Tuesday, September 29, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 6

கழட்டிய பேன்ட் சட்டையை ஓரமாக காலால் தள்ளியவன் கைலியை இடுப்பில் கட்டிக்கொண்டு அவளை நிதானமாக ஏறிட்டவன் “ போகமுடியாது, ஏன்டி உன் மனசுல என்னதான் நெனைச்சுக்கிட்டு இருக்க, நேத்து என்னைய அவ்வளவு கேவலமா நெனைச்சு அப்படி நடந்துக்கிட்டயே, என்னிக்காவது ஒருநாள் உன்னைய தவறா ஒரு பார்வை பார்த்திருப்பேனா?, வக்கிரமா ஒரு வார்த்தை பேசியிருப்பேனா? ஆனா நேத்து நீ என்னைய அவ்வளவு கேவலமா நெனைச்சிட்டியே மான்சி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் பொண்ணு சுகத்தையே அறியாத உத்தமன் இல்லை, பொண்ணுங்க உடம்பை ரசிக்கத் தெரியாதவனும் இல்லை, ஆனா பணம் வாங்கிகிட்டு படுக்க வர்ற வேசியா இருந்தாக்கூட அவளோட சம்மதம் இல்லாம அவளைத் தொடக்கூடாதுன்னு நெனைக்கிறவன் நான், அப்படிப்பட்ட நான் உன்மேல பாய்ஞ்சுடுவேன்னு நெனைச்சுத்தானே நேத்து அந்தமாதிரி நடந்துக்கிட்ட?, இன்னிக்கு ஒரு உண்மையை சொல்றேன் கேட்டுக்க,, நமக்கு கல்யாணம் ஆன இந்த மூனு மாசத்துல நீ என் பொண்டாட்டி என்கிற நெனைப்பு ஒருநாளும் எனக்கு வரலை, இன்னும் சொல்லப்போனா உன் அழகை ஜாடைமாடையாக் கூட ரசிக்க பிடிக்கலை, ரோட்டுல போகும்போது எதிரில் வர்ற பொண்ணோட அழகை ரசிச்ச அளவுகூட உன்னை எனக்கு பிடிக்கலை, இவ்வளவு ஏன் நீ என் முன்னாடி நிர்வாணமா வந்து நின்னாகூட நான் உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்,

மொத்தத்தில் நீ எந்தவிதத்திலும் என்னை கவரலை மான்சி,, அதனால நீ என்னை நெனைச்சு பயப்படவேண்டியது இல்லை தைரியமா இரு” என்று கூறிவிட்டு படுக்கையை எடுத்துக்கொண்டு பால்கனிக்குப் போய்விட்டான்

விதிர்த்துப் போய் அமர்ந்திருந்தாள் மான்சி, அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூர் அம்புகளாக அவளை இதயத்தை குத்தி கிழித்தது, இவனுக்கு எவ்வளவு கர்வம், என்று அவள் மனம் தீயாய் கொதித்தது, ஒரு வேசியோட என்னை ஒப்பிட்டு பேசிட்டானே என்ற கோபம் கனலாய் கொந்தளித்தது, அவன் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் அவள் காதுகளில் ஒலித்து அவளை இறுதி முடிவுக்கு தூண்டியது,

பேசிய சத்யன் போதையில் போய் படுத்து தூங்கிவிட,, மான்சி கொஞ்சம் கூட தூக்கமின்றி தவித்தாள், அவளின் கணக்குக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் இரண்டு நாள் கழித்து எடுக்கவேண்டிய முடிவை இப்போதே எடுக்க தூண்டியது அவன் பேச்சு,,

அன்று காலை சத்யன் விழித்து எழுந்து வெளியே போகும் முன் எழுந்த மான்சி படுக்கை வைத்துவிட்டு நிமிர்ந்தவனை எதிர்கொண்டு “ உன்கூட பேசனும், அப்பாவோட ரூம்ல வெயிட் பண்ணு நான் கொஞ்சநேரத்தில் வர்றேன்” என்றவள் அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்தாள்

நேற்று இரவு குடித்துவிட்டு பேசியது சத்யனுக்கு ஞாபகத்தில் இருந்தது, அதற்காகத்தான் அப்பாவிடம் பஞ்சாயத்து பேச கூப்பிடுகிறாள் என்று நினைத்த சத்யன், தோட்டத்து பாத்ரூமில் குளித்துவிட்டு வந்து சாந்தா கொடுத்த காபியை வாங்கி குடித்துக்கொண்டே மான்சி அவள் அப்பா அறையில் காத்திருக்கச் சொன்ன தகவலை சொன்னான்,

சாந்தாவுக்கும் குழப்பமாகத்தான் இருந்தது,, எதற்காக இவ்வளவு காலையில அப்பாவோட ரூம்ல இருக்கச்சொன்னா என்று யோசித்த வாறு தன் கணவரின் அறைக்கு சத்யனுடன் போனாள்

செய்திதாள் படித்துக்கொண்டு இருந்தவரிடம் மான்சி சொன்னதை சொல்லிவிட்டு இருவரும் அவருக்கு எதிரேயுள்ள சோபாவில் அமர, மான்சி கையில் ஒரு லெதர் பையுடன் அறைக்குள் வந்தாள்

சாந்தாவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு “ நீயும் இங்கதான் இருக்கியாம்மா, நல்லதாப்போச்சு” என்றவள் அமராமல் நின்றபடி அந்த லெதர் பேக்கின் ஜிப்பை திறந்து ஒரு பாய்ஸன் பாட்டிலையும், ஒரு கணமான கவரையும் எடுத்து டீபாயின் மீது வைத்தாள்,

ஆராவமுதன் புருவங்கள் முடிச்சிட “ மான்சி என்ன இது?” என்றார்


மார்புக்கு குறுக்கே கைகட்டிய மான்சி நிமிர்ந்து நின்று “ ஒன்னு டைவர்ஸ் பேப்பர்ஸ் இருக்குற கவர்,, இன்னொன்னு குடிச்ச அஞ்சே நிமிஷத்தில் உயிரை எடுக்கும் பாய்ஸன், அன்னிக்கு எனக்கும் இவனுக்கும் கல்யாணத்தை நடத்த நீங்க சொன்னீங்களே,, இந்த கல்யாணம் நடக்கலைன்னா என்னை யாரும் உயிரோட பார்க்கமுடியாதுன்னு,, அதே டயலாக்கை தான் நான் இப்போ சொல்லப்போறேன் டாடி, அதாவது என்னோட டைவர்ஸ் பேப்பரில் இவன் கையெழுத்து போடலைன்னா நான் இந்த பாய்சனை குடிச்சிட்டு செத்து போயிடுவேன்,, இந்த ஒரு பாட்டிலை நீங்க எடுத்து உடைச்சிட்டாலும் என்கிட்ட இன்னும் நாலு பாட்டில் இருக்கு,, அதனால தடுத்து பேசாம எனக்கு இவன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி குடுக்குறதை பாருங்க” என்று மான்சி ஒரு நிமிர்வுடன் சொல்ல..

மற்ற மூவரும் அதிர்ந்தாலும், என்றாவது ஒரு நாள் இப்படியொரு நிலைமை வரும் என்று எதிர்பார்த்திருந்த சத்யனுக்கு அதிர்ச்சி சற்று குறைவுதான்

ஆராவமுதன் ஒரு நெடிய மூச்சுடன் நிமிர்ந்து “ மான்சி இது வாழ்க்கை, இப்படி விளையாட்டுத்தனமா முடிவெடுக்க கூடாதும்மா, சத்யனுக்கு என்ன குறை மான்சி?” என்று கேட்க

“ டாடி இதே வாழ்க்கை பந்தத்தைதான் நீங்க விளையாட்டுத்தனமா அன்னிக்கு ரெண்டே நிமிஷத்தில் முடிவு பண்ணீங்க,, ஆனா நான் உங்களை மாதிரி இல்லை டாடி, கல்யாணம் ஆகி என்பத்தெட்டு நாள் கழிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன், இந்த தொன்னூரு நாளில் என் மனசு மாறி இவனோட வாழமுடிமான்னு யோசிக்கத்தான் இத்தனை நாள் டைம் எடுத்துக்கிட்டேன், ஆனா ஒரு பர்ஸன்ட் கூட இவனை எனக்கு பிடிக்கலை டாடி, இப்போ உங்களுக்கு ரெண்டே சாய்ஸ், ஒன்னு எனக்கும் இவனுக்கும் டைவர்ஸ்,, இல்லேன்னா என்னோட அகால மரணம்,, எது பெஸ்ட்டுன்னு நீங்களே சூஸ் பண்ணுங்க டாடி” என்று மான்சி தீர்க்கமாக கூற

சாந்தா தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள், ஆராவமுதன் என்ன செய்வதென்றே புரியாமல் சத்யனை பார்த்தார்

அமைதியாக தலைகவிழ்ந்திருந்த சத்யன் ஒரு முடிவுடன் எழுந்து “ மாமா மான்சி சொல்றமாதிரி எனக்கும் இந்த வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை,, நீங்க ஏற்படுத்தி வச்ச பந்தம் பொய்த்துப் போகக்கூடாதுன்னு இத்தனைநாளா பொறுத்திருந்தேன்,, இனிமேல் அது தேவையில்லை மாமா, இனி எந்த பசை போட்டாலும் இந்த கல்யாண பந்தம் ஒட்டாது, எனக்கும் இதுல முழு சம்மதமே” என்றவன் அந்த கவரை எடுத்து பிரித்து அதிலிருந்த பேப்பர்களை எடுத்து மார்க் செய்திருந்த இடங்களில் தனது கையெழுத்தை பதித்தான்

கையெழுத்தை போட்டுவிட்டு நிமிர்ந்த சத்யன்,, “ இப்பவாவது புரிஞ்சுக்க நான் உன்னோட அழகுக்கோ, பணத்துக்கோ ஆசைப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலை, மாமாவோட கௌரவத்துக்காகத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன், அதுக்காகத்தான் இத்தனை நாளா இங்கே இருந்தேன், இனிமேல் எனக்கும் இந்த வீட்டுக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை மான்சி, நான் கிளம்புறேன்” என்றவன் வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினான்,

மாடிக்குப் போய் தனது உடைமைகளை ஒரு பேக்கில் எடுத்துப்போட்டுக்கொண்டு மறுபடியும் கீழே வந்தான், ஆராவமுதனின் அறைக்குள் நுழைந்து “ நான் கிளம்புறேன் அத்தை, ஊருக்குத்தான் போறேன், இனிமே மதுரையிலயே இருந்தா அது ரெண்டு பேருக்குமே சங்கடம், அதனால பாபநாசத்துக்கே போயிர்றேன்” என்று கூறிவிட்டு வெளியே வந்தவன்,, அடுத்த ஒரு மணிநேரத்தில் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் பயணமானான்

ஆனால் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த இருவருமே தங்களின் ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்பதை அலசி ஆராய மறந்து நிரந்தர பிரிவு எனும் முடிவை தேர்தெடுத்திருந்தார்கள்

இத்தனை நாட்களாக இருவருக்குள்ளும் அமைதியாகவும் ஆவேசமாகவும் நடந்த போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்தது,

" இந்த பூவுலகே,, பூவையான உன் அழகை கண்டு "

" இமைக்க மறந்து போனது!

" ஆனால் நான் மட்டுமே அறிவேன்"

" நீ பூவையல்ல,,

"முட்களால் நெய்யப்பட்ட படுக்கை என்று!

" நான் மட்டுமே அறிவேன்,,

" இப்புறம் துளைத்து அப்புறம் வரும்,,

" இருபக்கமும் கூர்மையான ஆயுதம்,

" உன் பார்வை என்று !

" நான் மட்டுமே அறிவேன்,,

" உனது வார்த்தைகள் அனைத்தும்,,

" கொடிய விஷம் தடவிய,,

" கூர் அம்புகள் என்று!

" நான் மட்டுமே அறிவேன்,,




பஸ்ஸில் ஏறியமர்ந்த சத்யனின் மனதில் சொல்லமுடியாத வேதனை பந்தாக அடைத்தது, நேற்று இரவு குடித்துவிட்டு வந்தது எவ்வளவு தவறு என்று இப்போது புரிந்தது, மான்சியை தனது வார்த்தைகள் ரொம்பவே காயப்படுத்தியிருக்கும் அதனால்தான் விடிந்ததும் இப்படியொரு முடிவை தேர்தெடுத்துவிட்டாள் என நினைத்தவன்,

சட்டென்று மூளையில் பொறித்தட்ட நேற்றைய வாக்குவாதம் மட்டுமே அவளுடைய விவாகரத்து முடிவுக்கு காரணம் என்றால், இரவோடிரவாக விவாகரத்துப் பத்திரங்கள் எப்படி வந்திருக்கும்,, ஆக இந்த பேப்பர்கள் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டதாகத்தான் இருக்கும், யார் கண்டது கல்யாணம் முடிந்த மறாவது நாளே கூட விவாகரத்துப் பத்திரங்களை ரெடி செய்திருக்கலாம், என்ற எண்ணம் மனதை பாரமாக அழுத்தியது

பகல் வெளிச்சம் கண்ணை கூசச்செய்ய, கண்ணாடியை இழுத்து மூடிவிட்டு அதிலேயே தலைசாய்த்து கண்களை மூடினான்,, மான்சி ஒவ்வொரு வார்த்தைகளும் இதயத்தை ஊசியாக குத்தியது, இந்த மூன்று மாதத்தில் என்மேல எந்தவிதமான அபிப்பிராயமும் வரவில்லை என்று சொல்லிவிட்டாளே ராட்சசி, என்று எண்ணும்போதே அதே வார்த்தைகளை நேற்று இரவு இவன் அவளிடம் சொன்னது ஞாபகம் வந்தது, அதே வாக்கியங்களை வார்த்தைகளை மாற்றிப்போட்டு நாகரீகமாக மான்சி காலையில் சொல்லிவிட்டாள், ஆகமொத்தம் அவளுக்கு கோடிட்டுக் காட்டியது நாம்தான் என்று சத்யனுக்கு உறைக்க “ச்சே” என்று வலது கையால் நெற்றியில் அடித்துக்கொண்டான், நல்லவேளையாக அவனுக்குப் பக்கத்தில் யாருமேயில்லை

நிர்வாணமாக வந்து நின்னாக்கூட ஏறெடுத்தும்ப் பார்க்கமாட்டேன் என்று வீம்பாக சொன்னது சத்யனுக்கு ஞாபகம் வந்தது, ம்ஹும் அப்படி அவ வந்து நின்னா தன்நிலைமை எப்படியிருக்கும் என்று சத்யன் கண்மூடி யோசித்தான், அவனையும் அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு சூடாக வந்தது,

அவள் அழகு தன்னை பாதிக்கக்கூடாது என்றுதான் சத்யன் இரவில் வேன் ஓட்டும் வேலையை தேர்ந்தெடுத்தது , இது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, திருமணம் நடந்த சில நொடிகளிலேயே மான்சியின் அலட்சியமும் அவனைப் பார்த்த அருவருப்பான பார்வையும் தான் சத்யன் அவளிடத்தில் பெரிதும் ஒதுங்க காரணம், மான்சியைப் பற்றி அவன் மனதில் நாளுக்குநாள் துளிர்விடும் ஆசையையும் அவ்வப்போது கிள்ளியெறிந்தான், தன்னைப் பிடிக்காதவளை என்னவென்று சொல்லி தன்னிடம் சேர்ப்பது என்ற தெளிவான சிந்தனையே அவளை விலக்கி, விலகி இருக்க காரணமாயிருந்தது, ஒவ்வொரு நிமிடமும் மான்சியை விட்டு பிரியவேண்டும் என்பதை சொல்லிச்சொல்லி மனதை தயார்படுத்தினான்,

ஆனால் எவ்வளவுதான் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு மவுனமாக இருந்தாலும், அவளது அலட்சியத்தையும் அருவருப்பான பார்வையையும் சத்யனால் தாங்கமுடியாமல் தான் அவளுக்கு பதிலுக்கு பதில் வார்த்தையாடியது, அதுவே அவள் மனதில் மேலும் மேலும் வன்மம் வளர நாமே உதவுகிறோம் என்றும் கூட சத்யனுக்கு தெரியும், இருந்தாலும் அவளிடம் தன்மானத்தை மட்டும் விட்டுக்கொடுக்க இறுதிவரை மனமே வரவில்லை
இனிமேல் யோசித்து பயனில்லை என்று சத்யனுக்குத் தெரிந்தாலும், மனது திரும்பத்திரும்ப மான்சி கூறிய வார்த்தைகளையே சுற்றிவந்தது, என்னை அவளுக்கு பிடிக்காதுன்னு தெரியும், ஆனா ஒரு பர்ஸன்ட் கூட அவளுக்கு என்னை பிடிக்காம போச்சே, என்று குமைந்தான் சத்யன்,

மான்சி பிரிவுக்காக சாவைத் தேர்ந்தெடுப்பாள் என்பதை சத்யன் எதிர்பார்க்கவே இல்லை, அந்த பாய்ஸன் பாட்டிலை நினைத்த மாத்திரத்தில் இப்போதும் சத்யனின் அடிவயிறு உதறியது, கண்களை இறுகமூடி தகுதியில்லாத நான் அவளுக்கு தேவையில்லை, அவ வேற தகுதியானவன கல்யாணம் பண்ணிகிட்டு எப்பவும் நல்லாருக்கட்டும் என்று நினைத்தான்

மான்சி தன்னை வெறுக்க காரணம் தனது ஏழ்மையும், கறுத்த நிறமும் தான், என்று நினைத்தவன், முதன்முறையாக தனது ஏழ்மையை வெறுத்தான்,, ஆனா என்னோட நிறத்தை மாத்தமுடியாது, ஆனா என்னோட தரத்தை மாத்தலாம், ஊருக்குப்போனதும் ஏதாவது தொழில் செய்து பணம் சம்பாதித்து முன்னேறும் வழியைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தான்

இனிமேல் அவளுக்கும் எனக்கும் எந்தவொரு உறவுமில்லை, அதனால அவளை நினைச்சு பார்க்கிறதே தேவையில்லாத விஷயம், என்று சத்யன் தன்னை சமாதானப் படுத்திக்கொள்ளும் போதே அவன் மொபைல் அழைத்தது

எடுத்துப்பார்த்தான் மான்சியின் வீட்டு நம்பர்தான், கட்செய்து விடலாமா என்று யோசித்தவன் மனம் வராமல் ஆன்செய்து காதில் வைத்து “ ஹலோ” என்றான்

“ சத்தி நான் அத்தைடா” என்ற சாந்தாவின் குரல் விம்மலும் கேவலுமாக வெடிக்க அடுத்து பேச வார்த்தைகள் இல்லாது சந்தாவின் அழுகை மட்டுமே சிறிதுநேரம் ஒலித்தது,

சத்யனுக்கும் நெஞ்சை அடைத்தது, குரல் கம்ம “ அத்தை தயவுசெஞ்சு அழாதீங்க” என்று சத்யன் சொல்லும்போதே, அவனுக்கும் கழிவிரக்கத்தில் கண்ணீர் வழிந்தது, அவசரமாக சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கண்ணீரை துடைத்தவன், குரலை நிதானத்துக்கு கொண்டு வந்து “ என்ன விஷயமா போன் பண்ணீங்க சொல்லுங்க?” என்றான்

சாந்தாவின் அழுகையும் சற்று ஓய்ந்தது அல்லது கண்ணீர் வற்றிக்கூட இருக்கலாம் “ சத்தி நான் என்னனமோ கற்பனை பண்ணேனே எல்லாமே மண்ணா போச்சேடா” என்றுவிட்டு மீண்டும் அழுகையை ஆரம்பிக்க..

“ அதுக்கென்ன அத்த பண்றது விதியை மாத்த யாராலும் முடியாது, ஆனா மான்சியோட கல்யாணம் நின்ன அந்த சமயத்துல மாமாவோட மானத்தை சபையில என்னால காப்பாத்த முடிஞ்சதே அதுவே போதும், மான்சிக்கு நான் எந்தவிதத்திலும் பொருத்தம் இல்லாதவன் அத்த, அதனால்தான் எங்களை சேர்த்து வச்ச விதியே இப்போ பிரிச்சு வச்சுருச்சு, இதுலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை, அதனால என்னைய நெனைச்சு நீங்க வருத்தப்படாம நிம்மதியா இருங்க, நான் வீட்டுக்கு போனதும் போன் பண்றேன்” என்று கூறிவிட்டு சாந்தாவின் பதிலை எதிர்பார்க்காமல் மொபைலை அனைத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்

சிறிதுநேரம் கண்மூடி சாய்ந்திருந்தவனை மறுபடியும் அழைத்தது மொபைல், இந்தமுறை வேல்முருகன், ஒரு பெருமூச்சுடன் ஆன்செய்தவன் “ சொல்லுங்கண்ணே?” என்றான்

“ என்னா சத்யா இன்னிக்கு வேலைக்கு வரலையா? மார்க்கெட்ல தேடினேன் ஆளையே காணோமேன்னு போன் பண்ணேன் சத்யா” என்று கேட்டார்
சிறிதுநேரம் கண்மூடி அமைதியாக இருந்தவன் பிறகு மடைதிறந்த வெள்ளமாக நடந்தவற்றை மெல்லிய குரலில் அவரிடம் கூறினான், “ அவ ரொம்ப பிடிவாதக்காரி அண்ணே, அதான் அவளோட சாவுக்கு நான் காரணமா இருக்கக்கூடாதுன்னு எல்லாத்துலயும் கையெழுத்துப் போட்டு குடுத்துட்டேன்,, மத்தபடி இனி எதுவுமில்லை அண்ணே எல்லாமே முடிஞ்சுபோச்சு” என்று சத்யன் முடிக்க..

வேல்முருகனின் திகைப்பு அவரின் அமைதியில் தெரிந்தது, சில விநாடிகளுக்கு பிறகு “ இப்போ நீ எங்க இருக்க சத்யா?” என்றார்

“ நான் பஸ்ஸில் பாபநாசம் போய்கிட்டு இருக்கேன்,, இனிமேல் மதுரையில என்னால இருக்கமுடியாதுண்ணே, உங்ககிட்ட சொல்லாம வந்துட்டேன், அந்த நேரத்துல எனக்கு வேற எதுவுமே தோணலை அண்ணே, முதலாளிகிட்ட சொல்லிடுங்கண்ணே, ரெண்டுநாள் சம்பளம் வரவேண்டியிருக்கு, அத வாங்கி உங்க மகனுக்கு நான் குடுத்ததா சொல்லி வீடியோகேம் வாங்கிக் குடுங்கண்ணே, போனவாரமே என்கிட்ட கேட்டான்,, அப்புறம் இனிமேல் இந்த நம்பருக்கு போன் பண்ணாதீங்க, ஊருக்குப் போய் வேற நம்பர் வாங்கியதும் நானே உங்களுக்கு போன் பண்றேன்” என்று சத்யன் விரக்தியாக சொல்ல..

“ சரி சத்யா ஊருக்குப் போனதும் போன் பண்ணுப்பா” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்


பஸ் சங்கரன்கோவிலை தாண்டி திருநெல்வேலியை நோக்கி போய்க்கொண்டிருந்தது, சத்யன் சிந்தனைகளின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக கண்களைமூடி தூங்க முயன்றான், வெகுநேர போராட்டத்திற்கு பிறகு தூக்கம் அவன் கண்களை தழுவிய கொஞ்சநேரத்திலேயே திருநெல்வேலி வந்துவிட்டது,, பஸ்ஸில் இருந்து இறங்கி பாபநாசம் செல்லும் பஸ்ஸில் ஏறினான்

சத்யன் வீட்டுக்கு வர மாலை மணி ஐந்தானது,, கடையில் அமர்ந்து சில்லறை வியாபாரம் செய்துகொண்டிருந்த பேச்சி சத்யனைப் பார்த்து திகைப்புடன் “ என்னா ராசு திடீர்னு வந்துருக்க?” என்று கேட்டபடி கடையை விட்டுவிட்டு வெளியே ஓடிவந்தாள்

தாயின் பதட்டத்தை கண்டு சங்கடப்பட்ட சத்யன் “ ஒன்னுமில்லம்மா , சும்மாதான் வந்தேன், நீ ஏவாரத்தைப் பார்த்துட்டு வா” என்று வீட்டுக்குள் போனான்

சத்யனின் வீடு சிறு மாடிவீடு, நுழையும்போதே வலதுபக்கம் கடையும், இடதுபக்கம் பெரிய திண்ணையுடன் கூடிய வராண்டாவும், கதவை திறந்து உள்ளே போனால் ஒரு கூடம் அதன் இடதுபுறம் ஒரு சிறிய பூஜை அறை, ஹாலை அடுத்து சிறு சமையலறை, அதன்பின்னால் தோட்டம், கிணறு, பாத்ரூம், டாய்லெட், எல்லாமே இருக்கும், தனியாக படுக்கையறை இல்லாத வீடு, மகனுக்கு திருமணம் ஆவதற்குள் தனியா ஒரு அறை கட்டவேண்டும் என்ற பேச்சியின் ஆசை இன்னும் நிறைவேறவில்லை, சத்யனின் கல்யாணமே அவசரக் கல்யாணமானதால் இன்னும் பேச்சியின் ஆசை நிறைவேறவில்லை

சத்யன் பூஜையறைக்குள் தனது பையை கொண்டுபோய் வைத்துவிட்டு, தோட்டத்து கதவைத் திறந்து கிணற்றடியில் முகம் கழுவிவிட்டு பாக்கெட்டில் இருந்து தனது மொபைலை எடுத்து அதிலிருந்த சிம்கார்டை உருவி கிணற்றுக்குள் போட்டான், பாபநாசம் பஸ்ஸ்டாண்டில் வாங்கிய வேறு சிம்மை மொபைலில் போட்டுக்கொண்டான், பிறகு வீட்டுக்குள் வந்தான்

போட்டிருந்த பேன்ட் சர்ட்டை கழட்டி கைலிக்கு மாறியவன், காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாததால் பசி வயிற்றை கிள்ள சமையலறைக்குப் போய் என்ன இருக்கிறது என்று பார்த்தான், வெறும் சாதமும் தயிரும் மட்டுமே இருந்தது, அவசரமாக தட்டில் சாதத்தைப் போட்டு தயிரை ஊற்றி பிசைந்து ஊறுகாயை தொட்டுக்கொண்டு சாப்பிட்டான்,

கடையை தற்காலிகமாக மூடிவிட்டு வந்த பேச்சி சத்யன் அரக்கப்பரக்க சாப்பிடுவதைப் பார்த்து கண்கலங்கி “ ராசு நீ வர்றேன்னு ஒரு போன் பண்ணிருந்தா நல்ல குழம்பா வச்சிருப்பேனே, எனக்கு மட்டும் வெறும் தயிர் போதும்னு இருந்தேன் இப்போ இப்படி திடீர்னு வந்துட்டயே என்னப் பண்ணுவேன்” என்று கவலையோடு புலம்பினாள்

“ பரவாயில்லைம்மா காலையிலேர்ந்து தண்ணிகூட குடிக்கலை, பயங்கர பசி அதான் வந்ததும் சாப்பிட உக்காந்துட்டேன்” என்று சாப்பிட்டுக்கொண்டே பேசினான்

சத்யன் சாப்பிட்டுவிட்டு கூடத்துக்கு வந்து தரையில் கால்களை நீட்டி அமர, பேச்சி எதிரில் வந்து அமர்ந்து “ என்ன சத்தி திடீர்னு கெளம்பி வந்துருக்க?” என்று ஆரம்பிக்க..

தலையை கவிழ்ந்து அமர்ந்திருந்த சத்யன் எதையும் மறைக்காமல் நடந்தவற்றை தனது அம்மாவிடம் சொன்னான்,




அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த பேச்சி “ அடிப்பாவி அவளை நல்ல புள்ளைன்னு நெனைச்சேனே?,, இவ்வளவு பெரிய சதிகாரியா இருப்பான்னு நெனைக்கவே இல்லையே?” என்று புலம்ப

பட்டென்று நிமிர்ந்த சத்யன் “ அம்மா அவ எந்த சதியும் பண்ணலை,, அவளுக்கும் எனக்கும் எந்த பொருத்தமும் இல்ல, அதனால என்னை அவளுக்குப் பிடிக்கலை அவ்வளவுதான், பிடிக்காத வாழ்க்கையை ஒப்புக்கு வாழுறதைவிட, பிரிஞ்சு தனித்தனியா வாழுறதே நல்லது, இதுல அவளை குறை சொல்ல ஒன்னுமே இல்லைம்மா ” என்று சத்யன் தன் தாய்க்கு பதில் சொல்ல

சத்யன் மான்சியை விட்டுக்கொடுக்காமல் பேசியதும் பேச்சிக்கு கோபம் வந்தது “ அவ என்ன ரம்பை ஊர்வசி உன்னை புடிக்காம போறதுக்கு, டேய் மவனே அவளை விடுடா நீ ஆம்பளை, இன்னும் ஒரு வாரத்துல உனக்கு அவளவிட அழகான பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று பேச்சி வீராப்பு பேசினாள் 



No comments:

Post a Comment