Friday, September 4, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 6

கோவையின் மிகமுக்கிய நட்சத்திர ஹோட்டலின், படுக்கையறை கட்டிலில் கவிழ்ந்து படுத்து தலைக்கு இரண்டு தலையணையும், மடக்கி வைத்த முழங்காலுக்கொரு தலையணையும், இடுப்பை விட்டு அவிழ்ந்து கிடந்த கைலியுமாக ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த சத்யன் தனது மொபைல் ஒலித்ததால் சிறிது கடுப்புடன் எழுந்து மொபைலை எடுத்து ஆன் செய்து காதில் வைத்தான், ஏதோ விளம்பர போன்கால் என்றதும் “ ச்சே” என்று எரிச்சலுடன் மொபைலை வீசியெறிய முயன்று, பிறகு நிதானித்து அதில் நேரம் பார்த்தான்,, மணி எட்டு இருபது ஆகியிருந்தது

“ அய்யோ இவ்வளவு நேரமாச்சா” என்று பரபரப்புடன் எழுந்து இடுப்பைவிட்டு கீழே விழுந்த கைலியை எடுத்து மறுபடியும் இடுப்பில் முடிந்துகொண்டு பாத்ரூமை நோக்கிப் போனவன், கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, அங்கேபோய் கதவை திறந்து எட்டிப்பார்த்தான்

“ சார் ரூம் சர்வீஸ்,, இரண்டு முறை போன் செய்தோம் நீங்க எடுக்கலை சார்” என்றான் வெளியே இருந்த ரூம் சர்வீஸ் பையன்



“ ஸாரி நல்லா தூங்கிட்டேன்,, இப்போ ரூம் க்ளீன் பண்ணவேண்டாம், நான் ரூம் வெகேட் பண்றேன், அப்புறமா வந்து க்ளீன் பண்ணிக்கங்க” என்று கூறிவிட்டு அவசரமாக கதவை மூடினான் சத்யன்

அவன் அவசரத்துக்கு காரணம், அந்த பையனின் பார்வை அவன் தோள்வழியாக ரூமை அலசியதால் தான்,, கட்டிலைப் பார்த்த சத்யனின் கணிப்பு தப்பவில்லை, நேற்று இரவு அவனுடன் வந்தவள் அதிகாலை அவன் வேலையை முடித்துவிட்டு எப்படிப் புரட்டித் தள்ளினானோ அப்படியே கிடந்தாள், முற்றிலும் நிர்வாணமாக..

அந்த ஏசி குளிரில் அவள் அப்படிக் கிடந்தது சத்யனுக்கு வியப்பாக இருந்தது,, இதைத்தான் முற்றும் துறந்த நிலை என்பார்களா? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட சத்யன் கட்டிலை நெருங்கி கீழே கிடந்த பெட்சீட்டை எடுத்து அவள்மீது போட்டுவிட்டு “ ச்சே சரியான சுரனை கெட்ட ஜென்மம்” என்று எண்ணியபடி சத்யன் பாத்ரூமுக்கு போனான்,,

நேற்று இரவு அவனுக்கிருந்த ஆர்வத்தில் தாபத்தில் அழகாக தெரிந்த அந்த பெண்ணின் சதைக்கோளங்கள் இப்போது அவனுக்கு அருவருப்பை ஏற்படுத்தியது,, ஆனாலும் பணத்துக்காக வருபவளிடம் வெட்கத்தையும் சுரனையையும் எதிர்ப் பார்ப்பது முட்டாள்தனம்தான் என்று எண்ணிக்கொண்டான்

ஷவரை திறந்துவிட்டு அதன் அடியில் நின்றவனின் மனம் “ அவளைப்போய் சுரனை இல்லாதவன்னு சொல்றியே? ஒரு நைட் முழுக்க நீயும் அப்படித்தானே அவளுடன் இருந்தாய், உன்னைவிட அவள் எந்த வகையில் தாழ்ந்தவள், நீ பணத்தை கொடுத்து கேட்கும் ஒன்றை,, அவள் பணத்தை வாங்கிக்கொண்டு உனக்கு தருகிறாள்,, நீங்கள் இருவருமே ஒரே ரகம்தான் ” என்ற மனசாட்சியின் ஏளனத்துக்கு அவனது பதில் வழக்கமான ஒன்றுதான்,

அவன் சுகத்தை தேடி அலையும் ஒவ்வொரு முறையும் இதே கேள்வியை தான் அவன் மனமும் கேட்கும் “ நானும் ஆசாபாசங்கள் அடங்கிய மனிதன் தானே” என்ற ஒரே வார்த்தைதான் அவனுடைய பதிலாக இருக்கும்

குளித்துவிட்டு அவன் பாத்ரூமில் இருந்து வெளியே வர,, அந்தப்பெண் தூக்கம் கலைந்து எழுந்து தனது உடைகளை பொறுக்கிக்கொண்டிருந்தாள்,

அவளின் கொழுத்த நிர்வாணத்தை பார்க்க கூசி தனது பெட்டியில் உடைகள் எடுப்பதுபோல் கவிழ்ந்து கொண்டான்,


“ ஹாய் எனக்கு டைமாச்சுப்பா” என்ற அந்தப் பெண்ணின் குரல் கேட்டது

சத்யனின் மூன்று ஆயிரம்ரூபாய் தாள்களுடன் திரும்பி அவளிடம் கொடுத்தான்,

“ ஏய்ப்பா திரும்ப போறதுக்கு டாக்ஸிக்கு பணம் தரனும்னு சொல்லிட்டுத்தானே வந்தேன்” எனறு அந்தப்பெண் கொஞ்சலாக கேட்க

“ ஓ ஸாரி மறந்துட்டேன்” என்று இன்னொரு ஆயிரம் ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தான்

பணத்தை வாங்கி சுருட்டி தனது ரவிக்கைக்குள் தினித்தவள் “ அடுத்தமுறை வேனும்னா ரங்கனுக்கு போன் பண்ணாத,, என்னோட நம்பருக்கு கூப்பிடு நானே நேரடியா வர்றேன்,, பாவிப்பய பாதி காசப் புடுங்கிர்றான்” என்று அங்கலாப்புடன் அந்தப் பெண் அறையைவிட்டு வெளியேறினாள்

இடுப்பில் இருந்த டவலுடன் சோபாவில் பொத்தென்று அமர்ந்த சத்யனுக்கு தனது குடும்பத்தையும், அதன் பாரம்பரியத்தையும் நினைத்து நெஞ்சை அடைத்தது, தன்னுடைய வாழ்க்கை மட்டும் தடம்மாறியது ஏன் என்று அவனுக்கு இன்னும் புரியாமலேயே இருந்தது

சுதாரித்து எழுந்து தயாராகி அறையை காலிசெய்துவிட்டு வெளியே வந்து தனது காரில் ஏறினான், சிகரெட்டுக்காக சட்டைப் பாக்கெட்டை தடவியவனின் விரலில் நேற்று இரவு அந்தப்பெண் எழுதி வைத்த செல்போன் நம்பர் அடங்கிய சீட்டுத் தட்டுப்பட அதை வெளியே எடுத்து “ ச்சே” என்று எரிச்சலுடன் கசக்கி விட்டெரிந்தான்

‘இனிமேல் மறுபடியும் இப்படி வரவேக்கூடாது’ என்று எண்ணிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான் சத்யன்

ஒவ்வொருமுறையும் எல்லாம் முடிந்து மறுநாள் கிளம்பும்போது அவனின் வேண்டுதல் இதுதான், ஆனால் ஒருமுறைகூட அவன் வேண்டுதல் பலித்தது கிடையாது,, ஆனால் இம்முறை?


கோவையின் பீளமேடு பகுதியில் பிரமாண்டமான வீட்டின் கார் செட்டில் தனது காரை நிறுத்திவிட்டு இறங்கிய சத்யன் தனது லேப்டாப் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான், எதிர்ப்பட்ட வேலைக்காரர்களின் வணக்கங்களை ஒரு தலையசைப்போடு பெற்றுக்கொண்டு மாடிப்படிகளில் வேகமாக ஏறினான்

தனது அறைக்கு போய் பேக்கை வைத்துவிட்டு டவலுடன் பாத்ரூம் போய் ஒரு மினி குளியல் போட்டுவிட்டு இடுப்பில் டவலுடன் வந்தவன் கபோர்டை திறந்து ஒரு சாட்ஸை எடுத்து மாட்டிக்கொண்டு ஏசியை ஆன் செய்துவிட்டு கட்டிலில் சாய்ந்தவன் தனது லேப்டாப்பை எடுத்து வயிற்றின் மீது வைத்துக்கொண்டு மெயில்கள் சிலவற்றை மேலோட்டமாக பார்த்தான் ,

எல்லாம் உபயோகமற்ற தகவல்கள், அவன் எதிர்பார்த்த மெயில்கள் எதுவும் வராததால் எரிச்சலுடன் லேப்டாப்பை எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு கட்டிலை ஒட்டியிருந்த டேபிளில் இருந்து ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்துவிட்டு கட்டிலில் வசதியாக சாய்ந்துகொண்டான்

சத்யமூர்த்தி ,, வயது முப்பத்திரெண்டு, பாரம்பரியமான பெரிய குடும்பத்தின் ஒரே வாரிசு, பணத்திலேயே பிறந்து பணத்திலேயே வளர்ந்து பணத்திலேயே வாழ்ந்தாலும், தான் மனிதன் என்பதை மறக்காதவன், கம்பீரமான உயரமான அழகன் என்றாலும் அன்புக்கு தலைவணங்கி அராஜகத்தை எதிர்க்கும் ஒரு சராசரி ஆண்மகன், அவனுடைய பலம் அன்பு,, பலவீனமும் அன்புதான்,

எளிதில் உணர்ச்சிவசப்படும் சத்யனை தொழில் முறையில் வீழ்த்துவது ஒன்றே அவன் மனைவியான அருணாவின் குறிக்கோள், சத்யனும் இந்த ஏழு வருஷத்தில் அவளை ஜெயிக்க முயன்று,, பலமுறை ஜெயித்து,, பலமுறை தோற்று இருக்கிறான்,, அவன் ஜெயிப்பதற்கு காரணம் வைராக்கியம் என்றால், தோற்பதற்கு காரணம் அன்பு மட்டும்தான்,,

அருணா,, சத்யனின் மனைவி, அவனைவிடவும் ஒரு வயது பெரியவள்,, பணம் மட்டுமே வாழ்க்கை என்று பிறப்பிலேயே பழக்கப்படுத்தப்பட்ட மேல்தட்டு வர்க்கம், அன்பும், கருணையும், முட்டாள்களின் அஸ்திரம் என்று ஏளனம் செய்யும் ஒரு இயந்திரம், இவளுக்கு குடும்ப உறவுகளைவிட கம்பெனியில் உள்ள மெஷின்களின் மீது அன்பு அதிகம்,

ஏழு வருடத்திற்கு முன்பு சத்யன் அருணா இவர்களின் திருமணம் தொழில் துறையில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியதென்னவோ உண்மை,, காரணம் சத்யன் அப்பா ராஜதுரையும், அருணாவின் அப்பா கோபாலகிருஷ்ணனும் தொழில்முறையில் நேரடி போட்டியில் இருந்தவர்கள், இருவருக்கும் இருந்த ஒற்றை வாரிசுகளை ஒன்றாய் சேர்த்துவிட்டால் தொழில் துறையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்று சில இடைத்தரகர்கள் சேர்ந்து இரண்டு தொழிலதிபர்களையும் பேசிப்பேசியே கவிழ்த்து நடத்தி வைத்த திருமணம்

இந்த திருமணத்தால் அருணாவின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை, அப்பா வீட்டில் இருந்து கம்பெனிக்கு போனவள், இப்போது கணவனின் வீட்டிலிருந்து தனது கம்பெனிக்கு போனாள், எந்த மாற்றமும் இல்லாத அதே அலட்சியம் நிறைந்த நடை உடை பாவனைகள்,

ஆனால் இந்த திருமணத்தால் சத்யனின் இளமைக்கால கனவுகள் அனைத்து பொசுக்கப்பட்டது,


திருமண இரவன்று அளவற்ற கனவுகளுடன் தனது அறையில் அருணாவுக்காக காத்திருந்தான், அவள் நிமிர்ந்த நடையுடன் அலட்சியமாக வந்து “ ஹாய் சத்யன் இன்னிக்கு மேரேஜ்ல உங்க கம்பெனி ஸ்டாப்ஸ் எல்லாரும் ஏதோ கிப்ட் குடுத்தாங்களே என்ன அது? ” என்றவள் அவன் அனுமதி இல்லாமலேயே அங்கிருந்த மில் தொழிளாலர்களின் பார்சலைப் பிரித்து பார்த்துவிட்டு அதிலிருந்த அழகான பளிங்கு கல்லினால் ஆன தாஜ்மஹாலை அலட்சியமாக கட்டிலில் வீசியெறிந்தாள்

“ என்ன உங்க மில் ஸ்டாப்ஸ் இவ்வளவு கேவலமா கிப்ட் குடுத்திருக்காங்க? என்னோட மில் ஸ்டாப்ஸ் பாருங்க எனக்கு வைரமோதிரம் பிரசண்ட பண்ணிருக்காங்க” என்று அவன் முகத்தருகே தன் விரலில் இருந்த மோதிரத்தை காட்டினாள்

அந்த நிமிடமே சத்யனின் கனவுகள் சுக்குநூறாகிவிட்டது, தனக்கு மனைவியாக வாய்த்திருப்பவள் பணத்தை வைத்து மனிதனை எடைபோடும் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பதை ஒரேநாளில் கண்டுகொண்டான்

தொழில் செய்யும் பிரபலமான பெண்களை சத்யனுக்கு பிடிக்காது என்பதில்லை, ஆனால் அவனுக்கு அவன் எதிர்பார்த்த மனைவி அவனை கண்டதும் காதலோடு ஓடிவந்து கைகளால் கழுத்தை வளைத்து மூக்கோடு மூக்கை வைத்து உரசி முத்தமிடும் காதல் மனைவியை, அருணாவைப் போல ஒரு தொழில் இயந்திரத்தை மனைவியாக அவன் எதிர்பார்க்கவில்லை,

இந்த தோல்வி அவனுக்கு தினமும் புதுபிக்கப்பட்டது, இரவில் உறவின்போது கூட பிசினஸ் பற்றி பேசும் மனைவியை கண்டு அவனுக்கு கோபம் வரும், கோபத்தில் எதை பேசினாலும் அவளது அலட்சியப் பார்வையே பதிலாய் வரும், ,, அதைவிட அவள் கொடுத்த விளக்கம் தான் சத்யனை குமுற வைத்தது

“ இதோ பாருங்க சத்யன் எனக்கு என் பிஸினஸ் பர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட்,, என்னோட வளர்ச்சியை தடுக்கத்தான் உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்க என்பது எனக்கு எப்பவோ தெரியும், அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நினைக்குறீங்களா,, எனக்கு உங்ககூடவே உங்க மனைவியா இருந்து உங்களை பிஸினஸ்ல ஜெயிச்சு காட்டனும், அதுதான் பெரிய சவால்னு நெனைச்சுத்தான் இந்த மேரேஜ்க்கு நான் ஒத்துக்கிட்டேன், மத்தபடி கேவலம் இந்த செக்ஸ்காக என்னோட பிஸினஸை கோட்டைவிட நான் தயார இல்லை, எனக்கு மேரேஜ் லைப்பை விட என்னோட பிஸினஸ் லைப் ரொம்ப முக்கியம் சத்யன், அதனால நீங்களும் இந்த ஸில்லித்தனமான ரொமான்ஸை எல்லாம் மூட்டைகட்டி வச்சுட்டு முழுமூச்சா பிஸினஸ்ல இறங்கி என்னோட போட்டியிடப் பாருங்க” என்று அவள் சொல்லிவிட்டு போக சத்யன் தலையை கைகளில் தாங்கி உட்கார்ந்திருப்பது வழக்கமாகிவிட்டது

இவளின் அலட்சியப் பேச்சு, பெரியவர்களை மதிக்காத தன்மை, வேலைக்காரர்களை அவமதிக்கும் போக்கு, சத்யனை அலட்சியம் செய்து எதிலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் பாங்கு, இதையெல்லாம் கவனித்த பெற்றோரின் கலங்கிய கண்களை பார்க்க பொறுக்காத சத்யன் திருமணமான மூன்றாவது மாதமே அருணாவுடன் தனிக்குடித்தனம் வந்தான்

அன்று வந்தவள் அதன்பிறகு சத்யனின் பெற்றோரை இந்த ஏழு வருடத்தில் ஒருமுறைகூட சந்திக்கவில்லை, சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெற்றோரை சத்யன்தான் தினமும் போய் பார்த்துவிட்டு வருவான்

அருணாவின் கணக்கு எல்லாம் லாபக்கணக்காகவே இருந்தது, குடும்பம், புருஷன், காதல், காமம், என்று எல்லாவற்றையும் விட அவளுக்கு தனது கம்பெனிதான் முக்கியமா இருந்தது

கம்பெனியில் இருந்து களைத்துப்போய் வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு கட்டிலில் விழுந்தால், நடு இரவில் தூக்கத்தில் அணைத்து இரண்டு மிஷின்களை போல் நடக்கும் இவர்களின் திருப்தியற்ற உறவு அத்தோடு மறுபடியும் நடக்க நாட்கள் ஆகும்




இதுபோன்ற ஒரு உறவில் விருப்பமில்லாத சத்யனும் அருணாவை வற்புறுத்துவதில்லை, நாளைடைவில் மனைவியுடனான உறவு கேள்விக்குறியானபோது சத்யன் தன் தேவைகளை இப்படிப்பட்ட பெண்களிடம் தீர்த்துக்கொள்ளும்படி ஆனது, இது சத்யனுக்கு தன்மீது அருவருப்பை ஏற்ப்படுத்தக்கூடிய விஷயம்தான்,, ஆனால் தன் உடல் தேவைகளை தீர்க்க அவனுக்கு வேறு வழித்தெரியவில்லை, குடியும் செக்ஸ்ம் அவனுக்கு அத்தியாவசிய தேவைகள் என்றானது,

அவனுடைய ஒன்றுவிட்ட அண்ணன் கவுதம் மூலம் சத்யனின் அப்பா அம்மாவுக்கு இவனின் நடத்தைத் தெரியவந்த போது, தங்களின் சுயநலத்தால் தானே அவன் வாழ்க்கை இப்படியானது என்ற வேதனையில் மகனை கண்டிக்க முடியாமல் “ ஏம்பா அந்த அடங்காப்பிடாரியை டைவர்ஸ் பண்ணிட்டு வேற நல்லப் பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோயேன் கண்ணா” என்ற கண்ணீர் யாசிப்புக்கு சத்யனின் பதில்

“ விடுங்கம்மா ஏழுவருஷம் ஓடி போச்சு, இனிமேல் எப்படி வாழ்ந்தா என்ன, எனக்கு கல்யாண வாழ்க்கையில அவ்வளவு நம்பிக்கை இல்லம்மா, நான் இப்படியே இருந்துர்றேன், என்னை விட்டுருங்க ப்ளீஸ்” என்ற விரக்த்தியான பதில்தான்

அருணாவை விவாகரத்து செய்தால் தொழில் ரீதியாக சத்யன் பல இன்னல்களை சந்திக்க நேரிடும், அதிலொன்று மனைவியை போட்டியாக நினைத்து சத்யன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டான் என்ற பேச்சு நிச்சயம் வரும்., அவனுக்கு எல்லாவற்றிலும் விரக்தி, குடும்பம், மனைவி, குழந்தை, என்று எதிலும் விரக்தி ஏற்பட அவனும் இயந்திரமாய் இந்த வாழ்க்கைக்கு பழகிவிட்டான்,

தொழில் விஷயமாக பல மாதங்களாக பல நாடுகளை சுற்றிவரும் அருணாவுக்கு குழந்தையின் தேவை சுத்தமாக இல்லை, ஆனால் தன்னிடம் கேட்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் சத்யன் தவிப்பது சகஜமாகிவிட்டது

அருணாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள நேரமில்லை, அதற்காக ஆர்வமும் இல்லை,, அத்தோடு தனது கம்பீரத் தோற்றம் பாழடைந்து விடும் என்ற அச்சம் வேறு அவளுக்கு இருந்ததால் குழந்தைப் பற்றி யார் பேசினாலும், ஒரு அலட்சிய பாவனையோடு போய்விடுவாள்

சத்யனுக்கும் நாம வாழும் இந்த நரக வாழ்க்கைக்கு குழந்தை வேறு வேனுமா? என்று ஒரு சலிப்பு மனதில் உண்டாக அதற்காக அவனும் ஆர்வமின்றி இருந்தான்

ஆனால் ஒரு விழாவில் சந்தித்த சத்யனின் அண்ணன் கௌதம்மின் மனைவி பத்மா, ஓரளவுக்கு சத்யன் மீது அன்பு வைத்திருப்பவள், “ கல்யாணமாகி இத்தனை வருஷமா குழந்தையில்லாம இருக்குறதுக்கு ரெண்டு பேரும் நல்ல டாக்டரா பார்த்து செக்ப் பண்ணீங்களா?” என்று தனது மைத்துனனிடம் கேட்க

“ அதெல்லாம் இல்லை அண்ணி, இப்போ குழந்தைக்கு என்ன அவசரம்னு இருக்கோம்” என்று சத்யன் சமாளித்தான்

“ இப்போ இல்லாம அம்பது வயசு ஆனதும் குழந்தை பெத்துக்கப் போறீங்களா சத்யா? யாராவது நல்ல டாக்டரை பார்த்து யார்மேல குறைன்னு கண்டுபிடிச்சு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க, இல்லையா ரெண்டுபேரும் டைவர்ஸ் பண்ணிகிட்டு வேற ஒரு கல்யாணம் பண்ணிக்க சத்யா,, எனக்குத் தெரிஞ்சு நம்ம பரம்பரையில புள்ளைகளுக்கு பஞ்சமில்லை, நாமலா வேனாம்னு நிறுத்தினாதான் உண்டு,, அதனால மொதல்ல யார் மேல குறையிருக்குன்னு பாரு சத்யா ” என்று அருணாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி ஜாடையாக பத்மா பேசியப் பேச்சுதான் அருணாவை வாடகை தாயை தேட வைத்தது

அருணாவுக்கு பிள்ளைப் பெற்றுக்கொள்ள நேரமில்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான தகுதியும் தனக்கில்லை என்று மெடிக்கல் செக்கப்பில் கண்டுகொண்டாள்,, அதன்பிறகு சத்யனிடம் பேசி வாதாடி வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தன் முடிவுக்கு சம்மதிக்க வைத்தாள்


சத்யனுக்கும் குழந்தையின் மேல் அவ்வளவாக ஆர்வமில்லாததால் அவள் இஷ்டப்படி எதையாவது செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்,

அருணா தகுதியான பெண்ணை தேடியலைந்து இறுதியாக மான்சியை கண்டுபிடித்து அவளை தனது அதிகாரத்துக்கு பலிகொடுத்தது எல்லாம் சத்யனுக்கு தெரியாது,
அருணா வெளிநாடு போய் எட்டு மாதம் ஆகிறது ,, இந்த எட்டு மாதத்தில் சத்யனுடன் மூன்றுமுறைதான் போனில் பேசியிருக்கிறாள்,, இவனாக போன் செய்தாலும் “ பிஸியா இருக்கேன் சத்யா அப்புறமா கால்பண்ணு” என்று கட் செய்துவிடுவாள் புருஷன் மீது அவ்வளவு அக்கறை,

டிவியைப் பார்த்துக்கொண்டிருந்த சத்யனை இன்டர்காம் அழைத்தது,, மணி காலை பத்தாகியிருந்ததால் டிபன் சாப்பிட வந்த அழைப்பு,, “ இதோ வர்றேன்” என்று சொல்லி வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தான்,, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாவகாசமாக சாப்பிடுவது அவன் வழக்கம்,,

டிவியை ஆப் செய்துவிட்டு வெளியே போகலாம் என்று ரிமோட்டை எடுத்தவன்,, அப்படியே வைத்துவிட்டு மறுபடியும் அமர்ந்தான் ,, டிவியில் ஊட்டியில் ஏற்பட்ட கொடூரமான நிலச்சரிவுகளைப் பற்றிய செய்திகள் போய்க்கொண்டிருந்தது ,, செய்தியை கவணத்துடன் பார்த்து இறந்து போன தோட்டத் தொழிளாலர்களுக்காக உண்மையாக பரிதாபப்பட்டான்,,

ஊட்டி அவனுக்கு ரொம்பவே பழக்கப்பட்ட ஊர்,, டிவியில் காட்டிய மலைக்கிராமங்கள் அருணாவின் எஸ்டேட்க்கு அருகில் இருப்பவை என்பது புரிந்தது, பாவம் என்று பரிதாபத்துடன் எழுந்தவனை மொபைல் போன் அழைத்தது

எடுத்துப்பார்த்தான்,, வெளிநாட்டு நம்பரில் இருந்து வந்திருக்க, ஆன்செய்து காதில் வைத்தான், அருணாதான் பேசினாள்

“ சொல்லு அருணா’’ என்றான் ஆர்வமின்றி

“ இன்னிக்கு சன்டே தானே, நீ இப்போ ப்ரீயா தானே இருக்க சத்யா “ என்றாள் அருணா

“ ம் சொல்லு,, என்ன விஷயம் ”

“ நான் பேபி வேனும்னு ஒரு வாடகைத்தாயை ஏற்பாடு செய்தேன்ல,, அந்த பொண்ணோட அம்மா ஊட்டில நாலு நாளைக்கு முன்னாடி நடந்த நிலச்சரிவுல மாட்டிகிட்டு இறந்துட்டாளாம், நான் போன் பண்ணப்ப பக்கத்து எஸ்டேட் விக்டர் சொன்னார்” என்று அருணா குரலில் இரக்கம் என்பது சிறிதும் இல்லாமல் சொல்ல

“ அய்யய்யோ ஊட்டில இப்போ நிலைமை ரொம்ப மோசமா இருக்கே,, அந்த லேடி வயித்துல குழந்தையோட என்ன செய்வாங்க பாவம்,, விக்டர் கிட்ட சொல்லி பாதுகாப்பா பாதுக்க சொன்னியா அருணா” என்று சத்யன் பதட்டமாக கேட்க



“ பாதுகாப்பா எங்க தங்க வைக்கிறது,, அதுக்கு அவசியமில்லை சத்யா,, என்னால இன்னும் இரண்டு வருஷத்துக்கு இந்தியா வரமுடியாது,, அதனால எனக்கு அந்த குழைந்த இப்போ தேவைப்படாது, அதான் என் மேனேஜர்க்கு போன் பண்ணி சொல்லிருக்கேன், அவர் வந்தா கேஷா ஒரு ஐம்பதாயிரம் பணம் குடுத்தனுப்பு, அதை அந்த பொண்ணுகிட்ட குடுத்து எங்கயாவது போய் பொழச்சுக்க சொல்லச் சொல்லியிருக்கேன்,, இப்போ மேனேஜர் வருவார் சத்யா பணத்தை குடுத்துடு” என்று அருணா சொல்ல

சத்யன் திகைப்பில் ஸ்தம்பித்து நின்றிருந்தான்,, இப்படிக்கூட மனிதாபிமானமற்ற ஒரு பிறவி இருக்குமா? என்று நினைத்தான்

ஏதோ மனதில் தோன்ற அவசரமாக “ அந்தப் லேடி சட்டரீதியா ஏதாவது பிரச்சனை பண்ணமாட்டாளா அருணா?” என்று கேட்டான்

“ அதெல்லாம் பண்ணமாட்டா சத்யா,, அவகிட்ட பக்காவா எழுதி வாங்கிட்டுத்தான் இந்த ஏற்பாட்டையே செஞ்சேன்,, அதனால நீ எதுவும் பயப்பட தேவையில்லை,, இப்போ என்னோட மேனேஜர் வந்தா கேஷ் மட்டும் கொடுத்தனுப்பு” என்று கூறிவிட்டு பட்டென்று இணைப்பை துண்டித்தாள்



No comments:

Post a Comment