Tuesday, September 8, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 15

சத்யனுக்கு உடல் கூசி சிலிர்க்க “ ம்ம் சரி வாயைத்திற மான்சி” என்று இட்லியை அவள் வாயில் வைத்தான்

எதைஎதையோ பேசிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மான்சி சாப்பிட்டு முடிக்கவும், சத்யன் கைகழுவிவிட்டு வந்து “ கொஞ்சம் இரு நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்” என்று தனது அறைக்கு போய் டீசர்ட்ம் ஷாட்ஸ்ம் மாட்டிக்கொண்டு வந்தான்

மான்சி கட்டிலில் உம்மென்று படுத்திருக்க, சத்யன் குழப்பத்துடன் அவளருகே போய் அமர்ந்து “ என்னாச்சுடா ஏன் முகம் ஒருமாதிரியா இருக்கு” என்று கேட்க



“ இப்ப ஒருத்தவங்க வந்து உங்களை சாப்பிட வரச்சொன்னாங்க,, நீங்க இன்னும் சாப்பிடவே இல்லையா, அது தெரியாம நான் மட்டும் சாப்பிட்டேன் பாத்தீங்களா, ச்சே எனக்கு உங்கமேல பாசமே இல்லை பாருங்க” என்று தன்மீதே வெறுப்பாக மான்சி பேசியதும்

“ ச்சேச்சே அப்படியெல்லாம் பேசாதே மான்சி, உனக்கும் என்மேல பாசம் இருக்கு, உனக்கு உடம்பு நல்லானதும் இதேபோல நீ எனக்கு ஊட்டுனாதான் நான் சாப்பிடுவேன் பாரு” என்று சத்யன் அவளை சமாதானப்படுத்த
உடனே உற்சாகமான மான்சி “ அப்படின்னா சரி, நீங்க போய் சீக்கிரமா சாப்பிட்டு வாங்க” என்றாள்

சத்யன் கீழேபோய் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தபோது, மான்சி போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு இருக்க, சத்யன் அவள் தூங்கிவிட்டாள் என்று நினைத்து,, டியூப்லைட்டை நிறுத்திவிட்டு இரவு விளக்கை போட்டுவிட்டு அறையின் மற்றொரு மூலையில் போடப்பட்டிருந்த கட்டிலில் போய் படுத்து போர்வையால் மூடிக்கொண்டு கண்களை மூடினான்,

கண்களை மூடியவாறு அன்று நடந்தவைகளை அசைபோட்ட சத்யன் தனது கட்டிலில் அசைவை உணர்ந்து பட்டென்று கண்களை திறந்து பார்க்க மான்சிதான் அவனுக்கு அருகே கட்டிலில் மண்டியிட்டு அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்

அந்த இரவில் மான்சியை அவ்வளவு அருகில் பார்த்ததும் சத்யனுக்கு குறுகுறுவென இருக்க “ என்னடா தூக்கம் வரலையா? இங்க வந்து உட்கார்ந்திருக்க ” என்று கேட்டான்

“ ம்ஹூம் தூக்கம் வருது, ஆனா நீங்க எனக்கு கிஸ் பண்ணவே இல்லையே அதனால தூங்காம இருந்தேன், ஆனா நீங்க வந்ததும் படுத்துட்டீங்க,, நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க போல அதான் வந்து படுத்துட்டீங்கன்னு நெனச்சு நானவது உங்களுக்கு குடுக்கலாம்னு வந்தேன்” என்றவள் அவன் முகத்தருகே குனிந்து “ இன்னிக்கு நான் உங்களுக்கு கிஸ் குடுக்கவா?” என்று கிசுகிசுப்பாய் கேட்க

சத்யனின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடக்க,, அவளின் கிசுகிசுப்பான பேச்சு அவனை ஒருமாதிரி சிலிர்க்க வைக்க, கண்களை மூடிக்கொண்டு “ ம்ம் குடு” என்று மட்டும் கூறிவிட்டு அவளின் உதட்டுப் பதிவிறக்க காத்திருந்தான்

“ நீங்க எப்படி குடுத்தீங்களோ அதேபோலதான் குடுப்பேன் சரியா?” என்ற மான்சி அவனைப் போலவே நெருங்கி தனது கைகளில் அவன் தாடையை ஏந்தி குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டு, பிறகு இரண்டு கன்னங்களிலும் தனது ஈர இதழ்களை பதித்து அழுத்தமாய் முத்தமிட,

சத்யனுக்கு ஏதேதோ உணர்வுகள் கிளர்ந்து எழ மண்டியிட்டு குனிந்திருந்தவளை தன் கைகளால் வளைத்து மென்மையாக தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு அழுத்தமின்றி அணைத்தான் 


அவன் நெஞ்சில் கிடந்த மான்சி அவனிடமிருந்து விலகாமல் அவன் கன்னத்தில் தனது உதடுகளை பதித்தபடி அப்படியே கிடந்தாள், அவன் தாடையை ஏந்திய கைகள் அப்படியே நகராது இருந்தது,

‘இவளுக்குப் போய் காதல் இல்லையென்று சொல்கிறாயே உனக்கு அறிவே இல்லையாடா’ என்று சத்யனின் மனது கொந்தளித்து அவனை கோபமாக கேள்வி கேட்டது

தன் நெஞ்சில் இருந்தவளின் கூந்தலை மென்மையாக வருடியபடி “ இன்னிக்கு உனக்கு என்னடா ஆச்சு ம்” என்று சத்யன் மென்மையாக கேட்க

அவன் கன்னத்தில் இருந்த தனது உதடுகளை விலக்காமல் லேசாகத் திருப்பி “ ம் எனக்கு தெரியலையே,, உங்க கூடவே இருக்கனும், உங்களை தொட்டுக்கிட்டே இருக்கனும், இப்படியெல்லாம் எனக்கு தோணுதே” என்று மான்சி மெல்லிய குரலில் சொல்ல

சத்யனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை,, அவளின் மன உணர்வுகள் புரிந்தது, ஆனால் குழந்தை பிறந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் சிறிது தடுமாறினாலும் ஆபத்து என்று அவன் அறிவுக்கு புரிய, அவளை நெஞ்சில் சுமந்தபடியே எழுந்து அமர்ந்து அவளை திருப்பி தன் கைகளில் ஏந்தி அவள் படுக்கையில் கிடத்தி போர்வையால் மூடிய சத்யன், தானும் அவளருகே சரிந்து வாறு படுத்து அவளை தோளொடு அணைத்தான்

தன் உதடுகளால் அவள் காதை உரசி “ மான்சி இது ஏன்னு உனக்கு புரியுதா மான்சி?” என்று கேட்க

“ சினிமால வர்ற மாதிரி நாம லவ் பண்றமா?” என்று அவனையே திருப்பி கேட்டாள்

“ ம்ஹூம் இது உனக்கு என்னன்னு புரியுதான்னு தான் கேட்டேன்,, சினிமா வேற வாழ்க்கை வேற மான்சி, சினிமாவோட வாழ்க்கையை ஒப்பிடாம,, உனக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுதுன்னு நல்லா யோசிச்சு பார்க்கனும், இது விளையாட்டு இல்லடா கண்ணம்மா, உன்னோட வாழ்க்கை, இப்போ நீ ஒரு குழந்தைக்கு அம்மா, உன் வாழ்க்கை எப்படி அமையனும், நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு யோசிச்சு புரிஞ்சுக்கனும் மான்சி” என்று சத்யன் மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக மான்சிக்கு எடுத்துக்கூறினான்

மான்சியிடம் பதில் இல்லை மவுனமாக இருந்தாள்,,

அவளைவிட்டு விலகி எழுந்த சத்யன் “ சரி நல்லா தூங்கு நான் அங்கே போய் படுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கட்டிலைவிட்டு இறங்கியவனின் கையை மான்சியின் கை பற்ற திரும்பி பார்த்து “ இன்னும் என்னடா?” என்றான் சத்யன்

“ மறுபடியும் குடுக்காமலேயே போறீங்களே?” என்று மான்சி மெல்லிய குரலில் கேட்க

சத்யனின் இதயத்தை உருக்கியது அவளின் யாசிப்பு,, சட்டென்று குனிந்து அவளுக்கு தனது உதடுகளால் ஒத்தடமிட்டான், இம்முறை நெற்றியில் அல்ல,, அவளின் தேன் இதழ்களில் அழுத்தி ஆழமாய் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு அதே வேகத்தில் நிமிர்ந்தான்,

நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தபோது அதில் ஒரு ஏக்கம் தெரிந்தது, இது இதுதான் சத்யன் எதிர்பார்த்தது, அவளின் ஏக்கங்கள் வெளிப்படையாக தெரியவேண்டும் என்பதுதான் சத்யனின் நோக்கம்,

அந்த ஏக்கத்தை உடனே போக்கவேண்டும் என்று எழுந்த ஆவேசத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக போய் தனது படுக்கையில் விழுந்தான், அன்று இரவு மான்சி தூங்கினாளோ இல்லையோ, சத்யன் தூங்க நெடுநேரம் ஆனது 




மான்சி கட்டிலில் முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள், அவளருகே அமர்ந்த சத்யன் “ என்னம்மா ரொம்ப போரடிக்குதா?” என்று கேட்க
பக்கத்தில் அமர்ந்தவன் மீது தனது முதுகை சாய்த்துக்கொண்டு “ அதெல்லாம் இல்லையே,, பாப்பா இருக்கு, அப்புறம் நீங்க பத்மா அக்கா, உங்க அம்மா அப்பா, எல்லாரும் இருக்கும்போது எப்படி போரடிக்கும்,, ஆனா எனக்கு யாருமே புசுபுசு நாய்க்குட்டியை காட்டவேயில்லை,, பாப்பா இருக்குற ரூமுக்கு நாய்க்குட்டியை எடுத்துட்டு வரக்கூடாதாம், இன்பெக்ஷன் ஆயிடும்னு பத்மா அக்கா சொல்றாங்க” என்று நாய்க்குட்டியை பார்க்க முடியாத கவலையில் மான்சி பேச..
தன்மீது சாய்ந்திருந்தவளை திருப்பி “ இன்னும் ரெண்டு நாள் போகட்டும் குட்டிப்பையன் தூங்கும் போது நான் உன்னைய கீழே கூட்டிட்டுப் போய் நாய்க்குட்டியை காட்டுறேன்,, இப்போ நாம கொஞ்சம் பேசலாமா மான்சி” என்று சத்யன் கேட்க

“ ஓ பேசலாமே” என்று அவன் பக்கமாக திரும்பி அமர்ந்தாள்

அவள் கைகளை பற்றி “ மான்சி என்னையப் பத்தி நீ என்ன நினைக்குற?” என்று கேட்டான்

“ நீங்க ரொம்ப நல்லவர், என்மேல எங்கம்மா மாதிரி பாசம் வச்சிருக்கீங்க, என்னையும் பாப்பாவையும் நல்லா பார்த்துக்கிறீங்க,, அப்புறம் அருணா அக்காவோட புருஷன்” என்று மான்சி சொல்லிக்கொண்டே போக

“ போதும் போதும், அப்போ நான் எது சொன்னாலும் அது உன் நல்லதுக்குத்தான்னு நீ நம்புறே தானே?” என்று சத்யன் கேட்க, ஆமாம் என்று பெரிதாக தலையசைத்தாள் மான்சி

“ அப்படின்னா நான் சொல்றதை கவனமா கேளு, அருணாவுக்கும் எனக்கும் கல்யாணமாகி எட்டுவருஷம் ஆகுது, ஆனா நாங்க ரெண்டு பேரும் நல்ல கணவன் மனைவியா சேர்ந்து வாழலை, எனக்கும் அவளுக்கும் எந்த விதத்திலும் ஒத்து போகலை மான்சி, அவளுக்கு அவளோட பிஸினஸ் தான் ரொம்ப முக்கியம்,, என்னை மட்டம் தட்டி வைக்கிறதுதான் அவளோட குறிக்கோள், அவளோட அவமதிப்பை தாங்கிகிட்டு நான் வாழ்ந்ததுக்கு காரணம் நீ பார்த்தியே என் சொந்தக்காரங்க அவகளுக்கு முன்னாடி என் அப்பா அம்மாவோட கௌரவத்தை காப்பாத்துறதுக்கு தான், என்னிக்காவது அவளுக்கு மனசு மாறி என்கூட நல்லபடியா வாழுவான்னு நானும் எட்டு வருஷமா காத்திருந்தேன் மான்சி,, ஒவ்வொரு நாளும் எங்களுக்குள்ள பிரிவுதான் அதிகமாச்சேத் தவிர அவ என்னை ஒரு மனுஷனா கூட மதிக்கலை மான்சி, அப்பதான் எங்களுக்கு குழந்தை இல்லையென்ற பிரச்சனை வந்தது, அது அவளோட குறைதான்னு வெளிய தெரியக்கூடாதுன்னு வாடகைத்தாய் மூலமா ரகசியமா குழந்தை பெத்துக்க நினைச்சா, நானும் அதுக்கு சரின்னு ஒத்துக்கிட்டேன், ஆனா அவ அதுக்காக உன்னை தேர்தெடுத்ததுதான் என்னால தாங்க முடியலை, அன்னிக்கு நானே வரலைன்னா உன்னோட கதி என்னவாயிருக்கும் மான்சி” என்று கூறி நிறுத்திய சத்யன் “ என்ன மான்சி நான் சொல்றது உனக்கு புரியுதா?” என்று கேட்க

அவன் சொல்வதையே கவனமாக கேட்டுக்கொண்டிருந்த மான்சி “ ம்ம் புரியுது,, ஆனா அருணா அக்காவையா கெட்டவங்கன்னு சொல்றீங்க,, அவங்க எங்களோட கஷ்டத்தை பார்த்து ஹெல்ப் பண்ணவங்க,, அவ என்னையும் என் அம்மாவையும் மிரட்டினாங்கன்னா அதுக்கு காரணம் எங்கே நான் பாப்பா பெத்து குடுக்காம போயிடுவேனோ என்ற பயம்தான் ,, மத்தபடி அவங்க ரொம்ப நல்லவங்கதான்” என்று மான்சி சொன்னாள்


சத்யன் அவளையே கூர்ந்து பார்த்துவிட்டு " சரி நான் சொன்னா நம்பமாட்ட,, ஆனா இந்த பேப்பர்களை என்னன்னு தெரியுதா?" என்று அவளின் முன்னால் அவள் கையெழுத்திட்ட பேப்பர்களை போட்டான்

அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்து பார்த்துவிட்டு " இது நான் ஆஸ்பிட்டல்ல அருணா அக்காவுக்கு கையெழுத்துப் போட்டு குடுத்த பேப்பர்ஸ் தானே?" என்று மான்சி கேட்க

“ ஆமாம் அதேதான், அருணாவோட லாக்கர்ல இருந்து தேடி எடுத்துட்டு வந்தேன்,, உனக்கு இங்லீஸ் தெரியும் தான?” என்று சத்யன் கேட்டதும்

“ ஓ இங்லீஷ் நல்லாத் தெரியும், நான் ப்ளஸ்டூல இங்லீஷ்ல என்பத்தஞ்சு மார்க்” என்று மான்சி விழிகளை விரித்து பெருமையாக சொல்ல,

“ அப்போ ரொம்ப நல்லது,, இதையெல்லாம் ஒன்னு விடாம படிச்சுப்பாரு அப்பதான் அருணா உனக்கு எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்திருக்கான்னு புரியும்,, இதுல ஏதாவது அர்த்தம் புரியலைன்னா என்கிட்ட கேளு சொல்றேன்” என்ற சத்யன் கட்டிலில் இருந்து இறங்கி குழந்தையின் தொட்டில் அருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்

முதலில் மான்சி முகம் மாறாமல் தான் ஒவ்வொரு பேப்பராக படித்தாள்,, இடையிடையே சில வார்த்தைகளுக்கான சந்தேகங்களை சத்யனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு மீண்டும் படித்தாள்,

படித்து முடித்தபோது அவளின் முகம் இறுகிப் போயிருக்க,, சத்யன் பக்கமாக திரும்பி “ ஏன் இப்படியெல்லாம் எழுதியிருக்காங்க, நான் எனக்கு பணம் வேனும்னா அவங்களுக்கு குழந்தை பெத்து கொடுக்க சம்மதிச்சேன்,, அவங்களோட கண்ணீருக்காக தானே இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு நானும் என் அம்மாவும் இந்த ஊட்டியிலேயே இருந்தோம், இவங்களுக்கு இந்த குழந்தையை பெத்துக் குடுக்க நான் என் அம்மாவையே இழந்தேனே,, ஆனா அவங்க கொஞ்சம் கூட நன்றியே இல்லாம இவ்வளவு சுயநலமா இதை எழுதியிருக்காங்களே,, என்னைப் பார்த்தா அவ்வளவு ஏமாளியாகவா அவங்களுக்கு தெரிஞ்சுது, ஏழைகள்னா என்ன வேனும்னாலும் பண்ணுவாங்களா?, இவங்களுக்கு தேவைன்னா குழந்தையை எடுத்துக்குவாங்க, இல்லேன்னா குழந்தை என் பொறுப்பு தானாம்,, இது பரவாயில்லை, ஆனா பணம் சம்மந்தமாக என்கிட்ட எந்த ஒப்பந்தமும் போடலை, நான் ஒரு தியாகமாத்தான் இதை செய்ய முன் வந்ததா எழுதியிருக்காங்க, நான் இவங்ககிட்ட பணம் கேட்காத போதே இப்படியெல்லாம் எழுதியிருக்காங்களே இன்னும் பணம் கேட்டிருந்தா என்ன பண்ணியிருப்பாங்களோ தெரியலையே” என்று மான்சி கொதிப்புடன் பேசினாள், அவளுக்கு அருணாவைப் பற்றிய தனது கூற்று பொய்யாய்ப் போனதை தாங்கமுடியவில்லை

அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் அடிபட்ட ஒரு ஏழையின் தவிப்பு இருந்ததே தவிர கடுகளவும் குழந்தைத்தனம் இல்லை,,

அவளையே வியப்புடன் பார்த்த சத்யன் வேகமாக காட்டிலை நெருங்கி அவளை தோளோடு அணைத்து “ ம்ம் இப்பவாவது அவளைப் பத்தி உனக்கு புரிஞ்சுதே,, மான்சி நான் உன்னைப் பார்க்க வந்தேனே, அன்னிக்கு ஈவினிங் வெளிநாட்டுல இருந்து அருணா எனக்கு போன் பண்ணி இனிமேல் எனக்கு அந்த குழந்தை தேவையில்லை, அந்த பொண்ணுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்து எங்கயாவது போய் பொழைச்சுக்க சொல்லுங்கன்னு சொன்னா,, அப்பத்தான் எனக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சுது மான்சி, உடனே உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னு தான் செக்புக் எடுத்துக்கிட்டு ஊட்டிக்கு கிளம்பி வந்தேன்,, ஆனா அங்கே உன் நிலைமையே வேற மாதிரி இருந்தது மான்சி ” என்று சத்யன் சொன்னதும்

அவனைவிட்டு விலகி எழுந்த மான்சி “ அப்படின்னா உங்க மனைவி கொடுக்கச் சொன்னதைவிட அதிகமா பணம் கொடுத்து எனக்கும் என் பிள்ளைக்கும் செட்டில் பண்ணத்தான் நீங்களும் வந்திருக்கீங்க, அப்போ உங்க ரெண்டுபேருக்குமே என் வயித்துல இருந்தது உங்களோட வாரிசுன்னு தோனவேயில்லையா?, அவங்களுக்கும் இந்த குழந்தை தேவையில்லை உங்களுக்கும் தேவையில்லாமல் தான் பணம் கொடுக்க வந்தீங்க, இதுல அருணாவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? ” என்று மான்சி தீர்கமாக கேட்க

சத்யன் விக்கித்துப் போய் அவளைப்பார்த்தான்,, இவள் சொல்வதை எப்படி மறுப்பது அதற்காகத்தானே நானும் ஊட்டிக்கு போனேன், ஆனால் அதன்பிறகு நடந்ததெல்லாம் இவளுக்கு தெரியலையா?’ என்று எண்ணி அவளையே பார்த்தான்,, அருணாவைப் பற்றி மான்சிக்கு புரியவைக்க அவன் எடுத்துக்கொண்ட முயற்சி அவனுக்கே வினையாக வந்து முடிந்ததை எண்ணி திகைப்புடன் நின்றிருந்தான்

அவன் எதிரில் நின்ற மான்சியே முற்றிலும் வேறாக இருந்தாள்,, ஏழைகளின் பிரதிநிதியாக நின்று சத்யனை கேள்வி கேட்டாள்

ஆனால் மான்சியின் கேள்விகளுக்கு விடை?




" என் இதயக்கோவிலில் மணியோசைக்கு பதில்,,

" இடியோசை கேட்கிறதே ஏன்?!

" ஒற்றை ரோஜாவுக்காக பலப்...

" பாலைவனங்களை கடந்து வந்தேன்,,

" ரோஜாவுக்கு பதில் என் நெஞ்சில் முள் தைத்ததே,,

" என் நிழல்கூட என்னை மறுத்துவிட்டு விலகிச்செல்கிறது,,

" நீ என்னுடன் இல்லை என்பதால்!

" எதைக்கொண்டு மறைப்பேன் என் அன்பே,,

" என்னுள் புதைந்த உன் நினைவுகளை!

" என் வாழ்வின் சாபங்கள் தீரும் என்றுதான்,,

" வரம் கேட்டு உன்னிடம் வந்தேன்,,

" நீ வரம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை,,

" வார்த்தைகளால் என்னை வதைக்காதே! 



No comments:

Post a Comment