Friday, September 11, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 21

சத்யன் தூங்கியதும் மான்சி அவன் அணைப்பில் இருந்து விடுபடாமல் அவளும் உறங்கிப்போனாள், நல்ல உறக்கத்தில் சத்யனின் மொபைல் ஒலிக்கும் ஓசை எங்கே கனவில் கேட்பது போல் கேட்டது,,

சத்யன் சிரமமாய் கண்விழித்து மொபைலின் ஒலிகேட்ட இடத்தை தேடினான், சற்று தொலைவில் அவன் அவிழ்த்து போட்டிருந்த பேன்டில் இருந்தான் ஓசை வந்தது, எழுந்து போய் எடுக்க ரொம்பவே சிரமமாக இருந்தது, அவன் யோசிக்கும் போதே ஓசை நின்று போனது

நிம்மதியாய் ஒரு புன்னகை உதட்டில் நெளிய பக்கத்தில் கிடந்த மான்சியை அணைத்துக்கொண்டு மறுபடியும் தூங்க முயலும்போதே மறுபடியும் போன் ஒலித்தது, இப்போது இன்டர்காம் ஒலிக்க பக்கத்திலேயே இருந்ததால் எட்டி எடுத்து காதில் வைத்தான்



அடுத்த முனையில் அவன் அப்பாதான் " குட்மார்னிங் சத்யா" என்றார்

" ம்ம் குட்மார்னிங் ஹெவ் எ நைஸ் டே டாட்" என்றான் சத்யன்

சத்யன் அவரை டாடி என்று அழைத்து பல வருடங்கள் ஆகியிருக்க, இன்று அவனது இந்த வார்த்தை அவரிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்து அவரின் மவுனத்திலேயே புரிய,, சத்யன் சிறு புன்னகையுடன் " சொல்லுங்க டாட் என்ன இந்த நேரத்துல" என்று சத்யன் கேட்க

" இந்த நேரத்துலயா? மணியை பாருடா மகனே, ஐந்தரை ஆகுது" என்று கேட்டவரின் குரலில் உற்சாகம்

மணி ஐந்தரையா? சத்யனுக்கு திகைப்பாக இருந்தது " ஓ ஸாரி டாட் நான் பார்க்கலை" என்று சங்கடமாக சொல்ல

“ பரவாயில்லை சத்யா உனக்கும் மோசமான பிரயாண களைப்பு இருக்கும் ஆனா இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாள் சத்யா,, கிட்டத்தட்ட உனக்கு மறுவாழ்வு மாதிரி, அய்யர் ஒன்பது மணிக்கு வருவார் அதுக்குள்ள நாம தயாரா இருக்கனும்,, ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும் கொஞ்சம் கீழே வா சத்யா,, அதுக்குத்தான் போன் பண்ணி எழுப்பினேன், ” என்று ராஜதுரை மெல்லிய குரலில் கூற

“ ம் சரிப்பா இதோ வர்றேன், வச்சிர்றேன்பா ” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு, அப்பா எதற்காக கூப்பிட்டிருக்கிறார் என்ற நினைப்பிலேயே எழுந்த சத்யன் , தன் நெஞ்சில் கலைந்த பூமாலையாக கிடந்த மான்சியை மெல்ல விளக்கி தன் நெஞ்சுக்கு பதிலாக ஒரு தலையணையை எடுத்து அவள் தலைக்கு கொடுத்துவிட்டு விலகி எழுந்தவன் தலையணை எடுத்த இடத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த துணி கவனத்தை கவர “ என்னது இது” என்று எடுத்து பார்த்தான்

அவனது நீலநிற அழுக்கு சட்டைதான் அது, அதை தன் கையிலெடுத்தவனின் உடல் பூரிப்பில் சிலிர்த்தது , இது மும்பை போறதுக்கு முதல் நாள் போட்டிருந்த சட்டை, அப்படியானால் இந்த ஒரு வாரமாக என் சட்டையோடு தான் வாழ்ந்தாளா?” என்று எண்ணியவன் கண்கள் அவள் காதலை கண்டு பனித்தன,

‘ம்ம் ஒரு வாரமா அவ மேலயே கிடந்த அந்த சட்டை செய்த புண்ணியத்தை நினைத்து சிரித்தபடி எழுந்தவனை ஒருக்களித்து படுத்து இடுப்பு வரை மட்டுமே போர்த்தியிருந்த மான்சியின் உடல் வனப்பு பிடித்து நிறுத்த, துணி மூடாத அவளின் அழகை தள்ளி நின்று விழியெடுக்காமல் ரசித்துவிட்டு அவள்மீது கிடந்த போர்வையை இழுத்து கழுத்துவரை மூடிவிட்டு கீழே கிடந்த தனது உடைகளையும் பொறுக்கிக் கொண்டு பாத்ரூமுக்கு போனான்,

நீலநிற சட்டையோடு எல்லா துணிகளையும் அழுக்கு கூடையில் போட்டுவிட்டு, ஹீட்டரை ஆன்செய்தான், தனது பிரஷில் பேஸ்ட்டை வைத்துக்கொண்டு கண்ணாடியின் முன்பு வந்து நின்ற சத்யன், கண்ணாடியில் தெரிந்த தனது முகத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தான்

தலைமுடிகள் கத்தையாய் நெற்றியில் வழிய, அவளின் நெற்றியில் இருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டு அவன் காதோரம் ஒட்டியிருந்தது,, எப்போதும் அழகாக கத்தையாக இருக்கும் மீசை முடிகள், ஒன்றோடு ஒட்டிக்கொண்டு வித்தியாசமாய் தெரிந்தது, மீசை முடிகள் என்ன காரணத்தால் ஒட்டிக்கொண்டன என்று நினைத்துப் பார்த்து மறுபடியும் சந்தோஷமாக சிரித்தான்,, ‘நல்லவேளையா இந்த மூஞ்சிய யாரும் பார்க்கலை, பார்த்திருந்தா மானம் போயிருக்கும், என்று எண்ணி எண்ணி சிரித்தான்

அவள் நெற்றிப்பொட்டை எடுத்து தனது வலது உள்ளங்கையில் ஒட்டிக்கொண்டு தண்ணீரை பிடித்து முகத்தில் அடித்து முகத்தை கழுவினான், மீசையில் இருந்த பிசுபிசுப்பை தேய்த்து கழுவினான், மறுபடியும் கண்ணாடியில் பார்த்தான் இப்போது பரவாயில்லை,, ஆனாலும் குளித்துவிட்டு கீழே போவதுதான் நல்லது என்று எண்ணி ஷவரை திறந்து வெந்நீரை கலந்து குளித்தான்

குளித்துவிட்டு வந்த பிறகும் மான்சி எழுந்திருக்கவே இல்லை, கீழே போய்விட்டு வந்து அவளை எழுப்பலாம், என்று நினைத்து மகனை மட்டும் எட்டிப்பார்த்து விட்டு தனது அறைக்குச் சென்று உடை மாட்டிக்கொண்டு கீழே வந்தான்

கீழே வந்தவன் தன் வீட்டைப் பார்த்து அசந்து போனான்,, வீடே திருவிழா போல் தோரணங்களும் விருந்தினருமாக திமிறியது,, இவங்கல்லாம் எப்பவந்தாங்க?,, எங்க இருந்தாங்க?,, எத்தனை மணிக்கு முழிச்சாங்க?,, என்ற கேள்விகளுடன் வியப்பாக பார்த்தான்

அவனைப் பார்த்த சொந்தங்களை சிறு புன்னகையுடன் வரவேற்று விட்டு முகம் முழுவதும் புன்னகையோடு தனது அப்பாவின் அறைக்குள் போனான் சத்யன்

ராஜதுரை சோபாவில் யோசனையோடு அமர்ந்திருக்க சத்யன் அவருக்கு எதிரே அமர்ந்தான்,,

மகனை நிமிர்ந்து பார்த்தவர் ‘ வா சத்யா நேத்து டிராவலிங் ரொம்ப கஷ்டம் போலருக்கு,, ரொம்ப டயர்டா வந்தியாம், உன் அம்மாவும் அண்ணியும் சொன்னாங்க” என்று கேட்க

“ ஆமாம்பா பஸ்ல மாறி மாறி வந்திடலாம்னு கிளம்பினேன்,, நான் நெனைச்சபடி கரெக்டா எந்த பஸ் கிடைக்கலை அதான் ரொம்ப அலைச்சல்,, என்று சத்யன் சொல்லிவிட்டு, தனது உள்ளங்கையில் இருந்த மான்சி நெற்றிப்பொட்டை ரகசியமாக தடவிய வாறு “ ஏதோ பேசனும்னு சொன்னீங்களே டாட், என்ன விஷயம்” என்றான்

“ ம்ம் சொல்றேன், அதுக்கு முன்னாடி நைட்டு நீ வரும்போது மான்சி முழிச்சிருந்தாளா? இன்னிக்கு மேரேஜ் பத்தி அவகிட்ட பேசினியா?,, அவளுக்கு ஓகேயா?,, அவளோட ரியாக்ஷன் எப்படி இருந்தது?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்ட அப்பாவை பார்க்க சங்கடப்பட்டு தலையை கவிழ்ந்த சத்யன்

“ ம் முழிச்சுதான் இருந்தா, அவகிட்ட பேசினேன்,, ஆனா மேரேஜ் பத்தி எதுவும் பேசலைப்பா, இருந்தாலும் அவளுக்கும் ஓகேதான்” என்று சத்யன் சொல்ல

“ என்ன சத்யா இது, இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம்,, நீ என்னடான்னா இன்னும் சொல்லலைன்னு சொல்ற,, அப்புறம் அவ ஏதாவது முரண்டு பண்ணா என்னப் பண்றது சத்யா” என்று ராஜதுரை வருத்தமாக கேட்க

“ அதெல்லாம் முரண்டு பண்ணமாட்டா,, அவளுக்கும் இஷ்டம்தான் எனக்கு தெரியும்பா” என்று சத்யன் சொல்ல

மகனை கேள்வியாய் பார்த்தவர் “ நான் எதுக்கு கேட்கிறேன்னா, அவளை பற்றி நீதான் இரண்டு விஷயங்களை சொன்ன, அதெல்லாம் எந்தளவுக்கு சரியாயிருக்குன்னு தெரியாம உங்களுக்கு திருமண ஏற்பாடு பண்ணவே எனக்கு உறுத்தலா இருந்தது சத்யா,, அதனால்தான் ” என்று தனது காரணத்தை சொல்லி மகனை பார்த்தார் ராஜதுரை

“ அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லப்பா அவ எல்லாமே புரிஞ்சுகிட்டா” என்று மெல்லிய குரலில் கூறியவன், நிமிர்ந்து தன் அப்பாவைப் பார்த்து ஒரு வெட்கச் சிரிப்புடன் “ ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க டாடி,, எல்லாம் சால்வ் ஆயிடுச்சு,, வேற ஏதாவது பேசுங்களேன் ப்ளீஸ்” என்று கூறிவிட்டு சிரிப்புடன் அறையை நோட்டம் விடுபவன் போல் பார்வையை திருப்பிக்கொண்டான்

தனது முப்பத்திரண்டு வயது மகனின் வெட்கச் சிரிப்பை பார்த்ததும் ராஜதுரைக்கு புரிந்துவிட்டது,, ம்ம் நான் சொன்ன பிரிவு வைத்தியம் சரியா வேலை செய்தது போல, என்று தனக்குத் தானே சபாஷ் சொல்லிகொண்டார்,, பிறகு ஏதோ நினைவு வந்து எழுந்து போய் பீரோவை திறந்து ஒரு கவரை எடுத்துக்கொண்டு மறுபடியும் சோபாவில் அமர்ந்து அந்த கவரை சத்யனிடம் நீட்டினார்

குழப்பத்துடன் கவரை வாங்கிய சத்யன் “ என்னப் கவர்ல ” என்று கேட்க

“ நாம அனுப்பின மான்சியோட நோட்டீஸ்க்கும், உன்னோட விவாகரத்து கேட்ட நோட்டீஸ்க்கும் அருணா அனுப்பிய பதில் சத்யா படிச்சுப் பாரு ” என்றார் ராஜதுரை


“ ஓஹோ” என்றவன் கவரைப் பிரித்து அருணாவின் இரண்டு பதில்களையும் கவனமாக படித்தான்,, பிறகு நிமிர்ந்து அமர்ந்து “ இது என்னப்பா டோட்டலா சரண்டர் ஆயிருக்க மாதிரி தெரியுது,, என்ன காரணமாயிருக்கும்?” என்று அப்பாவிடம் கேட்க

“ என்ன சத்யா புரியலையா,, அவ மான்சிகிட்ட இருந்து எழுதி வாங்கினது எல்லாம் உன்கிட்ட மாட்டிகிட்டதுன்னு அருணாவுக்கு தெரியாமலா இருந்திருக்கும்,, அந்த தைரியத்தில் தான் மான்சியின் சார்பாக நாம நோட்டீஸ் அனுப்பிருக்கோம்னு கரெக்டா புரிஞ்சு இந்த பதில் அனுப்பியிருக்கா” என்று ராஜதுரை மகனுக்கு புரியவைக்க

“ ஆமாம்பா கரெக்டா சொன்னீங்க,, வாடகைத்தாயா அழைத்து வந்து, அந்த அபலையை நிராதரவாக விட்டதால் மனித உரிமை ஆணையத்திடம் மான்சி சார்பா புகார் செய்யப்பட்டு, மகளிர் அமைப்புகள் மூலமாக அருணாவை எதிர்த்து கண்டன போராட்டம் நடத்தப்படும்னு நம்ம லாயர் பக்காவாக நோட்டீஸ் கிரியேட் பண்ணும்போதே நெனைச்சேன் அருணாவை இந்த நோட்டீஸ் அசக்கிப் பார்க்கும்னு, நம்ம லாயருக்கு செம மூளைப்பா” என்று சந்தோஷப்பட்டவன்

“ ஆனா மான்சி சம்மந்தமாக இந்தியா வந்ததும் முடிவெடுப்பதாகவும் அதுவரைக்கும் தனக்கு டைம் கொடுக்கச் சொல்லி கேட்டுருக்கா சரி,, ஆனா என்னோட டைவர்ஸ் நோட்டிஸ்க்கும் அதே மாதிரி இரண்டு வருஷம் கழித்து இந்தியா வரும்போது பார்க்கலாம்னு பதில் அனுப்பியிருக்காளே அப்பா, இப்போ என்னப்பண்றது?” என்று சத்யன் குழப்பத்துடன் கேட்க

“ ஒரு பயமும் இல்லை சத்யா, நாம இரண்டு வருஷத்துக்கு எந்த குழப்பமும் இல்லாம இருக்கலாம், அருணா இந்தியா வந்தபிறகு அவ டைவர்ஸ் குடுத்தே ஆகனும் வேற வழியில்லை,, அவ மான்சிகிட்ட எழுதி வாங்கிய பேப்பர்ஸே அவளுக்கு எதிரா அமைஞ்சு போச்சு, இதை அவ எதிர்பார்த்திருக்க மாட்டா, அவ நிராதரவாக விட்டுட்டு போன மான்சியை அழைச்சுக்கிட்டு வந்து நீ நல்லதொரு வாழ்க்கையை அமைச்சு குடுத்திருக்கே என்ற விஷயமே உன்னை காப்பாத்தும் கோர்ட் இதை ஏத்துக்கலைன்னாலும் மற்ற அமைப்புகள் உனக்காகவும் மான்சிக்காகவும் போராடும், ஆனா அப்படியொரு நிலைமைக்கு அருணா நம்மலைத் தள்ளமாட்டா,, ஏன்னா அவளுக்கு தன்னோட கௌரவம் ரொம்ப முக்கியம், போராட்டம் அது இதுன்னா நிச்சயமா ஒதுக்கி போயிடுவான்னு நான் நினைக்கிறேன், ஆனா எது எப்படியோ இன்னும் இரண்டு வருஷம் கழிச்சுதான் எதையும் யோசிக்கனும், அதுவரைக்கும் நிம்மதியா இரு சத்யா ” என்று நிறைவுடன் ராஜதுரை கூற

“ ஆமா ஆமா அதுக்குள்ள உங்கப் புள்ள ரெண்டு பிள்ளை பெத்துடுவான், அப்பதான் குடும்பத்தோட போராட்டம் நடத்த வசதியா இருக்கும்” என்ற பத்மாவின் குரல் கேட்டு இருவரும் திரும்பினர்,

கையில் காபி ட்ரேயுடன் அறை வாசலில் நின்றவள் “ என்னப்பா கல்யாண மாப்பிள்ளை, நைட்டு என்னமோ அழுது விடிஞ்சுகிட்டு வந்து இறங்கின,, இப்போ என்னமோ இவ்வளவு ப்ரஸ்ஸா இருக்க, ஏதாவது சாமி வந்து நைட்டு அருள்வாக்கு குடுத்துச்சா?” என்ற நக்கல் செய்தபடி இருவருக்கும் காபி டம்ளரை எடுத்து கொடுத்தாள்

‘ அய்யய்யோ இவங்க வேற மானத்தை வாங்குறாங்களே’ என்று எண்ணிய சத்யன் காபியை குடிக்கும் சாக்கில் மெதுவாக எழுந்து அறைக்கு வெளியே வர

அவன் பின்னோடு வந்த பத்மா “ என்ன சத்யா பதிலே காணோம்,, அருள்வாக்கு கொடுத்த சாமி ஆம்பளை சாமியா? பொம்பளை சாமியா? எனக்கென்னவோ பொம்பளை சாமி மாதிரிதான் தெரியுது, ஏன்னா அந்த சாமி என்கிட்ட தானே யோசனை கேட்டுச்சு ” என்று தாடையில் ஒற்றை விரலை வைத்து யோசிப்பது போல் பத்மா பாவனை செய்ய

ஹாலில் இருந்த சோபாவின் கைப்பிடியில் லேசாய் அமர்ந்த சத்யன் “ ஓகோ இதெல்லாம் உங்க வேலை தானா, பூ மாதிரி இருந்தவளை புயல் மாதிரி மாத்திட்டீங்களே அண்ணி, ம்ஹூம் சான்சே இல்லை, ஆனா சுகமான புயல்” என்று சத்யன் காபியை ஒரு மிடரு விழுங்கி விட்டு கண்மூடி ரசிக்க,

அது ரசனை காபிக்கு இல்லை என்று பத்மாவுக்கு தெரியும் “ பூவோ புயலோ ஆகமொத்தம் புயல் கரையை கடந்துச்சா இல்லையா? அதை சொல்லு” என்று பத்மா கேலி செய்ய

சத்யன் காலி டம்ளரை ட்ரேயில் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து மாடிப்படிகளில் ஏறியவாறு பின்புறமாய் இரட்டை விரலை உயர்த்தி காட்டி “ ம்ம் ரெண்டு முறை புயல் கரையை கடந்து சொர்க்கத்துக்கேப் போச்சு” என்று சொல்லிவிட்டுப் போனான்

“ அடப்பாவி சின்ன குழந்தையை வச்சுகிட்டு,, பாத்து சத்யா குழந்தை பயந்துடப் போகுது” என்று கிண்டல் செய்துவிட்டு சிரிப்புடன் சமையலறையை நோக்கி சென்றவள் மறுபடியும் நின்று படியேறியவனை பார்த்து “ சத்யா அவளை சீக்கிரமா ரெடியாகச் சொல்லு, நகை புடவையெல்லாம் எடுத்துக்கிட்டு நானும் இதோ வர்றேன்” என்று குரல் கொடுத்தாள்




படிகளை கடந்து வளைவில் நின்று திரும்பிய சத்யன் “ பத்து நிமிஷம் கழிச்சு வாங்க அண்ணி” என்று சொல்ல

“ பத்து நிமிஷம் கழிச்சா? எல்லாம் நேரம்டா எனக்கு” என்று நெற்றியில் வலிக்காமல் தட்டிய பத்மா “ எதுக்கு போன் பண்ணிட்டே வர்றேன் பயப்படாதே” என்று கேலியாக கூறிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்

சத்யன் சிரித்தபடி படுக்கையறைக்குள் நுழைந்தான், கதவை சாத்திவிட்டு திரும்பியவன் கட்டிலில் இவனுக்கு முதுகுகாட்டி மான்சி அமர்ந்திருந்தாள், முகம் கழுவி வேறு நைட்டிக்கு மாறியிருந்தாள்

சத்யன் அவளுக்கு எதிரே தலையணையில் சாய்ந்தவாறு அமர்ந்து “ எஜமானி அம்மாவுக்கு இந்த அடிமையின் காலைவணக்கம்” என்று குறும்புடன் சொல்ல

அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்,,

அவளது மவுனம் சத்யனின் மனதை என்னவோ செய்ய, மனம் அதற்குள் ஆயிரம் கற்பனைகளை செய்து மவுனத்துக்கு காரணம் என்னவாயிருக்குமோ? என்று குழம்பி “ என்னாச்சு என் எஜமானிக்கு” என்று அவளை நெருங்கி தன் விரல்களால் அவள் நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்த, மான்சியின் கலங்கிய விழிகள் அவனை ஏறிட்டது

அவளின் கலங்கிய கண்களை பார்த்து பதறிப்போன சத்யன் “ என்னாச்சு மான்சி? ஏன்டா கண்ணு கலங்கியிருக்கு?” என்று குழப்பத்தோடு வினவ

அவனைப்பார்த்து முறைப்புடன் முகத்தைத் திருப்பிய மான்சி “ என் தலைகாணிக்கு கீழ இருந்த உங்க சட்டையை யாரு எடுத்து பாத்ரூம்ல அழுக்கு பொட்டியில போட்டது?” என்று அழுகையால் விம்மிய மார்புகளுடன் சத்யனை இம்சித்தபடி மான்சி கேட்க

“ ஸ்ஸ்ஸ் யப்பா இதுதானா” என்று ஒரு நிம்மதி பெருமூச்சை இழுத்துவிட்டவன் அவளை நெருங்கி அமர்ந்து “ நான்தான்டா எடுத்துட்டுப் போய் போட்டேன்” என்று அவளிடம் கூற

சீறலாய் நிமிர்ந்த மான்சி “ ஏன் எடுத்தீங்க, இந்த ஒரு வாரமா தினமும் காலையில எழுந்ததும் நான் அந்த சட்டையைத் தான் பார்க்கிறேன், இன்னிக்கு எழுந்ததும் அதை காணோம்னதும் எவ்வளவு அழுகையா வந்துச்சு தெரியுமா?” என்று மூக்கை உறிஞ்சினாள்

அவளது கபடற்ற பேச்சு அவனை ஏதோ செய்ய அவளை தன்னோடு சேர்த்து அணைத்த சத்யன் “ ஏய் லூசுப்பெண்ணே அசல் நானிருக்கும் போது என் அழுக்கு சட்டை எதுக்குடி, இனிமேல் தினமும் காலையில் என் முகத்தைத் தான பார்க்கப் போற, அப்புறம் எதுக்கு அழுக்கு சட்டைன்னு எடுத்துட்டுப் போய் போட்டுட்டேன்” என்று ஒரு குழந்தைக்கு சொல்வதுபோல் அவளுக்கு சொல்ல
அவனை ஆச்சர்யத்துடன் பார்த்து “ ஆமால்ல, ச்சே இதை யோசிக்காம லூசு மாதிரி அழுதுட்டேனே,, ஆமா நீங்க இப்போ மாதிரி ஊருக்குப் போனா அப்போ என்னப் பண்றது” என்று குழந்தையாய் தலைசரித்து மான்சி கேட்க

அவள் கூந்தலை செல்லமாய் கலைத்து “ இனிமேல் உன்னைவிட்டுட்டு நான் ஊருக்கே போறமாதிரி இல்லை,, அப்படியே போனாலும் உன்னையும் கூட்டிக்கிட்டுதான் போறதா முடிவு பண்ணிருக்கேன், என்னாலயும் இனிமேல் ஒருநாள் கூட உன்னை பிரிஞ்சு இருக்க முடியாதுடி” என்று சத்யன் சொன்னதும்

“நெசமாலுமே?’ என்று மான்சி விழிவிரித்து கேட்க

அவளைப் போலவே கண்களை அகலவிரித்து தலையை ஆட்டி “ மெச்சாலுமே உன்னையவிட்டுட்டு ஒருநாள் கூட இனிமே இருக்கமுடியாது மான்சி” என்று சத்யன் சொல்ல

“ ச்சு நான் அதை கேட்கலை நெசமாவே என்னையும் ஊருக்கு கூட்டிப் போவீங்களான்னு கேட்டேன்” என்று மான்சி சலிப்புடன் சொல்ல

“ ஆமாம் ஆமாம் எங்கப் போனாலும் இனிமேல் அம்மனி முந்தானையை பிடிச்சுகிட்டுதான் போறதுன்னு முடிவுபண்ணிட்டேன்” என்றான் சத்யன் குறும்புடன்

“ அப்படின்னா என்னைய ட்ரைன்ல கூட்டிட்டுப் போகனும், எனக்கு ட்ரைன் பொட்டியை எல்லாம் எண்ணிப்பார்க்கனும்னு ரொம்ப நாளா ஆசை” என்று கூறிய மான்சியை இழுத்து அணைத்துக்கொண்ட சத்யனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை மவுனமாக அவளை அணைத்திருந்தான்



“ என்ன கூட்டிட்டுப் போறீங்களா?” என்று மான்சி விடாமல் கேட்க..

“ ம்ம் கண்டிப்பா போகலாம் மான்சி” என்றவன் அவளை விலகி எழுந்து அவள் மடியில் இருந்த குழந்தையை எடுத்து தொட்டிலில் போட்டுவிட்டு மான்சியின் தோள்தொட்டு எழுப்பி “ இன்னிக்கு என்ன நாள்னு தெரியுமா மான்சி” என்று சத்யன் கூற

“ ஓ தெரியுமே இன்னிக்கு சாயங்காலம் தம்பிப்பாப்பாவுக்கு பேர் வைக்கப் போறாங்களாம், பாப்பாவுக்கும் எனக்கும் நிறைய புது டிரஸ் வாங்கிருக்காங்க அத்தை” என்று மான்சி கைகொட்டி குதூகலிக்க...

“ அது சாயங்காலம்,, இப்போ காலையில என்ன நடக்கப் போகுதுன்னு தெரியுமா?” என்று சத்யன் கேட்க

“ ம்ஹூம் தெரியாதே” என்று காதில் இருந்த தொங்கல்கள் ஆட மான்சி தலையை ஆட்டினாள்

“ சரி அதை பிறகு சொல்றேன் இப்போ போய் சீக்கிரமா குளிச்சிட்டு வா” என்று அவளை பாத்ரூம் வரை தள்ளிக்கொண்டு போனான் சத்யன்

பாத்ரூம் கதவை திறந்த மான்சி நின்று திரும்பி அவனைப் பார்த்து “ நீங்க குளிச்சிட்டீங்களா,, இன்னிக்கு ஊட்டில என்னை நீங்க குளிக்க வச்சீங்களே அதுமாதிரி குளிக்க வைப்பீங்கன்னு நெனைச்சேன், ஆனா நீங்க முன்னாடியே குளிச்சிட்டீங்க போங்க” என்று செல்லமாய் சினுங்கிய மான்சி கதவில் சாய்ந்துகொள்ள

ஆகாக என்று ஆர்பரித்த மனதை அடக்கிய சத்யன் “ அது உனக்கு உடம்பு சரியில்லேன்னு செஞ்சேன், இப்பதான் நல்லாயிட்டியே மான்சி?” என்று கூறிவிட்டு அவளை கூர்மையுடன் பார்த்தான்

கதவில் சாய்ந்திருந்தவள் கால்களை உதறிக்கொண்டு “ எங்க நல்லாயிட்டேன் இதோ இங்க வலிக்குது” என்று கழுத்தையும் “ இதோ இங்க வலிக்குது” என்று முழங்கை முட்டியையும் “ அப்புறம் இதோ இங்க வலிக்குது” என்று நைட்டியை உயர்த்தி கால் முட்டியை காட்டி “ இவ்ளோ வலியிருக்கு தெரியுமா?” என்று கதவில் ஒயிலாக சாய்ந்து கொண்டு செல்லமாய் மான்சி சொல்ல நடிக்கிறாள் என்று அவள் கண்களே சொன்னது

ம்ஹூம் இதுக்குமேல என்னாலயும் முடியாது என்று முடிவு செய்து அவளை நெருங்கிய சத்யன் “ அதுக்கென்ன மறுபடியும் குளிச்சா போச்சு” என்று தனது டீசர்ட்டை தலைவழியாக கழட்டிவிட்டு அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு பாத்ரூம் கதவை காலால் உதைத்து திறந்து கொண்டு உள்ளே போனவனை கடும் விரோதியாய் இன்டர்காம் அழைத்தது

“ ச்சே” என்று எரிச்சலுடன் வாய்விட்டு சொல்லிவிட்டு அவளை பாத்ரூமில் இறக்கிவிட்டு வந்து இன்டர்காமை எடுத்து கோபமாக “ ஹலோ யாரு?” என்றான்

“ அடேயப்பா வார்த்தையில நெருப்பு பறக்குது? ,, ரொம்ப முக்கியமான இடத்துல தொடரும் போட்டுட்டேனோ? ஆனா ராஜா அய்யர் வர இன்னும் ஒரு மணிநேரம் தான் இருக்கு அதுக்குள்ள உன் பொண்டாட்டியை ரெடி பண்ணனும் , நீகேட்ட பத்து நிமிஷம் முடிஞ்சு எக்ஸ்ட்ரா நாலு நிமிஷம் ஆயாச்சு, அதனால நல்ல பிள்ளையா உன் ரூமுக்கு போய் கல்யாணத்துக்கு வாங்கின உன்னோட டிரஸ்ஸை போட்டுகிட்டு வா, நான் இப்போ அங்க வந்து மான்சியை ரெடி பண்றேன்” என்று கூறிவிட்டு பத்மா போனை வைத்துவிட

ஏமாற்றத்துடன் திரும்பி மான்சியைப் பார்த்து “ சீக்கிரமா ரெடியாகி கீழே வரச்சொல்றாங்க, அண்ணி இங்கே வந்து உன்னை ரெடி பண்ணனுமாம் அதனால நாளைக்கு உன்னை குளிக்க வைக்கிறேன் மான்சி,, சரியாடா” என்று சத்யன் சொன்னதும்

உடனே முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டு “ ம் சரி நானே சீக்கிரமா குளிச்சிட்டு வர்றேன்,, ஆனா நாளைக்கும் இதே மாதிரிதான் எனக்கு வலிக்கும், அப்போ வந்து உடம்பு நல்லாயிருக்கேன்னு எதுவுமே கேட்காம குளிக்க வைக்கனும் சரியா?” என்று அவள் பதிலுக்கு சொன்னதும் ..

சத்யனுக்கு அவன் மனதை கட்டுப்படுத்துவது ரொம்ப கஷ்டமாயிருந்தது,, ஓடிப்போய் அவளை அணைத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போய் வாரக்கணக்கில் அங்கேயே இருந்துவிட்டால் என்ன என்று தோன்றியது சத்யனுக்கு,, ம்ஹூம் அதற்கு இது நேரமில்லை என்று மனதை அடக்கிக்கொண்டு “ ம்ம் சரி எதுவும் கேட்கமாட்டேன்” என்று உறுதி கூறியதும் மான்சி புன்னகையோடு உள்ளேப் போனாள்


சத்யன் தனது அறைக்கு போய் உடையை கலைந்துவிட்டு வேலைக்காரன் வைத்துவிட்டு போயிருந்த பையில் இருந்து பட்டுவேட்டி பட்டு சட்டையை எடுத்து அணிந்துகொண்டு கண்ணாடியருகே வந்து தனது அடர்ந்த கிராப்பை படியவைக்கும் முயற்சியில் இறங்கினான்

பிறகு நெற்றியில் சந்தனம் வைத்துக்கொண்டு, மும்பையில் இருந்து எடுத்துவந்த பொட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு பாக்ஸை எடுத்துக்கொண்டு மான்சியின் அறைக்கு வந்து கதவைத் தட்டினான்

பத்மா வந்து கதவை திறக்க உள்ளே நுழைந்த சத்யன் மான்சியைப் பார்த்து பிரமித்துப்போய் பேச்சிழந்து நின்றான்,, நான்கு அங்குல அகலத்தில் அரக்கில் கரைவைத்த பச்சைப் பட்டுடுத்தி,, அதற்கு மேட்சாக குட்டையாக கைவைத்த ரவிக்கை அணிந்து, நீண்ட கூந்தலை இறுக்கி சடை பிண்ணி அதில் மல்லிகைப் பூசரம் சுற்றி தலை உச்சியில் மல்லிகையும் கனகாம்பரமும் சென்டாக வைத்து வகிட்டில் நெற்றிச்சுட்டி வைத்து , நெற்றியில் சிவப்பு பொட்டும் அதன் கீழே குங்குமமும் மேல விபூதி கீற்றும், புருவத்தை அழகாக வரைந்து, பெரிய கண்ணுக்கு மைதீட்டி, நேர்நாசியில் ஒற்றை வைரம் மூக்குத்தியாக மின்ன, அவளின் இடது கன்னத்தில் திருஷ்டியாக ஒரு மை பொட்டும், ஏற்கனவே சிவந்த உதடுகளில் மெல்லிய உதட்டுச்சாயமும், காதுகளில் நீளமான ஜிமிக்கிகள் ஆட, கழுத்தில் அவர்களின் பரம்பரை நகைகள் அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருக்க, அவளின் மெல்லிய இடுப்பில் சலங்கை வைத்த தங்கச் சங்கிலியால் இழுத்து கட்டப்பட்டிருந்தது, இரண்டு கைகளில் தங்க வளையல்கள் நடுவிலும் பக்கத்தில் கல் வளையும் அடக்கப்பட்டிருந்தது,, கோவிலில் இருக்கும் சிலைகள் கூட என் காதலியை விட அழகு ரொம்ப குறைவு என்று அவன் மனம் நிமிடத்தில் ஒப்பிட்டு எடைபோட்டது

அவனைப்பார்த்ததும் கால் சலங்கைகள் சத்தமிட ஓடி வந்து குழந்தையாய் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு “ அய்யோ நீங்க வேட்டிகட்டினா எவ்வளவு அழகா இருக்கீங்க?” என்று சுற்றும்முற்றும் பாராமல் அவன் கன்னத்தில் அவள் இதழ்களை பதிக்க உதட்டுச்சாயம் தனது இதழோவியத்தை அவன் கன்னத்தில் வரைந்தது

அவளின் இடுப்பைப் பற்றி தள்ளி நிறுத்திய சத்யன் தலைமுதல் கால்வரை அவளை அளவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் “ ம்ஹும் நீயும் தான் தேவக்கன்னி மாதிரி இருக்க” என்றான்

அங்கிருந்த பத்மா இவர்களை கவனியாதது போல் இங்கீதமாக ஒதுங்கி காலியாயிருந்த நகைப் பொட்டிகளை அடுக்கினாள்

சத்யன் தன் கையில் இருந்த நகைப் பொட்டியை திறந்து அதிலிருந்து ஒரு லாங் செயினை எடுத்து மான்சியின் கழுத்தில் போட்டான், அந்த செயினில் இருந்த டாலரில் இரண்டு மான்கள் எதிரெதிராக நின்று கொம்புகளால் பின்னிக்கொண்டு இருப்பது போல் பொடி கற்கலால் வடிவமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக இருந்தது, அந்த டாலர் மான்சியின் தொப்புளை வந்து தொட்டது

“ அய்யோ எனக்கு பிடிச்ச பெரிய டாலர்ச் செயின், எனக்கு பெரிய செயின் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித்தெரியும்” என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு மான்சி கேட்க

அவள் இடையை வளைத்து “ ஊட்டில ஒருநாள் உனக்கு பிடிச்சதை எல்லாம் சொன்னியே, அதை ஞாபகம் வச்சுகிட்டு வாங்கினேன் மான்சி” என்று சத்யன் கூற

“ அய்யோ கடவுளே நான் ஒருத்தி இங்கே இருக்குறதையே மறந்துட்டு இப்புடி படம் ஓட்டுறாங்களே இதை கேட்க ஆளே இல்லையா?” என்று பத்மா போலியாக புலம்ப


மான்சியின் இடுப்பில் இருந்த கையை எடுக்காமலேயே பத்மாவின் அருகே வந்த சத்யன் “ இவங்களை என்னமோ நாம இங்கேயே இருங்கன்னு சொன்னமாதிரி இருக்கே, இவங்க கண்ணை மூடிக்கிட்டு போகவேண்டியது தானே?” என்று சத்யன் மான்சியைப் பார்த்து சொல்ல

“ அதானே போகவேண்டியதுதானே ” என்று மான்சியும் விழியால் அபிநயம் பிடித்தாள்

“ அடப்பாவிங்களா இவ்வளவு பேசுவீங்களா நீங்க,, இருங்க இருங்க இன்னிக்கு நைட் என்னோட தயவு இல்லாம நீங்க என்னப் பண்றீங்கன்னு பார்க்கிறேன், சகுனி வேலைப் பார்த்து உன்னை உன் ரூம்ல் படுக்க வைக்கலை என் பேரு பத்மா இல்லை” என்று பத்மா ஆவேசமாக மூச்சுவாங்க சத்யனிடம் சவால் விட

மான்சியின் முகவடிவை விரல்களால் அளந்த சத்யன் பத்மா திரும்பி பார்க்காமல் “ ஆமாம் அண்ணி எனக்கும் உங்கப் பேரு பிடிக்கலை, அதனால இன்னிக்கு நைட்டு பத்மாங்குற பேரை உப்புமான்னு மாத்திரலாம்,, ஆனா சேமியா உப்புமாவா ரவை உப்புமாவான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க, அதுமட்டும் உங்க சாய்ஸ்” என்று சிரியாமல் பத்மாவை வாறினான் சத்யன்

பத்மா ஏதோ சொல்ல வாய் திறந்த அதேநேரம் கீழேயிருந்து பூங்கோதையின் உரத்த குரல் கேட்க,, “ அய்யோ அய்யர் வந்துட்டாரு போல வாங்க ரெண்டுபேரும்” என்று குழந்தையை ஒருகையில் தூக்கி அணைத்துக்கொண்டு மறுகையால் சத்யன் மான்சி இருவரையும் தள்ளிக்கொண்டு வெளியே வந்தாள் பத்மா

இரண்டு எட்டு வைத்த பத்மா சட்டென்று நின்று "அய்யோ கடவுளே" என்று சத்யனிடம் திரும்பி தனது கர்சீப்பை கொடுத்து " மொதல்ல கன்னத்துல இருக்கு லிப்ஸ்டிக் கரையை தொடை, கீழே எல்லாரும் சிரிக்கப் போறாங்க" என்று கூற , சத்யன் சிரிப்புடன் கன்னத்தை துடைத்துக்கொண்டான்

மான்யின் இடுப்பில் கை போட்டு வளைத்துக்கொண்டு ஜோடியாக படியிறங்கிய இருவரையும் பார்த்து பூங்கோதையும் ராஜதுரையும் ஆனந்த கண்ணீரை மறைக்காமல் வழியவிட்டார்கள்

“ எங்க போறோம்” என்று கேட்ட மான்சியைப் பார்த்து “ ம்ம் கீழே போனதும் நீயே புரிஞ்சுக்கப் போற” என்றவன் ஹாலில் போடப்பட்டிருந்த மணையில் அய்யருக்கு எதிரே மான்சியுடன் அமர்ந்தான்

ஹோமம் வளர்த்தபடி அய்யர் மந்திரம் சொல்ல அவருக்கு அருகே வெள்ளித்தட்டில் மஞ்சள் தடவிய தேங்காயில் இருந்த மாங்கல்யத்தைப் பார்த்ததும் மான்சிக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து போனது

குழந்தையின் குதூகலத்துடன் “ ஹய்யோ நமக்கு கல்யாணமா?” என்று விழிவிரித்து கேட்க

முகமெல்லாம் சிரிப்பும் சந்தோஷமுமாக “ ம்ம், இந்த மான்குட்டிக்கும், ஒரு புலிக்கும் கல்யாணம்” என்று சத்யன் அவள் காதருகே கிசுகிசுக்க, மான்சியின் முகம் வெட்கத்தை பூசிக்கொள்ள அவனை நெருங்கி அமர்ந்தாள்

அய்யர் மந்திரங்களை சொல்லி ராஜதுரையும் பூங்கோதையும் மங்களநானை எடுத்து கொடுக்க சத்யன் மான்சி என்று மான்விழியாளின் கழுத்தில் கட்டினான், சுற்றியிருந்த உறவுக்கூட்டம் கரகோஷத்துடன் வாழ்த்தி அட்சதை தூவ சத்யன் மான்சியின் நொற்றியில் குங்குமம் வைத்தான்,

அப்போது தான் அவன் உள்ளங்கையில் இருந்த தனது ஸ்டிக்கர் பொட்டை கவனித்த மான்சி விழிகள் குளமாக அவனை பார்வையால் நேசத்துடன் வருட, அவன் செல்லமாய் உதடுசுழித்து ‘ச்சும்மா’ என்றான்

இருவரும் எழுந்து மான்சி பத்மாவிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொள்ள, குழந்தை மனைவியுடன் பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றான் சத்யன், அடுத்து பத்மா கௌதம் காலில் இருவரும் விழ, பத்மா மான்சியை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்து ஆனந்த கண்ணீர் விட்டாள்

அதன்பிறகு மற்ற சொந்தங்களின் கால்களில் இருவரும் விழுந்து விழுந்து எழுந்தபோது சத்யன் மான்சி இருவரும் சற்று வளைந்துதான் போனார்கள்,

உறவினர்கள் ஆசிர்வதித்து அவர்களின் நெற்றியில் பூசப்பட்ட விபூதி மேலா தலை உச்சி வரையும், கீழே மூக்கு வரை வந்தது அதற்கு மேல் விபூதி பூச இடமின்றி மான்சி சத்யன் இருவரையும் வாயைத் திறக்கச்சொல்லி வாயில் விபூதியை வாறியடித்தார்கள் சத்யனின் அன்பான உறவுக்கூட்டம்,,



" உலகில் இல்லாத ஒன்றை உருவாக்கி,,

" அதை அவள் கைகளில் கொடுக்க வேண்டும்,,

" அது என் இதயமாகத் தான் இருக்கும்!

" நமக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி...

" அதில் நாம் மட்டும்..

" ஆமாம் நாம் மட்டும்தான் ..

" ம்ம் இந்த வார்த்தையை இதுவரை..

" ஒராயிரம் முறை சொல்லிப்பார்த்தேன்..

" ஒவ்வொரு முறையும் தேனாய்...

" இனிக்கிறது தேகம்!

" முடிவாக என் காதலை..

" கையோடு அழைத்து வருகிறேன்..

" உன்னிடம்,,

" அதை பூட்டிவிடு,,

" உன் தலையணையில் வைத்து!



No comments:

Post a Comment