு பேரையும் புடிக்கலையாம், அப்புறம் ரொம்ப தயங்கித் தயங்கி என்கிட்ட கேட்டாங்க, மொதல்ல எனக்கு அழுகையா வந்துருச்சு, அப்பதான் அருணாக்கா ஒரு வீடும் அஞ்சு லட்சரூபாய் பணமும், எனக்கு நல்லதா ஒரு வேலையும் வாங்கித்தரேன்னு சொன்னாங்க,, எனக்கு ரொம்ப ஆச்சிரியமா இருந்துச்சு, ஒரு பாப்பா பெத்து குடுக்க இவ்வளவு தருவாங்களான்னு நெனைச்சு சரின்னு சொல்லிட்டேன்,, எனக்கு எங்க குடிசை வீட்டை விட்டுட்டு வேற மச்சு வீட்டுக்கு போகனும்னு ஆசை,, அப்புறம் நல்லதா ஒரு வேலை கிடைச்சா எங்கம்மாவுக்கு நல்ல டிரஸ், சாப்பாடு எல்லாம் வாங்கி குடுத்து நல்லபடியா வச்சுக்கனும்னு ரொம்ப ஆசை,, அப்புறம் நல்லா சம்பாதிச்சு பெரிய டாலர் வச்ச தங்க சங்கிலி வாங்கனும்,, பெரிய ஜிமிக்கி வச்ச தோடு போட்டுக்கனும், அப்புறம் நல்ல நல்ல டிரஸ் வாங்கி போடனும், இப்படியெல்லாம் நிறைய ஆசை எனக்கு, இதெல்லாம் நல்ல வேலை கிடைச்சா வந்துரும்னு தோனுச்சு, அதனால்தான் உடனே ஒத்துக்கிட்டேன், ஆனா அந்த அஞ்சு லட்ச ரூபா பணம் வேனாம்னு சொல்லிட்டேன், நல்ல வேலை கிடச்சா அந்த பணத்துக்கு என்ன தேவைன்னு தோனுச்சு,, ஆனா எங்கம்மா நெனைச்சு ரொம்ப பயமா இருந்துச்சு, அருணாக்கா எல்லாம் முடியட்டும் நானே சொல்லிக்கிறேன்னு சொன்னாங்க” என்று சொல்லிகொண்டிருந்த மான்சி தன் தாயின் நினைவில் கண்கள் கலங்கி நீரை வடித்தாள் 


சத்யனுக்கு அவள் மனது புரிந்தது,, ஆனால் எல்லாவற்றையும் தெளிவாக கேட்கவில்லை என்றால் அவனால் நிம்மதியாக இருக்கமுடியாது,, அந்த காரணத்துக்காக அவளின் கண்ணீரை பொறுத்துக்கொண்டு,, அவளை பற்றியிருந்த கையை விடுவித்து எட்டி அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தான்

“ ஆனா எங்கம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சப்ப என்னைய போட்டு செமத்தியா அடிச்சாங்க தெரியுமா?” என்று கண்களில் கண்ணீருடன் அன்றைக்கு தாயிடம் வாங்கிய அடிக்கு இன்று சத்யனிடம் கம்ப்ளைண்ட் செய்தாள்

ம்ஹூம் சத்யனின் மனம் மேலும் பலவீனமடைய, எழுந்து கட்டிலில் நெருங்கி அமர்ந்து அவளை மெதுவாக இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து, கூந்தலை வருடி “ அம்மால்லடா அப்படித்தான் கோபம் வரும், நீ அம்மாகிட்ட சொல்லாம செஞ்சதும் ரொம்ப தப்புல்லடா,, அதான் ரொம்ப கோபம் வந்திருக்கும்” என்று அன்று மான்சி வாங்கிய அடிக்கு இன்று தடவி ஆறுதல் படுத்தினான்

அவன் நெஞ்சே சொர்க்கமாக சாய்ந்தவளை குழந்தையின் அழுகை தட்டி எழுப்ப,, “ அய்ய தம்பிப்பாப்பா அழுவுது” என்று வேகமாக விலகினாள்

சத்யன் குழந்தையை தூக்கிப்பார்த்தான், வழக்கம்போல படுக்கையை நனைத்துவிட்டு அழுதுகொண்டிருந்தான் அவன் மகன்,, “ யப்பா வயித்துக்குள்ள பெரிய வாட்டர் டேங்கே வச்சிருப்பான் போலருக்கு,, கால்மணிநேரத்துக்கு ஒரு வாட்டி தீர்த்தம் விட்டுகிட்டே இருக்கான், போறபோக்குல குஞ்சுல ஒரு டப்பாதான் கட்டிவிடனும் போலருக்கு ” என்று மகனை கிண்டல் செய்ய்,, மான்சி தன் அழுகையை மறந்து வாய்விட்டு சிரித்தாள்

சத்யன் குழந்தையின் ஈரத்துணியை அகற்றி மான்சி கொடுத்த நல்ல துணியை இடுப்பில் சுற்றினான்,, படுக்கையிலிருந்த துணியையும் மாற்றிய சத்யன் மகனை மான்சியிடம் கொடுத்து “ மொதல்ல பாலை குடுத்துடு இல்லேன்னா அதுக்கும் அழுது ஊரை கூட்டுவான் இந்த கேனப்பய மவன்” என்று சொல்ல..

மான்சி சிரிப்பு அடங்காமலேயே மகனை வாங்கி தன் மடியில் போட்டு, ரவிக்கையின் ஊக்குகளை விடுவித்து குழந்தையின் உதடுகளை தன் மார்போடு அழுத்தி பாலூட்ட,, சத்யன் கட்டிலில் கிடந்த துண்டை எடுத்து அவள் தோளில் போட்டு குழந்தையின் முகத்தையும், பாலூறிய அவள் தனங்களையும் மறைத்தான்

அவளைவிட்டு எழுந்து சமையலறை சென்று ஒரு டம்ளரில் பால்பவுடரை போட்டு அதில் வென்னீர் விட்டு நன்றாக ஆற்றி எடுத்து வந்து மான்சியிடம் கொடுத்தான்,

“ ம்ஹூம் இந்த நேரத்துல எதுக்கு,, எனக்கு வேனாம்பா” என்று தலையாட்டி மறுத்த மான்சியிடம் “ ஒவ்வொரு முறையும் குழந்தைக்கு பால் குடுத்ததும் ஜுஸ் பால் இதுமாதிரி லிக்விட்டா ஏதாவது குடுக்கனும்னு அண்ணி சொன்னாங்க, ம் வாங்கி குடி மான்சி” என்றவன் அவள் ஆர்வமின்றி இருக்கவும் அவள் தலையை தன் நெஞ்சோடு சாய்த்து உதட்டில் டம்ளரை வைத்து பாலை புகட்டினான் அந்த பெரிய குழந்தைக்கு

குழந்தை பாலை குடித்ததும்,, குழந்தையை வாங்கி உதடுகளை துடைத்து விட்டு நெற்றியில் முத்தமிட்டு அவளின் வலதுபுறம் படுக்க வைத்து கம்பளியால் மூடினான், பிறகு மான்சியின் இடதுபுறம் வந்து கட்டிலில் அமர்ந்து “ அப்புறம் நீயும் அருணாவும் ஆஸ்பிட்டல் எப்ப போனீங்க?” என்று அவள் விட்ட இடத்தை எடுத்துக்கொடுத்தான்

“ ம்ம் மறுநாளே கூட்டிட்டுப் போனாங்க,, போனவுடனே எல்லா செக்கப்பும் பண்ணாங்க, ஆனா எனக்கு செக்கப் பண்ணது எதுவுமே புடிக்கலை, அப்புடியே அழுகையா வந்துருச்சு ” என்று அன்றைய நினைவில் மான்சி முகம் சுழிக்க,
அவள் எதைப்பற்றி சொல்கிறாள் என்று சத்யனுக்கு புரிந்தது,, எதையுமே அறியாத சிறுபெண்ணுக்கு அந்தமாதிரியான பரிசோதனைகள் என்றால் அவள் மனம் அந்த நேரத்தில் எவ்வளவு பாடுபட்டிருக்கும்,, என்று நினைத்துப்பார்த்து நெஞ்சு கொதித்தான் சத்யன்


“ அப்புறம் எனக்கு எல்லா தகுதியும் இருக்கு, மறுநாள் என்னோட பர்த் சர்டிபிகேட்டை எடுத்துட்டு வந்தா உடனே பாப்பாவை உள்ள வச்சிறலாம்னு டாக்டர் சொன்னாங்க, அப்புறம் நாங்க வீட்டுக்கு வந்துட்டோம், மறுநாள் காலையிலயே மறுபடியும் ஆஸ்பிட்டல் போனோம் எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்து நான் அமைதியா படுத்துட்டேன், அருணாக்காதான் எங்கம்மா கிட்ட பேசினாங்க, உடனே ஊட்டிக்கு போகனும், அங்கே என் வீட்டை பாத்துக்க ஆள் வேனும்னு மட்டும் எங்கம்மா கிட்ட சொன்னாங்க, அப்புறம் மறுநாளே இங்கே வந்துட்டோம், அன்னிக்கு மத்தியானம் அம்மாகிட்ட அருணாக்கா எல்லாத்தையும் சொன்னாங்க, எங்கம்மாவுக்கு பயங்கரமா கோபம் வந்து என்னைய அடிச்சுட்டு அருணா அக்காவை எதுத்து கேள்வி கேட்டாங்க, அதுக்கு அருணா அக்கா ‘குழந்தைய பெத்து குடுத்துட்டு குடுக்குற பணத்தை வாங்கிகிட்டு இவளை நல்லவனா பாத்து கல்யாணம் பண்ணி குடுத்துடு, வீனா தகராறு பண்ணா நீங்க ரெண்டுபேரும் கம்பி எண்ணுற மாதிரி பண்ணிடுவேன்னு மிரட்டுனாங்க,,

"அதுக்கப்புறம் எங்கம்மா எதுவுமே பேசலை, பக்கத்து எஸ்டேட் மொதலாளி கிட்ட மாசாமாசம் ரெண்டாயிரம் ரூபா பணம் வாங்கிக்க சொன்னதை கூட எங்கம்மா வாங்கலை, பக்கத்து கிராமத்து ஜனங்களோட போய் கஷ்ட்டப்பட்டு எல்லா வேலையும் செஞ்சு அதுல வந்த பணத்துலதான் நாங்க சாப்பிட்டோம், இப்போ போன வாரம் மழையில எங்கம்மா வேலைக்கு போச்சு, நானும் கூட வர்றேன்னு பிடிவாதமா கிளம்பிப்போனேன், நான் ஒரு மேட்டுல உக்காந்து கஞ்சி குடிக்கும் போதுதான் அந்த மண்ணு சரிஞ்சதை பார்த்தேன், வாயில இருந்த கஞ்சியை முழுங்கிட்டு கத்துறதுக்குள்ள அந்த மண்ணு எல்லாரையும் மூடிருச்சு, என் கண்ணால எல்லாத்தையும் பாத்தேன், எங்கம்மா அப்போ பக்கத்துல இருந்த அக்காகிட்ட ஏதோ பேசி சிரிச்சுக்கிட்டே இலையை பறிச்சு போட்டுகிட்டு இருந்தாங்க, கொஞ்சநேரத்துல எங்கம்மாவை காணோம், அப்புறம் எங்கம்மாவை வெள்ளை துணியில சுத்திதான் கொண்டு வந்தாங்க, அது எங்கம்மா மாதிரியே இல்லை மூஞ்சியெல்லாம் வீங்கிப்போயிருந்தது” என்று ஒரு இயந்திரம் போல மான்சி கண்களில் நீர் வழிய திகிலுடன் சொல்லிகொண்டே போக

சத்யனுக்கு அவள் பேச்சில் இருந்த வித்தியாசம் சட்டென்று உரைத்தது., அவள் முகத்தை கவனித்துவிட்டு வேகமாக அவளை இழுத்து நெருக்கி அணைத்தான்,, மான்சியின் உடல் தடதடவென்று நடுங்கியது,, அவள் இதயத்தின் பலத்த துடிப்பை சத்யனின் இதயம் உணர்ந்தது “ அய்யோ தெரியாம கேட்டுட்டேனே,, வேண்டாம்மா வேற எதுவும் சொல்லாதே,, அதைப்பத்தி நினைக்கவே நினைக்காதே,, மறந்துடு கண்ணம்மா மறந்துடு ,, அய்யோ வேனாம்மா ப்ளீஸ்” என்று பலவாறு பேசி தேற்றினாலும் மான்சியின் உதறல் நிற்க்கவில்லை..

அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துப் பார்த்தான், முதுகை தடவிப்பார்த்தான், ம்ஹூம் அவள் நடுக்கம் குறையவில்லை,, பிள்ளைபெற்ற உடம்பு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்துபோன சத்யன் அவளை தன் வலது கையில் கிடத்தி முகத்தைப் பார்த்தான், கண்கள் முழுவதுமாக திறந்து விட்டத்தை வெறிக்க, கண்களில் கண்ணீர் மட்டும் தாரைத்தாரையாக வழிந்தது உதடுகள் இன்னும் நிறைய சொல்லவேண்டும் என்பதுபோல் படபடவென்று துடித்தது, அவளின் ஒரு கை சத்யனின் நெஞ்சு பகுதியில் இருந்த ஸ்வெட்டரை கொத்தாக பற்றியிருந்தது

அவள் முகத்தையே பார்த்த சத்யன் தனது இடது கையை அவளின் பின்னந்தலையில் வைத்து உயர்த்தி சட்டென்று குனிந்து அவளின் துடித்த இதழ்களை கவ்வி அதன் துடிப்பை அடக்கினான், பிறகு அவளின் கீழுதட்டை மட்டும் இழுத்து அழுத்தமாக சப்பினான், பிறகு தனது நாக்கால் அவளின் வாயில் இடைவெளியை ஏற்ப்படுத்தி நாக்கை கூறாக்கி உள்ளேவிட்டான்

அவளின் பதட்டத்தையும் துடிப்பையும் அடக்க வேறு வழி தெரியாமல்தான் அவன் மான்சியின் இதழ்களை கவ்வினான், இதோ அவளின் பதட்டம் அடங்கிவிட்டது, ஆனால் இவனின் பதட்டம் உச்சத்திற்கு போய்விட்டது,, அவளை தாங்கியிருந்த வலதுகை நடுங்கியது, அவள் தலையை தாங்கியிருந்த இடதுகை அவன் முகத்தோடு அவள் தலையை மேலும் நெருக்கி அழுத்தியது 




உள்ளேவிட்ட நாக்கை அவள் வாய் முழுவதும் சுழற்றி சுவையறிந்தான்,, அவள் வாயில் சுரந்த உமிழ்நீரை உதடுகுவித்து உறிஞ்சினான், அவள் நாக்கோடு தன் நாக்கை உறவாடவிட்டு பிரிக்க முடியாமல் பின்னிக்கொண்டான், மூச்சுவிட இடைவெளியின்றி இருவரின் வாயும் ஒட்டிக்கொள்ள, சுவாசத்திற்கு திணறாமல் அவள் மூச்சுக்காற்றை இவனுக்கும் இவள் மூச்சுக்காற்றை அவனுக்கும் அனுப்பி உரிமையுடன் அவர்களின் உறவுக்கு உயிர்கொடுத்தார்கள்

முதலில் மான்சிக்கு எதுவும் புரியவில்லை, புரிந்தபோது அவள் நாக்குடன் அவன் நாக்கு ஒன்றாய் கலந்து உறவாடி தனது உரிமையை நிலைநாட்டிக்கொண்டு இருந்தது, அவனிடமிருந்து வாயை பிடிங்கி கொள் என்று அறிவுஉத்தரவிட “ ஏய் ச்சீ போ முடியாது ” என்று மனம் முரண்டு பண்ணியது, அவளையும் அறியாமல் ஒரு கை அவன் கழுத்தை வளைத்து இறுக்கியது,, தான் சுரக்கும் உமிழ்நீர் அவனுக்கு பிடித்திருக்கிறது என்று அவனின் உறிஞ்சுதலின் வேகம் சொல்ல, அவளின் வாய் அதிகமாக நீரை சுரந்து அவன் வாய்க்குள் மாற்றியது,, மிகப்பெரிய முத்தப் போராட்டம் இதுதான் என்பதுபோல் இருவரும் விலகாமல், விலக்கிக்கொள்ளாமல் போராடினார்கள்,

கொஞ்சம் கொஞ்சமாக மான்சி அவன் கைகளில் துவள, அதை உணர்ந்த சத்யன் அவளை விடுவித்து கட்டிலில் படுக்கவைத்தான், மான்சி கண்மூடியிருக்க அவளின் கடைவாயில் இருவரின் உமிழ்நீரும் கலந்து வழிந்தது, முகத்தில் கரைகாணா வெட்கம் கரைபுரண்டு ஒட, அவள் முகம் கீழ்வானத்தின் சிவப்பை கடன் வாங்கியதுபோல் சிவந்து கிடந்தது,

சத்யன் முகத்திலும் வாடாத புன்னகை வந்தமர்ந்தது, சிறு சிரிப்புடன் பக்கத்தில் இருந்த டவலை எடுத்து அவள் வாயோரம் வழிந்த எச்சிலை துடைத்துவிட்டு குனிந்து நெற்றியில் முத்தமிட்டான், பிறகு எழுந்து வெளியே வந்தான், பிள்ளை பெற்று இரண்டு நாட்களே ஆனவள் இன்னும் சிறிதுநேரம் அவள் பக்கத்திலேயே இருந்தால் தன் வாய்க்கு இன்னும் தாகமெடுக்கும் என்றுதான் வெளியே வந்துவிட்டான்

எஸ்டேட்டை சுற்றினான், லேசான வெயில் காய ஆரம்பித்திருந்தது, ஒரு மரத்தில் இருந்த மரங்கொத்திகள் தங்களின் மூக்கை உரசி காதல் செய்வதை வெகுநேரம் நின்று ரசித்தான், சற்று தூரத்தில் சிறு சலசலப்புடன் ஓடிய சிற்றோடையின் சத்தத்தை கூர்ந்து கவனித்து ரசித்தான், வானில் சிறகடித்துப் பறந்த பறவை கூட்டத்தை எண்ணமுயன்றான் , ஆனால் அவைகள் பறந்து போய்விட அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டான்,,

குளிரின் சில்லிப்பு நெஞ்சுக் கூட்டை ஊடுருவ மார்புக்கு குறுக்கே கைக்கட்டி வானத்தை அன்னாந்து பார்த்தான், பள்ளிப் பிள்ளைகள் போல பரபரவென்று கலைந்து சென்ற மேகக்கூட்டங்களை ரசித்தான், வெளிச்சமாய் இருந்த வானில் மான்சியின் அழகு முகத்தை கண்டு உள்ளமும் உடலும் ஒருங்கே சிலிர்த்தான்,, தன்னை இருபதாக உணர்ந்தான், அவன் மனம் காதல் கவிதைக்கு வார்த்தைகளை தேடியது, அவசரத்தில் வார்த்தைகள் கிடைக்காமல் “ மான்சி மான்சி மான்சி” என்று தன்னவளின் பேரையே கவிதையாக சொன்னது

நடந்தான் நடந்தான் நடந்துகொண்டே இருந்தான்,, இவ்வளவு நேரமாக மான்சி கூறியவைகள் எல்லாம் அவன் மனதில் ஓடியது,, மான்சியைப் பற்றி சத்யன் நன்றாகவே புரிந்து கொண்டான்,, அவளின் தேவைகள் சிறுபெண்ணுக்கே உரிய சின்னச்சின்ன ஆசைகள் தான்,, பணத்தைப் பற்றி தெரியாமலேயே மான்சி அருணாவின் வலையில் விழுந்திருக்கிறாள் என்பது புரிந்தது,, வீடும் வேலையும் இருந்தால் போதும் தனது தாயை உழைத்து காப்பாற்றலாம் என்ற அவளின் உயர்ந்த எண்ணம் புரிந்தது

அவன் பயந்ததுபோல பணத்துக்கு ஆசைப்பட்டு தாயும் மகளும் இந்த காரியத்தில் இறங்கவில்லை,, கர்ப்பிணி மகளை உழைத்து காப்பாற்றி அன்னலட்சுமி சத்யனுக்கு தெய்வமாக தோன்றினாள், அவள் பெற்ற மகள் நிச்சயம் தப்பானவளாக இருக்கவே முடியாது என்று அவன் மனம் உறுதியாக நம்பியது,, 


எங்கெங்கோ சுற்றி ஓரிடத்தில் புல் தரையில் கால்நீட்டி மல்லாந்து படுத்தான், ஏழு வருடங்களாக இழந்தவைகள் எல்லாம் வட்டியோடு திருப்பி கிடைத்துவிட்டதாக எண்ணினான்,

இந்த மூன்று நாட்களும் தன் நெஞ்சக் கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டிய நாட்கள் என்பதை உணர்ந்தான், யாருமற்ற ஒரு இளம்பெண்ணுக்கு உதவியதாக எண்ணியபோது அவன் மனதில் கள்ளமில்லை கபடுமில்லை, இப்போது அவளின் அழகு முகம் அவன் கண்முன் வந்து அவனை பித்தனாக்கியது, இவள் என்னவள், என் பிள்ளைக்குத் தாய், இனி வரப்போகும் என் சந்ததிகளையும் சுமக்கப் போகிறவள் இவள்தான், என் உயிரும் இவளே, என் உயிரின் துடிப்பும் இவளே, இனி இவளில்லாமல் இவ்வுலகில் எனக்கு எதுவுமேயில்லை,

சரியான சமயத்தில் நான் மட்டும் வரவில்லை என்றால் மான்சியின் நிலை என்வாகியிருக்கும் என்று எண்ணிக்கலங்கினான்,, தன் கையால் வெளியே எடுத்த தன் மகனை நினைத்து அவன் உள்ளம் பூரித்தது, வெகுளித்தனமான உலகம் புரியாத மான்சியை பாதுகாக்க தன்னால் மட்டுமே முடியும் என்று நினைத்தான், ஆனால் அருணாவை ஒதுக்கி என் வாழ்க்கை நேரானதும் தான் மான்சியிடம் தன் மனதில் இருப்பதை சொல்லவேண்டும் என்று எண்ணினான், அதுவரை அந்த பிஞ்சு மனதில் ஆசையை வளர்க்கக்கூடாது என்றும் உறுதி செய்துகொண்டான்

தன் காதலியையும் தன் மகனையும் இமைப்பொழுதும் பிரியாமல் காக்கவேண்டிய கடமை தனக்கிருப்பதை உணர்ந்தான், மான்சி வளர்ந்த குமரியாக இருந்தாலும், மனதளவில் இன்னும் உலகம் தெரியாத சிறு குழந்தைதான் என்று அவளின் பேச்சும் செயலும் சத்யனுக்கு நன்றாகவே உணர்த்தியது, பூவைவிட மென்மையான மான்சியை கவனமாக பாதுகாக்க என்னால் மட்டுமே முடியும்,

முதலில் அவளை அருணாவின் கொடிய விஷத்தீண்டலில் இருந்து முதலில் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தான்,

மான்சியைப் பற்றியே எண்ணிக்கொண்டு புல்வெளியில் கிடந்தவனுக்கு, அவளையும் குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு வந்து வெகுநேரமாகி விட்டதை உணர்ந்து வேகமாக எழுந்தான், உடனே மான்சியையும் தன் மகனையும் பார்க்கவேண்டும் போல் இருக்க, எஸ்டேட்டை நோக்கி வேகமாகப் போனான்

அவன் வீட்டுக்குள் நுழைந்தபோது மான்சி கட்டிலில் இல்லை, பாத்ரூம் இருந்து தண்ணீர் விழும் சப்தம் கேட்க “ அய்யோ தனியாக எழுந்து எப்படி பாத்ரூம் போயிருப்பா,, ச்சே இவ்வளவு நேரம் இவங்க ரெண்டு பேரும் தனியா இருப்பாங்கன்னு புரியாம வெளிய சுத்திட்டேனே” என்று முனங்கிய வாறு நெற்றியில் அடித்துக்கொண்டவன் வேகமாக பாத்ரூம் கதவை தள்ளிப் பார்த்தான், உள்ளே லாக் செய்திருக்க கதவை படபடவென்று தட்டினான்

“ மான்சி என்ன பண்ற,, கதவைத் திற மயக்கம் வரப்போகுது சீக்கிரமா கதவை திறம்மா” என்று பதட்டமாக கூப்பிட

“ நல்லாத்தான் இருக்கேன்,, தம்பிப் பாப்பா என் புடவையிலேயே டாய்லெட் போய்ட்டான் அதான் அலசிக்கிட்டு இருக்கேன்” என்று மான்சி பதில் கூற



“ அய்யய்யோ நீ தண்ணில கைவைக்கக் கூடாதுன்னு அண்ணி சொன்னாங்களே,, ப்ளீஸ் கதவை திற மான்சி” என்ற சத்யனின் கெஞ்சலுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது

சத்யன் பட்டென்று உள்ளே நுழைந்து மான்சியின் அருகில் போனான்,, மான்சி புடவையை அவிழ்த்து தண்ணீரில் அமுக்கிவிட்டு, வெறும் பாவடை ரவிக்கையுடன் மேலே டவல் போட்டிருந்தாள்

சத்யன் அவளை அப்படியே தூக்கி வந்து கட்டிலில் போட்டு கம்பளியால் மூடினான் “ ஏய் என்னம்மா இது நீ தண்ணியவே தொடக்கூடாதாம்,, நீ என்னடான்னா புடவையை துவைச்சிகிட்டு இருக்க, அவிழ்த்து போட்டுட்டு வேற கட்டிக்க வேண்டியதுதானே?” என்று கொஞ்சம் கோபம், கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் வருத்தம், கலந்து சத்யன் கூற

“ ம்க்கும் எல்லாத்தையும் சுருட்டிப் போட்டுட்டு அப்புறம் நாளைக்கெல்லாம் எதை கட்டுறதாம்” என்று மான்சி அவன் முகத்தை பார்க்காமலேயே பேசினாள்,, அவள் முகத்தில் இன்னும் அந்த சிவப்பு மாறவில்லை,, உதட்டில் ஒரு துடிப்பு, குழந்தையை பார்த்தபடி பேசிய கண்களில் ஒரு எதிர்பார்ப்பு...



No comments:

Post a Comment