Saturday, September 5, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 8

கட்டிலில் துடித்த மான்சியைப் பார்க்க சத்யனுக்கு பரிதாபமாக இருந்தது, என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்,, இப்படியொரு நிலையை அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை,, அந்தப் பெண்ணையும் அவள் வயிற்றில் இருந்த குழந்தையையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான் ஆனால் எப்படி என்பதுதான் புரியவில்லை,, சிறு குழந்தையை கையிலெடுத்துக் கூட பழக்கம் இல்லாதவன், இப்போது பிள்ளைபெறத் துடிக்கும் ஒரு தாய்க்கு என்ன உதவி முதலில் தேவையென்று கூட தெரியாமல் விழிபிதுங்கி நின்றான்

நேரம் ஆகஆக கட்டிலில் கிடந்த மான்சியின் வயிறு எடை குறைந்து சுருண்டு கீழே இறங்குவது போல் இருந்தது,, கால்களை விரித்து குத்தங்காலிட்டு படுத்தவாறு அரற்றிக் கொண்டிருந்தவள் சத்யனைப் பார்த்து “ அய்யோ நீங்க வெளியே போயிடுங்களேன்,, நான் இப்படியே செத்துப்போறேன்” என்று அலறினாள்



சத்யனால் அதற்க்கு மேல் பொறுக்க முடியவில்லை வேகமாக அவளை நெருங்கி அவள் தலையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டு “ அய்யோ வேனாம்மா அப்படியெல்லாம் சொல்லாதே, நான் உன்னைவிட்டு எங்கயும் போகமாட்டேன்,, உனக்கு நல்லாயிடும்ப் பாரு” என்று அவளுக்கு கண்ணீருடன் ஆறுதல் கூறியவன் ஏதோ முடிவுடன் அவள் தலையை மறுபடியும் தலையணையில் வைத்துவிட்டு கட்டிவிட்டு எழுந்து நின்று அவளை உற்றுப்பார்த்தான்

இப்போது தாய்வேறு பிள்ளை வேறாக ஆக்கவேண்டும்,, அதை நான்தான் செய்யவேண்டும்,, அதுக்கு யாரிடம் யோசனை கேட்பது என்று சற்றுநேரம் யோசித்தவனுக்கு அவனது அண்ணி பத்மாவின் ஞாபகம்தான் உடனே வந்தது,, சத்யனுக்கு,, சத்யன்மீது முழுமையான அன்பு வைத்திருப்பவள், எப்போதும் அவன் நலன் விரும்பும் சகோதரியை போன்றவள்,

சத்யன் மறுயோசனையின்றி உடனே தனது மொபைலை எடுத்தான்,, ஆண்டவன் இந்த வகையில் தனது கருணையை சத்யனுக்கு காட்டினார்,, மொபைலில் டவரும் சார்ஜ்ம் முழுமையாக இருந்தது, பத்மாவின் நம்பருக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான், ஒருமுறை முழுவதுமாக ரிங் போய் கட்டானது,

சத்யனுக்கு அய்யோ என்று அலறவேண்டும் போல இருந்தது, உதட்டை கடித்து அடக்கிக்கொண்டு மறுபடியும் முயன்றான், இரண்டாவது ரிங்கிலேயே எடுத்தாள் பத்மா

“ சொல்லு சத்யா,,கிச்சன்ல வேலையாயிருந்தேன்” என்றாள் உற்சாகமாக

இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த மூச்சை பெரிதாக வெளியே விட்டவன்,, அவசரமாக அவளிடம் பேசினான் “ அண்ணி நான் சொல்றதை கவனமா கேளுங்க,, இப்போ நான் ஊட்டியில இருக்கேன்,, இங்கே ஒரு பொண்ணுக்கு தலை பிரசவம், ஆஸ்பிட்டல்க்கு கொண்டு போகமுடியாத நிலை, மழை பயங்கரமா கொட்டுது, அவளும் நானும் மட்டும் தான் இருக்கோம்,, அவளுக்கு இன்னிக்குத்தான் பிரசவ தேதி,, வலியால துடிக்கிறா,, எனக்கு என்னப்பண்றதுன்னு புரியலை அதான் உங்களுக்கு போன் பண்ணேன்,, நான் என்னப் பண்ணனும்னு தயவுசெஞ்சு சீக்கிரமா சொல்லுங்க அண்ணி ப்ளீஸ், அவ ரொம்ப துடிக்கிறா” என்று சத்யன் பதட்டமாக கூற

“ அய்யய்யோ ஊட்டியா அங்கே இப்போ நிலைமை ரொம்ப மோசமா இருக்கே சத்யா,, யாருப்பா அந்தப் பொண்ணு,, வேற யாரும் துணைக்கு இல்லையா? ” என்று பத்மா கேட்க

“ அண்ணி பீ சீரியஸ் அண்ணி, அதெல்லாம் நான் உங்களுக்கு பிறகு சொல்றேன்,, அவளுக்கு ரொம்ப மோசமா இருக்கு, நான் என்னப் பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க சீக்கிரம் அண்ணி ” என்று சத்யன் நிலைமையை உணர்த்த,, அதற்கேற்றாற்ப்போல் மான்சியின் கதறலும் ஒலித்தது,

பத்மாவுக்கு நிலைமையின் தீவிரம் புரிய,, ஒருசில நிமிடம் யோசித்துவிட்டு “ சத்யா நீ ஹெட்போன் வச்சிருந்தா மொபைலில் கனெக்ட் பண்ணி காதுல வச்சுகிட்டு செல்லை உன் பாக்கெட்ல போடு,, அதன்பிறகு நான் சொல்றமாதிரி செய்” என்று சொல்ல

சத்யன் ஓடிச்சென்று தனது பேக்கில் இருந்து ஹெட்போன் எடுத்து மொபைலில் கனெக்ட் பண்ணி காதில் மாட்டினான்,, “ ஹெட்போன் மாட்டிட்டேன் அண்ணி சொல்லுங்க” என்றான்


“ நான் விடாமல் சொல்றேன் அது மாதிரி செய்,, மொதல்ல பாத்ரூம் போய் உன் கைகளை சோப் போட்டு நல்லா கழுவு, அப்புறம் பாத்ரூம் ஹீட்டரையும் போட்டுட்டு வா,,ம் சீக்கிரம்” என்றாள்

உடனே அதை செய்துவிட்டு “ கழுவிட்டேன் அண்ணி” என்றான்

“ சரி அந்த பொண்ணுகிட்ட பிரசவத்துக்குன்னு ஏதாவது பழைய காட்டன் புடவைகள் எடுத்து வச்சிருக்காளான்னு கேளு,, அப்புறம் பிளேடு, இல்ல கத்தி எதாவுது இருந்தா பக்கத்தில் வச்சுக்க ” என்றாள்

சத்யன் துடித்துக்கொண்டிருந்த மான்சியிடம் போய் “ மான்சி பழைய சேலை ஏதாவது இருக்கா?” என்று கேட்க,, அவள் கட்டிலுக்கடியில் கையை காட்டினாள்,,

சத்யன் குனிந்து அந்த பையை வெளியே எடுத்தான்,, அதில் சுத்தமாக சலவைசெய்து மடித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாயல் சேலைகள் இருந்தது, கிச்சனுக்கு ஓடி பிளேடு தேடி கிடைக்காமல் சிறு கத்தி ஒன்ற எடுத்து வந்தான் “ அண்ணி சலவை பண்ணி அஞ்சு சேலை இருக்கு, கத்தியும் எடுத்துக்கிட்டேன் ” என்று பத்மாவிடம் சொன்னான்

“ சரி ஒரு சேலையை நாலா மடிச்சு தரையில் விரி,, இன்னொரு சேலையை எட்டு துண்டா கிழி,, இன்னொரு சேலையை பக்கத்துல வச்சுக்கோ,, பாத்ரூம்ல ஒரு பக்கெட் சுடுதண்ணி பிடிச்சுட்டு வந்து பக்கத்துல வச்சுக்க,, அந்த பொண்ணை தூக்கி கீழே விரிச்ச சேலையில் இடுப்பு வர்ற மாதிரி படுக்கவை” என்று பத்மா சரமாரியாக உத்தரவிட

சத்யன் எல்லாவற்றையும் கவனமாக கரெக்டாக செய்தான்,, மான்சியை தூக்கி வந்து கீழே இருந்த புடவையில் இடுப்புக்கு கீழே புடவை இருக்குமாறு படுக்க வைத்தான்,, பிறகு பாத்ரூமில் இருந்து பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டான்,

“ எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன் அண்ணி”

“ சரி இப்போ அந்த பொண்ணோட சேலையை அவுத்துட்டு ஜாக்கெட்டோட கீழ்பகுதி இரண்டு கொக்கியை கழட்டு” என்றாள் பத்மா

சத்யன் சிறிது தயக்கத்துடன் மான்சியை பார்த்தான்,, அவள் வலியை பொறுக்கமுடியாமல் தரையில் கால்களை தட்டிக்கொண்டு தரையில் எதையும் பற்றமுடியாமல் கைகளால் துழாவிக்கொண்டு இருந்தாள்

“ என்ன சத்யா நான் சொன்னதை பண்ணிட்டயா?” என்று பத்மா பதட்டத்துடன் அதட்ட

“ இதோ அண்ணி” என்று சத்யன் மான்சியின் கொசுவத்தில் கைவைத்தான்

“ இதோபார் சத்யா, இப்போ சங்கடப்படவோ கூச்சப்படவோ, நேரமில்லை, உன் முன்னாடி இருக்குறது இரண்டு உயிர், அதைமட்டும் மனசுல வச்சுகிட்டு நான் சொன்னதை செய்” என்று பத்மா கூற

சத்யன் தன் கண்களை மூடினான், மூடிய கண்களில் கண்ணீர் வழிந்தது,, வெகுநாட்கள் கழித்து அவன் இதயம் தெய்வத்தை துணைக்கழைத்தது,, எந்த கெடுதலும் நேராமல் தாயையும் குழந்தையையும் காப்பாற்று என்று மனதார வேண்டினான்,,

கண்களை திறந்து அவசரமாக மான்சியின் புடவையை அவிழ்த்து பக்கத்தில் போட்டுவிட்டு ரவிக்கையின் கீழ் ஊக்குகளை விடுவித்தான், “ பண்ணிட்டேன் அண்ணி” என்று பத்மாவுக்கு தகவல் சொன்னான்

“ சரி அவளோட பாவாடையை லூஸ் பண்ணி சுருட்டி வயித்துக்கு மேலே போடு,, அப்புறம் இரண்டு கால்களையும் குத்தங்கால் மாதிரி வச்சு விரிச்சு வை சத்யா,, எவ்வளவு வலி வந்தாலும் அவ காலை குறுக்கி வைக்காம கவனமா பாத்துக்க,, அவ கால்களுக்கு நடுவே நீ மண்டியிட்டு உட்கார்,, வலி வர்ற சமயத்தில் டாய்லெட் போறதுக்கு முக்குற மாதிரி கீழ் வழியா முக்கச் சொல்லி அவகிட்ட சொல்லு” என்றாள் பத்மா


அவள் சொன்னதை செய்துவிட்டு எக்கி மான்சியைப் பார்த்து “ மான்சி ஒவ்வொரு வலிக்கும் டாய்லெட் போற மாதிரி முக்கிவிடனும் மான்சி, நல்லா அழுத்தமா பண்ணனும்” என்று சொன்னான்

“ ம்ம்” என்றவள் வலி வரும்போதெல்லாம் முக்கிவிட்டாள்,, சரியான ஒத்துழைப்பு இல்லையென்றால் பிரசவம் சிக்கலாகிவிடும் என்று அவளுக்கு புரிந்தது, கைகளை தரையில் ஊன்றி எக்கி மூச்சை அடக்கி உள்ளே அழத்தமாக விட்டாள்

“ சத்யா அவளோட பெண்ணுறுப்பில் ஏதாவது மாற்றம் தெரியுதான்னு கவனமா எனக்குச் சொல்லு,, அப்பதான் நான் உன்னை டைரக்ட் பண்ணமுடியும்” என்று பத்மா சொல்ல

“ சரி அண்ணி” என்றவன் பிள்ளையை வெளியேத் தள்ள துடிக்கும் மான்சியின் பெண்மையை பார்த்தான்,, விரிந்து மலர்ந்து குழந்தையை வெளியே தள்ள தயாராக இருந்தது, “ அண்ணி விரிஞ்சு இருக்கு உள்ளே இருந்து நீரும் பிளட்டும் கலந்து வருது” என்று பதட்டமாக சத்யன் கூற

“ சரி சரி இப்போ வலி வரும்போது வேகமா புஷ் பண்ணச்சொல்லு அவளை, சத்யா கவனமா இரு” என்று பத்மா எச்சரிக்கை செய்ய

சத்யன் மான்சியின் கால் முட்டியில் தட்டி “ மான்சி வேகமா புஷ் பண்ணு மான்சி,, இன்னும் வேகமா” என்று பதட்டமாக குரல் கொடுக்க

மான்சி அடுத்தடுத்து தொடர்ச்சியாக வந்த வலிகளை முக்கி தனது தொடையிடுக்கில் விட, அவள் பெண்மையின் துவாரம் மேலும் விரிந்தது
சத்யன் எதிர்பாராத தருணத்தில் பனிக்குடம் உடைந்து பனிநீர் வந்து சத்யனின் முகத்தில் அடிக்க,, பக்கத்தில் இருந்த மான்சியின் புடவையில் முகத்தை துடைத்த சத்யன் திகைப்புடன் பத்மாவிடம் சொன்னான்,

“ ஓ பனிக்குடம் உடைஞ்சிட்டது,, அப்போ குழந்தை சீக்கிரம் வந்துரும்” என்று பத்மா சொல்லும்போதே மான்சி ஒரு பெரிய வலியை முக்கிவிட அவள் பெண்மை விரிந்து குழந்தையின் தலை வெளியே துருத்தியது,

பதட்டமான சத்யன் “ அண்ணி குழந்தையோட தலை வெளியே வரப்பாக்குது,, இப்போ என்ன செய்ய” என்றான், அவனது கண்ணீர் குரலில் தெரிந்தது

“ சரி சத்யா அழாதே ஒன்னும் ஆகாது,, ‘ திக்கற்றவருக்கு தெய்வம்தான் துணை,, நீ பதட்டமில்லாம அவ முக்குற சமயத்தில் குழந்தையோட தலையை பிடிச்சு மெதுவா இழு” என்றாள் இப்போது பத்மாவின் குரலிலும் கண்ணீர்

மான்சி முகத்தில் ரத்தத்தின் சிவப்பு, கண்களை இறுக்கி மூடி மூச்சை ஒரே வேகத்தில் உள்ளே அழுத்தி முக்க, குழந்தையின் தலை முழுவதும் வெளியே வந்தது,, சத்யன் நடுங்கும் கைகளால் குழந்தையின் தலையைப் பிடித்து வெளியே இழுத்தான்,, பொலக் என்ற சப்தத்துடன் குழந்தை வெளியே வந்தது

சத்யனின் கண்களில் கட்டுக்கடங்காமல் கண்ணீர் வழிய “ அண்ணி குழந்தை வெளியே வந்துடுச்சு” என்றான், அவன் இரண்டு கைகளிலும் மான்சியின் உதிரம் வழிந்தது




“ ஓ சரி இப்பத்தான் ரொம்ப பாஸ்ட்டா நீ வேலை செய்யனும்,, குழந்தையை அந்த புடவையிலேயே போடு,, அந்த கத்தியை வென்னீர்ல முக்கி கழுவிட்டு குழந்தையோட தொப்புள்கொடியை தொப்புள்ல இருந்து ஐந்து அங்குலம் விட்டு கட்ப் பண்ணு, உடனே அதை முடிச்சு போடு,, என்றாள் வேகமாக

சத்யன் நடுங்கும் கைகளால் தொப்புள்கொடியை கட் பண்ணி அதில் வழிந்த ரத்தத்தை பயத்துடன் பார்த்தவாறு முடிச்சுப்போட்டான் “ முடிச்சு போட்டுட்டேன் அண்ணி” என்றான்

“ சரி இப்ப சொல்லு என்ன குழந்தை பிறந்திருக்கு” என்று சந்தோஷமாக பத்மா கேட்க

“ ஆண் குழந்தை அண்ணி” என்றான் சந்தோஷத்தில் பூரித்த குரலில்

“ சரி ரொம்ப சந்தோஷம்,, இப்போ ஒரு நல்ல புடவையை எடுத்து குழந்தையை நல்லா சுத்தி கீழ வச்சுட்டு மான்சியை கவனி”

ஒரு புடவையை எடுத்து மூச்சுக்கு வழிவிட்டு குழந்தையை சுற்றி தரையில் வைத்துவிட்டு “ சொல்லுங்க அண்ணி என்ன செய்யனும்” என்றான் அவன் குரலில் தைரியம் வந்திருந்தது

“ சத்யா இப்பத்தான் நீ அருவருப்பு படாமல் செய்யனும்” என்றாள் பத்மா

“ சொல்லுங்க அண்ணி,, எனக்கு அதெல்லாம் இல்லை” என்றான் சத்யன்

“ இப்போ குழந்தை வெளியே வரும்போது கூடவே நஞ்சுக்கொடியும் வந்திருக்கும் அதையும்,, அப்புறம் அவளோட அடிவயிற்றில் கைவைச்சு லேசா அழுத்து,, நிறைய உதிரம் வெளியேறும், அதையெல்லாம் சேர்த்து அந்த கீழே விரித்த புடவையோடு சேர்த்து சுருட்டி எடு,, அதை சுருட்டி ஒரு வேஸ்ட் பக்கெட்டில் போட்டு வை எல்லாம் முடிஞ்சதும் காலையில அதை எடுத்துட்டுப் போய் தோட்டத்தில் எங்காவது புதைச்சுடு, நாய் நரி எதுவும் இழுத்துட்டுப் போய்ட்டா குழந்தைக்கு ஆகாது,, சத்யா இப்போ கிழிச்சு வச்ச துணியால வென்னீர்ல நனைச்சு அவளோட இடுப்புக்கு கீழ எல்லாத்தையும் சுத்தமா துடைச்சிட்டு, இன்னொரு துணியை எடுத்து நாலா எட்டா மடிச்சு அவ பெண்ணுறுப்பில் வச்சு மூடி கால் ரெண்டையும் சேர்த்து நீட்டிவிடு, இப்போ பாவடையை இழுத்துவிடு” என்று தெளிவாக பத்மா சொல்ல

சத்யன் கவனமாக அருவருப்பின்றி எல்லாவற்றையும் செய்தான், பிள்ளை பெற்ற அடையாளமே இல்லாமல் அவளை சுத்தப்படுத்தி மான்சியின் கால்களை நீட்டி பாவாடையால் மூடினான் “ முடிச்சுட்டேன் அண்ணி’ என்று பத்மாவுக்கு தகவல் சொன்னான்

“ அந்த பக்கெட் தண்ணிய கொட்டிட்டு வேற சுடுதண்ணி பிடிச்சுட்டு வந்து வை ,, அப்புறம் அவளை தூக்கி கட்டில்ல படுக்க வச்சுட்டு கம்பளியால அவளை நல்லா மூடி வை ” என்றாள் பத்மா

சத்யன் தண்ணிரை கொட்டிவிட்டு வேறு வென்னீர் பிடித்து வந்து வைத்துவிட்டு மான்சியை தூக்கி கைகளில் ஏந்தினான், கைகளில் ஏந்தியதுமே குழந்தையின் அழுகுரல் கேட்டது, சத்யனின் முதுகுத்தண்டில் ஒரு சிலிர்ப்பு ஓட கீழே இருந்த குழந்தையைப் பார்த்தான்,, அரை மயக்கமாக மான்சியின் உடலிலும் பரவலாக ஒரு சிலிர்ப்பு ஓடியது, ஆனால் கண்களை திறக்கவில்லை, “ அண்ணி குழந்தை அழுவுது” என்று சத்யன் குரலில் ஒரு சிலிர்ப்புடன் பத்மாவிடம் கூற

“ ம்ம் எனக்கும் கேட்குது சத்யா,, நீ சீக்கிரமா அந்த பொண்ணை பெட்டுல படுக்க வச்சிட்டு குழந்தையை வந்து தூக்கு” என்று பத்மா அவசரப்படுத்த,

சத்யன் மான்சியை கட்டிலில் படுக்கவைத்து விட்டு, கம்பளியை எடுத்து அவளை நன்றாகப் போர்த்தி விட்டான், பிறகு வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு “ குழந்தைக்கு என்ன அண்ணி செய்யனும்” என்று பத்மாவை கேட்டான்

“ பக்கெட்ல இருந்த தண்ணியில துணியை நனைச்சு குழந்தையை ஜாக்கிரதையா தொடைச்சுவிடு, முக்கியமா மூக்கு கண் வாயெல்லாம் சுத்தமா மெதுவா துடைச்சு விடு, முக்கியமா குழந்தையின் கழுத்துக்கடில கைவிட்டு தூக்கு, அப்புறம் வேற புடவையில சுருட்டி மான்சி பக்கத்துல படுக்க வை” என்று பத்மா சொல்ல


சத்யன் துணியை நனைத்து குழந்தையை சர்வ ஜாக்கிரதையாக துடைத்தான், குழந்தையின் மேல் இருந்த பிசுபிசுப்பு போய் குழந்தை சுத்தமானதும் பையில் இருந்த வேறொரு புடவையை எடுத்து குழந்தையை சுற்றி மான்சியின் கம்பளிக்குள் படுக்க வைத்தான், நிமிர்ந்த சத்யன் குழந்தையையும் தாயையும் பார்த்தான், குழந்தை இன்னும் கண்ணை திறக்காமல் இருந்தது, மான்சி பிள்ளை பெற்ற களைப்பில் அரை மயக்கமாக உறங்கிக்கொண்டு இருந்தாள்

அவள் முகத்தில் கிடந்த கற்றை கூந்தலை ஒதுக்கிவிட்டு, நீளமாய் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டான், இந்த ஒருநாளில் அவன் வாழ்வில் எத்தனை எதிர்பாராத மாற்றங்கள், இன்று காலையில் ஹோட்டல் ரூமில் கண்விழித்ததற்கும் இப்போது ஊட்டியில் இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம், ஆனால் இன்று காலை அவன் மனதில் இருந்த வெறுமை இப்போது இல்லை, இப்போது அவன் மனதில் ஒரு நிறைவு, உடலில் ஒரு சிலிர்ப்பு, மனம் உடலும் லேசாகி விண்ணில் பறப்பது போன்றதொரு உணர்வு

“ என்ன சத்யா குழந்தையை பாத்துக்கிட்டு அப்படியே நின்னுட்டியா? மொதல்ல நீ போய் சுத்தமா குளி,, அப்புறம் வந்து அவளுக்கு சாப்பிட ஏதாவது ஆகாரம் தயார் பண்ணு, குழந்தையை பால் குடிக்க வைக்கனும், நீ குளிச்சிட்டு வந்து எனக்கு கால் பண்ணு, நான் போய் ஒரு கப் காபி குடிச்சிட்டு வர்றேன்” என்ற பத்மா இணைப்பை துண்டிக்க

சத்யன் மொபைல் ஹெட்போன் எல்லாவற்றையும் தனது பேக்கில் வைத்துவிட்டு, பேக்கில் இருந்து சோப் டவல் ஒரு ஷாட்ஸ் டீசர்ட்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போனான், இன்று காலையில் இருந்து மூன்றாவது முறையாக குளிக்கப் போகிறான்

வென்னீரை திறந்துவிட்டு நிதானமாக குளித்தவன், வெளியே குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வேகமாக குளித்துவிட்டு உடையை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான்,
அவசரமா கட்டிலை நெருங்கி கம்பளியை விலக்கி குழந்தையைப் பார்த்தான், குழந்தையின் அழுகை வேகமானது, சத்யன் ஒன்றும் புரியாமல் மான்சியை பார்க்க அவளும் விழித்துக் கொண்டிருந்தாள்,

சிரமமாய் கண்திறந்து சத்யனைப் பார்த்து “ என்னா பாப்பா பொறந்திருக்கு” என்றாள்

சத்யனின் முகம் சிரிப்பில் மலர “ ம்ம் பையன் தான், கொஞ்சம் க்ராஸா திரும்பி பாரு உன் பக்கத்துல தான் இருக்கான்” என்றான்

மான்சி மெதுவாக ஒருக்களித்து திரும்பி தன் பக்கத்தில் இருந்த குழந்தையைப் பார்த்து, கம்பளிக்குள் இருந்து கையை எடுத்து குழந்தையின் முகத்தை வருடினாள், அவள் தொட்டதும் குழந்தையின் அழுகை நின்று மறுபடியும் ஆரம்பித்தது, சத்யனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ பாப்பா ஏன் அழுவுது, என்ன பண்றது” என்று அப்பாவியாக கேட்டாள்,, அவளுடைய பத்தொன்பது வயதுக்கு அவள் பார்க்கும் முதல் சிறு குழந்தை இதுதான்,

“ எனக்கும் தெரியலை மூனாவது முறையா அழுவுது,, இரு அண்ணிக்கு போன் பண்றேன்” என்று தனது பேக்கில் இருந்து மொபைலை எடுத்து பத்மாவுக்கு கால் செய்தான்

உடனே எடுத்த பத்மா “ என்ன சத்யா குளிச்சிட்டயா?, என்ன குழந்தை ரொம்ப அழுவுது போலருக்கு சத்தம் இங்க கேட்குது, அவளை பால் குடுக்க வை சத்யா,, அதுக்கு முன்னாடி ஈரத் துணியால அவ ப்ரஸ்ட்ட நல்லா துடைச்சுட்டு குடுக்கச் சொல்லு,, முதல்ல அவ்வளவா பால் வராது, அவளை நல்லா பிரஸ்ட்ட அழுத்தி பிழிஞ்சு குடுக்கச் சொல்லு,, ஆனா குழந்தைக்கு மூச்சு திணறிடப் போகுது,, அப்புறம் அவளுக்கு ஏதாவது ஆகாரம் குடு , நீயும் ஏதாவது சாப்பிடு, நைட்ல குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்க,, ரொம்ப குளிர்ச்சியான ஏரியா, ரெண்டு பேரையும் நல்லா கம்பளியால சுத்தியே வை ,, ஏதாவது கேட்கனும்னா எந்த நேரமா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு சத்யா,, இப்போ நான் வச்சிர்றேன் பசங்களுக்கு சாப்பாடு குடுத்து தூங்க வைக்கனும்” என்று பத்மா உடனே கட் செய்தாள்


சத்யன் மான்சியின் அருகே வந்து “ குழந்தைக்கு பால் குடுக்கனுமாம் அதுக்கு முன்னாடி அந்த இடத்தை சுத்தமா துடைக்கனுமாம்” என்று கூற
மான்சி எப்படி என்று புரியாமல் விழித்தாள், அவள் பார்வையில் தெரிந்த மிரட்சி சத்யனின் நெஞ்சை சுட்டது

அவளையே பார்த்த சத்யன், இவளே ஒரு குழந்தைதான் இதுல இவளுக்கு ஒரு குழந்தையா? என்று தனக்குள் நினைத்தபடி தன் தோளில் கிடந்த டவலை பாத்ரூம் போய் வென்னீரில் நனைத்து பிழிந்து எடுத்துவந்து அவளிடம் நீட்ட, அவள் படுத்த வாக்கில் வாங்கி கம்பளிக்குள் கைவிட்டு துடைக்க முடியாமல் சிரமப்பட...

சத்யன் அவள் கையைப் பற்றி டவலை வாங்கி கம்பளியை நீக்கி அவளின் ரவிக்கை கொக்கிகளை முற்றிலும் அவிழ்த்து விட்டு ஈர டவலால் சுத்தமாக துடைத்தான், பிறகு டவலை போட்டுவிட்டு குழந்தையை அவள் பக்கமாக திருப்பி அவளின் மார் காம்பருகே குழந்தையின் உதட்டில் படுமாறு வைக்க, குழந்தை வாயைத் திறக்கவில்லை, சத்யன் தன் வலது கை ஆள்காட்டிவிரலை காம்புக்கும் குழந்தையின் உதட்டுக்கும் நடுவே விட்டு குழந்தையின் உதட்டை பிளந்து அவள் காம்பை உள்ளே தள்ளி குழந்தையின் தலையை உதட்டை காம்போடு மெதுவாக அழுத்தினான்,

அதற்குமேல் அவன் உதவி தேவையில்லை என்பதுபோல் குழந்தை காம்பை கவ்விக்கொண்டு சப்ப ஆரம்பித்தது , யப்பா என்று ஒரு நிம்மதியுடன் சிறு புன்னகையுடன் நிமிர்ந்து மான்சியைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்,

சத்யன் பார்வையால் என்ன என்று கேட்க,

விழிகளில் நிறைந்த நீரோடு, தனது கரங்களை கூப்பி “ நீங்களே இல்லேன்னா நான் வலியால செத்துப்போயிருப்பேன், எங்கம்மா தான் உங்களை கரெக்டான சமயத்துல கொண்டு வந்து சேர்த்துருக்கு” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் விழிகளில் தேங்கிய நீர் கன்னத்தில் வழிந்தது

அவள் கண்ணீரைக் கண்டு பதறிய சத்யன், கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்து “ ம்ஹூம் இனிமேல் நீ அழவேகூடாது,, தைரியமா இருக்கனும்,, நான்போய் சாப்பிட ஏதாவது செய்றேன்” என்று கூறிவிட்டு கிச்சனை நோக்கி நடந்தவன் மறுபடியும் அவளருகில் வந்து “ முதல்ல அவ்வளவா பால் வராதாம், நல்லா அழுத்தி பிழிஞ்சு குழந்தைக்கு பால் குடுக்கனுமாம், அண்ணி சொன்னாங்க” என்று பால் இல்லாமல் சப்பும் குழந்தையைப் பார்த்துக்கொண்டே

“ அது எப்படி பண்றது?” என்று மான்சி புரியாமல் கேட்க

கம்பளிக்குள் கையைவிட்டு, அவள் மார்பை மென்மையாக அழுத்தி குழந்தையின் வாயில் பாலை பீய்ச்சிவிட்டு கையை எடுத்துக்கொண்டு “ இதேபோல பண்ணு,, அப்புறம் போகப்போக சரியாயிடும்” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு போனான்



கியாஸ் அடுப்பு பாத்திரம் எல்லாம் இருந்தது, ஒரு டப்பாவில் அரிசியும் இருந்தது, ஆனால் சத்யனுக்கு கஞ்சியைக் கூட எப்படி வைப்பது என்று தெரியவில்லை, மறுபடியும் ஓடிவந்து மான்சியிடம் கேட்டான்

மான்சிக்கு அவனைப்பார்த்து சிரிப்பு வர லேசாக சிரித்தாள், ஒரு வாரத்திற்கு பிறகு இப்போதுதான் மான்சி சிரிக்கிறாள்

“ பச் அப்புறமா சிரிப்ப முதல்ல கஞ்சி எப்படி வைக்கிறதுன்னு சொல்லு,, எனக்கு சமையலை பத்தி எதுவுமே தெரியாது, இல்லேன்னா ரெண்டு பேரும் இன்னிக்கு பட்டினி தான்,, நான் வேற காலையிலேர்ந்து இன்னும் சாப்பிடலை,, சீக்கிரம் சொல்லு மான்சி ” என்று சத்யன் உரிமையோடு கேட்க

உடனே மான்சிக்கு தன்நிலை மறந்தது, அந்த நல்லவன் சாப்பிடவில்லையே என்ற வருத்தத்துடன் “ அய்யோ கடவுளே ஏன் நீங்க சாப்பிடலை” என்றவள் கஞ்சி எப்படி செய்யவேண்டும் என்று அவனுக்கு தெளிவாக சொல்ல.... சத்யன் கஞ்சியை தயார் செய்தான்



No comments:

Post a Comment