Friday, September 25, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 19

வனிதா சென்ற பிறகு தன் கேபினில் தனிமையில் அமர்ந்து இருந்த விஸ்வாவின் கைபேசி சிணுங்கியது.

விஸ்வா, "சொல்லுங்க கர்னல். எப்போ திரும்ப வந்தீங்க?"

டாக்டர் மதுசூதன், "வந்து ரெண்டு நாள் ஆச்சு. வந்த மறு நாள் டாக்டர் அமுதாகிட்டே இருந்து எனக்கு ஒரு S.O.S"

விஸ்வா, "என்ன விஷயம்?"

டாக்டர் மதுசூதன், "இப்போ எங்கே இருக்கே?"

விஸ்வா, "ஆஃபீஸில் ... "

டாக்டர் மதுசூதன், "சாயங்கலம் ஏழு மணிக்கு ஆர்.எஸ்.ஐயில் மீட் பண்ண முடியுமா?"

விஸ்வா, "ஆக்சுவலா நான் குழந்தைகள் கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன்"



டாக்டர் மதுசூதன், "குழந்தைகள் மத்தியானத்தில் இருந்து வீட்டில் தான் இருந்து இருப்பாங்க. நீ ஏன் இன்னும் ஆஃபீஸில் உக்காந்துட்டு இருக்கே?"

விஸ்வா, "அரை மணி நேரத்துக்கு முன்னால் வரை மீட்டிங்க் இருந்தது. வனிதா வீட்டுக்குப் போனா. கொஞ்ச நேரம் கழிச்சு நான் போகலாம்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்"

டாக்டர் மதுசூதன், "நீயும் கூடவே போயிருக்கலாமே?"

விஸ்வா, "போயிருக்கலாம். அவ வீட்டுக்குள் நுழைஞ்சதும் குழந்தைகள் ரெண்டும் வனிதா கூடத்தான் இருப்பாங்க. அரை மணி வரை நான் கூப்பிட்டாலும் என் கிட்டே வர மாட்டாங்க" என்று சொல்லச் சொல்ல அவன் குரல் லேசாக உடைந்தது ...

டாக்டர் மதுசூதன், "உன் மனசு மேலும் புண் படணும்ன்னு நான் இதைச் சொல்லலை. இருந்தாலும் என்னால் சொல்லாம இருக்க முடியலை. இது நீயா வர வெச்சுட்டது"

விஸ்வா, "I know .. சரி எதுக்கு ஏழு மணிக்கு வரச் சொன்னீங்க?"

டாக்டர் மதுசூதன், "அவசரமா உன் கூட பேசணும். அதுக்குத்தான்"

விஸ்வா, "என்ன விஷயம்?"

டாக்டர் மதுசூதன், "நீ வா. சொல்லறேன்"

விஸ்வா, "ஓ.கே"

~~~~~~~~~~

ஆர்.எஸ்.ஐ மீட்டிங்க் ரூம் ..

டாக்டர் மதுசூதன், "கேஸ் போட்டு ஆறு மாசம் ஆகியும் கவுன்ஸிலிங்க் முடியாததால் கேசை டிஸ்மிஸ் பண்ணப் போறதா டாக்டர் அமுதாகிட்டே ஜட்ஜ் சொல்லி இருக்கார்"
விஸ்வா மௌனம் காக்க டாக்டர் மதுசூதன் தொடர்ந்து, "கடைசியா பேசினப்போ வனிதா தான் குழந்தைகளைப் பிரிஞ்சு இருக்க மாட்டேன் அப்படின்னு மட்டும் அப்ஜெக்ட் பண்ணினா. ஆனா, விவாகரத்துக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு வனிதா ஒப்புதல் கொடுத்து இருக்கா. அப்படியே அவ அந்த ஆட்சேபனை மனு தாக்கல் செய்யாமல் இருந்து இருந்தாலும் நாலரை வயசுக் குழந்தைகளை தாயிடம் இருந்து பிரிக்க எந்தக் கோர்ட்டும் ஒப்புதல் கொடுத்து இருக்காது. நீ திட்டவட்டமா சொன்னா டாக்டர் அமுதா தன் கவுன்ஸிலிங்கினால் இந்த விவாகரத்தைத் தடுக்க முடியாதுன்னு ரிபோர்ட் கொடுப்பாங்க."

விஸ்வா, "எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை"

டாக்டர் மதுசூதன், "ஏன்?"

விஸ்வா, "இவ்வளவு நாளும் என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்காமல் இருந்தேன். இப்பத்தான் I have started spending quality time with my children. Not only that, நான் இல்லைன்னாலும் வனிதா இல்லாமல் அவங்களால் இருக்க முடியாதுன்னு புரிஞ்சுட்டேன். அவங்களை பிரிஞ்சு இருக்கணும்ன்னு நினைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"

டாக்டர் மதுசூதன், "விவாகரத்து. அதுவும் சின்னக் குழந்தைகள் இருக்கும் போது ரொம்ப யோசிச்சு முடிவு எடுக்க வேண்டிய விஷயம். விவாகரத்து செய்யறதா வேண்டாமா அப்படிங்கற முடிவு மட்டும் இல்லை. விவாகரத்துக்குப் பிறகு குழந்தைகளுடன் அவங்க உறவு எப்படி இருக்கும் அப்படிங்கறதையும் தீர யோசிச்சு முடிவு எடுக்கணும்"

விஸ்வா, "உங்க அனுபவத்தில் நிச்சயம் இந்த மாதிரி விவாகரத்துக்களை பார்த்து இருப்பீங்க. அந்தக் கேஸ்களில் எப்படி முடிவு எடுத்தாங்க?"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா, நான் ஹாண்டில் பண்ணின கேஸ்களில் விவாகரத்தில் முடிஞ்சவற்றை கை விட்டு எண்ணிடலாம். ஆனா ஒவ்வொரு கேஸுக்கும் வெவ்வேறு காரணங்களும் அடிப்படைகளும் இருந்துச்சு. அதே மாதிரி உன்னுடையதும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேஸ். ஆனா நான் ஒண்ணு சொல்ல விருப்பப் படறேன். நீ எந்த முடிவுக்கும் இன்னும் தயார் ஆகலை"

விஸ்வா, "என்ன சொல்லறீங்க?"

டாக்டர் மதுசூதன், "சேர்ந்து வாழறது அல்லது விவாகரத்து செய்யறது. இந்த ரெண்டும் கணவன் மனைவி ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசி எடுக்க வேண்டிய முடிவுகள். நான் சொல்வதில் இருக்கும் நியாயம் உனக்குப் புரியுதா?"

விஸ்வா, "எஸ்"

டாக்டர் மதுசூதன், "சோ, நீ இப்போ வனிதாவுடன் பேசத் தயாரா?"

விஸ்வா, "எஸ் .. "


சில நாட்களுக்குப் பிறகு பெங்களூர் ஆர்.எஸ்.ஐக்கு எதிரில் இருந்த கரியப்பா பூங்காவில் டாக்டர் மதுசூதனுடன் விஸ்வா அமர்ந்து இருக்க டாக்டர் அமுதாவுடன் வனிதா வந்தாள்.

டாக்டர் மதுசூதன், "வாங்க டாக்டர். எப்படி இருக்கு என் கன்ஸல்டேஷன் ரூம்?"

டாக்டர் அமுதா, "I like this setting. ரொம்ப இன்ஃபார்மலா இருக்கு"

டாக்டர் மதுசூதன், "வனிதா, விஸ்வா நீங்க ரெண்டு பேரும் மனம் விட்டுப் பேசணும். நாங்க இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் இடையே நடக்கும் பரிமாற்றம் அனாவிசியமான சண்டையா வாக்கு வாதங்களா மாறிடக் கூடாது. நீங்க ரெண்டு பேரும் இங்கே உக்காந்து மனம் விட்டு பேசுங்க. நானும் டாக்டரும் கொஞ்சம் தள்ளி நீங்க பேசறது கேட்காத தூரத்தில் உக்காந்துட்டு இருப்போம். ஓ.கே?"

விஸ்வா, "எஸ் ... "

டாக்டர் மதுசூதன், "இன்னொரு விஷயம் கடந்த காலத்தைப் பத்தி பேசும் போது நடந்ததை நடந்த மாதிரி அந்த சமயத்தில் எப்படி யோசிச்சீங்களோ அதை அப்படியே சொல்லணும். Don't try to justify yourself. நிதர்சனமான உண்மைகளைப் புரிஞ்சுக்க வேண்டிய சமயம் இது"

மனோதத்துவர்கள் இருவரும் விலகிச் சென்ற பின் தம்பதியினருக்கு இடையே மௌனம் நிலவியது ...

சில நிமிட மௌனத்தைக் கலைக்க விஸ்வா, "நீ சொல்லு"

வனிதா, "என்ன சொல்லறது?"

விஸ்வா, "ஆறு வருஷத்துக்கு முன்னால் ... நோ இப்போ ஏழு வருஷம் ஆகப் போகுது ... எனக்கு வேலை வாங்கிக் கொடுக்க எப்படி உன்னால் சந்திரசேகருக்கு இணங்க மனம் வந்தது?"

வனிதா, "சொல்லறேன். ஆனா நான் சொல்வதை என் கோணத்தில் நீ யோசிச்சுப் பார்க்கணும் விஸ்வா. செய்வியா?"

விஸ்வா, "எஸ் ... Go on"

வனிதா, "முதலில் எட்டு வருஷத்துக்கு முன்னால நடந்ததை சொல்றேன். அதுக்குப் பிறகு ஆறு வருஷத்துக்கு முன்னால் நடந்ததைச் சொல்லறேன்"

விஸ்வா, "ம்ம்ம்"

வனிதா, "நீ அடிபட்டதுக்குப் பிறகு ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிருந்தே. எப்படியாவுது உனக்கு உற்சாகமூட்ட நான் முயற்சி செஞ்சேன். ராமின் உதவியோடு அதில் வெற்றியும் கண்டேன். அது எனக்கு என் மேல் ரொம்ப தன்னம்பிக்கையை கொடுத்தது."

விஸ்வா, "சோ, நான் ஒண்ணுக்கும் லாயக் கில்லாதவன் உன்னால்தான் எனக்கு தன்னம்பிக்கை வந்ததுன்னு சொல்ல வர்றியா?"

வனிதா, "சத்தியமா இல்லை விஸ்வா. நாட்டுக்காக உயிரைப் பணயம் வைக்கற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்குன்னு எனக்குத் தெரியும். அதை நினைச்சு நான் பெருமைப் படாத நாளே இல்லை. போர் அனுபவத்துக்குப் பிறகு உன் மனநிலை அப்படி இருந்தது. நான் அந்த மாதிரி சிச்சுவேஷனில் செத்தே போயிருப்பேன். ஆனா, காலில் அடி பட்டதனால் அவங்க உனக்கு டெஸ்க் ஜாப் கொடுத்ததால் ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிருந்தே. உன்னை எப்படியாவுது உற்சாகப் படுத்தணும்ன்னு நினைச்சேன். அந்த முயற்சியில் எனக்குக் கிடைச்ச வெற்றி என்னால் எதையும் சாதிக்க முடியுங்கற ஒரு வெற்றுத் தன்னம்பிக்கையை கொடுத்தது."

விஸ்வா, "சரி, மேல சொல்லு"

வனிதா, "அதுக்கு ரெண்டு வருஷத்துக்குப் பிறகு PMLஇல் அந்த வேலை உனக்குக் கிடைச்சா நிச்சயம் அதில் ஷைன் பண்ணுவேன்னு நினைச்சேன். ஆனா, முதலில் சந்திரசேகர் உன்னை வேலைக்கு எடுப்பதில் என்ன ரிஸ்க் அப்படின்னு அவர் கோணத்தில் சொன்னார். அவர் சொன்னதையும் நான் உன் கிட்டே சொன்னேன். ஞாபகம் இருக்கா?"

விஸ்வா, "எஸ்"

வனிதா, "அதுக்கு நீ எப்படி ரியாக்ட் பண்ணினே?"

விஸ்வா மௌனம் காக்க ..

வனிதா, "இந்த மாதிரிதான் ... ஒரு வாரம் என் கூட நீ பேசவே இல்லை. அத்தை PMLஇல் அட்வைசரா இருப்பதால் அவங்க உதவியை நாடினேன். அவங்க தான் PMLக்கு ஆலோசகரா இருந்துட்டு வேலைக்கு உனக்கு சிபாரிசு செய்யறது சரி இல்லைன்னு சொன்னாங்க. திரும்ப சந்திரசேகர்கிட்டே போய் உன்னை பத்தி உயர்வா சொல்லி கெஞ்சினேன். It was then Chandrasekar put his conditions. அப்படி கண்டிஷன் போட்ட பிறகும் இந்த வேலை இல்லைன்னா என்ன, நிச்சயம் உனக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும்ன்னு உன் கிட்டே சொல்லி உன்னை உற்சாகப் படுத்த முயற்சி செஞ்சேன். அதற்கும் நீ என் கூட பேசாமல் தினமும் குடிச்சுட்டு வீட்டுக்கு வந்தே. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. இருந்தாலும் என் தோல்வியை ஒப்புக் கொள்ள மனம் வரலை"

விஸ்வா கண்களில் கண்ணீர் கோர்த்துத் தலை குனிந்தான் ...

வனிதா, "ஒரு கோணத்தில் அது சரியில்லைன்னு தெரியும். இருந்தாலும் சின்ன வயசில் எனக்கு நேர்ந்த அனுபவங்களால் செக்ஸ் வேறு காதல் வேறுன்னு என் மனசில் ஆழமா பதிஞ்சு இருந்தது. அது தப்புன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் முழுவதுமா உணர்ந்தேன். நான் சந்திரசேகருடன் செக்ஸ் வெச்சுக்கப் போறேன். அது காதல் இல்லை. அப்படின்னு முடிவு எடுத்து அவர் நிபந்தனைக்கு உடன் பட்டேன்"

விஸ்வா, "என்னவோ, ஷாப்பிங்க் போயிட்டு வந்தேன்னு சொல்லற மாதிரி சொல்லறே?"



வனிதா, "If you want to know all the gory details I will tell you. அவர் ஃபார்ம் ஹவுஸுக்குப் முதல் தரம் போனப்போ எதிலும் நானா ஈடு படாமல் அவருக்கு ஒரு கைப் பொம்மையாத்தான் செக்ஸில் கலந்து கிட்டேன். அவருக்கு செக்ஸில் நிறைய அனுபவம் இருந்தது விஸ்வா. என்னென்னவோ செஞ்சார். எனக்கும் ரொம்ப மூட் வந்தது. அதற்குப் பிறகு நானும் சேர்ந்து கலந்து கிட்டேன். ஆனா ஒவ்வொரு முறையும் அவர் கிட்டே போயிட்டு வந்த பிறகு எனக்கு அழுகையா வரும். ஏன்னு எனக்கு அப்போ தெரியலை. இப்போ புரியுது"

விஸ்வா, "என்ன புரியுது?"

வனிதா, "அந்த நிலைமையில் நீ இருந்து இருந்தா அது என்னை எந்த அளவுக்குப் பாதிக்கும்ன்னு புரியுது. I belong to you Viswa just as you belong to me. உனக்கு மட்டும்ன்னு இருப்பதை இன்னொருத்தனுடன் பகிர்ந்து கிட்டேன். அதை நினைச்சு ரொம்ப வெட்கப் படறேன்"

விஸ்வா, "அதான், மறுபடி டெல்லி ஃபேரப்போ தொடங்கினேயா?"

வனிதா, "டெல்லி ஃபேரப்போ நானா தொடங்கலை. He drugged me. ஒயின் குடிப்பதா நினைச்சுட்டு குடிச்சேன். இப்போ டாக்டர் அமுதாவுடன் பேசிட்டு இருந்தப்பத்தான் உணர்ந்தேன். சந்திரசேகர் அதில் எதையோ கலந்து கொடுத்து இருக்கார்"

விஸ்வா, "What do you mean?" இதுவரை அவனுக்குத் தெரிந்து இராத ஒரு உண்மை அவனை அதிர வைத்தது ...

வனிதா, "எஸ். சுமதி மேடம் அதை கன்ஃபர்ம் பண்ணினாங்க. சந்திரசேகரின் ரூமில் ஒரு பாட்டில் இருந்ததாம். அதில் ரெண்டு சொட்டு கலந்தா போதுமாம் தன்னிலை இழந்து ரொம்ப மூட் வருமாம்.. எனக்கு அது தெரியலை"

விஸ்வா, "சரி, ஆனா அதுக்கு அப்பறம்? கெஸ்ட் ஹவுஸில் அதைக் கண்டின்யூ பண்ணினப்ப அவர் உனக்கு எந்த மருந்தும் கொடுக்கலை. இல்லையா?"

வனிதா, "உடம்புக்கு எந்த மருந்தும் கொடுக்கலை. But he spoiled my mind"

விஸ்வா, "What do you mean?"

வனிதா, "டெல்லி ஃபேருக்குப் போயிட்டு வந்த பிறகு எனக்கு செக்ஸ் ரொம்பத் தேவைப் படுது அது உன் கிட்டே எனக்கு கிடைக்காது, அதனால்தான் நானும் டெல்லி ஃபேரப்போ கலந்துகிட்டேன் அப்படின்னு சந்திரசேகர் என்னை ஒவ்வொரு நாளும் ப்ரெயின் வாஷ் பண்ணிட்டே இருந்தார். நான் ரொம்ப குழம்பிப் போயிருந்தேன். தினம் நீ பத்து பதினோரு மணிக்கு மேல் வீட்டுக்கு வருவே. சாப்பிட்ட பிறகு ரொம்ப டயர்டா உடனே தூங்கப் போயிடுவே. உன்னைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கும். உன் கிட்டே எனக்கு நீ வேணும்ன்னு சொல்ல வெட்கப் பட்டுட்டு பேசாம இருந்துடுவேன். But I missed you so much. ஆனா, நீ என்னை சுத்தமா அவாய்ட் பண்ண ஆரம்பிச்சே"

விஸ்வா, "டெல்லி ஃபேருக்குப் போறதுக்கு முன்னால் பெட்டில் உனக்கு வேண்டியதை நான் கொடுக்கலைன்னு குறை சொன்னே"

வனிதா, "விஸ்வா, நான் உன்னை ஒரு ஃப்ரெண்டா, sole mateஆ பார்த்தேன். எத்தனையோ விஷயங்களை உன் கிட்டே பகிர்ந்துட்டு இருக்கேன். அந்த மாதிரி சாதாரணமா அப்போ சொன்னேன். அன்னைக்கு எனக்கு ஆர்காஸம் வர்ற சமயத்தில் நீ முடிச்சுட்டே. அதுக்கு முன்னாடியும் அப்படி எத்தனையோ முறை நடந்து இருக்கு. அதனால் அதை ஒரு குறையா எப்பவும் நினைச்சது இல்லை விஸ்வா. உன் கூட இருப்பதே விவரிக்க முடியாத ஒரு சுகத்தைக் கொடுக்கும் விஸ்வா. அந்த அன்னியோன்னியம் மட்டுமே எனக்கு போதும் விஸ்வா"

விஸ்வா, "Then why you re-started with Chandrasekar?"

வனிதா, "அந்த டெல்லி ஃபேருக்குப் போயிட்டு வந்த பிறகு எனக்கு ரொம்ப மூட் வந்தது. செக்ஸ் விஷயத்தை எடுத்தா என் கூட பேசறதையே நீ அவாய்ட் பண்ணினே. I was restless and ... I needed some sexual release Viswa."

விஸ்வா, "வடிகால்ன்னு ரொம்ப சாதாரணமா சொல்லறே?"

வனிதா, "எஸ். எனக்கு அது வடிகால் மட்டும்தான். அந்த டெல்லி ஃபேர் போனப்போ நான் முழுக்க என் சுயநினைவில் இல்லை. அப்போ என்ன நடந்தது எனக்கு முழுவதும் ஞாபகம் இல்லை. ஆனா ஆறு வருஷத்துக்கு முன்னாடியும் சரி. இப்போ ஆறு மாசமாவும் சரி, எங்க உறவில் அன்னியோன்னியத்துக்கு இடம் கொடுக்கலை"

விஸ்வா, "ஓ! சந்துருன்னு செல்லமா கூப்பிட்டே?"

வனிதா, "அவரோடு எனக்கு இருந்தது காதல் இல்லை. நட்பு மட்டும்தான். ஒரு ஃப்ரெண்டை கூப்பிடற மாதிரி அப்படிக் கூப்பிட்டேன். கூடவே அவரை எவ்வளவோ முறை கேவலமா பேசியும் இருக்கேன். சிரிச்சுகிட்டே கேட்டுப்பார்"

விஸ்வா, "அதே மாதிரி என்னைப் பத்தி அவர்கிட்டே கேவலமாவும் பேசி இருப்பே"

வனிதா, "சத்தியமா சொல்லறேன் விஸ்வா. உன்னை ஒரு நாளும் நான் விட்டுக் கொடுத்தது இல்லை. நீ வேலையே கதின்னு இருக்கேன்னு முறையிட்டு இருக்கலாம். அதைக் கூட ரொம்ப பெருமையாத்தான் சொல்லுவேன்"

விஸ்வாவுக்கு வனிதா-சந்திரசேகர் பேசிக் கொண்டது மனத்திரையில் ஓடியது ...

தொடர்ந்த வனிதா, "ஒரு விஷயம் விஸ்வா. நான் ஒரு தடவை கூட அவரை கிஸ் பண்ணினது இல்லை. கிஸ் பண்ண அலவ் பண்ணினதும் இல்லை. என்னோட டிஸ்கம்ஃபர்ட்டை புரிஞ்சுட்டு சந்திரசேகரும் என்னை வற்புறுத்தினது இல்லை. It was like two people masturbating together"

சுய இன்பம் என்று வனிதா கூறியது அவனது மனத்தை உறுத்தியது. ஆனால் அவனது கோபம் இன்னமும் அவனது கண்ணை மறைத்தது ..

விஸ்வா, "போரில் எனக்கு காலில் அடி படாமல் காலுக்கு நடுவில் அடி பட்டு இருந்தா?"

வனிதா, "கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இருந்தது இல்லை. நிச்சயம் இதுதான் என் வாழ்க்கைன்னு இருந்து இருப்பேன். அந்த சூழ்நிலையில் எப்படி சந்தோஷமா இருக்கலாம்ன்னு விஷயம் தெரிஞ்சவங்க கிட்டே அட்வைஸ் கேட்டு இருப்பேன். நீ சொன்ன மாதிரி வைப்ரேட்டர் உபயோகிச்சு இருப்பேன். உனக்கு வேற எந்த விதத்தில் எனக்கு இன்பம் கொடுக்க முடியும்ன்னு சொல்லிக் கொடுத்து இருப்பேன்."

விஸ்வா, "இப்போ மட்டும் ஏன் வேணும்ன்னு சந்திரசேகர் கிட்டே போனே?"

வனிதா, "உனக்கு உடல் ரீதியா ப்ராப்ளம் இருந்ததுன்னு எனக்கு தெரியலை விஸ்வா. அப்படி தெரிஞ்சும் வேற ஒருத்தனை நாடிப் போற அளவுக்கு நான் கீழ்தரமானவ இல்லை விஸ்வா. உனக்கு இருந்த ப்ராப்ளத்தைப் பத்தி கேள்விப் பட்ட போது செத்துடலாம்ன்னு இருந்தது விஸ்வா. இந்த மாதிரி விஷயங்களை பொதுவா எந்தப் பெண்ணும் தன் தாயிடம் சொல்லி ஆலோசனை கேட்பான்னு கேள்விப் பட்டு இருக்கேன். ஆனா சின்ன வயசில் எனக்கு நேர்ந்த அனுபவத்தினால் அந்த மாதிரி விஷயங்களை அம்மா கூட பேசறதை வெறுத்தேன். அதுவும் என் தப்பு. அம்மா ஸ்தானத்தில் இருந்த அத்தைக்கிட்டேயாவுது பேசி இருக்கணும்"

விஸ்வா மௌனம் காத்தான் ...

வனிதா, "விஸ்வா, நான் உனக்கு மட்டும் என்பது உன் எதிர்பார்ப்பு. நான் உனக்கு கொடுத்த வாக்குறுதி. அந்த வாக்குறுதியை மீறினேன். அந்த விஷயங்களை உன்னிடம் இருந்து மறைச்சேன். இதெல்லாம் நான் செஞ்ச தவறுகள். If you have the heart to accept me as I am we can look forward to a future together"

விஸ்வா, "நீ செஞ்ச காரியம் இன்னும் என் மனசைப் போட்டு வதைச்சுட்டு இருக்கு."

வனிதா, "அந்த விஷயம் தெரிய வந்ததுக்குப் பிறகு உன் மனசுக்கு மேலும் கஷ்டம் வந்து இருக்காதுன்னு நினைக்கறேன். ஆனா, கவுன்ஸிலிங்க் ஆரம்பிச்சப்ப இருந்ததை விட இப்போ என் மனவேதனை ஆயிரம் மடங்க ஆகி இருக்கு"

விஸ்வா, "அப்படி ஒரு காரியத்தை செய்வேன்னு நான் கனவில் கூட நினைச்சுப் பார்த்தது இல்லை. இனி எப்படி உன்னை நம்பறது"

வனிதா, "நான் செஞ்ச தப்பை உணர்ந்த பிறகும் மறுபடி அந்தத் தப்பை நான் செய்யும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை"

விஸ்வா, "மறுபடி உனக்கு செக்சுவல் ரிலீஸ் தேவைப் பட்டா?"



வனிதா, "நிச்சயம் தேவைப் படும். செக்சுவல் ரிலீஸ் மட்டும் இல்லை. ஆனா அதுக்கு மேல அன்னியோன்னியம் தேவைப் படும். அது கிடைச்சா செக்சுக்கான தேவை ரொம்ப குறைஞ்சுடும். அந்த அன்னியோன்னியத்தைக் கூட உனக்கு கொடுக்க மனசு வராதுன்னு சொல்லாதே. அப்படியும் செக்ஸுவல் ரிலீஸ் தேவைப் பட்டா நீ சொன்ன மாதிரி நிச்சயம் வைப்ரேட்டர் வாங்கி உன் கூட இன்பம் பெருவதா கற்பனை பண்ணிட்டு உபயோகிப்பேன்"

விஸ்வா தனிமையில் சுய இன்பம் கண்டதையும் அதுவே தான் நீண்ட நேரம் இயங்காததற்குக் காரணமானதையும் எண்ணி வெட்கினான்.

அவர்களது பேச்சு வெகு நேரம் நீண்டும் அதில் விஸ்வாவின் ஆற்றாமையும் வனிதாவின் விளக்கங்களும் மட்டுமே இருந்தது. அவளது விளக்கங்கள் சரியென மனதில் தோன்றினாலும் அவைகளை ஏற்றுக் கொள்ள விஸ்வாவுக்கு மனம் வரவில்லை.

ஆனால் இருவரும் மனக் குமுறல் இல்லாமல் மனம் விட்டுப் பேசும் அளவுக்கு இருவருக்கும் அந்த சந்திப்பின் மூலம் மனப் பக்குவம் வந்து இருந்தது.



No comments:

Post a Comment