Wednesday, September 16, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 2

இக்கதையை கேட்டதும் அமுதா வாய்விட்டுச் சிரித்தார் அதே சமயம் தனக்கு வேண்டியதை அடைவதில் வனிதா சிறிதும் தயக்கம் காட்ட மாட்டாள் என்பதை உணர்ந்தார், "வாவ், இப்போ கூட இங்கே எல்லாம் பேரண்ட்ஸ் அப்படி அனுமதிக்கறது இல்லை. So did you both kept your promises?"

வனிதா, "Yes very much. என்னைவிட விஸ்வாதான் ரொம்ப சீரியஸ்ஸா கடைபிடிச்சார். ஒரு காரியத்தில் இறங்கினா எந்த அளவுக்கு அவரால ஃபோகஸ்ட்டா இருக்க முடியும்ன்னு அப்போத்தான் தெரிஞ்சுட்டேன்.. இன்னமும் அவர் அப்படித்தான்"



அமுதா, "சோ, தனக்கு ஒரு வேலைன்னா உன்னை அம்போன்னு விட்டுட்டு போயிடுவானாக்கும்?"

வனிதா, "No way! அவர் என்ன காரியத்தில் ஈடுபட்டு இருந்தாலும் ஒரு கண் என் மேல் இருந்துட்டே இருக்கும்"

அமுதா, "உதாரணத்துக்கு ஒரு இன்ஸிடெண்ட் சொல்லேன்"

வனிதா, "நான் வாரத்தில் மூணு நாள் ஈவ்னிங்க் டியூஷன் போவேன். விஸ்வா எர்லி மார்ங்கிங்க் ரன்னிங்க் அப்பறம் ஜிம்முக்குப் போவார். அதுக்கு பிறகு நான் ஸ்கூலுக்குப் போகும் போது அவரும் கோச்சிங்க் க்ளாஸ் போவார். விஸ்வா டெய்லி ஈவ்னிங்கில் ஸ்விம்மிங்க் ப்ராக்டீஸ் பண்ணுவார். நான் டியூஷன் போகாத நாளில் நான் அவரோடு கொஞ்ச நேரமாவுது ஸ்பெண்ட் பண்ணுவேன். முதலில் அம்மா அப்பா, மாமா அத்தை எல்லாம் அப்ஜெக்ட் பண்ணினாங்க. அப்பறம் அம்மாவே இந்த வருஷக் கடைசியில் இருந்து எப்படியும் பிரிஞ்சுதான் இருக்கப் போறாங்க பரவால்லை விடுண்ணான்னு மாமாகிட்டே சொல்லிட்டாங்க. அவர் ஸ்விம்மிங்க் போகும் போது கூட போய் பூல் சைடில் உக்காந்து படிச்சுட்டு இருப்பேன். ஒரு மணி நேரத்தில் ஐம்பது லாப்ஸ் ஸ்விம் பண்ணுவார். இருட்டின நேரமா இருக்கும். ஆனா என்கிட்டே யாராவுது வந்தாலோ பேச்சுக் கொடுத்தாலோ உடனே நிறுத்திட்டு என்னைப் பார்ப்பார். நான் ஓ.கேன்னு சொன்னதுக்கு அப்பறம்தான் கண்டின்யூ பண்ணுவார்"

அமுதா, "ஓ, எங்கே ஸ்விம் பண்ணுவான்? நம்ம க்ளப்பிலேயா. நான் அவனைப் பார்த்ததே இல்லையே"

வனிதா, "பெங்களூர் க்ளப்பில் இல்லை. இந்திரா நகர் க்ளப் ஸ்விம்மிங்க் பூலில். பாங்களூர் க்ளப்புக்கு போயிட்டு வர லேட் ஆகும்ன்னு இங்கே போவார்"

அமுதா, "Oh! His parents were members of both the clubs is it? (ஓ, அவனோட அப்பா ரெண்டு க்ளப்பிலும் மெம்பரா?)"

வனிதா, "Yes. Now we are also .. I mean he is also a member of both (ம்ம்ம் .. நாங்களும் .. ம்ம்ம்ம் அவரும் ரெண்டு க்ளப்பிலும் மெம்பர்)"

அமுதா, "முதலில் நாங்கன்னு சொல்லிட்டு அப்பறம் ஏன் அவன் மட்டும் மெம்பர்ன்னு சொன்னே?"

வனிதா, "நான் அதில் அவரோட மனைவிங்கறதால டிபெண்டண்ட் மெம்பர்" என்ற பிறகு தொண்டை அடைக்க, "டைவர்ஸுக்கு அப்பறம் எனக்கு மெம்பர்ஷில் இருக்காது"

அமுதா, "அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம்ன்னு சொன்னேன். மறந்துடுச்சா? ஸ்டில், உன் கூட இருக்கப் போற உன் பையன் டிபெண்டெண்ட் மெம்பரா கண்டின்யூ பண்ணுவான் இல்லையா?"

வனிதா அமுதாவை வெறித்துப் பார்த்தாள். ஆழ்மனதில் அவள் எதையோ மறைப்பதை அமுதா உணர்ந்தாள்.

அமுதா, "இட் இஸ் ஓ.கே. லவ் ஸ்டோரியை கண்டின்யூ பண்ணலாம். சோ, அந்த வருஷம் முழுக்க ஃப்ரீ டைமில் எல்லாம் ஒண்ணா சுத்தினீங்களாக்கும்?"

வனிதா, "ம்ம்ம் .. "

அமுதா, "உங்க அம்மா சொன்ன மாதிரி லிமிட்டை க்ராஸ் பண்ணாம நடந்துட்டீங்களா?"

வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா, "அதிக பட்சம் கிஸ் பண்ணிப்போம். அதுவும் அந்த வருஷம் முடியற சமயத்தில். பிரிஞ்சு இருக்கப் போறோமேன்னு எனக்கு ரொம்ப கவலையா இருக்கும். அழுவேன். என்னை கன்ஸோல் பண்ண கட்டிப் பிடிப்பார். அப்போ ஆரம்பிச்சுது"

அமுதா பேச்சின் தடத்தை மாற்றும் வகையில் திடீரென, "Were you a virgin then? (உனக்கு அதற்கு முன் செக்ஸில் அனுபவம் இருந்ததா என்பதை பூடகமாக நீ அப்பொழுது கன்னித்தன்மையுடன் இருந்தாயா) என்று கேட்டார் ... (பாருங்க இங்கிலீஷில் எழுதறது எவ்வளவு சுலபம்ன்னு!)"

முகத்தில் கோபம் தாண்டவமாட வனிதா, "Of course! I gave my virginity to Viswa during our first night (என் கன்னித்தன்மையை விஸ்வாவுக்கு எங்து 
முதலிரவில் சமர்ப்பித்தேன்)"

அமுதா, "இல்லை, உங்க அம்மா மாமாகிட்டே பேசும் போது உனக்கு நிறைய எக்ஸ்போஷர் இருக்குன்னு சொன்னாங்கன்னு நீ சொன்னியே? அதான் கேட்டேன்"

வனிதா பதில் சொல்ல சற்று தடுமாறிய பிறகு, "அது ... என் ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேருக்கு இதில் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தது. நானே நேரில், ஐ மீன் ஒளிஞ்சு இருந்து பார்த்து இருக்கேன். அப்பறம் அம்மா எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க"

சில பொத்தல்களை அவள் சங்கோஜத்தில் மறைப்பதை அமுதா உணர்ந்தாள்.

அமுதா, "சோ, அந்த வருஷக் கடைசியில் விஸ்வா என்.டி.ஏ ஜாயின் பண்ணினானா?"

வனிதா, "எஸ். He was one of the top rank holders"

அமுதா, "அப்பறம் எப்படி உங்க காதல் தொடர்ந்தது?"

வனிதா, "வாரா வாரம் ஃபோன் கால். வருஷத்துக்கு ஒரு முறை பத்தே நாள் லீவில் வருவார்"

அமுதா, "நீ என்ன செஞ்சுட்டு இருந்தே?"

வனிதா, "நான் முதலில் பி.ஏ எகனாமிக்ஸ் படிச்சுட்டு அதுக்கு அப்பறம் மேனேஜ்மென்ட் படிக்கணும்ன்னு இருந்தேன். அப்பா மாமா ரெண்டு பேரும் பி.ஏ பண்ணறதுக்கு பதிலா பி.காம் படிக்க சொன்னாங்க. சரின்னு செயின்ட் ஜோஸப்ஸ்ஸில் பி.காம் ஜாயின் பண்ணினேன்"

அமுதா, "ப்ளஸ் டூ எங்கே படிச்சே?"

வனிதா, "ப்ளஸ் டூ முடிக்கும் வரைக்கும் ஃப்ராங்க் ஆண்டனிலேயே கண்டின்யூ பண்ணினேன்"

அமுதா, "சோ, அப்பறம் என்ன ஆச்சு?"

வனிதா, "பி.காம் ஜாயின் பண்ணும் வரை எனக்கு அவ்வளவா காமர்ஸில் இன்டரெஸ்ட் இருக்கலை. ஒன்ஸ் படிக்க ஆரம்பிச்ச பிறகு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. I was my class topper throughout"

அவள் முகத்தில் இருந்த பெருமிதம் அவளது சோகத்தையும் சிறுது மறைத்தது ...

வனிதா, "நான் செண்ட் இயர் ஸ்டார்ட் பண்ணும் போது விஸ்வா என்.டி.ஏ முடிச்சுட்டு டெஹராடூனில் இருக்கும் ஐ.எம்.ஏவுக்குப் போனார்"

அமுதா, "ஸோ, விஸ்வா ஆர்மில செலக்ட் ஆனானா? ஏன் அவனுக்கு ஏர் ஃபோர்ஸ், நேவில எல்லாம் இஷ்டம் இல்லையா?"

வனிதா, "ம்ம்ஹூம் .. He always wanted to be an army man. என்.டி.ஏ பாஸ்ஸிங்க் அவுட் பரேடுக்கு (NDA Passing Out Parade) நாங்க எல்லாம் போயிருந்தோம். ராமும் டெல்லியில் இருந்து வந்து இருந்தார்"

அமுதா, "எந்த ரெஜிமெண்டில் சேர்ந்தான்?"

வனிதா, "என்.டி.ஏவில் இருக்கும் போதும் அவர் ரொம்ப நல்லா படிச்சார். அவருக்கு எப்பவும் எஞ்சினியரிங்கில் இன்டரெஸ்ட் உண்டு. சோ, என்.டி.ஏவிலும் நிறைய எஞ்சினியரிங்க் சப்ஜெக்ட்ஸ் ஆப்ட் பண்ணி படிச்சார். முடிக்கும் போது மெட்ராஸ் ஸாப்பர்ஸ்ஸில் (Madras Sappers) செலக்ட் ஆனார். He was a combat engineer"

ராணுவ பொறியியல் குழு (Military Engineering Group) என்பது ராணுவத்தை சார்ந்த ஒரு படை. மெட்ராஸ் ஸாப்பர்ஸ் (Madras Sappers), பாம்பே ஸாப்பர்ஸ் (Bombay Sappers) மற்றும் பெங்கால் ஸாப்பர்ஸ் (Bengal Sappers) என்ற மூன்று பிரிவுகளும் இதில் அடக்கம். போரில் டேங்குகள் (battle tank) துருப்புக்கள் செல்வதற்கு முன்னால் அவை செல்லுவதற்கு ஏதுவான பாதை அமைத்துக் கொடுப்பதில் இருந்து (வேண்டுமானால் துரிதமாக டேங்குகள் செல்லும் அளவுக்கு பலமுள்ள பாலங்கள் அமைப்பது முதல்) ராணுவத்தில் இருக்கும் இயந்திரங்களை சரி பார்ப்பது வரை இப்படையில் வேலை. பல பொறியாளர்களுடன் போர்ப் பயிற்சி பெற்ற ஆஃபீஸர்களும் இதில் இருப்பார்கள். பல போர்களில் முன் செல்லும் கமாண்டொ மற்றும் பாரா ரெஜிமென்ட் (Para Regiment) வீரர்களுடன் சேர்ந்து படை செல்ல திட்ட மிட்ட பாதைகளின் பாதுகாப்பை வேவு பார்ப்பதும் இவர்களின் வேலையே. தங்களுக்குக் கீழ் பணி புரியும் பொறியாளர்களின் பாதுகாப்பும் விஸ்வாவைப் போன்ற ஆஃபீஸர்களின் கையில்.

அமுதா, "வாவ், காம்பாட் எஞ்சினியர்ன்னா சண்டையில் கலந்துக்குவாங்களா?"

வனிதா, "More of defense .. அவங்களுக்கு கீழே இருக்கறவங்க இவங்க பொறுப்பில் இருப்பாங்க"

அமுதா, "உனக்குத் தெரியுமான்னு தெரியலை, நானும் ஒரு எஞ்சினியர்கூட இருவது வருஷத்துக்கும் மேல குடும்பம் நடத்திட்டு இருக்கேன். மத்தபடி விஸ்வா எப்படி? அவனும் ஒரு டிபிகல் எஞ்சினியர் மாதிரிதானா?" என்ற அர்த்தம் பொருந்திய கேள்வியை புன்னகைத்த படி கேட்க,

சிரித்த வனிதா, "Yes. A very thorough one at that (அவர் ரொம்பவே எஞ்சினியர்தான்)"

சிரித்த படி அமுதா, "Now we are on common territory .. (இப்போத்தான் நாம ரெண்டு பேரும் பொதுவான் விஷயம் பேசறோம்)". சரி, என் அனுபவம் இருக்கட்டும். உனக்கு எப்படி?"

வனிதா, "வீட்டில் இருக்கும் எல்லாம் சரியா வொர்க் பண்ணனும். ப்ளெண்டரில், ஐ மீன் மிக்ஸியில் கொஞ்சம் வேற மாதிரி சவுண்ட் வந்தாலும் உடனே என்னன்னு பார்த்து எதாவுது செய்வார். எங்க வீட்டில் எதுவும் ரிப்பேர் ஆகி நின்னு போனது கிடையாது. அதே மாதிரி கேட் கதவு எதிலும் திறந்து மூடும் போது எந்த சத்தமும் வராம ஸ்மூத்தா வொர்க் பண்ணனும். எங்க வீட்டுக் கதவில் லாக்கை திறக்கும் போது கூட ரொம்ப சத்தம் கேட்காது .." என்றவள் அதைச் சொல்லச் சொல்ல அவள் கண்கள் குளமாகின

அமுதா, "ஏன் இதுக்கு இமோஷனல் ஆயிட்டே?" என்று மெதுவாக தன் கேள்விகளை விவாகரத்தின் முக்கியக் காரணங்களின் பக்கம் செலுத்தினார்.

சுதாரித்துக் கொண்ட வனிதா, "இல்லை. நான் கிச்சனில் இருக்கும் போது அவர் வீட்டுக் கதவை திறந்து உள்ளே எனக்குப் பக்கத்தில் வரும் வரை ஒரு சத்தமும் இருக்காது .. அதை நினைச்சுட்டேன்"

அமுதா, "சோ, மெட்ராஸ் ஸாப்பர்ஸ்ன்னா எங்கே போஸ்டிங்க் இருந்தது?"

வனிதா, "முதலில் இங்கே, பெங்களூரில்தான் இருந்தது. அப்போ நான் பி.காம் ஃபைனல் இயர். அடுத்த ஏழு மாசமும் ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்தோம். நான் நல்லா படிச்சுட்டு இருந்தேன். ஸ்டில் எனக்கு ஃப்ரீ டைம் நிறைய இருக்கும். ஆனா அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருந்தாங்க. ராமும் அப்போதான் நிம்ஹான்ஸ்ஸில் ஜாயின் பண்ணினார்"

அமுதா, "ஓ, டாக்டர் ராம் M.B.B.S முடிச்சதும் Nimhansஇல் ஜாயின் பண்ணினாரா?"

வனிதா, "ஆமா. ஒரு வருஷத்துக்கு அப்பறம்தான் மேல் படிப்புக்கு லண்டன் போனார்" என்றபின் சற்று நேர மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்து, "ரெண்டு பேரும் ட்வின்ஸ் நீங்க அவருக்கு மட்டும் தனி மரியாதை கொடுக்க வேண்டியது இல்லை" என்று தன் கணவனை ஒருமையிலும் அவனது இரட்டைப் பிறவியை பன்மையிலும் அழைத்ததில் தான் அடைந்த எரிச்சலைக் காட்டினாள்.

அமுதா, "மை காட்! புருஷனை கொஞ்சமும் விட்டுக் கொடுக்க மாட்டே போல இருக்கே. சாரி, டாக்டர் ராமை எனக்கு முன்னாடியே தெரியும். நேரடியா நீங்க வாங்கன்னுதான் கூப்பிட்டுப் பழக்கம். இனி உன் கூட பேசும் போது அவன் இவன்னே சொல்றேன். ஓ.கே?"

வனிதாவின் உதடுகளில் தோன்றிய புன்னகை அமுதாவுக்கு தன் இலக்கை எளிதில் அடைய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டியது ..

அமுதா, "சரி, உங்க அம்மா ஸ்ட்ரிக்டா இருந்தாங்க. அப்பறம்?"

வனிதா, "அத்தையும் ராமும்தான் எங்களுக்கு ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. எங்க அத்தை ஒரு சார்டட் அக்கௌண்டண்ட். ஒரு பெரிய ஆடிட்டர் நிறுவனத்தில் பார்ட்னர். டவுட் கேட்க அத்தைகிட்டே போறேன்னு சொல்லிட்டு அங்கே போவேன். அங்கே இருந்து ராம் என்னை விஸ்வா இருக்கும் இடத்துக்குக் கூட்டிட்டுப் போவார்"

அமுதா, "எப்படி?"

வனிதா, "காருக்குள்ளே ஒளிஞ்சுக்குவேன்" சொன்ன மறுகணம் அவள் விரக்தியுடன், "வெளியில் இருக்கறவங்களுக்கு தெரியாம காரில் ஒளிஞ்சுக்கறது அப்போத்தான் எனக்குப் பழக்கம் ஆச்சு"

அமுதா, "ஏன் அதைப் பத்தி ரொம்ப டிஜக்டடா சொல்லறே?"

வனிதா, "ஒண்ணுமில்லை" என்று சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள், "ராம் எம்.ஈ.ஜி வாசலில் கொண்டு போய் விடுவார். காரை எடுத்துட்டு நானும் விஸ்வாவும் எங்கேயாவுது போவோம். முக்கால் வாசி நேரம் பக்கத்தில் அல்சூர் ஏறிக் கரையில் இருக்கும் பார்க்கில் ஒரு மூலையில் போய் உக்காந்துட்டு மணிக்கணக்கா பேசிட்டு இருப்போம். ராம் இவரோட பைக்கை எடுத்துட்டு எங்கேயாவுது சுத்திட்டு வருவார். மறுபடி வெஹிகிள் சேஞ்ச் பண்ணிட்டு வீட்டுக்கு வருவோம். வீட்டுக்கு வந்து விஸ்வா முதல்ல எங்க வீட்டில் போய் அரட்டை அடிச்சுட்டு இருப்பார். நான் அவங்க வீட்டில் இருந்து வர மாதிரி புக்ஸை எடுத்துட்டு வருவேன்"

அமுதா, "ஏய், அல்சூர் ஏறி பக்கத்தில் இருக்கும் பார்க்கா? அது இருட்டினதுக்கு அப்பறம் கொஞ்சம் பாதுகாப்பு இல்லாத பகுதி அப்படிம்பாங்களே?"

வனிதா, "இவர் யூனிஃபார்மில் இருப்பார். பாக்கறவங்க இவரைப் பாத்து பயந்து ஒதுங்கிப் போவாங்க"

அமுதா, "ரொம்ப ஜாலியா ரோமான்ஸ் பண்ணிட்டு இருந்து இருக்கீங்க. Then what happened?"

வனிதா, "ஆறு மாசம் கழிச்சு கார்கில் வார் தொடங்குச்சு. இவரை வார் ஃப்ரண்டுக்கு ஷிஃப்ட் பண்ணினாங்க"

ஒரு கணம் போர் என்றதும் சற்று அதிர்ச்சியுற்றாலும் மறுகணம் விஸ்வா வெற்றிகரமாக திரும்பி வந்து இருக்கிறான் என்று உணர்ந்த அமுதா, "வாவ், விஸ்வா ஒரு வார் ஹீரோவா?"

வனிதா, "ம்ம்ம் .. "

அமுதா, "God! That must have been a really traumatic experience to you (ஐய்யோ! நினைச்சுப் பாக்கவே கஷ்டமா இருக்கு. உனக்கு ரொம்ப பயப்பட்டு இருந்து இருப்பே இல்லை?)"

வனிதா, "பாதி நாள் நான் தூங்கவே இல்லை .. "

அமுதா, "படிச்சுட்டு இருக்கும் போதா?"

வனிதா, "இல்லை .. நான் பி.காம் ஃபைனல் இயர் எக்ஸாம் சமயம்"

அமுதா, "ஓ! ரோமான்ஸ் பண்ணிட்டு இருந்தப்ப பாதியில் போயிட்டானா? எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருந்தீங்க?"

வனிதா, "ம்ம்ம் ... கல்யாணத்தைப் பத்தி எங்க ரெண்டு பேர் பேரண்ட்ஸ்ஸும் பேச்சு எடுத்தாங்க. விஸ்வாவும் நானும் இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு செஞ்சுக்கலாம்ன்னு முடிவெடுத்து இருந்தோம்"

அமுதா, "ஏன்?"

வனிதா, "I was hardly 21. இன்னும் கொஞ்சம் நாள் ஜாலியா இருக்கலாம்ன்னு. Besides, நான் முதலில் ஃபுல் டைம் எம்.பி.ஏ பண்ணனும்ன்னு இருந்தேன். ஆனா வொர்க் பண்ணிட்டே பார்ட் டைம் பண்ணலாம்ன்னு பேரண்ட்ஸ் சஜ்ஜஸ்ட் பண்ணினதால பி.காம் முடிச்சுட்டு ஒரு வேலையில் சேர்ந்ததுட்டு எம்.பி.ஏ என்ரோல் பண்ணனும்ன்னு இருந்தேன். எம்.பி.ஏ முடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கறேன்னு விஸ்வாகிட்டே சொன்னேன். அவரும் ஒத்துட்டார். எக்ஸாம் எழுதி முடிச்சதும் அக்கௌண்ட்ஸ் அஸிஸ்டண்ட் வேலையில் சேர அத்தை அரேஞ்ச் பண்ணி இருந்தாங்க்"

அமுதா, "எங்கே வேலையில் ஜாயின் பண்ணினே?"

வனிதா, "Precision Measurements Limited"

அமுதா, "You mean, மிஸ்டர் ஷண்முகத்தோட கம்பெனியா? ரீஸண்டா அந்தக் கம்பெனியை மேனேஜிங்க் டைரக்டர், அவர் மருமகன் சந்திரசேகர் ஆக்ஸிடெண்டில் செத்துப் போனாரே?"

வனிதா, "ஆமா .. " என்ற அவள் கண்களில் இருந்த விரக்தியில் ஒரு முதலாளியின் இறப்பினால் வரும் அளவுக்கும் அதிகமான சோகம் தென்பட்டது.

அமுதா, "ரொம்ப பரிதாபம் இல்லை? க்ளப்பில் நிறைய தரம் மீட் பண்ணி இருக்கோம் அவர் அப்படி குடிச்சுட்டு கார் ஓட்டிட்டுப் போவார்ன்னு என்னால நம்பமுடியலை."

வனிதா தலை குனிந்து மௌனம் காக்க ..

அமுதா, "ட்ரைவரை அனுப்பிட்டு அவர் எதுக்கு ஓட்டிட்டுப் போனார்? என் ஹப்பி அது நிஜமாவே ஆக்ஸிடெண்டான்னு சந்தேகப் பட்டார். உனக்கு அதைப் பத்தி எதாவுது தெரியுமா?"

வனிதா அவசமாக, "எனக்கு ஒண்ணும் தெரியாது". அவள் குரலில் சிறு பதட்டமும் தெரிந்தது.

அமுதா, "பாவம். சரி அதை விடு. நம்ம கண்டின்யூ பண்ணலாம். எப்போ வேலையில் ஜாயின் பண்ணினே?"

வனிதா, "எக்ஸாம் முடிஞ்ச கையோடு. வீட்டில் இருந்தா நான் விஸ்வாவை நினைச்சுட்டு வொர்ரி பண்ணிட்டு இருப்பேன்னு அத்தை உடனே ஜாயின் பண்ண ஏற்பாடு செஞ்சாங்க"

அமுதா, "வார் ஃப்ரண்டுக்குப் போன விஸ்வா எப்போ திரும்பி வந்தான்?"

வனிதா, "வார் ஃப்ரெண்டுக்குப் போய் ஒரு மாசத்தில் he was wounded. டெல்லி AIMSஇல் ட்ரீட்மெண்டுக்கு அட்மிட் ஆனார்"

அமுதா, "My God! என்ன ஆச்சு"

வனிதா, "ட்ரூப்ஸ் போறதுக்கு முன்னாடி சர்வே பண்ண போன சமயத்தில் artillery fire"

அமுதா, "ரொம்ப சீரியஸ்ஸா?"

வனிதா, "உடம்பில் சின்ன சின்ன காயம்தான். கல் முட்டியில் பெரிய அடி. ஆபரேட் பண்ணி சரி பண்ணினாங்க. பழைய நிலைமைக்கு காலில் பலம் வர ரொம்ப நாள் ஆகும்ன்னு சொன்னாங்க. அப்படியும் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க முடியாதுன்னு மெடிகல் ரிப்போர்ட் கொடுத்தாங்க. அதுக்கு அப்பறம் ஆக்டிவ் டியூட்டியில் இருக்க அவருக்கு ஃபிட்னஸ் இல்லைன்னு இங்கே பாங்களூர்லில் இருக்கும் ஆர்மி வொர்க் ஷாப்பில் போஸ்ட் பண்ணினாங்க. Desk Work. வேணும்ன்னா ரிஸைன் பண்ணவும் பர்மிஷன் கொடுத்தாங்க. விஸ்வாவுக்கு அதில் ரொம்ப வருத்தம். ஆர்மி வொர்க் ஷாப்பில் வொர்க் பண்ணிட்டே அவரும் M.B.A பண்ண முடிவெடுத்தார். ரெண்டு பேரும் ஒண்ணா பார்ட் டைம் எம்.பி.ஏ என்ரோல் பண்ணி ரெண்டு வருஷத்தில் முடிச்சோம். அவர் மார்கெட்டிங்க் எலக்டிவ் எடுத்து படிச்சார். நான் ஃபைனான்ஸ்ஸில் ஸ்பெஷலைஸ் பண்ணினேன்"

அமுதா, "வாவ், ரெண்டு பேரும் ஒண்ணா படிக்கறது ரொம்ப இன்டரெஸ்டிங்க்கா இருந்து இருக்குமே?"

வனிதா, "எலக்டிவ் சப்ஜெக்ட்ஸைத் தவிற எங்க ரெண்டு பேருக்கும் ஒரே சிலபஸ்தான். நான் தான் விழுந்து விழுந்து படிச்சேன். எல்லா சப்ஜெக்ட்ஸ்ஸும் அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருந்தது"

அமுதா, "அப்படியா? எப்படி?"

வனிதா, "IMAவில் நிறைய மேனேஜ்மெண்ட்ஸ் சப்ஜெக்ட்ஸ் கவர் பண்ணி இருக்கார். அதைத் தவிற நிறைய அவரா இன்டரெஸ்ட் எடுத்து படிச்சு இருந்து இருக்கார்"

அமுதா, "ம்ம்ம் .. ரெண்டு பேரும் வொர்க் பண்ணிட்டே படிச்சு இருந்து இருக்கீங்க. உங்க ரொமான்ஸுக்கு டைம் கிடைச்சதா?"

வனிதா, "நான் எப்பவும் ரொம்ப ப்ளான் பண்ணி படிப்பேன். விஸ்வா என்னை விட நல்லா ப்ளான் பண்ணி படிப்பார். அவரோட ஃப்ரீ டைமில் என் அசைன்மெண்ட்ஸுக்கு ஹெல்ப் பண்ணுவார். வீக் எண்ட் ஜாலியா சுத்துவோம். அதைத் தவிற அவர் முழுசா ரிகவர் ஆகணும்ன்னு தினமும் காலையில் ரன்னிங்க் அல்லது ஸ்விம்மிங்க் போவார். நானும் கூட போவேன்."

அமுதா, "நீயும் ஓடுவாயா?"

வனிதா, "சில நாள் ஓடுவேன். இல்லைன்னா சைக்கிளில் கூடப் போவேன். கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் பண்ணினார். He really struggled a lot. ஆனா அவரோட டிடர்மினேஷன் எனக்கு எல்லாம் நிச்சயம் வராது"

அமுதா, "ஏன் ரிகவர் ஆக அவ்வளவு நாள் ஆச்சு?"

வனிதா, "Knee jointஇல் இருக்கும் எலும்புகள் முறிஞ்சதால ஆபரேஷன் செஞ்சாங்க. ஆபரேஷன் முடிஞ்ச சமயத்தில் முழங்காலுக்கு அரை மணி நேரம் சிரமம் கொடுத்தா போதும். உடனே கால் முட்டியில் வீக்கம் வந்துடும். அதனால்தான் அவரை ஆக்டிவ் ஸர்வீஸ்ல இருந்து எடுத்தாங்க"

அமுதா, "இப்போ முழுசா ரிகவர் ஆயிட்டாரா?"

வனிதா, "முன்னே இருந்த அளவுக்கு ஆகலை. பட், இப்போ அவருக்கு லிமிட் ரெண்டு மணி நேரம். அதுக்கு பிறகு கால் முட்டி வீங்கிக்கும். பட், அந்தக் காலை வெச்சுட்டு ஹாஃப் மேரத்தான் (Half Marathon) கூட ஓடி ரெண்டு மணி நேரத்தில் முடிச்சு இருக்கார். போன வருஷம் கூட ஓடினார்"

அமுதா, "வாவ், நிஜமாவே அதுக்கு ரொம்ப டிடர்மினேஷன் வேணும். சரி, அப்போ எல்லாம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தறதுக்கு உங்க அம்மா எதுவும் சொல்லையா?"

வனிதா, "வேலைக்கு போக ஆரம்பிச்சதில் இருந்து அம்மா எதுவும் சொல்லலை" என்றவள் சிறு புன்னகையுடன், "ஆக்சுவலா, இனிமேலாவுது பொய் சொல்லாம விஸ்வாவோட வெளியில் சுத்துன்னு சொன்னாங்க"

அமுதா, "சோ, நீ செஞ்ச திருட்டுத்தனம் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு!"

வனிதா, "ம்ம்ம்.."

அமுதா, "ஒண்ணா சுத்துவீங்கன்னா? மூவி, டின்னர் அப்படின்னு போவீங்களா?"

வனிதா, "வாராவாரம் நிச்சயம் ஒரு மூவி இருக்கும். அப்பறம் எதாவுது ஷாப்பிங்க் பண்ணுவோம். நிச்சயம் எதாவுது ஒரு புக் ஷாப் போவோம். அப்பறம் எதாவுது காஃபி ஷாப்பில் உட்காந்து மணிக்கணக்கா பேசிட்டு இருப்போம்"

அமுதா, "ரெண்டு பேரும் நிறைய படிப்பீங்களா?"

வனிதா, "விஸ்வா fiction, non-fiction ரெண்டும் படிப்பார். அதுவும் ஆர்மியில் ஜாயின் பண்ணினதுக்கு பிறகு நிறைய non-fiction படிக்க ஆரம்பிச்சார். நான் mostly fiction தான் படிப்பேன். அவர் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொல்லற non-fiction மட்டும் படிப்பேன். வாங்கற சம்பளத்தில் பாதி புக்ஸுக்கு செலவு செய்யறீங்கன்னு அத்தை சொல்லிட்டே இருப்பாங்க"

அமுதா, "மணிக்கணக்கா பேசிட்டு இருப்போம்ன்னு சொன்னியே? என்ன பேசுவீங்க?"

வனிதா, "என் அஃபீஸில் நடக்கும் விஷயங்கள். நான் அந்த வாரம் நடந்ததை ஒண்ணு விடாம அவருக்கு ஒப்பிச்சுடுவேன். அதுக்கு அப்பறம் புக்ஸைப் பத்தி, ஸ்போர்ட்ஸ் பத்தி. இந்த டாபிக்ன்னு இல்லை. எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் விஸ்வாவோட அணுகுமுறை ரொம்ப வித்தியாசமா இருக்கும். சில சமயம் மணிக்கணக்கா ஆர்க்யூ பண்ணுவோம். அப்பறம் எதிர்காலத்தைப் பத்தியும் நிறைய பேசுவோம்"




அவள் மனத்திரையில் ஒரு காட்சி தோன்றியது ...

ஒரு காஃபி ஷாப்பில் அருகருகே அமர்ந்து இருந்தனர் ...

வனிதா, "இன்னைக்கு என் கூட வேலை செய்யற ஒரு லேடி தன் குழந்தையை ஆஃபீஸுக்கு கூட்டிட்டு வந்து இருந்தாங்க. ரெண்டு மணி நேரம் நான் எந்த வேலையும் செய்யலை"

விஸ்வா, "ஏன்?"

வனிதா, "ம்ம்ம் .. I was playing with that kid. You know I love having kids around"

விஸ்வா, "குழந்தைங்கன்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?"

வனிதா, "ஆமா. When they are kids"

விஸ்வா, "ம்ம்ம்"

வனிதா, "உனக்கு எத்தனை குழந்தைங்க வேணும்?"

விஸ்வா, "ரெண்டு"

வனிதா, "ஏன் ரெண்டே ரெண்டு?"

விஸ்வா, "ஏன் உனக்கு இன்னும் நிறைய பெத்துக்கணும்ன்னு இருக்கா?"

வனிதா, "எனக்கு அரை டஜன் குழந்தைங்க வேணும். அட் லீஸ்ட் நாலு"

விஸ்வா, "ட்வின்ஸா பிறந்ததுன்னா பெண்டு நிமிந்துடும்"

வனிதா, "அதனால தான் ஆறு, நாலுன்னு சொன்னேன்"

விஸ்வா, "ட்வின்ஸை பெத்து வளக்கறது எவ்வளவு சிரமம் தெரியுமா? அதுவும் நானும் ராமும் மாதிரின்னா நிச்சயம் ஏண்டா பெத்துகிட்டோம்ன்னு இருக்கும்"

வனிதா, "ஏன்?"

விஸ்வா, "இட் ஸீம்ஸ் நாங்க குழந்தைங்களா இருந்தபோது ரெண்டு பேரும் மாத்தி மாத்தி தூங்கி முழிச்சுக்குவோமாம். அதே மாதிரி நான் ரொம்ப நாள் தாய்ப்பால் குடிச்சுட்டு இருந்தேனாம். அவன் சீக்கிரம் சாலிட்ஸ் சாப்பிட ஆரம்பிச்சுட்டானாம். கொஞ்சம் வளந்ததுக்குப் பிறகு
சாப்பாட்டு விஷயத்தில் எங்க ரெண்டுக்கும் தனிதனி டேஸ்ட். அவனுக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்காது. ஸ்டில் நானாவுது சகிச்சுட்டு சாப்பிடுவேன். நான் விரும்பி சாப்படற சில ஐட்டங்களை அவன் தொடவே மாட்டான். அம்மா ரெண்டு பேருக்கும் வேற வேற டிஷ்ஷஸ் செஞ்சு கொடுப்பாங்க. இன்னும் கொஞ்சம் பெரிசான பிறகு ஸ்போர்ட்ஸ், ஹாபீஸ் இந்த விஷயங்களிலும் அப்படித்தான். சொல்லப் போனா அவனுக்கு ஸ்போர்ட்ஸ் அவ்வளவா பிடிக்காது. நான் டென்னிஸ் கோச்சிங்க் க்ளாஸ் போறேங்கறதுக்காக அவன் க்ரிக்கெட் கோச்சிங்க் போவான். ரெண்டு பேரையும் வேற கேம்புக்குக் கூட்டிட்டுப் போய் விட்டு திரும்ப கூட்டிட்டு வர அப்பாவும் அம்மாவும் ரொம்ப கஷ்டப் படுவாங்க. வீட்டில் ரிலாக்ஸ்டா இருக்கும் போதும் அப்படித்தான். நான் கேரம் போர்ட் ஆடலாம்ன்னு சொன்னா அவன் போர்ட் கேம்ஸ் எதாவுது ஆடலாம்ன்னு சொல்லுவான். சோ, அப்பாவும் அம்மாவும் எங்க ரெண்டு பேர் கூட தனிதனியா ஆடுவாங்க."

வனிதா, "பயமுறுத்தறையா? ஸ்டில் .. எனக்கு ரெண்டு குழந்தைங்க போதாது"

விஸ்வா, "அப்படியா, முதல் ரெண்டுக்கு பிறகு சொல்லு"

அவன் தோளில் தலை சாய்த்து கனவு காணத் தொடங்கினாள் ...
அமுதா, "எதுக்காவுது சண்டை வந்து இருக்கா?"

வனிதா, "ஓ! பல விஷயங்களில், முக்கியமா என் ட்ரெஸ் விஷயத்தில் அவர் டேஸ்ட் எனக்கு பிடிக்காது. இருந்தாலும் எதையாவுது எடுத்துக்கோன்னு நிப்பார். எனக்கு வேண்டாம்ன்னு நான் பிடிவாதமா சொன்னதும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருப்பார். சில சமயம் கடைக்காரன் முன்னாடி ரூடா பேசுவார். எனக்கு ரொம்ப கோவம் வந்துடும்"

அமுதா, "சோ, திரும்பி வந்துடுவீங்களாக்கும்?"

ஒரு அளவுக்கு சகஜ நிலைக்கு வந்து முகத்தில் விரிந்த புன்னகையுடன் வனிதா, "ம்ம்ஹூம் ... சண்டைப் போட்டுட்டே ரெஸ்டாரண்ட் போவோம். அங்கே போய் உக்காந்துட்டு கண்டின்யூ பண்ணுவோம். கடைசில ரெண்டு பேரும் சாரின்னு சொல்லிட்டு ராசியாயிடுவோம்"

அமுதா, "Tell me. இது வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கு இடையில் வந்த பெரிய சண்டை எது?" என்று வாழைப் பழத்தில் ஊசியேற்றுவதைப் போல் கேட்டார்.

வனிதா, "Nothing"

அமுதா, "அப்போ இந்த விவாகரத்து?"

அதற்கு பதிலேதும் சொல்லாமல் வனிதா மௌனம் காத்தாள்.

ஒரு அளவுக்கு தன்னுடன் சகஜமாக பேசும் நிலைக்கு அவளைக் கொண்டு வந்ததை உணர்ந்த அமுதா மேலும் எதுவும் அன்று பேச விரும்பாமல், "சோ, இதுவரைக்கும் என்னுடன் பேசிய விதம் உனக்கு ஓ.கே தானே?"

வனிதா, "எஸ்"

அமுதா, "அடுத்த சிட்டிங்க் விஸ்வாகூட பேசலாம்ன்னு நினைச்சேன். பட், உன் கூட இன்னும் கொஞ்சம் பேசணும். ஸோ, அடுத்த சிட்டிங்க்கும் உன் கூடத்தான். நாளன்னைக்கு மதியம் மூணறை மணிக்கு. உனக்கு ஓ.கேதானே?"

வனிதா, "ஓ.கே"

அமுதா, "நான் விஸ்வாகிட்டே சொன்னது மாதிரி நீயும் ரெண்டு லிஸ்ட் எழுதிட்டு வரணும். ஒண்ணில் இந்த விவாகரத்து எதுக்குங்கறதுக்கான காரணங்கள். இன்னொரு லிஸ்டில் எதுக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்ங்கறதுக்கான காரணங்கள். ஓ.கே?"





No comments:

Post a Comment