Thursday, September 3, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 3

மான்சியின் வியப்பே அவள் விழுந்துவிட்டாள் என்பதை அருணாவுக்கு உணர்த்தியது, முகம் பளிச்சிட “ ஆமாம் மான்சி வீடு, பணம், வேலை, எல்லாமே தருவேன்,, இது ஒரு சேவை மாதிரி தான் மான்சி,, அதன்பிறகு உன்னோட கல்யாணம் நடந்தா அதுக்கு எந்த பாதிப்பும் வராமல் குழந்தை எப்படி உருவாக்கப்பட்டது, எப்படி பிறந்தது அப்படின்னு தெளிவா எல்லா ரிகார்டும் வச்சு ஒரு டாக்டர் சர்டிபிகேட்டும் குடுத்துருவோம், அதையும்மீறி தேவைப்பட்டா நானே வந்துகூட உன்னை கல்யாணம் பண்றவர் கிட்ட விளக்கிச் சொல்றேன், இந்த அஞ்சு லட்சரூபாய் பணத்துல நிறைய நகைகள் வாங்கி நல்லா வசதியானவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்,, இப்போ உன்னோட சம்மதத்துல தான் இருக்கு மான்சி” என்று குரலில் தேன் தடவி அருணா பேச



மான்சி கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க மறந்து, பேசும் அருணாவையே வாயை பிளந்துகொண்டு பார்த்தாள், “ அக்கா ஒரு பாப்பாவுக்கா இவ்வளவு பணம்,, வீடு குடுப்பீங்கன்னு சொன்னீங்களே அதுல குளிக்கிற ரூம் எல்லாம் வச்சு சமையல் பண்ண தனியான்னு ரெண்டு ரூம் இருக்குமா அக்கா? நிறந்தரமா ஒரு வேலைன்னா,, நானும் எங்கம்மாவும் ஒரு நாளைக்கு மூனு வேலையும் சாப்பிடுற மாதிரி நல்ல வேலை தானே அக்கா? ஆனா அக்கா எனக்கு பணம் வேண்டாம், இருக்க வீடும் பட்டினியில்லாம சாப்பிட ஒரு வேலையும் மட்டும் போதும்,, ” என்று தனது சம்மதத்தை மாற்று வார்த்தைகளின் மூலம் சொன்னவள் திடீரென்று மவுனமானாள்

“ என்ன மான்சி திடீர்னு சைலன்ட்டாயிட்ட?” என்று அருணா கவலையோடு கேட்க

“ அக்கா ,எங்கம்மாவுக்கு என்ன சொல்றது, இதைக்கேட்டா என்னை கொன்னுட்டு எங்கம்மாவும் செத்தே போயிடும்க்கா, இது தப்பில்ல, இயலாதவங்களுக்கு ஒரு உதவிதான்னு எனக்கு தெரியுது ஆனா என் அம்மாவுக்கு தெரியாதே, ரொம்ப கோவப்பட்டு என்னை அடிப்பாங்க அக்கா” என்று மான்சி கண்ணீரும் குழப்பமுமாக கூறியதும்

மான்சியை நெருங்கி தோளில் கைவைத்த அருணா “ மான்சி நான் சொல்றமாதிரி செய், உன் அம்மாகிட்ட இப்போ சொல்லவேண்டாம், நாம மெடிக்கல் செக்கப் எல்லாத்தையும் முடிச்சுட்டு பிறகு சொல்லலாம், எல்லாம் முடிஞ்ச பிறகு சொன்னா அவங்களால எப்படி தடுக்க முடியும்?” என்றாள் அருணா

ஒருசில பெண்களுக்கு தனது பேச்சால் எதிராளியை வசியம் செய்யமுடியும், எதிராளி ஒரு பெண்ணாக இருந்தாலும்கூட கூட தன் வார்த்தை ஜாலத்தில் மயங்க வைக்க முடியும், அந்த திறமை அருணாவிடம் இருந்தது, தாயை நினைத்து பயந்து தவித்து நின்ற மான்சியை கல்லும் கரையும்படியான வார்த்தைகளை பேசி தன் வசப்படுத்தினாள் அருணா,

அருணா பேசப்பேச தன் தாயை எளிதாக சமாளித்துவிடலாம் என்ற தைரியம் வந்தது மான்சிக்கு,, முதலில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு பிறகு அம்மாவிடம் சொல்லலாம் என்ற மனதிடம் வந்தது, என்ன கோபமா ரெண்டு அடி குடுக்கும், வருங்காலத்துல பசியில்லாம சாப்பிட அந்த ரெண்டு அடியை வாங்கிகிட்டா போச்சு, என்ற துணிச்சல் வந்தது

அருணாவை நிமிர்ந்து பார்த்த மான்சி “ சரிக்கா நாம மொதல்ல டாக்டரைப் பார்க்கலாம், அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துக்கிட்டு பிறகு அம்மாகிட்ட சொல்லுவோம்” என்று மான்சியே உறுதியாக கூறும் அளவிற்கு நிலைமை மாறியது

மான்சியின் கைகளை பற்றிக்கொண்ட அருணா “ ரொம்ப நன்றி மான்சி” என்றாள், அவள் உதட்டில் திருப்தியான சிரிப்பு நிலவியது, என்னால் முடியாதது உண்டா, என்ற கர்வச் சிரிப்பு, ஆனால் அந்த சிரிப்பை அடையாளம் கானும் அளவிற்கு மான்சிக்கு கபடு சூது தெரியவில்லை, அவளும் பதிலுக்கு சந்தோஷமாக சிரித்தாள்

ஆட்டோவில் ஏறி இருவரும் வீட்டுக்கு வரும்போது இரவாகிவிட்டது, அருணா மான்சியை அவள் வீட்டில் இறக்கிவிட்டு “ எதுவும் சொல்லாதே,, கேட்டா எனக்கு துணையா ஷாப்பிங் வந்ததா சொல்லு மான்சி” என்று எச்சரிக்கை செய்துவிட்டு கிளம்பினாள்

மான்சி தன் தாயிடம் முதல்முறையாக பொய் சொல்லப்போகும் நடுக்கத்துடன் குடிசைக்குள் நுழைந்தாள், அன்னலட்சுமி பின்புறம் இருப்பது தெரிய மான்சி பின்புறம் போனாள்

வெள்ளாவி சாலில் துணிகளை அமுக்கிவிட்டு, அடுப்பில் கட்டைகளை வைத்து எரியவிட்டுக்கொண்டு இருந்தாள் அன்னலட்சுமி


அம்மாவின் அருகே போய் மண்டியிட்ட மான்சி “ ஏம்மா உடம்புதான் சரியில்லையே அப்புறம் ஏன்ம்மா மறுபடியும் வெளுக்குற, கொஞ்சநாள் ரெஸ்ட் இருக்கலாம்ல” என்று கேட்க

நெருப்பின் வெளிச்சத்தில் திரும்பி மகளை பார்த்த அன்னலட்சுமி “ இந்த அழுக்கை எடுத்துட்டு வந்து நாலுநாள் ஆச்சு, அப்புறம் துணி குடுத்தவங்க வீடுதேடி வந்துடுவாங்க, அதான் இன்னிக்கு வெள்ளாவி வச்சு நாளைக்கு சலவை பண்ணி கொண்டு போய் குடுக்கனும்,, ஆமா நீயும் அந்த அருணா அம்மாவும் கடைக்கு போயிருக்கீங்கன்னு வெள்ளச்சீலக்காரம்மா சொல்லுச்சு,, இப்பதான் ரெண்டு பேரும் வந்தீகளா?” என்று கேட்டாள்

மான்சிக்கு வயிற்றுக்குள் திக்கென்றது, “ உனக்கு எப்புடி தெரியும்மா?” என்றாள்

“ இம்புட்டு நேரமா உன்னை காணோம்னதும் தேடிப் போனேன், அப்பத்தான் அந்தம்மா சொன்னாங்க” என்றாள் அன்னலட்சுமி

“ ஆமாம்மா கடையில ஏதோ சாமான் வாங்கனும்னு கூட்டிட்டுப் போனாங்க அதான் லேட்டாயிடுச்சு, நாளைக்கும் போகனும்,, கொஞ்சம் வெள்ளனத்துல வரச்சொன்னாங்க” என்று மான்சி தனது முதல் பொய்யை தன் தாயிடமிருந்து ஆரம்பித்தாள்

“ சரி கஞ்சியும் பருப்பு துவையலும் இருக்கு, நீ போய் சாப்பிட்டு படு நான் அடுப்ப அவிச்சுட்டு வர்றேன்” என்றாள் அன்னலட்சுமி

மான்சியும் விட்டால் போதும் என்பதுபோல் குடிசைக்குள் போய் சாப்பிட்டு படுத்துவிட்டாள்

மறுநாள் காலை எழுந்ததும் வேகவேகமாக எல்லா வேலைகளையும் முடித்த மான்சி “ அம்மா அந்தக்கா இன்னிக்கு சீக்கிரமா வரச்சொல்லுச்சு, ரெண்டு மூனு எடத்துக்கு போகனுமாம் சாமான்கள் வாங்கியாற ,, நான் கிளம்புறேன்ம்மா” என்று தனது இரண்டாவது பொய்யை தாயிடம் சரளமாக சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறினாள்

அருணாவின் வீட்டை அடைந்தபோது,, அருணா கிளம்பிமான்சிக்காக காத்திருந்தாள்,, இருவரும் ஆட்டோவில் கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றனர்

அருணா போன் மூலம் ஏற்கனவே அப்பாயின்மென்ட் வாங்கியிருந்ததால் உடனே உள்ளே அனுப்பப்பட்டனர்,

ஏசி அறையில் இருந்த பெண் டாக்டருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம், அனுபவம் அவரது பார்வையில் தெரிந்தது, இருவரையும் ஒரு புன்னகையுடன் வரவேற்று எதிரில் இருந்த இருக்கையில் அமரச்சொன்னார்

இருவரும் அமர்ந்ததும் “ அருணா நீங்க சொன்னது இந்த பொண்ணு தானா?” என்று மான்சியைப் பார்த்தபடி கேட்க..

“ ஆமாம் டாக்டர், ஓரளவுக்கு எல்லாத்தையும் சொல்லிட்டேன்,, நீங்க செக்கப் பண்ணி தகுதியனவளான்னு பார்த்துட்டா, பேப்பர்ஸ்ல சைன் வாங்கிடலாம்” என்று அருணா சொல்லவும்

“ உன் பெயர் என்னம்மா?, உனக்கு என்ன வயசு ஆகுது?” என்று கேட்டார் டாக்டர்

“பெயர் மான்சி, பத்தொன்பது வயசு ஆகுது மேடம்” என்றாள் மான்சி

“ ம்ம் பர்த் சர்டிபிகேட் இருக்குதானே? நாளைக்கு எடுத்துட்டு வரனும் ”

“ ம்ம் இருக்கு மேடம்,, நாளைக்கு எடுத்துட்டு வர்றேன்”

“ மத்தபடி யாரோட வற்புறுத்தலும் இல்லாம உன்னோட முழு சம்மதத்துடன் தானே வாடகைத்தாயாக சம்மதிக்கிற மான்சி” என்று டாக்டர் கேட்டதும்

வளமையான எதிர்காலம் கண்முன் பிரகாசமாக தெரிய பெரிதாக விரிந்த புன்னகையுடன் “ யாரும் என்னை வற்புறுத்தலை மேடம், அருணா அக்காவுக்கு உதவுறதுல எனக்கு முழு சம்மதம் தான்” என்று மான்சி உறுதியாக கூறினாள் 


“ ரொம்ப நல்லது மான்சி, உள்ளே போய் கட்டில்ல படு நான் வர்றேன்” என்று டாக்டர் சொல்ல

மான்சி சங்கடமாக அருணாவை பார்த்தாள், உடனே அருணா எழுந்து மான்சியின் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு பக்கத்து அறைக்கு போய் அங்கிருந்த கட்டிலில் உட்கார வைத்து “ இதோபார் மான்சி இப்போ டாக்டர் செக்கப்பு பண்ணுவாங்க நீ அவங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு குடுக்கனும்,, கூச்சப்படாதே அவங்களும் பெண்தானே?” என்று அருணா மந்திரம் ஓத ..

அந்த மந்திரத்துக்கு கட்டுப்பட்டு சரியென்று தலையசைத்தாள் மான்சி,

அடுத்த சிலமணிநேரத்தில் மான்சிக்கு பலவித பரிசோதனைகள் செய்யப்பட்டு அவளின் தகுதி சோதனை செய்யப்பட்டது, சில பரிசோதனைகளின் போது அருவறுப்பினால் மான்சியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, சில நேரம் ஒத்துழைப்புக்கு மறுத்து கண்ணீருடன் கால்களை மான்சி இடுக்கிக்கொள்ள ..

“ இதோ பாரும்மா பெண்ணாய் பிறந்த எல்லாருக்கும் ஒருநாள் இது நடக்கும், நீ சங்கடப்படாமல் ஒத்துழைச்சாதான் என்னால கரெக்டா செக் பண்ண முடியும்” என்று அந்த பெண் டாக்டர் கூற

மான்சி கண்ணீருடன் கால்களை விரித்து படுத்துக்கொண்டாள், கண்களை இறுக்கி மூடி, வாய் கந்தசஷ்டி கவசத்தை இடைவிடாது உச்சரிக்க, சஷ்டிக்கவசம் முடிவதற்குள் பரிசோதனைகள் முடிந்தது,

மான்சி கட்டிலில் இருந்து எழுந்து உடைகளை சரிசெய்து கொண்டு டாக்டரின் அறைக்கு வந்து அருணாவின் பக்கத்தில் அமர்ந்தாள்,

“ என் சோதனையில் இவள் ரொம்ப பொருத்தமான பெண்தான் அருணா, இன்னும் ப்ளட் ரிசல்ட் வந்ததும் இறுதியா முடிவு பண்ணலாம், நீங்க அதுவரை வெளியே வெயிட் பண்ணுங்க, ரிசல்ட் வந்ததும் கூப்பிடுறேன்” என்று டாக்டர் சொல்ல அருணா, மான்சி, இருவரும் அங்கிருந்து வெளியே வந்து வரவேற்பு அறையில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்

செய்யப்பட்ட சோதனைகள் மூலம், மான்சியின் முகம் பயத்தில் வெளுத்து இருந்தது, இப்படியொரு சோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு கன்னிப்பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும் என்று அவள் முகத்தை பார்த்து தெரிந்துகொள்ளாம்,,

அருணா மான்சியின் கையைப் பற்றி “ ரிலாக்ஸ் மான்சி, பெண்ணாய் பிறந்தால் இதெல்லாம் சகஜமாக ஏத்துக்கனும்” என்று மட்டும் கூறினாளே தவிர மான்சியின் மனதை தைரியப்படுத்த எந்த ஆறுதலையும் கூறவில்லை,

கிட்டத்தட்ட ஒருமணிநேரம் இருவரும் அமர்ந்திருந்தனர், அருணா ஒரு ஆங்கில வாரஇதழை பிரித்து அதில் மூழ்கியவள் மறுபடியும் தலையை நிமிரவே இல்லை,, மான்சி அங்கே வரும் கர்ப்பிணி பெண்களை எல்லாம் பார்த்து தன் மனதை தைரியப்படுத்திக் கொண்டாள்,, இவர்களும் பெண்தானே? இவர்கள் எல்லாம் எல்லாவற்றையும் கடந்து தானே வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தை வளர்த்து பயத்தை போக்கினாள்

இருவரையும் ஒரு நர்ஸ் வந்து உள்ளே அழைக்க, இருவரும் எழுந்து டாக்டரின் அறைக்கு போனார்கள்,

புன்னகையுடன் அருணாவை ஏறிட்ட டாக்டர் “ ம்ம் எல்லாம் ஓகே அருணா, நாளைக்கு இன்ஜெக்ட் பண்ணிடலாம்,, நாளைக்கு காலையில மறக்காம இவளோட பர்த் சர்டிபிகேட் வேனும், அது வந்தவுடன் பேப்பர்ஸ்ல சைன் வாங்கிட்டு, நாளைக்கே எல்லா வேலையையும் முடிச்சுடலாம், உங்க ஹஸ்பண்ட் ஜீன்கள் கொடுத்துட்டு போய் நாப்பத்தேழுநாள் முடிஞ்சு போச்சு, இனிமேல் நமக்கு டைம் இல்லை உடனே மான்சிக்குள்ள செலுத்தியாகனும், நாளைக்கு காலையில சீக்கிரமே வந்துடுங்க அருணா, முடிஞ்சதும் ஆறு மணிநேரம் இங்கேயே ரெஸ்ட் எடுக்கனும், எல்லாத்துக்கும் தயாரா வாங்க ” என்று டாக்டர் சொல்ல..




அவர் என்ன சொல்கிறார் என்று மான்சிக்கு முழுதாக புரிந்தது, அவர்கள் தனக்குள் எதை செலுத்தப் போகிறார்கள் என்று தெளிவாக புரிந்தது, தொடைகள் நடுங்க கால்கள் பலமிழப்பது போல் இருந்தது, பெருவிரலை தரையில் அழுத்தமாக ஊன்றி தனது பதட்டத்தை தணிவிக்க முயன்றாள்

சிறிதுநேரம் அருணாவும் டாக்டரும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருக்க, அந்த மேலைநாட்டு ஆங்கிலம் புரியாமல் அவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மான்சி

பேசி முடித்து அருணா எழுந்து நிற்க மன்சியும் எழுந்துகொண்டாள்,, டாக்டரைப் பார்த்து சிறு புன்னகையுடன் “ வர்றேன் மேடம்” என்று கூறிவிட்டு அருணாவுடன் கிளம்பினாள் மான்சி

ஆட்டோவில் வரும்போது “ மான்சி நாளைக்கு எல்லாம் முடிஞ்சதும் நாளை மறுநாள் நீயும் உன் அம்மாவும் என்கூட ஊட்டிக்கு வரனும், அங்கே எனக்கு ஒரு எஸ்டேட் இருக்கு அதுல ஒரு வீடு இருக்கு, குழந்தை பிறக்குற வரைக்கும் அங்கதான் நீயும் உன் அம்மாவும் தங்கனும், மாசாமாசம் செக்கப்புக்கு ஊட்டியில எனக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட ஏற்பாடு செய்றேன், நீயும் உன் அம்மாவும் அவங்க சொல்ற தேதில போய் செக்கப் பண்ணிகிட்டு வரனும் அதுக்கு ஒரு வாடகை கார் ஏற்பாடு பண்ணிர்றேன், அப்புறம் ஆஸ்பிட்டலுக்கு பணம் நான் மொத்தமா செட்டில் பண்ணிடுவேன், உங்களுடைய செலவுக்கு ஒவ்வொரு மாசமும் இரண்டாயிரம் பணம் எடுக்குற மாதிரி பேங்கில் பணம் போட்டு வச்சிர்றேன், உன் அம்மா முன்னாடி இதெல்லாம் பேசமுடியாது அதான் இங்கயே சொல்லிர்றேன், உங்கம்மாகிட்ட ஊட்டிக்கு போறவரைக்கும் எதுவும் சொல்ல வேண்டாம் அங்கே போய் நானே பக்குவமா சொல்லிக்கிறேன், என்ன ஓகேயா மான்சி ” என்று அருணா தனது பிசினஸ் மூளையை பயன்படுத்தி பக்காவாக பிளான் போட்டு சொல்ல,, மான்சி வியப்புடன் அவளைப் பார்த்து தலையசைத்தாள்

மான்சியின் வீடு வந்ததும் அருணாவும் மான்சியுடன் இறங்கி குடிசைக்குள் நுழைந்தாள்

சலவை துணிகளுக்கு சலவை குறி போட்டுக்கொண்டிருந்த அன்னலட்சுமி அருணாவைப் பார்த்ததும் அவசரமாக எழுந்து “ வாங்கம்மா” என்றவள் அருணாவை உட்கார வைக்க தகுதியான எதுவும் இல்லாமல் முழித்துக் கொண்டு நின்றாள்

மான்சி ஒரு கிழிந்த பாயைப் போட்டு அதில் ஒரு சலவைசெய்த புடவையை விரித்து அருணாவை உட்கார வைத்தாள்.

சங்கடத்தை முகத்தில் காட்டாமல் செயற்கையான புன்னகையுடன் பாயில் அமர்ந்த அருணா அன்னலட்சுமியை பார்த்து “ இப்போ காய்ச்சல் சரியாயிடுச்சா அன்னம்” என்று கேட்டாள்

அன்னலட்சுமி நின்றபடியே பணிவுடன் “ அது அன்னிக்கே நல்லாயிருச்சும்மா,, நீங்கதான் நூறு ரூவாய் கொடுத்தீங்கன்னு மான்சி சொல்லிச்சு, ரொம்ப நன்றிங்கம்மா” என்று கூறினாள்

“ பரவாயில்லை அன்னம், மான்சி மாதிரி ஒரு நல்ல பொண்ணுக்கு இன்னும் எவ்வளவு வேனும்னாலும் கொடுத்து உதவலாம்,, நீ ஏன் நிக்கிற உட்காரு அன்னம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்னு தான் வந்தேன்” என்று அன்பொழுக பேசினாள் அருணா

அன்னலட்சுமி அருணாவின் எதிரில் அமர,, மான்சி சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தாள்


அருணா மான்சியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு “ அன்னம் இன்னிக்குத்தான் மான்சி உன் குடும்பம் இருக்குற சூழ்நிலையை சொன்னா, என்கிட்ட ஏதாவது வேலை கிடைக்குமான்னு கேட்டா , எனக்கு ஊட்டியில ஒரு எஸ்டேட் இருக்கு அங்கே ஒரு வீடு இருக்கு அதை கவனிச்சுக்க நம்பிக்கையான ஒரு ஆள் வேனும், நீயும் மான்சியும் அங்கே வந்தீங்கன்னா நீ என் வீட்டைப் பார்த்துக்கிட்டா கூட மான்சிக்கு ஊட்டிலயே ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்றேன், நீங்க ரெண்டுபேரும் பட்ட கஷ்டமெல்லாம் போதும் என்கூட கிளம்பி வந்துடுங்க, கொஞ்சநாள்ல மான்சிக்கு அங்கேயே ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம், என்ன சொல்ற அன்னம்? ” என்று அருணா பாலீசாக பேச

அதை கேட்ட அன்னலட்சுமிக்கு அந்த நிமிஷமே தனது கஷ்டமெல்லாம் பறந்து தனக்கும் தன் மகளுக்கும் விடிவு காலம் வந்துவிட்டது போல் சந்தோஷம் வர “ அம்மா நீங்க சொன்னா சரிம்மா,, ஏற்கனவே மானுபபுள்ள உங்ககிட்ட வேலை கேட்கப் போறேன்னு சொல்லிகிட்டு தான் இருந்துச்சு, இப்போ நீங்களே வீடேறி வந்து சொன்ன பொறவு நாங்க மாத்து சொல்லுவோமா அம்மா, உங்க சவுகரியப்படி செய்ங்கம்மா” என்று அன்னலட்சுமி சந்தோஷத்தில் துளிர்த்த கண்ணீருடன் கூறினாள்

வந்த வேலை சுலபமாக முடிந்ததில் சந்தோஷமான அருணா, சிறு புன்னகையுடன் எழுந்து “ சரி அன்னம் நாளை மறுநாள் வியாழக்கிழமை நைட் நீயும் மான்சியும் என்கூட கிளம்பனும், உங்களுக்கு தேவையான துணிகளைத் தவிர இங்க இருக்கிற எதையுமே எடுத்துட்டு வராதே” என்றவள் தனது கைப்பையை திறந்து சில நூறு ரூபாய்களை எடுத்து அன்னலட்சுமியின் கையில் வைத்து “ இங்கே ஏதாவது கடன் இருந்தா அதையெல்லாம் குடுத்துட்டு, மிச்சமிருக்கும் பணத்துக்கு ஏதாவது டிரஸ் வாங்கிக்க, வியாழன் நைட் புறப்பட தயாரா இரு” என்று கூறிவிட்டு வெளியே வந்தவள்

மறுபடியும் உள்ளே வந்து “ சொல்ல மறந்துட்டேன் அன்னம்,, நாளைக்கு எனக்கு நிறைய சாமான்கள் வாங்க வேண்டியிருக்கு, அதனால காலையிலேயே வந்து மான்சியை நான் கூட்டிட்டு போயிடுவேன், எல்லா வாங்கிகிட்டு திரும்பி வர நைட் ஆயிடும்,, மான்சியை நானே கொண்டு வந்து விட்டுட்டுப் போறேன் நீ அவளைத் தேடாதே, சரியா?” என்று கேட்க

“ அம்மா நீங்க தாராளமா கூட்டிட்டுப் போங்கம்மா, நான் ஏன் மறுப்பு சொல்லப்போறேன்” என்று அன்னலட்சுமி வாயெல்லாம் பல்லாக சந்தோஷத்துடன் கூறினாள்

அன்னலட்சுமி கள்ளமற்ற சிரிப்பை பார்த்ததும் மான்சிக்கு வயிறு தடதடவென்று உதறியது, கண்களில் முட்டிய கண்ணீருடன் அருணாவைப் பார்க்க, அவளோ அடக்கு என்பதுபோல் பார்வையால் எச்சரிக்கை செய்தாள்,

அதன்பின் அருணா விடைபெற்று செல்ல, மான்சி அருணா அமர்ந்த பாயில் படுத்துக்கொண்டாள், இன்றைய செக்கப்பின் போது அவள் உடலில் டாக்டர் கைவைத்த இடங்களை எண்ணி கண்ணீர் வந்தது, இப்போது அவளுக்கு பெரும் குழப்பமாக இருந்தது, தான் போகும் வழி சரியானது தானா? என்ற கேள்வி மனதில் எழுந்தது, ஏன் சரியில்லை என்று அவள் மனமே பதிலுக்கு வாதிட்டது, தனது அம்மா அடிக்கடி சொல்லும் வார்ததைகள் மான்சிக்கு ஞாபகம் வந்தது,, ‘ திருடக்கூடாது,, பொய்சொல்லக் கூடாது, தேவிடியாத்தனம் பண்ணக்கூடாது,, இது மூன்றும் இல்லாமல் பணத்தை சம்பாதிக்க என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற வார்த்தைகள் ஞாபகம் வர,, நான் இந்த மூன்றையுமே செய்யவில்லை, வீடு மற்றும் பொருட்களை வாடகைக்கு விடுவது போல் எனது கருப்பையை வாடகைக்கு விடுகிறேன், இந்த பத்துமாத துன்பத்தில் வாழ்நாள் முழுமைக்கும் பசியும் வறுமையும் இல்லாமல் வாழலாம் என்றால் இதை செய்வதில் எந்த தவறும் இல்லை என்று, முதலில் கேள்வி கேட்ட அவள் மனமே அவளுக்கு ஆறுதல் சொல்ல, மான்சி கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் 


சமையலறை தடுப்புக்கு பின்னால் சோற்றுப் பானையை வழித்து தட்டில் போட்டுக்கொண்டிருந்த அம்மாவின் அருகில் போய் அமர்ந்து அவளை கட்டிக்கொண்டு “ அம்மா இன்னியோட நம்ம கஷ்டமெல்லாம் தீரப் போகுதும்மா,, இனிமேல் நமக்கு நல்லகாலம்தான்” என்று சொல்லி கண்ணீர் விட்டாள்

“ ம்ம் எனக்கும் என்னா சொல்றதுன்னு தெரியலை மான்சி,, நாம கும்புடுற மாரியாத்தாவே அந்தம்மா ரூபத்தில் வந்து உதவுற மாதிரி இருக்கு மான்சி,, நீ நாளைக்கு அவுககூட கிளம்பி போ, நான் இங்க இருக்கு சாமனையும், இந்த குடிசையோட யாருக்காச்சும் குடுத்துட்டு ஏதாவது காசு கெடைக்குமான்னு பாக்குறேன்,, அந்தம்மா குடுத்த காசுல இருக்குற கொஞ்சநஞ்ச கடனையும் அடச்சுப்புட்டு நிம்மதியா கெளம்புவோம்” என்றாள் அன்னலட்சுமி

மறுநாள் அருணா காலையிலேயே கிளம்பி வந்துவிட, மான்சி எந்தவிதமான பதட்டமும் இன்றி அவளுடன் புறப்பட்டாள், இருவரும் மருத்துவமனைக்கு சென்று காத்திருக்க சிறிதுநேரத்தில் ஒரு நர்ஸ் வந்து இருவரையும் அழைத்து சென்றாள்

டாக்டர் அவர்களை புன்னகையுடன் வரவேற்று “ என்னம்மா பர்த் சர்டிபிகேட் கேட்டேனே எடுத்துட்டு வந்திருக்கயா” என்று மான்சியிடம் கேட்டார்
மான்சி தான் எடுத்துவந்த கவரை அவரிடம் கொடுக்க,,

கவரை பிரித்து அதிலிருந்த சர்டிபிகேட்டை எடுத்து மான்சியின் வயதை கணக்கிட்ட டாக்டர் “ ம்ம் பதினெட்டு வயசு முடிஞ்சு ஏழு மாசம் ஆகுது” என்றவர் அதை தன் டேபிளில் வைத்துவிட்டு ஒரு பைலை எடுத்து மான்சியின் முன்வைத்து “ இதிலிருக்கும் பேப்பர்ஸ் எல்லாத்திலேயும் இன்ட்டு மார்க் இருக்குற இடத்தில் கையெழுத்து போடு மான்சி, முடிஞ்சா படிச்சுப் பார்த்து கையெழுத்து போடு” என்று கூறி ஒரு பேனாவை மான்சியிடம் நீட்டினார்

மான்சி எதையும் படிக்கும் நிலையில் இல்லை, அவளுக்கு இந்த மருத்துவமனையை விட்டுவிட்டு சீக்கிரமே போகவேண்டும் என்பதால் அவர் குறிப்பிட்ட இடங்களில் வேகமாக கையெழுத்திட்டாள்

அதன்பிறகு மான்சி அங்கிருந்து வேறு ஒரு அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உடல் சுத்தம் செய்யப்பட்டு பச்சைநிற அங்கி அணிவிக்கப்பட்டு படுக்கவைக்கப்பட்டாள் ,, ஒருசில மருந்துகள் அவளுக்குள் செலுத்தப்பட்டது,,

டிரெடிஷனல் வாடகைத்தாய். என்ற முறையில் மான்சி கருத்தரிப்பு செய்யப்பட்டாள் இந்த முறையில் வாடகைத்தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஐ.யூ.ஐ. முறை பின்பற்றப்படுகிறது. ஐ.யூ.ஐ. என்றால், ஆணின் விந்தணுவை பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவது. அதாவது தம்பதியரில் அந்த மனைவியின் கருமுட்டையை பயன்படுத்த முடியாமல் இருக்கும் சூழலில், வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே அந்தக் குழந்தை உருவாகப் பயன்படுத்தபடுகிறது,, இந்த முறையில் கருத்தரிப்பு செய்ய மான்சியின் மாதவிடாய் நாட்கள் ஏற்கனவே கணக்கில் கொள்ளப்பட்டதால், அடுத்த அறை மணிநேரத்தில் கன்னிப்பெண்ணான மான்சியின் கருப்பைக்குள் செயற்கை முறையில் சிதறி வெடித்த மான்சியின் சினைமுட்டைக்குள் ஒரு ஆணின் உயிரனு செலுத்தப்பட்டது, ஆணின் உயிரணுக்கள் வெற்றிகரமாக அவளின் கருமுட்டைக்கு சேமிக்கப்பட்டது,



மான்சி அப்படியே அசையாமல் கிடந்தாள், மான்சி நல்ல ஆரோக்கியமான பெண் என்பதால் எதிர்பார்த்ததைவிட எந்த சிக்கலுமின்றி வந்த வேலை முடிய, அருணா டாக்டரின் கையைப்பற்றி குலுக்கி நன்றித் தெரிவித்துக்கொண்டாள்

அன்று இரவு ஒரு வாடகை காரில் மான்சியுடன் வந்திறங்கிய அருணா “ இன்னிக்கு ரொம்ப அலைச்சல் அன்னம் அதனால மான்சி ரொம்ப டயர்டாயிட்டா, வர்ற வழியிலேயே ஹோட்டல்ல சாப்பிட்டோம் அதனால சாப்பிடச் சொல்லி நீ அவளை தொந்தரவு செய்யாதே நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும், நீ நாளைக்கு நைட் கிளம்ப தயாராயிரு” என்று கூறிவிட்டு கிளம்பினாள் 



No comments:

Post a Comment