Friday, September 18, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 6

அடுத்த நாள் அமுதாவின் அலோசனைக் கூடத்தில் ...

இந்தியாவுக்குத் திரும்பும் ஆயத்தங்களில் மூழ்கி இருந்த நிலையிலும் ராம் தன்னை தொலைபேசியில் அழைத்ததை நினைவு கூர்ந்தார் ...

ராம், "ஹெல்லோ டாக்டர். நான் ராம் ஸ்ரீவத்சன் பேசறேன்"

அமுதா, "ஹெல்லோ டாக்டர் ராம். இந்தியா வந்துட்டீங்களா?"

ராம், "இன்னும் ஒரு மணி நேரத்தில் ஃப்ளைட். நைட்டு ரெண்டு மணிக்கு பெங்களூரில் இருப்பேன். நாளைக்கு சாயங்காலம் விஸ்வாகூடப் பேசப் போறேன். நீங்க விஸ்வாவை என் கூடப் பேசச் சொன்னதா சொன்னான்"

அமுதா, "எஸ் ராம். சில விஷயங்களை என்னிடம் பேச விஸ்வா கூச்சப் படற மாதிரி தெரியுது"

ராம், "எனக்குத் தெரிஞ்சு விஸ்வா கூச்சப் படறவன் இல்லையே?"

அமுதா, "I mean about their sexual intimacy ... அவங்களுக்கு இடையே இருந்த நெருக்கத்தைப் பத்தி ..."

ராம், "அதைப் பத்தி எதுக்கு என் கூட பேசச் சொல்லறீங்க?"



அமுதா, "இந்த டைவர்ஸுக்குக் காரணம் ... வனிதா படி தாண்டினதுதான்"

ராம், "My God! You mean ... No way ... வனிதா அந்த மாதிரி இல்லை"

அமுதா, "Unfortunately டாக்டர் ராம். அப்படித்தான் நடந்து இருக்கு"

ராம், "என்னால் சத்தியமா நம்ப முடியலை"

அமுதா, "டாக்டர் ராம். தவறு நடந்து இருக்கு. எப்பவும் அவ செஞ்சதை சரின்னு நான் நிச்சயம் சொல்ல மாட்டேன். ஆனால் அவளுக்குப் பரிஞ்சு பேசறேன்னு நினைக்காதீங்க ... இது போன்ற தவறுகளுக்கு மனைவி மட்டும் காரணமா இருக்க முடியாது. விஸ்வாவின் செயல்கள் எதாவுது அவளை அப்படிச் செய்யத் தூண்டி இருக்கலாம். I hope you understand"

ராம், "Of course I understand Doctor. You don't need to justify yourself. வனிதா எந்தத் தூண்டுதலும் இல்லாமல் ஒரு தவறான காரியத்தை செய்யத் துணிய மாட்டா. Besides she loves Viswa more than her own life"

அமுதா, "அவ விஸ்வாவை அந்த அளவுக்கு லவ் பண்ணறது உறுதி. அதை நான் நல்லா புரிஞ்சுகிட்டேன்"

ராம், "Then why?"

அமுதா, "Initially she seems to have crossed the line to get Viswa a job at PML"

ராம், "ஏன்?"

அமுதா, "விஸ்வாவை வேலையில் சேர்த்துக்க சந்திரசேகர் போட்ட கண்டிஷன் அது"

ராம், "What a cheap bastard"

அமுதா, "Yes. But he is no more ... "

ராம், "சோ, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததுக்காக இந்த டைவர்ஸ்ஸா?"

அமுதா, "இல்லை. அதற்குப் பிறகு நாலு வருஷம் எதுவும் நடக்கலை. கடந்த ஏழரை மாசத்துக்கு முன்னாடி மறுபடியும் படி தாண்டி இருக்கா. மறுபடியும் முதல் முறை அப்படி நடந்ததுக்கு முக்கியக் காரணம் சந்திரசேகர்தான். அதற்குப் பிறகு சுயநலமான காரியம்ன்னு தெரிஞ்சும் அதனால் விஸ்வா எந்த விதத்திலும் பாதிக்கப் படலைன்னு நினைச்சுட்டு ஈடு பட்டு இருக்கா. அந்த விஷயம் விஸ்வாவுக்கு தெரியாமல் இருக்க ரொம்ப பிரயர்த்தனப் பட்டு இருக்கா. அவ அதில் ஈடு பட்டதுக்கு. ஐ மீன் மறுபடி நாலு வருஷத்துக்குப் பிறகு தொடர்ந்து ஈடு பட்டதுக்கு எதாவுது காரணம் இருக்கணும். என்னுடன் பேச விஸ்வா தயக்கப் பட்டதால நான் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டுடன் பேச ஏற்பாடு செய்யட்டுமான்னு கேட்டேன். அதுக்கு அவர் உங்ககூட பேசுவதை விரும்புவதா சொன்னார்"

ராம், "டாக்டர், இன்னமும் நீங்க சொல்வதை என்னால் நம்ப முடியல. நீங்க நினைக்கற மாதிரி விஸ்வா நிச்சயம் எதாவது ஒரு விதத்தில் காரணமா இருந்து இருக்கணும். அவன்கிட்டே இருக்கும் அளவுக்கு இல்லைன்னாலும் வனிதா கூடவும் நான் ரொம்ப பாசமா இருக்கேன். அவளும் என் கூட அப்படித்தான். அவன் குழந்தைங்க ரெண்டும் என் குழந்தைங்க மாதிரி நான் பாசமா இருக்கேன்"

அமுதா, "சோ, ராம், உங்களால் ஒரு மனோதத்துவ மருத்துவர் மாதிரி Non-judgemental ஆக அணுக முடியுமா"

ராம், "நிச்சயம் பாரபட்சம் இல்லாமல் என்னால் விஸ்வாகூட பேச முடியும்"

அமுதா, "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் ராம்"

ராம், "ஓ.கே டாக்டர். விஸ்வா கூட பேசற ஒவ்வொரு விஷயத்தையும் நான் உங்ககிட்டே சொல்லறேன்"
மாலை ....

அமுதா, "வா விஸ்வா, சாரி ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வெச்சுட்டேனா?"

விஸ்வா, "இல்லை. வந்து பத்து நிமிஷம் கூட ஆகலை"

அமுதா, "வேறு ஒரு கப்பிள் அப்பாயிண்ட்மெண்ட் வாங்காம .. they just walked in. அஞ்சு நிமிஷம், போயிடுவோம்ன்னு சொல்லிட்டு வந்தாங்க. அவங்க கூட பேசி லேட் ஆயிடுச்சு"

விஸ்வா, "யாரு?"

அமுதா, "சாரி, நீ அவங்களை பார்த்து இருக்க மாட்டே. வெளியில் யாராவுது வெயிட் பண்ணிட்டு இருந்தா என்னுடன் பேசிட்டு இருப்பவங்களை இந்த வழியா அனுப்புவேன்" என்றபடி அந்த அறையில் இருந்த மற்ற ஒரு கதவைக் காட்டினார்

அமுதா, "Just to protect their privacy. அவங்களுதும் ஒரு டைவர்ஸ் கேஸ்தான். My recent victory in setting right a nearly broken marriage. இந்தப் பக்கம் வந்தோம் தேங்க் பண்ணிட்டுப் போலாம்ன்னு வந்தோம்ன்னு சொல்லிட்டு வந்தாங்க. அது இதுன்னு பேசி அவங்க போக அரை மணி நேரம் ஆயிடுச்சு"

சலனமற்ற முகத்துடன் விஸ்வா, "ம்ம்ம்"

அமுதா, "So, how do you feel today? நைட்டு நல்லா தூங்க முடிஞ்சுதா?"

விஸ்வா லேசாகச் சிரித்த படி, "ரெண்டு லார்ஜுக்கு மேல் தேவையா இருக்கலை"

அமுதா, "I suppose two larges for a healthy man like you is Ok. ஆனா, அதுக்குத் தகுந்த சாப்பாடும் தூக்கமும் வேணும். ஒழுங்கா சாப்பிடறையா?"

விஸ்வா, "Yes. In fact ... வீட்டில் குழந்தைகளோட நைட்டு டின்னர் சாப்பிட்டேன் மறுபடி காலைலயும் அவங்களோட ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டேன்"

வனிதா அவன் வீட்டில் சாப்பிடுவது இல்லை என்றது நினைவுக்கு வந்தது ...

அமுதா, "Vanitha didn't join you?"

விஸ்வா, "எப்பவும் அவங்க ரெண்டு பேரையும் சாப்பிட வெச்சுட்டு அதுக்குப் பிறகுதான் நாங்க ரெண்டு பேரும் சாப்பிட உட்காருவோம்"

அமுதா, "வனிதா சாப்பிட்டாளா?"

விஸ்வா முகத்தில் சிறு குற்ற உணற்வு படற, "தெரியலை"

அமுதா, "அவ மேல உனக்கு இருக்கும் கோவம் எனக்குப் புரியுது. ஆனா, அவ உன் குழந்தைகளில் அம்மா. அவ ஒழுங்கா சாப்பிட்டுத் தூங்கலைன்னா அது அவள் உடல்நலனைப் பாதிக்கும். இல்லையா?"

தலை குனிந்த விஸ்வா மேலும் மௌனம் காத்தான்.

அமுதா, "டைவர்ஸ்ஸுக்குப் பிறகு உன் மகன் சந்தோஷமா இருக்கணும்ன்னா வனிதா அவன் கூட இருக்கும் போதாவுது சந்தோஷமா, உற்சாகத்தோட இருக்கணும். இல்லையா?"

விஸ்வா, "எஸ்"

அமுதா, "அதுக்காகவாவுது அவ கூட நீ சகஜமா பேசலாம் இல்லையா?"

விஸ்வா, "ஆனா என்னால அவகூடப் பேச ஆரம்பிச்ச மறுகணம் அவ செஞ்ச காரியம் மனசில் வருது. கடைசியா நான் அவளை சந்திரசேகருடன் பார்த்தது, கேட்டது இது எல்லாம் ஞாபகம் வந்து ரொம்ப கோவம் வந்துடுது. குழந்தைகள் இருக்கும் போது வேண்டாம்ன்னுதான் நான் அவகூட பேசறது இல்லை"


அமுதா, "சரி. விடு. We will visit that topic later. இப்போ நாம் நீ PMLஇல் வேலைக்கு சேர்ந்த பிறகு நடந்தவைகளில் கவனம் செலுத்தலாம். ஓ.கே?"

விஸ்வா, "நீங்களே don't jump the gun அப்படின்னு சொல்லிட்டு. நடுவில் இருந்த ஒரு மாசத்தைப் பத்தி பேசாமல் அதுக்குப் பிறகு நடந்ததைப் பத்தி பேசலாங்கறீங்களே?"

அமுதா, "எஸ். விஸ்வா, முந்தாநாள் நான் உனக்கு இந்த கவுன்ஸிலிங்கில் நாலு கட்டம் இருக்குன்னு சொன்னேன் இல்லையா? இப்போ முதல் கட்டத்தில் இருக்கோம். வனிதா முதலில் தவறிய அந்த ஒரு மாசத்தைப் பத்தியும் உனக்கு விஷயம் தெரிந்ததற்கு முன் கடந்த ஆறு மாசங்களைப் பத்தியும் அடுத்த கட்டத்தில் பேசலாம்"

விஸ்வா, "ஏன்?"

அமுதா, "நடந்தவைகளை நினைச்சுப் பார்த்த பிறகு, அப்படி நடந்ததுக்கு உங்க ரெண்டு பேர் தரப்பிலும் என்னென்ன காரணங்கள் இருந்ததுன்னு அலசுவது சுலபம். Don't you agree"

விஸ்வா, "என் தரப்பில் என்ன காரணம் இருக்கு?"

அமுதா, "இருக்கலாம். எதுவும் இல்லாமலும் இருக்கலாம். விஸ்வா, ஒருத்தர் தவறு செய்வதற்கு அவங்களா கற்பிச்சுக்கற காரணங்களுடன் மற்றவங்கனால உருவாகும் காரணங்களும் இருக்கும். அதை நீங்க ரெண்டு பேருமே புரிஞ்சுக்காம இருக்கலாம். என்னை நம்பு. ப்ளீஸ்"

கண்களில் கோபம் கொப்பளிக்க விஸ்வா, "It sounds like witch hunt to me. இல்லாத காரணத்தைக் கண்டுபிடிச்சு என்னையும் கில்டியா ஃபீல் பண்ண வைக்கற மாதிரி இருக்கு"

அமுதா, "விஸ்வா, என் அனுபவத்தை நீ ரொம்ப கம்மியா எடை போடறே. பரவால்லை. உன் மேல் எந்தத் தவறும் இல்லைன்னா நிச்சயம் உன்னை எந்த விதத்திலும் கில்டியா ஃபீல் பண்ண வைக்க மாட்டேன். ப்ராமிஸ். ஓ.கே? இந்த கவுன்ஸிலிங்கின் வரை முறைகள் அப்படி. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ"

சிறிது நேரம் மௌனம் காத்த விஸ்வா, "அடுத்த கட்டத்திலும் இதே மாதிரி என்னையும் வனிதாவையும் தனித் தனியா சந்திச்சுப் பேசுவீங்களா?"

அமுதா, "ஏன் கேட்கறே?"

விஸ்வா, "அவ சொல்லும் காரணங்களை எப்படி நான் நம்பறது? அவளே எதாவுது நினைச்சுட்டு அதை காரணம்ன்னு சொன்னா? Now I don't trust her"

அமுதா, "முதலில் ரெண்டு பேரோடும் தனி தனியாதான் பேசப் போறேன். அதிலும் அவகூடத்தான் முதலில் பேசுவேன். அவ செஞ்ச தவறுக்கு அவ மனசில் சில காரணங்கள் இருக்கலாம். அவ யோசிக்காத விஷயமும் காரணமா இருக்கலாம். அப்படிப் பட்ட விஷயங்களை அவளுக்கு தெளிவு வரும்படி சுட்டிக் காட்டுவேன். நீ நினைக்கற மாதிரி எதாவுது பொய்யான காரணத்தை அவ சொன்னா அது பொய்ன்னு என்னால சுலபமா தெரிஞ்சுக்க முடியும். அவளுக்கு அதை உணர்த்தவும் முடியும். Don't worry. அவ இருக்கும் நிலையில அவள் என்னிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. Do you agree with me?"

விஸ்வா, "I guess so. அதுக்குப் பிறகு என்னோடு பேசுவீங்களா?"

அமுதா, "எஸ், அவ தவறுக்கான காரணங்களை உன்னிடம் பகிர்ந்து கொள்வேன். அதற்குப் பிறகு அதில் உன் தவறுகள் எதாவுது இருக்கான்னு உன்னையே அலசிப் பார்க்கச் சொல்வேன். உன் தவறுகள்ன்னு உன் மனசு ஏற்றுக் கொண்டால் மட்டும் அதன் காரணங்களை ஆராய்ந்து பார்ப்போம். அதற்குப் பிறகு உன்னிடம் வனிதாவின் தவறுகளையும் அதன் காரணங்களையும் பகிர்ந்துட்ட மாதிரி அவகிட்டே உன் தவறுகளையும் அதன் காரணங்களையும் பகிர்ந்து கொள்வேன். சரியா?"

விஸ்வா, "ஓ.கே. அதுக்கு அடுத்த கட்டம் மன்னிப்புன்னு சொன்னீங்க. தவறுகளையும் அதன் காரணங்களையும் கேட்ட உடனே மன்னிச்சுட முடியுமா?"

அமுதா, "என் வாயால் அதை நீ கேட்டா நிச்சயம் முடியாது. அதனால உங்க ரெண்டு பேரையும் நீங்க செஞ்ச தவறுகளையும் அதுக்கான காரணங்களையும் மனம் திரந்து பேச வைப்பேன். நடந்தது நடந்துடுச்சு. அதை மறைச்சு ஓடி ஒளியறதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. வெளிப்படையா உனக்குத் தெரியும் தவறு ஒண்ணுதான். ஆனா உனக்குத் தெரியாம அவ மனசுக்குள்ளே எத்தனை நடந்து இருக்கோ. அதை எல்லாம் வெளியில் கொண்டு வரணும். அதே மாதிரி வெளிப்படையா உனக்குத் தெரிந்ததைத் தவிற அந்தத் தவறைச் சார்ந்த விஷயங்களை உன் மனசில் நீ நிறைய அனுமானம் செஞ்சுட்டு இருப்பே. ஆனா உண்மையா நடந்தது என்னன்னு உனக்குத் தெரிய வைக்கணும். கசப்பான உண்மைகளாகத் தான் இருக்கும் ஒத்துக்கறேன். ஆனா, அதை ஜீரணிக்கலைன்னா மன்னிப்புக்கு இடமே இருக்காது"

விஸ்வா, "ஓ.கே"

அமுதா, "சோ, How was your life after you joined PML?"



விஸ்வா, "முதல் மூணு மாசம் ரொம்ப hecticஆ இருந்தது. I wanted to familiarize myself with the environment quickly. முதல் ஒன்றரை மாசம் வரைக்கும் ஒரு நாளைக்கு பத்து பனிரெண்டு மணி நேரம் வேலையில் மூழ்கி இருந்தேன். ஆஃபீஸைத் தவிற ஃபாக்டரி அப்பறம் வேர் ஹவுஸ் இந்த ரெண்டு இடத்துக்கும் போய் அங்கே இருப்பவர்களோட நல்லா பழகி எங்க கம்பெனியில் நடக்கறது எல்லாத்தையும் தெரிஞ்சுட்டேன்"

அமுதா, "ஏற்கனவே உனக்கு வனிதா சொல்லலையா?"

விஸ்வா, "அது வரைக்கும் எக்ஸிகியூடிவ் அஸிஸ்டண்ட் ஆக இருந்ததால் எம்.டி, போர்ட் மெம்பர்ஸ் இவங்க கண்ணோட்டத்தில் கம்பெனியில் நடப்பது எல்லாம் அவளுக்குத் தெரிஞ்சு இருந்தது. அதை எல்லாம் வனிதா எனக்கு முன்னாடியே சொல்லியும் இருந்தா. நானும் சேர்ந்த நாளில் இருந்து சந்திரசேகர், அப்பறம் எங்க ப்ரொடக்ஷன் மேனேஜர், ஃபைனான்ஸ் மேனேஜர் இவங்க எல்லோருடனும் தினமும் கம்பெனி விஷயங்களைப் பத்தி பேசிப் பழகியதால அவங்க கண்ணோட்டத்தில் கம்பெனியின் நடவடிக்கைகளைப் பத்தி தெரிஞ்சுட்டேன். ஆனா பல விவரங்கள் அடிமட்டத்தில் இருப்பவர்களோட பேசிப் பழகும் போதுதான் தெரியவரும்"

அமுதா, "ம்ம்ம் .. முதலாளிகளின் கண்ணோட்டத்தைப் பத்தி 
வனிதா மூலம் தெரிஞ்சுட்டு அடிமட்டத்தில் இருப்பவர்களின் கண்ணோட்டத்தை அவங்க கூட பழகி தெரிஞ்சுட்டே. I like your approach. உன்னுடைய ஆத்மார்த்த மேனேஜ்மெண்ட் குரு யார் Sun Tzuவா?"

(Sun Tzu - சுன் ட்ஸு - ஒரு சீனத் தளபதி. அவர் எழுதிய Art of War (போரின் கலை) இன்னமும் நிர்வாகவியலில் ஒரு பொக்கிஷமாகப் போற்றப் பட்டு வருகிறது. நம் நடைமுறையில் இருக்கும் பல பழமொழிகள், All is fair in love and war உட்பட அந்தப் புத்தகத்தில் இருந்த வந்தன)

அமுதாவின் படிப்பறிவிலைப் பற்றி வியப்பில் முகம் மலர்ந்த விஸ்வா, "எஸ். I really admire your vast knowledge. எவ்வளவு படிச்சு இருக்கீங்க?"

அமுதா, "தமிழில் ஒரு பழமொழி இருக்கு. "ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது" அப்படின்னு. அந்த மாதிரி நான்"

விஸ்வா புரியாமல் தலையை சொறிய ...

அமுதா, "Oh don't bother. பெங்களூரில் பிறந்து வளர்ந்த உனக்கு அது தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்லை. It basically emphasizes the importance of practical experience over bookish knowledge. சரி, அப்பறம் உன் லைஃப் எப்படிப் போயிட்டு இருந்தது? வனிதாவுக்கும் உன் அளவுக்கு வேலை பளு இருந்ததா?"

விஸ்வா, "நான் வேலைக்கு சேர்ந்த சமயம். வனிதா அஸிஸ்டண்ட் சேல்ஸ் அக்கவுண்ட்ஸ் மேனேஜர் (Assistant Sales Accounts Manager) வேலைக்கு மாத்தினாங்க. அவளே கேட்டு மாத்திட்டதா சொன்னா. நான் எப்படியும் ரொம்ப பிஸியா இருப்பேன். அதனால அவ ஒரு 9 to 5 ஜாப் வேணும்ன்னு அதுக்கு மாத்திட்டதா சொன்னா. நானும் அதை நம்பினேன்"

அமுதா, "ஏன் இப்போ அதை நம்பலையா?"

விஸ்வா, "ம்ம்ஹூம். மேலோட்டமா அவங்க ரெண்டு பேருக்கும் இடையே இருக்கும் நெருக்கம் மத்தவங்க கண்ணுக்கு, முக்கியமா என் கண்ணுக்குத் தெரியக் கூடாதுன்னு மாத்திட்டா"

அமுதா, "விஸ்வா, அவ உனக்கு ஏற்படுத்திய மன வேதனையினால் நீ அவ மேல வெச்சு இருந்த நம்பிக்கை (Trust) மிகவும் பாதிக்கப் பட்டு இருக்கு. அதுக்காக, நடந்த ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு புது அர்த்தம் கற்பிக்கப் பார்க்காதே. அவளோட அப்போதைய நடத்தைகள் ஒவ்வொண்ணையும் ஒரு புது அர்த்தத்தோட பார்க்காதே. நிச்சயம் அடுத்த கட்டத்தில் நடந்ததை எல்லாம் அலசிப் பார்க்கப் போறோம். அப்போ உன் மனசில் இருக்கும் சின்னச் சின்ன சந்தேகங்களுக்கு நிச்சயம் விடை கிடைக்கும். ப்ளீஸ்."

விஸ்வா மௌனம் காத்தான் ... 


அமுதா, "சரி விடு. எப்போ உங்க குழந்தை பெத்துக்க முடிவு எடுத்தீங்க. I suppose ... அது வரைக்கும் தள்ளிப் போட்டுட்டு இருந்தீங்க இல்லையா?"

விஸ்வா, "ஒரு நல்ல நிலைமைக்கு வரும் வரை குழந்தைங்க வேண்டாம்ன்னு தள்ளிப் போட்டுட்டு இருந்தோம். வனிதாவுக்கு எப்ப வேணும்ன்னாலும் ஓ.கேன்னு சொல்லி இருந்தா. நான் தான் தள்ளிப் போட்டேன்"

அமுதா, "ம்ம்ம் ... அவ கருத்தடை மாத்திரை எதுவும் எடுத்துக்கலைன்னு வனிதா சொன்னா"

விஸ்வா, "PMLஇல் வேலை கிடைச்சதுக்கு அப்பறம் நான் தள்ளிப் போட விரும்பலை. சோ, நான் எந்த பிரிகாஷனும் எடுத்துக்கலை"

அமுதா, "You mean using condoms?"

விஸ்வா, "ஆமா. நான் வேலையில் சேர்ந்து ஒன்றரை மாசத்தில் அவ கர்ப்பமா இருக்கான்னு தெரிஞ்சுது"

அமுதா, "Was that a happy moment?"

விஸ்வா, "It was definitely for me. எனக்கு அது நிச்சயம் ரொம்ப சந்தோஷமான தருணம். வனிதாதான் ஏனோ எல்லாம் நல்ல படியா முடியணும்ன்னு ரொம்ப பதட்டப் பட்டா"

அமுதா, "முதல் பிரசவம். அதை ஏத்துக்கற, ஃபேஸ் பண்ணும் விதம் ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடும். சில பெண்கள் ரொம்ப பதட்டத்தோட இருப்பாங்க. அதுவும் உங்க குடும்பத்தில் இரட்டைப் பிறப்புக்களுக்கு வாய்ப்பு ரொம்ப அதிகம். அந்த பயமா இருந்து இருக்கும்"

விஸ்வா, "May be. இரட்டைக் குழந்தைங்கன்னு தெரிஞ்சதுக்குப் பிறகுதான் அவளோட டென்ஷன் கொஞ்சம் கம்மி ஆச்சு. ரெண்டு சிசுவும் நல்லா வளர்ந்துட்டு இருக்குன்னு தெரிஞ்சதுக்குப் பிறகு அவ ரொம்ப ஹாப்பியா ஃபீல் பண்ணினா"

அமுதா, "ஓ, ரெட்டைக் குழந்தைகள்ன்னா நாலு மாசத்திலேயே ட்ரான்ஸ்ஃப்யூஷன் (Transfusion) பிரச்சனை எதுவும் இருக்குதான்னு தெரிஞ்சுக்க டாக்டர் அல்ட்ரா ஸ்கேன் எடுத்துக்கச் சொல்லி இருப்பாங்களே"

Twin-to-twin transfusion - இரட்டை சிசுக்களுக்கு இடையே இரத்தப் பரிமாற்றம். இப்படிப் பட்ட நிலைமை வர வாய்ப்புக்கள் அரிது. இரட்டையர் உடலோடு உடல் ஒட்டிப் பிறப்பதும் இந்தக் காரணத்தினாலே. அப்படிப் பட்ட நிலை வந்தால் அது இரு சிசுக்களையும் பாதிக்கும். லேசர் கதிர்கள் மூலம் சில இரத்தக் குழாய்களை அடைத்து இரு சிசுக்களுக்கும் தாயிடம் இருந்து தனித்தனியே இரத்தம் வரும் படி செய்து இத்தகைய நிலையை சரி செய்யும் மருத்துவம் சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.

விஸ்வா, "ஆமா, நாலு மாசம் கழிச்சு அல்ட்ரா ஸ்கேனில் பிறக்கப் போறது இரட்டைக் குழந்தைகள்ன்னு அதுவும் பெண் குழந்தை ஆண் குழந்தை ரெண்டும் அப்படின்னு தெரிஞ்சதுக்குப் பிறகு ரொம்ப சந்தோஷப் பட்டா. அவளோட அண்ணனுக்கும் அவளுக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். ரொம்ப நெருக்கம் கிடையாது. எங்க அப்பாவும் அவளோட அம்மாவும் அவளுக்கு ரோல் மாடல்ஸ். அந்த மாதிரி எங்க குழந்தைகளும் இருக்கணும்ன்னு சொல்லிட்டே இருந்தா"

அமுதா, "அவ முழுகாம இருந்தபோது நீ வேலையில் ரொம்ப பிஸியா இருந்தியா?"

விஸ்வா, "ஆமா. ஆனா நான் முடிஞ்ச வரை அவகூட ரொம்ப நேரம் இருப்பேன். அடுத்த அஞ்சு மாசமும ... In fact, நான் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து ரொம்ப அன்னியோன்னியமா இருந்தோம் ... "

அமுதா, "You mean ... " என்று உள் அர்த்தத்துடன் கேட்க

விஸ்வா, "ஆமா, அப்போ எங்களுக்கு நடுவே ஒரு புது க்ளோஸ்னஸ் வந்தது. எந்த விதத்திலும் அவ சங்கோஜப் படலை ... " என்றவாறு நெளிந்தான்

விஸ்வா மேலும் அவர்களது உறவைப் பற்றி விவரிக்க சங்கோஜப் படுவதை உணர்ந்த அமுதா பேச்சை மாற்ற, "முழுகாம இருந்தப்போ கஷ்டப் பட்டாளா?"

விஸ்வா, "ம்ம்ம் ... ரொம்ப இல்லை. நாலாவுது மாசத்தில் கொஞ்ச நாள் ரொம்ப வாந்தி எடுத்தா. மத்தபடி கடைசி வரை எந்தப் பிரச்சனையும் இல்லை"

அமுதா, "தன்னை ஒழுங்கா கவனிச்சுட்டாளா?"

விஸ்வா, "ரொம்ப பொறுப்போட இருந்தா. முன்னே எல்லாம் ரொம்ப இம்பல்ஸிவ்வா இருப்பா. அவ மனசுக்குத் தோணின காரியம் எதுவானாலும் உடனே அதில் இறங்கிடுவா. ஆனா முழுகாமல் இருக்கும் போது என்ன சாப்பிடணும், என்னென்ன உடற் பயிற்சி செய்யணும் அப்படின்னு கேட்டுத் தெரிஞ்சுட்டு அதன் படி நடந்துட்டா. Till her ninth month we made it a point that she has regular exercises"

அமுதா, "என்ன எக்ஸர்ஸைஸ் பண்ணுவீங்க?"

விஸ்வா, "நிச்சயம் தினம் முக்கால் மணி நேரமாவுது நடப்போம். தவிற வாரத்தில் மூணு நாளாவுது ஸ்விம்மிங்க் போவோம்"

அமுதா, "எதாவுது காம்ப்ளிகேஷன்ஸ் இருந்ததா?"

விஸ்வா, "ம்ம்ம் ... அதிகமா எதுவும் இல்லை. கடைசி ஒரு மாசம் ரொம்ப நேரம் நிற்பதற்கும் நடப்பதற்கும் சிரமப் பட்டா. அப்போ நடப்பதை நிறுத்திட்டு ஸ்விம்மிங்க் மட்டும் செஞ்சோம்"

அமுதா, "How was the child birth?"

விஸ்வா, "ம்ம்ம் ... சுலபமாத்தான் இருந்ததது. பொதுவா இரட்டைக் குழந்தைகள்ன்னா சீக்கரமே பிரசவம் ஆயிடும்ன்னு டாக்டர் சொன்னாங்க. குறைப் பிரசவம் ஆனாலும் ஆகலாம்ன்னு சொல்லி இருந்தாங்க. இருந்தாலும் அவளுக்கு தானா வலி வரும் வரை வெய்ட் பண்ணலாம்ன்னு சொன்னாங்க. அந்த சமயம் அவளோட வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டு அங்கே தங்கி இருந்தோம். ஒன்பதாவது மாசத்தில் ஒரு நைட் ரெண்டு மணி வாக்கில் அவளுக்கு லேசா வலி வந்தது. By five my son came out after five minutes my daughter followed suite" என்று பெருமிதத்துடன் முடித்தான்.

அமுதா முகத்தில் சிறு வியப்புடன், "நீ பிரசவம் ஆன போது கூட இருந்தியா?"

விஸ்வா, "Of course! நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா ப்ளான் பண்ணி டாக்டர்கிட்டேயும் முன்னாடியே சொல்லி வெச்சு இருந்தோம்"

அமுதா, "வாவ்! How was your experience"

விஸ்வா, "என்னால விளக்க முடியாது"

மனைவிக்கு பிரசவம் ஆவது அதுவும் முதல் முறை ஒவ்வொரு கணவனுக்கும் மறக்க முடியாத, கணவன் மனைவிக்கு இடையே ஒரு இணை பிரியா பாலத்தை ஏற்படுத்தும் தருணம்.

இதை நன்கு உணர்ந்த அமுதா, "ஒவ்வொரு ஸ்டேஜா சொல்லு விஸ்வா"

விஸ்வாவின் மனத் திரையில் அந்த இரவு திரைப் படமாக ஓடத் தொடங்கியது ...

அருகில் படுத்து இருந்தவள் அவனை விட்டு விலகி எழுந்து அமர்ந்து இருப்பதை உணர்ந்த விஸ்வா, "ஹனி, என்ன ஆச்சு? எதுக்கு எழுந்து உக்காந்துட்டு இருக்கே?" என்றபடி பின்புறம் இருந்து அவளை அணைத்தான்

அவன் மேல் சாய்ந்தபடி வனிதா, "ம்ம்ம் ... வலிக்குது. But don't worry. லேசாத்தான்"

விஸ்வா, "இது அந்த வலிதானா?"

வனிதா, "Yes I am sure. I think your kids want to get out. ஹாஸ்பிடலுக்குப் போலாம்"

விஸ்வா, "ஒரே நிமிஷம் டார்லிங்க். நான் ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு வந்துடறேன்"

வனிதா, "ம்ம்ம் .." என்றபடி அவளும் எழ முயன்றாள்

விஸ்வா, "நீ உக்காந்துட்டு இரு நான் வந்துடறேன். ராமுக்கு மெஸ்ஸேஜ் பண்ணு" என்றவாறு அறைக் கதவைத் திறந்து உரக்க "அத்தை, மாமா வனிதா is having contractions" என்று கூவினான்

வனிதா, "அந்த பேக்"

விஸ்வா, "தெரியும்மா ..."

விஸ்வா ஒரு டீ ஷர்ட் ஜீன்ஸை அணிந்து பிரசவத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டியவற்றை நிரப்பி தயாராக வைத்து இருந்த டஃப்ஃபல் பேக் ஒன்றை தோளில் மாட்டிக் கொண்டு அவளைக் கைத்தாங்கலாக எழுப்பி நிறுத்தினான்.

விஸ்வா, "நடக்க முடியுமா. நான் தூக்கிக்கட்டுமா?"

வனிதா, "ஒண்ணும் வேண்டாம். I weigh like a hippo now. என்னால் நடக்க முடியும்"

அறையை விட்டு வெளியில் வருமுன் அரவம் கேட்டு வத்சலாவும் சுப்புவும் ஹாலுக்கு வந்து இருந்தனர்.

வத்சலா, "டேய், கண்ணம்மா. ரொம்ப வலிக்குதா?" என்று அவள் கேட்டு முடிக்கு முன் வாசலில் காலிங்க் பெல் ஒலித்தது.

விஸ்வா, "இதோ ராம் வந்துட்டான். அத்தை போலாம் வாங்க. மாமா நீங்க அப்பா அம்மாகூட வாங்க"

அரை மணி நேரக் கார் பயணம் ...

விஸ்வா, "Are you ok? ரொம்ப வலிக்குதா? Do you feel any liquid discharge?"

வலியினால் நெற்றி சுருங்கி இருந்தாலும் அவன் கரிசனத்தில் மயங்கிய வனிதா முகத்தில் அவள் ட்ரேட் மார்க் குறும்பு படற, "இல்லை. உங்க குழந்தைங்க I think அவங்க அப்பாவை மாதிரி ரொம்ப ப்ளான் பண்ணி வார்னிங்க் கொடுத்து இருக்காங்க"

கார் ஓட்டிக் கொண்டு இருந்த ராம், "டேய், Looks like it is a very well planned invasion of the world"

நால்வரும் சிரிக்க குலுங்கியதில் வலி அதிகரிக்க வனிதா, "ஓ, ப்ளீஸ் ராம். சிரிக்க வைக்காதீங்க" என்று முனகினாள்

கார் மருத்துவமனைக்குள் நுழையுமுன் வாசலில் ஒரு ஸ்ட்ரெச்சர் தயாராக வைக்கப் பட்டு இருந்தது ... நேராக பிரசவ அறைக்கு எடுத்துச் செல்லப் பட்டாள். அறை வாசலை அடைந்த விஸ்வாவை வரவேற்ற ஜூனியர் டாக்டர், "சீனியர் வந்துட்டு இருக்காங்க. பக்கத்து ரூமுக்குப் போய் உங்க கை கால் எல்லாம் நல்லா வாஷ் பண்ணிட்டு அங்கே இருக்கும் ஸ்டெரைல் ட்ரெஸ்ஸை போட்டுட்டு வாங்க"

சில நிமிடங்களில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அணியும் அங்கி, குல்லாய், சாக்ஸ் மற்றும் க்ளவுஸ் அணிந்த விஸ்வா பிரசவ அறைக்குள் நுழைந்தான். வனிதாவுக்கு ஜூனியர் டாக்டர் இன்ஜெக்ஷன் கொடுத்துக் கொண்டு இருந்தார்

விஸ்வா, "அது பிரசவ வலி தானா?"

ஜூனியர் டாக்டர், "யெஸ். ஸிம்டம்ஸ் எல்லாம் க்ளியரா இருக்கு. கான்ட்ராக்ஷன் (கருப்பை பிரசவத்தின் போது சுருங்கி சிசுவை வெளியில் தள்ளுவது) அதிகரிக்க இன்ஜெக்ஷன் கொடுத்து இருக்கேன்"

சில நிமிடங்களில் தொடங்கிய வலி அடுத்த இரண்டு மணி நேரத்தில் படிப் படியாக அதிகரிக்க, வனிதாவின் கைகளைப் பற்றியபடி அருகே நின்று இருந்தான். வனிதாவின் பார்வை விஸ்வாவை விட்டு அகலாமல் இருந்தது ...

விஸ்வா, "கொஞ்ச நேரம் டார்லிங்க். இப்போ இன்னும் கொஞ்ச நேரம்"

வனிதா, "எஸ். ஆனா முடியலைப்பா ... "

அப்போது உள்ளே நுழைந்த சீனியர் டாக்டர் வனிதாவை பறிசோதித்த பிறகு, "ஒண்ணும் பயப் படாதே வனிதா. You are doing good. இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ" என்றபடி மறுபடி அவ்விடத்தை விட்டு அகன்றார்

விஸ்வா, "டாக்டர் நீங்க இங்கே இருக்க வேண்டாமா?"

சீனியர் டாக்டர், "டோண்ட் வொர்ரி சார். இன்னும் அரை மணி நேரமாவுது ஆகும்"

அவர் சென்ற பிறகு விஸ்வா தன் செல் ஃபோனை எடுத்து ராமுக்கு ஸ்பீட் டயல் செய்து அவன் பதிலளித்த அடுத்த கணம், "டேய், What the hell is this? That gynic is going away"

வெளியில் நின்று இருந்த ராம் பதிலளித்ததை வனிதாவுக்கும் கேட்கட்டும் என ஸ்பீக்கர் ஃபோனை இயக்கினான்

ராம், "இதுக்குத்தான் நான் முதல்லயே சொன்னேன். I just spoke to her. Full contractions have not set in. Neither her water has broken"

விஸ்வா, "சரி. அப்ப ஸிசேரியன் வேண்டாமா?"

ராம், "லாஸ்ட் அல்ட்ரா சவுண்ட் படி உன் சன் தலையை முன்னால நீட்டிட்டு இருக்கான். சோ, ப்ரீச் ஆகலை. நிச்சயம் நார்மல் டெலிவரி செய்ய முடியும்ன்னு சொன்னாங்க. நீ கொஞ்ச நேரம் வெளியில் வந்து வெய்ட் பண்ணு"

அவசராக வனிதா, "நோ நோ .. அவர் இங்கேயே இருக்கட்டும்"

ராம், "வனி, நீ சொல்றதும் சரி. இங்கே அவனை என்னால் சமாளிக்க முடியாது"

விஸ்வா, "டேய், this not time to be funny"

ராம், "I understand your anxeity ... come on my war hero ... teach her how to face pain"

சட்டென ராம் சொன்னதின் உண்மையை உணர்ந்த விஸ்வாவின் முகத்தில் அவன் மனத்தில் தோன்றிய உறுதி படர்ந்தது ...

விஸ்வா, "ராம், கடைசி கான்ட்ராக்ஷன் வரும் வரை அவ ரிலாக்ஸ்டா இருந்தா பரவால்லையா"

ராம், "No issues ..."

விஸ்வா, "சரி .. அப்பறம் பேசறேன்" என்ற படி இணைப்பைத் துண்டித்தான் ..

வெளியில் ராம் அருகில் இருந்த நான்கு பெற்றோருக்கும் ஆறுதல் சொல்வதில் முனைந்தான் ...

விஸ்வா, "ஹனி, நான் சொல்லிக் கொடுத்தேன் ஞாபகம் இருக்கா ... டீப்பா ப்ரீதிங்க் எக்ஸர்ஸைஸ்? அதை இப்போ பண்ணணும்.. ஓ.கே?"

வனிதா, "ம்ம்ம் .. I will try"

அடுத்த அரை மணி நேரம் வனிதாவின் வலியும் விஸ்வாவின் இதயத் துடிப்பும் அதிகரிப்பதும் குறைவதுமாகக் கழிந்தது ... அவ்வப்போது வனிதாவின் முனகல்கள் லேசான கதறல்களாக மாறின. விஸ்வா பதட்டம் இல்லாத முகத்துடன் வனிதாவுக்கு ஆறுதலாக அவ்வப்போது அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை வலியை எதிர்கொள்ளச் செய்து கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் நர்ஸ் இன்டர்காமில் அழைத்ததும் சீனியர் டாக்டர் திரும்ப வந்து வனிதாவின் கால்களுக்கு இடையில் அமர்ந்தார்

சீனியர் டாக்டர், "வனிதா, புஷ் பண்ணும்மா. கம் ஆன்"

விஸ்வா நர்ஸுடன் சேர்ந்து வனிதாவின் வயிற்றை நீவியபடி, "ஹனி, புஷ் பண்ணு டார்லிங்க் ... கம் ஆன் ..."

வனிதாவின் கதறல் உச்ச ஸ்தாயிக்கு மாறி ஓரிரு நிமிடங்கள் நீடித்து அடங்கியது ... சில கணங்களில் உலகில் காலடியெடுத்து வைத்த தன் மகனின் அழுகை கேட்டது ..

சீனியர் டாக்டர், "இங்கே வாங்க விஸ்வா"

கருப்பப் பை நீரும் லேசான இரத்தமும் படிந்த அந்தச் சிசுவை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தவனின் கையில் நர்ஸ் ஒரு கத்தரிக் கோலைத் திணித்தாள்.

சீனியர் டாக்டர், "பார்த்து அலுங்காம அம்பலிகல் கார்டை கட் பண்ணுங்க. நர்ஸ் காமிச்சுக் கொடுங்க"

நர்ஸ் காட்டிய படி தொப்புள் கொடியை துண்டித்தான் . நர்ஸ் அந்தக் குழந்தையை கையில் எடுத்துக் கொள்ள சீனியர் டாக்டர் அடுத்த வருகையில் கவனம் செலுத்தினார்.

சீனியர் டாக்டர், "ம்ம்ம் .. வனிதாவை மறுபடி புஷ் பண்ண வையுங்க .. .கம் ஆன் வனிதா, புஷ், let us welcome your daughter next"

மறுபடி முனகிக் கொண்டு இருந்த தன் இணையின் அருகே வந்த விஸ்வா, "Come on honey .. இப்போ அந்த அளவுக்கு இருக்காது ... புஷ் பண்ணுட்டா ... "



அடுத்த இரு நிமிடங்களில் மறுபடி வனிதா கதறி அடங்க .. தன் மகளையும் அவள் தாயிடம் இருந்து பிரித்து விஸ்வா உலகுக்கு அறிமுகப் படித்தினான். வனிதா மயக்கமுற்று இருந்தாள்.

சீனியர் டாக்டர், "அவளுக்கு ரொம்ப ஸ்ட்ரெயினா இருக்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். குழந்தைங்க ரெண்டும் நான் எதிர்பார்த்ததை விட ஹெல்தியா இருக்கு. Congrats Viswa"
நடந்தவற்றை சொன்ன விஸ்வா, "இப்போ நினைச்சுப் பாத்தாலும் உடம்பு சிலிர்க்குது. As though I am the one who brought them into this world"

அமுதா, "உண்மையாவே அது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமா இருந்து இருக்கும். அப்போ, அந்த நிமிஷத்தில் வனிதாவைப் பத்தி உன் மனசில் என்ன தோணிச்சு"

விஸ்வா கண்கள் பனிக்க, "வலின்னா என்னன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, அதை நாமே வரவெச்சுக்கறது மகப்பேறில் மட்டும் தான் என்பதை உணர்ந்தேன். அவளுக்கு நன்றி சொல்லணும்ன்னு இருந்தது. I loved her a thousand times more that moment. எந்த அளவுக்கு கஷ்டப் பட்டான்னு நினைச்சு ரொம்ப க்ளோஸ்ஸா ஃபீல் பண்ணினேன்"



No comments:

Post a Comment