Thursday, September 10, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 17

சத்யன் தூங்கும் மான்சியையும், அவளின் வெளியேத் தெரிந்த மார்பையும், அதன் காம்பை உதட்டால் கவ்வி உறிஞ்சும் குழந்தையையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான், அவன் மகன் மீதே சத்யனுக்கு சற்று பொறாமை கூட வந்தது, ‘ எமகாதகன் எப்படி குடிக்கிறான் பாரு” என்று வெம்பினான்

குழந்தை பால் காலியான காம்பை விட்டுவிட்டு காலை உதைத்துக்கொண்டு மறுபடியும் அழ , “ அடப்பாவி மவனே இவ்வளவு குடிச்சும் பத்தலையா?” என்று அந்த ஜிப்பை மூடிவிட்டு மான்சியை குழந்தைக்கு வாகாக சிறிது கவிழ்ந்தார்ப் போல் படுக்க வைத்து இடது மார்பை திறந்து அதன் காம்பை குழந்தையின் வாயில் வைத்தான் , குழந்தை மறுபடியும் கண்ணைமூடிக்கொண்டு உறிஞ்ச ஆரம்பித்தது



பொறுக்கமுடியாமல் சத்யனும் கண்களை மூடிக்கொண்டான், சற்றுநேரம் கழித்து குழந்தை காம்பை விடுத்து பால் வழியும் வாயுடன் உறங்கியது, சத்யன் மான்சியின் நைட்டி ஜிப்பை மூடி போர்வையால் அவளை போர்த்திவிட்டு மகனை தூக்கிக்கொண்டு கட்டிலைவிட்டு இறங்கினான்,

குழந்தையை தன் தோளில் போட்டு முதுகை தடவி குடித்த பால் ஜீரணமானதும் தொட்டிலில் கிடத்தினான்,

மறுபடியும் மான்சியின் அருகே வந்து படுத்து அவளையேப் பார்த்தான், ‘ ம்ம் காலையில என்னமோ ரொம்ப வீராப்பா பேசினா, இப்போப பாரு என்ன நடக்குதுன்னே தெரியாம தூங்குறதை,, என்று எண்ணமிட்டபடி அவளை நெருங்கி அணைத்துக்கொண்டு இவனும் தூங்கினான்

அதன்பிறகு வந்த பதினைந்து நாளும் சத்யன் அலுவலகம் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மான்சியை விட்டு விலகவில்லை,, ஒவ்வொரு வரி பேச்சிலும் தனது உரிமையை நிலைநாட்டினான்,, நேரம்கிடைக்கும் போதெல்லாம் அவளை தொட்டுக்கொண்டே இருந்தான்,, சமயம் கிடைக்கும் போதெல்லாம் முத்தமிடுவதை தவறாமல் செய்தான், என்ன ஒன்று நெற்றியிலும் கன்னத்திலும் மட்டுமே முத்தமிட முடிந்தது, அவள் உதட்டோடு இவன் உதட்டை சேர்த்தாலே இவன் உணர்வுகள் கட்டவிழ்த்து கொள்வதால் அதை மட்டும் தவிர்தான்,,

ஆனால் மான்சியிடம் முற்றிலும் மாற்றம் தெரிந்தது, சில நாட்களில் அவன் அலுவலகத்தில் இருந்து வருமுன்பே சாப்பாட்டை முடித்திருப்பாள், சில நாட்களில் உடம்பு நல்லாயிருச்சே நானே சாப்பிட்டுக்கிறேன் என்று அவனை தவிர்த்தாள், அவன் அங்கே இருப்பதை கண்டுகொள்ளாமல் அனைவரிடமும் பேசி அரட்டை அடித்தாள், இரவில் அவன் கட்டி பக்கம் கூட திரும்புவதில்லை,, அவன் முன்பு கூச்சமின்றி குழந்தைக்கு பால் கொடுத்தவள், இப்போது அவனிருந்தால் பால் கொடுக்க மறைவிடம் தேடினாள், அவன் பிடிவாதமாக அங்கேயே இருந்தால் முந்தானையால் முழுவதும் மூடிக்கொண்டு பால் கொடுத்தாள், அவன் பார்வைகளை முடிந்தவரை தவிர்த்தாள், ஆனால் இரவு தூங்கப் போகும்முன் அவன் முத்தத்திற்காக காத்திருப்பதை மட்டும் வழக்கத்தில் வைத்திருந்தாள், அதையும் வேண்டாவெறுப்பாக வாங்கிக்கொள்பவள் போல நடித்தாள், அந்த பதினைந்து நாளில் அந்த குடும்பத்தில் அத்தனை பேருக்கும் அவள் ரொம்ப முக்கியமானவளாக இருந்தாள்,

பத்மா சனி ஞாயிறு அன்று பிள்ளைகளுடன் சத்யன் வீட்டுக்கு வந்துவிடுவாள், மான்சி பத்மாவின் பிள்ளைகளோட சிறு பிள்ளையாக மாறி விளையாடுவதை அனைவரும் ரசிப்பார்கள்,, பத்மாவிடம் பேசும்போது அருணாவை பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொண்டாள், ஆனால் பத்மா சத்யனும் அருணாவும் வாழ்ந்த இயந்திர வாழ்க்கையை பற்றியும் நிறைய மான்சிக்கு புரியும் விதமாக சொன்னாள்,

அருணாவை நினைத்து மான்சியின் வயிறு எரிந்தது, தனிமையில் துரோகி என்று குமுறி கண்ணீர் விட்டாள், அப்பவும் சத்யனை நினைத்து கோபம்தான் வந்தது, ஒன்னு பொண்டாட்டியை அடக்கியிருக்கனும் இல்லேன்னா நிரந்தரமா விலகியிருக்கனும், இந்த ரெண்டும் இல்லாம இப்படியொரு வாழ்க்கை வாழ்ந்து எல்லாரை கஷ்டப்படுத்திடாங்க, என்று எரிச்சல் பட்டாள்

மான்சிவிட்டு சத்யன் ஒருநாளும் விலகவில்லை, ஆனால் மான்சி அவனைவிட்டு ஒவ்வொரு நாளும் சிறுகச்சிறுக விலகினாள், ஆனால் அதே குழந்தை மனதுடன் எல்லோருடனும் சகஜமாக இருந்தாள், அவளுக்கு பிடித்த நாய்க்குட்டியை தூக்கி கொஞ்சினாள், தினமும் தோட்டத்தில் பூக்கும் பூக்களை பார்த்து பார்த்து ரசித்தாள்


சத்யன் தொழில் விஷயமாக மும்பை கிளம்பும் நாளும் வந்தது,, சத்யன் மனதுக்குள் மான்சியையும் குழந்தையையும் பிரிவதுப் பற்றி வேதனைப்பட்டாலும், இப்போதைய சூழ்நிலையில் இந்த தற்காலிகமான பிரிவு ரொம்ப அவசியம் என்று உணர்ந்து புறப்பட தயாரானான்,

குழந்தைக்கு பெயர் சூட்டும் போது மான்சிக்கும் தனக்கும் திருமணம் என்பதை அவளிடம் யாரும் சொல்லவேண்டாம், மும்பையில் இருந்து வந்ததும் நானே சொல்லிக்கிறேன் என்று எல்லோரிடமும் சொல்லிவைத்தான்

அன்று இரவு கிளம்பி மான்சியிடம் சொல்லிக்கொண்டு போவதற்காக வந்தான்,, மகனை தூக்கிக் கொண்டு மான்சியின் அருகே அமர்ந்தான், சற்று தள்ளி அமரப்போனவளை ஒரு கையால் இடுப்பை வளைத்து அருகில் இருத்தினான்,

அவள் கழுத்தை தன் உதடுகளால் உரசியபடி “ உன்னையவிட்டுட்டு ரொம்ப தூரம் போறேன் மான்சி, திரும்பி வர்றதுக்கு ஒருவாரம் ஆகும், என்னால உன்னையும் இவனையும் விட்டுட்டு இருக்க முடியுமான்னு தெரியலை, ஆனா நீ என்னைய விட்டுட்டு ரொம்ப சந்தோஷமா இருப்பேன்னு நெனைக்கிறேன்” என்று சத்யன் சொல்ல.. மான்சி அமைதியாக இருந்தாள்

“ என்ன மான்சி பேசமாட்டியா?’ என்று சத்யன் அவளை உலுக்க,, மான்சியிடம் எந்த பதிலும் இல்லை

சத்யன் எழுந்து மகனை மறுபடியும் தொட்டில் கிடத்திவிட்டு வந்து மான்சியை தோள்தொட்டு தூக்கி நிறுத்தி “ மான்சி இந்த ஏழு நாளைக்கும் எனக்கு நரகமாத்தான் இருக்கும் மான்சி,, உன் முத்தத்தால் மட்டுமே அதை சொர்க்கமாக்க முடியும், ப்ளீஸ் எனக்கு ஒரேயொரு முத்தம் உன்கிட்ட இருந்து வேனும் மான்சி,, இத்தனைநாளா நான் கொடுத்தேன், இன்னிக்கு நீ முத்தம் தரனும் மான்சி ப்ளீஸ்” என்று சத்யன் கெஞ்சினான்

சற்றுநேரம் அமைதியாக இருந்தவள் “ ம்ஹூம் என்னால் முடியாது” என்று கூறிவிட்டு அவன் கையை உதறித்தள்ளிவிட்டு பால்கனியில் போய் நின்றுகொண்டாள்

வெட்கத்துடன் சினுங்கி மெல்ல மெல்ல அவனை முகத்தை நெருங்கி முத்தமிடுவாள் என்று எதிர்பார்த்த சத்யனுக்கு இதுபோல் அவள் உதறித்தள்ளியது பலத்த அதிர்ச்சியாக இருந்தது, நான் ஊட்டியில் பார்த்த மான்சியா இது என்று அவனுக்கு குமுறியது

அவளை மறுபடியும் தேடிப்போய் முத்தம் கேட்க அவன் தன்மானம் ஒத்துக்கொள்ளவில்லை,, அவள் முதுகையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு அறையைவிட்டு வேகமாக வெளியேறினான், அவன் உதைத்து மூடியவேகத்தில் கதவு அதிர்ந்தது

அந்த சத்தம் கேட்டு திரும்பிய மான்சி அறையில் அவனை காணாது தவித்து வெளியே ஓடிவந்து பார்த்தபோது சத்யன் காரில் ஏறி கதவை மூடுவதுதான் தெரிந்தது,, சற்றுநேரத்தில் கார் கிளம்பி செல்ல, மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது

கண்ணீர் வழிந்த முகத்தை மூடிக்கொண்டு அறைக்குள் ஓடி கட்டிலில் விழுந்தாள்,, முத்தம் தரமுடியாது என்றதும் பின்னோடு வந்து தன்னை அணைத்து தூக்கி வந்து கட்டிலில் கிடத்தி தனக்கு தேவையானதை எடுத்துக்கொள்வான் என்று எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு சத்யன் கோபமாக சென்றதும் அவளால் தாங்கமுடியவில்லை

‘ நான் என்ன பண்ணேன் ஏன் என்மேல இவ்வளவு கோவமா போறாரு’ என்று தன் தவறு என்ன என்று தெரியாமலேயே குமுறினாள் மான்சி

அவளை குமுறலை பார்க்கவோ கேட்கவோ முடியாத தொலைவுக்கு சத்யன் பயணமாகிக்கொண்டு இருந்தான்,, அவன் மனமும் தவித்து உருகியது,, ஒரு முத்தம் தர மறுத்த மான்சியை நினைத்து கோபம் வந்தது,, வித்தியாசமான கோபம் இது, அவளை ஊருக்கு போவதை நிறுத்திவிட்டு தூக்கிவந்து புரட்டி எடுத்திருக்க வேண்டும், அப்படியே விட்டுட்டு வந்தது தப்பு என்றது சத்யனின் காதலால் தேய்ந்த இதயம் 


சத்யன் மான்சி இருவரின் நேரடியான வாக்குவாதத்திற்கு பிறகு மான்சி மற்றவர்கள் பார்வைக்கு எந்த உணர்சியுமில்லாமலாமல் இயந்திரம் போலானாள், ஆனால் அவள் மனம் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் சிந்தித்துக்கொண்டே இருந்தது, சகலத்தையும் அலசி ஆராய்ந்தது, அவள் சிந்தனைகளின் முடிவுகள் அத்தனையும் சத்யனுக்கு சாதகமாக இருந்தது,

சிலநாட்களாக அவள் சத்யன் மீது சுமத்திய குற்றசாட்டுகள் அத்தனைக்கும் அவள் மனமே பரிந்துகொண்டு வந்து பதில் சொன்னது, சத்யன் மீது நீ சுமத்திய குற்றங்களுக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அவள் மனம் அவனுக்கு வக்கீலானது, சத்யனின் செயல்களுக்கு அவன் கூறிய நியாத்தை விட இவள் மனம் தேடி கண்டுபிடித்து அதிகமாக நியாயம் கற்பித்தது

சத்யன் அருணாவின் கணவன் என்ற தடையையும் பத்மா வந்து அருணா சத்யன் வாழ்வை பற்றி சொன்னதும் போன இடம் தெரியவில்லை, மனசுக்குள் மொட்டுவிட்ட காதலை முழுமையாக உணர சத்யனைவிட்டு அவள் சற்று விலகி இருந்தால்தான் முடியும் என்று ஒதுங்கினாள்,

அரை மயக்கத்தில் தான் இருந்தபோது சத்யன் தனக்கு பிரசவம் பார்த்த நிமிடங்களை தன் நினைவில் கொண்டு வந்தாள், அந்த நிமிடம் அவள் காதுகளில் விழுந்த சத்யனின் துடித்த குரல், தன் உதரத்தை சுத்தப்படுத்தும் போது அரை மயக்கத்திலேயே இவள் கூசியபோது “ ஒன்னும் இல்லம்மா, அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு” என்று அவன் கூறிய ஆறுதல் வார்த்தைகள், அருவருப்பின்றி தனது உதிரத்துணிகளை அலசி காயவைத்தது, தன்னை பாத்ரூமுக்கு அழைத்துச்சென்று உதவியது அதன்பின் வெந்நீர் ஊற்றி அந்த இடங்களை சுத்தமாக கழுவியது, மறுநாள் காலை வெந்நீரால் தனது உடலை துடைத்து சுத்தப்படுத்தி உடை அணிவித்தது, குழந்தைக்கு பாலூட்ட உதவியது, தனக்கு சோறு ஊட்டியது, என எல்லாம் நினைவில் வந்து இவற்றுக்கெல்லாம் பெயர் பிராயச்சித்தமா என்று அவளை சாடியது அவளின் மனது

விலகியிருந்த நாட்களில் தன் காதலை முழுமையாக உணர்ந்தாள் மான்சி,, தனக்கு வந்திருப்பது சினிமா காதல் இல்லை என்று மான்சிக்கு நன்றாக புரிந்தது,, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஏற்பட்ட ஆத்மார்த்தமான காதல் என்பதை நன்றாகவே புரிந்துகொண்டாள், தான் ஏன் இதற்கு முன் பலமுறை சத்யன் முன்பு அப்படி வெளிப்படையாக நடந்துகொண்டோம் என்ற விளக்கமும் இப்போது அவளுக்கு புரிந்தது, அவனின் அன்பு கொடுத்த அன்யோன்யம் தான் அவனிடம் அவ்வளவு நெருக்கமாக இருக்கமுடிந்தது என்றுகூட புரிந்தது, அவன் கொடுத்த முத்தத்திற்க்கும் பார்வைக்கும் அவள் மனம் ஏன் ஏங்கியது என்று அவளுக்கு புரிந்தது

ஆனால் இதையெல்லாம் சத்யனிடம் சொல்ல நினைத்தபோது அவன் அவளிடம் கோபித்துக்கொண்டு மும்பைக்கு போய்விட்டிருந்தான்,, சத்யனிடம் இனி எப்படி நடந்துகொள்வது என்றுகூட மான்சி புரியவில்லை, காதலை உணர்ந்த அவளது உள்ளம் அதை எப்படி சத்யனிடம் வெளிப்படுத்துவது என்று புரியாமல் தவித்தது,
சத்யன் அவளை விட்டு விலகிப் போனதும் அவளின் கண்களில் ஒரு நிரந்தர ஏக்கம், நடையில் பழைய துள்ளல் இல்லை, சத்யன் திரும்பி வந்ததும் முன்புபோல் தன்னிடம் பேசுவானா என்ற ஏக்கம் கலந்த பயம் அவள் மனம் முழுவதும் வியாபித்தது, ‘அப்படி பேசாவிட்டால் அவரைவிட்டுட்டு போகமாட்டேன், அவர் மடியிலேயே என் உயிரேயே விட்டுவிடுவேன் என்று பைத்தியக்காரத்தனமான சிந்தனையெல்லாம் அவளுக்கு வந்தது



சினிமாவில் காதலுக்காக செத்துப்போன நடிகர்கள் எல்லாம் அவளுக்கு ஞாபகத்தில் வந்து ‘ பாவம் அவங்களும் இப்படி பீல் பண்ணித்தான் செத்துருப்பாங்களோ?, என்று கேனத்தனமாக யோசித்தாள், பிறகு சினிமாவுடன் வாழ்க்கையை ஒப்பிடக்கூடாது என்று சத்யன் சொன்னது ஞாபகத்திற்கு வர,, ச்சேச்சே அவங்க காசு வாங்கிகிட்டு செத்தாங்க என்று தன் தலையில் நறுக்கென்று குட்டிக்கொண்டாள்

மறுநாள் காலை என்னை குளியல் குளித்துவிட்டு பால்கனியில் நின்றுகொண்டு தலையை உலர்த்தியவள் பாக்கத்தில் இருந்த சத்யனின் அறையைப் பார்த்துவிட்டு ஏதோ நினைப்பில் அவன் அறைக்குள் போனாள்

அவன் அறை ஒரு பணக்கார இளைஞனின் அறையைப் போல் கண்ட குப்பைகளும் இல்லாமல் மிக நேர்த்தியாக இருந்தது,, ஷெல்பில் அடுக்கிவைத்திருந்த புத்தகங்களை எடுத்து புரட்டிப் பார்த்தாள், ஆங்கிலம் ஒரு பக்கமும் தமிழ் ஒரு பக்கமும் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, புத்தங்கள் அத்தனையும் சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய காலத்தால் அழியாத கலைக்காவியங்களாக இருந்தது, ‘ நேரமிருக்கும்போது படிக்கலாம், என்று வைத்துவிட்டு அடுத்த அலமாரியை திறந்தாள்,

அவனது உடைகள் சலவை செய்யப்பட்டு அடக்கப்பட்டிருந்தது, காதலோடு அந்த துணியடுக்கை வருடிவிட்டு நகர்ந்து வந்து அவனது கட்டிலில் அமர்ந்தாள், அதிலிருந்த தலையணையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டாள்,
சத்யன் அருணாவை திருமணம் செய்வதற்கு முன்பு இந்த அறையில், இந்த கட்டிலில், இந்த தலையணையில் தலைவைத்துதானே தூங்கியிருப்பான் என்ற நினைப்பில் உடலும் உள்ளமும் சிலிர்க்க அந்த தலையணைக்கு காதலோடு முத்தமிட்டாள், அந்த தலையணையை அணைத்தவாறு அந்த கட்டிலில் சிறிதுநேரம் படுத்தவள் மறுபடியும் எழுந்து அந்த அறையை வலம்வந்தாள்,,

சத்யன் உபயோகிக்கும் சாதரணமான பொருட்கள் கூட அவள் தன் காதலனின் காதல்ச் சின்னமாக தெரிந்தது, கட்டிலில் படுத்துக்கொண்டு டிவியின் ரிமோட்டால் டிவியை ஆன் செய்து சத்யன் இப்படித்தானே ஸ்டைலாக படுத்து டிவிப் பார்ப்பான் என்று நினைத்து ரசித்தாள்,

அறையில் இருந்த ஜன்னலருகே சென்று சத்யன் அந்த இடத்தில் எப்படி நின்றிருப்பான் என்று யூகித்து கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு சுவற்றில் ஒருக்களித்து ஸ்டைலாக சாய்ந்து ஜன்னலின் திரைச்சீலையை தள்ளிவிட்டு தோட்டத்தில் இருந்து வந்த பூக்களின் மணம் நிறைந்த காற்றை ஒரே மூச்சாக உள்ளிழுத்து இப்படித்தான் நின்று ரசித்திருப்பான் என்று கற்பனை செய்து குதூகலித்தாள்

ஒவ்வொரு இடத்திலும் நின்று அமர்ந்து தன் காதலனை கற்பனையில் கண்டு ரசித்தவள் அங்கிருந்த பாத்ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே போனாள், அங்கே வந்த பிறகு சத்யன் அந்த பாத்ரூமுக்கு வந்து குளிப்பது வழக்கம், அங்கேயிருந்த அவனது சோப்பை எடுத்து நுகர்ந்து பார்த்தாள்,,

சத்யன் குளித்துவிட்டு வந்து மான்சியின் மடியில் குழந்தையை கொஞ்ச வரும்போது அவன் மீது வரும் சுகந்தமான சோப் வாசனை, சமீபத்தில் ஒருநாள் நடந்தது மான்சிக்கு சட்டென்று நினைவு வந்தது, அன்றும் சத்யன் குளித்துவிட்டு தலையில் சொட்டிய ஈரத்துடன் குழந்தையை கொஞ்ச வந்தான், அப்போது மான்சி தனது முந்தானையால் மூடிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருக்க, அவளை பொய் கோபத்துடன் முறைத்துவிட்டு மூடியிருந்த முந்தானையை விலக்கி மகனுக்கு முத்தமிடுகிறேன் என்று நீர் சொட்டும் தலையால் அவள் பால் கொடுத்த மார்பை வருடியதும், அதன்பின் அவன் நகர்ந்து சென்றபிறகு அந்த மார்பில் துளித்துளியாய் நீர் தெளித்திருந்ததும் இன்று ஞாபகத்திற்கு வர மான்சி உடல் கூசி சிலிர்க்க அவளையுமறியாமல் அவளது விரல்கள் அன்று நீர்பட்ட மார்பை இன்று ஆடைக்கு மேலாகவே துடைத்துவிட்டது, அன்று ஏற்படாத குறுகுறுப்பும் கிறக்கமும் இன்று ஏற்பட்டது,, 


சிலிர்ப்புடனேயே பாத்ரூமை விட்டு வெளியேற திரும்பியவளின் கண்களில் அங்கிருந்த அழுக்கு கூடை தென்பட அதை எட்டிப்பார்த்தாள், அதில் சத்யனுடைய அழுக்கு உடைகள் கிடந்தது, அதிலிருந்து ஒரு நீலநிற சட்டையை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள், அந்த சட்டை அவன் மும்பை செல்வதற்கு முதல் நாள் உடுத்தியிருந்தது, அவளுக்கு சத்யனையே அணைத்தது போலிருந்தது, சிறிதுநேரம் அந்த சட்டையை அணைத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி அப்படியே நின்றிருந்தாள்

பிறகு அந்த சட்டையை மடித்து சுருட்டிக்கொண்டு சத்யன் அறையிலிருந்து தலையை வெளியே நீட்டி யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வேகமாக தனது அறைக்கு வந்து தனது தலையணைக்கு கீழே வைத்துக்கொண்டாள், மறுபடியும் போய் கதவை தாளிட்டு விட்டு வந்து படுக்கையில் விழுந்து சத்யனின் சட்டையை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டாள்,,

அந்த அழுக்கு சட்டை முழுவதும் சத்யனின் வாசனை, அவளை முத்தமிட அவன் நெருங்கும் போது வருமே சிகரெட்டும், வியர்வையும், அவன் உபயோகிக்கும் பாடிஸ்பேரேயும் கலந்த ஒரு தீவிரமான ஆண்மை வாசனை அதே வாசனை அந்த அழுக்குச் சட்டையில் வந்ததது, மான்சி வேகவேகமாக மூச்சை இழுத்து இழுத்து சுவாசித்தாள், தனது நெஞ்சம் முழுவதும் அந்த ஆண்மை நெடியை நிறைத்து வைத்தாள்

அப்போது அவள் மகன் பசியால் அழுது அவளை அழைக்க, மறுபடியும் சட்டையை தலையணைக்கு கீழே மடித்து வைத்துவிட்டு மகனை தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்,

குழந்தை பாலுக்காக உதட்டை பிளந்துகொண்டு காம்பை தேட, மான்சி ரவிக்கையின் கொக்கிகளை விடுவித்து பால் காம்பை வெளியே எடுத்து குழந்தையின் வாயில் வைத்தாள், குழந்தை தன் உதடுகளால் கப்பென்று பற்றிக்கொண்டு பாலை உறிஞ்ச, இத்தனை நாளும் இல்லாமல் இன்று மான்சிக்கு உடலெல்லாம் கூசி மயிர்க்கூச்செரிந்தது, கண்களை மூடியபடி குழந்தையின் தலையை தன் மார்போடு அழுத்திக்கொண்டாள்

அதன் பிறகு மான்சியின் கால்கள் தரையில் நடக்கவில்லை, மிதந்தது,, பகலில் கண்களை மூடியபடியே ஆயிரமாயிரம் அழகான ரோஜாக்களை தன் கனவில் கண்டு நிஜத்தில் மலர்ந்தாள்,, சத்யன் தனக்கு பிரசவம் பார்த்த அந்த நிமிடங்களை தன் மனதில் கொண்டு வந்து அடிக்கடி அழகாக வெட்கப்பட்டாள்

இரவுபெய்த சாரல் மழையை குதூகலத்துடன் ரசித்து தனது நுனிநாக்கை நீட்டி மழைத்துளியை அதில் வாங்கி தேன் ரசித்து மழைநீரை குடித்தாள், அப்போது வந்த பூங்கோதை “ அய்யோ பிள்ளைப் பெத்த பச்சை உடம்ப வச்சிகிட்டு மழையில போய் நனையுறயே” என்று கடிந்தபடி அவளை இழுத்துவந்து தலைத்துவட்டியதையும் ரசித்தாள்

அவள் பார்க்கும் பொருட்கள் யாவும் அழகானது, காணும் கனவுகள் அனைத்தும் இனிமையானது, அவளுக்கு மன்மதனும் ரதியும் நண்பர்களாக மாறி காதலைப்பற்றிய பல பாடங்களை நடத்தி காதல் ரோஜாக்களை அவளுக்கு அள்ளி கொடுத்தார்கள்

அவளை பீடித்த காதல் நோய் படுத்தீவிரமாகி, வெகுசீக்கிரத்தில் அவள் ரத்தத்தில் கலந்து அவளை நிரந்தர காதல் நோயாளியாக மாற்றியது 




“ அன்று நீ செய்த புன்னகைக்கு எல்லாம்,,

“ இன்று அழகியதொரு அர்த்தம் சொல்கிறது,,

“ என் உள் மனது!

“ இன்று நான் சிந்தும் கண்ணீர்த்துளிகளுக்கு எல்லாம்,,

“ நீண்டதொரு ஆறுதலை சொல்ல எப்போது,,

“ நீ வருவாய் கண்ணா!


No comments:

Post a Comment