Tuesday, September 29, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 5

மான்சி செய்த யோசனையின் முடிவுகள் தெளிவாக இருந்தது,, இதைத்தவிர இவனை விரட்ட வேற வழியில்லை என்று முடிவுசெய்த பிறகு அவள் அதிலிருந்து பின்வாங்குவதாக இல்லை என்ற உறுதியுடன் எழுந்து பாத்ரூமுக்கு போனாள்,,

அவள் குளித்து உடைமாற்றிக்கொண்டு வெளியே வந்தபோது, காபியுடன் வந்த வேலைக்காரப்பெண் “ உங்களையும் மாப்பிள்ளை அய்யாவையும் சாப்பிட கீழ வரச்சொன்னாங்க சின்னம்மா” என்று கூற,

காபியை கையில் வாங்கிய மான்சி ‘ அப்போ அவன் கீழே இல்லையா?’ என்ற யோசனையுடன் பால்கனியின் கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தாள், சத்யன் அங்கே இல்லை,

எங்கயாவது போய்த் தொலையட்டும்’என்று எரிச்சலுடன் நினைத்தபடி காபியை குடித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு மான்சி கீழ வரும்போது சமையலறையில் இருந்த வந்த பேச்சி அவளை வித்தியாசமாக பார்த்தாள்



பேச்சி ஏன் அப்படி பார்க்கிறாள் என்று மான்சிக்கு காரணம் புரிந்தது, மான்சி போட்டிருந்த டிரக் ஷுட்டும் டைட்டான டீசர்ட்டும் தான்,, “ என்ன அத்தை அப்படி பார்க்கிறீங்க?” என்று கேட்டபடி மான்சி டைனிங் டேபிளின் மீது ஏறி அமர..

“ இல்லம்மா இன்னும் ஒரு நாலஞ்சு நாளுக்காவது சீலை கட்டிக்கலாம்ல? இதை போட்டுருக்கியே மான்சி” என்று பேச்சி கேட்டதும்,

டேபிளில் இருந்து குதித்து இறங்கிய மான்சி, பேச்சியின் தோளில் கைவைத்து “ அத்தை என்னை எப்பவுமே உங்க அண்ணன் பொண்ணா மட்டும் பாருங்க, உங்க மருமகளா பார்க்கவேண்டாம், ஓகேயா ” என்று கூர்மையான வார்த்தைகளால் மான்சி கூற,
அப்போது மான்சிக்கு டிபன் எடுத்துவந்த சாந்தா “ அத்தை தானே கேட்டாங்க அதுக்கேத்த மாதிரி பதில் சொல்லு மான்சி” என்று அதட்டினாள்
“ அம்மா நான் எப்பவும் இருக்குற மாதிரி இருப்பேன் யாருக்காகவும் என்னோட சுயத்தை இழக்கமாட்டேன்” என்று கறாராக பேசிய மான்சி சாப்பிட அமர்ந்தாள்
சாந்தா மகளிடம் எதுவுமே பேசவில்லை, மாறாக பேச்சியிடம் பார்வையால் மன்னிப்பை வேண்டினாள், தலையசைத்த பேச்சியும் அமைதியாக ஹாலுக்கு போய்விட்டாள்,

ஹாலில் அமர்ந்திருந்த ஆராவமுதனிடம் வந்த பேச்சி “ சத்யனை எங்கண்ணே காணோம், வெளிய எங்கயாச்சும் அனுப்பிருக்கீங்களா?” என்று கேட்க

“ இல்லையேம்மா,, நானும் சத்யனைத் தான் தேடுறேன்” என்றார் அவர்

“ இவ்வளவு காலையிலயே சொல்லாம கொல்லாம எங்கதான் போயிருப்பான்?” என்று குழப்பத்தோடு தரையில் அமர்ந்தாள் பேச்சி

எந்த குழப்பமும் இன்றி சாப்பிட்ட மான்சி, கை கழுவிவிட்டு சாந்தாவின் முந்தானையில் கையை துடைத்துவிட்டு தனது கழுத்தில் இருந்த கணமான மஞ்சள் கயிற்றை வெளியே எடுத்து அதிலிருந்த பொன் தாலியை சாந்தாவின் முகத்துக்கு நேராக காட்டி * “ ஏன்மா இதை அவுத்து ஏதாவது செயின்ல போட்டுவிடேன் இவ்வளவு பெரிய கயிறை போட்டுகிட்டு இருக்கவே அசிங்கமா இருக்கு, நான் என் ப்ரன்ஸ பாக்கப் போகனும், ப்ளீஸ்மா?” என்று கெஞ்சினாள்

சாந்தா ஹாலில் இருந்த பேச்சியை சங்கடத்துடன் பார்க்க,, பேச்சி மான்சியைத்தான் பார்த்தாள், சாந்தாவுக்கு ரொம்பவே சங்கடமாக இருந்தது, மான்சியின் அருகே போய் மெல்லிய குரலில் “ ஏன்டி இப்படி இருக்க? எதை எப்ப பேசனும்னு உனக்கு தெரியவே தெரியாதா? இன்னும் மூனு நாள் பொறுத்துக்க, அஞ்சாவது நாள் செயின்ல போட்டுக்கலாம்” என்று கூற,

“ பச் “ என்று சலிப்புடன் உதட்டை பிதுக்கி கூறிவிட்டு தாலி கயிற்றை தனது டீசர்ட்க்குள் சுருட்டி மறைத்துக்கொண்டு வெளியே போய் தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்


மான்சியின் இந்த செய்கையால் வருந்திய சாந்தா சோகமான முகத்துடன் ஹாலுக்கு வர,, “ விடுங்க அண்ணி போகப்போக சரியாயிடுவா” என்ற பேச்சி ஆராவமுதனை பார்த்து “ அண்ணே இன்னிக்கு நைட்டு ட்ரைன்ல நான் கெளம்பறேன், கடையை ரொம்ப நாளைக்கு மூடி வச்சிருந்தா வாடிக்கை போயிரும், அதனால தான் கெளம்பறேன், சத்யன் வந்தா ரயிலேத்தி விடச் சொல்லுண்ணே?” என்று பேச்சி சொன்னதும் ஆராவமுதன் சரியென்று தலையசைத்தார்

அன்று மதியம் பாலாதிருச்சியில் இருக்கும் தனது மாமியார் வீட்டுக்குப் போவதாக சொல்லிவிட்டு தன் மனைவியுடன் கிளம்பினான்

சத்யன் மதிய உணவுக்கும் வரவில்லை என்றதும் அவன் செல்லுக்கு போன் செய்தார் ஆராவமுதன், ஆனால் சுவிட்ச் ஆப் என்று வரவும் எல்லோரும் கொஞ்சம் பதட்டத்துடன் அவனை எதிர்பார்த்து காத்திருந்தனர்,, மாலை ஆறு மணிக்குத்தான் சத்யன் வந்தான், ரொம்பவே கலைத்துப்போய் இருந்தவன் வந்ததும் தோட்டத்துக்கு போனான் ,

சாந்தாவும் பேச்சியும் கவலையுடன் அவனை நெருங்கினார்கள் “ என்னடா கண்ணு காலையிலேர்ந்து ஆளை காணோம், எங்கப்பா போயிருந்த, ஏதாவது சாப்பிட்டயா ஏன் இப்படி இருக்க ராசு” என்று கவலையுடன் பேச்சி கேட்க

தோட்டத்தில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகம் கழுவிய சத்யன், குனிந்து தனது அழுக்கு கைலியிலேயே முகத்தை துடைத்துக் கொண்டு உள்ளே வந்தான் “ ஒன்னுமில்லம்மா, தெரிஞ்சவர் ஒருத்தர்கிட்ட வேலைக்கு சொல்லியிருந்தேன், காய்கறி வேன் ஓட்டுற வேலை, மதுரையிலேருந்து ஒட்டன்சத்திரம் மார்கெட்டுக்கு போகனும், ஒருநாளைக்கு ரெண்டு சிங்கில் போய்ட்டு வரனும், இன்னிக்கே போகச்சொன்னாங்க, அதான் போனேன்ம்மா” என்றவன் சாந்தாவிடம் திரும்பி “ அத்தை இனிமேல் சாயங்காலம் வேலைக்குப் போய்ட்டு காலையில பதினோரு மணிக்குத்தான் வருவேன், என்னைய தேடவேண்டாம் அத்தை, மதியம் ஒரு வேளை மட்டும் சாப்பாடு போதும்” என்று கூறிவிட்டு பாக்கெட்டில் இருந்து இரண்டு நூறுரூபாய் நோட்டை எடுத்து சாந்தாவின் கையில் வைத்தான் “ தினமும் என்னோட சாப்பாடு இதர செலவுக்கு வச்சுக்கங்க” என்று கூறிவிட்டு மாடிக்கு போனான்,

சாந்தா பேச்சி இருவருமே திகைத்துப்போய் நின்றிருந்தார்கள், சாந்தா மட்டும் சுதாரித்துக்கொண்டு சத்யனின் பின்னாலேயே ஓடினாள் “ நில்லு சத்யா,, என்ன இதெல்லாம்? உன் மாமா பேக்டரியிலயே நூத்துக் கணக்குல ஆளுங்க வேலை செய்றாங்க, நீ ஏன்பா உனக்கு தலையெழுத்தா? ” என்று கலவரத்துடன் கேட்க..

படிகளில் ஏறியவன் பாதியில் நின்று திரும்பி “ ஏன் அத்த இதிலென்ன தப்பு இருக்கு,, இத்தனை நாளா மாமாகிட்ட வேலை செய்தது வேற, ஆனால் இனிமேல் அது முடியாது அத்த, அவருக்கும் என்னை வேலை வாங்க சங்கடமா இருக்கும், எனக்கும் அவர்கிட்ட வேலை செய்ய கஷ்டமா இருக்கும், அதுவுமில்லாம என்னோட தகுதிக்கு அவர் என்ன வேலை குடுக்குறதுன்னு தடுமாறுவார், அதனால்தான் யாருக்கும் என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு வெளியே வேலைக்கு கிளம்பிட்டேன்,, சரி அத்த நான் குளிச்சிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு மான்சியின் அறைக்கு போனான்

அவனுடைய விளக்கத்தை ஹாலில் இருந்த ஆராவமுதனும் கேட்டார்,, அவருக்கு அவன் கருத்து நியாயமாக பட்டது, கொஞ்சநாள் சத்யன் வெளியே வேலை செய்வது தான் நல்லது என்று நினைத்தார், அதனால் இதுபற்றி அவர் மேலே பேசவும் இல்லை

சத்யன் ரொம்பவே களைத்து போயிருந்ததால் தானே ரயிலேறி போவதாக சொன்ன பேச்சியிடம் “ நீ ரெடியாவும்மா நான் கூட்டிட்டுப் போய் ரயிலேத்தி விடுறேன்” என்றார் ஆராவமுதன்

சத்யன் குளித்துவிட்டு மாடியிலிருந்து வந்ததும் “ சத்யா நான் ஊருக்கு கிளம்புறேன், நீ அத்தை மாமா என்ன சொல்றாங்களே அதைகேட்டு நடந்துக்கப்பா, மான்சி போகப்போக மாறிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்குப்பா” என்று குரலில் நம்பிக்கையுடன் கூறிவிட்டு தன் கையில் இருந்த பணத்தை அவன் சட்டை பாக்கெட்டில் வைக்க,, அந்த பணத்தை எடுத்து மறுபடியும் பேச்சியிடம் கொடுத்துவிட்டு “ எனக்கு தேவைப்படாதும்மா நீயே வச்சுக்க” என்று மறுத்துவிட்டான்




மான்சி வருவாள் என்று எதிர்பார்த்த பேச்சி, நேரமானதால் ஆராவமுதனுடன் கிளம்பினாள்,, ரயில்நிலையம் சென்றடையும் வரை ஏதேதோ பேசியவர் மகளையும் மருமகனையும் பற்றி மட்டும் ஒருவார்த்தை கூட பேசவில்லை,, பேச்சியும் வேறு எதுவும் கேட்கவில்லை

சத்யன் இரவு உணவிற்காக அமரும்போதுதான் மான்சி வந்தாள், வந்தவள் நேராக தனது அறைக்குப் போனாள்,, போன கொஞ்சநேரத்தில் தடதடவென்று கீழே வந்தவள் “ அம்மா என்னோட பாத்ரூமை இனிமேல் யாரும் யூஸ் பண்ணக்கூடாது, ச்சே ஓரே அழுக்கு துணியும் வியர்வை நாத்தமுமா இருக்கு” என்ற கத்தியவள் “ ஏய் மஞ்சு என்னோட ரூம் பாத்ரூமுக்குப் போய் நல்லா பினாயில் போட்டு கழுவிட்டு, அங்க கிடக்குற அழுக்குத்துணியை எல்லாம் எடுத்துட்டு வந்து எங்கயாவது போடு” என்று வேலைக்காரியிடம் இரைந்தாள்
இதுவரை சத்தமாகக்கூட பேசாத மான்சியின் இந்த இரைச்சலால் பயந்துபோன வேலைக்காரப்பெண் பயத்துடன் மான்சியின் அறைக்கு போக, சத்யன் தலைகுனிந்தபடி அமைதியாக சாப்பிட்டு எழுந்து மாடிக்குப் போனான்,

எதிரும்புதிருமாக இருக்கும் இருவரையும் பார்த்து சாந்தாவின் கவலைதான் அதிகரித்தது, எல்லாம் சரியாகிவிடும் அமைதியா இரு என்று மனைவியை ஆறுதல் படுத்தினார் ஆராவமுதன்

மாடிக்கு வந்த சத்யன் கபோர்டில் இருந்த தனது லைசென்ஸ் அடங்கி பர்சை எடுத்துக்கொண்டு ஒரு துண்டை மடித்து தோளில் போட்டுக்கொண்டு திரும்ப, அவன் பின்னாலேயே வந்த மான்சி “ இனிமேல் என் பாத்ரூமை நீ யூஸ் பண்ணக்கூடாது, இந்த ரூம்ல படுத்துக்க மட்டும்தான் உனக்கு பர்மிஷன் கொடுத்திருக்கேன், என்ன புரிஞ்சுதா? ” என்று கேட்க

அவளை ஏறஇறங்க பார்த்த சத்யனின் பார்வை டீசர்ட்க்குள் மறைத்துவிட்டிருந்த தாலிக்கயிற்றில் ஒரு நிமிடம் நிலைத்தது, பிறகு உதட்டை பிதுக்கி “ ம்ஹூம் இந்த ரூம்ல என்ன, உன்மேலேயே படுத்துக்கச் சொல்லி நீ பர்மிஷன் குடுத்தாலும் எனக்கு அது தேவையில்லை” என்று வெகு அலட்சியத்துடன் கூற..

அவன் வார்த்தையின் அர்த்தத்தைவிட அவனுடைய அலட்சியமே மான்சியை அதிகம் பாதிக்க “ ஏய் என்ன திமிரா? உன்னோட தகுதிக்கு மீறியப் பேசுற, ஜாக்கிரதை ” என்று ஆத்திரமாக கேட்டாள்

“ திமிரா? எனக்கா?” என்ற சத்யன் அவளை தலைமுதல் கால்வரை நிதானமாக அளந்துவிட்டு “ உனக்குத்தான் கொழுப்பு சில இடத்துல ரொம்ப அதிகமா இருக்கு, ஆனா அந்த கொழுப்பை எப்படி குறைக்கிறதுன்னு எனக்கும் தெரியும்,, ஆனா எனக்கு உன் மூஞ்சியை பார்க்கவே பிடிக்கலையே, என்னப் பண்றது சொல்லு?” என்று போலியாக சலித்தான் சத்யன்

கோபத்தில் முகம் சிவக்க கொதித்துப் போன மான்சி “ நான் கழுத்தைப் பிடிச்சு தள்றதுக்குள்ள மரியாதையா வெளியப் போடா” என்று பல்லைக்கடித்துக்கொண்டு வார்த்தைகளைத் துப்பினாள்

“ ஏய் எனக்கு மட்டும் இங்கயே இருக்க ஆசையா என்ன,, இனிமே உன்மூஞ்சியை பார்க்கக்கூடாதுன்னு வெளியே வேலைக்குப் போயிட்டேன், வரட்டுமா ” என்று சத்யன் தன் பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்

மவுனமாக இருக்கவேண்டும் என்று எப்படி நினைத்தாலும் முடியவில்லையே என்று ஆத்திரத்துடன் கட்டிலில் விழுந்தாள் மான்சி

ஆனால் அதன்பிறகு வந்த நாட்களில் சத்யனால் அவளுக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை, இன்னும் சொல்லப்போனால் அவனை பார்ப்பதுகூட அறிதாகிவிட்டது, இவள் மேல்படிப்புக்காக மறுபடியும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்ததால், அவள் கல்லூரியில் இருந்து சாயங்காலம் வரும்போது சத்யன் வேலைக்கு கிளம்பியிருப்பான், காலையில் இவள் கல்லூரிக்கு சென்றதும்தான் வீட்டுக்கு வருவான், சனி ஞாயிறு விடுமுறையின் போதுதான் சத்யனைப் பார்க்கமுடியும்,



அப்பவும் கூட தோட்டத்தில் இருக்கும் பாத்ரூமில் குளித்துவிட்டு, மதிய உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்தான் என்றால், அவளை சட்டைசெய்யாமல் பால்கனிக்கு சென்று சன்சேடு நிழலில் பாயை விரித்துப் படுத்துக்கொள்வான், அத்தோடு மாலை ஆறு மணிக்கு எழுந்து சாந்தா கொடுக்கும் காபியை குடித்துவிட்டு மார்க்கெட்க்கு கிளம்பிவிடுவான்,

இருவரும் ஒருவரையொருவர் ஒரே அறையில் இருந்தாலும் முகத்தைப் பார்த்துக்கொள்ளாமலேயே தங்களின் பகைக்கு உரமிட்டு வளர்த்தனர், அப்படியே பார்த்துக்கொண்டாலும் கண்களில் கனல் வீச எதிரில் இருப்பவரை எரித்தனர், சத்யனின் அலட்சியம் மான்சியை வெறுப்பின் உச்சிக்கு அழைத்துச்சென்றது

மவுனமாக இருந்தாலும், அவனை விரட்டும் எண்ணம் அவளுக்குள் நாளுக்கு நாள் அதிகரித்தது, இந்த கண்மூடித்தனமான வெறுப்பின் காரணம் அவளுக்கே தெரியவில்லை, ஆனால் சத்யன் எனக்கு வேண்டவே வேண்டாம் என்ற முடிவில் மட்டும் உறுதியாக இருந்தாள், அவனுக்கும் இவளுக்கும் உள்ள உறவை முறிக்க அவள் கணக்கிட்டு வைத்திருந்த தொன்னூறாவது நாளை நோக்கி காலம் விரைவாக ஓடியது,

ஒரு ஞாயிறு அன்று சத்யனுக்கு மார்கெட் லீவு வர, அன்று முழுவதும் அவன் நண்பர் வேன் டிரைவர் வேல்முருகனுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான்,, அவர்தான் சத்யனுக்கு டிரைவர் வேலைக்கு ஏற்பாடு செய்தவர், அன்று அவன் சொன்ன காரணங்கள் அவருக்கு நியாயமாக பட்டதால் தனக்கு தெரிந்த காய்கறிக் கடையில் வேலை வாங்கிக்கொடுத்தார், சத்யனின் வாழ்க்கை நிலவரம் பற்றி ஓரளவுக்கு நன்கு அறிந்தவர், அவருடைய அறிவுரைகள் இல்லையென்றால் சத்யன் மான்சியை உதறிவிட்டு எப்போதோ போயிருப்பான், குடும்பத்தில் அடிப்பட்டவர் என்பதால், அனுசரித்துப் போகவேண்டும் என்று அடிக்கடி சத்யனுக்கு சொல்பவர்

அன்று லீவு என்பதால் இருவரும் மூடியிருந்த கடையின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர், சத்யனின் முகத்தைப் பார்த்ததும் பிரச்சனை பெரிசு என்று புரிய “ என்னாச்சு சத்யா இன்னிக்கு ஏதாவது பிரச்சனையா” என்று கேட்க
நான்குநாள் தாடியை தடவியபடி “ ம்ஹும் பிரச்சனை என்னைக்குத்தான் இல்லண்ணே? அவ அமைதியா இருந்தாலும் பிரச்சனை தான், பேசினாலும் பிரச்சனை தான், ஏன்தான் இப்படியொரு சிக்கலில் மாட்டினேன்னு எனக்கே புரியலை,, அன்னிக்கே இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லைன்னு நானோ, இல்லை அவளோ சொல்லியிருந்தா இவ்வளவு சிக்கலே இல்லை, இப்போ வாழ்க்கையே வெறுத்துப் போச்சுண்ணே” என்று சத்யன் விரக்த்தியுடன் புலம்ப

“ என்னடா இப்படி புலம்புற, என்ன நடந்துச்சு சத்யா?” என்று வேல்முருகன் ஆறுதலாக கேட்டார்

“ முந்தாநேத்து வேன் டயர் பஞ்சர் ஆயிடுச்சுன்னு, ஒரு ட்ரிப் லோடுக்கு போய்ட்டு வீட்டுக்கு போய்ட்டேன், வீட்டுக்கு போறப்ப மணி பதினொன்னு ஆயிருச்சு, மழைவேற பேஞ்சதும் நனைஞ்சுக்கிட்டே போனேன், வேலைக்காரம்மா தான் கதவை திறந்தாங்க, மாடில அவ ரூமுக்கு போனப்ப அவ புக்கு படிச்சுக்கிட்டு இருந்தா, நான் ஈரத் துணியை மாத்திக்கிட்டு, மழை பெய்யறதால வராண்டாவுல போய் படுக்காம ரூமுக்குள்ளயே ஒரு ஓரமா பாயைப் போட்டு படுத்தேன், ஆனா இவ என்னப் பண்ணா தெரியுமா அண்ணே?” என்று கேட்டு சத்யன் நிறுத்த,,

“ என்னா பண்ணுச்சு அந்த புள்ள, சண்டை போட்டுச்சா?” என்று வருத்தமாக முருகன் கேட்க


“ சண்டை போட்டாக்கூட பரவாயில்லை அண்ணே, ஆனா இவ விருவிருன்னு எந்திருச்சுப்போய் பால்கனி கதவைத் திறந்து வெறும் தரையில மழை சாரல்ல படுத்துக்கிட்டா, அதாவது நான் உள்ள படுத்ததால அவ வெளியப் போய்ட்டா, நானும் எவ்வளவு பேசி கூப்பிட்டுப் பார்த்தேன், அவ எதுவுமே பேசலை அமைதியா படுத்திருந்தா, அப்புறம் நான் பாயை சுருட்டி எடுத்துக்கிட்டு வராண்டாவுக்கு வந்து சாரல் இல்லாத ஒரு ஓரத்துல பாயைப் போட்டு படுத்ததும் உடனே எந்திரிச்சு உள்ளப் போய்ட்டா,, அந்த நிமிஷம் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு அண்ணே, நைட்டு முழுக்க ஈரக்காத்துல படுத்து கிடந்தேன், விடியவிடிய கொஞ்சம் கூட தூங்கலை, இத்தனை நாளா அவளுக்கும் எனக்கும் இருக்கும் சண்டை போகப்போக சரியாபோயிரும்னு நெனைச்சேன், ஆனா நேத்துதான் அவ என்னைய எவ்வளவு கேவலமா நடத்துறான்னு எனக்கு புரிஞ்சுது, இனிமேல் எப்பவுமே நானும் அவளும் சேரவே முடியாது, இப்ப சொல்லுங்கண்ணே இன்னும் நான் அவளை அனுசரிச்சு போகனுமா? இதெல்லாம் தேவைதானா?” என்று சத்யன் வேதனை குரலில் கேட்க

முருகனுக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை வெகுநேரம் அமைதியாக இருந்தவர் “ சத்யா நான் என்ன சொல்றதுன்னு தெரியலை, அந்தப்புள்ள முன்னாடி நீ நடுரோட்டுல விட்டுட்டு வந்ததையே நெனைச்சுக்கிட்டு இருக்கு, உன்மேல் அடி மனசுல இருந்த வெறுப்பு இப்போ மனசு பூராவும் பரவி போச்சு, இதை எப்படி சரி பண்றதுன்னு எனக்கு சொல்லத் தெரியலை,, ஆனா சத்யா இன்னும் கொஞ்ச நாளைக்கு விட்டுப்பிடிப்பா, எனக்காக இதை செய், இதுதான் என்னால சொல்லமுடியும் ” என்றவர் “ சரி நேரமாச்சு கெளம்பலாம்” என்று முன்னால் நடந்தார், அவர் வேனில் ஏறி கிளம்பியதும் சத்யன் பாதையோரம் மெதுவாக நடந்தான்

மனதில் பல சிந்தனைகளுடன் நடந்தவனின் கண்ணில் பட்டது டாஸ்மார்க் என்ற வேதனைகளின் நிவாரணி,, மறுயோசனை இன்றி உடனே கடைக்குள் நுழைந்தவன் நூறுரூபாயை கொடுத்து “ MC ஒரு குவாட்டர் குடுப்பா” என்றவன், ஒரு வாட்டர் பாக்கெட்டும் டம்ளரும் வாங்கிக்கொண்டு கடையின் ஓரமாக ஒதுங்கினான்,

குவாட்டர் காலியானதும் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டான், பின்னிக்கொண்டு வந்த கால்களை நிதானப்படுத்திக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்

வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியபோது நேற்று போலவே வேலைக்காரம்மா தான் கதவை திறந்தாள், “ பெரியம்மா தலைவலின்னு படுத்துட்டாங்க தம்பி,, நீங்க வந்து சாப்பிடுங்க” என்று அழைக்க,,



மாடிப்படிகளில் ஏறியவாறு “ எனக்கு சாப்பாடு வேண்டாம்மா, நீங்க போங்க” என்று கூறிவிட்டு மேலே போனான், எப்பவும்போல மான்சியின் அறைக்கதவு திறந்தே இருக்க, தள்ளிக்கொண்டு உள்ளேப் போனான் ,

அறையில் இருந்த டிவியில் ஒரு க்விஸ் ப்ரோகிராமை பார்த்துக்கொண்டு இருந்தவள், சத்யன் வரும் ஓசையை விட அவன் வந்ததும் வந்த மதுவின் வாடை அவள் கவனத்தை கலைத்தது, வெடுக்கென்று திரும்பி அவனைப் பார்த்து “ ஏய் நீ ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுருக்கியா?” என்று கேட்டாள்

கைலியை எடுத்து தலை வழியே மாட்டிக்கொண்டிருந்த சத்யன் “ ஆமாம், முழுசா ஒரு குவாட்டர்” என்றான்

சீறும் நாகமாக சிலிர்த்தெழுந்த மான்சி “ குடிச்சிட்டு என் ரூமுக்குள்ள வர உனக்கு எவ்வளவு தைரியம், நானும் பொறுத்துப் பொறுத்து போறேன் நீ ரொம்ப எல்லை மீறிப்போற, இனிமேல் உனக்கு இந்த ரூம்ல இடம் இல்லை வெளியேப் போ” என்று கதவை நோக்கி கைநீட்டி கோபமாக மான்சி கூறியது




No comments:

Post a Comment