Wednesday, September 23, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 15

டாக்டர் அமுதாவின் ஆலோசனை அறை ...

வனிதா, "என்ன மேம். எதுக்கு வரச் சொன்னீங்க?"

டாக்டர் அமுதா, "கவுன்சிலிங்க். வேற எதுக்கு?"

வனிதா, "I thought counseling is over"

டாக்டர் அமுதா, "அதை முடிவு எடுக்க வேண்டியது நீ இல்லை"

வனிதா, "ஆனா, எனக்கும் சந்திரசேகருக்கும் இடையே நடந்த ஒவ்வொண்ணும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை"

டாக்டர் அமுதா, "ஏன்?"

வனிதா, "I am ashamed of myself"

டாக்டர் அமுதா, "சரி என் கிட்டே சொல்ல வேண்டாம். விஸ்வாகிட்டே நேரடியா சொல்லறையா?"

வனிதா, "ஹூம், சொன்னா அதுக்கப்பறம் விஸ்வா என் மூஞ்சியில் முழிக்க மாட்டார்"

டாகட்ர் அமுதா, "இப்ப மட்டும் தினம் உன் மூஞ்சியில் முழிச்சுட்டு இருக்கானாக்கும்?"

வனிதா, "Oh, please! I don't need sarcasm. நான் நடந்ததை எல்லாம் சொன்னா என் மேல் அவருக்கு அருவெறுப்பு வரும். என்னை ஒரு எதிரியா பார்க்க ஆரம்பிச்சுடுவார்"



டாக்டர் அமுதா, "வனிதா தவறு செஞ்ச நீ. அதைப் பத்தின விவரங்களை தெரிஞ்சுக்க விஸ்வாவுக்கு முழு உரிமை இருக்கு. அது மட்டும் இல்லை. நீ இது நாள் வரை மறைச்சதை எல்லாம் வெளிப்படையா சொன்னா இனிமேல் நீ அந்த மாதிரி மறைக்க மாட்டேன்னு விஸ்வா நம்புவான். நீ ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து வாழும் வாய்ப்பு அதிகரிக்கும். யோசிச்சுப் பாரு"

வனிதா தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.

டாக்டர் அமுதா, "நடந்ததை பத்தி சொல்லறதுக்காக நான் உன்னை வரவழைக்கலை. அதனால் ஆன பின் விளைவுகளைப் பத்தி பேச வரச் சொன்னேன். இன்னும் சில நாட்கள் நாம் ரெண்டு பேரும் உன் தகாத உறவினால் வந்த பாதிப்புகளை பத்தி பேசப் போறோம்"

வனிதா, "பின் விளைவு தெரிஞ்ச விஷயம் தானே. விஸ்வா என்னை டைவர்ஸ் பண்ணப் போறார். அவர் இல்லாமல் நானும் என் குழந்தைகளும் பாதிக்கப் படுவோம்"

டாக்டர் அமுதா, "அவ்வளவு சுலபமா சொல்லிட முடியாது. நான் ஒண்ணு கேட்பேன். உன் மனசாட்சிக்கு பொதுவா பதில் சொல்லணும். ஓ.கே?"

வனிதா, "ஓ.கே"

டாக்டர் அமுதா, "நான் சொல்லப் போறதில் நல்லா கவனம் செலுத்தி உன் ஆழ்மனசில் யோசிக்கணும். Think deeply about the scenario I am going to present"

வனிதா, "ம்ம்ம்"

டாக்டர் அமுதா, "Imagine, விஸ்வா சிங்கப்பூருக்கு நிறைய தடவை போயிருக்கான். அங்கே இருக்கும் ஒரு கம்பெனியின் வேலை செய்யும் ஒருத்திகூட விஸ்வாவுக்கு பழக்கம் ஆகுது. அவளுக்கு விஸ்வாவின் அணுகுமுறை, அவன் திறமை எல்லாம் ரொம்ப பிடிச்சுப் போயிடுது, ரெண்டு பேரும் அடிக்கடி ஃபோனில் பேசிக்க வேண்டிய நிலைமை. அவன் சிங்கப்பூர் போகும் போது எல்லாம் ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அவ விஸ்வாவை டின்னருக்கு வரும் படி கூப்பிடறா. முதலில் விகல்பம் இல்லாமல் விஸ்வா போறான். கொஞ்ச நாளில் அவ விஸ்வாவை காதலிக்க ஆரம்பிச்சுடறா. ஒரு நாள் அவனை மயக்கி படுக்கையை பகிர்ந்துக்கறா. கொஞ்சம் கொஞ்சமா விஸ்வாவும் அவளை காதலிக்கத் தொடங்கறான் ... " என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே

வனிதா, "ஸ்டாப் இட்" எனக் கூச்சலிட்டாள். அவளது கண்களில் கோபம் கொப்பளித்தது ...

டாக்டர் அமுதா, "ஏன் நிறுத்தச் சொல்லறே?"

வனிதா, "என்னால் அப்படிக் கற்பனை பண்ண முடியலை"

டாக்டர் அமுதா, "ஏன்?"

வனிதா தலை குனிந்து மௌனம் காத்தாள்

டாக்டர் அமுதா, "கற்பனை பண்ணிப் பார்க்கறதுக்கே உனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு. நேரடியா பார்த்து, நீயும் சந்திரசேகரும் பேசிட்டு இருந்ததைக் கேட்ட விஸ்வாவுக்கு எப்படி இருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு"

வனிதா அழுது குலுங்கத் தொடங்கினாள் ...

டாக்டர் அமுதா கோடிட்டுக் காட்டிய காட்சிகளை மனதில் கற்பனை செய்த வனிதாவுக்கு தன் உடலின் ஒரு பகுதியை யாரோ ஒரு கோடாலியால் வெட்டி எடுத்தது போல் உணர்ந்தாள்.

விஸ்வாவின் மன வேதனைகளின் ஆழம் வனிதாவுக்குப் புரியத் தொடங்கியது ...

வனிதாவின் விசும்பல்கள் பல நிமிடங்கள் தொடர்ந்தன ...


டாக்டர் அமுதா, "சந்திரசேகருடன் உனக்கு இருந்த தொடர்பினால் வந்த பின் விளைவுகளில் நீ எதிர்கொள்ள வேண்டிய முதல் பாதிப்பு இதுதான். அந்த பாதிப்பு, அவன் மனசில் இருக்கும் கோவம், துக்கம், ஏமாற்றம், பரிதவிப்பு இதை எல்லாம் நீ இன்னும் முழுசா புரிஞ்சிக்கலைன்னு நினைக்கறேன். அவனும் அதுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் கவுன்ஸிலிங்கில் கலந்துக்காம இருக்கான். உன்னால் காணாமல் போன மன நிம்மதியை அவனுக்கு திரும்பக் கிடைக்க உதவ வேண்டியது உன் பொறுப்பு இல்லையா? சொல்லு?"

மூக்கை உறிஞ்சி புறங்கையால் துடைத்த வனிதாவின் முகத்தில் எப்போதும் இருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் மறைந்து போயிருந்தன ...

வனிதா, "I knew that he was hurt. ஆனா இந்த அளவுக்கு அவரைக் கஷ்டப் படுத்தி இருப்பேன்னு நினைக்கலை"

டாக்டர் அமுதா, "எந்த விஷயத்தையும் மத்தவங்க நிலையில் நம்மை வெச்சுப் பார்க்கும் போதுதான் அந்த விஷயத்தின் ஆழம் புரியும்"

வனிதா, "Will he ever forgive me?"

டாக்டர் அமுதா, "அவனால் நீ செஞ்சதை மறக்க முடியுமான்னு தெரியலை வனிதா. ஆனா சேர்ந்து வாழ்ந்தாலும், பிறிந்து போனாலும் மன்னிப்பதுதான் ஒரே வழி. அப்போத்தான் அவன் மன வேதனைகள் குறையும். அதுக்கு நீ உதவணும்"

வனிதா, "What ever it takes, என் விஸ்வாவுக்காக நான் என்ன வேணும்ன்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்"

டாக்டர் அமுதா, "உண்மை. அது கசப்பானதா இருந்தாலும் அவனுக்கு நீ சொல்லணும்"

வனிதா, "ஆனா அதனால் விஸ்வா மேலும் வெறுப்பு அடையலாம் இல்லையா?"

டாக்டர் அமுதா, "உன் மேல் வெறுப்பு வரத்தான் செய்யும். உண்மை கசப்பானதுதான் வனிதா. ஆனா உண்மைக்கும் மேல் அவன் மனதில் ஏதோதோ கற்பனை செஞ்சுட்டு மேலும் மனத்தை வறுத்திட்டு இருப்பான். உண்மை தெரிஞ்சா அவன் மனசுக்கு கொஞ்சமாவுது ஆறுதலா இருக்கும் இல்லையா?"

வனிதா, "எஸ்"

டாக்டர் அமுதா, "என்னுடன் பேச அவன் விருப்பப் படாததால் அவனுக்குத் தெரிஞ்ச ஒரு மிலிடரி சைக்கியாட்ரிஸ்ட்கூட பேச வெச்சு இருக்கேன். வெறுப்பு அடையாமல் விஸ்வா உண்மையை எதிர்கொள்ள வைக்க அவர் பொருப்பு எடுத்துட்டு இருக்கார்"

வனிதா, "மிலிடரி சைக்கியாட்ரிஸ்டா? யார் அவர்?"

டாக்டர் அமுதா, "டாக்டர் மதுசூதன் அப்படின்னு ஒருத்தர். இந்தியாவில் ரொம்ப புகழ் பெற்ற மனோதத்துவ நிபுணர்களில் ஒருத்தர்"

வனிதா, "விஸ்வாவுக்கு அவரை எப்படித் தெரியும்? விஸ்வா என் கிட்டே அப்படி ஒருத்தரை தெரியும்ன்னு சொன்னதே இல்லையே?"

டாக்டர் அமுதா, "போரில் கலந்துக்கும் போது, அங்கே நடக்கும் அகோரமான விஷயங்களால் மனம் ரொம்ப பாதிக்கப் படும். அவனுக்கு அடி பட்ட பிறகு ஆர்மி அவரை அவன் கூட பேசச் சொல்லி இருக்காங்க. அனேகமா ஒரு ரொடீன் செக்கப் மாதிரித்தான் இருக்கும். மேற்கொண்டு எனக்கு விவரங்கள் தெரியாது"

வனிதா, "விஸ்வா என் கிட்டே சொல்லவே இல்லையே?"

டாக்டர் அமுதா, "எனிவே, அவனுக்கு பிரச்சனை எதுவும் இல்லை. எதுக்கு உனக்கு ஆதங்கம்ன்னு சொல்லாம இருந்து இருப்பான்"

வனிதா, "இப்போ நான் என்ன செய்யணும்?"

டாக்டர் அமுதா, "அவனுடன் அவர் பேசிய பிறகு அவனை உன் கூட பேச சம்மதிக்க வைக்கறதா சொல்லி இருக்கார். அதற்கு முன்னாடி அவர் உன் கூட பேசவும் விருப்பப் படலாம். You must be prepared"

வனிதா கிசு கிசுத்த குரலில், "Yes. I have to"

டாக்டர் அமுதா, "வனிதா, நான் உன் அஃபேரைப் பத்தி விவரமா பேசச் தொடங்கினேன். ஆனா என்னோடு அந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள வெட்கப் பட்டு நீ பாதியிலேயே விஸ்வாவுடன் நேரடியா பேச முடிவு எடுத்தே. இல்லையா?"

வனிதா, "I was ashamed of what I did. அதான் ... "

டாக்டர் அமுதா, "It is O.k. நடந்த விஷயங்களை விஸ்வாவுடன் பேச உன் மனம் கூசும். என்னோடு ஒரு முறை பேசினா அந்தக் கூச்சம் குறையும். அதுதான் நான் உன்னை என்னோடு பேசச் சொன்னதுக்கு முதல் காரணம்"

வனிதா, "Yes. I understand"

டாக்டர் அமுதா, "ஆனா, இன்னொரு காரணமும் இருக்கு"

வனிதா, "என்ன?"

டாக்டர் அமுதா, "வனிதா, நம் மனசில் ஏற்படும் தூண்டுதல்களால் நாம் சில காரியங்களில் ஈடு படறோம். ஆனா, நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் நாம் தான் பொறுப்பு ஏத்துக்கணும். உன் மனசில் இருந்த தூண்டுதல்கள், உனக்கு நீயே கற்பித்துக் கொண்ட காரணங்கள், உனக்கு நீயே சொல்லிக் கொண்ட விளக்கங்கள் இதை எல்லாம் நீ நல்லா புரிஞ்சுக்கணும். அதுதான் அடுத்த காரணம்"

வனிதா மௌனமாகத் தலையசைத்தாள்

டாக்டர் அமுதா, "ஆனா, நீ செஞ்சது சரியாயிடாது. அதை முதலில் நீ புரிஞ்சுக்கணும்"

வனிதா, "எஸ்"




டாக்டர் அமுதா, "சந்திரசேகருடன் உனக்கு இருந்த தொடர்பைப் பத்தி விவரமா சொல்லு"

வனிதா, "Where should I start?"

டாக்டர் அமுதா, "முதலில் விஸ்வாவின் வேலைக்காக ஏற்பட்ட தொடர்பைப் பத்தி சொல்லு"

வனிதா, "அவர் அப்படி கேட்ட உடனே அவர் மேல ரொம்ப கோவம் வந்தது. அவரை திட்டிட்டு வெளியே போயிட்டேன். அடுத்த நாள் அவர் மறுபடி தன் கேபினுக்கு வரச் சொன்னார். முதலில் மன்னிப்பு கேட்டார். பிறகு வீட்டில் சுமதி மேடம் அவரை கவனிச்சுக்கறதே இல்லைன்னு ஆரம்பிச்சார். என்னைப் பார்த்த முதல் நாளில் இருந்து என் மேல் ஆசைப் பட்டதா சொன்னார். விஸ்வாவை வேலைக்கு எடுத்துக்கறதில் தனக்குத்தான் ரிஸ்க் அப்படின்னு சொன்னார். விஸ்வா அது வரைக்கும் வொர்க் பண்ணிட்டு இருந்த இன்டஸ்ட்ரி வேற PML வேற. அதனால் அவ்வளவு சீக்கிரமா விஸ்வா தொழிலைப் பத்தி கத்துட்டு அதில் ஷைன் பண்ண முடியாதுன்னு சொன்னார். ஒரு வேளை அவங்க எதிர்பார்த்த மாதிரி விஸ்வா ரிஸல்ட்ஸ் கொடுக்கலைன்னா பழி தன் பேரில் தான் விழும்ன்னார். ஆனா, அவரால் முடிஞ்ச வரை விஸ்வா சீக்கிரம் தொழிலைப் பத்தி கத்துக்க உதவி செய்வதா வாக்கு கொடுத்தார். தன் கூட இருப்பதால் எங்க கல்யாணத்துக்கு எந்த விதமான பாதிப்பும் வராதுன்னு சொன்னார். அவருக்கு வீட்டில் கிடைக்காததை என் கிட்டே கேட்பதா கெஞ்சினார். He said he was desperate for sexual release"

டாக்டர் அமுதா, "விஸ்வாவை வேலைக்கு சேர்த்துக்கறதில் இருக்கும் சிக்கல்களைப் பத்தி அவர் சொன்னது சரியா?"

வனிதா, "எஸ். ஒரு அளவுக்கு சரிதான்"

டாக்டர் அமுதா, "அப்பறம் எப்படி விஸ்வா அந்த அளவுக்கு முன்னேற முடிஞ்சுது?"

வனிதா, "I under estimated Viswa. சேர்ந்து ரெண்டு மாசத்தில் ஒரு பெரிய ஆல் இண்டியா லெவல் ஆர்டர் ஆர்மி CSD Canteen இல் இருந்து. வாங்கிட்டு வந்தார். சந்திரசேகர்கூட எதிர்பார்க்கலை. அதற்குப் பிறகு பெரிய பெரிய கம்பெனிகளில் இருந்து ரெண்டு மூணு ஆர்டர்ஸ். People started respecting him"

டாக்டர் அமுதா, "ஒரு வேளை அவன் ஆர்மியில் இருந்த அனுபவத்தினால் அவனுக்கு ஆர்டர்ஸ் கிடைச்சுதா?"

வனிதா, "ஆர்மி, ஏர்ஃபோர்ஸ், நேவி டிபார்ட்மெண்ட்களில் இருந்து ஆர்டர் பிடிக்கறதுக்குன்னு டெல்லியில் ஒரு ரிடையர்ட் ஆர்மி ஆஃபீஸரை ஏற்கனவே நியமிச்சு இருந்தாங்க. அவரால் செய்ய முடியாததை விஸ்வா செஞ்சார்"

டாக்டர் அமுதா, "அவனால் எப்படி அந்த ஆர்டர்களை வாங்க முடிஞ்சுது?"

வனிதா, "அவரோட அணுகுமுறை. நாம் தயாரிக்கும் பொருளில் சின்ன மாற்றங்கள் செய்ய சண்முகம் சார் கிட்டே அனுமதி வாங்கி இருக்கார். அதற்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு என்ன வேணும்ன்னு சரியா தெரிஞ்சுட்டு அதுக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்வதா ஒப்புதல் கொடுத்து ஆர்டர் வாங்கி இருக்கார். மார்கெட்டுக்குத் தகுந்த மாதிரி ப்ராடெக்ட்ஸை டிவலப் பண்ணினார். நான் அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்த விதத்தை நினைச்சு ரொம்ப வெட்கப் பட்டேன். இன்னமும் வெட்கப் படறேன்"

டாக்டர் அமுதா, "சோ, அந்த சமயத்தில் சந்திரசேகர் சொன்னதை உண்மைன்னு நம்பினே இல்லையா?"

வனிதா, "எஸ்"

டாக்டர் அமுதா, "இருந்தாலும் வனிதா. கல்யாணம் ஆன பிறகு வேற ஒருத்தனுடன் உடலுறவு வெச்சுக்கறது உன் மனத்தை உறுத்தலை?"

வனிதா, "உறுத்துச்சுதான். ஆனா விஸ்வாவுக்கு வேலை வாங்கிக் கொடுக்க ... " என்றவளை தடுத்து நிறுத்திய

டாக்டர் அமுதா, "நான் காரணத்தைப் பத்தி கேட்கலை. உன் மன உறுத்தலை பத்தி மட்டும் தான் கேட்டேன்"

வனிதா, "மன உறுத்தல் இருந்ததுதான்"

டாக்டர் அமுதா, "என்ன மன உறுத்தல்?"

வனிதா, "I was worried"

டாக்டர் அமுதா, "எதைப் பத்தி?"

வனிதா, "விஸ்வாவுக்கு அது பிடிக்காதுன்னு தெரியும். அவருக்கு தெரிஞ்சா ரொம்ப அப்ஸெட் ஆவான்னு மனம் உறுத்துச்சு."

டாக்டர் அமுதா, "ஒரு வேளை நீ விஸ்வாவுக்கு சந்திரசேகர் உன்னிடம் கேட்டதைபத்தி சொல்லி அவனும் அதுக்கு சரின்னு சொல்லி இருந்தா?"

வனிதா, "விஸ்வா நிச்சயம் அதுக்கு ஒப்புதல் கொடுத்து இருக்க மாட்டார்"

டாக்டர் அமுதா, "நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன். ஒரு வேளை விஸ்வா அதுக்கு சரின்னு சொல்லி இருந்தா உன் மனத்தில் அந்த உறுத்தல் இருந்து இருக்குமா?"

வனிதா, "நோ! ... I don't know. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு"

டாக்டர் அமுதா, "விஸ்வாவுக்கு பிடிக்காது, அவருக்கு தெரிஞ்சா ரொம்ப் அப்ஸெட் ஆயிடுவார்ன்னு உனக்கு தோணி இருக்கு. ஆனா, வேற ஒருத்தரோட செக்ஸ் வெச்சுக்கறதே தப்புன்னு தோணலையா?"

சிறிது நேரம் மௌனம் காத்த வனிதா கிசு கிசுத்த குரலில், "இப்போ தெரியுது. அந்த சமயத்தில் அப்படி தோணலை"

டாக்டர் அமுதா, "ஏன்"

வனிதா, "It was just sex not love. நான் விஸ்வாவுக்கு துரோகம் செய்யறதா நினைக்கலை. அட்லீஸ்ட் அந்த சமயத்தில் நான் அந்த மாதிரித்தான் யோசிச்சேன்"


டாக்டர் அமுதா, "I want to hypnotise you. சில எண்ணங்கள் உன் ஆழ் மனசில் இருக்கு. எதோ ஒரு காரணத்தினால் அந்த எண்ணங்கள் உள்ளே புதைஞ்சு இருக்கு. ஹிப்னடைஸ் பண்ணினா அந்த எண்ணங்கள் தானா வெளியில் வரும் நீயும் அவைகளை புரிஞ்சுக்க முடியும். அதற்குப் பிறகு அந்த எண்ணங்களின் அடிப்படைக் காரணங்களை தெரிஞ்சுக்கலாம். வருங்காலத்தில் உனக்கு இது ரொம்ப முக்கியம். உனக்கு சம்மதமா?"

வனிதா, "I know about hypnosis .. ஆனா அது ... "

டாக்டர் அமுதா, "ஹினாடிஸத்தில் வெவ்வேறு அணுகு முறைகள் இருக்கு. வெவ்வேறு காரணங்களுக்காக ஹினாடிஸத்தை உபயோகிக்கலாம். ஒருத்தரின் ஆழ் மனத்தில் இருக்கும் நினைவுகளை வெளியில் கொண்டு வரவும் பயன் படுத்தலாம். நான் உன்னை ஹினடைஸ் பண்ண சம்மதம் கேட்டது நீ உன்னை நல்லா புரிஞ்சுக்கறதுக்காக. மத்தபடி நான் உன்னை உனக்கு வேண்டாததை செய்யவைக்க மாட்டேன்"

வனிதா சிறிது நேரம் யோசித்த பிறகு பெருமூச்சு விட்ட படி, "சரி"

டாக்டர் அமுதா, "வனிதா, நான் பார்த்த வரை பொதுவா மனைவி முறைகேடான உறவில் ஈடுபடும் போது விவாகரத்தில்தான் முடியும். இந்தக் காரணத்தினால் நான் வழக்கமா அந்த மாதிரி கேஸ் எடுத்துப்பது இல்லை. கேஸ் ஹிஸ்டரியை படிச்சுப் பார்த்த போது உங்க கேஸ் கொஞ்சம் மாறு பட்டு இருந்தது. ரெண்டு பேரும் சின்ன வயசில் இருந்து பெற்றோர்களின் ஆதரவோடு காதலிச்சு கல்யாணம் செஞ்சுட்டு இருக்கீங்க. சின்ன வயசில் குழந்தைகள். இப்படி இருந்தும் ஏன் விவாகரத்துன்னு ஒரு க்யூரியாஸிடியில் எடுத்துட்டேன். முதல் சிட்டிங்க் முடியும் போதே நீ எந்த அளவுக்கு விஸ்வாவைக் காதலிக்கறேன்னு புரிஞ்சுகிட்டேன். உன் வீட்டுக்கு வந்து பார்த்தப்போ அந்தக் குழந்தைகளை எவ்வளவு நல்லா வளர்க்கறீங்கன்னும் புரிஞ்சுது. உண்மையா நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க விரும்பறேன். நான் செய்யறது எல்லாம் உன் நன்மைக்காக மட்டும்தான் அப்படி-ன்னு நீ முழுசா நம்பணும். ஓ.கே?"

வனிதா, "எஸ் டாக்டர்"

டாக்டர் அமுதா, "இதுக்கு முன்னாடி உன்னை யாராவுது ஹிப்னடைஸ் பண்ணி இருக்காங்களா?"

வனிதா, "இல்லை"

அவருக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தும் டாக்டர் அமுதா, "இது வரைக்கும் நீ சைக்கியாட்ரிஸ் யாருடனாவுது ட்ரீட்மெண்ட் எடுத்து இருக்கியா?"

வனிதா, "எஸ் ... நான் சின்ன வயசில் இருந்தப்போ ... " என்று தொடங்கியவள், "I am sorry ... it is very personal"

டாக்டர் அமுதா, "வனிதா, நான் ஏற்கனவே உங்க அம்மாவுடன் பேசியாச்சு .. நடந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு தெரியும்"

வனிதா கண்கள் அகல "அம்மா சொன்னாங்களா?"

டாக்டர் அமுதா, "அந்த விஷயம் வெளியில் தெரிஞ்சா உங்க பேரண்ட்ஸுக்கு அவமானம்னாலும் உன் நன்மைக்காக என் கிட்டே அந்த விவரங்களை சொன்னாங்க"

வனிதா, "எஸ் அந்த சமயத்தில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே கூட்டிட்டுப் போனாங்க. ஆனா அப்போ நடந்தது எதுவும் சரியா ஞாபகம் இல்லை"

டாக்டர் அமுதா, "இட்ஸ் ஓ.கே. ஆரம்பிக்கலாமா?"

வனிதா, "சரி"

டாக்டர் அமுதா, "வா" என்று அழைத்த படி அடுத்து இருந்த சற்றே இருட்டான அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்த சைக்கியாட்ரிஸ்ட் கவுச் (Psychiatrist couch) என அழைக்கப் படும் ஒற்றை சோஃபாவில் வனிதாவைப் படுக்கச் செய்தார்.

டாக்டர் அமுதா, "வனிதா, இப்போ நான் உன் நினைவுகளை தெளிந்த ஆழ்ந்த நிலைக்குக் கொண்டு போகப் போறேன். அந்த நிலை மறைந்த பிறகும் உனக்கு நடந்தது எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கும். ஓ.கே?"

வனிதா, "எஸ்"

டாக்டர் அமுதா, "முதலில் நான் உன்னை ரிலாக்ஸ் பண்ண வைக்கப் போறேன். நல்லா கால் நீட்டி ரிலாக்ஸ்டா சாய்ஞ்சு உக்காந்துக்கோ. தூக்கம் வருவது மாதிரி இருந்தா சொல்லு. என்ன?"

வனிதா, "தூக்கம் வரலை ஆனா பட படப்பா இருக்கு"

டாக்டர் அமுதா, "இட்ஸ் ஓ.கே. உடம்பை நல்லா லூசா விடு" என்றபடி வனிதாவின் கைகளை பற்றி மெதுவாக நீவி விடுவது போல மஸ்ஸாஜ் செய்தார். பிறகு அவளுக்கு பின்னால் நின்றவாறு அவளது கழுத்து மற்றும் தோளை மஸ்ஸாஜ் செய்த படி, "ம்ம்ம் ... எஸ் அப்படித்தான் லூஸா விடு. உனக்கு டெட் ஸீ (Dead Sea) பத்தி தெரியுமா? (Dead Sea - சாக்டல் என்து இஸ்ரெல் நாட்டு எல்லையில் இருக்கிது. அதன் நீரில் உப்பு அதிக வில் இருப்தால் அதில் ங்கினால் நம் உடல் தானாக மிதக்கும்)
"

வனிதா புன்னகைத்தபடி, "ஓ! நான் அங்கே போயிருக்கேன். ஈஜிப்ட் டூர் போனப்போ அப்பா அப்படியே இஸ்ரேலுக்கும் கூட்டிட்டுப் போனார். அப்போ போனோம். I was fun"

டாக்டர் அமுதா, "வாவ். இப்போ நீ அங்கே போனதைப் பத்தி நல்லா ஞாபகப் படுத்திக்கோ. Take your time. அங்கே இருக்கற மாதிரி கற்பனை செஞ்சுக்கோ"

வனிதா, "ஓ.கே"

டாக்டர் அமுதா, "சீரா சாதாரணமா முச்சு விடு. Let your body relax ... "

வனிதா, "ம்ம்ம்"

டாக்டர் அமுதா, "நீ இப்போ அந்த டெட் ஸீல மிதக்கற மாதிரி நினைச்சுக்கோ"

வனிதாவி, "ம்ம்ம்"

டாக்டர் அமுதா தன் குரலை மிகவும் தாழ்த்தி, "உன் கால்கள் இப்போ பாதி மட்டும் தண்ணிக்கு வெளியே இருக்கு அனா மீதிப் பகுதி தண்ணிக்குக் கீழே இருக்கு. உன் இடுப்பு பாதிக்கும் கீழே தண்ணிக்குள்ளே இருந்தாலும் அதுக்குக் கீழே போகாமல் மிதந்துட்டு இருக்கு. Do you feel so?"

வனிதா, "எஸ்"

டாக்டர் அமுதா, "இடுப்புக்கு மேலேயும் கழுத்து வரை உன் உடம்பு பாதி தண்ணியில் மிதந்துட்டு இருக்கு. தண்ணிக்கு மேலே வரவோ கீழே போகவோ நீ எந்த முயற்சியும் எடுக்கலை"

வனிதா, "ம்ம்ம்"

டாக்டர் அமுதா, "உன் முகம் மட்டும் தண்ணிக்கு மேலே இருக்கு. காதுகளுக்கு பின்புறம் எல்லாம் தண்ணிக்குள்ளே இருக்கு"

வனிதாவின் முகத்தில் மெதுவாக சாந்தம் பரவியது. புன்னகைத்தவாறு, "ம்ம்ம்"

டாக்டர் அமுதா, "அப்படியே மிதந்துட்டே இப்போ நீ கடந்த காலத்தைப் பத்தி நினைக்கறே"

வனிதா, "ம்ம்ம்"

டாக்டர் அமுதா, "நீ அன்னைக்கு ஸ்கூலில் இருந்து வந்தப்போ உங்க அப்பாவும் ஸில்வியா ஆன்டியும் ஒண்ணா இருக்காங்க"

வனிதாவின் முகம் இறுகியது ...

டாக்டர் அமுதா, "ரிலாக்ஸ் ... ஓ.கே?"

வனிதா, "எஸ் ... They were having sex"

இப்படித் தொடங்கி கடந்த காலத்தில் நடந்தவற்றை, மறந்து போனவற்றை, மறக்க வேண்டும் என அவள் நினைத்து இருந்தவற்றை ஒவ்வொன்றாக வனிதாவை நினைத்துப் பார்கக் வைத்தார். முடிவில் ஆழ்ந்த நிலையில் இருந்தவளை மெதுவாக சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்.

சகஜ நிலைக்கு வந்த பிறகு வனிதாவின் முகத்தில் மெதுவாகத் தோன்றிய சோகம் சில கணங்களில் அழுகையாக மாறி வெடித்துச் சிதறியது ...

அழுது குலிங்கியவளை ஆதரவாக அணைத்தபடி டாக்டர் அமுதா அவள் அழுகை முடியும் வரை மௌனம் காத்தார். தொடர்ந்த அழுகை லேசான விசும்பல்களான பிறகு

டாக்டர் அமுதா, "இட்ஸ் ஓ.கே டியர். 'வெறும் செக்ஸ் வெறும் செக்ஸ்' அப்படின்னு உனக்கு நீயே சொல்லிட்டதுக்கு காரணம் நீ இல்லைன்னு இப்போ புரியுதா?"



வனிதா விசும்பல்களுக்கு இடையே, "எஸ்"

டாக்டர் அமுதா, "வனிதா, ரெண்டு உடல்கள் மட்டும் அல்லாமல் உள்ளங்களும் சேர்ந்து இணையும் போது செக்ஸின் அர்த்தமே வேறு. செக்ஸ் அப்படித்தான் இருக்கணும். அப்படி இருக்கும் போது அது புனிதமானது. உடல்கள் மட்டும் இணையும் போது அது ஒரு அருவெறுக்கத்தக்க கேளிக்கை. விபசாரம் மாதிரி"

வனிதா, "ம்ம்ம்"

டாக்டர் அமுதா, "உன் உடலை உளமார்ந்த காதலுடன் விஸ்வாவுக்கு மட்டும்தான் கொடுப்பேன்னு திருமணத்தில் நீ அவனுக்கு வாக்குக் கொடுத்தே. உன் உடலை மட்டும் சந்திரசேகருக்குக் கொடுத்தேன்னு சொன்னா விஸ்வாவைப் அவமதிப்பது போல இல்லையா?"

வனிதா, "எஸ்"

டாக்டர் அமுதா, "சரி. இன்னைக்கு இதோட முடிச்சுக்கலாம். இந்தக் கோணத்தில் நீ செஞ்சதை யோசிச்சுப் பாரு. ரெண்டு நாளைக்குப் பிறகு மறுபடி மீட் பண்ணலாம். In the meanwhile டாக்டர் மதுசூதனுடன் விஸ்வா பேசறது எந்த அளவுக்கு முன்னேறி இருக்குன்னு விசாரிக்கறேன். ஓ.கே?"

வனிதா, "ஓ.கே டாக்டர்"

வனிதா விடைபெற்றுச் சென்றாள் ....



No comments:

Post a Comment