Thursday, September 24, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 17

டாக்டர் அமுதா, "வா வனிதா. How are you?"

முகம் சோர்ந்து இருந்த வனிதா, "ம்ம்ம் ... Not O.k" என்றவள், "Actually I feel like shit. என் மேலயே எனக்கு வெறுப்பா இருக்கு. குழந்தைகள் மட்டும் இல்லைன்னா நான் தற்கொலை செஞ்சுட்டு இருப்பேன்"

டாக்டர் அமுதா, "ஏன் வெறுப்பா இருக்கு?"

வனிதா, "நான் செஞ்ச காரியத்தை நினைச்சு ..."

டாக்டர் அமுதா, "அதை எப்படி தவிர்த்து இருக்கலாம்ன்னு இன்னைக்குப் பார்க்கலாமா?"

வனிதா, "இப்போ அதைப் பத்தி யோசிச்சு என்ன பிரயோஜனம்?"

டாக்டர் அமுதா, "உனக்கு என்ன வயசாச்சு?"

வனிதா, "முப்பது"

டாக்டர் அமுதா, "வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய வயசு அது. நீ ஏன் எல்லாம் அஸ்தமனம் ஆன மாதிரி பேசறே?"

வனிதா, "விஸ்வா இல்லாத வாழ்க்கையை என்னால் அனுபவிக்க முடியாது ... "



டாக்டர் அமுதா, "ஏன்? வேலையே கதின்னு இருந்தவன் இல்லாமல் இருந்தா என்ன போச்சு? வேறு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு ஜாலியா வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதானே"

வனிதா, "எங்களைச் சேர்த்து வைக்கறேன்னு சொன்ன நீங்களே இப்படி சொல்லறீங்க"

டாக்டர் அமுதா, "Correction .. சேர்த்து வைக்க முயற்சிக்கறேன்னு சொன்னேன். பிரிஞ்சு போனாலும் நல்ல நட்போடு விலகணும்ன்னு சொன்னேன்"

வனிதா, "But I love him. I know he still loves me. முன்னாடி எல்லாம் அவரால மட்டும்தான் நான் செஞ்சதை ஜீரணிக்க முடியாமல் இருந்தது. இப்போ என்னாலே நான் செஞ்சதை ஜீரணிக்க முடியலை. அதுதான் உண்மை. விஸ்வா, நான் I am sorry அப்படின்னு சொன்னதுக்கு. எதுக்கு வருத்தப் படறே? நீ செஞ்சதுக்கா இல்லை நீ செஞ்சது எனக்கு தெரிஞ்சுட்டதுக்கான்னு கேட்டார். நான் செஞ்சது அவருக்கு தெரிஞ்சதுக்காக மட்டும்தான் வருத்தப் படறேன்னு குத்தம் சாட்டினார். இப்போ நினைச்சுப் பார்த்தா அவருக்கு தெரியறதுக்கு முன்னாடி நான் வந்து உங்களை மீட் பண்ணி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்ன்னு தோணுது"

டாக்டர் அமுதா, "வனிதா, கல்யாணம் ஆன புதுசில் அவனுக்கு தன் மேல் நம்பிக்கை வரவைக்க நீ என்ன செஞ்சே?"

விஸ்வா அவரிடம் அவ்விவரங்களைப் பகிர்ந்து கொண்டதை நினைத்து சில கணங்கள் மனம் பூரித்த வனிதா, "அவரை மாரத்தான் ஓட்டப் பந்தயம் ஓட ஊக்குவிச்சேன். அவர் பயிற்சி எடுத்துக்க உதவினேன். ரேஸில் கடைசி ரெண்டு கிலோமீட்டர் கூட ஓடினேன்"

டாக்டர் அமுதா, "அவனே அந்தப் பந்தயத்தில் ஓடணும்ன்னு ஆசைப் பட்டானா?"

வனிதா, "இல்லை. வேலை விஷயத்தினால்தான் அவர் ரொம்ப தன் நம்பிக்கை இழந்து இருந்தார். அவருக்கு காலில் இருக்கும் பிரச்சனை தெரியும். அதையும் மீறி அந்த மாதிரி ஒரு ஓட்டத்தில் கலந்துட்டார்ன்னா அவருக்கு வேறு விதத்தில் தன் நம்பிக்கை வரும்ன்னு நினைச்சு செஞ்சேன்"

டாக்டர் அமுதா, "அப்போ நீ செஞ்சது ரொம்ப சரி. உங்க உடலுறவு குறைந்தப்ப எதனால் அப்படிக் குறைந்ததுன்னு யோசிச்சியா?"

வனிதா, "அவர் வேலை வேலைன்னு இருந்ததால வீட்டுக்கு வரும்போது ரொம்ப டயர்டா வருவார். மூட் இருக்காது"

டாக்டர் அமுதா, "அவனுக்கு மூட் வராததற்கும் உடலுறவில் சரியா கலந்து கொள்ள முடியாததற்கும் வேறு ஒரு காரணமும் இருந்தது"

வனிதா, "வேறு என்ன காரணம்?"

டாக்டர் அமுதா, "அவனுடைய டெஸ்டோடரோன் அளவு குறைஞ்சு இருந்தது"

வனிதா, "எப்படி?"

டாக்டர் அமுதா, "அவனுக்கு அடிபட்டு ஆபரேஷன் செய்த போது கொடுத்த ஸ்ட்ராங்கான ஆன்டி-பயாடிக் மருந்துகளால் இருக்கலாம்ன்னு அவனைப் பரிசோதித்த டாக்டர் சொல்லி இருக்கார்"

வனிதா, "எப்போ இருந்து?"

டாக்டர் அமுதா, "கொஞ்சம் வருஷமாவே குறைய ஆரம்பித்து இருக்கு. ஒரு வருஷத்துக்கு முன்னால் ரொம்ப குறைந்து இருந்திருக்கு"

வனிதா, "இதனால் விஸ்வாவுக்கு உடம்புக்கு எதாவுது?"

டாக்டர் அமுதா, "டெஸ்டோடரோனின் முக்கியப் பயன் உடலுறவில் ஈடுபடுவதற்குத்தான். ஆனா அதைத் தவிற சில மற்ற பயன்களும் உண்டு. திடகாத்திரமான உடல் இருந்ததால் உடலுறவைத் தவிற டெஸ்டோடரோன் அளவு குறைந்தால் வரும் மற்ற விளைவுகள் எதுவும் விஸ்வாவுக்கு வரலை"

வனிதா மௌனம் காத்தாள் ...

டாக்டர் அமுதா, "Communication ... வெளிப்படையா பேசுவது. விஸ்வா உனக்கு கணவன் மட்டும் இல்லை உற்ற தோழன் அப்படின்னு நீயே சொல்லி இருக்கே. அப்படி இருந்தும் ஏன் இப்படிப் பட்ட ஒரு மாற்றத்தை நீ அவனுக்கு எடுத்துச் சொல்லலை? அவன் வீட்டில் டாக்டர்களுக்குப் பஞ்சம் இல்லை. எளிதில் இதைக் கண்டு பிடித்து வேண்டிய ட்ரீட்மெண்ட் கொடுத்து இருக்கலாம் இல்லையா?"

வனிதா, "அதற்கு நான் ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கலை"

டாக்டர் அமுதா, "பிறகு ஏன் சந்திரசேகரை நாடிப் போனே?"

வனிதா, "நான் ஒண்ணும் ... " என்று தொடங்கி நிறுத்திவிட்டு வெறித்துப் பார்த்த படி இருந்தாள். சில கணங்களில் குலுங்கி அழத் தொடங்கினாள் ...

சில நிமிடங்களுக்குப் பிறகு சற்றே சகஜ நிலைக்கு வந்தவள், "இப்போ எப்படி இருக்கார்?"

டாக்டர் அமுதா, "ஹார்மோன் தெரபி கொடுத்துட்டு இருக்காங்க. அனேகமா இப்போ உடல் அளவிலாவது குணமாகி இருக்கணும்"

வனிதா, "உடல் அளவிலாவதுன்னா ... ?"

டாக்டர் அமுதா, "வனிதா, தன் மனைவி தன்னைத் தவிற வேறு ஒருவனுடன் உடலுறவு கொண்டால் வரும் மன வேதனைகளில் முக்கியாமானது எது தெரியுமா?"

வனிதா, "எது?"

டாக்டர் அமுதா, "தன் மனைவியை தன்னால் திருப்தி படுத்த முடியலை அப்படிங்கற ஆதங்கம். Inferiority complex ... feeling of inadequacy"

வனிதா, "என் விஸ்வா என்னால் அப்படி ... " எனத் தொடங்கியவள் மேலும் எதுவும் பேச முடியாமல் வாய் விட்டுக் கதறினாள்


சில நாட்களுக்குப் பிறகு ஆர்.எஸ்.ஐ க்ளப்பில் டாக்டர் மதுசூதன் அமைத்து இருந்த ஆலோசனை அறையில் மாலை ஆறு மணியளவில் ...

டாக்டர் மதுசூதன், "இன்னைக்கு எப்படி இருந்தது உன் வொர்க் அவுட்?"

விஸ்வா, "ஓ! It was good. ஏன் நீங்க இப்பெல்லாம் அங்கே வர்றது இல்லை?"

டாக்டர் மதுசூதன், "ஏன் ஒவ்வொரு முறையும் வந்து உனக்கு வெறுப்பு ஏத்தணும்ன்னு எதிர்பார்க்கறையா?"

வாய் விட்டுச் சிரித்த விஸ்வா, "இல்லை, நடுவில் தொடர்ந்து கவுன்ஸிலிங்க் இருக்கும்ன்னு நினைச்சேன்"

டாக்டர் மதுசூதன், "உனக்கு அந்த பாக்ஸிங்கும் ஒரு கவுன்ஸிலிங்க்தான். ஒவ்வொரு முறையும் சந்திரசேகரை மனசில் நினைச்சுட்டு ரிங்கில் இறங்கு. உன் கோபம் முழுவதா தணியும் வரை பாக்ஸிங்க் தொடரணும்"

விஸ்வா, "கோபம் தணியும்ன்னு தோணலை. ஆனா வொர்க் அவுட் நல்லா இருக்கு"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, நீ எப்போ இருந்து வனிதாவைக் காதலிக்கத் தொடங்கினே?"

விஸ்வா, "சின்ன வயசில் இருந்தே"

டாக்டர் மதுசூதன், "எப்போ இருந்து மாஸ்டர்பேட் பண்ணத் தொடங்கினே?" விஸ்வா மௌனம் காக்க, தொடர்ந்து டாக்டர் மதுசூதன், "கம் ஆன், உன் மெடிகல் ரிப்போர்ட்டைப் படிச்சேன். உன் எரக்டைல் டிஃப்ஃபிஷியன்ஸிக்கு (erectile deficiency - எழுச்சி அடையாததற்கு) உன் உடம்பில் இருந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் (Harmonal imbalance) மற்றும் டெஸ்டோடரோன் குறைவும் காரணம். ஆனா, உன் ப்ரிமெச்சூர் எஜாகுலேஷனுக்கு (pre-mature ejaculation - விரைவில் விந்து வெளிப்படுவதற்கு) காரணம் உன் மனம். சின்ன வயசில் இருந்து நீ சுய இன்பம் அடைந்த விதம். You had been a compulsive masturbator .. am I correct?"

விஸ்வா கிசுகிசுத்த குரலில், "எஸ் ... "

டாக்டர் மதுசூதன், "அதில் தப்பு எதுவும் இல்லை விஸ்வா, அந்தப் பழக்கம் நிறையப் பேருக்கு இருப்பதுதான். கல்யாணத்துக்குப் பிறகு கணவன்-மனைவிக்கு இடையே ஒருத்தரின் தேவையை மத்தவர் புரிஞ்சு வெளிப்படையா பேசி உறவு கொள்ளும் போது தானாக அது சரியாயிடும். முதல் முறை மனைவி உச்சம் அடையலைன்னு தெரிஞ்சா மனைவியை ஆழமா காதலிக்கும் எந்தக் கணவனுக்கும் மறுமுறை சரியா செய்யணும்ன்னு தோணும். ஒரு முறை உச்சம அடைந்த பிறகு மறுமுறை எப்படியும் கொஞ்சம் நேரம் ஆகும். சோ, நீ மாஸ்டர்பேட் செஞ்சதை நான் தப்புன்னு சொல்லலை. நான் கேட்க வந்தது வேற. நீங்க ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்ச பிறகும் நீ மாஸ்டர்பேட் செஞ்சுட்டு இருந்தே. இல்லையா?"

விஸ்வா, "எஸ்"

டாக்டர் மதுசூதன், "ஏன் மாஸ்டர்பேட் செஞ்சே?"

விஸ்வா, "Well, I felt like it. I wanted that release"

டாக்டர் மதுசூதன், "There you go my boy! சரியா சொன்னே! அது ஒரு வடிகால். இன்னும் ஒண்ணு கேக்கறேன் அதுக்கு உண்மையா பதில் சொல்லறையான்னு பார்க்கலாம். சுய இன்பம் காணும் போது யாரை நினைச்சுட்டு செய்வே?"

விஸ்வா, "குறிப்பா யாரையும் நினைச்சு இல்லை"

டாக்டர் மதுசூதன், "அப்பறம்?"

விஸ்வா, "செக்ஸ் புத்தகத்தில் பார்த்தது, படிச்சது இந்த மாதிரி எதையாவுது கற்பனை செஞ்சுட்டு ... "

டாக்டர் மதுசூதன், "எப்பாவுது வனிதாவை நினைச்சு செஞ்சு இருக்கியா?"

அவசரமாக விஸ்வா, "நோ"

டாக்டர் மதுசூதன், "ஏன், ஏன் நீயும் அவளும் ஒண்ணா இருக்கற மாதிரி யோசிட்டு சுய இன்பம் காணலை?"

விஸ்வா பதில் ஏதும் சொல்லாமல் இருக்க ...

டாக்டர் மதுசூதன், "பரவால்லை விஸ்வா. பொதுவா, யாருமே தன் காதலியை, மனைவியை நினைச்சு சுய இன்பம் காண மாட்டார்கள். எப்பவும் எதாவுது ஒரு கற்பனையான ஒரு காட்சியை நினைச்சுத்தான் செய்வாங்க ... சரி, கல்யாணத்துக்குப் பிறகு உனக்கு அந்தப் பழக்கம் இருந்ததா?"

விஸ்வா, "நோ"

டாக்டர் மதுசூதன், "சரி, உன் ஹார்மோன் ட்ரீட்மென்ட் எப்போ முடிஞ்சுது?"

விஸ்வா, "ரெண்டு மாசம் ஆச்சு"

டாக்டர் மதுசூதன், "வேறு என்ன ட்ரீட்மென்ட்?"

விஸ்வா, "அடுத்தது என் பார்ட்னருடன் செய்ய வேண்டியதுன்னு சொன்னாங்க. That is to improve my staying power. To rectify my pre-mature ejaculation problem"

டாக்டர் மதுசூதன், "ஏன்?"

விஸ்வா, "அது சைகலாஜிகலா வந்ததுன்னு சொன்னாங்க. அவங்க சொன்ன முறைப்படி உடலுறவு கொள்ள ஒரு டைம் டேபிள் கொடுத்தாங்க. ஒவ்வொரு செஷனுக்கு முன்னாலும் அவங்க ஒரு வீடியோ போட்டுக் காண்பிப்பதா சொன்னாங்க. அந்த வீடியோவில் செய்வது போல் செய்யணும்ன்னு சொன்னாங்க. மொத்தம் பதினெட்டு அல்லது இருபது செஷனில் சரியாயிடும்ன்னு சொன்னாங்க"



டாக்டர் மதுசூதன், "அதைத் தான் நீ வேண்டாம்ன்னு சொல்லிட்டே இல்லையா?"

விஸ்வா, "ஆமா"

டாக்டர் மதுசூதன், "இப்போ ஹார்மோன் ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு உனக்கு செக்ஸ் உணர்வு அதிகம் ஆகி இருக்குமே?"

தலை குனிந்த விஸ்வா, "எஸ்"

டாக்டர் மதுசூதன், "உன் கோபம் அதிகரிச்சு இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். இல்லையா?"

விஸ்வா மௌனம் காத்தான் ...

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, என்னை ஒரு ஃப்ரெண்டா நினைச்சு ஏன் கோபம் வருதுன்னு மனம் விட்டு சொல்லறையா? I want to help you my friend"

விஸ்வா, "நைட்டு படுக்கப் போகும் போது, காலை நேரங்களில் ரொம்ப மூட் வருது. ரொம்ப நாள் கட்டுப் படுத்திட்டு இருந்தேன். கொஞ்ச நாளுக்கு முன்னால் மாஸ்டர்பேட் பண்ணலாம்ன்னு தொடங்கினேன். முன்னே எல்லாம் பொதுவா மனசில் எதாவுது கற்பனை செஞ்சுட்டு செய்வேன். ஆனா, இந்த முறை நான் கற்பனை செய்யத் தொடங்கிய மறு நொடி வனிதாவும் சந்திரசேகரும் ஒண்ணா இருந்த அந்த இமேஜ்தான் என் மனசுக்கு வந்தது ... and I lost my erection" என்று சொல்லி முடிக்கையில் அவன் குரல் உடைந்தது ...

டாக்டர் மதுசூதன், "சோ, you are sexually frustrated. ஆனா வடிகால் எதுவும் இல்லை. Am I correct?"

விஸ்வா, "ஏண்டா அந்த ஹார்மோன் ட்ரீட்மெண்ட் எடுத்துட்டேன்னு இருக்கு"

டாக்டர் மதுசூதன், "அதை எடுத்துக்காம இருந்தா உன் மன உளைச்சல் இன்னும் அதிகரிச்சு இருக்கும். You would have really fealt like an impotent"

விஸ்வா, "இப்போ மட்டும் என்ன?"

டாக்டர் மதுசூதன், "இப்போ உனக்கு ஒரு வடிகால் தேவை. அதுதான் உண்மை. Why don't you just have sex with Vanitha. இந்தக் காதல் கல்யாணம் விவாகரத்து இதை எல்லாம் கொஞ்சம் மறந்துட்டு வாரம் ஒரு முறையோ ரெண்டு முறையோ வனிதாவை அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொல்லி ஆசை தீர கொஞ்ச நேரத்தை கழிச்சா என்ன? நீ அவளை எதிரியா பார்க்கலை. ஒரு ஃப்ரெண்டா மட்டும் நினைச்சு அமெரிக்க கலாசாரத்தில் சொல்லற மாதிரி friends-with-benefits அப்படி கொஞ்ச நாள் இருக்கலாமே?"

விஸ்வா, "அவளும் சந்திரசேகரும் இருப்பது போல் நினைச்சாலே எனக்கு மூட் போயிடுது. அவகூட என்னால் இருக்க முடியுமான்னு தெரியலை"

டாக்டர் மதுசூதன், "உனக்கு கர்னல் ஷர்மாவை நல்லா தெரியும் இல்லையா?" என்று பேச்சை வேறு திசையில் திருப்பினார்.

விஸ்வா, "எஸ் அஃப்கோர்ஸ்!"

டாக்டர் மதுசூதன், "அவரோட மண வாழ்க்கையைப் பத்தி நீ என்ன நினைக்கறே?"

விஸ்வா, "நான் பார்த்தவரை ரொம்ப் ideal couple"

டாக்டர் மதுசூதன், "Really. நான் அவரை அடுத்த முறை பார்க்கும் போது அவரிடம் சொல்லணும். ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?"

விஸ்வா, "என்ன?"

டாக்டர் மதுசூதன், "அவரோட மூணு குழந்தைகளுக்கும் அவர் அப்பா இல்லை"

விஸ்வா, "என்ன சொல்லறீங்க?"

டாக்டர் மதுசூதன், "அவருடைய ஸ்பர்ம் கவுண்ட் ரொம்ப கம்மி. அவரால் குழந்தை கொடுக்க முடியாது. ஆனா, அவங்க ரெண்டு பேருக்கும் குழந்தைகள்ன்னா உயிர். அந்த கால கட்டத்தில் Invitro-fertilisation எல்லாம் ரொம்ப காஸ்ட்லி. யாரோ குழந்தையை தத்து எடுத்து வளற்பதில் அவங்க ரெண்டு பேருக்கும் ஈடு பாடு இல்லை. குழந்தை பெத்துக்கறதுக்காக உடலுறவில் ஈடு படறதில் அவங்க மனைவிக்கு ரொம்ப அருவெறுப்பு. ரொம்ப செயற்கையான சேர்க்கையா இருக்கும்ன்னு அவர் மனைவி நினைச்சாங்க. ஆனா அவரோ தன் மனைவி சந்தோஷமா அப்படிப் பட்ட உடலுறவில் ஈடு படணும்ன்னு விருப்பப் பட்டார். கணவன் மனைவி ரெண்டு பேரும் தீர ஆலோசித்து முடிவு எடுத்தாங்க. அவரே அவருடைய மூணு குழந்தைகளுக்கும் அப்பாவை தேர்ந்து எடுத்தார். தேர்ந்து எடுக்கப் பட்ட ஆணுடன் மனைவியை ரகஸியமா பழக வைத்தார். அவங்க ஃபெர்டைல் சைக்கிள் சமயத்தில் ஒரு வாரம் தன் மனைவியை அவர் தேர்ந்து எடுத்த ஆணுடன் தனியா தங்க வைத்தார்."

விஸ்வா, "வாவ், என்னால் நம்ப முடியலை. நிச்சயம் அவங்க ஐடியல் கப்பிள்தான்"

வாய்விட்டுச் சிரித்த டாக்டர் மதுசூதன், "அப்படி இருந்தும் அவர் மனைவி ரெண்டாவுது குழந்தைக்காக கருத்தரிச்ச பிறகு கணவன் மனைவிக்கு இடையே விரிசல். காரணம், தன் மனைவி தன்னை குறைவா நினைக்கறாளோன்னு அவருக்கு பயம், குழந்தை கொடுத்த ஆள் மேல் பொறாமை. அவருடைய மனைவிக்கும் குழந்தை கொடுத்தவருடன் நட்பான ஒரு நெருக்கம் அதிகமாகி இருந்தது. ஆனா உடலுறவு இல்லை. உண்மையில் அந்த சமயத்தில் அவருக்கு தன் கணவன் மேல் இருந்த காதல் உச்ச கட்டத்தில் இருந்தது. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஆறு மாசம் ஆச்சு. சந்தோஷமா மூணாவுது குழந்தைக்கு தயாரானாங்க"

விஸ்வா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தான். 


டாக்டர் மதுசூதன், "விஸ்வா, தன் வாழ்க்கைத் துணையை நல்லா புரிஞ்சுக்கறது தான் நல்ல தாம்பத்தியத்துக்கு முக்கியத் தேவை. ஒருத்தர் மனத்தில் இருப்பதை, ஒருத்தர் தேவைகளை மத்தவர் புரிஞ்சுக்கணும். புரிய வைக்கணும். மத்தது எல்லாம் தனா சரியாயிடும். வாழ்க்கைத் துணையை தன் சொந்தச் சொத்து. தன் தேவைக்கு ஏத்த மாதிரித்தான் அவங்க தேவைகள் இருக்கணும்ன்னு நினைச்சா அது கொத்தடிமை"

விஸ்வா, "சோ, நீங்களும் என்னைத்தான் ப்ளேம் பண்ணறீங்க. இல்லையா?"

டாக்டர் மதுசூதன், "நான் சொன்னது ரெண்டு பேருக்கும் பொருந்தும். தப்பு வனிதா மேல் தான் அப்படின்னு நீ நினைக்கலாம். ஒரு அளவுக்கு அது உண்மையும் கூட. ஆனா நீ உன் தப்பை நீ உணர்ந்து இருந்தா அவளோட தப்பை தடுத்து இருக்கலாம்ன்னு சொல்றேன்"

விஸ்வா, "ஆறு வருஷத்துக்கு முன் சந்திரசேகர் அப்படி கண்டிஷன் போட்டார்ன்னு வனிதா எங்கிட்டே சொல்லி இருந்தா நிச்சயம் நான் அனுமதிச்சு இருக்க மாட்டேன். I would have taken up the matter with Shanmugam"

டாக்டர் மதுசூதன், "True. ஆனா, என்ன நடந்து இருக்கும்? சுமதி சந்திரசேகர் மேல் விவாகரத்து கேஸ் போட்டு இருப்பாங்க. சந்திரசேகரை போகச் சொல்லிட்டு சண்முகம் கம்பெனியை எடுத்து நடத்தி இருப்பார். ஆனா உன்னை PMLஇல் வேலையில் எடுத்து இருப்பாங்களா? யோசிச்சுப் பாரு"

விஸ்வா மௌனம் காக்க ...

டாக்டர் மதுசூதன், "அந்தக் கம்பெனியில் சேரும் போது சந்திரசேகரைப் பத்தி என்ன நினைச்சே? உண்மையா பதில் சொல்லு"

சற்று நேர மௌனத்திற்குப் பிறகு விஸ்வா, "அவர் ஒரு நல்ல நிர்வாகின்னு நினைச்சேன். கம்பெனியை நல்லா நடத்தறார்ன்னு நினைச்சேன். அவரின் நிர்வாகத் திறமையை மதிச்சேன்"

டாக்டர் மதுசூதன், "ஆறு வருஷத்தில் அவர் நிர்வாகத் திறமை குறைஞ்சதா? இல்லை நீ தப்பா எடை போட்டியா?"

விஸ்வா, "நான் தவறா கணிக்கலை. அவர் ஒரு நல்ல நிர்வாகிதான் ஆனா கம்பெனியை எப்படி முன்னுக்கு கொண்டு வரணும்ன்னு அவருக்குத் தெரியலை. அப்படித் தெரிஞ்ச விஷயங்களையும் தன் மாமனார் மறுத்துடுவார்ன்னு நினைச்சார். அதனால் இருப்பதை இருப்பது போல நடத்திட்டு வந்தார்"

டாக்டர் மதுசூதன், "அவர் உன்னை வேலைக்கு எடுத்துக்க தன் சம்மதத்தை தெரிவிச்சப்ப நீ அவரைப் பத்தி என்ன நினைச்சே?"

விஸ்வா, "ரொம்ப ஜாக்கிரதையான பேர்வழின்னு நினைச்சேன். அவர் மனசில் நிச்சயம் ரிஸ்க் எடுப்பதா நினைச்சு இருப்பார்ன்னு நினைச்சேன். அவரே எங்கிட்டே சொன்னார்"

டாக்டர் மதுசூதன், "அது நம்பும் படியா இருந்ததா? இல்லை அவர் பொய் சொல்லற மாதிரி உனக்குத் தோணுச்சா?"

விஸ்வா, "இல்லை உண்மையைத் தான் சொன்னார்"

டாக்டர் மதுசூதன், "சோ, அந்தத் துறையில் அனுபவம் இல்லாத ஒருத்தனை அவர் வேலையில் சேர்த்துக்கறது அவர் நிலையில் இருந்து யோசிச்சா அது ஒரு ரிஸ்க்தான். இல்லையா?"

விஸ்வா, "ஆமா"

டாக்டர் மதுசூதன், "வேலை கொடுக்க அப்படி ஒரு நிபந்தனை போட்டார்ன்னு யாராவுது உனக்கு சொல்லி இருந்தா அதை நீ நம்பி இருப்பியா?"

விஸ்வா, "இல்லை"

டாக்டர் மதுசூதன், "எப்படி சொல்லறே?"

விஸ்வா, "அவர் அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வந்தவர். அதை அவர் எப்பவும் மறக்கலை. நானே அவர் லோ-லெவல் எம்ப்ளாயிஸ்க்கு உதவறதைப் பார்த்து இருக்கேன். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். அனாவிசியமா யாரையும் வேலையில் இருந்து விலக்க மாட்டார். எங்க கம்பெனியில் யூனியன் ப்ராப்ளமே வந்தது இல்லை. இதை எல்லாம் வெச்சுப் பார்க்கும் போது அவர் ரொம்ப நேர்மையானவர்ன்னு நினைசேன்"

டாக்டர் மதுசூதன், "நானும் விசாரிச்ச வரையில் வனிதா விஷயத்தில் மட்டும்தான் அவர் அப்படி நடந்துட்டு இருக்கார். He too was sexually frustrated. "

விஸ்வா, "தெரியும். சுமதி மேடம் சொன்னாங்க"

டாக்டர் மதுசூதன், "வனிதாவின் அழகு வசீகரம் அந்த மன நிலையில் இருந்தவரை அப்படி நிபந்தனை போட வெச்சுது. உன் மேல் வனிதாவுக்கு இருந்த நம்பிக்கை வேறு யாருக்கும் இருந்து இருக்காது. அது வனிதாவுக்கும் தெரியும். உன் நன்மைக்காக சந்திரசேகரின் நிபந்தனைக்கு அவ சம்மதிச்சா. சந்திரசேகர் சபலத்தில் அப்படி நிபந்தனை போட்டார். அவர் செஞ்சது பெரிய தப்பு. ஆனா வனிதாவின் கோணத்தில் பார்த்தா அவ செஞ்சது சரிதான். ஆனா அதை ஒத்துக்க உன் மனம் இடம் கொடுக்கலை" என்று தன் குரலை உயர்த்தி அழுத்தமாக முடித்தார்.

சில நிமிடங்கள் அந்த அறையில் மௌனம் நிலவியது ... 


டாக்டர் மதுசூதன், "கடைசியா எப்போ நீ வனிதாவுடன் சேர்ந்து ஷாப்பிங்க் போனே?"

விஸ்வா, "போன தீபாவளிக்கு முன்னால் ... " என்று இழுத்த பிறகு, "சாரி, ஞாபகம் இல்லை"

டாக்டர் மதுசூதன், "பெண்களுக்கு ஷாப்பிங்க் போறது மனசுக்கு பிடிச்ச ஒரு விஷயம். கூட புருஷனும் வந்தா அவங்க சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. Did you realize that?"

விஸ்வா, "ஆமா, பத்து கடை ஏறி இறங்கி ஒவ்வொரு கடையிலும் இருக்கற சுடிதார் எல்லாத்தையும் எடுத்து காண்பிக்கச் சொல்லி கடைசியா ஒரு சுடிதார் வாங்குவா. எங்க ரெண்டு பேருக்கு இடையே நிறைய வாக்குவாதம் வரும். ஆனா அவ ரொம்ப சந்தோஷப் படுவா"

டாக்டர் மதுசூதன், "அப்பறம் ஏன் நீ அவகூட ஷாப்பிங்க் போறது ரொம்ப குறைஞ்சுது?"

விஸ்வா, "I used to be busy. அத்தை, அம்மா, சில சமயம் ராம் இப்படி யாராவுது இருப்பாங்க அவங்க கூட போறேன்னு சொல்லுவா. நானும் ஓ.கேன்னு போகச் சொல்லுவேன்"

டாக்டர் மதுசூதன், "உன் கூடத்தான் ஷாப்பிங்க் போகணும்ன்னு நீ சொல்லி இருந்தா வனிதா என்ன செஞ்சு இருப்பா?"

விஸ்வா, "வருத்தப் பட்டு இருப்பா. சண்டை போட்டு அவங்ககூட போக என்னை சம்மதிக்க வெச்சு இருப்பா"

டாக்டர் மதுசூதன், "ஸ்டில், உன் கூட போகும் சந்தோஷம் அவளுக்கு அவங்க கூட போகும் போது வந்து இருக்குமா?"

விஸ்வா, "நோ"

டாக்டர் மதுசூதன், "உனக்கு லைட் மியூசிக் ரொம்ப பிடிக்கும் இல்லை? வனிதாவுக்கு எந்த மாதிரி சங்கீதம் பிடிக்கும்?"

விஸ்வா, "மோஸ்ட்லி வெஸ்டர்ன். ராக் மியூசிக் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். லாஸ்ட் இயர் ப்ரையன் ஆடம்ஸ் கான்ஸர்ட் பெங்களூரில் வந்தது. எனக்கு இன்டரஸ்ட் இல்லை. அவளும் ராமும் போனாங்க"

டாக்டர் மதுசூதன், "உன் கூட போகாமல் ராமை அழைச்சுட்டு போறாளேன்னு நீ பொறாமைப் பட்டாயா?"

விஸ்வா, "நோ"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, செக்ஸ்ஸுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்ன்னு தெரியுமா?"

விஸ்வா, "ம்ம்ம் ... தெரியலை"

டாக்டர் மதுசூதன், "ஏன்னா procreation, புத்திரவிருத்தி அப்படிங்கற புனிதமானது செக்ஸ் மூலம்தான் சாத்தியம். நீ உன் குழந்தைகளை உறுவாக்க ஈடுபட்ட ஒரு காரியத்தில் வனிதா வேறு ஒருத்தனுடன் ஈடுபட்டா அப்படிங்கற கோணத்தில் பார்க்கறே. யோசிச்சுப் பாரு உனக்கே புரியும்"

விஸ்வா மௌனம் காக்க ...

டாக்டர் மதுசூதன், "கடவுள் மட்டும் இனவிருத்தியையும் சேர்க்கையையும் பிரிச்சு இருந்தார்ன்னா, செக்ஸும் ஷாப்பிங்க் போற மாதிரி, கான்ஸர்ட்டுக்குப் போற மாதிரி ஒரு சந்தோஷமான விஷயம் மட்டும்தான்"

விஸ்வா மேலும் மௌனம் காத்தான் ...

டாக்டர் மதுசூதன், "சரி, இதைச் சொல்லு. வனிதா சந்திரசேகரை காதலிச்சாளா?"

விஸ்வா, "No I don't think so .... அவங்க ரெண்டு பேரும் பேசிட்டதில் நெருக்கம் இருந்தது. ஆனா அதில் காதல் இல்லை"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, மனத்தில் ரொம்ப உளைச்சல், நெருக்கடி, Mental stress போன்ற உணர்வுகள் இருக்கும் போது செக்ஸ்ஸைப் போல ஒரு வடிகால் எதுவும் இல்லை. நான் சொல்வது ஆழ்ந்த காதலுடன் கலந்து வரும் செக்ஸ் இல்லை. உடலை மட்டும் சார்ந்த ஒரு இன்பம். உடலார்ந்த உணற்வுகளுக்காக மட்டும் செக்ஸில் ஈடுபட்டா அது ஏறக் குறைய ரெண்டு பேர் சேர்ந்து மாஸ்டர்பேட் பண்ணற மாதிரிதான். இருந்தாலும் ஜிம்முக்குப் போய் ட்ரெட் மில்லில் அஞ்சு கிலோமீட்டர் ஓடிட்டு வந்தாலோ, ஒரு நல்ல ப்ளேயர் உடன் ஒரு செட் டென்னிஸ் விளையாடினாலோ வரும் புத்துணற்சி அந்த மாதிரி செக்ஸிலும் வரும். இதை ஒத்துக்கறையா?"

விஸ்வா, "எஸ். நீங்க சொல்வது சரிதான்"



டாக்டர் மதுசூதன், "அந்தக் கோணத்தில் பார்த்தா வனிதா செஞ்சதில் எந்தத் தப்பும் இல்லை. அப்படி ஆறுமாசமா சந்திரசேகருடன் வாரம் ஒரு முறை உடலுறவு வெச்சுட்டது அவளுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்து இருக்கும். அந்த சுகம் உன் மூலம் கிடைக்கணும்ன்னு அவ ஏங்கினாலும் உன் மேல் அவளுக்கு கோவமோ வெறுப்போ வரலை. குழந்தைகளோடும் ஏறக் குறைய ஒரு சிங்கிள் பேரண்ட் போல குடும்பப் பொறுப்பை தனி ஆளா ஏத்துட்டு உன்னைக் குறை சொல்லாமல் இருக்க முடிஞ்சு இருக்கு. இல்லையா?"

விஸ்வா, "இன் ஃபாக்ட் ரொம்ப மென்மையா என் மனம் புண்படாத மாதிரி தனக்கு அதிகா வேணும்ன்னு எனக்கு படற மாதிரி என்னைக் குறை சொன்னா. நான் தான் அதை சரியா புரிஞ்சுக்கலை"

டாக்டர் மதுசூதன், "என்ன புரிஞ்சுக்கலை?"

விஸ்வா, "ரொம்ப நேரம் செய்யணும்ன்னு சிணுங்கலோடு சொன்னா. நான் சீக்கிரமா முடிச்சதுக்குப் பிறகு போலிக் கோபத்தோடு அவளோட ஏமாற்றத்தைக் காண்பித்தா. நான் அவ முகத்தில் அறைந்த மாதிரி ஒரு வைப்ரேட்டர் வாங்கி தருவாதா சொன்னேன்"

விஸ்வாவின் கண்கள் கலங்கி இருந்தன ... 



No comments:

Post a Comment