Thursday, September 10, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 16

அவனைவிட்டு விலகி எழுந்த மான்சி “ அப்படின்னா உங்க மனைவி கொடுக்கச் சொன்னதைவிட அதிகமா பணம் கொடுத்து எனக்கும் என் பிள்ளைக்கும் செட்டில் பண்ணத்தான் நீங்களும் வந்திருக்கீங்க, அப்போ உங்க ரெண்டுபேருக்குமே என் வயித்துல இருந்தது உங்களோட வாரிசுன்னு தோனவேயில்லையா?, அவங்களுக்கும் இந்த குழந்தை தேவையில்லை உங்களுக்கும் தேவையில்லாமல் தான் பணம் கொடுக்க வந்தீங்க, இதுல அருணாவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? ” என்று மான்சி தீர்கமாக கேட்க

சத்யன் விக்கித்துப் போய் அவளைப்பார்த்தான்,, இவள் சொல்வதை எப்படி மறுப்பது அதற்காகத்தானே நானும் ஊட்டிக்கு போனேன்,

ஆனால் அதன்பிறகு நடந்ததெல்லாம் இவளுக்கு தெரியலையா?’ என்று எண்ணி அவளையே பார்த்தான்,, அருணாவைப் பற்றி மான்சிக்கு புரியவைக்க அவன் எடுத்துக்கொண்ட முயற்சி அவனுக்கே வினையாக வந்து முடிந்ததை எண்ணி திகைப்புடன் நின்றிருந்தான்

அவன் எதிரில் நின்ற மான்சியே முற்றிலும் வேறாக இருந்தாள்,, ஏழைகளின் பிரதிநிதியாக நின்று சத்யனை கேள்வி கேட்டாள்
சத்யன் அவளையே வெறித்துப் பார்த்தான்,, பிறகு “ மான்சி என்னையுமா சந்தேகப்படுற? இந்த நாலுநாளும் உனக்காகவும் நம்ம குழந்தைக்காகவும் தானே நான் வாழுறேன், நான் வந்தது வேனும்னா பணம் கொடுக்குறதுக்காக இருக்கலாம், ஆனா இப்போ உங்க ரெண்டு பேரையும் தவிர என் மனசுல வேற எதுவுமே இல்லை மான்சி ” என்று வரண்ட குரலில் கேட்க

“ இதுக்குப் பேரு சந்தேகம் இல்லைங்க, என்னோட தன்மானம், அன்னிக்கு நீங்க வந்ததுக்கு காரணம் எனக்கு பணம் கொடுத்து அனுப்பத்தானே, வந்த சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் என் கூட தங்கிட்டீங்க,

“அப்படி ஒரு பொண்ணு மேல அக்கரை உள்ளவரா இருந்திருந்தா, அருணா என்னைத் தேடி வந்து உங்க குழந்தையை சுமக்க வச்சிட்டு போனப்பவே நீங்க ஏன் என்னை தேடலை,

“பொண்டாட்டி வெளிநாட்டுக்கு போய்ட்டாளே அவ ஏற்ப்பாடு செய்த பொண்ணும் அவ வயித்து இருக்கிற குழந்தையும் என்ன ஆனாங்க எங்கே இருக்காங்கன்னு எப்பவாச்சும் உங்களுக்கு தேடிப் பார்க்கனும்னு தோணுச்சா?,,

“ உங்க பொண்டாட்டியை பத்தி உங்களுக்கு தெரியும் அப்படியிருக்கும்போது அவகிட்ட மாட்டின அந்த அப்பாவி யாருன்னு தேடிப்பார்த்து உதவனும்னு உங்களுக்கு ஏன் மொதல்லயே தோனலை,,

“அப்பவே என்னை கண்டுபிடிச்சு நாங்க தப்பிக்க உதவியிருந்தா என் அம்மாவோட உயிராவது எனக்கு மிஞ்சியிருக்குமே,,

“அருணாவோட எட்டு வருஷம் வாழ்ந்து அவ குணத்தை புரிஞ்சு வச்சுருக்க நீங்க அவங்க வாடகைத்தாய் பற்றி சொன்னதுமே, இவகிட்ட எந்த அப்பாவி மாட்டப் போறாங்களோன்னு நெனைச்சு அப்பவே அதை தடுத்திருக்கலாமே, அப்படித்தடுத்திருந்தா ஒரு ஏழையோட சாவே நடந்திருக்காதே,,

“உங்க பொண்டாட்டிக்கு ஏழைங்க மேல அலட்சியம், உங்களுக்கு உங்க பொண்டாட்டி மேல அலட்சியம், ஆகமொத்தம் உங்க ரெண்டு பேரோட அலட்சியத்துக்கு பலியானது என் அம்மாவும் என்னோட வாழ்க்கையும்தான், என் அம்மா இப்படியொரு சுயநலவாதிகளால செத்துப் போனாங்களே ” என்று ஆத்திரமாக பேசிய மான்சி கட்டிலில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று அழ

சத்யன் கல்லாய் ஆனவன் போல் பாறையான முகத்துடன் அப்படியே நின்றான், இவள் சொல்வதில் எந்த தவறும் இல்லையே,, என்னோட அலட்சியம்தான் இப்போ நடந்த எல்லாவற்றுக்கும் காரணமா? நான் நினைத்திருந்தால் இவள் தாயையும் இவளையும் காப்பாற்றி இருக்கலாமோ? அய்யோ எல்லாமே என்னால் தானோ? சத்யன் மனம் குமுறியாது குழந்தையாய் நினைத்தவள் இன்று ஒரு நீதிபதியாக நின்று கேள்வி கேட்கிறாளே, இவளுக்கு நான் என்ன பதில் சொல்வது, என்று புரியாமல் தவித்து மான்சியை நெருங்கி அவள் தோளில் கைவைத்தான்


மான்சி அழுகையை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க,, அவள் கண்ணீரை தன் கைகொண்டு துடைத்த சத்யன் “ மான்சி அருணாவைப் பத்தி உனக்கு புரியவச்சு, நீ நான் நம்ம குழந்தையின்னு வாழ நெனைச்சேன், ஆனா அது எனக்கெதிராவே முடிஞ்சுருச்சு,, நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் நியாயமானதுதான்,,

“ அருணாவின் புத்தி தெரிஞ்சு வாடகைத்தாய் விஷயத்தில் அவளை அவள் போக்கில் விட்டது என் தப்புதான், அப்பவே எல்லாத்தையும் நானும் தெரிஞ்சுக்கனும்னு முயற்சி செஞ்சுருந்தா இன்னிக்கு உன் அம்மா உன்னோட இருந்திருப்பாங்க, அந்த தவறுக்காக நீ என்ன சொன்னாலும் நான் ஏத்துக்கிறேன்,

“ ஆனா மான்சி எனக்கு ஏழைகளின் மீது அலட்சியம் இல்லை, எப்பவுமே அருணாவே முடிவெடுத்து பழகியதால் நான் இந்த விஷயத்துல தலையிடலை,

“ அதுமட்டுமல்ல வாடகைத்தாய்ன்னா யாராவது குழந்தைப்பெற்ற பெண்களைத்தான் பயன்படுத்துவாங்கன்னு நெனைச்சேன், உன்னைப்போல ஒருத்தியை நான் சத்தியமா எதிர்பார்க்கலை,

“ அதனால்தான் அருணா போன் பண்ணதும் வீடுபூராவும் தேடி இந்த பத்திரங்களை கண்டுபிடிச்சு படிச்சுப்பார்த்தேன், அப்பதான் உன்னைப் பற்றிய விஷயங்கள் தெரிஞ்சு கொதிச்சுப்போய் ஊட்டிக்கு வந்தேன்,,

“ அங்கே உன்னை அப்படியொரு நிலைமையில பார்த்ததும் என்னால உன்னைவிட்டு வரமுடியலை அதுமட்டுமல்ல வாழ்நாள் முழுக்க உன்கூடவே இருக்கனும்னு ஆசைப்பட்டேன் மான்சி,,

“ இப்போ நீ இவ்வளவு குற்றச்சாட்டுகளை என்மீது வச்சப் பின்னாடி இதை சொல்ல எனக்கு தகுதி இல்லதான், ஆனா என்னோட வேண்டுகோள் என்னன்னா இறந்துபோன உன்னோட அம்மா என்னால திருப்பி கொண்டு வரமுடியாது, ஆனா ஒரு தாயாய் இருந்து உனக்கு என்னால சேவகம் செய்யமுடியும் மான்சி,, அந்த அனுமதியை மட்டும் மறுக்காதே” என்றவன் அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளைப் பற்றி அதில் தன் முகத்தை வைத்துக்கொண்டான்

சற்றுநேரத்தில் தன் கைகள் ஈரமாவதை உணர்ந்த மான்சி அப்படியே முகத்தை நிமிர்த்தி பார்க்க அவனின் கண்ணீர் அவள் வழிந்து பாவமன்னிப்பை யாசித்தது, அவன் கண்ணீரைப் பார்த்து மான்சிக்கும் அழுகை வந்தது, அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு முந்தானையை எடுத்து அவன் முகத்தை துடைத்தாள்


முகத்தை துடைத்த கையைப்பிடித்த சத்யன் “ மான்சி உன்னை குழந்தைன்னு நெனைச்சேன், ஆனா உனக்குள்ள இவ்வளவு சுயகௌரவம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை” என்றான்

அவனை கூர்ந்துபார்த்து தன் பார்வையால் துளைத்த மான்சி “ குழந்தைத்தனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க ,, நான் போலியை இனம்காணத் தெரியாத குழந்தைதான்,, ஆனா யோசிக்கத் தெரியாத முட்டாள் இல்லையே?,,

“ யாருமே சொந்தம்னு இல்லாம நானும் என் அம்மாவும் வாழ்ந்த தனிமை வாழ்க்கைக்கு, ஏழ்மை வாழ்க்கைக்கு அடியில என்னோட கனவுகள், ஏக்கங்கள், சந்தோஷங்கள், ஆசைகள், எல்லாத்தையும் போட்டு புதைச்சு வச்சிருந்தேன்,,,

“ நீங்க வந்து உரிமையோட என்கிட்ட பேசினப்ப உதவினப்ப எனக்கும் ஒரு உறவு இருக்கு அப்படிங்கர சந்தோஷத்துல என் மனசுல இருந்ததை எல்லாம் நானும் கொட்டினேன்,

“ நான் செல்லமாய் பேசுறது உங்களுக்கு ரொம்ப பிடிக்குதுன்னு தெரிஞ்சப்ப மேலும் உங்ககிட்ட செல்லமா நடந்துக்க தோணுச்சு, என்னோட நடவடிக்கைகள் எல்லாத்தையும் நீங்க ரசிச்சு ரொம்ப உரிமையா பழகுனப்ப, மேலும் மேலும் உங்ககிட்ட உரிமையா இருக்கனும்னு தோணுச்சு,

“ ஆனா அதுக்கெல்லாம் பின்னனியா பிராயச்சித்தம் என்ற ஒன்னு மறைஞ்சிருக்கும்னு நான் நினைக்கவேயில்லை” என்று மான்சி கூறியதை கேட்டதும் ,, சத்யனுக்கு முணுக்கென்று கோபம் வந்தது



“ உனக்காக ஒன்னொன்னையும் யோசிச்சு யோசிச்சு செஞ்சேனே அது பிராயச்சித்தமா?,,

“ நான் யார் என்பதையே மறந்து உன்காலடியில் நின்னு சேவகம் செய்தேனே அது பிராயச்சித்தமா?,,

" ஏன்டி எவனாவது பிராயச்சித்தமா தன்னோட உயிரையே குடுப்பானா,, ஆனா நான் குடுத்திருப்பேன்,, நீ வலியால துடிச்ச அந்த நேரத்துல நீயும் குழந்தையும் பிழைக்க என் உயிரை கொடுத்தாத்தான் நீங்க ரெண்டுபேரும் பிழைப்பீங்கன்னு சொல்லியிருந்தா நான் என் உயிரை கொடுத்திருப்பேன்,

“ உன் உதிரம் என் கையில வழிஞ்சுது பாரு அந்த நிமிஷம் பண்ணேன் இனி நீதான் எனக்கு எல்லாமும்னு,,

“ அந்த நேரத்துல எனக்கு நான் யாரு, அருணா யாரு, நீ யாரு, இப்படி எதுவுமே தெரியலை என் மகனும் அவனோட தாயா நீயும், தகப்பனா நானும்தான் ஞாபகம் வந்தது,

“ ஏய் இன்னும் சொல்லப்போனா என் அப்பா அம்மாவைக் கூட மறந்தது அந்த நாலு நாள்தான்,

“ கடைசில எல்லாத்தையும் பிராயச்சித்தம்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டியேடி, இப்பத்தான் நீ ரொம்ப மெச்சூர்டா பேசுறேன்னு நெனைச்சேன், ஆனா நீ குழந்தை கூட இல்லடி முட்டாள், அன்பை வகைபிரிச்சு பார்க்கத் தெரியாத முட்டாள்டி நீ,,

“ இதோபார் நான் அருணாவோட புருஷன்தான் ஆனா எனக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நினைப்பும் அதுவும் உனக்கு முத்தம் குடுத்தேன் பாரு அந்த நிமிஷமே போச்சு,

“ அதுக்குப்பிறகு நீயும் என் மகனும்தான் என் வாழ்க்கைன்னு நான் முடிவு பண்ணிட்டேன், அருணாவை விவாகரத்து பண்ணிட்டு நாம ரெண்டுபேரும் சேர்ந்து வாழப்போறோம், இதுல எந்த மாற்றமும் இல்லை,

“ இதையும்கூட உன் பிராயச்சித்த கணக்குல சேர்காதே, இது என்னோட காதல் இதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்,

“ நேத்து சொன்னியே சினிமால வர்ற மாதிரி நாம லவ் பண்றமான்னு, உனக்கு வேனா இது சினிமா மாதிரி தெரியலாம், ஆனா எனக்கு இதுதான் வாழ்க்கை,

“ இன்னும் இருபத்தஞ்சு நாள்ல குழந்தைக்கு பெயர் வைக்கப் போறாங்க, அதுக்குள்ள உன் மனசுல இருக்குற குழப்பமெல்லாம் தீர்ந்து என்னை உண்மையா புரிஞ்சுக்குற வழியப் பாரு மான்சி,

“ அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன்.... உரிமையோட வெயிட் பண்றேன்” என்று கோபமாக அதேசமயம் தீர்மானமாக பேசிய சத்யன் மறுபடியும் அவள் முந்தானையை இழுத்து தன் முகத்தை அழுத்தமா துடைத்துக்கொண்டு எழுந்தான்

அவன் பேசிய பேச்சில் மிரண்டு போயிருந்த மான்சி அவனை மிரட்சியுடன் பார்க்க, எழுந்த சத்யன் அவள் முகத்தை இழுத்து தன் வயிற்றோடு அணைத்து,, “ மான்சி பெண்கள் சிந்திக்கக்கூடாதுன்னு நினைக்கிற சுயநலவாதி நானில்லை,, நல்லா சிந்திச்சுப் பாரு ஆனா நல்லதை மட்டுமே சிந்திச்சு சீர்தூக்கிப் பாரு மான்சி,,

“ முன்னாடியே வந்து நான் உன்னைப் பத்தி விசாரிக்காதது தப்புதான், அதுக்காக நான் உன் காலடியில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்,, ஆனா அதன்பிறகு நாம ஒன்னா இருந்த அந்த நாலு நாளை மட்டும் மனசுல வச்சு நல்லா யோசிச்சுப் பாரு, உனக்கு எல்லாமே புரியும், என் தரப்பு நியாயமும் புரியும்,,

“ நீ பழசை மறக்க இதைவிட சுலபமான வழியொன்னு நான் சொல்றேன் கேளு, என் முன்னால கூச்சமின்றி உரிமையோட டிரஸ் மாத்தினயே அதையும்,, நான் உன் உடம்பில் உரிமையோட தொட்ட பாகங்களையும்,, நேத்து நைட் நான் கிஸ் பண்ணலைன்னதும் என்மேல வந்து படுத்து கிஸ் பண்ணியே அது எப்படி உனக்கு தோனுச்சு, இதையெல்லாம் மனசுல வச்சு யோசிச்சுப் பாரு எல்லாத்துக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்” என்றவன் தன் வயிற்றில் இருந்த அவள் முகத்தை நிமிர்த்தி அவளின் நெற்றியில் முத்தமிட்டு கட்டிலில் படுக்கவைத்துவிட்டு போனான்




சத்யன் கீழே போய் மான்சிக்கும் தனக்கும் நடந்ததைப் பற்றி யாரிடமும் விலக்கிக் கூறாமல், விஷயத்தை மேலோட்டமாக சொல்லிவிட்டு, ராஜதுரையிடம் கலந்தாலோசித்து தன்து குடும்ப வக்கீலுக்கு போன் செய்து பேசி அவரை காண நேரம் குறித்தான்

அன்று மதிய உணவை எடுத்துவரச் சொல்லிவிட்டு மான்சியின் அறைக்குப் போனபோது மான்சி குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாள், சத்யன் நிமிர்ந்துப்பார்த்து சிரித்தாள்,, அந்த சிரிப்பில் முன்புபோல் உயிர் இல்லை என்பது சத்யனுக்கு தெளிவாக தெரிந்தது, ஆனால் அதற்காக எப்போதும் பின்வாங்க போவதில்லை என்றுமட்டும் உறுதியாக எண்ணினான்

அவன் அவளுக்கு ஊட்டுவதற்காக சாதத்தை பிசைந்தபோது “ குடுங்க நானே சாப்பிடுறேன்” என்றாள் மான்சி

சத்யன் அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சோற்றை அவள் வாயருகே எடுத்துச்செல்ல மான்சி அதற்குமேல் எதுவும் சொல்லாமல் வாயைத்திறந்து உணவை வாங்கிக்கொண்டாள்

சத்யனுக்கு சாப்பாடு அங்கேயே எடுத்து வந்திருந்ததால் அவளுக்கு ஊட்டி முடித்ததும் அதே தட்டில் அவனுக்கும் போட்டுக்கொண்டு சாப்பிட்டான்,,

மதிய உணவிற்குப் பிறகு வக்கீலை காணச் செல்லவேண்டும் என்பதால், அறைக்கு வந்து மான்சியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான், முக்கியமாக என்ன காரணத்திற்க்காக வக்கீலை பார்க்கப் போகிறான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு கிளம்பினான்

சத்யன் திரும்பி வர இரவு ஒன்பதானது, வக்கீலிடம் பேசியதில் அவனுக்கு ஓரளவுக்கு நிம்மதி வந்திருந்தது, வீட்டுக்கு வந்து அவன் முதலில் கேட்டது “ மான்சி சாப்பிட்டாளா?” என்றுதான்

பத்மா அவள் வீட்டுக்கு போய்விட்டிருக்க பூங்கோதைதான் பதில் சொன்னாள் “ நான்தான் சத்யா டிபன் எடுத்துட்டுப் போய் குடுத்துட்டு கொஞ்சநேரம் பேசிகிட்டு இருந்தேன், யப்பப்பா அவ கேட்குற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்லமுடியலைப்பா, புசுபுசு நாய்க்குட்டிக்கு அம்மா அப்பா யாரு,, அது என்ன சாப்பிடும், அது எங்க தூங்கும், அப்புறம் என்னன்ன கலர்ல ரோஜாச்செடி இருக்கு, தினமும் ரோஜாவை எடுத்து என் தலையில வச்சா திட்டுவீங்களா? இப்படி ஏகப்பட்ட கேள்வி கேட்கிறா சத்யா” என்று அம்மா சொன்னதும் மான்சி இயல்புக்கு திரும்பி விட்டாள் என்று சத்யனின் உள்ளம் துள்ளிக்குதித்தது

“ அப்புறம் சத்யா மதுரையில அவளும் வ அம்மாவும் பட்ட கஷ்டத்தையெல்லாம் அவ சிரிச்சுகிட்டே சொன்னப்ப எனக்கு அழுகையே வந்துருச்சுப்பா,, அவளோட அம்மா அன்னலட்சுமி உண்மையாகவே ஒரு தெய்வம் தான்பா, பிறந்தது தாழ்ந்த குலமாக இருந்தாலும் அன்னலட்சுமியோட சிந்தனையும் செயலும் ரொம்ப உயர்ந்ததுடா மகனே” என்று பூங்கோதை சொல்ல ஆமாம் என்று தலையசைத்துவிட்டு சாப்பிட்டு எழுந்தான் சத்யன்

அவன் அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தபோது தூங்குவாள் என்று நினைத்த மான்சி தூங்கும் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு குழந்தையின் முகத்தைப் பார்த்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள்

சத்யன் என்னவோ ஏதோ என்று பதட்டத்துடன் அவளை நெருங்கி முகத்தை நிமிர்த்தி பார்க்க கலங்கிய விழிகளும் காய்ந்த கண்ணீர் கரையும் அவள் வெகுநேரம் அழுதிருப்பதை சத்யன்ச் சொல்ல, “ என்னம்மா அழுதியா,, நான் அவ்வளவு சொல்லியும் அழுதியா மான்சி?” என்று வருத்தமாக கேட்க


“ அம்மாவோட ஞாபகம் வந்துருச்சு அதான்” என்று மான்சி கூற ,

சத்யன் நிம்மதியாக ஒரு மூச்சை எடுத்துவிட்டு அவள் மடியில் இருந்த குழந்தையைத் தூக்கி தொட்டிலில் கிடத்தினான், மீண்டும் அவளருகில் வந்து அவள் முகத்தை தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான்

அப்போது அவன் நெஞ்சில் இருந்த மான்சி தனது மூச்சை ஆழமாக இழுத்து அவன் வாசனையை நுகருவதை சத்யன் உணர்ந்தான் அவன் மனம் உற்சாகத்தில் துள்ளியது

தன் நெஞ்சில் இருந்த அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை நேராகப் பார்த்து “சொல்லு எந்த இடத்துல நான் இப்போ கிஸ் பண்ணனும்?” என்று குறும்பாய் கேட்க

அவன் கண்களில் இருந்து ஏதோவொன்று தன் இதயத்துக்குள் நுழைவதை உணர்ந்த மான்சி அவன் கண்களைவிட்டு பார்வையை அகற்றாமல் இயந்திரம் போல அவள் கை அவள் அனுமதியின்றி நெற்றியில் விரல்வைத்து சுட்டிக்காட்டிப், பிறகு இடத்தை மாற்றி கன்னத்தில் வந்து நின்றது

இதற்குமுன் தான் ரசித்த அவளின் குழந்தைத்தனம் தன்னால் நசுக்கப்பட்டுவிட்டாத தவித்து துடித்த சத்யன் அவளின் இந்த சைகையால் கொண்டாட்டமாகி சட்டென்று குனிந்து நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு பிறகு கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு பிறகு அவள் கேட்காத இதழ்களில் வந்து அழுத்தமாய் ஆழமாய் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு நிமிர்ந்தான்

அவன் தன்னுடைய வாயை விலக்கியும் கூட அவள் வாய் மூடாமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, சத்யன் அவளை கட்டிலில் சாய்த்துவிட்டு பாத்ரூம் போய் தனது உடைகளை மாற்றிக்கொண்டு, ஒரு நனைத்த டவலை எடுத்துவந்து அவளின் கண்ணீர் கரையான முகத்தை துடைத்து, கூந்தலை ஒதுக்கிவிட்டு ஜக்கில் இருந்து தண்ணீரை எடுத்து டம்ளரில் சாய்த்து அவளை குடிக்கு வைத்தான்,

பிறகு கட்டிலில் தாவி ஏறி அவளுக்கு மறுபுறம் பக்கத்தில் படுத்து அவளை தன்பக்கம் திருப்பினான், மான்சியை மென்மையாக அணைத்து தன் நெஞ்சில் அவள் முகத்தை அழுத்தி “ ம் நல்லா தூங்கு மான்சி, இப்போ மனசுல எதையும் நினைக்காதே” என்று கூறி அவள் முதுகை வருடிவிட,

மான்சி அசைவின்றி அப்படியே இருந்தாள், அவளின் வேகமான மூச்சுக்காற்று சத்யனின் நெஞ்சில் பட்டு சிதறியது, சற்றுநேரத்தில் மான்சியின் மூச்சு சீராக வர, அவள் தூங்கிவிட்டாள் என்று உணர்ந்து சற்று விலகி குனிந்து அவள் முகத்தை பார்த்தான், அமைதியாக அவன் நெஞ்சில் உறங்கினாள் மான்சி,, அன்று சத்யன் தான் படுக்கும் கட்டிலுக்கு விடுமுறை விட்டான்



அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே சத்யனும் தூங்கிப்போனான், சற்றுநேரத்தில் குழந்தையின் அழுகுரல் சத்யனை எழுப்ப மான்சி எழுந்திருக்காமல் உறங்குவதை உணர்ந்து எழுந்துபோய் குழந்தையை எடுத்துவந்தான்,,

குழந்தையை மான்சியின் அருகில் கிடத்தி அவளின் வலது பக்க மார்பின் ஜிப்பை திறந்து வெளியே துருத்திய காம்பில் குழந்தையின் வாயை வைக்க, குழந்தை காம்பை இழுத்து உறிஞ்சியது, மான்சின் இடது கையை எடுத்து குழந்தையின் மீது அணைத்தார்ப் போல் வைத்துவிட்டு குழந்தையின் மறுபக்கம் சத்யன் படுத்துக்கொண்டான்

குழந்தையின் உறிஞ்சும் வேகம் அதிகமாக, மான்சிக்கு உணர்வு வந்து விழித்துப் பார்த்தாள், குழந்தை பால் குடிப்பதையும் சத்யன் அதையே குறுகுறுவென பார்ப்பதையும் பார்த்து “ என்ன தம்பிப்பாப்பா எழுந்துருச்சுட்டானா?” என்று மட்டும் கேட்டுவிட்டு அவனின் பார்வையின் அர்த்தம் என்ன என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்




No comments:

Post a Comment