Friday, September 18, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 7

அமுதா, "பிரசவத்துக்கு அப்பறம் வனிதா அம்மா வீட்டிலே எத்தனை மாசம் இருந்தா?"

விஸ்வா, "ஆறு மாசம்"

அமுதா, "அதுக்குப் பிறகு வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாளா?"

விஸ்வா, "இல்லை, நாங்க மறுபடி எங்க வீட்டுக்கு வந்துட்டோம். நாங்க ரெண்டு பேரும் எங்க தனிக் குடித்தனத்தை விரும்பினோம். ஆனா வனிதா வேலைக்குப் போகலை. குழந்தைங்களுக்கு ஒரு வருஷம் முடியும் வரை வீட்டில் இருந்தா"

அமுதா, "அதுக்குப் பிறகு?"

விஸ்வா, "குழந்தைங்களைப் பாத்துக்க அப்பா ஒரு கவர்னஸை ஏற்பாடு செஞ்சு கொடுத்தார். கூட எங்க வீட்டில் வேலை செஞ்ச ஒரு லேடியும் சேர்ந்து பாத்துட்டாங்க. வனிதா வேலைக்குப் போக ஆரம்பிச்சா"

அமுதா, "ம்ம்ம்...அப்பறம்?"



விஸ்வா, "வனிதா வேலைக்குப் போக ஆரம்பிச்ச அதே சமயத்தில் எனக்கு மார்கெடிங்க் மேனேஜர் ப்ரொமோஷன் கொடுத்து இருந்தாங்க. அதில் இருந்து நான் ரொம்ப பிஸியாயிட்டேன்"

அமுதா, "உங்க ரெண்டு பேருக்குள் உறவு எப்படி இருந்தது?"

விஸ்வா, "ஓ.கே"

மேலும் அவன் சொன்னதில் இருந்து அவர்கள் வாழ்க்கை அவன் கண்ணோட்டத்தில் குழந்தைகளைச் சுற்றி மட்டுமே சுழன்றதை அமுதா உணர்ந்தார். கவுன்ஸிலிங்கின் அடுத்த கட்டத்தை அடைய விஸ்வா தன் அனுபவங்களைப் பற்றி சுருக்கிச் சொல்வதை உணர்ந்தார்.

அந்த உரையாடலின் திசையை மாற்ற அமுதா, "Tell me about your professional life"

விஸ்வா, "சேல்ஸ் மேனேஜர் அப்படிங்கற பொஸிஷன் புதுசா உருவாக்கப் பட்டது. சேல்ஸ் ரெப் நாலஞ்சு பேர் இருந்தாங்க. அவங்க எல்லாம் சந்திரசேகர் பொறுப்பில் வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. நான் சேர்ந்ததற்குப் பிறகு அவங்க எல்லாம் எனக்கு ரிப்போர்ட் பண்ணினாங்க. அதனால வேலைக்கு சேர்ந்த புதுசில் சந்திரசேகரோடு அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டி இருந்தது. அப்போ PML உற்பத்தி செஞ்சுட்டு இருந்த பொருட்களுக்கு தென் இந்தியாவில் போட்டியாளர்கள் யாரும் இல்லை. வடக்கிலும் லூதியானாவில் ஒரு கம்பெனி மட்டும்தான். அதனால் அந்தப் பொருட்களை விற்பனை செய்வது ரொம்ப சுலபம். தொடர்ந்த வாடிக்கையாளர்கள் கூப்பிட்டு ஆர்டர் கொடுப்பாங்க. சேர்ந்து கொஞ்ச நாளில் விற்பனை சம்பந்தப் பட்ட எல்லாப் பொறுப்பையும் நான் எடுத்துட்டேன். இருந்தாலும் என்னால் அதற்கும் அதிகமா செய்ய முடியும்ன்னு நம்பினேன். Basically I wanted to come up in my career"

அமுதா, "நீ சொல்வது ரொம்ப சரி. நிறையப் பேர் கொடுத்த வேலையை மட்டும் செஞ்சாப் போதும்ன்னு நினைக்கறாங்க. ஆனா அதுவே அவங்க முன்னுக்கு வரத் தடையா இருக்கும்ன்னு நினைக்கறது இல்லை. ம்ம்ம்ம் . அப்பறம்?"

விஸ்வா, "PML தொழிற்சாலையில் இருக்கும் மெஷின்களை வெச்சுட்டு இன்னும் சில பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்ன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒரு சிலரை மட்டும் புதுசா வேலைக்கு எடுத்தா போதும். மற்ற பொருட்களை உற்பத்தி செஞ்சு வித்தா PMLஇன் வரவை 30% அதிகம் ஆக்க முடியும்ன்னு சந்திரசேகருக்கு ஒரு ப்ரெசெண்டேஷன் கொடுத்தேன். அவர் எப்பவும் போல தலையை சொறிந்தார். நானே சண்முகம் சார்கிட்டே பேசி பர்மிஷன் வாங்கறேன்னு சொன்னேன். போர்ட் மெம்பர்ஸ் எல்லாருக்கும் அதே ப்ரசெண்டேஷன் கொடுத்தேன். அவங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது. அந்த புதுப் பொருட்களை உற்பத்தி செஞ்சு விற்பதை என் பொறுப்பில் விட்டாங்க. That is how my growth started in PML"

அமுதா, "சோ, ப்ரொமோஷம் கொடுத்தாங்களா?"

விஸ்வா, "முதலில் மார்கெட்டிங்க் மேனேஜர் அப்படின்னு ஒரு புது போஸ்டை உருவாக்கி அதை எனக்குக் கொடுத்தாங்க. PMLஇன் உற்பத்தி தரம் எப்பவும் ரொம்ப நல்லா இருக்கும். அதுக்கு முக்கியக் காரணம் சண்முகம் சார். நான் புதுசா விற்பனைக்குக் கொண்டு வந்த பொருட்களுக்கு மார்கெட்ல நல்ல வரவேற்பு. அதற்குன்னு தனி தொழிற்சாலை உருவாக்க வேண்டிய அளவுக்கு அவைகளின் விற்பனை அதிகரிச்சது. PMLஇன் வரவு நான் சேர்ந்தப்ப இருந்ததை விட ரெண்டு மடங்கு ஆச்சு"

அமுதா, "எக்ஸெலண்ட். ஏதோ மேனேஜ்மெண்ட் ஸக்ஸஸ் ஸ்டோரி படிக்கற மாதிரி இருக்கு. ம்ம்ம். மேல சொல்லு"

விஸ்வா, "சந்திரசேகருக்கு கீழே G.M Production, G.M Finance and Admin ரெண்டு ஜெனரல் மேனேஜர்ஸ் இருந்தாங்க. அடுத்தபடியா ஜெனரல் மேனேஜர் மார்கடிங்க் (G.M Marketing) என்கிற புது போஸ்ட்டை உருவாக்கி மத்த ரெண்டு ஜெனரல் மேனேஜர்களுக்கு இணையா என்னை நியமிச்சாங்க"

அமுதா, "ம்ம்ம் .. உன் ரெண்டவது ப்ரொமோஷன். then?"

விஸ்வா, "அவ்வளவு நாளா போட்டிக் கம்பெனி எதுவும் இல்லாம இருந்தோம். புனாவில் ஒரு புது போட்டிக் கம்பெனி சைனா நாட்டுக் கம்பெனியோட கூட்டுறவில் உறுவாச்சு. எங்க உற்பத்திப் பொருட்களை விட இன்னும் கொஞ்சம் நவீனமான தொழிற்நுட்பத்தோட மார்கெட்டில் விக்க ஆரம்பிச்சாங்க. நாங்களும் எங்க உற்பத்திப் பொருட்களில் நவீன தொழிற்நுட்பத்தை அறிமுகப் படுத்தணும்ன்னு அதற்கான ஒரு திட்டத்தை கொடுத்தேன். என்னையே அதற்கும் பொறுப்பு எடுத்துக்கச் சொல்லி வெவ்வேறு நாடுகளில் இருக்கும் கம்பெனிகளுடன் தொடர்பு கொண்டு ஒரு ஜாயிண்ட்-வெஞ்சர் (Joint-venture கூட்டுறவு முயற்சி) செட் அப் பண்ணச் சொன்னாங்க. முதல் சில நிறுவனங்களோட தொடர்பு கொள்ள சந்திரசேகரும் கூட வந்தார் ... He was out of depth and he couldn't handle interactions at that level .. என்னையே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்வதா போர்ட் மெம்பர்ஸ்கிட்டே சொன்னார். சண்முகம் சார் தனியா என்னிடம் பேசும் போது அது எதிர்பார்த்ததுதான்னு சொன்னார். ஏற்கனவே செட்-அப் பண்ணின உற்பத்தியையும் விற்பனையும் சந்திரசேகர் பொறுப்பில் விடச் சொன்னார். நான் முழுக்க முழுக்க ஜாயிண்ட்-வெஞ்சர் முயற்சியில் ஈடு பட்டேன். ஒரு ஜப்பானியக் கம்பெனியுடன் ஆறு மாசத்துக்கு முன்னாடி சைன் பண்ணினோம். அந்த முயற்சிக்குன்னு ஒரு தனி தொழிற்சாலை உருவாகி இருக்கு. தேவையான மெஷின்ஸ் எல்லாம் வந்தாச்சு. இன்னும் கொஞ்ச நாளில் முதல் கட்ட உற்பத்தி தொடங்கப் போகுது. ஏற்கனவே அதற்கான விற்பனைத் திட்டத்தையும் நான் போட்டு வெச்சு இருக்கேன். இப்போ எனக்கு ப்ரொமோஷன் கொடுக்க Vice President - Business Development அப்படிங்கற புது போஸ்டை உருவாக்கி இருக்காங்க. ஆனா அதுக்கு முன்னாடி தான் வனிதாவுடன் சந்திரசேகருக்கு இருந்த தொடர்பு எனக்குத் தெரியவந்தது ... "

விஸ்வா தன் வேலையைப் பற்றிப் பேசும் போது அதில் அவன் முழுவதும் மூழ்கி இருப்பதையும் அதில் காட்டிய உற்சாகத்தையும் அமுதா நன்கு உணர்ந்தார்...

அமுதா, "வாழ்க்கையில் உன் குறிக்கோள்கள் என்ன விஸ்வா? I mean what are your life time goals?"

விஸ்வா, "They kept changing ... ஒரு காலத்தில் அர்மியில் ஜெனரல் ஆகணும்ன்னு இருந்தேன். அந்த விபத்துக்குப் பிறகு அது முடியாதுன்னு ஆயிடுச்சு. இப்போ அதே அளவுக்கு ஒரு பொஸிஷனுக்கு வரணும்ன்னு இருக்கேன்"

அமுதா, "அதே அளவுக்குன்னா?"

விஸ்வா, "ஒரு ஜெனரலுக்குக் கீழே பல ஆயிரம் பேர் இருப்பாங்க. தவிற ராணுவத்தில் வரவுன்னு எதுவும் இல்லைன்னாலும் பல நூறு கோடிகள் ஒரு ஜெனரலின் மேற்பார்வையில் செலவு செய்யப் படும். அதே மாதிரி வியாபார உலகத்தில் ஒப்பிட்டுப் பார்த்தா ஒரு பெரிய கம்பெனியின் C.E.O. அந்த அளவுக்கு ஆகணும். அதுக்கு அப்பறம் மேல மேல வளந்துட்டே இருக்கணும்"

அமுதா, "விஸ்வா, அதிகம் பணம் சம்பாதிக்கணுங்கறதுதான் உன் முக்கியக் குறிக்கோளா?"

விஸ்வா, "It has nothing to do with money. வேணுங்கற அளவுக்கு அப்பா, அம்மா, அத்தை மாமா எல்லாம் எங்களுக்கு சேர்ந்து வெச்சு இருக்காங்க. பணத்தை விட அந்த மாதிரி ஒரு பொஸிஷனில் இருக்கும் போது வரும் மதிப்பு, மரியாதை ... புகழ்ன்னு கூட சொல்லலாம்"

அமுதா, "வேற என்ன குறிக்கோள் வெச்சு இருந்தே?"

விஸ்வா, "குழந்தைங்களை நல்லா வளர்க்கணும். அவங்க இஷ்டப் பட்ட துறையில் படிச்சு முன்னுக்கு வர அவங்களை தயார் செய்யணும்"

அமுதா, "வாழ்க்கையை எப்படி வாழணும்ன்னு குறிக்கோள் எதுவும் இல்லையா?"

விஸ்வா, "Of course. வாழ்நாள் முழுக்க சந்தோஷமா உற்சாகத்தோட வாழணும்"

அமுதா, "உன் சந்தோஷம் மட்டும்தான் உன் குறிக்கோளா?"

விஸ்வா, "நோ, நோ ... குடும்பத்தில் எல்லோரின் சந்தோஷம்"

அமுதா, "குடும்பத்தில்ன்னு ஏன் பொதுவா சொல்லறே. வனிதா உன் மனைவி. அவளுக்குன்னு தனி இடம் இல்லையா?"

விஸ்வா, "அவளுக்கு தனி இடம் எதுக்கு? she has been my better half ... என்னோட வாழ்க்கைத் துணை அவ. எங்க ரெண்டு பேர் சந்தோஷமும் வேற வேறன்னு நான் எப்பவும் நினைச்சது இல்லை. அவதான் அப்படி நினைச்சு இருக்கா"

அமுதா, "உண்மையா சொல்லு? What if she does not share all your goals in the same priority?"

விஸ்வா, "என்ன சொல்லறீங்க?"

அமுதா, "இல்லை. குறிக்கோள்ன்னு கேட்டதும் முதலில் உன் வேலையைப் பத்தி சொன்னே. அடுத்ததா உன் சந்தோஷத்தையும் குடும்பத்தின் சந்தோஷத்தையும் பத்தி சொன்னே. வனிதாவின் சந்தோஷம்ன்னு தனியா உனக்கு எந்தக் குறிக்கோளும் இல்லையா?"

விஸ்வா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தான். அவன் எதையோ நினைத்துப் பார்த்து குற்ற உணர்வால் தலை குனிவதை அமுதா நன்கு உணர்ந்தார்.




அமுதா, "சரி, கடந்த நாலு வருஷமா வனிதாவுடன் தினம் எத்தனை மணி நேரம் செலவு செய்வே?"

விஸ்வா, "அப்படி கணக்குப் பார்த்து செலவு செஞ்சது இல்லை. குழந்தைங்க சாப்பிடுவதற்கு முன்னால் வீட்டுக்கு வந்துடுவேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் குழந்தைங்களை தூங்க வைப்போம்."

அமுதா, "அதற்குப் பிறகு?"

விஸ்வா சற்று எரிச்சலுடன், "தூங்கறவரைக்கும் வனிதாகூடதான் இருப்பேன். For God sake! We used to sleep together"

அமுதா, "நான் இன்னும் கொஞ்சம் விளக்கமா கேட்கறேன். குழந்தைங்களை தூங்க வெச்ச பிறகு தினமும் பொதுவா எத்தனை மணி நேரம் வனிதாவுடன் செலவு செய்வே. ஐ மீன் முழிச்சுட்டு இருக்கும் போது?"

விஸ்வா, "Not every day .. but ... நிறைய நாள் ஒரு மணி நேரம் சில சமயம் ... ஐ மீன் முன்னாடி எல்லாம் ரெண்டு மணி நேரம் கூட ... ம்ம்ம் ... அவகூட இருப்பேன். We used have sex"

அமுதா, "ஒரு ஏழு மாசத்துக்கு முன்னாடி? இல்லை. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எவ்வளவு நெருக்கம் இருந்தது?"

விஸ்வா மௌனம் காத்தான் ...

அமுதா, "அந்த விஷயத்தைப் பத்தி என்னுடன் பேச நீ கூச்சப் படறேன்னு தெரியுது. இருந்தாலும் ரெண்டே ரெண்டு கேள்விகளை மட்டும் யோசிச்சு ராம்கிட்டே அதற்கான பதிலை சொல்லு. ஓ,கே?"

விஸ்வா, "என்ன கேள்வி?"

அமுதா, "கடந்த ஒரு வருஷமா சராசரியா வாரத்துக்கு எத்தனை நாள் உங்களுக்கிடையே உடலுறவு இருக்கும்? சராசரியா எத்தனை மணிநேரம் நெருக்கமா இருப்பீங்க?"

விஸ்வாவின் முகம் வெளுத்தது ...

அமுதா, "ராம் என்னைக்கு வர்றார்?"

விஸ்வா, "இன்னைக்கு நைட்டு. நாளைக்கு சாயங்காலம் அவன் கூடப் பேசப் போறேன்"

அடுத்த கட்டத்தை நெருங்கி மேலும் தள்ளிப் போட விரும்பாமல் அதற்கு விஸ்வாவை தயார் செய்ய முனைந்தார் ...

அமுதா, "விஸ்வா, வனிதாவைப் பத்தின ஒரு விஷயம், அவ சின்ன வயசில் நடந்தது, நேத்து தெரிஞ்சுட்டேன்"

விஸ்வா, "என்ன விஷயம்?"

அமுதா, "உன்னைக் கன்வின்ஸ் பண்ணறதுக்காக நான் இதைச் சொல்லலை" என்று தொடங்கி வனிதாவின் சிறு வயதில் நடந்தவற்றைக் கூறினார். முடிவில், "ஸோ, சில விடைகள் கிடைச்சு இருக்கு"

விஸ்வா, "சோ, நீங்க அவ செஞ்சது சரிங்கறீங்களா?"

அமுதா, "இல்லை விஸ்வா. நான் எப்பவும் அவ செஞ்சதை சரின்னு சொல்ல மாட்டேன்"

விஸ்வா, "அப்பறம் என்ன விடைகள்?"

அமுதா, "முதல் முதலில் எதுக்காக அந்த தவறை அவ செஞ்சான்னு உனக்குத் தெரியுமா?"

விஸ்வா, "தெரியும். எனக்கு வேலை வாங்கிக் கொடுக்க"

அமுதா, "உனக்கு எப்படித் தெரியும். உன் கிட்டே எதுவும் வனிதா சொல்லலைன்னு சொன்னாளே?"

விஸ்வா, "From a different source. அதை அப்பறம் சொல்லறேன் முதலில் நீங்க உங்களுக்கு என்ன விடைகள் கிடைச்சு இருக்குன்னு சொல்லுங்க"

அமுதா, "செக்ஸ்ஸும் லவ் பண்ணறது வேற வேற எனும் அந்த நம்பிக்கை அவ முதலில் தவறு செய்ய, I mean, உனக்கு வேலை வாங்கிக் கொடுக்கறதுக்காக, முடிவு எடுக்க உதவி இருக்கு"

விஸ்வா, "எப்படி?"

அமுதா, "உனக்கு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அந்த மனுஷன் அதுக்கு பதிலா அவளை கூப்பிட்டு இருக்கான். விஸ்வாவுக்கு வேலை கிடைக்க அந்த ஆள் கூட செக்ஸ் மட்டும்தான் வெச்சுக்கப் போறேன் அவரை காதலிக்கப் போறது இல்லை, அவரோட அன்னியோன்னியமா இருக்கப் போறது இல்லை அப்படின்னு அவ மனசில் எளிதா முடிவு எடுக்க முடிஞ்சுது"

விஸ்வா, "சாரி மேம், என் மேல், எங்க கல்யாணத்தின் மேல் அவளுக்கு துளியும் மரியாதை இல்லை. அவர் கூடப் போறதை எனக்கு, எங்க கல்யாணத்துக்கு செய்யும் துரோகமா அவ நினைக்கலை"

அமுதா, "இதை அவ கண்ணோட்டத்தில் பாரு. உன் நலனுக்காகன்னு நினைச்சுச் செய்யும் காரியத்தை உனக்கும் செய்யும் துரோகம்ன்னு எப்படி அவளால நினைக்க முடியும்?"

விஸ்வா, "ஸொ, அவ ஒரு விபசாரி மாதிரி அவர்கூடப் படுத்தான்னு சொல்லறீங்களா?"

அமுதா, "ஆமா"

விஸ்வா, "நீங்க சொல்றதை என்னால ஒத்துக்க முடியாது"

அமுதா, "ஏன்?"

விஸ்வா, "அப்படி முடிவு எடுக்காம. அந்த வேலை எனக்கு வேண்டாம்ன்னு என்னை கன்வின்ஸ் பண்ணி இருக்கலாம். அவர் அப்படிக் கேட்டதை என்னிடம் சொல்லி இருந்தா நானே அந்த வேலை வேண்டாம்ன்னு சொல்லி இருப்பேன்"

அமுதா, "உன் கிட்டே சொல்லி இருந்தா நீ நிச்சயம் வேண்டாம்ன்னு சொல்லி இருப்பே. ஆனா அதே சமயம் நீ பட்ட கஷ்டத்தை அவளால் தாங்க முடியலை. அதனால தான் அவ உன்னை திரும்பத் திரும்ப உனக்கு அந்த வேலை வேணுமான்னு கேட்டு இருக்கா"

விஸ்வா மௌனம் காத்தான் ...

அமுதா, "அப்படியும் வனிதா எளிதா சந்திரசேகரின் நிபந்தனைக்கு ஒத்துக்கலை. அவரைப் பத்தி மிஸ்டர் சண்முகம், சுமதி இவங்க ரெண்டு பேர்கிட்டேயும் புகார் பண்ணப் போறேன்னு மிரட்டி இருக்கா. தான் பிற பெண்களோட உறவு வெச்சு இருப்பது அவங்களுக்கு தெரியும் அதனால் நீ புகார் பண்ணறதை சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. மிஸ்டர் சண்முகமே கூட உன்னை படுக்கைக்கு கூப்பிட வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இருக்கார்"

விஸ்வாவின் முகம் இறுகி கண்களில் உக்கிரம் கொப்பளித்தது ..

தொடர்ந்த அமுதா, "அந்த வழியிலும் அவரை ஒப்புக் கொள்ள வைக்க முடியலைன்னு குழம்பி இருந்தா. இவ்வளவு பேசினதுக்குப் பிறகு தன்னால் அவளை வேலையில் வெச்சுட்டு இருக்க முடியாதுன்னு சொல்லி அவளையும் வேலையை விட்டு விலக்கறதா மிரட்டி இருக்கார். அன்னைக்குத் தான் உங்கிட்டே அவ கடைசியா கேட்டு இருக்கா. நீ அவகிட்டே கோபமா பேசி இருக்கே. வேற வழி இல்லைன்னு நினைச்சு ஒத்துகிட்டா"

விஸ்வா, "ஹூம் ..என் கிட்டே சொல்லி இருந்தா அந்த மிரட்டலும் பொய்ன்னு அவளுக்கு ப்ரூவ் பண்ணிக் காண்பிச்சு இருப்பேன்"

அமுதா, "வனிதா உன்கிட்டே எதுவும் சொல்லலைன்னு சொன்னாளே? அவர் மிரட்டினதைப் பத்தி உனக்கு எப்படித் தெரியும்?"

விஸ்வா, "சந்திரசேகர் சொன்னார்"

அதிர்ச்சியுற்ற அமுதா, "உன்கிட்டே சொன்னாரா? எப்போ? எதுக்கு?"

விஸ்வா, "அன்னைக்கு வனிதாவை அவர்கூட பார்த்ததுக்குப் பிறகு நான் வீட்டுக்குப் போகலை. ஆஃபீஸுக்கும் போகலை. க்ளப்பில் ரூம் போட்டுத் தங்கிட்டு இருந்தேன். மூணு நாள் கழிச்சும் நான் ஆஃபீஸுக்கு வரலைன்னதும் பயந்துட்டு என்னைத் தேடி வந்தார்"

அமுதா, "என்ன பயம்?"

விஸ்வா, "அவர் வனிதாகிட்டே சொல்லி இருந்தது சுத்தப் பொய். சண்முகம் சாரும் சுமதி மேடமும் சந்திரசேகரை ரொம்ப ஒழுக்கமானவர்ன்னு நினைச்சுட்டு இருந்தாங்க. ஆனா அவரோட பயம் அவங்களுக்கு தன்னுடைய ஒழுக்கக் கேடு தெரிஞ்சுடும் அப்படிங்கறது மட்டும் இல்லை"

அமுதா, "வேற என்ன பயம்?"

விஸ்வா பெருமூச்சு விட்டபின் தொடர்ந்தான் ..

விஸ்வா, "நான் வேலையை விட்டு விலகினா PML பெரிய நஷ்டத்துக்கு உள்ளாக வாய்ப்பு இருக்கு. அதற்கும் மேலா நான் PMLஇன் போட்டிக் கம்பெனியில் சேர்ந்தா என்னால PMLஐ இழுத்து மூடும் அளவுக்கு கொண்டு வர முடியும். அந்த பயம் தான்"

அமுதா, "அப்படின்னா அவர் சாவு?"

விஸ்வா, "தற்கொலை"

அமுதா, "அதுக்கு வனிதாவோட இருந்த தொடர்புதான் காரணமா?"

விஸ்வா, "அது மட்டும் இல்லை. Also my threat and demand (என் மிரட்டலும் நிபந்தனையும்)" சொல்லி முடித்த போது அவன் கண் கலங்கித் தலை குனிந்தான் ...

அமுதா, "உனக்குச் சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம். சொன்னா மனசில் இருக்கும் பாரம் குறையும்ன்னு தோணுச்சுன்னா சொல்லு"

விஸ்வா, "என்னைத் தனியா சந்திக்கணும்ன்னு கேட்டு மெஸ்ஸேஜ் பண்ணினார். அன்னைக்கு சாயங்காலம் மீட் பண்ணினோம். என் வேலைக்காக வனிதாவை பணிய வெச்சதில் இருந்து நடந்ததை எல்லாம் சொன்னார். திரும்ப வேலையில் வந்து சேருன்னு கேஞ்சினார். போட்டிக் கம்பெனியில் சேரப் போறதோடு நிறுத்தப் போறது இல்லை, PMLஇல் எனக்குப் பழக்கமானவங்களையும் என்னோட கூட்டிட்டுப் போய் PML ஆறே மாசத்தில் இழுத்து மூடும் நிலைக்குக் கொண்டு வரப் போறேன்னு மிரட்டினேன்"

அமுதா, "இப்போவும் அதைச் செய்யத் திட்டம் போட்டு இருக்கியா?"

விஸ்வா, "ம்ம்ஹூம் ... முதலில் அப்படித்தான் திட்டம் போட்டு இருந்தேன். அப்பறம் நானே என் குழந்தை மாதிரி பாவிச்சு விரிவாக்கின கம்பெனியை இழுத்து மூடும் அளவுக்கு செய்ய என் மனம் இடம் கொடுக்கலை"

அமுதா, "அப்பறம் எதுக்கு அவரை அப்படி மிரட்டினே? என்ன நிபந்தனை விதிச்சே?"

விஸ்வா, "அவரை பழி வாங்க அப்படி மிரட்டினேன். என்னால அப்படி செய்ய முடியும்ன்னு அவருக்கு நல்லா தெரியும். நான் படும் கஷ்டத்தை அவரும் அனுபவிக்கணும்ன்னு, வனிதாவை எப்படி பணிய வெச்சாரோ அதே மாதிரி அவரையும் பணிய வைக்கத் திட்டம் போட்டு மிரட்டினேன். நான் PMLஇல் தொடர்ந்து வேலையில் இருக்கணும்ன்னா இனிமேல் சுமதி மேடம் எனக்கு வைப்பாட்டியா இருக்கணும்ன்னு கண்டிஷன் போட்டேன். அழுது கெஞ்சினார். நான் விட்டுக் கொடுக்கலை. கேவலமா திட்டி அனுப்பிட்டேன். அடுத்த நாள் காலைல அவர் இறந்துட்டதா செய்தி வந்தது"

வயதில் விஸ்வாவை விட சில வருடங்கள் மூத்தவளானாலும் பின் இருபதுகளில் இருப்பதைப் போன்ற தோற்றத்துடன் இருந்த சுமதியை அமுதா நினைவு கூர்ந்தார். உடன், அவளது உடற் தோற்றத்தை விட அவள் தந்தையுடன் தொடங்கிய பள்ளிக்கூடமும் அதனை ஒட்டிய கல்லூரியும், அவைகள் பாமர மக்களுக்கு ஏறக்குறைய இலவசமாகக் கல்வி அளிப்பதைப் பற்றியும் நினைவு கூர்ந்தார். பாமர மக்கள் கோவில் கட்டிக் கும்பிடும் சுமதிக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையையும் அமுதாவின் நினைவுக்கு வந்தது ...

முகத்தில் வெறுப்பை உமிழ்ந்த அமுதா, "அதுப்புப் பிறகுதான் விவாகரத்து செஞ்சுக்கணும்ன்னு ஞானோதயம் வந்ததாக்கும்?"

விஸ்வாவின் கண்ணீர் ஊற்றெடுத்து அவன் கன்னத்தை நனைத்தது ..

விஸ்வா, "இல்லை .. அவர் இறந்து ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு நாள் சாயங்காலம் நான் தங்கி இருந்த ரூமுக்கு சுமதி மேடம் வந்தாங்க ... "


அன்று நடந்தவை ...

மாலை ஏழு மணியளவில், விஸ்வா பெங்களூர் க்ளப்பில் அவன் தங்கி இருந்த அறையை நெருங்கும் போது ... அந்த அறை வாசலில் சுமதி நின்று இருந்தாள் ...

விஸ்வா, "மேடம் ... "

சுமதி, "உள்ளே போய் பேசலாம் வா விஸ்வா"

அறைக்குள் நுழைந்த பிறகு அங்கு இருந்த நாற்காலிகளில் எதிரெதிரே அமர்ந்தனர் ..

சுமதி, "விஸ்வா, PML எங்க அப்பா பார்த்துப் பார்த்து உருவாக்கினது. நம் முதல் ஃபாக்டரியில் ஒவ்வொரு மெஷிணும் அவர் நேரடி மேற்பார்வையில் நிர்மாணிக்கப் பட்டது. ஒரு அளவுக்கு மேல் வளர்ச்சி இல்லாமல் இருந்தாலும் நல்ல லாபத்தில் ஓடிட்டு இருந்ததால் அப்படியே இருக்கட்டும்ன்னு இருந்தோம். அதாவது நீ வேலைக்கு சேரும் வரை"

விஸ்வா, "தெரியும் மேடம்"

சுமதி, "ஒரு காலத்தில் எங்க அப்பாவுக்கு நிறைய சொத்து இருந்தது. ஆனா அவரோட கவனக் குறைவை பயன் படுத்தி அதில் பாதிக்கும் மேல் மத்தவங்க சுரண்டி சாப்பிட்டுட்டாங்க. இப்போ பாக்கி இருக்கும் இருநூறு கோடிக்கும் மேல் பொரும் ரியல் எஸ்டேட்ஸ் கோர்ட் கேஸில் இழுத்துட்டு இருக்கு. ஸ்கூலில் இருந்தும் காலேஜில் இருந்தும் ஒரு நயாபைசா நாங்க எடுத்துக்கறது இல்லை. இன்னைக்கு எங்க குடும்பத்துக்கு ஒரே வருமானம் PML மூலமாத்தான். எங்க குடும்பம் மட்டும் இல்லை இதில் வேலை செய்யும் நூத்துக் கணக்கான தொழிலாளிகளின் குடும்பங்களும் PMLஐ நம்பி இருக்கு"

விஸ்வா, "I know that too"

சுமதி, "விஸ்வா, நான் என் வீட்டுக்காரரை ஒழுங்கா கவனிச்சுக்கலை. I mean sexually. More over, அவருக்குள்ளே இப்படி ஒரு நயவஞ்சக குணம் இருக்குன்னும் எனக்குத் தெரியலை. இல்லைன்னா மத்த பெண்ணைத் தேடிப் போக விட்டு இருக்க மாட்டேன். அந்த மனுஷனும் உன் வாழ்க்கையையும் இப்படி நரகமாக்கி இருக்க மாட்டார். உன்னை வேலையில் சேர்க்க அவர் போட்ட நிபந்தனைக்கு வனிதா ஏன் அப்படி முட்டாள்தனமா ஒத்துகிட்டான்னு தெரியலை. ஆனா ஏழு மாசத்துக்கு முன்னாடி மறுபடியும் அவங்க ஒண்ணு சேர்ந்ததுக்கு நான் தான் காரணம்"

விஸ்வா, "என்ன சொல்லறீங்க?"

சுமதி, "டெல்லியில் நடந்த அந்த ட்ரேட் ஃபேரில் கலந்துக்க PMLஇன் முக்கியப் பிரதிநிதிகளா நீயும் அவரும் போறதா இருந்தது. நீ வனிதாவையும் கூட அழைச்சுட்டுப் ரப் போதா அவர்கிட்டே சொன்னே. 
என்னையும் டெல்லிக்கு அவர் வரச் சொன்னார். எப்பவும் ஸ்கூல் காலேஜுன்னு இருக்கியே நாலஞ்சு நாள் ஜாலியா இருக்கலாம்ன்னு ரொம்ப கெஞ்சிக் கேட்டுப் பார்த்தார். நான் போகலை. கடைசி நிமிஷத்தில் ஜப்பான் கம்பெனிக்காரங்க ஒரு டிஸ்கஷனுக்குக் கூப்பிடதால் நீயும் அதை முடிச்சுட்டு நேரா டெல்லி வர்றதா ப்ளான் பண்ணி சிங்கப்பூருக்குக் கிளம்பிப் போனே. முதல் ஒண்ணு ரெண்டு நாள் ட்ரேட் ஃபேரில் எங்க வீட்டுக்காரருக்கு உதவியா இருக்க வனிதாவை டெல்லிக்கு அனுப்பினே. அந்த ட்ரேட் ஃபேர் முடியற வரைக்கும் உன்னால் சிங்கப்பூரை விட்டு வர முடியலை. அந்த சமயத்தில்தான் என் வீட்டுக்காரர் வனிதாவை மறுபடியும் தன் ஆசைக்கு அடி பணிய வெச்சு இருக்கார். முதல் தடவை ஒயின் ஊத்திக்கொடுத்துக் கூட்டிட்டுப் போனாராம். அதுக்குப் பிறகு கூப்பிட்டப்ப அவளே வந்தான்னு சப்பைக் கட்டு கட்டி இருக்கார். இதை எல்லாம் என் முகத்துக்கு நேரா சொல்ல பயப்பட்டு கோழைத் தனமா கடுதாசி எழுதி வெச்சுட்டுக் குடிச்சுட்டு காரை ஹைவேல எடுத்துட்டுப் எதிரில் வந்த லாரியில் மோதி இருக்கார்."

விஸ்வா கண்கள் குளமாக, தொண்டை கரகரக்க "I am so sorry .. ஆனா அது மட்டும்தான் அவர் தற்கொலை செஞ்சுக்கக் காரணம் இல்லை"

சுமதி, "தெரியும். அதையும் எழுதி வெச்சுட்டுத் தான் போயிருக்கார். துளிகூட நன்றி இல்லாம கம்பெனிக்கு நாயா உழைக்கும் உனக்கு துரோகம் செஞ்சு இருக்கார். நீ பதிலுக்கு அப்படிக் கேட்டதில் என்ன தப்பு?"

விஸ்வா வாயடைத்துப் போய் நின்று இருந்தான்.

சுமதி, "அவர் உயிரோடு இருந்தப்ப அவருக்கு நான் கொடுத்து இருக்க வேண்டிய அந்த சுகத்தை நான் உனக்குக் கொடுக்கத் தயாரா இருக்கேன். செத்துப் போன அந்த நன்றி கெட்ட நயவஞ்சகனுக்காக இல்லை. PMLஐ நம்பி இருக்கும் குடும்பங்களுக்காக. முப்பத்தி அஞ்சு வயசானாலும் நான் இன்னும் இளமையாத்தான் இருக்கேன். உனக்கு வேணுங்கற வரைக்கும் நான் உனக்கு வைப்பாடியா இருக்கத் தயார். ஏற்கனவே கம்பெனியில் எல்லாம் ஸ்தம்பிச்சுப் போய் இருக்கு. I don't want to delay further. இப்போதைக்கு இந்த ரூம் ஓ.கே. அப்பறம் அந்த கெஸ்ட் ஹவுஸை எப்பவும் காலியா வெச்சுக்கலாம். அங்கே அவர் வாரம் ஒரு முறை வனிதாகூட இருந்ததா சொல்லி இருக்கார். ஆனா உனக்கு எப்போ நான் வேணும்ன்னாலும் சரி. ஒரு ஃபோன் கால் போதும். அடுத்த அரை மணி நேரத்தில் கெஸ்ட் ஹவுஸில் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். சரியா?" என்றபடி தன் முந்தானையைப் பொருத்தி இருந்த பின்னைக் கழட்ட முற்பட்டாள்.

அவள் காலடியில் மண்டியிட்டு விஸ்வா கதறினான், "Oh, please, please just kill me"

தன் காலடியில் விழுந்தவனை இழுத்து அவன் தலையை தன் மடிமேல் சாய்த்தபடி சுமதியும் அழுது குலுங்கினாள் ...

இருவரின் அழுகையும் அடங்கிய பிறகு ...

சுமதி, "எத்தனை நாளைக்கு இப்படி வெளியே தங்கிட்டு தினமும் குடிச்சு உன் உடம்பை கெடுத்துக்கப் போறே? அங்கே வனிதாவும் குழந்தைங்களும் உனக்காக தவிச்சு ஏங்கிட்டு இருக்காங்க."

விஸ்வா இல்லை என்று தலையை அசைத்தான் ...



சுமதி, "நீ படும் வேதனை எனக்குப் புரியுது. ஆனா, வனிதாவைப் பார்த்தா அதைவிட ரொம்ப பாவமா இருக்கு விஸ்வா. என் வீட்டுக் காரர் செஞ்ச தப்புக்கு உடந்தையா இருந்தது அவ தப்புதான் ஒத்துக்கறேன். ஆனா இப்போ அவ நடைப் பிணமா இருக்கா. உன் குழந்தைங்களையும் நினைச்சுப் பாரு"

விஸ்வா, "எந்த விதத்தில் அவங்க விஷயம் எனக்கு தெரிய வந்ததுன்னு உங்களுக்குத் தெரியாது. அன்னைக்கு நான் பார்த்ததையும் கேட்டதையும் என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது"

சுமதி, "சரி, அதுக்காக இப்படி எதைப் பத்தியும் எந்த முடிவும் எடுக்காம இருப்பது சரியா? ஓண்ணா சேர்ந்து வாழ விருப்பம் இல்லைன்னா அதுக்கான ஏற்பாடுகளை செய். அப்படி முடிவு எடுக்க முடியலைன்னா இங்கே இருப்பதற்கு பதிலா மறுபடியும் வீட்டுக்குப் போய் குழந்தைகளோடு நேரம் செலவு செய். என்ன முடிவு எடுப்பதுன்னு உனக்கே தோணும்"



No comments:

Post a Comment