Tuesday, September 22, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 13

இன்றும் இளைய தலைமுறையினர் பெங்களூரில் செல்ல வேண்டிய ஒரு முக்கியக் கேளிக்கைத் தலமாகக் கருதப் படும் பிரிகேட் ரோட்-எம்.ஜி ரோட் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்டது R.S.I. அப்படி சுருக்கமாக அழைக்கப் படும் ராஜேந்திர சிங்க்ஜி இன்ஸ்டிட்யூட் ராணுவ உயர் அதிகாரிகளுக்கென அமைக்கப் பட்ட ஒரு க்ளப். ராணுவத்தில் பணி புரியும்

 றுப்பிராக சேர்ந்தாலும் 
ராணுவத்தில் இருந்து விலகிய பிறகும் அவர்களது உறுப்பினர் நிலை நீடிக்கும். பல விளையாட்டு வசதிகளைத் தவிற பல பார் வசதி கொண்ட ரெஸ்டாரண்டுகளும் இதில் அடக்கம்.

வெளி வாசலில் இருந்த ராணுவ வீரனுக்கு காரில் இருந்தபடி விஸ்வா தன் அடையாள அட்டையைக் காட்ட அவன் விரைப்புடன் நின்று உள்ளே செல்ல அனுமதித்தான். பயிற்சி முடிந்து ராணுவத்தில் சேர்ந்த முதல் மாதத்தில் தன் குடும்பத்தினரை அங்கு ட்ரீட் கொடுக்க அழைத்து வந்த போதும் இவ்வாறு நடந்தது. அதைக் கண்ட அவன் தந்தை "நான் எத்தனை வருஷம் இந்த மெடிக்கல் ஃபீல்டில் குப்பை கொட்டினாலும் இந்த மாதிரி மரியாதை எனக்குக் கிடைக்காது. I am proud of you my son" என்றது அவன் நினைவுக்கு வந்தது.

அதன் பிறகு வனிதாவை அழைத்து வந்து பல மாலைப் பொழுதுகளை அங்கு களித்ததும் அவன் மனத் திரையில் தோன்றியது. உடன் மனத்தில் சில நாட்களாக மறைந்து இருந்த வலி குடி புகுந்தது. பல நாட்களுக்கு முன்னர் தனக்கு நல்ல நண்பராக, ஆலோசகராக இருந்து நல் வழி காட்டிய கர்னல் மதுசூதனை சந்திக்கப் போவதை நினைத்து அந்த வலியை ஒதுக்கித் தள்ளி மனத்தில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் விரும்பும் பைப்பர்ஸ் பெவிலியன் எனப் படும் பாருக்குள் நுழைந்த விஸ்வா ஒரு மூலையில் சற்று ஒதுங்கி இருந்த பகுதியில் டாக்டர் மதுசூதன் அமர்ந்து இருந்ததைக் கண்டான்.

அவர் அருகே வந்து விறைப்புடன் நின்ற விஸ்வா, "ஈவ்னிங்க் சர்"

டாக்டர் மதுசூதன், "We both are out of the services my boy" என்றபடி எழுந்து கை குலுக்கி அவனை அவருக்கு எதிரே அமரப் பணித்தார்.

டாக்டர் மதுசூதன், "What do you like to have?"

விஸ்வா, "100 Pipers with water"

டாக்டர் மதுசூதன், "To go with the name of this bar?" என்று சிலாகித்தார்

விஸ்வா, "Well, it is a reasonably good imitation of genuine scotch. Neither too expensive"

டாக்டர் மதுசூதன், "What about Teachers' whiskey?"

விஸ்வா, "There quality in India does not live up to their great brand name"

டாக்டர் மதுசூதன், "பியர் குடிக்காத பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஒரே பெங்களூர் வாசி நீயாத்தான் இருப்பே"

தன் கவலைகளை மறந்து வாய் விட்டுச் சிரித்த விஸ்வா, "ஆனா என் ப்ரதருக்கு பியர் ஒரு முக்கியத் தேவை. அவ்வளவு பியர் குடிச்சும் இன்னும் எப்படி அவனுக்கு தொப்பை வராம இருக்குன்னு தெரியலை"

டாக்டர் மதுசூதன், "யூ மீன் ராம். எப்படி இருக்கான்? அவனையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு"

விஸ்வா, "ஹீ இஸ் டூயிங்க் குட். ஆனா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கானேன்னு அப்பா அம்மாவுக்கு கவலை"

டாக்டர் மதுசூதன், "அவனுக்கு எவ்வளவு வயசு? ஐ மீன் உனக்கு எவ்வளவு வயசாச்சு? முப்பத்து மூணா? That is not too old to get married. வேணும்ன்னா நீங்க ரெண்டு பேரும் ஒரே மேடையில் கல்யாணம் பண்ணிக்கலாம்"

அவர் எதற்குக் குறிப்பிடுகிறார் என்பதை உணர்ந்த விஸ்வா மௌனம் காத்தான். வெயிட்டர் கொண்டு வந்த ட்ரிங்க்ஸ்ஸை இருவரும் கையில் ஏந்த,

டாக்டர் மதுசூதன், "Cheers, To marriages and life" என டோஸ்ட் கொடுத்தார்

அவர் கண்களைத் தவிர்த்த விஸ்வா தன் கோப்பையை அவர் கோப்பையுடன் இடித்து பருகத் தொடங்கினான்.




அவனைக் கூர்ந்து நோக்கியவாறு சில கணங்கள் மௌனம் காத்த டாக்டர் மதுசூதன், "அந்த பாகிஸ்தான் ஆஃபீஸரின் குடும்பத்தைப் பத்தி நியூஸ் கிடைச்சுது"

தர்ம சங்கடத்துடன் நெளிந்த விஸ்வா ஆதங்கம் ததும்பும் குரலில், "என்ன நியூஸ்?"

டாக்டர் மதுசூதன், "அவன் செத்துப் போன விவரம் கேட்டதும் அவனோட மனைவி ஓன்னு கதிறி மயங்கி விழுந்தவதான். அதுக்குப் பிறகு ஒரு வார்த்தை பேசலை. மெண்டல் ஷாக். ஒரு மெண்டல் ஹாஸ்பிடலில் ட்ரீட் மெண்ட் கொடுத்தாங்க. அந்த அதிர்ச்சியில் வயித்தில் இருந்த குழந்தை நிக்கலை. ஆறு மாசத்தில் அபார்ஷன். அடுத்த ரெண்டு மூணு மாசத்தில் ஒரு நாள் அந்த க்ளினிக் மொட்டை மாடியில் இருந்து குதிச்சுத் தற்கொலை பண்ணிட்டளாம். அவனோட அம்மாவும் இப்போ ஒரு மெண்டல் பேஷண்ட். நடைப் பிணமா இருக்காங்களாம்"

அவர் சொல்லச் சொல்ல அந்த ஆஃபீஸர் தன் இறுதி நிமிடங்களில் விஸ்வாவிடம் கதறியது மனத்தில் தோன்ற விஸ்வாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. சில மணி நேரங்களுக்கு முன்னர் இருந்ததை விட பல மடங்கு அதிகமாக மனதைப் பிசைந்து பிழியும் வலி அவனை தலை தெறிக்க வைத்தது.

மூச்சிரைக்க விஸ்வா, "இதைச் சொல்லத்தான் என்னை இன்னைக்கு வரச் சொன்னீங்களா? உங்களை நான் ஒரு ஃப்ரெண்ட்டா நினைச்சுட்டு இருக்கேன். Why do you want to torture me like this? இதை என் கிட்டே சொல்றதில் உங்களுக்கு என்ன அப்படி ஒரு ஆர்வம்?" என்று சொல்லி முடிக்கும் போது அவன் குரல் உடைந்து இருந்தது.

டாக்டர் மதுசூதன், "ஆர்வம் எதுவும் இல்லை. சரின்னு நினைச்சு நாம் செய்யும் செயல்களுக்கு பின் விளைவுகள் எப்பவும் சரியா இருக்காதுன்னு சொல்ல வந்தேன்"

விஸ்வா, "What do you mean?"

டாக்டர் மதுசூதன், "Just what I said"

விஸ்வா, "சரி, இப்போ எதுக்கு அது?"

டாக்டர் மதுசூதன், "இப்பவும் நீ சரின்னு நினைச்சு ஒரு காரியத்தை செஞ்சுட்டு இருக்கே. அதன் பின் விளைவுகளை யோசிச்சியான்னு தெரியலை. அதான் ஒரு சின்ன ரிமைண்டர் .. "

விஸ்வா, "என் குழந்தைகள் பாதிக்கப் படுவாங்க. They will have to grown up in a broken home. அதைத் தவிற வேற எந்தப் பின் விளைவும் இல்லை"

டாக்டர் மதுசூதன், "ம்ம்ஹூம் .... நீ எதையும் யோசிக்கும் மன நிலையில் இல்லை. அது நல்லா தெரியுது"

விஸ்வா, "உங்களுக்கு ஏன் இப்போ என் மேல் திடீர் அக்கறை?"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, என்னோட பேஷண்ட்ஸ் ஒவ்வருவர் மேலும் எனக்கு அக்கறை இருக்கு. அதற்கும் மேல் இண்டியன் ஆர்மிக்கு உன் மேல் அக்கறை இருக்கு"

விஸ்வா, "ஓ! அதனால் தான் ஒரு சின்ன பாராட்டு கூட இல்லாமல் என்னை அனுப்பினாங்களா?"

டாக்டர் மதுசூதன், "அது உன் பாதுகாப்புக்காக"

விஸ்வா, "என்ன சொல்லறீங்க?"

டாக்டர் மதுசூதன், "நீ சுட்டுக் கொன்ன ஆஃபீஸரின் அப்பா பாகிஸ்தான் ஆர்மியில் ஜெனரல் ஆக இருந்தவர். பிறகு ஐ.எஸ்.ஐயில் முக்கியப் பதவியில் இருந்தார். உனக்கு என்ன மெடல் அல்லது விருது கொடுத்து இருந்தாலும் அதுக்கு ஒரு அஃபீஷியல் சைடேஷன் தயாரிச்சு இருக்கணும். அந்த பாகிஸ்தான் ஆஃபீஸரை நீதான் கொன்னே அப்படின்னு தெரிய வந்தா உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஆபத்து வரக்கூடும்-ன்னுதான் எந்த மெடலும் விருதும் கொடுக்கப் படலை."

உண்மையை உணர்ந்து விஸ்வா மௌனம் காத்தான் ...

டாக்டர் மதுசூதன், "உன் கேஸ் ஃபைலை யாரோ திறந்து பார்க்கறாங்கன்னு தெரிஞ்சதும் எனக்கு நியூஸ் வந்தது. போலிக் கேஸ் ஃபைலாக இருந்தாலும் it was flagged. என்ன ஏதுன்னு விசாரிச்ச போது நீ டைவர்ஸ்ஸுக்கு அப்ளை பண்ணி இருப்பதாவும் ஜட்ஜ் மேரேஜ் கவுன்ஸிலிங்க் தேவைன்னு ஆர்டர் போட்டு இருப்பதாவும் தெரிஞ்சுது"

விஸ்வா, "நான் ஏன் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணினேன்னு உங்களுக்குத் தெரியாது"

டாக்டர் மதுசூதன், "தெரியும். உன் டைவர்ஸைப் பத்தின எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். என் இன்ஃப்ளுயன்ஸைப் பயன் படுத்தி டாக்டர் அமுதாவின் கேஸ் ஃபைலை வாங்கி முழுக்கப் படிச்சுட்டுத்தான் சொல்லறேன்"

விஸ்வா, "சோ, நான் செய்யறதில் என்ன தப்பு?"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, நீ வனிதாவை டைவர்ஸ் பண்ணாதேன்னு சொல்லலை. பண்ணனும் அப்படின்னும் சொல்லலை. எந்த முடிவு எடுத்தாலும் அதை நினைச்சு நீ வருங்கலத்தில் வருத்தப் படக் கூடாது. முடிவு எடுக்க தோதான மன நிலையில் நீ இல்லை"

விஸ்வா, "என்ன என்னதான் செய்யச் சொல்லறீங்க?"

டாக்டர் மதுசூதன், "என்னை உனக்கு உதவி செய்ய அனுமதி கொடு. உன் மேல் இருக்கும் அக்கறையினால் மட்டும் நான் இதைச் சொல்லலை. உனக்கு மன ரீதியா எந்த பாதிப்பும் வராமல் பாத்துப்பேன்னு நான் என் பாருவுக்கு வாக்குக் கொடுத்து இருக்கேன். அதுக்காவும் தான்"

அவர் அப்படிச் சொன்ன போது, அவன் அவரிடம் சைக்கியாட்ரிக் ட்ரீட்மெண்ட் பெற்றுக் கொண்டு இருந்த போது பல மாலைகளை அவரது வீட்டில் கழித்ததை நினைவு கூர்ந்தான். அவனை மனோதத்துவ மருத்துவம் பெறும் ஒரு பேஷண்டாகப் பார்க்காமல் அவனிடம் வெகு சகஜமாகப் பழகி அவனிடம் அன்பு செலுத்திய அவரது அன்பு மனைவி பார்வதியும் அவன் நினைவுக்கு வந்தார்.

விஸ்வா, "ஓ! எப்படி இருக்காங்க?"

டாக்டர் மதுசூதன், "Alas, I lost my Paru to the dreaded cancer. நான் ரிடையர் துக்கு
 மூணு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்தது. ரிடையர் ஆகும் போது, ஐ மீன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கடைசி மூச்சு விட்டா"

விஸ்வா, "அப்ப நீங்க தனியா இருக்கீங்களா?"

டாக்டர் மதுசூதன், "ம்ம் ஹூம், வருஷத்தில் ஆறு மாசம் யூ.எஸ்ஸில் இருக்கும் என் மகன் வீட்டிலும் மகள் வீட்டிலும். மீதி ஆறு மாசம் இந்தியாவில். முக்காவாசி நாட்கள் பெங்களூர். சில நாட்கள் புனே"

விஸ்வா, "ஐ வெரி சாரி சார். You must be missing her a lot"

டாக்டர் மதுசூதன், "Of course I miss her" என்றவர் சில கணங்கள் தன் சோகத்தில் மௌனம் சாதித்த பிறகு, "மிஸ் பண்ணறதுன்னா என்ன விஸ்வா?"

விஸ்வா, "You know, அவங்க கூட இருப்பதை. எப்பவும் ரொம்ப ஃப்ரென்ட்லியா இருப்பாங்க. உங்ககூட ஜாலியா பழகறதைப் பார்த்து இருக்கேன். உங்களுக்கு நல்ல மனைவியா இருந்த அளவுக்கு நல்ல சினேகிதியாவும் இருந்து இருப்பாங்கன்னு நினைக்கறேன்"

டாக்டர் மதுசூதன், "நல்ல மனைவின்னா என்ன? எப்படி பாருவை நல்ல மனைவின்னு சொல்லறே?"

விஸ்வா என்ன சொல்வது என்று அறியாமல் விழித்தான் ...

டாக்டர் மதுசூதன், "நான் அவளை நல்ல மனைவி இல்லைன்னு சொல்லலை. எங்க ரெண்டு பேருக்கு இடையே நிறைய கருத்து வேறு பாடுகள் இருந்தது. என் தேவைகள் ... " என்று இழுத்தவர் தொடர்ந்து, "வெளியில். நான் வெளியில் சொல்ல வெட்கப் படும் ஒரு விஷயத்தை சொல்லறேன். During one phase of our marriage she was an ice queen"

விஸ்வா, "What do you mean?"

டாக்டர் மதுசூதன், "She was frigid. செக்ஸில் அவளுக்கு சுத்தமா இன்டரெஸ்ட் போயிடுச்சு. ஆனா, அதே கால கட்டத்தில் எனக்கு நிறைய தேவைப் பட்டது. ரொம்ப வெறுப்பா இருக்கும். நல்ல வேளையா நான் செய்யும் வேலையில் இந்த மாதிரி பல கேஸ்களைப் பார்க்கும் அனுபவம். நானே என் நிலமையை அவளுக்கு எடுத்துச் சொன்னேன். அப்பத்தான் அவளும் தன் நிலமையை எடுத்துச் சொன்னா. அவளோட உணர்வுகளை நானும் என் உணர்வுகளை அவளும் புரிஞ்சுட்ட பிறகுதான் எங்க மண வாழ்க்கை மறுபடி ஒரு அளவுக்கு சரியாச்சு. ஆனா அது முழுசா சரியாகும் போது எங்க ரெண்டு பேருக்கும் ஐம்பதுக்கும் மேல் வயசாயிடுச்சு! சோ, நல்ல மனைவி, நல்ல கணவன் அப்படிங்கறது எல்லாம் நாமே வரையறுத்துக்கறது"

விஸ்வா மௌனம் காத்தான்.

டாக்டர் மதுசூதன், "Sorry for the digression. சரி, நான் பாருவுக்கு உனக்கு மன வேதனை எதுவும் இல்லாமல் பார்த்துக்கறேன்னு வாக்குக் கொடுத்து இருக்கேன். சோ, உன் நீடித்த சந்தோஷம் தான் என் முக்கியக் குறிக்கோள். அதைப் புரிஞ்சுக்கோ. என்ன? என்னை உனக்கு ஹெல்ப் பண்ண அனுமதி கொடுப்பியா?"

நாத் தழ தழக்க விஸ்வா, "எஸ் சார்"





No comments:

Post a Comment