Tuesday, September 22, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 11

அடுத்த நாள் டாக்டர் வாசன் ராமை கைபேசியில் அழைத்தார் ...

ராம், "சொல்லுங்க டாக்டர்"

வாசன், "It is about your brother. அவருக்கு ED (Erectile defficiancy - எரெக்டைல் டிஃபீஷியன்ஸி - ஆணுருப்பு விரைவில் விறைப்பு அடையாமல் இருப்பது மற்றும் விறைப்பை விரைவில் இழப்பது), PE (ப்ரீமெச்சூர் எஜாகுலேஷன் - pre-mature ejaculation - விரைவில் விந்து வெளி வருவது) இந்த ரெண்டு ப்ராப்ளமும் இருக்கு. முதல் ப்ராப்ளம் உடல் சார்ந்தது. அடுத்தது சைக்கலாஜிகல்"

ராம், "உடல் ப்ராப்ளம் என்ன?"

வாசன், "அவருடைய டெஸ்டோடரோன் லெவல் ரொம்ப கம்மியா இருக்கு. அவருடைய EDக்கு அதுதான் காரணம்"

ராம், "எப்போ இருந்து அவனுக்கு இந்தப் ப்ராப்ளம்?"



வாசன், "எப்போ இருந்து இந்த நிலைன்னு என்னால் சரியா கணிக்க முடியலை. அவருக்கு அடிபட்டு ஆபரேட் செஞ்ச போது அவருக்கு சில ஸ்டராங்க ஆண்டி-பையாடிக்ஸ் கொடுத்து இருக்காங்க. அனேகமா அதில் இருந்து அப்படி ஆகி இருக்கு என்பது என் அனுமானம்"

ராம், "சோ அவனுக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே இந்த ப்ராப்ளம் இருந்து இருக்கா?"

வாசன், "எஸ்"

ராம், "அப்பறம் எப்படி அவன் குடும்ப வாழ்க்கை .... "

வாசன், "லெவல் குறைஞ்சு இருக்குன்னு தானே சொன்னேன். உடலுறவில் நிச்சயம் கலந்து கொள்ள முடிஞ்சு இருக்கும். அவருடைய மனைவி ரொம்ப பொறுமைசாலின்னு நினைக்கறேன்"

அவர் சொன்னதின் உள் அர்த்தத்தை புரிந்த ராம் வனிதாவுக்காக மனதுக்குள் அழுதான்.

ராம், "ஆனா, அதை ஒரு ப்ராப்ளமா அவன் நினைக்கலையா?"

வாசன், "நினைச்சு இருக்கார். ஏனோ அவர் அதை பெருசா எடுத்துக்கலை போல இருக்கு."


ராம், "PEக்கு என்ன காரணம்?"

வாசன், "குறிப்பா உங்க ப்ரதர் விஷயத்தில் என்னன்னு சொல்ல முடியாது. அதுக்கு அவருடன் இன்னும் கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும். அவருக்கு மன நிலை சரியில்லைன்னு நினைச்சு மேற்கொண்டு எதுவும் கேட்டலை. ஆனா நான் பார்த்த வரை நிறையப் பேருக்கு இந்தப் பிரச்சனை வருவது உண்டு. சின்ன வயசில் செக்ஸைப் சகஜமா எடுத்துக்காம திருட்டுத் தனமா மாஸ்டர்பேட் செய்யறது. யாராவுது வந்துடுவாங்களோன்னு சீக்கிரம் முடிச்சுடறது. இந்த மாதிரி விஷயங்களும் அதுக்குக் காரணமா இருக்கலாம். உங்க ப்ரதருக்கு அந்த மாதிரி காரணங்களைத் தவிற எங்கே விறைப்பு போயிடுமோங்கற ஆதங்கமும் ஒரு காரணமா இருந்து இருக்கும்"

ராம், "அப்படியும் தன் மேல அவனுக்கு எந்த சந்தேகமும் வரலையா?"

வாசன், "வந்து இருக்கணும். அதை மனைவிகிட்டே மத்தவங்க கிட்டே சொல்ல கூச்சப்பட்டு இருக்கார்ன்னு நினைக்கறேன். நான் அவரிடம் பேசினவரைக்கும் ஒண்ணு ரெண்டு தடவை அவர் மனைவி அவர்கிட்டே மேலோட்டமா சொல்லி இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன். Is there marriage o.k?"

ராம், "இல்லை டாக்டர். ஆனா, ப்ளீஸ் இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை"

வாசன், "புரியுது ராம்"

ராம், "I suppose both these are curable?"

வாசன், "Yes of course. Quite easily and with definite positive results, முதல் பிரச்சனையை ரொம்ப சுலபமா சரி செஞ்சுடலாம். ஒரு சின்ன ஹார்மோன் ட்ரீட்மென்ட். ஒரு மாத கோர்ஸ் போதும். அதுக்கு முன்னாடி அவசியம்ன்னா வையக்ரா ப்ரிஸ்க்ரைப் பண்ணி இருக்கேன். ரெண்டாவுது பிரச்சனைக்கு எங்க செக்ஸ் தெரபிஸ்ட்கிட்டே அவரை அனுப்பினேன். ஆனா, அவர் இவரை ட்ரீட் பண்ண முடியாதுன்னு சொல்றார்"

ராம், "ஏன்?"

வாசன், "அந்தத் தெரபிக்கு அவருடைய செக்ஸ் பார்ட்னர், அதாவுது அவரது மனைவியும் அந்த தெரபியில் கலந்துக்கணும்ன்னு சொன்னார்"

ராம், "என்ன மாதிரி தெரபி?"

வாசன், "அந்த தெரபி ஆறு வாரம். ஒவ்வொரு வாரமும் சில செக்ஸுவல் எக்ஸர்ஸைஸ் சொல்லுவார். அதை வீட்டில் அவருடைய செக்ஸ் பார்ட்னருடன் அவர் செஞ்சு பயிற்சி செய்யணும். ஆறு வாரம் முடியும் போது குறைந்தது பதினைந்து நிமிடங்கள் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்று இருப்பார். இதைப் பத்தி சொன்ன போது தன் மனைவியை அழைச்சுட்டு வர முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம்"

ராம், "அந்த ஹார்மோன் ட்ரீட்மெண்டுக்கு என்ன சொன்னான்?"

வாசன், "அதுக்கு அவர் எதுவும் சொல்லலை. நான் சொன்ன தினங்களில் தவறாம வந்து இன்ஜெக்ஷன் போட்டுட்டுப் போறதா சொன்னார்"

டாக்டர் வாசனிடம் இருந்து விடைபெற்ற பிறகு ராம் விஸ்வாவை பல முறை கைபேசியில் அழைத்தும் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

வீட்டுக்குச் சென்றபோது வசியும் விக்கியும் அங்கு இருப்பதைக் கண்டவன் தன் அத்தையிடம் வனிதாவைப் பற்றி விசாரிக்க, வனிதா தன் வீட்டில் இருக்கப் போவதாகவும் விஸ்வா மட்டும் அன்று இரவைக் கழிக்க அங்கு வருவதாகவும் சொன்னார். ஆனால் இரவு முழுவதும் விஸ்வா வீடு திரும்பவில்லை.

வனிதாவை அந்த நேரத்தில் அழைத்து கேட்க விரும்பவில்லை.

அடுத்த நாள் காலை விஸ்வாவின் வீட்டுத் தொலைபேசியில் அழைத்த போது வனிதா பதிலளித்தாள்.

ராம், "ஹாய் வனிதா, விஸ்வா இருக்கானா?"

வனிதா, "இல்லை. உங்க வீட்டுக்கு வரலையா?" என்று பதட்டத்துடன் பதிலளித்தாள்



ராம், "இல்லை. அனேகமா ஆஃபீஸில் எதாவுது வேலை இருந்து இருக்கும். டோண்ட் வொர்ரி" என்று விடைபெற்றான்.

ஆற்றாமையில் வனிதா விஸ்வாவின் கைபேசியை அழைக்க ..

விஸ்வா, "என்ன?"

வனிதா, "நைட்டு உங்க வீட்டுக்குப் போகலையா?"

விஸ்வா, "இல்லை. எங்க கெஸ்ட் ஹவுஸில் தங்கிட்டேன்"

வனிதா, "ஓ ..."

விஸ்வா, "உனக்கு ரொம்ப பழக்கமான அதே கெஸ்ட் ஹவுஸ்தான்" என்று வெறுப்பை உமிழும் குரலில் சொல்லி இணைப்பைத் துண்டித்தான்.

அவள் சுயநிலைக்கு வர பல நிமிடங்கள் ஆனது ... முந்தைய தினம் அவள் எடுத்த முடிவு அவள் மனதில் மேலும் உறுதி பெற்றது ....

வனிதா அழைத்து சில நிமிடங்களில் விஸ்வாவின் கைபேசி சிணுங்கியது ...

விஸ்வா, "சொல்லுடா"

ராம், "எங்கேடா போயிட்டே?"

விஸ்வா, "எங்க கெஸ்ட் ஹவுஸில் தங்கிட்டேன்"

அவன் மன நிலையை உணர்ந்து மேலும் அவனிடம் விவரம் எதுவும் கேட்காமல் ராம், "சரி, இன்னைக்கு உன் ப்ரோக்ராம் என்ன?"

விஸ்வா, "வேலைக்குப் போயிட்டு இருக்கேன்"

ராம், "எப்போ மீட் பண்ணலாம்?"

விஸ்வா, "ம்ம்ம் ... எதுக்கு?"

ராம், "தண்ணி அடிக்க கம்பெனிக்காக கேட்டேன்"

விஸ்வா, "எனக்கு மூட் இல்லை"

ராம், "அப்படியா, சரி, இனிமேல் இந்த கவுன்ஸிலிங்கில் என்னால் கலந்துக்கு முடியாதுன்னு நான் டாக்டர் அமுதாகிட்டே சொல்லிடறேன். பை" என்று இணைப்பைத் துண்டித்தான்.

வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த ராமில் கண்கள் குளமாகி வழிந்தோடியது ... 

அடுத்த நாள் மாலை வனிதா அமுதாவை தொலைபேசியில் அழைத்தாள் ..

அமுதா, "ம்ம்ம் சொல்லு வனிதா. நாளைக்கு சாயங்காலம் மீட் பண்ணலாமா?"

வனிதா, "மேம், நீங்க சொன்ன அடுத்த கட்டம் ... அதாவுது என்ன நடந்ததுன்னு சொல்லறது ... நான் விஸ்வாகிட்டே நேரில் சொல்ல விருப்பப் படறேன்"

அமுதா, "என் கிட்டே சொல்லவே ரொம்ப தயங்கினே?"

வனிதா, "இல்லை மேடம். இப்போ நான் ரொம்ப தெளிவா இருக்கேன். நான் உங்ககிட்டே சொல்லி அதை நீங்க அவர்கிட்டே சொல்லறதை நான் விரும்பலை"

அமுதா, "லாயரை மீட் பண்ணினியா?"

வனிதா, "எஸ். ஆனா, கோர்ட்டில் எதுவும் தாக்கல் செய்யலை. விஸ்வாகிட்டே பேசறதுக்கு முன்னாடி செய்ய வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேன்"

ஏதோ உள் நோக்கத்துடன் வனிதா பேசுவதை உணர்ந்தாலும் அமுதாவால் சரியாகக் கணிக்க இயலவில்லை.

அமுதா, "சரி, நான் விஸ்வாவை நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு வரச் சொல்லறேன்"
~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்த நாள் மாலை நான்கு மணியளவில் வனிதா அமுதாவின் கவுன்ஸிலிங்க் செண்டரை அடைந்தாள் ...

டாக்டர் அமுதாவுடன் விஸ்வாவும் அமர்ந்து இருந்தான் ..

வனிதா, "சாரி ... கொஞ்சம் லேட் ஆயிடுச்சு"

அமுதா, "இட்ஸ் ஓ.கே வனிதா. இப்போத்தான் விஸ்வாவும் வந்தான்"

வனிதா, "ஓ" என்றவாறு தன் கணவனைப் பார்த்தாள். விஸ்வா அவள் பார்வையைத் தவிர்த்து அமுதாவைப் பார்த்தான் ..

அமுதா, "வனிதா, இந்தக் கட்டத்தில் நீங்க ரெண்டு பேரும் என்னோடு தனிதனியா பேசி நடந்ததுக்கான காரணங்களை அலசிப் பார்த்துட்டு அடுத்த கட்டமா நீங்க ரெண்டு பேரும் அவைகளை மனம் விட்டுப் பேசணும்ன்னு சொல்லி இருந்தேன். இந்தக் கட்டத்தில் என்னோடு பேச உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லைன்னு தெரியுது. பரவால்லை. நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசாம இந்த கவுன்ஸிலிங்க் முடிஞ்சதா நான் சொல்ல மாட்டேன். நான் ஜட்ஜ்கிட்டே என்ன ரிப்போர்ட் கொடுப்பதுங்கறது உங்க ரெண்டு பேர் கையிலும் இருக்கு"

விஸ்வா எதுவும் சொல்வதற்கு முன் வனிதா, "நீங்க இந்த விவாகரத்து கொடுக்கக் கூடாதுன்னு சொன்னா விஸ்வா நான் நடத்தை கெட்டவன்னு சொல்லி விவாகரத்து வாங்கப் போறதா சொல்லி இருக்கார். அவர் அப்படிச் சொல்லி வாதாடினா அதுக்கு நான் ஆட்சேபணை தெரிவிக்கப் போறது இல்லை"

எதிரில் இருந்த இருவரும் மலைத்துப் போய் வனிதாவைப் பார்த்துக் கொண்டு இருக்க ...

தொடர்ந்து வனிதா, "விஸ்வா, நடந்தது எல்லாத்துக்கும் காரணம் நான் மட்டும் தான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன் திறமையில் நம்பிக்கை வெச்சு இந்த வேலை இல்லைன்னா உனக்கு வேற வேலை கிடைக்கும்ன்னு நான் உன் கிட்டே வாதாடி இருக்கணும். நீ கோவப் பட்டதையும் ரொம்ப மனசு ஒடிஞ்சு போய் இருப்பதையும் இப்போ மாதிரி என் கிட்டே பேசறதையே நிறுத்தியதையும் பார்த்து என் ஆதங்கத்தில் எனக்கு வீட்டில் நிம்மதி கிடைக்கணுங்கற சுயநலத்தில் நான் சந்திரசேகர் கேட்டதுக்கு ஒத்துகிட்டேன். I tried consoling you. But didn't try hard enough and took the easy way out" இதைச் சொல்லச் சொல்ல வனிதாவின் குரல் சிறிது உடைந்து கரகரத்தது ...

விஸ்வா, "காரணம் நீதான்னு சொல்லி மறைமுகமா என்னை காரணம் காட்டறே. As if you didn't enjoy sleeping with him"

வனிதா, "Yes, I enjoyed it with him, it was a different experience for me. நான் ஒரு மெஷின் இல்லை விஸ்வா. I am human after all. அதை நான் மறுக்க முடியாது. அப்படி என்ஜாய் பண்ணறேன்னு கில்டியா ஃபீல் பண்ணினேன் அடுத்த மூணு வாரமும் அவர் கேட்டதுக்கு இணங்கி விரும்பிப் போனேன். மனசுக்குள்ளே உனக்காகத் தான் இதைச் செய்யறேன்னு என்னை நானே ஏமாத்திகிட்டேன். உனக்கு துரோகம் செய்யறதா நினைக்கலை. அவர் கேட்டதுக்கு ஒப்புதல் கொடுத்ததுக்கு அவர்கூட செக்ஸ் வெச்சுகிட்டதுக்கு, அதில் என்ஜாய் பண்ணினதுக்கு எல்லாம் நான் மட்டும் தான் காரணம்"

விஸ்வா, "What about six months before I caught you?"

வனிதா, "அதுக்கும் நான் தான் காரணம். நீ உன் வேலையில் ரொம்ப பிசியா இருந்தே. வீட்டுக்கு வரும் போது ரொம்ப டையர்டா இருந்தே. நம் வீட்டுக்கு வந்த பிறகு அந்த டெல்லி ஃபேருக்கு போற வரைக்கும் உன்னால் கொடுக்க முடிஞ்சதுக்கும் மேல வேணும்ன்னு ஆசைப் பட்டேன். உலகத்தில் செக்ஸே இல்லாம எத்தனையோ தம்பதிகள் இருக்காங்க. அதை நான் உணறலை. என் மேலயே பரிதாபப் பட்டேன். அது என் முதல் தப்பு. ஒரு சமயம் நீ வெறுப்போடு வைப்ரேட்டர் வாங்கித் தரேன்னு சொன்னப்ப வாங்கித் தான்னு சொல்லி இருக்கணும். அது அடுத்த தப்பு"

விஸ்வா, "மறுபடி என்னை குறை சொல்லறே"

வனிதா, "இல்லை விஸ்வா. நான் என்னை குறை சொல்லிக்கறேன். எனக்கு உணர்ச்சிகள் ரொம்ப இருந்தது. அதை கட்டுப் படுத்த முடியலைன்னா நான் என்ன செஞ்சு இருக்கணும்? சுயமா அந்த உணர்ச்சிகளை அடக்க என்ன வடிகால்-ன்னு யோசிச்சு இருக்கணும்"

விஸ்வா, "அதான் ஏற்கனவே அனுபவிச்ச வடிகால் இருந்ததே"

வனிதா, "அந்த வடிகாலை டெல்லி ஃபேருக்குப் போறவரைக்கும் நான் தேடிப் போகலை. டெல்லிக்கு நீ வரேன்னு சொல்லிட்டு கடைசி நிமிஷத்தில் வராம போனப்போ உன் மேல் ரொம்ப கோவப் பட்டேன். அந்த சமயத்தில் என் கோவத்தையும் விரக தாபத்தையும் சந்திரசேகர் பயன் படுத்திட்டார். அதுவும் என் தப்புதான். அந்த சமயத்தில் ஒரு மூணாவுது மனுஷன் தொடற மாதிரி எனக்கு தோணலை. ஏற்கனவே அவர்கூட இருந்த அனுபவம். என் உணர்ச்சிக்கு அடிமையாயிட்டேன்"

விஸ்வா, "அதான் திரும்ப வந்ததுக்குப் பிறகு வாரம் தவறாம அவர்கிட்டே போனியாக்கும்"

வனிதா, "திரும்பி வந்து ஒரு மாசம் அவர் என்னைக் கேட்டுட்டே இருந்தார். நான் போகலை. உன் கூட இருக்கணும்-ன்னு ரொம்ப முயற்சி செஞ்சேன். ஒவ்வொரு நாளும் நீ எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தாலும் அது வரை முழிச்சுட்டு இருந்து உனக்காக நல்ல ட்ரெஸ் பண்ணிட்டு ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு உனக்குப் பிடிச்ச பெர்ஃப்யூம் போட்டுட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீகூட ரொம்ப கிண்டல் அடிச்சே விஸ்வா. God! I acted like a slut in front of you. And still you were not interested in making love to me. நமக்கு இடையே இருந்த அன்னியோன்னியம் கூட காணாமப் போயிருந்தது. அதுக்குப் பிறகு அவர் என்னை கேட்டப்ப தப்பு செய்யறோம்ன்னு தெரிஞ்சும் என் உடல் பசிக்காக அவர்கிட்டே போக ஒத்துகிட்டேன். முழுக்க முழுக்க என் தப்புதான். நான் என் உணர்ச்சிகளை கட்டுப் பாட்டில் வெச்சுக்கலை"

விஸ்வா, "சரி. இப்ப என்ன சொல்ல வரே?"

வனிதா, "மேடம் அடுத்த கட்டத்தில் காரணங்களை ஒருத்தரோடு ஒருத்தர் பேசி புரிஞ்சுக்கணும்-ன்னு சொன்னாங்க. அதனால தான் நான் அதை எல்லாம் சொன்னேன். நடந்தது எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் காரணம். இனி நடக்க வேண்டியதை பத்தி மட்டும் பேசலாம்" என முற்றுப் புள்ளி வைத்தாள்.

அமுதா, "வனிதா நீ உன் சார்பில் சொன்னதை முழுக்க முழுக்க நான் ஆமோதிக்க மாட்டேன். இருந்தாலும் இது உங்க ரெண்டு பேர் வாழ்க்கை பிரச்சனை. ஆனா, விஸ்வாவின் மேல் எந்தத் தப்பும் இல்லைன்னு நீ சொல்வதை நான் ஒத்துக்கப் போறது இல்லை"

வனிதா, "அவர் மேல தப்பு கண்டு பிடிச்சு என்ன சாதிக்கப் போறீங்க?"

அமுதா, "நான் என்ன சொன்னேன்? இந்த கேஸ் விவாகரத்தில் முடிஞ்சாலும் நீங்க ரெண்டு பேரும் நண்பர்களாகத்தான் பிரியணும்-ன்னு சொன்னேன். மறந்துடுச்சா?"

வனிதா, "அவர் குழந்தைகளின் அம்மா நான். என்னை அவர் எதிரியாப் பார்த்தா நான் அதைத் தடுக்க முடியாது. நான் அவரை வெறும் நண்பனா பார்க்கலை. எப்பவும் பார்த்தது இல்லை. என் கணவரா, லவ்வரா மட்டும் தான் பார்த்தேன். பார்த்துட்டு இருக்கேன். சாகற வரைக்கும் பார்த்துட்டு இருப்பேன். அதை அவரால் தடுக்க முடியாது"

விஸ்வா, "என்னாலும் அவளை எதிரியா பார்க்க முடியாது. அவ செஞ்சதை வெறுக்கறேன். ஆனா அவளை நான் வெறுக்கலை"

வனிதா, "அப்பறம் ஏன் விஸ்வா என்னை கஷ்டப் படுத்தணும்-ன்னு நினைக்கறே?"

விஸ்வா, "நான் அப்படி நினைக்கலை"

வனிதா, "வசியை என் கிட்டே இருந்து பிரிச்சு சிங்கப்பூருக்குக் கூட்டிட்டுப் போறது என்னை கஷ்டப் படுத்தறது இல்லையா?"

அமுதா, "வாட்?"

விஸ்வா, "அதைப் பத்தி நான் இன்னும் முடிவு எடுக்கலை"

வனிதா, "அப்படி முடிவு எடுத்தா என்ன செய்யறதா இருக்கே"

விஸ்வா, "ஒன்ஸ் டைவர்ஸ் ஆனதுக்குப் பிறகு, வசி என் கூட விக்கி உன் கூடன்னு முடிவானதுக்குப் பிறகு அவளை நான் எங்கே கூட்டிட்டுப் போனா உனக்கு என்ன?"

அமுதா, "விஸ்வா, This is not acceptable to me. இப்பவே நான் ஜட்ஜுக்கு இந்த விவாகரத்து கூடாதுன்னு சொல்லப் போறேன்"

வனிதா, "அதுக்குத் தேவை இல்லை மேம். அவரோட விவாகரத்துப் பத்திரத்தில் என்ன மாற்றங்கள் வேணும்ன்னு ஒரு விண்ணப்பம் கொண்டு வந்து இருக்கேன். அதில் அவர் கையெழுத்துப் போட்டா போதும்"

விஸ்வா, "என்ன மாற்றம்?"

வனிதா, "என் குழந்தைகளை விட்டு நான் பிரிய மாட்டேன். அது மட்டும் தான் மாற்றம். இதுக்கு நீங்க ஒத்துக்காம நான் நடத்தை கெட்டவன்னு சொல்லி கேஸ் போட்டாலும் சரி. கோர்ட்டில் வாதாடுவேன். குழந்தைகளை உன்னால் என் கிட்டே இருந்து பிரிக்க முடியாது"

விஸ்வா, "ஏன் முடியாது? ஒரு பெண் குழந்தையை நல்ல முறையில் வளர்க்கும் அளவுக்கு உனக்கு பொறுப்பு இல்லைன்னு சொல்லி வாதாடுவேன். You have no morals to teach a girl"

அவனது சொற்களால் மனம் புண்பட்டு கண் கலங்கினாலும் வனிதா, "அமாம் விஸ்வா, இந்த விவாகரத்து கேஸ் தொடங்கும் வரைக்கும் சில விஷயங்களில் எனக்கு போதுமான ஒழுக்க குணம் இல்லாமத்தான் இருந்தது. ஒத்துக்கறேன். ஆனா, தவறை உணர்ந்ததுக்குப் பிறகும் அப்படி இருப்பேன்னு நீ சொல்ல முடியாது. நிச்சயம் அந்த மாதிரி தவறை என் மகளை செய்ய விட மாட்டேன். Still, நீ கூட இருந்து அவளுக்கு தேவையான ஒழுக்கங்களை தேவைப் படும் வயசில் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை"

விஸ்வா மௌனம் காத்தான்.

கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட வனிதா, "விஸ்வா, நீ சொன்னது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இருந்தாலும் சில விஷயங்களை யோசிச்சுப் பாரு. என் குழந்தைகளை நான் எப்பவாவுது புறக்கணிச்சு இருக்கேனா? அதே சமயம் குழந்தைகளுக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து அவங்க கூட எவ்வளவு நேரம் நீ செலவு செஞ்சு இருக்கே-ன்னு யோசிச்சுப் பாரு. உண்மையை சொல்லணும்ன்னா நான் ஏற்கனவே ஒரு சிங்கிள் பேரண்டாத்தான் இருந்தேன்"

விஸ்வா, "வாட் டூ யூ மீன்?"

குரலை உயர்த்திய வனிதா, "யூ நோ வாட் ஐ மீன்! நீ எனக்கு மட்டுமா கிடைக்காம இருந்தே? வாரத்தில் எத்தனை நாள் அவங்க முழிச்சுட்டு இருக்கும் போது அவங்க கூட இருந்தே-ன்னு யோசிச்சுப் பாரு"

விஸ்வாவின் முகம் பேயறைந்தது போல் ஆனது.

வனிதா, "விஸ்வா, நான் பெரிய தவறை செஞ்சு இருக்கேன். அதுக்கு என் சுயநலம் மட்டும் தான் காரணம். அதை மன்னிக்கும் மனப்பான்மை உனக்கு இருந்தா நாம் சேர்ந்து வாழலாம். அதுக்கு நீ என்ன கண்டிஷன் போட்டாலும் கேட்கத் தயாரா இருக்கேன். இல்லை பிரிஞ்சு போறதுதான் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்ன்னா அதுக்கும் நான் குறுக்க நிக்க மாட்டேன். என் குழந்தைகளை என் கிட்டே இருந்து பிரிக்க மட்டும் ஒத்துக்க மாட்டேன். இதுக்கு மேல் நான் சொல்லறதுக்கு எதுவும் இல்லை"

விஸ்வா, "சோ, நீ செஞ்ச தவறுக்கு நான் தனியா இருக்கணுமா?"

வனிதா, "உன்னை தனியா இருக்கணும்ன்னு யாரும் சொல்லலை. நீ முன்னாடி இருந்தது போல இப்பவும் இருக்கலாம். நாம் பிரியறதுனால குழந்தைகளின் சுற்றுச் சூழலை மாத்த வேண்டாம். வார நாட்களில் எப்படியும் அவங்க தூங்கின பிறகுதான் வீட்டுக்கு வந்துட்டு இருந்தே. லீவ் நாள் முழுவதும் வேணும்ன்னாலும் நீ அவங்க கூட இரு. அப்போ நான் அங்கே இருப்பது உனக்குப் பிடிக்கலைன்னா அந்த சமயத்தில் எங்க அம்மா வீட்டுக்குப் போயிடறேன்"

விஸ்வா, "You are victimising me ... "



வனிதா, "இல்லை விஸ்வா, I am not victimising you. All I am asking you is not to victimise the children for what I did. என்கிட்டே இருந்தும் விக்ரம்கிட்டே இருந்தும் பிரிஞ்சா வசி எந்த அளவுக்கு கஷ்டப் படுவான்னு யோசிச்சுப் பாரு. Does she deserve it? நான் உனக்கு எந்த தண்டனை கொடுக்கவும் விரும்பலை. நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏத்துக்கத் தயாரா இருக்கேன். இப்பவும் உனக்கு நான் செஞ்ச துரோகத்தை நினைச்சு அழுதுட்டுத்தான் இருக்கேன். நாம் ஒண்ணு சேர்ந்து இருக்க முடியலைன்னா நீ வேறு ஒருத்தியை கல்யாணம் செஞ்சுட்டு சந்தோஷமா இருக்கணும்ன்னுதான் கடவுளை வேண்டிக்கறேன்"

அந்த அறையில் மௌனம் நிலவியது ...

வனிதா, "நான் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை விஸ்வா. குழந்தைகள் என்னுடன் இருக்க சம்மதிச்சு இந்த விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டா நீ மறுபடி கோர்ட் வாசலை மிதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லைன்னா கோர்ட்டில் என் லாயர் எனக்காக வாதாடுவாங்க"

கோபம் கண்களில் கொப்பளிக்க அவள் கொடுத்த விண்ணப்பத்தில் கையொப்பம் இட்ட பிறகு விஸ்வா அவ்விடத்தை விட்டு அகன்றான்.




No comments:

Post a Comment