Monday, September 7, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 11

அவளுக்கு அதிகமான உடைகள் இல்லை,, குழந்தைக்கும் உடைகள் இல்லாமல் துணியால் சுற்றித்தான் வைத்திருப்பது சத்யனுக்கும் தெரியும் “ ரோடெல்லாம் சரியாகி போக்குவரத்து க்ளியர் ஆனதும் டவுனுக்குப் போய் உனக்கும் குழந்தைக்கும் தேவையானது வாங்கிட்டு வந்துர்றேன்,, அனேகமாக நாளைக்கு எல்லாம் க்ளியர் ஆயிடும் அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணக்க மான்சி” என்றவன் சமையலறைக்கு போய் மான்சிக்கு சாப்பாடு எடுத்து வந்தான்

அவள் சாப்பிட்டதும், இவனும் சாப்பிட்டு வந்து குழந்தையை தூக்கி தரையில் அமர்ந்து மடியில் வைத்துக்கொண்டு சிறிதுநேரம் உலகில் இல்லாத பாஷையில் கொஞ்சிக்கொண்டிருந்தான்



அவன் குழந்தையை கொஞ்சுவதையே பார்த்துக்கொண்டிருந்த மான்சி“ உங்களுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப புடிக்குமா?” என்று கேட்க
அவளை நிமிர்ந்துப் பார்த்து சிரித்த சத்யன் “ முன்னாடியெல்லாம் இல்லை,, இப்போ ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்றான்

“ ஒரு பாட்டி சொன்னாங்க,, அழுவாதம்மா உங்கம்மாவே உன் வயத்துல வந்து பொறப்பாங்கன்னு, ஆனா ஆம்பளை பாப்பா வந்து பொறந்திருக்கு, அப்போ எங்கம்மா இல்லை தானே?” என்று வருத்தமாக சொல்ல

குழந்தையை தூக்கி நெஞ்சோடு அணைத்தபடி வந்து கட்டிலில் அவளருகில் அமர்ந்த சத்யன் “ ம்ம் இவன் உன் அம்மா இல்லை,, அடுத்த பாப்பாவா உன் அம்மா வந்து பொறப்பாங்க” என்று பேச்சுவாக்கில் சொன்னான்

உடனே ஆர்வமான மான்சி “ அப்படின்னா உங்களுக்கும் அருணா அக்காவுக்கும் இன்னும் ஒரு பாப்பா வேனுமா?, அந்த பாப்பாவும் நான்தான் பெத்து குடுக்கனுமா? ” என்று வெகுளியாய் கேட்க

அய்யய்யோ இவ எங்கயோ போய் சுத்திகிட்டு வர்றாளே என்று நினைத்த சத்யன் “ ஆமாம் இன்னோரு பாப்பா வேனும் ஆனா அருணாக்கு இல்லை, எனக்குத்தான்” என்றான் குரலில் குறும்புடன்

அவன் குறும்பைக்கூட கண்டுகொள்ள தெரியாமல் “ வேனும்னா இன்னும் ரெண்டு மூனு பாப்பா கூட பெத்து உங்களுக்கு தர்றேன்,, ஆனா இந்த பாப்பாவை மட்டும் கேட்காதீங்க, எனக்கு வீடு வேலை எதுவுமே வேனாம், என் பாப்பா மட்டும் போதும், எனக்கு உடம்பு நல்லானதும் மதுரைக்கு அனுப்பிடுங்க அங்கபோய் ஏதாவது வீட்டுவேலை செஞ்சு பாப்பா காப்பாத்துறேன்,, எனக்கு என் பாப்பா வேனும்” என்று மான்சி கண்கள் கலங்க மெல்லிய குரலில் சொல்ல

அவள் முகத்தையேப் பார்த்த சத்யன் “ பாப்பா மட்டும் போதும்,, அப்போ நான் வேனாமா?” என்று கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ நீங்க எதுக்கு?” என்றாள் புரியாக் குழந்தையாய் புருவத்தை சுருக்கி..

“ ம் நீ வீட்டு வேலை செய்யபோய்ட்டா பாப்பாவை பாத்துக்க ஒரு ஆள் வேனும்ல, அதுக்குத்தான் நானும் மதுரைக்கு வர்றேன்” என்று கேலியாக சத்யன் சொல்ல,,

“ அய்ய நீங்க ஏன் அங்க வரனும்,, நீங்க பணக்காரங்க அதெல்லாம் வரமாட்டீங்க” என்று தலையை இடமும் வலமுமாக ஆட்டி சொன்னவள் “ உங்களுக்கு என்னை ரொம்ப புடிக்கும் தானே? அதனால அருணா அக்காகிட்ட சொல்லி பாப்பாவை எனக்கே குடுத்துட சொல்லுங்களேன் ப்ளீஸ்” என்று மான்சி கெஞ்சினாள்

கண்களில் குறும்பு மின்ன “ உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான் 


அதுவரை அவனைப்பார்த்து பேசியவள் இப்போது பார்வையை சுவர்பக்கம் திருப்பிக்கொண்டு “ ம்ம் அதான் எனக்கு ஒன்னு குடுத்தீங்களே அதைவச்சு தான் தெரிஞ்சுகிட்டேன்” என்றாள், அவள் குரல் அவளுக்கே கேட்காது என்பதுபோல் பேசினாள்

“ என்ன குடுத்தேன் மான்சி” என்றான் சத்யன் குறும்பை விடாமல்

சிறிதுநேரம் மான்சியிடம் பதில் இல்லை, பிறகு தன் உதட்டில் விரல் வைத்து “ ம் இதுதான்” என்றாள், அவள் முகம் ரத்தமென சிவந்தது

சத்யனுக்கும் அந்த முத்தத்தின் நினைவில் உள்ளுக்குள் சிலுசிலுவென்று இருந்தது “ சரி அருணாகிட்ட பேசி இந்த பாப்பாவை உனக்கு வாங்கி குடுத்தா, எனக்கு என்ன தருவ” என்று கமிஷன் வியாபாரியைப்போல் பேசினான்

“ அதான் இன்னொரு பாப்பா பெத்து தர்றேன்னு சொன்னேன்ல” என்று மான்சி இன்னும் சுவருடனேயே பேசினாள்

சத்யனுக்கு அவள் குழந்தை மனதை எண்ணி சிரிப்பு வந்தது., மறுபடியும் அவளை முத்தமிடவேண்டும் என்ற ஆர்வத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு “ ம் சரி அருணாகிட்ட பேசி பாப்பாவை உனக்கே வாங்கி தர்றேன்,, இப்போ நல்லா தூங்கு, எப்படியும் இன்னைக்கும் சிவராத்திரி தான்,, அதனால பகல்லயே நல்லா தூங்கு " என்ற சத்யன் கம்பளியால் மூடி அவளை தூங்கச் சொன்னான்

" இன்னும் நான் சேலை கட்டலையே?" என்றாள் மான்சி

" பரவாயில்லை தூங்கி எழுந்து கட்டிக்கோ" என்றான் சத்யன்

அவள் தூங்கியதும் பாத்ரூமுக்கு போய் மான்சி நனைத்து வைத்த புடவையை அலசி காயப்போட்டான்,, ஒரு கோடீஸ்வரன் வண்ணாத்தியின் மகள் புடவையை காதலோடு அலசினான்

சமையலறைக்கு வந்து பத்மாவுக்கு போன் செய்து அவளின் ஆலோசனைப்படி இரவு உணவு தயார் செய்தான்,, மான்சி தூங்கி எழுந்துவிட அவளுக்கு காபி கலந்து கொடுத்து குடித்ததும் அவளை கட்டிலில் இருந்து தூக்கி இறக்கி புடவை கட்ட உதவினான்,

பிறகு சிறிதுநேரம் இருவரும் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிவிட்டு இரவு உணவை சாப்பிட்டு விட்டு மான்சி குழந்தைக்கு பால் கொடுத்ததும், வாங்கி தன் தோளில் போட்டு சிறிதுநேரம் முதுகை தடவியவன், பிறகு அவளுக்கு ஸ்கார்ப் கட்டி கம்பளியால் மூடி இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டு இருவரையும் ஜாக்கிரதையாக படுக்க வைத்தான்,, அவனும் தரையில் விரித்து படுத்துக்கொண்டான்

சிறிதுநேரம் கழித்து " தூங்கிட்டீங்களா?" என்று மான்சி கேட்க

" இன்னும் இல்லை என்ன சொல்லு? " என்றான்

" இல்ல நான் புன்னகைமன்னன் சினிமா பார்த்தேன், அதுல கமலஹாசனும் ரேகாவும் இப்படித்தான் அருவிகிட்ட நின்னு முத்தம் குடுத்துப்பாங்க,, ஆனா ரெண்டுபேருமே அருவியில விழுந்து செத்து போயிடுவாங்க" என்று சினிமாவை நினைத்து வருத்தமாக மான்சி சொல்ல

அவள் அறியாமையை நினைத்து சத்யனுக்கு சிரிப்பு வந்தது " ம்ம் அது சினிமா,, நமக்கு அப்படியெல்லாம் நடக்காது, நிறைய முத்தம் குடுத்துக்கிட்டே ரொம்ப நாளைக்கு நல்லாருப்போம்" என்று கம்பளிக்குள் இருந்து பேசினான்

" அதெப்படி முடியும் நான்தான் மதுரைக்கு போயிடுவேனே? அப்புறமா எப்படி முடியும்?" என்று மான்சி தனது சந்தேகத்தை கேட்க

" நான் உன்கூட மதுரைக்கு வந்துர்றேன்,, இல்லேன்னா நீ என்கூட கோவைக்கு வந்துடு,. எல்லாம் சரியாபோயிரும்" என்று சத்யன் அவள் சந்தேகத்தை தீர்க

" நான் கோயமுத்தூர் வந்து எங்க இருப்பேன்? அருணா அக்கா வீட்டுலயா? " என்றாள் மான்சி

" இல்லை என் வீட்டிலே,, என் அம்மா அப்பாகூட இரு"

" அய்ய அவங்க என்னை வீட்டுக்குள்ளயே விடமாட்டாங்களே,, நான்தான் வண்ணாத்தி மகளாச்சே" என்று மான்சி வருத்தபட,

' எங்கம்மாவும் அப்பாவும் மனுஷங்க,, அதனால மனுஷங்களை கண்டிப்பா வீட்டுக்குள்ள விடுவாங்க" என்று சத்யன் பட்டென்று சொன்னான்

" அப்ப சரி நானும் கோயமுத்தூர் வர்றேன்,, ஆனா அதுமாதிரி வேனாம், நைட்டு தூங்கும் போது இப்ப பாப்பாக்கும் எனக்கும் நெத்தில குடுத்தீங்களே அதுமாதிரி தினமும் குடுக்குறீங்களா?" என்று மறுபடியும் கேள்வியை ஆரம்பித்தாள்

இப்போது சத்யனுக்கு அவள் குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரி என்று வெக சிரமத்துடன் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது " ம் சரி தினமும் தர்றேன், இப்போ தூங்கு மான்சி" என்றான் அன்பாக

" அய்யோ பகல்ல நல்லா தூங்கிட்டு இப்போ தூக்கமே வரலையே,, இந்த பாப்பாவும் அழுவே இல்லை நல்லா தூங்குதே,, ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சநேரம் என்கூட பேசுங்களேன்" என்று குழந்தையின் குரலில் மான் கெஞ்சினாள்

தனிமையில் பேச்சுத் துணைக்காக அவள் எப்படி ஏங்கியிருப்பாள் என்று சத்யனுக்கு புரிந்தது நெஞ்சை அடைத்தது " சரிம்மா பேசு நான் கேட்கிறேன்" என்றான்

அதன் பிறகு மான்சி ஆயிரம் கேள்விகள் கேட்டாள் ஏகப்பட்ட சந்தேகங்களை அவனிடம் கேட்டாள் அதில் முக்கால்வாசி என்னவென்றே சத்யனுக்கு புரியவில்லை

அவன் வீட்டில் புசுபுசு நாய்க்குட்டி இருக்க? என்பதில் ஆரம்பித்து,, தோட்டத்தில் எத்தனை ரோஜாச்செடிகள் இருக்கினறது என்பதில் தொடங்கி,, உங்கவீட்டு பூஜைரூம்ல முருகன் படம் இருக்க? என்பதில் அவள் முடித்தபோது, அவளின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்ன சத்யன் கடைசி கேள்வியின் போது தூங்கிப்போனான் 




" நான் காதலிக்க ஒரு பெண் வேண்டும்

" என்று பலநாட்களாக தேடினேன்"

" இதோ கிடைத்துவிட்டாள் எனக்கு காதலி,,

" ஆனால் இவள் பெண்ணல்ல,

" அழகுக் கவிதையாய் ஒரு வளர்ந்த குழந்தை! 





மறுநாள் காலை ஊட்டி இயல்புநிலைக்கு திரும்பியிருக்க டவுனுக்குப் போய் தேவையானவற்றை வாங்கிவர மான்சிக்கும் குழந்தைக்கும் எல்லாவற்றையும் செய்துவிட்டு கிளம்பியவன் கம்பெனியில் இருந்து போன் வரவும் எடுத்து பேசினான்

தனது மேனேஜரிடம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக பேசியவன்,, ஏதாவது அவசரம் என்றால் தனது அப்பாவிடம் ஆலோசனை கேட்குமாறு கூறி,, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அங்கே வந்துவிடுவதாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்

இவனையேப் பார்த்துக்கொண்டிருந்த மான்சியின் அருகே வந்து “ இதோபார் மான்சி நான் போனதும், கதவை தாள் போட்டுக்கோ நான் வந்து கூப்பிட்டால் மாத்தறம் கதவைத்திற, வேற யார் வந்தாலும் உள்ளே இருந்தே கேட்டு அனுப்பு, வேலை ஏதாவது செய்றேன்னு எழுந்திரிக்க கூடாது, பாப்பாவோட கழுத்துல கைவச்சு ஜாக்கிரதையா தூக்கனும், குழந்தையோட துணியெல்லாம் கட்டில் பக்கத்துலேயே இருக்கு, அழுதான்னா எடுத்து மாத்து,” என்று அவளுக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லிவிட்டு கதவருகே போனவன், மறுபடியும் திரும்பி வந்து அவள் கையை பற்றியபடி “ அய்யோ உன்னைய தனியா விட்டுட்டு போகவே எனக்கு பயமாயிருக்கு,, ப்ளீஸ் ஜாக்கிரதையா இரு மான்சி,, நான் சீக்கிரமா வந்துடுவேன்” என்று கவலையாக கூற

அவன் தவிப்பை ரசித்தபடி “ நீங்க வர்ற வரைக்கும் கட்டிலை விட்டு கீழே இறங்கமாட்டேன் போதுமா,, ஆனா எனக்கு சாப்பிடறதுக்கு நிறைய வாங்கிட்டு வரனும் சரியா?” என்று சொல்லிவிட்டு அழகாய் தலைசாய்த்து மான்சி சிரிக்க
வேகமாய் அவளை நெருங்கி அவசரமாய் அவள் நெத்தியில முத்தமிட்டு விலகிய சத்யனிடம் தனது கன்னத்தை காட்டி “ நீங்க ஏன் இங்க குடுக்கவே மாட்டேங்குறீங்க?” என்று மான்சி கேட்க

சந்தோஷச் சிரிப்பில் உள்ளம் துள்ள அவள் முகத்தை இழுத்து இரண்டு கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட்டு விலகியவனின் கையைப் பிடித்து “ பாப்பாக்கு? ” என்றாள்

உடனே மகனுக்கு முத்தமிட்ட சத்யன், செல்லமாய் மான்சியின் கூந்தலை கலைத்துவிட்டு வெளியே போனான்,, வழிகள் ஓரளவுக்கு சீரடைந்திருக்க, சிறிதுதூரம் நடந்து பிறகு ஒரு டாக்ஸியில் ஏறி டவுனுக்கு சென்றான்,, டாக்ஸியை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு

முதலில் மெடிக்கல்ஷாப் சென்று மான்சி மற்றும் குழந்தையின் நிலைமையை சொல்லி தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு, ஜவுளிக்கடைக்கு போய் மான்சிக்கும் குழந்தைக்கும் அத்யாவசியமான உடைகளை மட்டும் வாங்கிக்கொண்டான்,, பிறகு பத்மாவிற்கு போன் செய்து மான்சிக்கு என்னனென்ன சாப்பிட கொடுக்கலாம் என்று கேட்டுக்கொண்டு, மதிய சாப்பாட்டை ஒரு ஹோட்டலில் வாங்கினான்,,, ஒரு பேக்கரியில் பிஸ்கட்கள், கேக் எல்லாம் வாங்கிக்கொண்டு டாக்ஸியில் வைத்தான், இரண்டு நாட்களுக்கு மட்டும் உணவு தயாரிக்க தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்

டாக்ஸி எவ்வளவு தூரம் போகமுடியுமோ அதுவரை கொண்டு வந்து விட்ட டிரைவருக்கு அதிகப்படியாக பணத்தை கொடுத்துவிட்டு பைகளை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வேகமாக வந்தான்

“ மான்சி” என்று அழைத்து கதவை தட்டிய சில விநாடிகளிலேயே கதவு திறக்கப்பட்டது,, பைகளுடன் உள்ளே நுழைந்த சத்யன் “ என்னம்மா தூங்கலையா? உடனே வந்து கதவை திறந்துட்ட?” என்று கேட்க

கட்டிலில் போய் அமர்ந்த மான்சி “ நான் எங்க தூங்குனேன்,, பாப்பாவுக்கு பால் கொடுத்து தூங்க வச்சிட்டு,, நீங்க எப்பவருவீங்கன்னு இங்கே கதவு பக்கத்துலயே உட்கார்ந்திருந்தேன்” என்றவள் கட்டிலில் வசதியாக சாய்ந்து “ இனிமே எங்கயாச்சும் போனா என்னையும் கூடவே கூட்டிட்டுப் போறீங்களா? பாப்பாவையும் தான்?” என்று மான்சி ஒரு மாதிரியான குரலில் சொல்ல

பைகளை கீழே வைத்துவிட்டு அவசரமாக அவளை நெருங்கி கட்டிலில் பக்கத்தில் அமர்ந்து அவள் தலையை தன் தோளில் சாய்த்த சத்யன் “ ம்ம்” என்று மட்டும் சொல்லிவிட்டு அவளை வளைத்து மென்மையாக அணைத்தபடி அப்படியே அமர்ந்திருந்தான், அவனும் இவ்வளவு நேரம் தவித்துத்தான் போனான், இதுதான் ஜென்ம பந்தம் என்பதா? 

அவன் தோளில் இருந்த மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து “ ரொம்ப பசிக்குது” என்று சொல்ல

அவளை விலக்கிவிட்டு எழுந்தவன் “ இன்னிக்கு ஓட்டல் சாப்பாடுதான்” என்று சொல்லிவிட்டு பாத்ரூம் போய் கை கழுவிவிட்டு வந்து சாப்பாட்டை பிரித்தான்
மான்சியும் கைகழுவிவிட்டு வந்து தரையில் அமர,, “ நீ கட்டில்லயே உட்காரு நான் எடுத்துட்டு வர்றேன்” என்று சத்யன் சொன்னான்

“ ம்ஹூம் கட்டில்ல உட்கார்ந்து சாப்பிட்டா நிறைய சாப்பிட முடியலை.. தரையிலயே உட்கார்ந்து சாப்பிடுறேன், இப்பல்லாம் நிறைய பசிக்குது” என்றாள் மான்சி

சத்யன் சிரித்தபடி அவளுக்கு தட்டில் உணவை வைத்தான்,, இருவரும் சாப்பிட்ட பிறகு வாங்கிவந்த உடைகளை பிரித்து பார்த்தனர்,, சத்யன் தன் மகனுக்கு அழகான சிறுசிறு உடைகளும், ஸ்வெட்டர் குல்லா எல்லாம் வாங்கி வந்திருக்க, அதை இருவருமாக குழந்தைக்கு போட்டுவிட்டனர்

மான்சிக்கு வெறும் மூன்று நைட்டிகள் மட்டுமே வாங்கி வந்திருந்தான் என்று தெரிந்ததும், மான்சி முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு கட்டிலில் போய் அமர்ந்துகொண்டாள்,

சத்யனுக்கு அவள் மனது புரிந்தது, எழுந்து அவளருகில் போய் அமர்ந்து “ என்னாச்சுடா,, என்ன கோபம்” என்று அவள் விரல்களை வருடிக்கொண்டே கேட்க

அவனை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தவள் “ நீங்க தான எல்லா சேலையையும் டர்ருன்னு கிழிச்சீங்க, இப்போ இவனுக்கு மட்டும் இத்தனை டிரஸ் எனக்கு ஒரு சேலை கூட இல்லை, என்கிட்ட சேலையே இல்லதானே” என்ற மான்சி அழுதுவிடுவாள் போல இருந்தது

அவளை அருகே இழுத்த சத்யன் “ இல்லடா இங்கே சேலை எல்லாம் ஒன்னு கூட நல்லாவே இல்லை,, நானும் தேடி பார்த்தேன் ஒன்னுகூட உனக்கு ஏத்த மாதிரி இல்லை, அதான் கோவை போறோமே அங்க போய் வாங்கிக்கலாம்னு வெறும் நைட்டி மட்டும் வாங்கிட்டு வந்தேன், கோவை போனதும் பத்மா அண்ணியை கூட்டிட்டுப் போய் நிறைய சேலைகள் வாங்கிக்கலாம்” என்று ஒரு குழந்தையை சமாதானம் செய்வதும் போல் அவளை சமாதானம் செய்தான் சத்யன்

அவன் பேச்சில் நான் சமாதானம் ஆகிட்டேன் என்பதன் அறிகுறியாக அவன் சட்டை பட்டனை திருகியபடி “ ம் சரி ஆனா நிறைய சேலை வேனாம், ரெண்டு சேலை மட்டும் போதும், யார்கிட்டயும் இனாமா எதையும் வாங்கக்கூடாது அது திருடுறதுக்கு சமம்னு அம்மா சொல்லும், அதனால இப்போ கட்டிக்க மட்டும் ரெண்டு போதும்” என்று மான்சி சொல்ல

முத்தம் மட்டும் இனாமா வாங்கிக்கலாமா,, என்று கேட்க நினைத்த சத்யன், இவளை எப்படித்தான் மாற்றப் போறேனோ என்று எண்ணியபடி “ சரி உனக்கு என்ன கலர் பிடிக்கும்” என்று பேச்சை மாற்றினான் ‘

அவன் சட்டையின் பட்டனை திருகியபடியே “ எனக்கு ரோஸ் கலர் புடிக்கும்” என்றவள் சட்டென்று அவசரமாக நிமிர்ந்து “ இல்ல இல்ல அது மொதல்ல புடிக்கும், பத்தாப்பு படிக்கறப்ப ரோஸ் கலர் புடிக்கும், இப்போ புளூக்கலர் தான் புடிக்கும்” என்றாள்

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் சத்யனை வியக்க வைத்தது ரசிக்க வைத்தது,, அவளது குமரி முகமும், குழந்தை குணமும், சத்யனை முற்றிலுமாக வீழ்த்தியிருந்தது, அவனின் ஒவ்வொரு அணுவும் மான்சியின் பெயரை மட்டுமே உச்சரித்து 
“ சரி உனக்கு பிடிச்ச கலரே சேலை வாங்கித்தறேன்,, இப்போ இந்த நைட்டியைப் போட்டுக்க” என்றவன், அவள் முகத்தை நிமிர்த்தி “ மான்சி ஒரு முக்கியமான விஷயம்,, கோவை போனதும் யார் வந்து உன்கிட்ட என்ன கேட்டாலும் நீ எதுவும் சொல்லவேண்டாம்,, எதுவாயிருந்தாலும் என்கிட்ட கேட்டுக்க சொல்லு,, சரியா மான்சி” என்று சத்யன் சொன்னதும்..

சரியென்று தலையசைத்தவள் உடனே எழுந்து, கவரில் இருந்த நைட்டியை எடுத்துக்கொண்டு, தனது புடவை முந்தானையை எடுத்து கீழே போட்டுவிட்டு “ இதை எப்புடி ஜாக்கெட்க்கு மேலயே போடவா?, இல்ல அதையும் அவுத்துட்டு போடவா?” என்று மான்சி தன் இடுப்பில் கைவைத்துக்கொண்டு ஒயிலாக தலைசாய்த்து கேட்க

அவள் புடவை முந்தானையை எடுத்து போட்டுவிட்டு இடுப்பில் கைவைத்துக்கொண்டு நின்றபோதே தடுமாறிப் போன சத்யன், அவள் கேட்ட கேள்வியில் ரொம்பவே தடுமாறினான், “ குழந்தைக்கு பால் குடுக்கனும்ல அதனால வெறும் நைட்டி மட்டும் தான் போட்டுக்கனும்” என்று சத்யன் கரகரத்த குரலில் சொல்ல

‘’ ம் சரி. ஆனா உங்க குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு” என்றவள் தனது ரவிக்கையின் ஊக்கில் கைவைத்ததும், சத்யன் வேகமாக எழுந்து பாத்ரூமுக்குள் போய்விட்டான்,,

இந்த மூன்று நாட்களில் இந்த தடுமாற்றம் அவனுக்கு புதிது , இத்தனை நாட்களாய் அவளின் உடல் பாகங்கள் எதுவும் அவனை தடுமாற வைக்கவில்லை, ஆனால் இப்போது அவளின் கூந்தல் நுனியிலிருந்து, கால் விரலின் நகங்களின் விழிம்பு வரை அவனுக்கு ஆயிரம் காதல் கதைகளை கற்பித்தது, மான்சியின் அழகு வதனம் அவனை ரொம்பவே மயக்கியது,,

அதற்கேற்றாற்போல் அவளும் இவன் எதிரில் உரிமையுடன் கூச்சமின்றி எல்லாவற்றையும் செய்வது தான் சத்யனுக்கு புரியவில்லை, எனக்கு அவள் யார் என்ன உறவு என்பது புரிந்துபோனது,, ஆனால் அவளுக்கு நான் யார்? என்ன உறவு என்ற கேள்வி சத்யன் மனதில் பெரிதாக தொக்கி நின்றது,,

மான்சி தன் காதலை உணருகிறாளா? அல்லது பிரசவம் ஆனது, அதன்பிறகு இந்த மூன்று நாட்களில் ஏற்ப்பட்ட நெருக்கம் மட்டுமே அவள் இப்படி நடந்துகொள்ள காரணமா? என்று சத்யனுக்கு புரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சத்யனுக்கு புரிந்தது, நான் இல்லாமல் இந்த ஏமாற்றுக்கார உலகில் மான்சி மட்டும் தனித்து வாழமுடியாது, என்பது மட்டும் தெளிவாக புரிந்தது

அவள் வாழ்க்கையில் முதன்முதலாக வந்த ஆண் நான்தான், அதிலும் அவளை எல்லாவிதத்திலும் பார்த்துவிட்ட ஒரு ஆண் என்பதால்தான் என்னிடத்தில் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாளா? அல்லது அவள் மனதிலும் என்னைப்பற்றி ஏதாவது மாற்று அபிப்பிராயம் இருக்குமா? என்று சத்யனின் மனம் குழம்பியது

அவளின் ஒவ்வொரு செயலிலும் ஒரு குழந்தைத்தனம் தெரிந்ததே தவிர, காதல் இருப்பதாக சத்யனுக்கு தெரியவில்லை,, சத்யனுக்கு மான்சிக்கு சகலத்தையும் புரியவைக்கவும்,, மான்சியை மாற்றவேண்டிய வேலை அதிகமாக இருப்பதுபோல் தோன்றியது

முதல் அருணாவைப் பற்றி விளக்கி, அவளின் துரோகம் பற்றி மான்சிக்கு புரியவைக்க வேண்டும், அதன்பிறகு, இந்த ஏழுவருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி அவளுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லவேண்டும், அதன்பிறகு தான் என் காதலை அவளுக்கு உணர்த்தவேண்டும், ஆனால் மான்சிக்கு செக்ஸ்ப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பது சத்யனுக்கு தெளிவாக புரிந்தது








No comments:

Post a Comment