Saturday, September 19, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 9


சந்திரசேகர், "வனிதா, நாளைக்கு மத்தியானமும் ஒரு ஆட்டம் போடலாமா? ப்ளீஸ்?"

வனிதா, "நோ. நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கேன் இல்லை? ஒரு வாரத்துக்கு ஒரு முறைதான். அதுவும் விஸ்வா வந்ததுக்குப் பிறகு எனக்குத் தேவைப் பட்டாத்தான்"

சந்திரசேகர், "இந்த ஆறு மாசமா ஒவ்வொரு முறையும் நம்ம ஆட்டம் முடிஞ்சப்பறம் சொல்லறதைத்தான் இப்பவும் சொல்லறே. நான் எத்தனை தடவைதான் சொல்லறது? You will never be able to get from him what I can give you .. அவனால உன்னை திருப்தி படுத்த முடியாது"



வனிதா குரலை உயர்த்தி, "ஓ! ப்ளீஸ் ஸ்டாப் இட்!! அவரை பத்தி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை-ன்னு நான் எத்தனை தடவை சொல்றது? I am sick and tired of your attitude. You should be really ashamed of yourself. உங்களால முடியாத காரியத்தை உங்க கம்பெனிக்காக செஞ்சுட்டு இருக்கார். அவரைப் பத்தி கேவலமா பேச உங்களுக்கு ஒரு அருகதையும் இல்லை."

சந்திரசேகர், "அதான் அவனால முடியாத காரியத்தை நான் செஞ்சுட்டு இருக்கேன்"

வனிதா, "Oh! Please shut up!! He is thousand times more a man than you"

சந்திரசேகர், "But a man who can not satisfy his own wife"

வனிதா, "I think I am a nympho maniac"

சந்திரசேகர், "Oh, come on Vanitha, பழியை ஏன் உன் மேல போட்டுக்கறே? நீயும் மத்த பொண்ணுங்க மாதிரிதான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நாம் பேசின விஷயம் தானே. இதுவரைக்கும் எதாவுது இம்ப்ரூமெண்ட் இருந்து இருக்கா? ஆக்சுவலா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, அந்த நாலு தடவையோட நாம் நிறுத்தி இருக்கக் கூடாது. இப்போ நீ இந்த மாதிரி கில்டியா ஃபீல் பண்ணி இருக்க மாட்டே"

வனிதாவிடம் இருந்தும் சிறிது நேர மௌனம் ...

வனிதா பெருமூச்சுடன், "Ok. Enough. ட்ரெஸ் பண்ணிட்டு போய் ஹாலில் வெய்ட் பண்ணுங்க"

சற்று நேர சல சலப்புக்குப் பிறகு ..

வனிதா, "ஓ, ப்ளீஸ் சந்த்ரூ, இன்னைக்கு ஆல்ரெடி ரெண்டு தடவை ஆச்சு. போதும் போய் வெளியில் வெயிட் பண்ணுங்க"

அறை வாசலைத் தாண்டிய சந்திரசேகர் இடப்புறம் திரும்பி பார்த்து ஸ்தம்பித்து நிற்பதை உணர்ந்து தானும் அறைக்கு வெளியில் தலை நீட்டிப் பார்க்க அவளது பார்வை விஸ்வாவின் கலங்கிச் சிவந்த கண்களைச் சந்தித்தது.

விஸ்வா, "யூ, பாஸ்டர்ட்" என்றபடி சந்திரசேகரை ஓங்கி அறைய அவர் அந்த ஹாலில் இருந்த சோஃபாவிற்கு அருகே சென்று விழுந்தார். எழுந்து தலை குனிந்தபடி அவசரமாக அவர் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

பயம், விரக்தி, ஆற்றாமை இவை அனைத்தும் முகத்தில் படர்ந்து கண்கள் குளமாகி வழிந்தோடியபடி நின்று கொண்டு இருந்த தன் துணைவியைப் பார்த்து ...

விஸ்வா, "அஞ்சு வருஷமாவா? You slut!" என்றபடி அவள் கழுத்தைப் பற்றி நெருக்கினான். வனிதாவின் கண்கள் விரிந்து சில கணங்கள் அவள் மூச்சுத் திணறினாள் .. பிறகு அவளை உதறித் தள்ளி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
ராம், "I am so sorry Viswa. I can understand how hurt you would have been. எந்தக் கணவனுக்கும் நேரக் கூடாத அனுபவம்"

விஸ்வா, "அதுக்குப் பிறகு ... I wanted to kill both of them and then I wanted to kill myself ..."

ராம், "Thank God for making you think rationally"

விஸ்வா, "அப்படியும் மூணு நாலு நாள் .. என்னால எதுவும் யோசிக்க முடியலை"

ராம், "அது சரி, அஞ்சு வருஷமா தொடர்ந்து அப்படி நடக்கலை-ன்னு நான் கேள்விப் பட்டேனே"

விஸ்வா, "How does it matter Ram? ஒரு தடவையோ ஆயிரம் தடவையோ கணக்குப் பண்ணி என்ன பிரயோஜனம்? Anyway, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு PMLஇல் வேலை வாங்கிக் கொடுக்க அவர்கூட முதல் முதலா படுத்தாளாம்"

ராம், "அதையும் டாக்டர் அமுதா சொன்னாங்க"

விஸ்வா, "அந்த ஆள் அப்படி கண்டிஷன் போட்டு இருக்கார். இவளும் நான் வேற வேலை கிடைக்காம கஷ்டப் படறதைப் பார்த்து ஒத்துட்டு இருக்கா. முதல் தரத்துக்குப் பிறகு அடுத்த மூணு தடவை, வாரம் ஒரு முறை, அவளே விருப்பப் பட்டு போனாளாம். அதற்குப் பிறகு அவங்க ரெண்டு பேருக்கும் நடுவே எந்த தொடபும் இல்லையாம். ஏழு மாசத்துக்கு முன்னாடி மறுபடி ஆரம்பிச்சு இருக்கு. அதே வீக்லி ஒன்ஸ் ஸ்கெட்யூல்"

பெருமூச்சு விட்ட ராம், "இந்த விவரம் எல்லாம் உனக்கு எப்படி தெரிஞ்சுது?"

விஸ்வா, "அன்னைக்கு அவங்களைப் பார்த்த பிறகு நான் வீட்டுக்குப் போகலை. க்ளப்பில் ரூம் போட்டு அங்கே தங்கி இருந்தேன். ஆஃபீஸுக்கும் போகலை. பயந்துட்டு வசந்திரசேகர் வந்து நடந்தது ஒண்ணு விடாம சொல்லி மன்னிப்புக் கேட்டார்"

ராம், "வனிதாகிட்டே பேசினியா?"

விஸ்வா, "இல்லை. அன்னைக்குப் பிறகு அவகிட்டே நான் இது வரைக்கும் ஒரு வார்த்தைகூட பேசலை"

அவர்கள் இருவரின் அன்னியோன்னியத்தைப் பற்றி நன்கு அறிந்த ராமின் கண்கள் கலங்கின....

ராம், "இப்போ வீட்டில்தானே இருக்கே?"

விஸ்வா, "ஆமா"

ராம், "வனிதா எந்தப் பேச்சையும் எடுப்பது இல்லையா?"

விஸ்வா, "மறுபடி வீட்டுக்குப் போன அன்னைக்கு சாரி-ன்னு சொல்லி பேச ஆரம்பிச்சா. மியூசுவல் கன்ஸர்ன் பேஸிஸில் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணப் போறேன். அதுக்கு நீ ஒத்துக்கலைன்னா நீ நடத்தை தவறியதை அடிப்படையா வெச்சு அப்ளை பண்ண வேண்டி இருக்கும். அதற்குப் பிறகு உன் ரகஸியம் ஊருக்கே தெரிஞ்சுடும். உன் இஷ்டம். நான் உன் கூட ஒரு வார்த்தை கூட பேச விரும்பலை. உன் கூட நான் பேசணும்-ன்னு எதிர்பார்த்தா நான் வீட்டுக்கே வரப் போறது இல்லைன்னேன். அதுக்குப் பிறகு அவளும் பேசறது இல்லை"

ராம், "இப்போ கவுன்ஸிலிங்கில் அமுதா மேடம் உன்னை அவகூட பேசச் சொல்லலையா?"

விஸ்வா, "அந்த ஸ்டேஜுக்கு இன்னும் வரலை"

ராம், "அந்த வெவ்வேறு ஸ்டேஜஸ்ஸைப் பத்தி டாக்டர் அமுதா எனக்கும் விளக்கினாங்க. அடுத்த ஸ்டேஜுக்குப் போறதுக்கு முன்னாடி நீ அவங்க கிட்டே பேச சங்கோஜப் பட்ட விஷயங்களை, I mean the sexual intimacy between you both, பத்தி அவங்க தெரிஞ்சுக்க விரும்பறாங்க. அதைத் தான் உன் கூட பேசிட்டு அவங்களுக்கு சொல்லச் சொன்னாங்க"

விஸ்வா, "தெரியும்"

ராம், "விஸ்வா, ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கூட பேசறதை விட நீ இந்த விஷயங்களை என்கூட பேச விரும்பறதா சொன்னாங்க. ஒரு விஷயத்தை நீ புரிஞ்சுக்கணும். உனக்கு இருக்கும் அளவுக்கு எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு!! நீ படற மன வேதனை எனக்கு நல்லா புரியுது. அது மட்டும் இல்லை எனக்கு வனிதா மேலும் உன் குழந்தைகள் மேலும் ரொம்ப அக்கறை இருக்கு. ஆனா நானும் டாக்டர் அமுதா மாதிரி பாரபட்சம் இல்லாமத்தான் உன் கூட பேசப் போறேன். உனக்கு அது ஓ.கேவா?"

விஸ்வா, "ஓ.கே?"

ராம், "இன்னொரு விஷயம். நீ என் கூட பேசினது வனிதாவுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் தெரியக் கூடாது. அதற்குப் பிறகு என் முகத்தில் அவ முழிக்க மாட்டா. She does not deserve it"

விஸ்வா, "இந்த சமயத்திலும் நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணறியா?"

ராம், "டேய், உன்னுடைய முன்னேற்றத்தில் உன் நலனில் அவளை விட வேற யாருக்கும் அதிகம் அக்கறை இருக்க முடியாது. இருந்தும் அப்படி அவ நடந்துட்டு இருக்கான்னா எதாவுது ஆழ்ந்த காரணம் இருக்கும்"

விஸ்வா அவனை கூர்ந்து பார்த்த படி, "அதாவது நான் சொல்லறதை வெச்சு நீயும் என் மேலயும் தப்பு இருக்கு-ன்னு சுட்டிக் காட்டப் போறியா?"

ராம், "டேய், அவ செஞ்சது சரி-ன்னு சொல்லலைடா. புரிஞ்சுக்கோ. உன் மேல தப்பு இருந்து இருந்தா அதை அவ உன் கிட்டே முதலில் பேசி இருக்கணும். இருந்தாலும், அவ அப்படி செஞ்சதுக்கு என்ன காரணம்-ன்னு தெரிஞ்சுக்க விருப்பம் இல்லையா?"

விஸ்வா, "முதல் முதலில் என் வேலைக்காக கூட படுக்க ஆரம்பிச்சா-ன்னு சந்திரசேகரே சொன்னார். அதற்குப் பிறகு அவளே விருப்பப் பட்டு வந்ததா சொன்னார்"

ராம், "அவர் சொல்வதை நம்புவே ஆனா கட்டின பெண்டாட்டி கிட்டே கேட்க மாட்டே அப்படித்தானே?"

விஸ்வா, "அது தான் உண்மை. அதை மறுபடி அவ வாயால கேட்டு கஷ்டப் பட விரும்பலை"



ராம், "சரி, அவ செஞ்ச தவறுகளை ரெண்டு கட்டமா பிரிச்சு யோசிக்கலாமா? முதலில் உன் வேலைக்காக அவருக்கு ஒப்புதல் கொடுத்ததை எடுத்துக்கலாம். அவர் போட்ட கண்டிஷனுக்கு அவ ஒத்துட்டது தப்புத்தான். ஒத்துக்கறேன். ஆனா, ஒரு நிமிஷம், அந்த சமயத்தில் உங்க ரெண்டு பேருக்கும் நடுவே நடந்த பேச்சு, அந்த வேலை கிடைக்காது-ன்னு நினைச்சு நீ நடந்துட்ட விதம் இதை எல்லாம் கொஞ்சம் யோசிச்சுப் பாரு"

விஸ்வா, "எஸ், I was anxious and disappointed .. but .."

ராம், "அந்த ஆள் உன்னை எடுக்கத் தயக்கப் பட்டார். அதனால தான் அவளே முயற்சி எடுத்து சண்முகம் சார் உன்னை மீட் பண்ண ஏற்பாடு செஞ்சா. உன் துதிஷ்டம் அவர் நான்-கமிட்டலா ஒப்புதல் கொடுத்து இருக்கார். அதையும் உன் ஆர்வத்தையும் சந்திரசேகர் பயன் படுத்திட்டு அவகிட்டே கண்டிஷன் போட்டு இருக்கார். இருந்தாலும் அவளைப் புரிஞ்சுக்காம அந்த சமயத்தில் உன் ஏமாற்றத்தையும் உனக்கு இருந்த ஆதங்கத்தையும் காட்ட அவளை ஒரு வடிகாலா பயன் படுத்தினே. நானே சில நாள் உங்க வீட்டில் இருக்கும் போது உன்னை திட்டி இருக்கேன். ஒவ்வொரு நாளும் அவளுக்கு நரகமா இருந்தது ... உன்னை எப்படி சமாதானப் படுத்தறது-ன்னு தெரியாம எத்தனை தரம் என் கிட்டே சொல்லி அழுது இருக்கா தெரியுமா? She was on pins and needles ... அது எனக்கு நல்லா தெரியும். எத்தனை தடவை நாம் மூணு பேரும் அதைப் பத்தி பேசினோம். ஒரு தரமாவுது இந்த வேலை கிடைக்கலைன்னா பரவால்லை வேற முயற்சி செய்யறே-ன்னு சொல்லி இருப்பியா? நாங்க ரெண்டு பேரும் சொன்னதுக்கு எங்க மேல எறிஞ்சு விழுந்தே. நான் போனதுக்குப் பிறகு வனிதாகூட இப்ப மாதிரி பேசாம இருந்து அவளை சித்தரவதை பண்ணி இருக்கே. இதெல்லாம் மறந்துடுச்சா?"

விஸ்வா, "சோ, அவ செஞ்சது சரிங்கறியா?"

ராம், "அவ செஞ்சது தப்புதான். ஆனா அவ மனசில் அப்போ இருந்த சூழ்நிலையில் அதை சரி-ன்னு நினைச்சு செஞ்சு இருக்கா"

விஸ்வா, "தப்பு தப்புதான் ... "

ராம், "விஸ்வா, உனக்கு சப்கான்ஷியஸ்ன்னா என்ன-ன்னு நல்லா தெரியும். ஆர்மியில் உனக்கு கொடுத்த ட்ரெயினிங்கைப் பத்தி நாம் நிறைய தரம் விவாதிச்சு இருக்கோம். தேசப் பற்று-ன்னு பேசறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும். ஆனா அதுக்காக உயிரை விடவும் துணிவது? உனக்குக் கொடுக்கப் பட்ட பயிற்சியினால் ஆழ்மனசில் உனக்கு ஒரு உந்துதல் வந்தது. அது இல்லாமல் இருந்திருந்தா போரில் அப்படி உன்னால உயிரைப் பணயம் வெக்க முடிஞ்சு இருக்குமா? Come on we are talking about life and death here. அதை விடு ஒருத்தன் செத்து விழப் போறா-ன்னு தெரிஞ்சும் அவனை சுடறது எவ்வளவு கஷ்டம்-ன்னு நீயே சொல்லி இருக்கே. அன்னைக்கு உன்னால எப்படி மூணு பேரை சுட்டு சாகடிக்க முடிஞ்சுது? Understand this. Subconscious has no logic or reason. அவளுக்கு சின்ன வயசில் நேர்ந்த சில விஷயங்களால் ஆழ்மனதில் செக்ஸ் அப்படிங்கறதை அவ ஒரு பாவமா, செய்யக் கூடாத ஒரு தவறாப் பார்கக்லை. அது உனக்குத் தெரிஞ்சா நீ ரொம்ப வருத்தப் படுவேன்னு மட்டும்தான் யோசிச்சு இருக்கா"

விஸ்வா, "May be the first time ... ஆனா அதற்குப் பிறகு அவளே விருப்பப் பட்டு வந்ததா சந்திரசேகர் சொன்னார்"

ராம், "அதற்குப் பிறகுன்னா எப்போ?"

விஸ்வா, "எனக்கு வேலை கொடுக்க நாலு முறை வேணும்-ன்னு கண்டிஷன் போட்டு இருக்கார். முதல் முறை போனதுக்கு பிறகு அடுத்த மூணு முறையைச் சொன்னேன்"

ராம், "அடுத்த மூணு முறையும் அவளே விருப்பப் பட்டு வந்தா-ன்னு அவர் சொன்னதை நீ நம்பறையா? ஒரு வேளை முதல் முறைக்குப்பிகு உனக்கு இஷ்டம் இருந்தா மட்டும் வா-ன்னு அவர் சொல்லி இருந்தார்ன்னா வனிதா போய் இருப்பாளா? கொஞ்சம் யோசிச்சுப் பாரு விஸ்வா. She is not such a person"

விஸ்வா, "May be not. ஆனா, முதல் முறை ரொம்ப தயங்கித் தயங்கி வந்தாளாம். அடுத்த மூணு முறையும் அவளும் சேர்ந்து நல்லா என்ஜாய் பண்ணிணாதா சொன்னார்"

ராம், "அவள் அவருடைய கண்டிஷனுக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கக் கூடாது. அது அவ செஞ்ச பெரிய தப்பு. ஆனால், உனக்கு வேலை வாங்கிக் கொடுக்க அவரோடு உடலுறவு கொள்ள வேண்டிய நிலை. அவளே சரி-ன்னு போய் இருக்கும் போது அவ என்ஜாய் பண்ணினதில் என்ன தப்பு? மரக் கட்டை மாதிரி படுத்துட்டு வந்து இருக்கணும்-ன்னு எதிர்பார்கறையா? அவளது மனம் அதை மறுத்து இருந்தாலும் உடல் அதற்கு ஒத்துழைத்து இருக்கும். அந்த ஆளுக்கு செக்ஸில் நல்ல அனுபவம் இருந்து இருந்தா அவளால் அந்த உடலுறவை என்ஜாய் பண்ணறதை தவி்த்து இருக்க முடியாது. Please don't be a hypocryte. உன்னை அந்த நிலைமையில் உன்னை வெச்சு யோசிச்சுப் பாரு"

விஸ்வா மௌனம் காத்தான் ...

ராம், "விஸ்வா, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவ செஞ்சதுக்கான காரணம் சரியானதா இல்லாமல் இருக்கலாம். ஆனா அவளோட கண்ணோட்டத்தில் சரி-ன்னு நினைச்சு செஞ்சா. அவள் கண்ணோட்டமும் சரி இல்லைதான், ஒத்துக்கறேன். இப்போ அதுக்கும் சேர்ந்து அழுதுட்டு இருக்கா. அதைப் புரிஞ்சுக்கோ. ப்ளீஸ்"

விஸ்வா மௌனம் காத்தான் ... 


ராம், "மறுபடி ஏழு மாசத்துக்கு முன்னாடி எப்போ தொடங்குச்சு?"

விஸ்வா, "டெல்லியில். நானும் வனிதாவும் போறதா இருந்த ட்ரேட் ஃபேர் அப்போ"

ராம், "நீ கடைசி நிமிஷத்தில் சிங்கப்பூர் போயிட்டு டெல்லிக்குப் போக முடியாம போச்சே அப்போவா?"

விஸ்வா, "அஞ்சு நாள் ஃபேர் அது. நான் மூணாவுது நாள் டெல்லிக்குப் போயிடலாம்-ன்னு நினைச்சேன். என்னால முடியலை. நாலாவுது நாளும் அஞ்சாவுது நாளும் பெரிய டின்னர் பார்டி இருந்து இருக்கு. அந்த ரெண்டு நாளும் டின்னர் பார்ட்டியில் சந்திரசேகர் அவளுக்கு ஒயின் ஊத்திக் கொடுத்து படுக்கைக்கு கூட்டிட்டுப் போயிருக்கான்"

ராம், "அதற்குப் பிறகு?"

விஸ்வா, "அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கிடைச்ச சுகம் மறுபடி வேணும்ன்னு தொடங்கி இருக்கா"

ராம், "நீ ரொம்ப சினிகலா யோசிக்கறே. ஆனா உன் ஆதங்கம் புரியுது. நீ சொல்ற மாதிரியே வெச்சுப்போம். ஏன் நாலு வருஷமா இல்லாம திடீர்-ன்னு மறுபடி அந்த சுகம் வேணும்-ன்னு முடிவு எடுத்தா?"

விஸ்வா, "அவ செஞ்சது தப்பு. என்னை முதுகில் குத்தற மாதிரி. எதுக்கு செஞ்சான்னு தெரிஞ்சு என்னா ஆகப் போகுது?"

ராம், "விஸ்வா, அரைச்ச மாவை திரும்பத் திரும்ப அரைக்காதெ, எத்தனை தடவைடா சொல்லறது. அவ செஞ்சது தப்புதான். ஒத்துக்கறேன். அவ அப்படி செஞ்சதுக்கான காரணம் தெரிஞ்சா உனக்கு அவளை மன்னிப்பது சுலபமா இருக்கும். அந்தக் காரணங்ளில் எதாவுது உன்னால நேர்ந்து இருந்தா நீ நிச்சயம் அதுக்குப் பொறுப்பு ஏத்துக்கணும். Instead of simply victimising her"

விஸ்வா, "I think I am the victim here. Vanitha had fun at my cost"

ராம், "Really? வனிதா அந்த மாதிரி வேணும்-ன்னு செய்யக் கூடியவ இல்லை. உனக்கு வருத்தத்தைக் கொடுக்கணும்-ன்னு செய்யலை. உனக்கு அது நல்லா தெரியும்"

விஸ்வா, "சரி, இப்போ நான் என்ன செய்யணும். சொல்லு"

ராம், "அவ அப்படி செஞ்சதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கணும்"

விஸ்வா, "எப்படியும் அதையும் அவளே டாக்டர் அமுதாகிட்டே சொல்லப் போறா"

ராம், "அவ கோணத்தில் சொல்லுவா. எந்த விதத்திலாவுது உனக்கு அது கஷ்டத்தைக் கொடுக்கும்-ன்னு அவ நினைச்சா சொல்லாமலும் இருக்கலாம். உன் கோணத்தில் என்ன காரணம் இருந்து இருக்கும்-ன்னு யோசி"

விஸ்வா, "என் கோணத்தில் ஒரு காரணமும் இல்லை"

ராம், "அதை உன்னால் நிச்சயமா சொல்ல முடியுமா?"

விஸ்வா, "எஸ்"

ராம், "சந்திரசேகரும் வனிதாவும் பேசிட்டதையே எடுத்துப்போம். ஏன் அந்த மாதிரி ஒரு பேச்சு வந்தது?"

விஸ்வா, "அதுக்குத்தான் வனிதாவே கடைசியா பதில் சொன்னாளே? தான் ஒரு நிம்ஃபோ-ன்னு ..."

ராம், "உனக்கு nimphomaniaன்னா என்ன-ன்னு தெரியுமா? சும்மா எதையாவுது அனுமானம் செஞ்சுக்காதே"

விஸ்வா, "அப்படி இல்லைன்னா சந்திரசேகர் சொன்ன மாதிரி அவர்கிட்டே கிடைப்பது அவளுக்கு என் கிட்டே கிடைக்கலை"

ராம், "மறுபடியும் ஏண்டா வெளியே கையை காண்பிச்சுட்டு இருக்கே? வீட்டில் அவளுக்கு எந்த அளவுக்கு நீ அந்த திருப்தியைக் கொடுத்தே-ன்னு முதல்ல யோசிச்சுப் பாரு. என் அனுமானம் இது. கடந்த ஒன்றரை வருஷமா நீ உன் வேலையைத் தவிற எதைப் பத்தியும் யோசிக்கலை. அனேகமா It would have affected your intimacy with Vanitha a lot ... நான் சொல்றது சரியா?"

விஸ்வாவின் முகம் வெளுத்தது ... பிறகு அவன் சுதாரித்துக் கொண்டு, "சோ, புருஷன் குடும்ப நலனுக்காக பிஸியா இருந்தா மனைவி உடம்பு சுகத்துக்காக வேற ஆள்கிட்டே போறது சரிங்கறியா?"

ராம், "எதுடா குடும்ப நலன்? நீ பெரிய பொஸிஷனுக்கு வர்றதா? அப்படியும் நம் தாத்தா, அப்பா, அம்மா, அத்தை மாமா இவங்க எல்லாம் உனக்காக விட்டுட்டுப் போகப் போற சொத்துக்கு மேல நீ ஒண்ணும் அதிகமா சம்பாதிக்கப் போறது இல்லை. அப்பறம் எது குடும்ப நலன்?"

விஸ்வா மௌனம் காத்தான் ...

ராம், "இதைச் சொல்லு, குழந்தைகள் பிறந்ததுக்குப் பிறகு உங்க ரெண்டு பேருக்கு இடையே எந்த அளவுக்கு நெருக்கம் இருந்தது? I mean in bed"

விஸ்வா, "எந்த அளவுக்குன்னா?"

ராம், "வெளிப்படையா கேட்கறேன். வாரத்துக்கு எத்தனை முறை நீ அவளோட உடலுறவு வெச்சுகிட்டே?"

விஸ்வா, "ம்ம்ம் ... மே பி ... வாரம் ஒரு முறை .. but definitely once a fortnight"

ராம், "ஏன் அவ்வளவு கம்மி?"

விஸ்வாவின் மனத்தில் தோன்றிய குற்ற உணற்வு அவனைத் தடுமாற வைத்தது ...

மறுபடி ராம், "ஏண்டா அவ்வளவு கம்மி? அவ வேண்டாம்-ன்னு சொன்னாளா?"

விஸ்வா, "இல்லை"

ராம், "நீ கேட்டு எப்பவாவுது அவ வேண்டாம்-ன்னு சொல்லி இருக்காளா?"

விஸ்வா, "இல்லை"

ராம், "நீ வேண்டாம்-ன்னு சொன்னியா?"

விஸ்வா, "Sometimes .. "

ராம், "ஏன்?"

விஸ்வா, "எனக்கு மூட் இல்லைன்னா வேண்டாம்-ன்னு சொல்வேன்"

ராம், "உங்க கல்யாணம் ஆன புதுசில் எவ்வளவு முறை ஒண்ணா இருந்து இருப்பீங்க?"

விஸ்வா, "ஆல்மோஸ்ட் டெயிலி"

ராம், "PMLஇல் வேலைக்கு சேர்ந்த பிறகு?"

விஸ்வா, "Again, தினம் தினம் .. அதுக்கு முன்னாடி வரைக்கும் படுக்கையில் ரொம்ப பாஸிவ்வா இருப்பா. ரொம்ப கூச்சப் படுவா. ஆனா எனக்கு வேலை கிடைச்ச ஒரு வாரத்தில் இருந்து சேஞ்ச் ஆக ஆரம்பிச்சா. வேலைக்கு சேர்ந்த பிறகு அவளுக்கு இருந்த கூச்சம் சுத்தமா காணாம போயிடுச்சு. அவளே நிறைய தரம் என்னை encourage பண்ணுவா. சந்திரசேகர் கொடுத்த ட்ரெயினிங்க்தான் அதுக்குக் காரணம்-ன்னு இப்போ புரியுது"

ராம், "அப்படி என்ன ட்ரெயினிங்க் கொடுத்தார்-ன்னு நீ நினைக்கறே? ப்ளீஸ் வெளிப்படையா சொல்லு. இதை நான் யார்கிட்டேயும் சொல்லப் போறது இல்லை"

விஸ்வா, "முன்னாடி எல்லாம் ஓரல் செக்ஸ் பண்ண என்னை அனுமதிக்க மாட்டா. சீக்கிரமா இன்டர்கோர்ஸ் பண்ணச் சொல்லுவா"

ராம், "அவர் கொடுத்த ட்ரெயினிங்குன்னே வெச்சுக்குவோம். அது உனக்கு அப்போ தெரியாது. சோ, PMLஇல் சேர்ந்ததுக்குப் பிறகு தினமும் இருந்த உறவு எப்போ இருந்து குறைய ஆரம்பிச்சது?"

விஸ்வா, "ப்ரெக்னெண்ட் ஆக இருந்தப்போ இருந்து ... "



ராம், "குழந்தை பிறந்ததுக்குப் பிறகு மறுபடி அதிகம் ஆகலையா?"

விஸ்வா, "ஆச்சு ... பட் ... அந்த அளவுக்கு இல்லை"

ராம், "ஏன்?"

விஸ்வா, "நாங்க ரெண்டு பேரும் ரொம்ப டையர்டா இருப்போம்"

ராம், "எப்போ இருந்து அவ மறுபடி ஆர்வம் காட்ட ஆரம்பிச்சா?"

விஸ்வா, "வனிதாவையும் குழந்தைகளையும் என் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்த பிறகு"

ராம், "அப்போ எல்லாம் எந்த அளவுக்கு இருந்தது?"

விஸ்வா, "அதான் சொன்னேனே .. நிச்சயம் ரெண்டு வாரத்துக்கு ஒரு முறையாவுது இருக்கும்"

ராம், "வனிதா இன்னும் அதிகமா வேணும்ன்னு கேட்கலையா? உண்மையைச் சொல்லு"

விஸ்வா தலை குனிந்தான் ...

ராம், "சொல்லுடா .. What used to happen?"

விஸ்வா, "குழந்தைங்க ரெண்டும் தூங்க நேரம் ஆகும் .. சில நாள் நான் சீக்கிரம் தூங்கிடுவேன்"

ராம், "சரி, அதே அளவுக்கு அந்த டெல்லி ஃபேருக்குப் போறதுக்கு முன்னாடி வரை இருந்ததா?"

விஸ்வா, "More or less. Come on Ram. நீ அனாவிசியமா என் மேல் பழியைப் போடறே. சரி, அப்படி வீட்டில் சுகம் கிடைக்கலைன்னா வெளியில் போகணுமா?"

ராம், "இல்லை. உன்னை டைவர்ஸ் பண்ணி இருக்கணும். உயிருக்கு உயிரா காதலிக்கறேன்னு சொல்லிட்டு அவளை சித்திரவதை செஞ்சு இருக்கே"

விஸ்வா, "நோ அவதான் என்னை புரிஞ்சுக்கலை"

ராம், "புரிஞ்சுட்டு என்ன செஞ்சு இருக்கணும்?"

விஸ்வா பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான் .. 



No comments:

Post a Comment