Tuesday, September 8, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 14

“ ஆமாம் மான்சிதான்,, அவ என்னைப் பத்தி என்ன நினைக்கிறா,, அவ மனசுல நான் எந்த இடத்துல இருக்கேன்னு எதுவுமே எனக்கு புரியலை,, நான் அவ கூடவே இருக்கனும்னு விரும்புறா,, என்கிட்ட ஒளிவுமறைவின்றி நடந்துக்குறா,, மொத்தத்துல நான் இந்த நாலுநாள்ல அவளுக்கு ரொம்ப முக்கியமாயிட்டேன், ஆனா இதுல துளிகூட காதல் இல்லை, அவளோட தனிமைக்கு கிடைச்ச என்னை அழுத்தமா பற்றிக்கொள்ள நினைக்கும் ஒரு எதிர்பார்ப்பு மட்டும்தான் அவகிட்ட தெரியுது,, அதுமட்டுமல்ல அருணா மேல அளவுகடந்த மரியாதையும் அன்பும் வச்சிருக்கா, இப்போ மான்சிக்கும் எனக்கும் கல்யாணம்னு சொன்னா அதை அருணாவுக்கு செய்ற துரோகமா நெனைச்சு நிச்சயமா ஒத்துக்கமாட்டா, அதோட அவளுக்கு சில விஷயங்கள் சுத்தமா தெரியலை” என்ற சத்யன் மெதுவாக தலைகுனிந்து மெல்லிய குரலில் “ இன்குலூடிங் லவ் அன்ட் செக்ஸ் ” என்று முடித்தான்



எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்,, சத்யனுக்கு என்ன ஆறுதல் சொல்லவது என்று யாருக்கும் புரியவில்லை,, சத்யனும் கழிவிரக்கத்தில் தலை நிமிரவில்லை

சற்றுநேரம் கழித்து பத்மாதான் ஆரம்பித்தாள் “ நீ சொல்றது புரியுது சத்யா,, எனக்கென்னவோ மான்சியைப் பார்த்தா அப்படி தோனலை,, அவளுக்கும் உன்மேல் ஒரு அபிப்ராயம் இருக்கும்னு நெனைக்கிறேன், ஆனா அது காதலா, வெறும் அன்பானு எனக்கு உறுதியா சொல்லத் தெரியலை,, அருணா மேல வச்சிருக்குற நல்ல அபிப்ராயம் வெறும் நூறுரூபாய் உதவிக்காக வந்தது,, ஆனா நீ அவளுக்கு மறுபடியும் உயிரையே குடுத்துருக்க, அதனால உன்னையும் அருணாவையும் ஒரே இடத்துல வச்சு பாக்கமாட்டா,, நீ எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சுக்குவா, இத்தனை நாளா நீ அருணாவைப் பத்தி சொல்லாததால மான்சியோட அபிப்ராயம் மாறாமல் இருந்திருக்கலாம்,, இனிமேல் நாமெல்லாம் சேர்ந்து எடுத்து சொல்லி புரியவைப்போம்,, அதோட மான்சிகிட்ட அருணா கையெழுத்து வாங்கின டாக்குமெண்ட் எல்லாம் இப்போ உன் கிட்டதானே இருக்கு, அதையெல்லாம் எடுத்துட்டு வந்து மான்சிகிட்ட படிக்கச் சொல்லுவோம், அவளும் காலேஜ் போய் படிச்சவ தானே, அருணாவோட துரோகத்தை படிச்சுட்டு தெரிஞ்சுக்கட்டும், தெரியாததை நாம் சொல்லி புரியவைப்போம்,, இதெல்லாம் ரொம்ப சுலபமான வேலையாத்தான் எனக்கு தெரியுது சத்யா,, ஆனா நீ கடைசியா சொன்ன ரெண்டு விஷயங்கள் பத்தி என்ன சொல்றதுன்னு எனக்கும் புரியலை சத்யா” என்று பத்மா தீர்கமான குரலில் பேசி முடித்தாள்
அவளது பேச்சில் சத்யனுக்கே ஒரு தெளிவு பிறந்திருந்தது,, அருணாவின் பிரச்சனையை தீர்க மான்சி கையெழுத்திட்ட அந்த பத்திரங்கள் உதவும் என்று அவன் யோசித்துப் பார்க்கவில்லை,, இப்போது பத்மா சொன்னதும் பாரம் இறங்கியது போல் இருந்தது, மான்சிக்கு எப்படியும் அருணாவைப் பற்றி புரியவைத்து விடலாம் என்ற தைரியம் வந்தது,

ஆனால் மான்சியின் மனதில் எனது நிலை என்ன? இதுக்கு விடையை யார் சொல்வது என்று சத்யன் அமைதியாக இருந்தான்

ராஜதுரை எழுந்து பலத்த யோசனையுடன் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தார், சற்றுநேரம் கழித்து “ ஏன் சத்யா இப்படி செஞ்சா என்ன,, அருணாவைப் பத்தி மான்சிக்கு புரியவைச்சதுக்கு பிறகு நீ எப்பவும்போல மான்சி கூட இரு ஒரு இருபதுநாள் கழிச்சு அவசர வேலையா வெளியூர் போறதா சொல்லிட்டு மும்பைக்கு போய் ஒருவாரம் தங்கிட்டு வா,, நீ சும்மா தங்கவேண்டாம் நம்ம நூல்மில் டெவலப் பண்றது சம்மந்தமா மும்பைல சிலவேலைகள் இருக்கு அதையெல்லாம் ஆளுங்களை பார்த்து பேசிமுடி, மறுபடியும் குழந்தைக்கு பேர் வைக்கிறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்தா போதும்,, நீ அங்கே இருக்குற அந்த ஒரு வாரத்துல மான்சியோட மனசு புரிஞ்சு போயிரும், எப்பவுமே பிரிவுதான் அன்புக்கு வலுச்சேர்க்கும், இது காதலுக்கும் பொருந்தும் சத்யா, மத்ததெல்லாம் கல்யாணம் ஆனா பெண்கள் தன்னால புரிஞ்சுக்குவாங்க, அதனால நீ பயப்பட தேவையில்லை ” என்று ராஜதுரை சத்யனின் பிரச்சனைக்கு தெளிவானதொரு முடிவைச் சொல்ல...


சத்யனுக்கும் அவர் சொல்வது சரியென்றே மனதில் பட்டது,, ஆனால் ஒருவாரம் மான்சியையும் குழந்தையையும் எப்படி பிரிந்து இருப்பது என்றுதான் புரியவில்லை

அவன் மனதை புரிந்த அவன் அம்மா எழுந்துவந்து மகனருகில் அமர்ந்து “ சத்யா அவளை விட்டுட்டு இருக்குறது உனக்கும் கஷ்டமாத்தான் இருக்கும், ஆனா வேற வழியில்லப்பா அப்பா சொல்ற மாதிரி நீ அவளை விட்டுட்டு ஒருவாரம் இருந்தாத்தான் அவளுக்கு நீ யாருன்னு புரியும், நீ வர்றவரைக்கும் அவளை கவனமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு சத்யா, நீ தைரியமா ஆகவேண்டியதை பாரு” என்று மகனுக்கு ஆறுதல் சொல்லி நிலைமையை புரியவைத்தாள்

சத்யனுக்கும் அதற்கு மேல் மறுத்து பேச எதுவுமில்லை,, இதுதான் பிரச்சனைக்கு தீர்வு என்று தெளிவாகப் புரிந்தது,, பிரிவு எனும் கசப்பான மருந்தை உண்டால்தான் மான்சியின் காதல் கிடைக்கும் என்றால் அதற்கு தயார், என்று நினைத்தவன் சோபாவில் இருந்து எழுந்து “ நீங்க சொல்றது தான் சரிப்பா, நான் முப்பைக்கு போறதுக்கு தயார், நீங்க அதுக்கு தேவையான ஏற்பாட்டை பாருங்க, நான் அதுக்குள்ள அருணாவோட பிரச்சனையை சமாளிக்கிறேன்” என்று கூறிவிட்டு கதவை நோக்கி போனான்

அவன் பின்னோடு வந்த ராஜதுரை சத்யனின் தோளில் கைவைத்து “ அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சத்யா,, இனிமேல் மான்சியை ஒரு குழந்தையை ட்ரீட் பண்றமாதிரி பண்ணாதே, உன்னோட ஒவ்வொரு செயலிலும் உன் காதலை அவளுக்கு உணர்த்து, அதை அவ இப்போ புரிஞ்சுக்கலேன்னாலும் பரவாயில்லை,, அந்த ஒருவார பிரிவு புரியவைக்கும்,, நான் சொல்றது உனக்கு புரியும்னு நெனைக்கிறேன்” என்று ராஜதுரை சொல்ல.

“ ஆமாம் சத்யா புரியலைன்னா உன் அப்பாகிட்டயே கேளு, எப்படி காதலிக்குறதுன்னு மகனுக்கு க்ளாஸ் எடுப்பார்,, அய்யோ கடவுளே என்னமோ மகனுக்கு ஒன்னுமே தெரியாத மாதிரில்ல மாமா சொல்றாரு,, ஏற்கனவே உங்க மகன் அவளை கீழயே விடலை, இப்போ நீங்க வேற சொல்லிட்டீங்களா இனிமே நைட்ல கூட நெஞ்சுமேலயே போட்டு தூங்கவைப்பான் சத்யா” என்று பத்மா கேலி பேச, சூழ்நிலை இயல்பானது

இரவில் மான்சி தன் நெஞ்சில் படுக்கவைத்து தூங்க வைத்தால் எப்படியிருக்கும் என்ற நினைப்பில் உள்ளம் துள்ள, சத்யன் வாய்கொள்ளா சிரிப்புடன் மாடிக்குப் போனான்,

அன்றுமாலை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மான்சிக்கும் குழந்தைக்கும் உடல்நலம் பற்றிய செக்கப் செய்யவேண்டும் என்று பூங்கோதை சொல்ல, சத்யன், பத்மா, பூங்கோதை, மூவரும் மான்சி குழந்தையுடன் மருத்துவமனைக்கு கிளம்பினார்கள்,,

சில பரிசோதனைகளுக்குப் பிறகு இருவரும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லி, மான்சியின் உடல் பலம்பெற சில மருந்துகளை மட்டும் எழுதி கொடுத்தார் டாக்டர்

அனைவரையும் கொண்டு வந்து வீட்டில் விட்ட சத்யன் “ கொஞ்சம் வேலையிருக்கு இதோ வந்திர்றேன் என்று கூறிவிட்டு அருணாவும் அவனும் இருந்த வீட்டுக்கு சென்றான்

காரை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே போய் தனது அறைக்குள் சென்று ஒரு பெட்டியிலும் பேக்கிலும் தனது உடமைகளை எடுத்து வைத்தவன் மறக்காமல், மான்சி கையெழுத்திட்ட பத்திரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டான், அவற்றை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்த சத்யனை எதிர்கொண்ட வீட்டின் பாதுகாப்பாளர் 




“ நீங்க வந்தா உடனே போன் பண்ணி மேடம் தகவல் சொல்லச் சொன்னாங்க,, போன் பண்ணிருக்கேன், உங்களுக்கு இப்போ கால் பண்ணுவாங்க பேசிட்டு நீங்க போகலாம் சார்” என்று பணிவுபோல் உத்தரவாய் சொல்ல

சத்யன் உள்ளுக்குள் புகைச்சலுடன் சோபாவில் அமர்ந்தான்,, சற்றுநேரத்தில் வீட்டில் இருந்த தொலைப்பேசி ஒலிக்க, செக்யூரிட்டி அதை எடுத்து பேசிய அடுத்த வினாடி “ சார் உங்களுக்குத்தான் மேடம் பேசுறாங்க” என்றான்

சத்யன் எழுந்துசென்று போனை வாங்கி காதில் வைத்து “ ஹலோ” என்றான்
மறுமுனையில் அருணாவின் குரல் எகத்தாளமாக ஒலித்தது “ என்ன சத்யா அந்த வண்ணாத்தி மகளோடயே செட்டிலாயிட்டப் போலருக்கு, எனக்குத் தெரிஞ்சு அவ சரியான லூசு, உன் லூசு பேமிலிக்கும் அவளுக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும், ஆனா இதை நான் சும்மா விடுவேன்னு நெனைச்சியா சத்யா, நாலுநாளா நடந்த எல்லாமே எனக்குத் தெரியும்,, உன்னோட லூசு பேமிலி மொத்தமும் ஊட்டிக்குப் போய் அவளையும் அவ குட்டியையும் பார்த்தாங்களாமே, என்னை எப்ப ஒழிச்சுக்கட்டலாம்னு ப்ளானோட இருக்காங்களா,, அதுமட்டும் என்கிட்ட நடக்காது சத்யா,, இந்த அருணாவை யாராலும் அசைக்க முடியாது,, ஆனா அவளையும் உன்னையும் நாரடிக்காம விடமாட்டேன் ” என்று கடுமையான வார்த்தைகளைப் பேசி சத்யனுக்கு ஆத்திரத்தை மூட்டினாள்

அவள் பேசிமுடிக்கும் வரை தனது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்த சத்யன், அவள் முடித்ததும் “ ஏய் ச்சீ வாயை மூடுடி,, இந்த ஏழுவருஷமா நான் உன்கிட்ட பொறுத்துப்போனதுக்கு காரணம் என்
பேமிலிதான், என் குடும்ப கௌரவம் முக்கியம தெரிஞ்சதால உன்னை ஒதுக்காம, உன் குறைகளை பொறுத்து அதை வெளியே சொல்லாம அமைதியா வாழ்ந்தேன், ஆனா இப்போ அவங்களே உன்னை எந்தளவுக்கு வெறுக்குறாங்கன்னு தெரிஞ்சுபோச்சு, இனிமேல் நான் யாருக்காகவும் தயங்கி ஒதுங்கப் போறதில்லை, நான் எனக்காக, என் மான்சிக்காக, என் மகனுக்காக வாழப்போறேன், உன்னால என்னை ஓன்னும் பண்ணமுடியாது, ஒழுங்கா எனக்கு டைவர்ஸ் குடுத்துட்டு உன் பிஸினஸை உன்னோட கட்டிக்கிட்டு அழு, இல்ல உன்னோட குறைகளை கோர்ட்ல வச்சு நான் ஏலம் போடனும்னு விரும்புனா நீ நெனைக்கிறதை நடத்து ” என்று ஆத்திரமாய் சத்யன் பேச

எதிர்முனையில் சிறிதுநேரம் எந்த பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்தது பிறகு “ என்ன சத்யா உனக்கு இவ்வளவு பேசத்தெரியுமா? எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு” என்று நக்கலாக கேட்டாள் அருணா

அந்த நக்கல் சத்யனின் கோபத்தை மேலும் கிளறிவிட “ ஏய் நான் ஆம்பளைடி என்னால எதுவும் முடியும், ஆனா ஒரு பெண்ணுக்கு எதிரா என்னோட வீரத்தை பயண்படுத்தக்கூடாதுன்னு இத்தனை நாளா அமைதியா இருந்தேன், ஆனா மான்சி விஷயத்துல நீ ஒரு பொண்ணா மட்டும் இல்லை ஒரு இதயமுள்ளவளா கூட நடந்துக்கலை, ஒரு அப்பாவிப் பொண்ணு உன்னோட தேவைக்கு பயன்படுத்தி, அவளை கொண்டு வந்து ஊட்டில வச்சு அதனால அவ தன் தாயை இழந்து நிர்கதியா நிற்க வச்சியே,, அந்த சமயத்துல நான் அந்த இடத்துக்கு போகலைன்னா மான்சியோட கதி என்னாயிருக்கும்னு என்னால நெனைச்சுக் கூட பார்க்க முடியலை, உன்னால மான்சி தன் தாயை இழந்தாளே என்னால அதை மட்டும் மன்னிக்கவே முடியாது,, ச்சீ நீயெல்லாம் ஒரு பொம்பளையாடி,, இனிமேல் தான்டி இந்த சத்யனோட மறுபக்கத்தை பார்க்கப் போற” என்று இரைந்து கத்த,, எதிர்முனையில் எந்த பதிலுமின்றி இணைப்பு துண்டிக்கப்பட்டது


ச்சே, என்று ஆத்திரத்துடன் போனை வீசியெறிந்து விட்டு தனது பெட்டியை சத்யன் எடுக்க ,, அவன் கையை விலக்கி “ குடுங்க சார் நான் எடுத்துட்டு வர்றேன்” என்ற செக்யூரிட்டி சத்யனின் உடைமைகளை எடுத்துச்சென்று அவனது காரில் வைத்தான்

சத்யன் ஏறியமர கார் கதவை திறந்தவன், அவன் அமர்ந்ததும் கதவை மூடிவிட்டு “ பையன் பொறந்ததுக்கு வாழ்த்துக்கள் சார், எல்லாம் நல்லபடியாக முடிய ஜீசஸை பிரார்த்திக்கிறேன் சார்” என்றான்

சத்யன் வீட்டுக்கு போகும்போதும் மனதின் கொதிப்பு அடங்கவில்லை, வீட்டுக்குள் நுழைந்ததும் வேலைக்காரர்கள் எடுத்து வந்த பெட்டியில் இருந்து அந்த பத்திரங்களை எடுத்து தன் அப்பாவிடம் கொடுத்தான்,

அமர்ந்து நிதானமாக அதை முழுவதும் படித்துவிட்டு சத்யனிடம் கொடுத்தார் “ அருணாவுக்கு நல்ல கிரிமினல் மைன்ட் சத்யா,, ஒரு உலகம் தெரியாத சின்னப் பொண்ணுகிட்ட எப்படி எழுதி வாங்கியிருக்காப் பாரு, சரி சரி இதைப்பத்தி மான்சிகிட்ட நாளைக்கு பேச ஆரம்பி இன்னிக்கே வேண்டாம்,, அப்புறம் மான்சி இன்னும் சாப்பிடலையாம் நீ வந்ததும் சாப்பிடுறேன்னு பிடிவாதமா உட்கார்ந்திருக்காலாம்” என்று ராஜதுரை சொன்ன மறாவது நிமிடம் சத்யன் மாடிப்படிகளில் தாவியேறிக்கொண்டு இருந்தான், ராஜதுரை சிரித்துக்கொண்டே வந்திருந்த விருந்தினரை காணச்சென்றார்

முதலில் தனது அறைக்குள் போய் லாக்கரில் பத்திரங்களை வைத்தவன், பின்னாலேயே பெட்டியோடு வந்த வேலைக்காரனிடம் பெட்டியை எங்கே வைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு மான்சியின் அறைக்கு ஓடினான்

அங்கே மான்சி கட்டிலில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பால் கொடுத்துக்கொண்டு இருக்க, அவள் பக்கத்தில் சாப்பாட்டு தட்டுடன் இருந்த பத்மா சத்யனைப் பார்த்துவிட்டு “ யம்மாடி மான்சி இதோ உன் சத்யன் வந்துட்டான்,, இனிமேல் அவன் பாடு உன்பாடு” என்று சாப்பாட்டை மேசையில் வைத்துவிட்டு சத்யனிடம் வந்து “ அவ இன்னும் சாப்பிடலை,, கேட்டா அவரு வந்துரட்டும்னு சொல்றா, நீயே சாப்பாடு குடு நான் கிளம்புறேன்,, அப்புறம் மொதல்ல கைகால் கழுவிட்டு குழந்தைகிட்ட போ சத்யா” என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்

சத்யன் பாத்ரூமுக்கு போய் உடைகளை கலைந்து சின்னதாய் ஒரு குளியலே போட்டுவிட்டு, ஒரு டவலை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வெளியே வந்தான்,,

மான்சி அவனை வியப்பாக பார்க்க,, அவள் பார்வையின் அர்த்தம் சத்யனுக்கு புரிந்தது, ஊட்டியில் இருந்த நான்கு நாட்களும் சத்யன் பாத்ரூமுக்குள்ளேயே தான் உடை மாற்றிவிட்டு வருவது வழக்கம், இடுப்பில் டவலுடன் மான்சி எதிரில் நிற்பது இதுதான் முதல்முறை



சத்யன் தனது அறைக்குப் போய்தான் வேறு உடை மாற்றவேண்டும், அதற்குள் மான்சிக்கு சாப்பாட்டை கொடுத்துவிட்டு போகலாம் என்ற எண்ணத்தில் கட்டிலில் அமர்ந்து குழந்தை தூக்கிவிட்டதை பார்த்து குழந்தையை எடுத்து தொட்டிலில் கிட்டத்தினான்

மேசையில் இருந்த சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு மான்சியின் எதிராக அமர்ந்து அதில் இருந்த இட்லியின் மீது சாம்பாரை ஊற்றி விரலால் பிய்த்து சாம்பாரில் தொட்டு மான்சியின் வாயருகே எடுத்துச்சென்றவன் அப்படியே நிறுத்தினான்

மான்சி அவனையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள், அவளின் பார்வை சத்யனின் நெஞ்சில் நிலைத்து இருந்தது

“ என்னாச்சு மான்சி, என்ன அப்படி பார்க்குற” என்று சத்யன் புரியாத பாவனையுடன் கேட்க

பட்டென்று கனவில் இருந்து விழிப்பவள் போல விழித்த மான்சி “ ஆங் அது வந்து, உங்களுக்கு நெஞ்சில் ஏன் இவ்வளவு முடியிருக்கு” என்றவள் எட்டி அவன் நெஞ்சில் சுருண்டிருந்த முடியை விரலால் சுற்றி இழுத்துவிட்டு குழந்தையாய் தலைசாய்த்து சிரித்தாள்



No comments:

Post a Comment