Friday, September 25, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 20

ஆர்.எஸ்.ஐயில் டாக்டர் மதுசூதன் வாடகைக்கு எடுத்து இருந்த ஆலோசனை அறை ..

டாக்டர் மதுசூதன், "ரெண்டு கால கட்டங்களில் அவளுக்கு சந்திரசேகருடன் உறவு இருந்தது. ஒவ்வொண்ணுக்கும் என்ன காரணம்?"

விஸ்வா, "Well, let us take the first time she had sex with him. அவளுக்கு என் திறமையில் நம்பிக்கை இல்லை. நோ நோ .... எனக்கு என் மேல் அப்போ நம்பிக்கை இல்லை. அது தான் உண்மை. ஏற்கனவே அப்படி இருந்த எனக்கு அவளும் ராமும் சேர்ந்து நம்பிக்கை வர வெச்சாங்க. இப்போ யோசிச்சுப் பார்க்கும் போது, அந்த நாட்கள் அவளிலும் ரொம்பவே அவ கஷடப் பட்டு இருப்பான்னு தோணுது. அப்பவும் நான் அவளுக்கு கிடைக்காமல், ஐ மீன் எல்லா விதத்திலும், கிடைக்காமல் இருந்தேன். அந்த சமயத்தில் தன் சுகத்தைப் பொருட் படுத்தாமல் எப்படியாவுது எனக்கு தன்னம்பிக்கை வரவைக்க முயற்சி எடுத்தா. She succeeded too.



முதலில் அந்த PML வேலை கிடைக்கும்ன்னு ரொம்ப நம்பிக்கையோடு இருந்தேன். வேலை கிடைக்காதுன்னு தெரிஞ்சப்போ நான் முழுவதும் நம்பிக்கை இழந்தேன். அந்த நிலைமையில் எனக்கு எப்படியாவுது நம்பிக்கை ஊட்டணும்ன்னு வனிதா முடிவு செஞ்சு இருக்கா. நான் மனசு ஒடிஞ்சு போயிருந்ததுக்கு சீக்கரமா ஒரு முடிவு காணத் துடித்தாள். தன்னம்பிக்கை அவளுக்கு ரொம்பவே அதிகம். கூடவே எந்த விஷயத்தையும் இமோஷனலா பாக்காமல், உணர்ச்சிவயப் படாமல் யோசிப்பா. அந்தத் தன்னம்பிக்கை அவளை தப்பா முடிவு எடுக்க வைச்சு இருக்கு.

It is her basic trait. எல்லாம் அவளுக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு முடிவு எடுத்தாகணும். அதனால்தான் அவரோட கண்டிஷனுக்கு ஒத்துகிட்டு இருக்கா. அந்த சமயத்திலும் நான் அவளுக்குக் கிடைக்காமத்தான் இருந்தேன். நான் அப்படி இருந்ததனால் குற்ற உணர்வு இல்லாமல் அவளை அவரோடு எஞ்சாய் பண்ண வெச்சுது”

டாக்டர் மதுசூதன், “நீ சொல்வது ஒரு அளவுக்கு சரி. ஆனா, சில விஷயங்களை நீ அவளிடமே கேட்டுத் தெரிஞ்சுக்கணும்”

விஸ்வா, “எதுக்கு? அதனால் ஒரு பயனும் இல்லை”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தாலும் சரி. பிரிஞ்சாலும் சரி உன் மனத்தில் அவளைப் பத்தி அனாவிசிய சந்தேகங்களும் அனுமானங்களும் இருக்கக் கூடாது. அது உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் பாதிக்கும்”

விஸ்வா மௌனம் காக்க ...

டாக்டர் மதுசூதன், “சரி, ரெண்டாவுது முறை அவ சந்திரசேகருடன் தொடர்பு நேர்ந்தது எப்படி?”

விஸ்வா, “ஆனா, அந்த தொடர்பு உண்டானதுக்கும் அதற்குப் பிறகு தொடர்ந்ததுக்கும் நான் தான் காரணமா இருந்து இருக்கேன். ஆனா, அவ செஞ்சது சரின்னு சொல்லலை.”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, Do you love Vanitha”

விஸ்வா, “எஸ். ஆனா செஞ்சதை என்னால் மன்னிக்க முடியலை. அதே சமயம், நானும் ஒரு விதத்தில் காரணமா இருந்து இருக்கேன்னு நினைக்கும் போது என்னால் என்னையே மன்னிக்க முடியலை”

டாக்டர் மதுசூதன், "சரி, வனிதா என்ன செய்யணும்? இனி அவளோட வாழ்க்கை எப்படி அமையணும்?”

விஸ்வா பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான் ...


சந்தியா விஸ்வாவின் பி.ஏ ஆக பணியாற்றத் தொடங்கிய பிறகு அவர்கள் இருவருக்கிடையே சகஜமான நட்பு உறுவானது.

மதிய வேளைகளில் கேண்டீனில் உணவருந்தப் போகும் போதும் வாரம் ஓரிரு முறை அவன் புது தொழிற்சாலையை மேற்பார்வை இடச் செல்லும் போதும் பல சமயங்கள் சந்தியாவையும் அழைத்துச் செல்வது வழக்கமானது.

பொதுவாக வீட்டில் சமைத்து எடுத்து வருவது தன் வழக்கமானாலும் சில சமயங்கள் வனிதாவும் அவர்களுடன் லஞ்சில் கலந்து கொள்வதும் வழக்கமானது.

ஒரு மதிய வேளையில்

வனிதா, “என்ன சந்தியா, வீட்டில் இருந்து எடுத்துட்டு வர்றதை நிறுத்திட்ட மாதிரி இருக்கு?”

சில கணங்கள் மலைத்து பதில் சொல்லத் தெரியாமல் விழித்த சந்தியா, “முன்னே எல்லாம் என் மகள் சரியா சாலிட்ஸ் சாப்பிட மாட்டா. இப்போ காரம் கம்மியா போட்டு செஞ்சு கொடுத்தா சாப்பிடத் தொடங்கி இருக்கா. அவளுக்குன்னு தனியா சமைக்கவே நேரம் சரியா இருக்கு. எனக்கு கொஞ்சம் உறைப்பா இருக்கணும். அதனால் தான் தினமும் நம்ம கேண்டீனில் சாப்பிட்டுக்கறேன்”

வனிதா, “Oh, I know what you are going through. நல்ல வேளை எனக்கு எப்படி இருந்தாலும் சாப்பிடுவேன். விஸ்வா ஊரில் இருந்தா மட்டும் தனியா எக்ஸ்ட்ரா ஒரு டிஷ் சமைப்பேன். அவர் ஊரில் இல்லாத நாட்களில் அவங்களுக்கு சமைப்பதையே எனக்கும் எடுத்துட்டு வந்துடுவேன்.”

சந்தியா, “ஆனா, மேம். கேண்டீன் சாப்பாடு இப்பெல்லாம் ரொம்ப ருசியா இருக்கு. கேண்டீனை ரொம்ப சுத்தமா வெச்சு இருக்காங்க. எல்லாம் நீங்க கொண்டு வந்த புது மாற்றங்கள், புது கான்ட்ராக்டர் இதனால்தான். நான் தினமும் கேண்டீனில் சாப்பிட நீங்களும் ஒரு காரணம்”

வனிதா, “அந்த பழைய கான்ட்ராக்டர் சண்முகம் சாருக்குத் தெரிஞ்சவன்னு ரொம்பவே உரிமை எடுத்துகிட்டான். ஆனா சண்முகம் சாருக்கு அது தெரியவே தெரியாது. அவர்கிட்டே சொன்ன உடன் தமிழில் எனக்கு தெரியாத கெட்ட வார்த்தையில் எல்லாம் அவனை திட்டிட்டு அவனை அடிச்சுத் துரத்தச் சொன்னார்”

அடக்க முடியாத சிரிப்பால் விஸ்வாவுக்கு புரையேற வனிதா அவன் தலையை தட்ட சந்தியா அவனுக்கு தண்ணீர் க்ளாஸை நீட்டினாள்.

அடுத்த சில நிமிடங்கள் மௌனமாக மூவரும் உணவருந்திக் கொண்டு இருக்க

வனிதா, “சந்தியா, ஜின்னி அண்ட் ஜானில சேல் போட்டு இருக்கான். என் குழந்தைகளுக்கு ட்ரெஸ்ஸஸ் பார்க்கப் போறேன். நீயும் வர்றியா?”

சந்தியா, “கம்பெனி கொடுக்க வர்றேன். ஆனா, அங்கே எல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் ... “ என்று இழுக்க

வனிதா, “ஓ! உனக்கு இன்க்ரிமெண்ட் கொடுத்து இருப்பதை ஹெச்.ஆர் மேனேஜர் இன்னும் உனக்கு சொல்லலையா?”

சந்தியா, “என்ன? இன்க்ரிமெண்டா? எப்போதில் இருந்து?”

வனிதா, “இந்த மாசத் தொடக்கத்தில் இருந்து”

சந்தியா, “ரொம்ப தாங்க்ஸ் மேடம்”

வனிதா, “உன் தாங்க்ஸை உன் பாஸ் கிட்டே சொல்லு”

அந்த விவரம் அது வரை தெரியாத விஸ்வா மௌனம் காத்தான்

சந்தியா எழுந்து சென்ற பிறகு விஸ்வா, “I know it is C.O.O’s prerogative … எப்போ இந்த டிஸிஷன் எடுக்கப் பட்டுது”

வனிதா, “பத்து நிமிஷத்துக்கு முன்னால்” என்ற படி எழுந்து சென்றாள்




அடுத்த சந்திப்பு ...

வனிதா, “வாவ், இன்னைக்கு அஞ்சரை மணிக்கு சந்திக்கலாம்ன்னு அமுதா மேம் சொன்னப்ப எனக்கு சந்தேகமா இருந்தது. எங்க C.E.O ஆஃபீஸை விட்டு அஞ்சு மணிக்கு கிளம்பி வரப் போறாரான்னு சந்தியாகிட்டே கேட்டு கன்ஃபர்ம் பண்ணிட்டேன்”

அவள் சொற்கள் மனதை உறுத்தினாலும் அவள் பேச்சில் எந்தக் கோபமும் வெறுப்பும் இல்லாமல் விளையாட்டான நட்பு இருந்ததை உணர்ந்தான். தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ள விரும்பி ...

விஸ்வா, “ம்ம்ம் .. எனக்கு ஒரு நல்ல C.O.O வந்து இருக்காங்க. அதனால் என் வேலை நிறைய குறைஞ்சு இருக்கு”

ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல முகம் மலந்த வனிதா, “Thanks for your appreciation. ஆனா, உன்னை மாதிரி என்னால் கண்டிப்போட தட்டிக் கொடுத்து வேலை வாங்க முடியறது இல்லை”

விஸ்வா, “ஆர்மியில் இருந்ததில் உருப்படியா கத்துகிட்ட ஒரு விஷயம்”

வனிதா, “சரி, இங்கேயும் வேலையைப் பத்திப் பேசப் போறோமா?”

விஸ்வா, “இல்லை. நம்ம விஷயத்துக்கு வருவோம். நீ லாஸ்ட் டைம் நடந்ததை எல்லாம் சொன்னே. அதைப் பத்தி நான் சில கேள்விகள் கேட்கணும். பரவால்லையா?”

வனிதா, “நீ கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தயாரா இருக்கேன்”

விஸ்வா, “முதல் முதலில் அவரோடு என் வேலைக்காக நீ அவரோடு இருந்தப்ப எப்படி இருந்தது?”

வனிதா, “எப்படி இருந்ததுன்ன?”

விஸ்வா, “I mean did you enjoy sex with him?”

வனிதா, “முதல் நாள் நான் ரொம்ப கூச்சப் பட்டேன். மறக்கட்டை மாதிரி படுத்துட்டு வரணும்ன்னு முடிவு செஞ்சுதான் போனேன். ஆனா, அவர் எனக்கு நல்லா மூட் ஏத்திவிட்டார். எல்லாம் நீ எப்போதும் செய்வதைத்தான் அவரும் செஞ்சார். இருந்தாலும் ஒரு புது மனுஷனோடு செய்வதாலோ என்னவோ தெரியலை. I started responding to him. முடிஞ்ச பிறகு ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணி அழுதேன். ஆனா அடுத்த ரெண்டு முறை, ஐ மீன் அடுத்த ரெண்டு வாரங்கள் அவரோடு இருந்த பிறகு அந்த கில்டி ஃபீலிங்க் அவ்வளவா இல்லை. லாஸ்ட் டைம் நிச்சயம் நல்லா என்ஜாய் பண்ணினேன்னுதான் சொல்லணும்”

விஸ்வா, “Did you love him?”

வனிதா, “நல்ல வேளை அடுத்து எதோ ரொம்ப கஷ்டமான கேள்வி கேட்கப் போறியோன்னு நினைச்சேன். தாங்க்ஸ். நான் அவரை லவ் பண்ணினேனா? No. Never. At most you may term it as fondness. நட்புன்னு சொல்லலாம். அதுக்கு மேல் எதுவும் இல்லை. நான் ஏற்கனவே சொன்னதை மறுபடி விளக்கமா சொல்லறேன். நான் அவரை இது வரை கிஸ் பண்ணினது இல்லை. முதல்ல நிறைய தடவை அவர் முயற்சி செஞ்சார். ஐ, மீன் ஏழு வருஷத்துக்கும் முன்னால். ஆனா, எனக்கு செக்ஸ் லவ் இது ரெண்டும் வேற வேற அப்படின்னு மனசில் ஆழமா பதிஞ்சு இருந்தது. அதனால் நானே அவர்கிட்டே கிஸ் பண்ணினா நான் அவரை லவ் பண்ணுவது மாதிரின்னு சொல்லி இருக்கேன். And I didn’t love him. மூஞ்சியில் அடிச்ச மாதிரி அவர் கிட்டே சொன்னேன்.” என்றவள் லேசாகச் சிரித்த படி, “ஒரு தடவை நான் அவரை ஹூமன் வைப்ரேட்டர் அப்படின்னு கிண்டல் பண்ணி இருக்கேன். அதையும் அந்த மனுஷன் சிரிச்சுட்டே கேட்டு கிட்டார்”

முகத்தில் கலவரத்துடன் விஸ்வா, “ஏன், நான் உனக்கு வைப்ரேட்டர் வாங்கித் தருவதைப் பத்தி சொன்னியா?”

வனிதா, “விஸ்வா, நீ வேலையே கதின்னு இருப்பதா மட்டும்தான் அவர் கிட்டே சொல்லி இருக்கேன். அதுக்கும் அவரைக் குறை சொல்லி திட்டி இருக்கேன். உன் அளவுக்கு தனக்குத் திறமை இல்லைன்னு வெட்கத்தை விட்டு என் கிட்டே அவர் சொல்லி இருக்கார். ஆனா, நம்ம ரெண்டு பேருக்கும் இடையே நடப்பது எதுவும் அவர்கிட்டே சொன்னது இல்லை. அதே மாதிரி அவரையும் சுமதி மேடத்தைப் பத்தி எந்தப் பேச்சும் எடுக்க வேண்டாம்ன்னு சொல்லுவேன்”

விஸ்வா, “சோ, சந்திக்கும் போது என்னதான் பேசிப்பீங்க?”

வனிதா, “ம்ஹூம் .. You will be surprised … Mostly nothing till we finish the job. காரியம் முடிஞ்ச பிறகு எதாவுது பேச்சு வரும். ரெண்டு பேருக்கும் தப்பு செய்யறோம்ன்னு அப்படிங்கற குற்ற உணற்சி இருக்கும். அதை கொஞ்சம் தணிக்க எதாவுது பேச்சு வரும். முடியும் சமயத்தில் மறுபடி எப்போன்னு அவர் கேட்பார். என் கிட்டே இருந்து எப்பவும், நீ அன்னைக்கு கேட்ட அந்த ஒரே பதில் தான் வரும்ன்னு தெரிஞ்சும் கேட்பார். நானும் அதைத்தான் ஒவ்வொரு முறையும் சொல்வேன்”

விஸ்வா, “என்ன, நான் கிடைக்காமப் போனாத்தான் அடுத்த வாரம் வருவேன்னா?”

வனிதா, “ஆமா”

விஸ்வா, “Other than intercourse what all did you do with him?”

வனிதா, “இதை நீ ஏன் கேட்கறேன்னு தெரியலை. உன் கூட செய்யாதது எதையும் அவர் கூட நான் செஞ்சது இல்லை. செய்ய அனுமதிச்சதும் இல்லை. மே பீ, உன்னோடு செய்யாத சில பொஸிஷன்ஸ் அதுவும் டெல்லி ஃபேருக்குப் பிறகுதான்”

விஸ்வா, “வனிதா, நான் உன் கூட படுக்கையில் இருக்கும் போது என் மனசெல்லாம் நீ மட்டும்தான் இருப்பே. உன் மனசில் நான் மட்டும்தான் இருந்தேன்னு உன்னால் அப்படிச் சொல்ல முடியுமா?

வனிதா, “நிச்சயம் சொல்ல முடியும்”

விஸ்வா, “ம்ஹும் ... ஏழு வருஷத்துக்கு முன்னால் எனக்கு வேலை கிடைச்சுதுன்னு நீ சொன்ன அன்னைக்கு நாம் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தோம். நிச்சயம் அன்னைக்கு மத்தியானம் அவர் கூட இருந்து இருப்பே. படுக்கையில் என் கூட இருக்கும் போது நீ அவரை நினைக்கலை?”

வனிதா, “Let me refresh your memory. அப்போ அவர்கூட தொடர்பு வெச்சுட்டு இருந்த அந்த மாசம் முழுவதும் உன்னை ஒரு ட்ரெயினிங்குக்கு உங்க ஆஃபீஸில் போகச் சொன்னாங்க. உனக்கு செஞ்சுட்டு இருக்கும் வேலை பிடிக்கலை. அதே சமயம் PMLஇல் வேலை கிடைக்கலைன்னு ஏமாற்றம், கோபம், செல்ஃப்-பிட்டி. அந்த ட்ரெயினிங்குக்கு போய்ட்டு வந்தா உனக்கு ஒரு மாறுதலா இருக்கும், வேறு கம்பனியில் சேர்ந்தாலும் அந்த ட்ரெயினிங்க் உனக்கு உதவும் அப்படின்னு எல்லாம் சொல்லி நான் உன்னை அனுப்பி வெச்சேன். அவரோடு இருந்துட்டு வந்து உன் முகத்தைப் பார்த்தா குற்ற உணர்வால் அழுதுடுவேனோங்கறது அப்படி அனுப்பி வெச்சதுக்கு இன்னும் ஒரு காரணம். நான் எதிர்பார்த்த படி நீ திரும்பி வருவதற்குள் எங்க தொடர்பு முடிஞ்சுட்டுச்சு. உன் வேலைக்கான ஆர்டர் தயார் ஆகி ஒரு வாரத்துக்குப் பிறகுதான் நீ வந்தே. உனக்கு ஒரு ப்ளெஸெண்ட் சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு அந்த வாரம் உன் கூட ஃபோனில் பேசும் போது உனக்கு வேலை கிடைச்சதைப் பத்தி சொல்லலை. உனக்காக அன்னைக்கு ஃப்ரெஷ்ஷா வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்”

விஸ்வா, “அந்த வாரம் அவர் கிட்டே போகலையா?”

வனிதா, “நோ, அந்த வாரம் நான் அவர் கிட்டே போகலை. ஏன் இப்படி கறாரா இருக்கேன்னு அவர் கேட்டார். கொஞ்சம் கீழ் தரமாவே ஆனா கிண்டலா கேட்டார். நானும் கோபத்தோட எஸ், ஒரு விபசாரி மாதிரி தான் உங்க கூடப் படுத்தேன்னு சொன்னேன். வீட்டில் கட்டின பெண்டாட்டி கிட்டே கண்டிப்பா இருக்க முடியலை. என் கிட்டே இப்படிப் பேச வெட்கமா இல்லையான்னு நாக்கைப் பிடிங்கிக்கற மாதிரி திட்டினேன். அப்பறம் அவர் மன்னிப்புக் கேட்டார். அடுத்த நாளே அந்த வேலையில் இருந்து ட்ரான்ஸ்ஃபர் வேணும்ன்னு சண்முகம் சார் கிட்டே கேட்டேன். சந்திரசேகர் கிட்டே அதுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கக் கூடாதுன்னு மிறட்டினேன்.”


விஸ்வா, “ஸ்டில், நான் கேட்ட கேள்விக்கு நீ சரியா பதில் சொல்லலை”

வனிதா, “என்ன கேள்வி?”

விஸ்வா, “என் கூட இருந்தப்போ அவரைப் பத்தி ... “

கையை உயர்த்தி அவனை மேலும் தொடர விடாமல் வனிதா, “விஸ்வா, நான் அவர் கூட வெச்சுட்டது செக்ஸ், செக்ஸ் மட்டும்தான் அப்படின்னு எனக்குள்ளே மறுபடி மறுபடி சொல்லிகிட்டு ... I convinced myself Viswa. யோசிச்சுப் பாரு விஸ்வா, நீ என்னோடு ஐக்கியம் ஆகும் போது நீ என் கண்ணையே பார்த்துட்டு இருப்பே. அதில் என் மேல் இருக்கும் காதல் இருக்கும். அடிக்கடி நீ ஐ லவ் யூ சோ மச் அப்படின்னு சொல்லிட்டே இருப்பே. நானும் உன் கண்ணை பார்த்துட்டே இருப்பேன். உன் கண்ணைப் பார்த்துட்டு வேறு ஒருத்தனை பத்தி நினைச்சு இருக்க முடியுமா நீயே யோசிச்சு சொல்லு. நான் அவ்வளவு கீழ் தரமானவ இல்லை விஸ்வா. அப்படி என்னால் நடிக்கவும் முடியாது. அப்படி நடிச்சு இருந்த அடுத்த கணமே என் கண்கள் உனக்குக் காட்டிக் கொடுத்து இருக்கும் இல்லையா?”

விஸ்வா அவள் சொன்னதில் இருந்த அப்பட்டமான நிஜத்தை தெள்ளத் தெளிவாக உணர்ந்தான். இருந்தாலும் அவன் மனத்தில் இருந்த சாத்தான் அவனை அடுத்த கேள்வியை கொடுத்தது.

விஸ்வா, “என்னால் சரியா செய்ய முடியாதப்போ?”

வனிதா, “நிச்சயம் நினைச்சது இல்லை விஸ்வா”

விஸ்வா, “உனக்கு ஆகாஸம் வர்றதுக்கு முன்னால் நான் முடிச்சப்போ?”

வனிதா, “உன் கூட இருக்கும் போது எனக்கு ஆர்காஸம் வரணும்ன்னு நான் எதிர்பார்த்தது இல்லை. ஸ்டில், அந்த டெல்லி ஃபேருக்கு ஆறு மாசத்துக்கு முன்னால் வரை உன் கூட இருந்த ஒவ்வொரு முறையும் எனக்கு ஆர்காஸம் வரும்”

விஸ்வா, “எப்படி எனக்கு இந்த ப்ராப்ளம் ரொம்ப நாளாவே இருந்து இருக்குன்னு டாக்டர்ஸ் சொல்லறாங்க”

வனிதா, “எந்தப் ப்ராப்ளம்? ஹார்மோனல் இம்பாலன்ஸா?”

விஸ்வா, “ம்ம்ம்”

அப்போதும் அவனுக்கு இருந்த மற்றொரு குறையைப் பற்றி தன் துணைவியிடம் சொல்ல வெட்கப் பட்டான் ...

வனிதா, “எனக்கு அப்படித் தோணலை. நிச்சயம் உனக்கு அந்தப் ப்ராப்ளம் டெல்லி ஃபேருக்கு ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால் தான் வந்து இருக்கும்” என்று ஆணித் தரமாக அவன் அறிந்த உண்மையை சொன்னாள்.

விஸ்வா, “ஸ்டில், நான் சீக்கிரம் முடிச்சப்போ சந்திரசேகர் கூட என்னை நீ ஒப்பிட்டுப் பார்த்தது இல்லையா?”

வனிதா, “நோ. நெவர். நீ அன்னைக்கு வைப்ரேட்டர் வாங்கித் தரேன்னு சொன்னப்ப கூட நான் உன்னை யார் கூடவும் ஒப்பிட்டுப் பார்த்தது இல்லை”

விஸ்வா, “இப்போ நாம் மறுபடி ஒண்ணு சேர்ந்து நான் சீக்கிரம் முடிச்சா உன்னால் அப்படி நிச்சயமா சொல்ல முடியுமா?”

வனிதா, “உனக்கு ப்ராப்ளம் இருந்ததுன்னு இப்போ எனக்குத் தெரியும். அதுக்கான ட்ரீட்மெண்டை நீ முழுசா எடுத்துக்கலைன்னும் தெரியும். சோ, அப்படி சீக்கிரம் நீ முடிச்சா I will be concerned about you Viswa. கடவுளே என் விஸ்வாவுக்கு உடம்பு சரியாகணும்ன்னு கவலைப் படுவேன் விஸ்வா. அந்த சமயத்தில் வேறு ஒருத்தன் கூட உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பேனா? நீயே சொல்லு”

அவள் கூற்றின் எதார்த்தத்தை எண்ணி வியந்தான் ...

விஸ்வா, “என் ப்ராப்ளத்தைப் பத்தி உனக்கு எப்படித் தெரியும்?”

வனிதா, “முதலில் டாக்டர் அமுதா சொன்னாங்க. என்னை மேலும் கில்டியா ஃபீல் பண்ண வைக்க அப்படிச் சொன்னாங்க. அதுக்குப் பிறகு ராம் கிட்டே கேட்டுத் தெரிஞ்சு கிட்டேன்.”

முகத்தில் கோபம் தாண்டவமாட விஸ்வா, “என் ப்ராப்ளத்தைப் பத்தி நீ ராம் கூட டிஸ்கஸ் பண்ணி இருக்கே”

சற்று எறிச்சலும் விஸ்வாவின் மேல் பரிதாபமும் முகத்தில் வழிய வனிதா தன் இயலாமையைக் காட்ட கைகளை உயர்த்தி, “For God sake Viswa. He is your twin brother. எனக்கு ஒரு ட்வின் ஸிஸ்டர் இருந்து இருந்தான்னா இவ்வளவு பிரச்சனைகளும் வந்தே இருக்காது. Any how, ராமும் முழுசா என்ன ப்ராப்ளம் என்ன ட்ரீட்மெண்ட் எதுவும் என் கிட்டே சொல்லலை. ஏன்னா அவருக்கும் தெரியாது”

விஸ்வா, “சாரி, அவன் தான் என்னை டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போனான். அவனுக்கு என் மேல் இருந்த அக்கறையைப் புரிஞ்சுக்காம அப்படி கோபப் பட்டுட்டேன்”

முகம் மலர்ந்த வனிதா, “வாவ், ஐய்யா ரொம்ப மாறிட்ட மாதிரி இருக்கு?”

விஸ்வா, “எல்லாம் டாக்டர் மதுசூதனோட வேலை. முன்னே இருந்த கோபம் ரொம்ப குறைஞ்சு இருக்கு”

வனிதா, “எப்படி?”

சகஜ நிலைக்கு வந்த விஸ்வா அவனது பாக்ஸிங்க் பயிற்சியைப் பற்றி சொன்னான் ஆனால் அவனை முதல் முறை சண்டையிட வைக்க டாக்டர் மதுசூதன் அவனைக் கையாண்ட விதத்தைச் சொல்ல மனம் வரவில்லை.

கல கல வென சிரித்த வனிதா, “பார்த்துப்பா. பீ கேர் ஃபுல். ப்ரொடெக்டிவ் கியர் போட்டுட்டுத்தானே பண்ணறே”

விஸ்வா, “எஸ் அஃப்கோர்ஸ், ஹெட் கார்ட், அப்டாமினல் கார்ட் இது ரெண்டும் இல்லாமல் ரிங்கில் இறங்க விட மாட்டாங்க”


வனிதா, “சரி, இன்னும் என்ன கேள்வி இருக்கு?”

விஸ்வா மௌனம் காக்க ..

வனிதா, “சோ, சொல்லு Where do we go from here?”

விஸ்வா, “தெரியலை வனிதா “

வனிதா, “ஏன்?”

விஸ்வா, “எனக்கு ப்ராப்ளம் இருந்தது உண்மைதான். இருந்தாலும் நீ இன்னொருத்தனோடு தொடர்பு வெச்சு இருந்ததை என்னால் அவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடியலை”

வனிதா, “விஸ்வா, என் சுய நலத்தினால் தான் இந்த நிலமை வந்து இருக்கு. அதுக்குப் பரிகாரமா நான் எதுவும் செய்யத் தயாரா இருக்கேன். அது மட்டும் இல்லை விஸ்வா, நீ சந்தோஷமா மன நிம்மதியோடு இருக்கணும் விஸ்வா. உனக்கு எந்த முடிவு சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் கொடுக்கும்ன்னு தோணினாலும் சரி. நான் அந்த முடிவுக்கு தயார்”

சற்று நேர மௌனத்ததுக்குப் பிறகு விஸ்வா, “என் நிலமையில் இருந்து இருந்தா நீ என்ன முடிவு எடுத்து இருப்பே?”

வனிதா, “நீ என்னை இப்படிக் கேட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு விஸ்வா”

விஸ்வா, “ஏன்?”

வனிதா, “என்னை மறுபடி ஒரு ஃப்ரெண்டாக பார்க்கத் தொடங்கி இருக்கே”

விஸ்வா, “ம்ம்ம் ... சொல்லு”

வனிதா, “If I were a man … நானும் ரொம்ப குழம்பித்தான் போயிருப்பேன். உன் கோணத்தில் சொல்லறேன். ரொம்ப நாள் வெளியூர் பயணம் வேலைன்னு குழந்தைகளோடு நேரம் செலவழிக்காமல் இருந்ததை நினைச்சு வருத்தப் பட்டாலும் குழந்தைகள் நான் இல்லாமலும் இருப்பாங்கன்னு உணர்ந்து இருப்பேன். குழந்தைகளுக்கு இனிமேல் தான் என் மேல் ஒட்டுதலை ஏற்படுத்தணும் அப்படின்னும் தோணும். மேற்கொண்டு என்ன செய்வது என்பதை நம் ரெண்டு பேருக்கும் இடையான உறவு எப்படி இருக்கணும் என்பதை மட்டும் அடிப்படையா வெச்சு முடிவு எடுப்பேன்”

விஸ்வா, “நம்ம ரெண்டு பேருக்கிடையே உறவு எப்படி இருக்கணும்?”

வனிதா, “கணவன்-மனைவியா மட்டும்தான். வெறும் பெற்றோர்களா மட்டும் இருந்தா அந்த வாழ்க்கை நீடிக்காது. இதை உன் கோணத்தில் மட்டும் சொல்லல. என் கோணத்திலும் தான்”

விஸ்வா, “என் கோணத்தில் விளக்கமா சொல்லு”

வனிதா, “உன் கோணத்தில் ... காதல் நிச்சயம் இருக்கும். ஆனா, அந்தக் காதல் படுக்கை அறை வரை நீடிக்குமான்னு தெரியலை ... I may not be able to make love to you”

விஸ்வா, “ஏன்?”

வனிதா, “ஏன்னா, நான், ஐ மீ நீ, இதுவரை வெறும் செக்ஸில் ஈடுபட்டது இல்லை. எப்பவும் நாம் கூடுவது காதலின் அடுத்த கட்டமா மட்டும் இருந்தது. அப்படிப் பட்ட ஒண்ணை இன்னொருத்தனுடன் சர்வ சாதாரணமா அனுபவிச்சுட்டு வந்து இருக்கேன். உன் காதலை தூக்கி எறிஞ்ச மாதிரி. அதனால்தான் என்னோடு மறுபடி அப்படி இணைய முடியுமான்னு யோசிப்பேன். அப்படியே சேர்ந்து வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கையில் செக்ஸ் இருக்கலாம் ஆனா மறுபடி முன்னே மாதிரியான அன்னியோன்னியம் இருக்காது. நான் சொன்னது சரியா?

விஸ்வா, “யூ நோ, என்னைப் பத்தி உன்னை விட யாரும் இவ்வளவு ஆழமா புரிஞ்சுட்டு இருக்க முடியாது” என்று அவன் சொல்லச் சொல்ல அவன் தொண்டை கரகரத்தது. கண்கள் பனித்த வனிதா அவன் கரங்களைப் பற்றினாள்.

விஸ்வா மௌனம் காத்தான்

பெருமூச்சுடன் விஸ்வா, “சரி, கிளம்பலாமா ... “

வனிதா, “விஸ்வா, உன் மன வேதனைகளையும் வெறுப்பையும் தவிற எந்த முடிவையும் எடுக்க உன் மனசில் ஏதோ தடை இருக்கு. நீ அதை என் கிட்டே சொல்ல விருப்பப் படலை. அப்படி நீ தயங்கறதுக்கும் நான் தான் காரணம்ன்னு நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு விஸ்வா” என்று சொல்லச் சொல்ல அவள் கண்கள் கலங்கின ..

செய்வதறியாத விஸ்வா அவள் கைகளைப் பற்றினான்

சகஜ நிலைக்கு வந்த வனிதா, “ம்ம்ம் ... புறப்படலாம்”

விஸ்வா, “வீட்டுக்குத் தானே? குழந்தைங்க வீட்டில் இருக்கங்களா?”

வனிதா, “ராம் அவங்களை ஃப்ரிஸ்பி விளையாடக் கூட்டிட்டுப் போறதா சொன்னார். வந்துடுவாங்க. When do you want to come home?”

விஸ்வாவுக்கு ராமின் மேல் பொறாமையாக இருந்தது. இருப்பினும் இந்தப் பொறாமைக்கும் தான் தானே காரணம் என எண்ணி வருந்தினான். ஆங்கிலத்தில் “நம்ம வீடு” என்பதை மிகைப் படுத்தாமல் “ஹோம்” என்று வாக்கியங்களில் பயன் படுத்துவது வழமை. அவள் அப்படிச் சொன்னது ஒரு மனைவி மிகச் சாதாரணமாக கணவனிடம் “எப்ப வீட்டுக்கு வருவீங்க” என்று கேட்பது போல இருந்தது ...

விஸ்வா, “ம்ம்ம்”

அவனது தடுமாற்றத்தை உணர்ந்த வனிதா, “ஐ மீன் இப்போ வரியான்னு கேட்டேன்” என்றவள் சற்று நிதானித்து அவன் கண்களை கூர்ந்து நோக்கியபடி, “ஸ்டில், அது இன்னமும் நம்ம வீடுதான் விஸ்வா. அதனால்தான் ஹோம்ன்னு சொன்னேன்”

விஸ்வா, “இல்லை. நாளன்னைக்கு வர்றேன்”

வனிதா, “ஓ! நாளைக்கு புது ஃபேக்டரியில் ப்ரொடக்ஷன் ரிவ்யூ இருக்கு இல்லை? I don’t think I will be able to make it. ஏற்கனவே இந்த வாரம் திங்கள்கிழமையில் இருந்து இன்னைக்கு புதன் வரை மூணு நாள் வீட்டுக்கு லேட்டா போயிருக்கேன்”

விஸ்வா, “உன்னோடு புது ப்ராஸஸ் எல்லாம் இம்ப்ளிமெண்ட் ஆகி இருக்கு. நீயும் கலந்துட்டா நல்லா இருக்கும்.”

வனிதா, “ஏன்? எதாவுது பிரச்சனையா? நான் ரெண்டு நாளைக்கு முன்னால் ப்ரொடக்ஷன் மேனேஜருடன் பேசிட்டு இருந்தப்போ எல்லாம் ப்ளான் பண்ணின படி போயிட்டு இருப்பதா சொன்னாரே?”



விஸ்வா, “நோ ப்ராப்ளம்! நீ கொண்டு வந்த மாற்றங்களை விளக்கலாம்ன்னு இந்த ரெவ்யூ மீட்டிங்குக்கு சண்முகம் சாரையும் வரச் சொல்லி இருந்தேன்”

வனிதா, “ஏன் நான் இல்லைன்னா அவர் தப்பா எடுத்துப்பாரா?”

விஸ்வா, “நாட் அட் ஆல், ஆனா இந்த மாற்றங்கள் எல்லாம் உன்னால் வந்தது. சண்முகம் சார் நிச்சயம் பாராட்டுவார். அப்போ நீயும் இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னேன்”

வனிதா, “பரவால்லை விஸ்வா. Kids will miss me”

விஸ்வா, “ஓகே. அப்ப வெள்ளிக் கிழமை பார்க்கலாம்”

வனிதா, “நாளைக்குத்தான் நாள் முழுக்க புது ஃபேக்டரியில் இருப்பே. வெள்ளிக் கிழமை ஆஃபீஸுக்கு வர மாட்டியா?”

விஸ்வா, “அன்னைக்கு காலையில் இருந்து வெளியில் மீட்டிங்க்ஸ் இருக்கு. ஆஃபீஸுக்கு எப்போ வருவேனான்னு சொல்ல முடியாது”

வனிதா, “ஓ.கே. டின்னருக்கு இருந்துட்டுப் போற மாதிரி வா”

விஸ்வா, “சரி”



No comments:

Post a Comment