Wednesday, September 23, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 14



டாக்டர் மதுசூதன், "Sorry for the digression. சரி, நான் பாருவுக்கு உனக்கு மன வேதனை எதுவும் இல்லாமல் பார்த்துக்கறேன்னு வாக்குக் கொடுத்து இருக்கேன். சோ, உன் நீடித்த சந்தோஷம் தான் என் முக்கியக் குறிக்கோள். அதைப் புரிஞ்சுக்கோ. என்ன? என்னை உனக்கு ஹெல்ப் பண்ண அனுமதி கொடுப்பியா?"

நாத் தழ தழக்க விஸ்வா, "எஸ் சார்"

டாக்டர் மதுசூதன், "இன்னும் கொஞ்ச நாள் டெய்லி சாயங்காலம் இப்படி சந்திக்கலாமா? டெய்லி பாரில் வேண்டாம். இங்கே மேல இருக்கும் டிஸ்கஷன் ரூம்ஸில் ஒண்ணு புக் பண்ணி இருக்கேன். அங்கே சந்திக்கலாம் என்ன?"

விஸ்வா, "ஓ.கே சார்"

டாக்டர் மதுசூதன், "Remember Viswa. உனக்கு உதவி செய்ய. உன் சந்தோஷத்துக்காக மட்டும்தான் நான் இதைச் செய்யறேன்" என்றவரின் 'உனக்கு' 'உன்' என்ற வார்த்தைகளில் மிகுந்த அழுத்தம் இருந்தது.



விஸ்வா, "Yes Colonel, I understand. In fact I need your help"

டாக்டர் மதுசூதன், "நிச்சயம். அப்போ நாளைக்கு மீட் பண்ண்லாமா?"

இருவரும் விடை பெற்றனர்.
~~~~~~~~~~~~
அடுத்த நாள் அவர் சொன்ன டிஸ்கஷன் ரூமுக்குச் சென்றான்.

விஸ்வா, "Evening sir. Nice. கான்ஃபரென்ஸ் டேபிள் போட்டு ரொம்ப ஃபார்மலா இல்லாமல் இந்த ரூமின் அமைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு"

டாக்டர் மதுசூதன், "அதனால் தான் நான் இந்த ரூமை செலெக்ட் பண்ணினேன்" என்றபடி அங்கு இருந்த நீண்ட சோஃபாவில் அமர்ந்து விஸ்வாவையும் அதிலேயே அமரப் பணித்தார்.

டாக்டர் மதுசூதன், "நீ எதாவுது சாப்பிடறையா?"

விஸ்வா, "நோ நீட். ஆஃபீஸில் இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி காஃபி சாப்பிட்டேன். உங்களுக்கு வேணும்ன்னா எதாவுது ஆர்டர் பண்ணுங்க"

டாக்டர் மதுசூதன், "எனக்கு இப்போ எதுவும் வேண்டாம். Let us start. O.k?"

விஸ்வா, "ஓ.கே?"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, நீ இப்போ சந்தோஷமா இருக்கியா?"

விஸ்வா, "என்ன கேள்வி கேட்கறீங்க? இந்த நிலமையில் நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?"

டாக்டர் மதுசூதன், "இந்த நிலமைன்னா?"

விஸ்வா, "வனிதா வேற ஒருத்தன் கூட உடலுறவு வெச்சுட்டு இருந்தா"

டாக்டர் மதுசூதன், "சோ வாட்? அது உன்னை எப்படி பாதிக்குது?"

விஸ்வா, "என்ன சொல்லறீங்க? அவ என் மனைவி"

டாக்டர் மதுசூதன், "இருக்கட்டும். சோ? அதனால் உனக்கு என்ன பாதிப்பு? அவளுக்கு வேறு ஒருத்தனுடன் அவளா விரும்பி கலந்துட்ட உடலுறுவினால் சுகம்தான் கிடைச்சு இருக்கும். வலி இல்லை. அவ சுகம் பெற்றது உன்னை எப்படி பாதிக்குது?"

விஸ்வா, "அந்த சுகம் என் மூலம் தான் அவளுக்குக் கிடைக்கணும். "

டாக்டர் மதுசூதன், "ஏன்?"

விஸ்வா, "ஏன்னா அவ என் மனைவி. கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் மட்டும்தான் சுகத்தை பகிர்ந்துக்கணும். அப்படி நடந்துக்குவேன்னு அவ எனக்குக் கொடுத்த ப்ராமிஸ்தான் திருமணம். அதே மாதிரி நானும் அவளுக்குப் ப்ராமிஸ் பண்ணி இருக்கேன். I have kept my promise but she has not"

டாக்டர் மதுசூதன், "சுகத்தைப் பகிர்ந்துக்கணும்ன்னா என்ன?"

விஸ்வா, "அந்த சுகத்தை கணவினிடம் மட்டும்தான் மனைவி அடையணும். அந்த சுகத்துக்காக வேறு ஒருத்தனை நாடிப் போகக் கூடாது"

டாக்டர் மதுசூதன், "அப்படின்னா மனைவிக்கு வேண்டிய அந்த சுகத்தை கொடுக்க வேண்டியது கணவனின் கடமைன்னு சொல்லலாம் இல்லையா?"

விஸ்வா தலை குனிந்து மௌனம் காத்தான் ...

அவனைக் கூர்ந்து நோக்கிய டாக்டர் மதுசூதன், "இந்த லைனில் டாக்டர் அமுதாவும் ராமும் உன்னை கேட்ட கேள்விகளை நான் கேட்கப் போறது இல்லை. அப்படிக் கேட்டா உன்னிடம் பதில் இல்லை-ன்னும் தெரியும்" அவரது கண்களை தவி்த்து னம் காத்
 விஸ்வாவை கூர்ந்து நோக்கியபடி தொடர்ந்து, "சோ, வேற சப்ஜெக்டுக்குப் போகலாம். ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, நான் எந்தக் கேள்வியும் கேட்க விரும்பலை. ஆனா, bottom-line, நீ சந்தோஷமா இல்லை. மறைந்து போன சந்தோஷத்தை, மன நிம்மதியை எப்படி வரவழைக்கறதுன்னு பார்க்கலாமா?"

விஸ்வா விரக்தியுடன், "I don't think that is possible"

டாக்டர் மதுசூதன், "நிச்சயம் முடியும் விஸ்வா. கொஞ்ச நாள் ஆகலாம். நிரந்தரமா உன் மனத்தில் சந்தோஷம் வருவதற்கு பல மாதங்கள் ஆனாலும் ஆகலாம். ஆனா அதுக்காக எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் இப்போ உன் மனத்தில் இருக்கும் காயங்கள் ஆறாது. We must take some initiative. Do you agree with me?"

விஸ்வா, "எஸ்"


டாக்டர் மதுசூதன், "சரி, உன் மனத்தில் சந்தோஷமும் peace of mindம் இல்லை. முதலில்
உன் மனசில் வேறு என்னென்ன உள்ளுணர்வுகள் இருக்கு அந்த உள்ளுணர்வுகளுக்கான காரணங்கள் என்னன்னு அலசிப் பார்க்கலாம்?"

விஸ்வா, "அப்படி எல்லாம் அலசிப் பார்த்தா அவ செஞ்சது சரியாயிடுமா?"

டாக்டர் மதுசூதன், "நிச்சயம் சரி ஆகாது. அவ செஞ்சது பெரிய தப்பு. ஒத்துக்கறேன். ஆனா, என் கவனம் எல்லாம் உன் சந்தோஷத்தை பத்தி மட்டும்தான். புரிஞ்சுக்கோ. இப்படி யோசிச்சுப் பாரு. ஒரு வேளை வனிதா ரெண்டு குழந்தைகளையும் நீயே வளர்த்துக்கோ நான் எங்க அப்பா-அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொன்னா உடனே உன் மனசில் சந்தோஷம் வந்துடுமா? யோசிச்சு பதில் சொல்லு"

விஸ்வா, "நோ"

டாக்டர் மதுசூதன், "சரி, நிச்சயம் நீ வனிதாவை விட அழகான பெண்களை சந்திச்சு இருப்பே. நிச்சயம் அதில் பலருக்கும் உன் மேல் ஈர்ப்பு இருக்கும். Yes, you are good looking, smart, well educated and quite well to do. இதை விட ஒரு பெண்ணுக்கு வேற என்ன வேணும். சீரியஸா முயற்சி செஞ்சா ஒரு மாசத்தில் நீ வேறு ஒருத்தியை வளைச்சுப் போட்டுடலாம். ஆனா நீ வேறு ஒரு பெண்ணை சந்தோஷமா லவ் பண்ணும் மன நிலையில் இருக்கியா?"

விஸ்வா, "நோ"

டாக்டர் மதுசூதன், "What is stopping you?"

விஸ்வா மௌனம் காத்தான்.

டாக்டர் மதுசூதன், "நான் சொல்லறேன். சந்தோஷத்துக்கும் மன நிம்மதிக்கும் பதிலா உன் மனசில் இருப்பது உன்னை வாட்டி வதைச்சுட்டு இருக்கும் பல விதமான உள்ளுணர்வுகள், எண்ணங்கள். இதனாலதான் உன்னால சந்தோஷத்தை பத்தி யோசிக்கக் கூட முடியலை. நான் சொல்வது சரியா?"

விஸ்வா, "நீங்க சொல்றது சரி. ஆனா, I feel I have wasted a good part of my life. இனி சந்தோஷமா இருந்தாலும் இவ்வளவு நாளும் நான் வாழ்ந்த வாழ்க்கையே பொய்யான மாதிரி இருக்கு"

டாக்டர் மதுசூதன், "You are jumping the gun. சந்தோஷத்துக்கு பதில இருக்கும் உள்ளுணர்வுகளில் ஒண்ணை இப்போ நீ சொல்லி இருக்கே. அதையேதான் நான் லிஸ்ட் போட்டு ஒவ்வொண்ணா அலசலாம்ன்னு சொன்னேன். ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே"

டாக்டர் மதுசூதன், "Now let us list and then analyze your feelings. கோவம், எமாற்றம், துக்கம் இப்படி என்னெல்லாம் உன் மனசில் இருக்கு சொல்லு"

விஸ்வா, "எஸ். கோபம். முதலில் வந்தது, இப்பவும் இன்னும் என் மனத்தில் நெருப்பா எறிஞ்சுட்டு இருப்பது" என்றவன் நீண்ட பெருமூச்சுடன் தொடர்ந்தான், "நான் சின்ன வயசில் இருந்து உயிருக்கு உயிரா காதலிச்ச என் வனிதா, என் வனிதான்னு நான் பெருமையா நினைச்சுட்டு இருந்தவ வேறு ஒருத்தனுடன் அந்தக் கோலத்தில் பார்த்த போது முதலில் அங்கேயே செத்துப் போயிடலாம்ன்னு இருந்தது. கூடவே அவங்க ரெண்டு பேர் மேலேயும் அடக்க முடியாத கோவம். நான் அப்பவே அங்கேயே அவங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டு இருப்பேன்"

டாக்டர் மதுசூதன், "Sorry to interrupt" என்ற பிறகு, "நான் இப்படி நடு நடுவே நீ பேசறதை தடுத்தா பரவால்லையா?"

விஸ்வா, "Its Ok. என்ன சொல்ல வந்தீங்க?"

டாக்டர் மதுசூதன், "ஏன் அவங்களை கொன்னு போடலை? அந்த மாதிரி கொன்னு போட்டவங்க நிறையப் பேரை நான் சந்திச்சு இருக்கேன். மேஜர் வர்மாவைப் பத்தி கேள்விப் பட்டு இருப்பியே"

விஸ்வா, "Yes. அவர் மனைவியையும் நண்பரையும் சுட்டுக் கொன்னார்"

டாக்டர் மதுசூதன், "நீ ஏன் அப்படி செய்யலை"

விஸ்வா மௌனம் காத்தான் ...

டாக்டர் மதுசூதன், "ஒரு கடமைன்னு வந்தப்போ ஒரு நல்லவனை" என்றவர் விஸ்வாவை கூர்ந்து நோக்கியபடி, "எஸ், எதிரி நாட்டை சேர்ந்தவன் ஆனாலும், அவன் பெற்றோரைப் பொருத்த வரை, அவன் மனைவியைப் பொருத்தவரை அவன் நல்லவன்தான். அவனை கொல்ல நீ தயங்கலை. சந்திரசேகரைப் போல ஒரு நயவஞ்சகனை ஏன் கொல்லலை? உனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்ச வனிதாவை ஏன் கொல்லலை?"

விஸ்வா, "மனம் வரலை. தப்பு செஞ்சவங்க அவங்க ரெண்டு பேரும். அவங்களை கொன்னுட்டு நான் எதுக்கு ஜெயிலுக்குப் போகணும்ன்னு விட்டுட்டேன்"

டாக்டர் மதுசூதன், "க்ரேட் விஸ்வா, I am really proud of you. மேலே தொடர்ந்து சொல்லு"




விஸ்வா, "ம்ம்ம்ம் ... ஆனா இருந்தும் சந்திரசேகரை அவர் அஞ்சு அடி தள்ளிப் போய் விழும் அளவுக்கு ஓங்கி அறைஞ்சேன். He fell like a rag doll. ஒரு கையால் வனிதாவின் கழுத்தைப் பிடிச்சு நெருக்கி அப்படியே சுவத்தோட தூக்கினேன்."

டாக்டர் மதுசூதன், "ஒரு நிமிஷம் இப்போ நான் மறுபடி இன்டரப்ட் பண்ணட்டுமா?"

விஸ்வா, "ஓ.கே?"

டாக்டர் மதுசூதன், "அவங்களை கொல்லக் கூடாது முடிவு எடுத்தேன்னு சொன்னே. இருந்தாலும் எதுக்கு அப்படி செஞ்சே?"

விஸ்வா மௌனம் காத்தான்...

டாக்டர் மதுசூதன், "கம் ஆன் யோசி விஸ்வா, உனக்கே விளங்கும்"

விஸ்வா, "நான் நினைச்சா அவங்களை கொல்ல முடியும்ன்னு அவங்களுக்கு காண்பிக்க" என்று இழுத்தான்

டாக்டர் மதுசூதன், "யூ ஆர் ரைட். சரி, அப்படி அவங்களுக்குக் காண்பிக்கணும்ன்னு உன் ஏன் உள் மனசு சொல்லுச்சு?"

விஸ்வா சில கணங்கள் மௌனம் காத்தான்.

டாக்டர் மதுசூதன், "இட்ஸ் ஓ.கே. கோவத்தைத் தவிற இன்னும் சில உணர்வுகள் உன் ஆழ்மனத்தில் இருக்கு. அது இருப்பதை நீ ஒத்துப்பியோ இல்லையோன்னு தெரியலை. அதனால்தான் அந்த லைனில் உன்னை யோசிக்க வெச்சேன்"

விஸ்வா, "என்ன உணர்வு?"

டாக்டர் மதுசூதன், "ஒண்ணு Jealousy. பொறாமை. அடுத்தது இயலாமை ... feeling inadequate. இதைத் தவிற உன் கோவம் குறைவதற்கு வேற ஏதோ காரணமும் இருந்து இருக்கலாம். But I am not sure. ஆனா, பொறாமை, இயலாமை இந்த ரெண்டு உணர்வுகளும் நிச்சயம் சேர்ந்து வந்து இருக்கும்ன்னு நினைக்கறேன். இந்த லைனில் யோசிச்சு நீயே உன் செயலுக்கு விளக்கம் கொடு"

விஸ்வா தலை குனிந்து அமர்ந்து இருந்தான். பிறகு கிசு கிசுத்த குரலில், "I felt sexually inferior. அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததில் இருந்து என்னை விட சந்திரசேகர்கிட்டே இருந்து வனிதாவுக்கு அதிக சுகம் கிடைக்குதுன்னு ... " என்றவனால் அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. குரல் உடைந்து தலை குனிந்து குலுங்கினான்.

டாக்டர் மதுசூதன் அவன் அருகில் நகர்ந்து அவ தோளை அணைத்து இறுகப் பற்றினார். அந்த அரவணைப்பில் சில நிமிடங்கள் தலை குனிந்து அழுதவன் கண்களைத் துடைத்துக் கொண்டு, "சாரி, இமோஷனல் ஆயிட்டேன்"

டாக்டர் மதுசூதன், "பரவால்லை விஸ்வா. வெரி குட். ஒவ்வொரு உணர்வுக்கும் பின்னால் இருக்கும் காரணங்களை புரிஞ்சுட்டு அதை ஆமோதிச்சா. அந்த உணர்வை எப்படி போக வைக்கறதுன்னு ஈசியா கண்டு பிடிச்சுடலாம் இல்லையா?"

விஸ்வா, "எஸ்"

டாக்டர் மதுசூதன், "மேலே கண்டின்யூ பண்ணறதுக்கு முன்னாடி வேற எதாவுது உன் கோவத்தை குறைச்சுதான்னு தனியா இருக்கும் போது யோசி. ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே" என்றாலும் அவர் கண்களை தவிற்பதை டாக்டர் மதுசூதன் உணர்ந்தார். அந்தக் கோணத்தில் மேலும் தக்க சமயத்தில் விஸ்வாவை சிந்திக்க வைக்க முடிவெடுத்தார்.

டாக்டர் மதுசூதன், "வேற ஒரு விஷயமும் சொல்ல ஆசைப் படறேன். உன்னை விட சந்திரசேகரிடம் அவளுக்கு அதிக சுகம் கிடைக்குதுன்னு நீ சொன்னது சரியா?"

விஸ்வா, "இல்லைன்னா எதுக்கு அவ சந்திரசேகர்கிட்டே போகணும்?"

டாக்டர் மதுசூதன், "அப்படி நீ அனுமானம் செஞ்சுட்டு இருக்கே. அவளா அப்படி சொன்னால் ஒழிய திட்டவட்டமா சொல்ல முடியுமா?"

விஸ்வா, "வேற எப்படி இருக்க முடியும்?"

டாக்டர் மதுசூதன், "ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறதை உதாரணமா எடுத்துக்கலாம். வீட்டில் சமைப்பதை விட ருசியா இருக்குன்னும் ஹோட்டலுக்குப் போகலாம். வீட்டில் அன்னைக்கு சமையல் இல்லைங்கறதுக்காகவும் ஹோட்டலுக்குப் போகலாம் இல்லையா?"

விஸ்வா மௌனம் காத்தான்.

டாக்டர் மதுசூதன், "ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறது தப்புன்னு வெச்சுட்டாலும். எதுக்காக ஹோட்டலுக்குப் போனான்னு எதற்கு நாமே ஒண்ணை அனுமானம் பண்ணிட்டு அந்த அனுமானத்தினால் நம்மை நாமே வருத்திக்கணும்?"

சில நிமிடங்கள் விஸ்வா மௌனம் காத்தான் ...

டாக்டர் மதுசூதன், "உன் மனசில் என்னவோ இருக்கு. உனக்கு சொல்ல விருப்பம்ன்னா சொல்லு"

விஸ்வா, "ஆனா, அவளுக்கு விட்டில் சரியான சாப்பாடு கிடைக்கலைன்னு நான் இப்போ புரிஞ்சுட்டேன். I ignored her needs. I am ashamed of myself" என்று தலை குனிந்தான்.

டாக்டர் மதுசூதன் மறுபடி அவன் தொளைப் பிடித்து அணைத்தபடி, "அதனாலதான் டைவர்ஸ் கேஸை மூவ் பண்ணாம இருக்கியா?"

விஸ்வா கண்களில் நீர் வழிய மௌனமாகத் தலையசைத்தான் ....

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, நீயே I have ignored her needs, அவளது தேவைகளை பொருட்படுத்தாமல் இருந்ததா சொன்னே. Needs, தேவைகள், முக்கியமா பெண்களின் தேவைகளைப் பத்தி முக்கியமா புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஒண்ணு" என்றவர் தொடர்ந்து

"செக்ஸில் மன மாற காதலிக்கறவனுடன் வரும் சுகம் வேறு யாருடனும் வராது. மனமார்ந்த காதல் வரும் போது மட்டும்தான் செக்ஸ் உணர்வு வரும்ன்னு சொல்றது, அப்படித்தான் வரணும்ன்னு எதிர்பார்ப்பது பத்தாம் பசலித்தனம். We have been brought up like that. செக்ஸ் உணர்வு உடலைச் சார்ந்தது. அது எப்போ வேணும்ன்னா வரலாம். ஆனா, அதே செக்ஸில் காதலும் அன்னியோன்னியமும் கலக்கும் போது வரும் சுகம். அதுக்கு எதுவும் ஈடாகாது."

விஸ்வா மௌனம் சாதிக்க சில நிமிடங்கள் அந்த அறையில் மௌனம் நிலவியது ... 


டாக்டர் மதுசூதன், "சரி, உனக்கு கோவம் எதுக்கு வந்ததுன்னு பார்க்கலாமா?"

விஸ்வா, "அவங்க செஞ்ச நம்பிக்கை துரோகத்தினால்"

டாக்டர் மதுசூதன், "நம்பிக்கை துரோகம். அது சந்திரசேகருக்கு நிச்சயம் பொறுந்தும். But Vanitha?"

விஸ்வா, "அவ செஞ்சதும் நம்பிக்கை துரோகம் தான். God, I feel betrayed. In fact அதுக்கும் மேல. எனக்கு மட்டும்ன்னு இருந்த உடம்பை அவ வேற ஒருத்தனுக்குக் கொடுத்தா. எங்க மேரேஜின் புனிதத்தையும் நான் அவ மேல வெச்சு இருந்த லவ்வையும் அசிங்கப் படுத்திட்டா."

டாக்டர் மதுசூதன், "உன் பொருளை மற்றவன் எடுத்துட்டானேன்னு கோவம். உன்னுடையதை மத்தவனுக்குக் கொடுத்துட்டாளேன்னு கோவம் இல்லையா?"

விஸ்வா, "ம்ம்ம்"

டாக்டர் மதுசூதன், "சரி, அடுத்ததா என்ன உணர்வு"

விஸ்வா, "Sorrow ... sadness சோகம், துக்கம்"

டாக்டர் மதுசுதன், "அதுக்கான முக்கிய காரணம் வனிதா உனக்கு செஞ்ச நம்பிக்கை துரோகம். இல்லையா? வேறு எதாவுது இருக்கா?"

விஸ்வா, "அவ செஞ்ச நம்பிக்கை துரோகம் தான் முதல் காரணம். ஆனா, நானே அவ எனக்கு துரோகம் செய்ய ஒரு அளவுக்கு காரணமா இருந்து இருக்கேன். என் மேலே எனக்கு வெறுப்பு வருது. அதுவும் ஒரு காரணம்"

டாக்டர் மதுசுதன், "சரி, இன்னைக்கு இது போதும். இதுவரைக்கும் நாம் உனக்கு உள்ளே இருக்கும் கோவம், பொறாமை, இயலாமை, துக்கம் இந்த நாலு உள்ளுணர்வுகளையும் அலசிப் பாத்து இருக்கோம். இந்த உள்ளுணர்வுகளை எப்படி போக வைக்கறதுன்னு நாளைக்குப் பார்க்கலாம். Care to join me for a drink before you go?"

விஸ்வா, "இல்லை கர்னல். நான் கிளம்பறேன்"

டாக்டர் மதுசுதன், "எங்கே போகப் போறே?"

விஸ்வா, "எங்க கம்பனி கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் என் ரூமுக்கு"

டாக்டர் மதுசூதன், "உன் வீட்டுக்கு. ஐ மீன், உங்க அப்பா அம்மா இருக்கும் வீட்டுக்கு ஏன் போறது இல்லை?"

விஸ்வா, "There will be questions. நான் பதில் சொல்ல வேண்டி வரும். ராமும் அங்கே இருப்பான்"

டாக்டர் மதுசூதன், "நீ போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம். நாளைக்கு என்னை மீட் பண்ண வரும் போது நீ யோசிச்சுட்டு வரணும்"

விஸ்வா, "என்ன?"

டாக்டர் மதுசூதன், "டைவர்ஸ்ஸுக்குப் பிறகு வனிதா என்ன செய்யணும்? என்ன செஞ்சா உனக்கு ஓ.கே. இதைப் பத்தி மட்டும் யோசி"

விஸ்வா, "நானே டைவர்ஸுக்குப் பிறகு என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கேன். அவளைப் பத்தி நான் எதுக்கு யோசிக்கணும்?"

டாக்டர் மதுசூதன், "டைவர்ஸுக்குப் பிறகு நீ செய்யப் போறதை தெளிவான மனசோடு 'நீ' முடிவு எடுக்கும் வரை நான் உன்னை விடப் போறது இல்லை. நான் சொன்ன மாதிரி சில மாதங்கள் ஆகலாம். ஆனா நிச்சயம் நீ முடிவு எடுப்பே. அதே சமயத்தில் வனிதா என்ன முடிவு எடுக்கணும்ன்னு நீ விரும்பறே? டைவர்ஸுக்குப் பிறகு நீயும் வனிதாவும் கணவன் மனைவியா இல்லாமல் இருக்கலாம். ஆனா ரெண்டு பேரும் விக்கி-வசியின் பெற்றோர்களா இருப்பீங்க. உனக்கும் வனிதாவுக்கும் சுமுகமான பேச்சு வார்த்தை இருக்கணும். அதற்காகத்தான் கேட்டேன்"

விஸ்வா, "என் குழந்தைகள் சந்தோஷமா இருக்கும் வரை அவ முடிவைப் பத்தி எனக்குக் கவலை இல்லை"

டாக்டர் மதுசூதன், "சோ, அவ வேற ஒத்தனைக் கல்யாணம் செஞ்சுட்டு அவளும் சந்தோஷமா இருந்தா உனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. அப்படித்தானே? அவளுக்கு என்ன வயசாச்சு முப்பதா. இன்னொருத்தனோடு இன்னும் ஒண்ணு ரெண்டு குழந்தைகள் கூட பெத்துக்கலாம்"

விஸ்வாவின் முகத்தில் கொபம் கொப்பளித்தது

டாக்டர் மதுசூதன், ."என்ன பேசாம ஸ்தம்பிச்சுப் போயிட்டே?"

விஸ்வா, "அப்படி அவ செஞ்சா என் குழந்தைகளை எனக்குக் கொடுன்னு கேட்பேன். என் குழந்தைகளை வேறு ஒருத்தனோடு பகிர்ந்துக்க நான் விரும்பலை"

டாக்டர் மதுசூதன், "அதாவுது நீ வேறு ஒருத்தியைக் கல்யாணம் செஞ்சுட்டு குழந்தைகளை கூட்டிட்டு வந்துடுவேன்னு சொல்லறையா?"

விஸ்வா, "மே பீ. ஆனா என்னால இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க முடியுமான்னு தெரியலை.

டாக்டர் மதுசூதன், "அப்பறம் எப்படி குழந்தைகளை கூட்டிட்டு வந்து தனி ஆளா வளற்ப்பே?"

விஸ்வா, "I can hire a governess"

டாக்டர் மதுசூதன், "குழந்தைகள் பெத்த தாயை விட்டு வந்து ஒரு செவிலித் தாய் கூட இருக்கணுமா?"

விஸ்வா, "அதான் சொன்னேனே. தேவை இருந்தா வேற கல்யாணம் பண்ணிப்பேன்"



டாக்டர் மதுசூதன், "சோ, நீ குழந்தைகளை வேற ஒருத்தனுடன் பகிர்ந்துக்க மாட்டே ஆனா அவ மட்டும் அவ குழந்தைகளை வேறு ஒருத்திகூட பகிர்ந்துக்கணுமா?"

விஸ்வா, "ஏன்னா அவ தன் உடலை வேற ஒருத்தனுக்குக் கொடுத்தா. அவளா வரவைச்சுட்டது"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, அவ உன் அனுமதி இல்லாமல் தன் உடலை வேறு ஒருத்தன்கூட பகிர்ந்துகிட்டா. அது பெரிய தப்பு. ஆனா குழந்தைகள் மேஜர் ஆகும் வரை உனக்கு இருக்கும் அதே உரிமை வனிதாவுக்கும் இருக்கு. யோசிச்சுப் பார்த்தா உனக்கே புரியும். அதனால் தான் டைவர்ஸ்ஸுக்குப் பிறகு அவ என்ன செய்யணும்ன்னு உன்னை யோசிக்கச் சொன்னேன். நாளைக்குப் பார்க்கலாம்" என விடை கொடுத்தார்.

விஸ்வாவின் மனக் குமுறல் பன் மடங்கானது ... 



No comments:

Post a Comment