Wednesday, September 16, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 1


டாக்டர் அமுதா மணிவண்ணன் MBBS, DPM. PhD.

அன்பும் அமைதியும் வடியும் அழகான முகத்தோற்றம். முன் ஐம்பதுகளிலும் இளமை குன்றாத உடலமைப்பு இருப்பினும் பார்ப்பவர் கையடுத்துக் கும்பிடத் தோன்றும் கம்பீரம், பதவிசு. அவரது கணவர் மணிவண்ணன் ஒரு புகழ் பெற்ற தொழிலதிபர். பணத்துக்குப் பஞ்சமில்லாத வாழ்வு. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற குறிக்கோளுடன் தன் மணவாழ்கையில் கண்ட வெற்றியின் ரகசியங்களை தன் கல்வித்திறனுடன் மற்றவருக்குப் புகட்டி பல முறிந்து போன, முறியப் போகவிருந்த திருமணங்களின் விதியை மாற்றியமைத்தவர். பெங்களூர் நகரத்தில் திருமண கோர்ட் வளாகங்களில் முறிந்து போன மணவாழ்க்கைகளுக்கு புத்தூர் மருத்துவர் எனப் பெயர் பெற்றவர்.

அவரது கவுன்ஸல்லிங்க் செண்டரில் இருந்த ஒரு கலந்தாலோசனை அறை.

அவருக்கு எதிரில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் ... எல்லோராலும் விஸ்வா என்று அழைக்கப் படும் விஸ்வநாத் அமர்ந்து இருந்தான். ஆறடி உயரம், சற்றே கருத்த மாநிறம், பார்த்தவுடன் ராணுவத்தில் பணிபுரிபவன் அல்லது பணி புரிந்தவன் என்று அவன் முறுக்கேறிய உடலும் முடி வெட்டும் பரைசாற்றின. தான் கட்டிக் காத்த ஆறுவருட மணவாழ்க்கை தன் கண்முன்னே தவிடு பொடியாவதால் அவன் மனத்தைப் பிழிந்த துக்கம் முகத்தில் தெரியக் கூடாது என்ற அவன் பிர்யர்த்தனத்துக்கு அவனது ராணுவப் பயிற்சி உதவுவதை டாக்டர் அமுதா நன்கு உணர்ந்தார்.



அவனுக்கு அடுத்த இருக்கையில் வனிதா விஸ்வநாத் அமர்ந்து இருந்தாள். முப்பதிலும் முன் இருபதுகளை தாண்டாத, பிரம்மன் செதுக்கி வைத்த உடல் வாகு. பார்ப்பவரை சுண்டி இழுக்கும் வசீகர முகம். பல நாட்களாக அவள் அழுது புலம்பி தன் தூக்கத்தை தொலைத்துக் கொண்டு இருப்பதை அவள் முகத்தில் இருந்த சோகையும், வீங்கிய கண்களும் இரத்தச் சிவப்பாக சிவந்த மூக்கும் வெட்ட வெளிச்சமாக்கின. பல வருடங்களுக்கு முன் வனிதா சுப்ரமணியனாக பெங்களூர் செயிண்ட் ஜோஸப்ஸ் கல்லூரியில் வலம் வந்து கொண்டு இருந்த போது அக்கல்லூரி வாலிபர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு போயிருந்தாலும், பூனே ராணுவக் கல்லூரியில் இருந்த விஸ்வனாதனை நினைத்து ஒவ்வொரு நாளும் தன் பெயரை வனிதா விஸ்வநாத் என்று பல முறை எழுதியும் அவ்வாறே கையொப்பம் இட்டும் தன்னைப் பழக்கிக் கொண்டு இருந்தவள். ஆனால் இப்போது அந்தப் பட்டப் பெயர் தன்னிடம் இருந்து பறிக்கப் பட்டு தன் வாழ்க்கையே இருண்டு போவதை தவிற்க முடியாமல் பலியாட்டுக் களையுடன் இருந்ததும் டாக்டர் அமுதாவுக்குத் தெள்ளெத் தெளிவானது.

விஸ்வநாத் ஸ்ரீவத்சன் என்ற பெயரை அவர்களுடைய கேஸ் ஃபைலில் பார்த்தவுடன் யார் அந்த ஸ்ரீவத்சன் என்று விசாரிக்க அது தனக்கு ஒரு அளவுக்கு பழக்கம் ஆன டாக்டர் ஸ்ரீவத்சன் என்பதை அறிந்ததும் அவருடன் நடந்த தொலைபேசி உரையாடலை டாக்டர் அமுதா நினைவு கூர்ந்தார் ...

அமுதா, "ஹெல்லோ டாக்டர் நான் சைக்கியாட்ரிஸ்ட் அமுதா பேசறேன்"

ஸ்ரீவத்சன், "சொல்லுங்க டாக்டர். எப்படி இருக்கீங்க? மணிவண்ணன் சார் எப்படி இருக்கார்?"

அமுதா, "ஐ ஆம் ஃபைன் டாக்டர். அவரும் ஓ.கே"

ஸ்ரீவத்சன், "உங்ககிட்டே இருந்து ஃபோன் கால் வரும்ன்னு எனக்குத் தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரமா கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்க்கலை"

அமுதா, "அப்படின்னா நேரா விஷயத்துக்கு வர்றேன். ஏன் இந்த விவாகரத்து?"

ஸ்ரீவத்சன், "Honestly? I don't know. ரெண்டு பேரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க. என் தங்கையும், அதாவுது வனிதாவின் அம்மா, அவளும் என் ப்ரதர் இன் லாவும் ரொம்ப குழம்பிப் போயிருக்காங்க"

அமுதா, "ஓ, வனிதா உங்க தங்கை மகளா?"

ஸ்ரீவத்சன், "என் ட்வின் ஸிஸ்டரோட மகள்"

அமுதா, "ஓ அதான் இவங்களுக்கும் ட்வின்ஸ் பிறந்து இருக்கு"

ஸ்ரீவத்சன், "விஸ்வாவும் ட்வின்ஸில் ஒருத்தன்தான். அவனோட ப்ரதர்தான் டாக்டர் ராமமூர்த்தி"

இளம் வயதிலேயே புகழ் பெற்ற நியூரோ சர்ஜனான டாக்டர் ராமமூர்த்தியையும் கேஸ் ஃபைலில் பார்த்த விஸ்வனாதனின் புகைப் படத்தையும் நினைவு கூர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே உருவ ஒற்றுமை இல்லாததை உணர்ந்த அமுதா, "வாவ், மேல்-மேல் டைஸைகாட்டிக் ட்வின்ஸா (Male–male dizygotic twins - முழு உருவ ஒற்றுமை இல்லாத இரட்டைப் பிறவியர்)?"

ஸ்ரீவத்சன், "எஸ்"

அமுதா, "Sorry for the digression. சோ, அவங்களோடது அரேஞ்ச்ட் மேரேஜா?"

ஸ்ரீவத்சன், "நாட் அட் ஆல். என் தங்கைக்கு என் மகன்களில் ஒருத்தனுக்கு தன் மகளைக் கொடுக்கணும்ன்னு ரொம்ப ஆசை. எனக்கும் ஒரு அளவுக்கு அதில் ஒப்புதல் இருந்தது. ஆனா நாங்க எந்த முடிவும் எடுக்கும் முன்பே இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தட் ஈஸ், விஸ்வா ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தப்பவே. வனிதா அப்ப டெந்த் படிச்சுட்டு இருந்தா"

அமுதா, "வாவ். அப்படி இருந்தும் எதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து டைவர்ஸ் கேட்டு இருக்காங்க?"

ஸ்ரீவத்சன், "ரெண்டு பேரும் சேர்ந்து கேட்டாங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. .ரொம்ப வற்புறுத்திக் கேட்டப்ப என் தங்கைகிட்டே தப்பு தன் பேரில்தான் அப்படின்னு மட்டும் வனிதா சொல்லி இருக்கா"

அமுதா, "உங்ககிட்டே விஸ்வா எதுவும் சொல்லலையா?"

ஸ்ரீவத்சன், "இல்லை"

அமுதா, "டாக்டர் ராம்கிட்டே இதைப் பத்தி கேட்டீங்களா?"

ஸ்ரீவத்சன், "நிம்ஹான்ஸ் (Nimhans - டாக்டர் ராமமூர்த்தி பணியாற்றும் புகழ்பெற்ற மருத்துவமனை) அவனை ஒரு டெபுடேஷனில் யூ.எஸ் அனுப்பி இருக்கு. இன்னும் ஒரு மூணு வாரத்தில் திரும்பி வரப் போறான். விஸ்வாகூட ஃபோனில் பேசி இருக்கான். வற்புறுத்திக் கேட்டப்ப நீ திரும்பி வா அப்பறம் சொல்லறேன்னு சொல்லியிருக்கான்."

அமுதா, "சோ, ஐ திங்க், டைவர்ஸ் வேணும்ன்னு கேட்டது உங்க சன். வனிதா அதுக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கா. What is your opinion?"

ஸ்ரீவத்சன், "எனக்கும் அப்படித்தான் தோணுது"

அமுதா, "உங்களுக்குத் தெரிஞ்சு அவங்களுக்கு இடையே மனஸ்தாபம் இருந்தது உண்டா?"

ஸ்ரீவத்சன், "நோ சான்ஸ். அவங்க ரெண்டு பேரும் ஒரு மாடல் கப்பிள்ன்னு சொல்லலாம். வனிதாவும் சரி விஸ்வாவும் சரி ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப விட்டுக் கொடுப்பாங்க. இவ்வளவு வருஷத்துக்குப் பிறகும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா லவ் பண்ணினாங்க. நாங்க எல்லோரும் லவ் பர்ட்ஸ்ன்னு கிண்டல் அடிக்கற அளவுக்கு. இன்னமும் லவ் பண்ணிட்டுத்தான் இருக்காங்க அப்படிங்கறது என் கணிப்பு. I think they both still are deeply in love with each other."

அமுதா, "பிறகு ஏன் இந்த டைவர்ஸ்?"

ஸ்ரீவத்சன், "ஜட்ஜ் உங்ககிட்டே கவுன்ஸிலிங்க் போகணும்ன்னு சொன்னதும் நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன். எப்படியாவுது இந்த டைவர்ஸை தடுத்து நிறுத்தினீங்கன்னா நான் உங்களுக்கு ஆயுசுக்கும் கடமை பட்டு இருப்பேன்"

அமுதா, "ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர்" என்று விடை பெற்றார்.

எதிரில் அமர்ந்து இருந்த இளம் தம்பதியை நட்புடன் கூடிய புன்முறுவலுடன் பார்த்து ...

அமுதா, "மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் விஸ்வநாத், மியூச்சுவல் கன்ஸெண்ட் அப்படின்னு விவாகரத்துக்கு விண்ணப்பிச்சு இருக்கீங்க. பார்த்தா மேட் ஃபார் ஈச் அதர் கபிள்ன்னு சொல்ற மாதிரி இருக்கீங்க. போதாக் குறைக்கு உங்களோட நாலே வயசான உங்க ரெட்டைக் குழந்தைங்க. அவங்களையும் ஆளுக்கு ஒருத்தரா பிரிச்சுக்க ஒத்துட்டு இருக்கீங்க. வேற ஏதோ காரணத்தை மறைச்சு அப்படி விண்ணப்பிச்சு இருப்பதா ஃபேமிலி கோர்ட் ஜட்ஜ் நம்பறார். இதை எனக்கு விளக்கி உங்களுக்கு விவாகரத்துக் கொடுக்க மனசு வரலைன்னு அவரே எனக்கு ஃபோன் பண்ணி இந்தக் கேஸை எடுத்துக்கச் சொல்லி ரிக்வஸ்ட் பண்ணினார். உங்க ரெண்டு பேரையும் நேரில் பார்த்ததுக்கு பிறகு எனக்கும் இந்த விவாகரத்து சரியில்லைன்னுதான் தோணுது. சோ, உங்களுக்கு இந்த விவாகரத்து வேணும்ன்னா எங்கிட்ட நீங்க எதையும் மறைக்கக் கூடாது. சைக்கியாட்ரி படிச்சுட்டு ரொம்ப வருஷம் ப்ராக்டீஸ் பண்ணினதுக்கு அப்பறம் தான் நான் மேரேஜ் கவுன்ஸிலர் ஆனேன். பொய் சொன்னா என்னால சுலபமா கண்டு பிடிச்சுட முடியும். Hope I made myself clear" என்று ஆணித்தரமாக முடித்தார்.

தலை குனிந்தவாறு வனிதா, "எஸ் மேம்"

முகம் இறுகிய விஸ்வா, "எஸ் மேம் லவுட் அண்ட் க்ளியர்"

அமைதி வழியும் புன் சிரிப்புடன் அமுதா, "Stated like a true army man. நீங்க இன்னமும் ஆர்மில இருக்கீங்களா?" என்று சகஜ நிலைக்குக் கொண்டு வர முயன்றார்.

விஸ்வா, "இல்லை மேம், இப்போ ஐ ஆம் எ ஸிவிலியன்"

அமுதா, "ஏன், ஆர்மில இருக்கப் பிடிக்கலையா?"

விஸ்வா, "அது ஒரு பெரிய கதை ... In fact, ஆர்மிலயே இருந்து இருந்தா இந்த சூழ்நிலையில் உங்களை சந்திச்சு இருக்க மாட்டேன்" என்று இழுத்தான்.

அமுதா, "இட்ஸ் ஓ.கே, இந்த கவுன்ஸிலிங்கில் அதை எல்லாம் எங்கிட்ட பகிர்ந்துக்க நிறைய நேரம் ஒதுக்கறேன். அப்போ சொல்லுங்க" என்ற பிறகு தொடர்ந்து "என்ன, ஆரம்பிக்கலாமா?"

விஸ்வா, "எஸ்"

வனிதா, "ம்ம்ம்"

அமுதா, "முதலில் உங்களை எப்படிக் கூப்பிடறது? உங்களை விட நான் வயசில் பெரியவதான். ஒருமையில் கூப்பிட்டா பரவால்லையா?"

விஸ்வா, "அதைத் தான் நான் விரும்புவேன்"

வனிதா, "எஸ் மேம்"

அமுதா, "நீங்களும் என்னை பேர் சொல்லித்தான் கூப்பிடணும். வேணும்ன்னா நீ வா போன்னு ஒருமையில் பேசினாலும் பரவால்லை. உங்களை மாதிரி இளம் தம்பதியர் என்னை அப்படிக் கூப்பிட்டா நானும் கொஞ்சம் இளமையா ஃபீல் பண்ணுவேன்" என்று சிலாகிக்க, அந்தத் தம்பதியரிடம் இருந்து சிறு புன்னகையே அவருக்கு பதிலாகக் கிடைத்தது.

அவர்கள் இருவரில் சோகம் அவர் மனத்தை உறுத்தியது ..

அமுதா, "மொதல்லே இந்த கவுன்ஸிலிங்க் எப்படி நடக்கப் போகுதுன்னு உங்களுக்கு விளக்கறேன். மொத்தம் பனிரெண்டு வாரங்கள் வரை இந்த கவுன்ஸிலிங்க் நீடிக்கலாம். முதலில் உங்க ரெண்டு பேர் கூட தனித்தனியா பேசுவேன். ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை மீட் பண்ணி பேசுவீங்க. தேவை இருந்தா மறுபடியும் தனித்தனியா பேசவும் சொல்வேன். ஓ.கே?"

கணவன் மனைவி இருவரும் தலையசைக்க டாக்டர் அமுதா தொடர்ந்தார், "சில கண்டிஷன்ஸ். உங்க ரெண்டு பேருக்கு நடுவில் எந்த வித மனஸ்தாபம் இருந்தாலும் அதை என்னுடன் தனியா பேசும் போது உங்க கோப தாபத்தை எல்லாம் கொட்டலாம். கத்தலாம். கூச்சல் போடலாம். உணற்சி வசப் பட்டு அழலாம். ஆனா உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா கூப்பிடும் போது மனசில் கோபமோ வருத்தமோ இருந்தாலும் அந்த வருத்தத்தை வார்த்தைகளால் மட்டும்தான் வெளிப்படுத்தணும். அப்போ கோபப் பட்டு உணற்சி வசப் பட்டு சத்தம் போடுவதை சண்டை போடுவதை அழறதை நான் அனுமதிக்க மாட்டேன். You both will behave as responsible grown up adults. சரியா?"

விஸ்வா, "சில விஷயங்களை பேசும் போது உணற்சி வசப் படுவதை தவிற்க முடியலைன்னா?"

அமுதா, "டீவில சொல்ற மாதிரி ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்குவோம். உணற்சிகளை கட்டுப் படுத்தும் மன நிலை வந்த பிறகு தொடருவோம். என்ன?"

விஸ்வா, "ஓ.கே"

அமுதா, "சரி. பொதுவா முதலில் மனைவியுடன் என் கவுன்ஸிலிங்க் தொடங்கும். சோ விஸ்வா, இந்த சிட்டிங்க் வனிதாவுடன். மே பீ, அடுத்த ஒண்ணு ரெண்டு சிட்டிங்க்கும் அவகூட இருக்கலாம். நீங்க எப்ப வரணும்ன்னு என் செக்ரடரி ஃபோன் பண்ணி சொல்லுவா"

விஸ்வா முகத்தில் எரிச்சலைக் காட்டி, "How long this charade is going to go on (இன்னும் எத்தனை நாளுக்கு இந்த நாடகம் நடக்கப் போகுது?")"

அடுத்த கணம் முகத்தில் கோபம் தாண்டவம் ஆட அமுதா குரலை உயர்த்தி, "You take that back young man! நான் மொதல்ல சொன்ன மாதிரி இங்கே நான் சொன்ன படி நீ கேட்டாத்தான் இந்த கவுன்ஸிலிங்க் நடக்கும். வேண்டாம்ன்னா இப்போ இந்த நிமிஷமே ஜட்ஜுக்கு ஃபோன் பண்ணறேன். அவர் வேற யாரையாவுது ரெஃபர் பண்ணட்டும். இல்லைன்னா போதுமான அளவுக்கு அவர் கன்வின்ஸ் ஆகலைன்னு சொல்லி டைவர்ஸ் கொடுக்க முடியாதுன்னு தீர்ப்பு அளிக்கட்டும். What do you say?"

விஸ்வா, "I apologise. நாங்க ரெண்டு பேருமே விரும்பி கேட்கும்போது ஏன் இப்படி இழுத்து அடிக்கணுங்கற ஆதங்கத்தில் கேட்டேன்"

அமுதா, "விரும்பிக் கேட்டீங்களா? உங்க முகத்தை போய் கண்ணாடியில் பாருங்க. உங்க மனசில் இருக்கும் துக்கம் உங்க முகத்தில் எழுதி ஒட்டி இருக்கு. இவ முகத்தையும் பாருங்க. பலியாட்டுக் களை சொட்டுது. உங்களுக்கே தெரியும் ஏன் ஜட்ஜ் வேண்டாம்ன்னு சொன்னார்ன்னு. நீங்க ரெண்டு பேரும் எதையோ மறைக்கறது நல்லா தெரியுது. அது என்னைத் தவிற வேறு யாருக்கும் தெரிய வராதுன்னு என்னால் உங்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியும். சோ, ப்ளீஸ் கோ-ஆபரேட் வித் மீ. ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே. டாக்டர். உங்க செக்ரடரி காலுக்கு நான் வெய்ட் பண்ணறேன்" என்றவாறு எழ முயன்றான்.

அமுதா, "வெய்ட். உங்களுக்கு கொஞ்சம் ஹோம் வொர்க் கொடுக்கப் போறேன்"

விஸ்வா, "என்ன?"

அமுதா, "ஆர்மில இருந்து இருக்கீங்க. டைரி எழுதும் பழக்கம் இருக்குன்னு நினைக்கறேன். Am I correct?"

விஸ்வா, "எஸ் அஃப்கோர்ஸ்"

அமுதா, "முதலில் நீங்க முதல் முதலில் வனிதாவை சந்திச்ச வருஷத்தில் இருந்து உங்க பழைய டைரிகளை புறட்டிப் பார்க்கணும். அதுக்குப் பிறகு எனக்கு ரெண்டு லிஸ்ட் தயார் பண்ணிக் கொடுக்கணும். ஒரு லிஸ்ட்டில் ஏன் நீங்க ரெண்டு பேரும் இனி சேர்ந்து வாழ முடியாதுங்கறதுக்கான காரணங்கள். இன்னொரு லிஸ்ட் ஏன் நீங்க ரெண்டு பேரும் வாழணும் அப்படிங்கறதுக்கான காரணங்கள். ஐ மீன், சேர்ந்து வாழறது, பிரியறது இது ரெண்டிலும் ப்ரோஸ் அண்ட் கான்ஸ் இருக்கும். Being a manager in a senior position and an ex-army man, நிச்சயம் இந்த ரெண்டையும் மனசில் எடை போட்ட பிறகு தான் இந்த முடிவுக்கு வந்து இருப்பீங்க. அதை உங்களை எழுதச் சொல்லறேன். அடுத்த சிட்டிங்க்குக்கு வரும்போது ரெண்டு லிஸ்டையும் எடுத்துட்டு வாங்க. ஓ.கே?"

விஸ்வா மௌனம் காக்க ...

தொடர்ந்த அமுதா, "நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க விஷயம் எதுவும் வெளியில் யாருக்கும் நான் சொல்ல மாட்டேன். I am bound by doctor-patient cofidentiality just like any psychiatrist .. ப்ளீஸ் கோ-ஆபரேட் பண்ணு விஸ்வா"

விஸ்வா பெருமூச்செறிந்தபடி, "எஸ் மேம்" என்றபடி விடைபெற்றான்.

அவன் போவதை, அவன் அந்த அறையை விட்டு வெளியில் செல்லும் வரை, தன் உயிரே தன்னை விட்டு பிரிந்து போவதைப் பார்ப்பதைப் போல் ஏக்கம் செறிந்த கண்களுடன் வனிதா அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் செய்கையை கூர்ந்து நோக்கியவாறு இருந்த அமுதா அவளது கவனம் தன் புரம் திரும்பிய பிறகு, "You love him a lot. Don't you?"

கண்கள் பனிக்க உதட்டைக் கடித்த படி மெதுவாகத் தலையசைக்கத் தொடங்கிய வனிதா பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் கைகளில் முகத்தைப் பதித்து அழுது குலுங்கினாள்.

தன் இருக்கையை விட்டு எழுந்து அவளருகே வந்து அமர்ந்த அமுதா அவள் முதுகைத் தடவ அவரது தோளில் முகம் புதைத்து வனிதா தன் அழுகையை தொடர்ந்தாள் ...

சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்ட வனிதா, "சாரி, கொஞ்சம் இமோஷனல் ஆயிட்டேன்"

அமுதா, "நோ ப்ராப்ளம் வனிதா. இப்போ நீ என்னுடன் தனியாத்தானே இருக்கே? சரி, கண்டினியூ பண்ணலாமா?"

வனிதா, "எதுக்கு இந்த டைவர்ஸ்ன்னு ... "

அவளை மேலும் எதுவும் சொல்ல விடாமல் தடுத்த அமுதா, "அதை அப்பறம் பார்ப்போம். மொதல்ல நீ அவரை சந்திச்சதில் இருந்து நடந்ததை எல்லாம் சொல்லணும். ஒரு ஃப்ளாஷ் பாக் மாதிரி ஓ.கே?"

வனிதா, "ஓ.கே"




விஸ்வா போவதை, அவன் அந்த அறையை விட்டு வெளியில் செல்லும் வரை, தன் உயிரே தன்னை விட்டு பிரிந்து போவதைப் பார்ப்பதைப் போல் ஏக்கம் செறிந்த கண்களுடன் வனிதா அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் செய்கையை கூர்ந்து நோக்கியவாறு இருந்த அமுதா அவளது கவனம் தன் புரம் திரும்பிய பிறகு, "You love him a lot. Don't you?"

கண்கள் பனிக்க உதட்டைக் கடித்த படி மெதுவாகத் தலையசைக்கத் தொடங்கிய வனிதா பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் கைகளில் முகத்தைப் பதித்து அழுது குலுங்கினாள்.

தன் இருக்கையை விட்டு எழுந்து அவளருகே வந்து அமர்ந்த அமுதா அவள் முதுகைத் தடவ அவரது தோளில் முகம் புதைத்து வனிதா தன் அழுகையை தொடர்ந்தாள் ...

சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்ட வனிதா, "சாரி, கொஞ்சம் இமோஷனல் ஆயிட்டேன்"

அமுதா, "நோ ப்ராப்ளம் வனிதா. நீ என்னுடன் தனிதாத்தானே இருக்கே? சரி, கண்டினியூ பண்ணலாமா?"

வனிதா, "எதுக்கு இந்த டைவர்ஸ்ன்னு ... "

அவளை மேலும் எதுவும் சொல்ல விடாமல் தடுத்த அமுதா, "அதை அப்பறம் பார்ப்போம். மொதல்ல நீ அவரை சந்திச்சதில் இருந்து நடந்ததை எல்லாம் சொல்லணும். ஒரு ஃப்ளாஷ் பாக் மாதிரி ஓ.கே?"

வனிதா, "ஓ.கே"

~~~~~~~~~~~~~~~~~

அமுதா, "விஸ்வாவை எப்போ சந்திச்சே?"

வனிதா, "சின்ன வயசில் இருக்கும் போதே. அவர் என் மாமா பையன்"

தனக்கு தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாமல், அமுதா, "ஓ, அரேஞ்ச்ட் மேரேஜா?"

வனிதா, "இல்லை. அரேஞ்ச்ட் லவ் மேரேஜ். அப்படி எங்க வீட்டிலோ அவர் வீட்டிலோ எதிர்த்து இருந்தா அவர்கூட ஓடிப் போகவும் தயங்கி இருக்க மாட்டேன்"

வாய்விட்டு சிரித்த அமுதா, "சோ எப்போ இருந்து அவரை காதலிக்க ஆரம்பிச்சே?"

வனிதா, "சின்ன வயசில் இருந்தே. வருஷத்துக்கு ஒரு முறை லீவில் பெங்களூர் வரும் போது அவரோடவும் அவரோட ப்ரதர் ராமோடவும் சகஜமா பேசுவேன். ராமும் ரொம்ப சகஜமா பேசுவார். இவர்தான் ரொம்ப தயங்கி தயங்கி பேசுவார். நான் எய்த் க்ரேட் படிச்சுட்டு இருந்தப்போ இவர் ஒரு டென்னிஸ் கோச்சிங்க் கேம்பில் கலந்துக்க யூ.எஸ் வந்து இருந்தார். அப்போ நல்லா பழக்கம் ஆச்சு. ஐ திங்க், அப்போதான் இவரை ரொம்ப டீப்பா லவ் பண்ண ஆரம்பிச்சேன்"

அமுதா, "Hey! Wait a minute!! நீ அப்போ யூ.எஸ்ஸில் இருந்தியா?"

வனிதா, "ம்ம்ம் .. I was born and brought up in the U.S .. அங்கே நான் நைந்த் க்ரேட் முடிச்சதுக்கு அப்பறம் இங்கே வந்தோம். டெந்த்தில் இருந்து இங்கே கண்டினியூ பண்ணினேன்"

அமுதா, "உங்க வீட்டில் நீ ஒரே குழந்தையா?"

வனிதா, "இல்லை. அண்ணா என்னை விட ஆறு வருஷம் பெரியவர். அவர் திரும்ப இங்கே வரவே இல்லை. அங்கேயே படிச்சு முடிச்சுட்டு செட்டில் ஆயிட்டார்"

அமுதா, "நீ விஸ்வாவை லவ் பண்ண ஆரம்பிச்சப்போ உனக்கு என்ன வயசு?"

வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்த வனிதா, "I think thirteen .. "

அமுதா, "விஸ்வாவும் உன்னை அப்போ இருந்தே லவ் பண்ணினா?"

வனிதா, "I think so. ஆனா, நான் அவரை லவ் பண்ணறேன்னு தெரியறவரைக்கும் நான் அவரோட ப்ரதர் ராமை லவ் பண்ணறதா நினைச்சுட்டு இருந்தாராம்."

அமுதா, "ஏன்?"

வனிதா, "ராம் இவரை விட கொஞ்சம் ஃபேரா இருப்பார். இவர் அளவுக்கு உயரம் இல்லைன்னாலும் பார்க்க ஸ்மார்ட்டா இருப்பார். ஐ திங்க் இவரோட ஸ்கூலிலும் பொண்ணுங்க ராம்கிட்டேதான் ரொம்ப வழியுவாங்களாம்"

அமுதா, "ம்ம்ம் ... விஸ்வாகிட்டே உன் லவ்வை எப்போ சொன்னே?"

வனிதா, "நானா சொல்லலை ..."

அமுதா, "இந்த மாதிரி க்ரிப்டிக்கா பேசாம கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்? உனக்கும் பழசை நினைச்சுப் பார்க்கும் போது மனசில் இருக்கும் பாரம் கொஞ்சம் குறையும்"

வனிதா, "என்ன விவரம்?"

அமுதா, "Tell me your life history since the time you fell in love with Viswa"

வனிதா, "நான் அப்போ யூ.எஸ்ஸில் நைந்த் க்ரேட் முடிச்சுட்டு இந்தியா வந்தேன். எங்க அப்பா அவங்க வீட்டுக்குப் பக்கத்து சைட்டை ரொம்ப நாளுக்கு முன்னாடி வாங்கி அதில் வீடும் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார். நாங்க வரும்போது மாமா அதை ரினவேட் பண்ணி ரெடியா வெச்சு இருந்தார். சீக்கிரமா செட்டில் ஆயிட்டோம். அப்போ அவர் ப்ளஸ் டூ அதே ஸ்கூலில் முடிச்சுட்டு ஐ.ஐ.டி என்ட்ரென்ஸ் எக்ஸாம் ரிஸல்ட்ஸுக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தார். ராம் மெடிகல் காலேஜ் அட்மிஷனுக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தார். எனக்கு டெந்த்க்கு இங்கே ஃப்ராங்க் ஆண்டனி ஸ்கூலில் அட்மிஷன் கிடைச்சுது. எனக்கு இங்கே இருக்கும் ஸிஸ்டம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியான்னு ரொம்ப பயமா இருந்தது. விஸ்வா படிக்கும் போது ஸ்கூல் ஹாக்கி டீம், அத்லெட்டிக் டீம் அப்பறம் ஸ்கூல் பாண்டிலும் இருந்து இருக்கார். சோ, விஸ்வா ஸ்கூலில் டீச்சர்ஸுக்கு மத்தியில் ரொம்ப பிரபலம். எனக்கு பயம் போகணும்ன்னு ஒவ்வொரு டீச்சருக்கும் என்னை அறிமுகப் படுத்தி என்னைப் பத்தி சொல்லி எனக்கு ஹெல்ப் பண்ண சொன்னார். நான் சேர்ந்த ஒரு மாசத்தில் ப்ரின்ஸிபல் முதலா எல்லோருக்கும் என்னை விஸ்வாவோட கஸின்னு தெரிஞ்சு இருந்தது. I was really impressed about him. முன்னத்தை விட அவரை ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சேன்"

அமுதா, "அப்போ உங்க பேரண்ட்ஸுக்கு நீ லவ் பண்ணற விஷயம் தெரியாதா?"

வனிதா, "ம்ம்ஹூம் .. முன்னே, அதாவது, யூ.எஸ்ஸில் இருந்தப்போ அம்மா ஃபோனில் மாமாகிட்டே எப்படி இருக்கான் என் மருமகன் அப்படின்னு கேட்டதை ஒட்டுக் கேட்டேன். அவங்க யாரை சொல்றாங்கன்னு எனக்கு சந்தேகமா இருந்தது. அதுக்கு அப்பறம் அப்பாகூட பேசிட்டு இருந்தப்ப ரெண்டு பேரில் யாருன்னு டிஸைட் பண்ணிட்டியான்னு அப்பா கேட்டார். அதுக்கு அம்மா, ரெண்டு பேரில் யாரா இருந்தாலும் மருமகன் தானே, இன்னும் நாள் இருக்கு எதுக்கு அவசரப் பட்டு டிஸைட் பண்ணனும் அப்படின்னு ஜோக் அடிச்சாங்க சோ, அதில் இருந்து என் லவ்வுக்கு அவங்க அப்போஸ் பண்ண மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். I didn't tell them anything"

அமுதா, "சரி, நீ ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சே. அப்பறம் என்ன ஆச்சு?"

வனிதா, "ராமுக்கு A.I.M.Sஇல் அட்மிஷன் கிடைச்சது. விஸ்வாவுக்கு ஐ.ஐ.டி அட்மிஷன் கிடைக்கலை. அவருக்கு ஐ.ஐ.டி இல்லைன்னா என்.டி.ஏ (NDA)வில் சேரணும்ன்னும் ஆசை இருந்தது. ஆனா மாமா அவரை ஐ.ஐ.டி என் ட்ரென்ஸில் அதிக கவனம் செலுத்தச் சொன்னதால் என்.டி.ஏவுக்கு சரியா பிரிபேர் பண்ணலை. ரெண்டும் கிடைக்காம ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிருந்தார். லோகல் காலேஜில் பணம் கொடுத்து மாமா அவருக்கு எஞ்சினியரிங்க் சீட்டுக்கு ஏற்பாடு செய்யறதா சொன்னதுக்கும் வேண்டாம்ன்னு சொல்லிட்டார். எங்க அப்பா அம்மாவுக்கு எல்லாம் ராமுக்கு எய்ம்ஸில் அட்மிஷன் கிடைச்சதில் ரொம்ப சந்தோஷம். டெல்லியில் இருந்து ராம் வாரா வாரம் அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணும்போது அம்மா அப்பாவையும் ஃபோனில் கூப்பிட்டு பேசுவார். ஒரு வாரம் அவர் கிட்டே இருந்து ஃபோன் வரலைன்னாலும் அம்மா ராம் ஏன் ஃபோன் பண்ணலைன்னு அத்தைகிட்டே கேப்பாங்க. விஸ்வா கோச்சிங்க் க்ளாஸ் போயிட்டு என்.டி.ஏ என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு பிரிபேர் பண்ணிட்டு இருந்தார். எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ராம்மைத்தான் ரொம்ப பிடிக்கும்ன்னு நான் நினைச்சேன். எங்கே அவங்க ரெண்டு பேரும் என்னைக் கேட்காம என்னை ராமுக்கு பேசி முடிச்சுடுவாங்களோன்னு எனக்கு மனசுக்குள்ளே ஒரே பயம். இப்போ நினைச்சுப் பாத்தா ரொம்ப ஸில்லியா இருக்கு. அப்போ எனக்கு பதினாறு வயசு தான். நான் படிச்சு முடிக்கும் வரை என்கிட்டே அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம்ன்னுதான் அவங்க இருந்து இருக்காங்க. எனக்கு அது தெரியலை. .. நான் இங்கே ஸ்கூலில் சேர்ந்து ஆறு மாசம் ஆகி இருக்கும் போது ... "

என்றும் பசுமையாக அவள் மனத்தில் நிலைத்த அன்றைய நிகழ்வுகள் அவள் மனத்தில் ஓடத் தொடங்கின .. 


அவளது தாய் தந்தையர் பார்க்க வேண்டும் என்றே பள்ளியில் இருந்து வந்ததும் அவளது நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றை அவைகளின் கடைசிப் பக்கம் தெரியும் படி டைனிங்க் டேபிளில் பரப்பி வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். சிறுது நேரத்தில் அவளது தாய் வத்சலா அவளை அழைக்க ..

அவளது தாயுடன் தந்தையும் அமர்ந்து இருந்ததைக் கண்டாள்

வத்சலா, "என்ன மேடம்? படிக்கறதை மறந்துட்ட மாதிரி இருக்கு?"

வனிதா, "ஏன்? நான் படிச்சுட்டுத்தான் இருக்கேன்"

வத்சலா, "What do you call these?" என்றபடி அவள் பரப்பி வைத்து இருந்த நோட்டுப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துக் காட்டினாள்.

வனிதா, "ஃப்ரீயா இருந்தப்போ எழுதினது"

வத்சலா, "இதுக்கு என்ன அர்த்தம்? You are too young to think about such things"

வனிதா, "Why not?"

வத்சலா, "God! What to do with this girl Subbu? வாங்க அண்ணாகிட்டேயே போய் பேசலாம்"

அவளையும் அழைத்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குள் நுழைந்தனர். ஹாலில் அமர்ந்து இருந்த ஸ்ரீவத்சனிடம் வத்சலா, "அண்ணா, பாரு இவ என்ன செஞ்சு வெச்சு இருக்கான்னு" என்றபடி கையில் கொண்டு வந்து இருந்த நோட்டுப் புத்தகத்தை நீட்டினாள்.

தலையை சொறிந்த ஸ்ரீவத்சன், "ரெண்டு நாளைக்கு முன்னாடி I had a chat with my son. உங்க ரெண்டு பேர்கிட்டேயும் மெதுவா சொல்லாம்ன்னு இருந்தேன்"

சுப்ரமணியன், "என்ன ஸ்ரீ மெதுவா சொல்லாம்ன்னு இருந்தே?"

ஸ்ரீவத்சன், "இரு அவனையே கூப்பிடறேன்" என்ற போது அவரது மனைவி காயத்ரி உள்ளிருந்து வந்தாள்.

காயத்ரி, "ஹே, என்ன புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் பொண்ணையும் கூட்டிட்டு வந்து இருக்கீங்க? நாங்க இல்லை இன்னைக்கு உங்க வீட்டுக்கு டின்னருக்கு வர்றதா இருந்தோம்?"

வத்சலா, "இது வேற விஷயம் காயத்ரி. பாரு" என்ற படி கையில் இருந்த மற்ற ஒரு நோட்டுப் புத்தகத்தை அவளிடம் நீட்டினாள். வாங்கிப் பார்த்த காயத்ரியின் முகத்தில் புன் முறுவல் பரவத் தொடங்கியது.

ஸ்ரீவத்சன் தன் மனைவியிடம், "அவனை கூப்பிடு"

காயத்ரி, "இங்கே பாருங்க அவனே மனசு ஒடிஞ்சு போயிருக்கான். ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் டீடெயிலா பேசினோம். அவனும் சரின்னு ஒத்துட்டான். இப்போ எதுக்கு அவனை இழுக்கறீங்க?"

ஸ்ரீவத்சன், "ரெண்டு பேர் படிப்பும் கெட்டுப் போகக் கூடாது. அவன் அதுக்கு பொறுப்பு ஏத்துக்கணும். Call him"

சிறிது நேரத்தில் விஸ்வா அங்கு வந்தான்.

ஸ்ரீவத்சன், "உன் பர்ஸை அத்தைகிட்டே கொடு"

விஸ்வா முகத்தில் பீதி பரவ, "நோ! டாட், நேத்துதானே நான் உங்ககிட்டே ப்ராமிஸ் பண்ணினேன்? இப்போ எதுக்கு டாட்?"

ஸ்ரீவத்சன், "முதல்ல உன் பர்ஸில் இருப்பதை அத்தை மாமாகிட்டே காட்டு"

கண் கலங்கிய விஸ்வா, "டாட், I know they all, including her, prefer Ram over me. எதுக்கு டாட் என்னை எம்பாரஸ் பண்ணறீங்க?"

வத்சலா, "இது என்ன புதுக் கதை? அண்ணா அவனை எதுக்கு இப்படி எம்பாரஸ் பண்ணறே? பரவால்லடா கண்ணா நீ ஒண்ணும் உன் பர்ஸ்ஸை காட்ட வேண்டாம். பட், ஒண்ணு சொல்லறேன். Never did any of us preferred Ram over you" என்ற பிறகு வனிதாவைக் காட்டி சிரித்தபடி, "Particularly not her"

ஸ்ரீவத்சன், "டேய். உன்னை எம்பாரஸ் பண்ணறதுக்காக சொல்லலை. Its time they too know about it அதுக்ககத்தான் சொன்னேன். கொடு"

தயக்கத்துடன் விஸ்வா தன் பர்ஸ்ஸை திறந்து காட்ட அதில் வனிதாவின் புகைப் படம் ஒன்று இருந்தது

ஸ்ரீவத்சன், "சார்கிட்டே இந்த மாதிரி ஒரு டஜன் ஃபோட்டோஸ் இருக்கு. ஒவ்வொண்ணு பின்னாலையும் 'வனிதா மை லவ்' அப்படின்னு எழுதி வெச்சு இருக்கார். ரெண்டு நாளைக்கு முன்னாடி எதேட்சையா அவன் ரூமுக்குப் போனப்ப பார்த்தேன். நாங்க ரெண்டு பேரும் அவனுக்கு அட்வைஸ் பண்ணினோம்"

வனிதாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் விளக்கைப் போல பிரகாசிக்க விஸ்வாவின் முகத்தில் இருந்த குழப்பம் அகலவில்லை.

காயத்ரி, "நீ இன்னும் அவளுக்கு சொல்லலைன்னு சொன்னே இல்லை? See what she has been doing in her class" என்ற படி அந்த நோட்டுப் புத்தகத்தை அவனிடம் நீட்டி கடைசிப் பக்கத்தைக் காட்டினாள்

அதில் அந்தப் பக்கம் முழுவதும் 'வனிதா விஸ்வநாத்' என்று பல விதங்களில் எழுதப் பட்டு இருந்தது. சில இடங்களில் அதையே கையொப்பம் போலும் இடப் பட்டு இருந்தது.

வனிதாவின் முகத்தில் இருந்த பிரகாசம் அவனது முகத்துக்கும் பரவியது.

ஏதும் பேசாமல் நின்று இருந்த அந்த பச்சிளம் ஜோடியைப் பார்த்து ஸ்ரீவத்சன், "Look both of you. We are not against your love for each other. ரெண்டு பேரும் டீன் ஏஜர்ஸ். நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. செய்ய வேண்டிய வேலைகளை விட்டுட்டு இப்படி கனவு கண்டுட்டு இருந்தா உங்க படிப்பு கெடும். விஸ்வா, அடுத்த வருஷம் என்.டி.ஏ சேரணும்ன்னு குறியா இருக்கே. வனிதா நீ இந்த வருஷம் ஐ.ஸி.எஸ்.ஸி போர்ட் எக்ஸாம் எழுதப் போறே. நீங்க ரெண்டு பேரும் நல்லா பிரிபேர் பண்ணனும். என்ன?"

வனிதா, "மாமா, என் படிப்பு கெடாது. நான் நல்லா படிப்பேன்"

விஸ்வா, "டாட், நிச்சயம் நான் அடுத்த வருஷம் என்.டி.ஏவில் சேரத்தான் போறேன். பாத்துட்டு இருங்க"

வத்சலா, "விஸ்வா, இவளுக்கு இது புது இடம் புது ஸ்கூலிங்க் ஸிஸ்டம். நீதான் அவளுக்கு ஹெல்ப் பண்ணி கோப்-அப் பண்ண வைக்கணும். இவ எங்கேயும் போயிட மாட்டா. நீ படிச்சு ஒரு நல்ல பொசிஷனுக்கு வந்ததும் நாங்களே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வெக்கறோம். அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கவனமா இருக்கணும். ரெண்டு பேரும் அவங்கவுங்க வேலைகளை முடிச்சுட்டு, ஜாலியா வெளியே மூவிக்கு, டின்னருக்கு எல்லாம் போகணும்ன்னா I have no problem allowing you both to do the same" என்றவளை இடைமறித்து ..

ஸ்ரீவத்சன், "என்ன வத்சலா இது?"

வத்சலா, "அண்ணா, உன் பையன் வேணுன்னா நீ சொன்னபடி கேட்டு இருப்பான். இவ அங்கே பிறந்து வளந்தவ. சின்ன வயசிலேயே நிறைய விஷயங்கள் அவளுக்குத் தெரியும்" என்றபடி வனிதாவைக் கூர்ந்து நோக்கினாள். தாய், மகள் இருவர் பார்வையும் ஒரு கணம் உறைந்து நின்றபின் வனிதா தலை குனிந்தாள்.

பெருமூச்சு விட்டபடி வத்சலா தொடர்ந்தாள், "ஸ்கூலிலேயே சொல்லிக் கொடுத்து இருக்காங்க. இவ மட்டும் தான் அவ க்ளாஸ்ல டேட்டிங்க் எதுவும் போகாம இருந்தா. அவளா கேட்டு இருந்தா நிச்சயம் அனுமதிச்சு இருப்போம். நாம் தடுத்தா ரெண்டு பேரும் திருட்டுத்தனமா மீட் பண்ணிப்பாங்க."

விஸ்வா, "No aththai. I won't if you both and my parents don't permit (இல்லை அத்தை நீங்களும் மாமாவும் எங்க அப்பா அம்மாவும் அனுமதிக்கலைன்னா நான் செய்ய மாட்டேன்)"

வனிதா, "But what's wrong (அதனால என்ன?)" என்ற அவளது சிறு பிள்ளைத் தனமான ஈன ஸ்வரத்திற்கு

விஸ்வா, "You keep quite" என்று முற்றுப் புள்ளி வைத்தான்.

தன் வருங்கால மருமகனை வாஞ்சையுடன் பார்த்த வத்சலா தன் அண்ணனிடன், "பாத்தியா, இவனே வேண்டான்னாலும் என் பொண்ணு அவனை ஒரு வழி பண்ணிடுவா. So, let us not be too contrite about it (நாம ரொம்ப கட்டுப்பெட்டியா இருக்க வேண்டாம்)" என்றபிறகு வனிதாவைப் பார்த்து "உனக்கு டியூஷன் இருக்கு இல்லை. கிளம்பு" என்றபிறகு தன் அண்ணனிடம் குறும்புப் பார்வையுடன், "அண்ணா, ரொம்ப லேட் ஆயிடுச்சு. Hope Viswa wouldn't mind dropping her in his new sexy bike? (விஸ்வாவுக்கு அவளை அவனோட புது பைக்கில் கூட்டிட்டு போக ஆட்சேபனை எதுவும் இருக்காது இல்லை?)"



முகம் மலர்ந்த விஸ்வாவைப் பார்த்துப் பூரித்த காயத்ரி, "No issues. My sons will always be at the service of a damsel in distress"

விஸ்வா, "I beg to differ மா! Unlike Ram I am partial to only MY damsel" என்றபடி அவன் அப்படிச் சொன்னதில் முகம் பிரகாசித்த வனிதாவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

விஸ்வா பைக்கை இயக்க அவன் பின்னால் அமர்ந்த வனிதா அவனை அணைத்து அவன் முதுகில் தலை சாய்த்ததை பார்த்த தாய்மார் இருவருக்கும் கண்கள் பனித்தன.

முகத்தில் ஆதங்கம் ததும்ப ஸ்ரீவத்சன், "வத்சலா, இன்னும் நாலஞ்சு வருஷம் இருக்கு. He will be out most of that time"

காயத்ரி, "நீ ஒண்ணும் கவலைப் படாதே வத்சலா. அவனைப் பத்தி அவங்க அப்பாவைவிட எனக்கு நல்லா தெரியும். எங்கே போனாலும் திரும்பி பெட்டிப் பாம்பா வந்துடுவான். உன் பொண்ணை நீ ஒழுங்கா பாத்துக்கோ"

சுப்ரமணியன், "ஃப்யூ!" என்று பெருமூச்சு விட்டபின், "ஸ்ரீ, அந்த சிங்கிள் மால்ட்டை ஓபன் பண்ணலாம் வா"



No comments:

Post a Comment