Thursday, September 17, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 3

அடுத்த நாள் மாலை ஆறு மணியளவில் விஸ்வா-வனிதா தம்பதியரின் ஃப்ளாட் வாசல் மணி ஒலித்தது ..

வனிதா, "Hey kids... யார் வந்து இருக்காங்கன்னு பார்க்கலாம் வாங்க"

வசி என்று அழைக்கப் படும் வசுந்தரா, "டாடி வந்தாச்சு" என்க ...

அவளுக்கு ஐந்து நிமிடங்கள் மூத்த விக்ரம், "இல்லை டாடி வர லேட் ஆகும்" ...

கண்கள் பனிக்க அந்தப் பச்சிளம் பிஞ்சுகளை ஒரு கணம் வெறித்துப் பார்த்தவள், "போய் பார்க்கலாம்"

கதவைத் திறக்க டாக்டர் அமுதா கையில் ஒரு பெரிய ஃபெரெரோ ரோசர் சாக்லேட் பெட்டியுடன் நின்று இருந்தார்.

வனிதா, "ஹல்லோ டாக்டர் வாங்க. Its a nice surprise"

அமுதா, "இந்தப் பக்கம் வர்ற வேலை இருந்தது. உன் ஃப்ளாட் இங்கேதான் இருக்குன்னு தலையைக் காட்டிட்டுப் போகலாம்ன்னு வந்தேன். அதுவும் இல்லாம உன் குழந்தைகளைப் பார்க்கணும்ன்னு ஆசையா இருந்தது" என்ற படி கையில் இருந்த சாக்லேட் பெட்டியை நீட்டினார்.



குழந்தைகள் இருவரின் கண்களும் பிரகாசித்தாலும் அவர்களின் மௌனத்தில் இருந்து அவர்களை வளர்க்கும் விதம் தெரிந்தது.

வனிதா, "ஐய்யோ எதுக்கு டாக்டர் இதெல்லாம்?"

அமுதா, "ஏன் சாப்பிடமாட்டாங்களா?"

வனிதா, "நல்லா சாப்பிடுவாங்க. நேத்து ராம் ஃபோன் பண்ணினார் அவர்கிட்டே அங்கே இருந்து என்ன ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வரணும்ன்னு ரெண்டும் ஒரு லிஸ்ட் கொடுத்து இருக்குங்க"

அமுதா, "ஓ, ராம் ஃபோன் பண்ணினாரா?" என்ற பிறகு சிரித்தபடி "ஐ மீன் ராம் ஃபோன் பண்ணினானா?"

புன்னகைத்த வனிதா, "ம்ம்ம் .. உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க? காஃபி or some ஜூஸ்?"

அமுதா, "ம்ம்ம் .. ஜூஸ் கலக்கணுமா?"

வனிதா, "இல்லை. ட்ராபிகானா"

அமுதா, "அப்படின்னா ஜூஸ் கொடு" என்று அவளை சமையல் அறைக்கு அனுப்பிய பிறகு குழந்தைகளின் பக்கம் தன் கவனத்தை செலுத்த அந்தப் பிஞ்சுகள் ஏதோ கிசு கிசுத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார்

அமுதா, "என்ன ரகஸியம் ஆண்டிக்கு சொல்ல மாட்டீங்களா?"

விக்ரம், "பெரியவங்களை நீ வா போ சொல்லக் கூடாது"

வசி, "இந்த ஆண்டி ராம் அங்கிளைவிட பெரியவங்க விக்கி"

மண்டியிட்டு அமர்ந்து இருவரையும் இழுத்து அணைத்த அமுதா, "ஸோ ஸ்வீட். எந்த ஸ்கூலில் படிக்கறீங்க?"

விக்ரம், "ஃப்ராங்க் ஆண்டனி"

வசி, "எங்க டாடி மம்மி படிச்ச அதே ஸ்கூல். ஆனா அவங்களோட டீச்சர்ஸ் யாரும் இப்போ இல்லை"

அமுதா, "இஸ் இட்? இப்போ நான் வரும் போது என்ன செஞ்சுட்டு இருந்தீங்க ரெண்டு பேரும்?"

வசி, "ஹோம் வொர்க் ... ஒன்லி ஒன் பேஜ் எழுதினோம். அப்பறம் .."

விக்ரம், "நான் சொல்றேன். அப்பறம் அம்மாகூட ட்ரெஸ் மடிச்சு வெச்சுட்டு இருந்தோம்"

அமுதா "ஓ, அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தீங்களா?"

உள்ளிருந்து வந்த வனிதா, "Something to keep them occupied. எப்ப டி.வி போட அலவ் பண்ணுவேன்னு ரெண்டு பேரும் வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க"

வனிதா கொடுத்த ஜூஸை வாங்கியபடி சோஃபாவில் அமர்ந்த அமுதா, "What about you?"

வனிதா, "நான் நீங்க வரதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் காஃபி குடிச்சேன்" என்றபடி அவளும் அவரருகே அமர்ந்தாள்.

வசி, "மம்மி, can we watch TV now?"

விக்ரம், "இந்த ஆண்டி போனதுக்கு அப்பறம் ஆஃப் பண்ணிடறோம்"

வனிதா எதுவும் சொல்வதற்கு முன் அமுதா, "சரி போய் பாருங்க ஆனா அப்பறம் அம்மா சொன்னதும் ஆஃப் பண்ணிடணும். ஓ.கே?"

இரு குழந்தைகளும் அடுத்து இருந்த அறைக்குச் செல்ல ...

வனிதா, "பரவால்லை நானே டின்னர் ரெடி பண்ணறவரைக்கும் பார்க்கட்டும்ன்னு தான் இருந்தேன்"

அமுதா, "நல்ல பெரிய அப்பார்ட்மெண்டா இருக்கும் போல இருக்கே?"

வனிதா, "அமா, மூணு பெட்ரூம்ஸ், ட்ராயிங்க் ரூம் அப்பறம் லிவிங்க்-கம்-டைனிங்க் தனியா"

அமுதா, "எப்போ வாங்கினீங்க?"

வனிதா, "ஒரு வருஷம் ஆச்சு"

இருவரும் அந்த குடியிருப்பைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் சிறிது நேரம் உரையாடியபின் ..

அமுதா, "விஸ்வா எங்கே?"

வனிதா தலை குனிந்தபடி, "அவர் இன்னும் ஆஃபீஸில் இருந்து வரலை"

அமுதா, "குட். இன்னும் ஒண்ணா இருக்கீங்க. I appreciate that"

வனிதா தலை குனிந்தபடி "ஆனா வேற வேற ரூமில் இருக்கறோம். வீட்டில் அவர் எதுவும் சாப்பிடறது இல்லை" என்று அவள் சொல்லச் சொல்ல தொண்டை கரகரத்து விக்கினாள்.

அமுதா, "சாரி, இந்த விஷயம் எல்லாம் கவுன்ஸிலிங்கில் கேட்டு இருக்கணும். சரி, நான் புறப்படுட்டுமா?"

பனித்த கண்களைத் தன் துப்பட்டாவால் துடைத்த வனிதா, "இருந்து டின்னர் சாப்பிட்டுட்டு போங்களேன்?"

அமுதா, "I would love to. ஆனா, என் வீட்டுக்காரர் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார். இன்னொரு நாள் அவரையும் கூட்டிட்டு வரேன். உன் குழந்தைகளைப் கூப்பிடு பை சொல்லிட்டு கிளம்பறேன்"

வனிதா, "கிட்ஸ்! வாங்க ரெண்டு பேரும் ஆண்டிக்கு பை சொல்லுங்க. You can watch TV after she leaves"

மேலும் டிவி பார்க்க அனுமதி கிடைத்த மகிழ்ச்சி முகத்தில் ஜொலிக்க இருவரும் வந்து ஒன்று சேர, "பை ஆண்டி"

மறுபடி அவர்களை அணைத்த அமுதா இருவர் கன்னத்திலும் முத்தமிட்டார்.

மண்டியிட்டு அமர்ந்து இருந்த அமுதாவின் மேல் சாய்ந்தபடி வசி, "உங்க நேம் என்ன சொல்லவே இல்லையே?"

அமுதா, "மை நேம் இஸ் அமுதா"

விக்ரம், "ஹே, எங்க க்ளாஸ்ல ஒரு அமுதா இருக்கா. அவ சரியான க்ரை பேபி"

அமுதா, "அப்படியா? நீங்க ரெண்டு பேரும் அழமாட்டீங்களா?"

வசி, "ம்ம்ஹூம் .."

அமுதா, "சரி, ஆண்டி போயிட்டு வர்றேன். ஓ.கே?"

வனிதா, "வசி, விக்ரம், ஆண்டி brought you chocolates"

தாய் இலை றை காயாக என்ன 
நினைவு டுதுகிறாள் என்தை உணர்ந்த இரு குழந்தைகளும் ஒன்று சேர, "Thank you for the chocolates aunty"

அமுதா, "You are welcome my darlings"

இருவரும் மறுபடி டீவி பார்க்கச் சென்றபிறகு அமுதா, "குழந்தைகளை ரொம்ப நல்லா வளர்க்கறீங்க. Someday they both will outshine both of you. Take care. நாளைக்கு மூணு மணிக்கு. ஞாபகம் இருக்கு இல்லை?"

வனிதா, "Yes. I will be there"

வீட்டை விட்டு வெளியில் வந்த அமுதா எப்படியாவுது இந்த விவாகரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.




அடுத்த நாள் ...

அமுதா, "வா, வனிதா. ஆஃபீஸ்ல இருந்து நேரா வர்றியா?"

வனிதா, "ம்ம்ம்"

அமுதா, "குழந்தைங்க?"

வனிதா, "ஸ்கூல் முடிஞ்சதும் வீட்டுக்கு வேனில் வந்துடுவாங்க. எங்க வீட்டு வேலைக்கரம்மா பாத்துக்குவாங்க"

அமுதா, "சோ, ஆரம்பிக்கலாமா?"

வனிதா, "எஸ்"

அமுதா, "நேத்து நீங்க ரெண்டு பேரும் எம்.பி.ஏ படிச்சுட்டு இருந்தப்ப நடந்ததைப் பத்தி பேசினோம். கண்டின்யூ பண்ணலாமா?"

வனிதா, "ம்ம்ம்"

அமுதா, "ரெண்டு பேரும் எம்.பி.ஏ ஒரே சமயத்தில் முடிச்சீங்கன்னு சொன்னே. அதுக்குப் பிறகும் நீ PMLஇல் கண்டின்யூ பண்ணினியா?"

வனிதா, "என்னை மிஸ்டர் சந்திரசேகருக்கு எக்ஸிகியூடிவ் அஸிஸ்டண்ட்டா ப்ரொமோட் பண்ணினாங்க"

அமுதா, "ஓ! அதுக்குத் தான் நீ அன்னைக்கு அவர் சாவைப் பத்தி சொன்னப்ப ரொம்ப அப்செட் ஆயிட்டியா?"

வனிதா, "ம்ம்ம் ... ஆனா ரெண்டு வருஷம்தான் அவரோட எக்ஸிகியூடிவ் அஸிஸ்டெண்டா இருந்தேன். அதுக்கு அப்பறம் சேல்ஸ் அக்கௌண்ட்ஸ்ஸுக்கு ஷிஃப்ட் ஆயிட்டேன்"

அமுதா, "விஸ்வா என்ன பண்ணிட்டு இருந்தான்?"

வனிதா, "விஸ்வாவுக்கு ஆர்மில கண்டினியூ பண்ணப் பிடிக்கலை. எம்.பி.ஏ ரிஸல்ட் வர்றதுக்கு முன்னாடியே வெளியில் வேலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சார். ரிஸல்ட்ஸ் வந்த ஒரு மாசத்தில் ஒரு பெரிய கம்பெனியில் சேல்ஸ் எஞ்சினியரா வேலைக்கு சேர்ந்தார். அவர் ஜாபில் சேர்ந்த அடுத்த மாசம் எங்க கல்யாணம் ஆச்சு"

அமுதா, "அட் லாஸ்ட் உங்க மேரீட் லைஃபுக்கு வந்துட்டோம். எந்த வருஷம் உங்க கல்யாணம் நடந்துச்சு?"

வனிதா, "2001இல்"

அமுதா, "ஓ! அதுக்குப் பிறகும் ரெண்டு வருஷம் கன்ஸீவ் ஆகறதை தள்ளிப் போட்டீங்களா?"

வனிதா, "நாங்க எம்.பி.ஏ தொடங்கின சமயம் ராம் இங்கிலாந்துக்குப் மேல் படிப்புக்குப் போனார். நாங்க முடிச்சப்ப அவர் திரும்பி வந்தார். அவருக்கு ரொம்ப பெரிய வரவேற்பு. பெரிய பொசிஷனில் Nimhansஇல் திரும்ப ஜாயின் பண்ணினார். விஸ்வா தன் வேலையில் ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்பறம் குழந்தை பெத்துக்கலாம்ன்னு சொன்னார்"

அமுதா, "நீ கருத்தடை மாத்திரை உபயோகிச்சியா?"

வனிதா, "இல்லை. In fact I came forward. விஸ்வாதான் side effects இருக்கும்ன்னு வேண்டான்னுட்டார். We used to follow the dates. Fertilcycle இருக்கும் போது அவர் காண்டம் உபயோகிப்பார்"

முதா, "You mean, முதல் ஏழு நாள் டைசி ஏழு நாள் விற த நாளில் எல்லாமா?"

னிதா, "மா"


அமுதா, "How was your sex life?"

அடுத்த கணம் வனிதாவின் முகம் வெளுத்தது ... பிறகு சுதாரித்தபின் வெட்கப் புன்னகையுடன், "You mean our love life? Really amazing"

அமுதா, "செக்ஸில் உங்க ரெண்டு பேரில் யாருக்கு இன்டரெஸ்ட் அதிகம்?"

முகத்தில் எரிச்சலைக் காட்டி வனிதா, "We never had sex. We made love" என்ற அவள் ஆணித்தரமாக சொன்னதைக் கேட்ட அமுதா சற்று துணுக்குற்றார்.

அமுதா, "ஏன் செக்ஸ்ன்னு சொல்ல கூச்சப் படறே?"

வனிதா, "செக்ஸ் அப்படின்னா அது வெறும் உடல் சம்மந்தப் பட்டது. எங்க ரெண்டு பேரோட நெருக்கம் அப்படிப் பட்டது இல்லை. Intercourse when happens between us, was always a culmination of our love (எங்கள் காதலின் உச்சத்தில்தான் உடலுறவு நடக்கும்)"

அமுதா, "சரி, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே? உங்க ரெண்டு பேரில் அதில் அதிகம் ஆர்வம் காட்டுவது யார்?"

வனிதா, "ரெண்டு பேரும்தான் ... "

அமுதா, "சரி, இப்படிக் கேட்கறேன். தொடக்கி வைப்பது யாரா இருக்கும்?"

வனிதா, "ம்ம்ம் ... ஆக்சுவலா, கல்யாணம் ஆன புதுசில் ... ரெண்டு வருஷம் வரைக்கும், அவர்தான் எப்பவும் தொடங்குவார். அதுக்கு அப்பறம் நிறைய தடவை நான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்"

அமுதா, "உங்க செக்ஸில் எந்த அளவுக்கு வெரைட்டி இருக்கும்"

மறுபடி சற்று எரிச்சலுடன் வனிதா, "It was not just sex. It was making love"

எங்கோ, எதற்கோ பிசிறு தட்டுவதை நன்கு உணர்ந்த அமுதா, "I understand Vanitha. செக்ஸ் அப்படிங்கறதை ஒரு வார்த்தையா மட்டும்தான் நான் உபயோகிக்கறேன். மேக்கிங்க் லவ் அப்படின்னு சரளமா என்னால பேச முடியலை. ஓ.கே?"

வனிதா, "ஓ.கே"

அமுதா, "சோ, சொல்லு செக்ஸில் எந்த அளவுக்கு வெரைட்டி இருக்கும்"

வனிதா, "வெரைட்டின்னா .. வேற வேற பொஸிஷனில் ... " என்று இழுக்க

அமுதா, "அதுவும் தான், அதைத் தவிற ஒருத்தருக்கு ஒருத்தர் எந்த மாதிரி எல்லாம் சுகம் கொடுத்துக்குவீங்க?"

வனிதா, "முதல் ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் நான் சேஞ்ச் ஆயிட்டேன். எல்லாம் ட்ரை பண்ணி இருக்கோம்"

அமுதா, "எல்லாத்திலும் ரெண்டு பேரும் முழு ஆர்வத்தோடு கலந்துக்குவீங்களா?"

வனிதா, "முதல் ரெண்டு வருஷம் விஸ்வாதான் என்ன எல்லாமோ செய்வார். நான் கொஞ்சம் தயக்கமும் அருவெறுப்பும் படுவேன். அதுக்கு அப்பறம் I became alright"

அமுதா, "அதாவுது நீங்க குடும்பத்தை விரிவு படுத்தலாம்ன்னு முடிவு எடுத்ததற்கு அப்பறமா?"

வனிதாவின் முகம் பேயறைந்ததைப் போல் ஆனது ...

அமுதா, "என்ன டல்லாயிட்டே?"

வனிதா, "ஒண்ணும் இல்லை" என்று மழுப்பியபின், "எஸ், around that time only"

சில கணங்கள் யோசித்த அமுதா தன் டைரியில் சில குறிப்புகளை எழுதினார்.

அமுதா, "சோ, விஸ்வா அந்தக் கம்பெனியிலேயே கண்டின்யூ பண்ணினானா?"

வனிதா, "இல்லை. கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் முடியும் போது அவரும் PMLஇல் Sales Managerஆ ஜாயின் பண்ணினார். இப்போ ஜி.எம்மா இருக்கார். அவருக்குன்னு ஒரு வைஸ் ப்ரெஸிடெண்ட் போஸ்ட் க்ரியேட் பண்ணறதா இருந்தாங்க. அதுக்குள்ள இந்த ... "

அமுதா, "அதுக்குள்ள என்ன?"

வனிதா, "இந்த டைவர்ஸ் கேஸ் தொடங்கிடுச்சுன்னு சொன்னேன்"

அமுதா, "அதுக்கும் டைவர்ஸுக்கும் என்ன சம்மந்தம்?"

வனிதா, "விஸ்வா அந்தப் போஸ்ட்டை அக்ஸெப்ட் பண்ணிக்கலை. அந்தக் கம்பெனியில் தொடர்ந்து வொர்க் பண்ணுவாரான்னு தெரியலை"

அமுதா, "ஏன்?"

வனிதா, "அவருக்கு நான் தான் அந்தக் கம்பெனியில் வேலை வாங்கித் தந்தேன்"

அமுதா, "சோ, அவனோட ஈகோ ஒத்துக்கலையாக்கும்?"

வனிதா அமுதாவின் கண்களை தவிர்த்துத் தலை குனிந்து இல்லையெனத் தலையசைத்தபடி, "நான் அவருக்கு அந்த வேலை வாங்கிக் கொடுத்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த சமயத்தில் ராம் அந்த ரெண்டு வருஷத்தில் ரொம்ப பிரபலமானார். விஸ்வா இருந்த கம்பெனியில் ப்ரொமோஷனுக்கு இன்னும் ஒரு வருஷமாவுது வெய்ட் பண்ணும்ன்னு சொல்லி இருந்தாங்க. எனக்கு விஸ்வா சீக்கிரம் முன்னுக்கு வரணும்ன்னு ஒரு வெறி. நான் எங்க பாஸ்கிட்டே, ஐ மீன் மிஸ்டர் சந்திரசேகர் கிட்டே பேசினேன். அவர் விஸ்வாவுக்கு போதிய முன் அனுபவம் இல்லை அதனால போர்ட் மெம்பர்ஸ் ஆட்சேபிப்பாங்கன்னு சொன்னார். நானே போர்ட் மெம்பர்ஸ், முக்கியமா மிஸஸ் சுமதி சந்திரசேகர்கூடவும் அப்பறம் ஷண்முகம் சார்கூடவும் பேசினேன். அவங்க ரெண்டு பேரும் விஸ்வாகூட பேசிட்டு சரின்னு சொல்லிட்டாங்க. அதுக்குப் பிறகு மிஸ்டர் சந்திரசேகர் ... " என்றவள் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் சில கணங்கள் தவித்த பிறகு விரக்தியுடன், "வேற எங்கே இருந்து இருந்தாலும் விஸ்வா முன்னுக்கு வந்து இருப்பார். I wish I could go back in time and undo what I did"

அமுதா, "Why?"

வனிதா, "Everything started with that (எல்லாம் அப்பத்தான் தொடங்குச்சு)"

அமுதா, "எது எல்லாம்?"

சற்று நேரத்துக்கு முன் துக்கம் தொண்டையை அடைக்க விவாகரத்தின் காரணத்தை அவளாகவே சொல்லுவதற்கு முன்வந்த வனிதா ஆமை தன் ஓட்டுக்குள் ஒளிந்து கொள்வது போல் மறுபடி மௌனம் காத்து மூக்கை உறிஞ்சியபடி கண்ணீர் விட்டாள்.

அமுதா மேலும் அவளை வற்புறுத்த விரும்பவில்லை.

அமுதா, "நான் முந்தாநேத்து சொன்னேனே அந்த லிஸ்டை எழுதுனியா?"

வனிதா, "ம்ம்ம்" என்ற படி நோட்டுப் புத்தகத்தில் இருந்து கிழிக்கப் பட்ட இரு காகிதங்களை நீட்டினாள்

அமுதா, "முதலில் ஏன் இந்த விவாகரத்து வேண்டாம் அப்படிங்கறதுக்கான காரணங்களை படிக்கலாம்"

1. I love Viswa
2. பெற்றோர்கள் பிரிஞ்சு இருந்தா குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப் படும்
3. இரட்டைக் குழந்தைகளைப் பிரிச்சு வளர்த்தா அவர்கள் மனநிலை பாதிக்கப் படும்
4. I think Viswa also still loves me

அமுதா, "ம்ம்ம் ... இதை விட சரியான காரணங்கள் இருக்க முடியாது. அடுத்த லிஸ்டைப் படிக்கலாம்

1. விஸ்வாவுக்கு நான் ஏற்றவள் இல்லை
2. என்னை விட ஒரு நல்ல ஒருத்தியை விஸ்வா கல்யாணம் செஞ்சுக்கணும்"

படித்து முடித்த பிறகு வனிதாவைக் கூர்ந்து நோக்கிய அமுதா, "என் கிட்டே எதையும் மறைக்கக் கூடாதுன்னு சொன்னேன்"

வனிதா தலை குனிந்து இருந்தாள்.

அமுதா, "சரி, ஏன் நீ விஸ்வாவுக்கு ஏத்தவ இல்லை?"

வனிதா, "விஸ்வாவோட அறிவாற்றலையும் அவரோட தன்னம்பிக்கையையும் உழைப்பையும் நான் முழுசா புரிஞ்சுக்கலை"

அமுதா, "சரி, இப்போ புரிஞ்சுகிட்டே இல்லையா?"

வனிதா, "Now it is too late"

அமுதா, "ஏன்?"

மேலும் வனிதா மௌனம் காக்க ...

அமுதா, "உன்னை விட நல்ல ஒருத்தின்னா எப்படி இருக்கணும்?"

வனிதா, "அவர் மேல் நம்பிக்கை வெச்சு இருக்கணும்"

அமுதா, "போதும் கண்ணாமூச்சி வனிதா. உனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லாம இருந்ததால என்ன ஆச்சு?"

வனிதா, "I had sex with Mr.Chandrasekar to get his job (அவருக்கு வேலை கிடைக்கறதுக்காக நான் மிஸ்டர் சந்திரசேகருடன் செக்ஸ் வெச்சுகிட்டேன்) and I started having sex with him once a week again six months ago (தற்குப் பிகும் ந்த று மாமா வாரம் ஒரு முறை அரோட செக்ஸ் வெச்சுட்டு இருந்தேன்)
"



இது போன்ற எதாவுது ஒரு காரணமாகத்தான் இருக்கும் என்று எண்ணி இருந்த அமுதாவுக்கும் இந்த விவரம் சிறு அதிர்ச்சியைக் கொடுத்தது...

அடுத்த அரை மணி நேரம் வனிதாவுடன் நடந்தவற்றைப் பற்றி பேசிய பிறகு ...

அமுதா, "Infidelity ... நீ பிறந்து வளர்ந்த அமெரிக்காவிலும் இதை ஈஸியா எடுத்துக்கறது இல்லை. உனக்கு அது தெரியும் தானே?"

வனிதா, "எஸ் ... I understood my mistake afterwards"

அமுதா, "சரி, பாக்கியை அடுத்த சிட்டிங்க்கில் பார்க்கலாம். எப்போன்னு என் செகரட்டரி கூப்பிட்டு சொல்லுவா"

வனிதா, "சரி" என்று விடைபெற்றுச் சென்றாள்.





No comments:

Post a Comment