Thursday, September 17, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 5

அமுதா, "ஏன்?"

விஸ்வா, "என்னப் ப்ரொமோட் பண்ணிட்டா அவனுக்கு கீழே வேலை செய்ய என்னை மாதிரி ஆள் யாரும் இல்லை. அவனுக்கு அடுத்த ஒரு வருஷத்தில் ப்ரொமோஷன் வாய்ப்பு இருந்தது. அதனால் எனக்கு ப்ரொமோஷன் கிடைக்காம செஞ்சுட்டான். வேலையை ரிஸைன் பண்ணினா எனக்கு சரியான ரெகமெண்டேஷன் கொடுக்க மாட்டேன்னு பயமுறுத்தினான். நான் ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டேன். I was so so upset. எல்லாரும் ஆறுதல் சொன்னாங்க. But I could never get over it ... "

அமுதா, "ம்ம்ம் ... then what happened?"

விஸ்வா, "வனிதா ஒரு நாள் PMLஇல் சேல்ஸ் மேனேஜர் போஸ்ட் ஒண்ணை புதுசா உருவாக்கறாங்கன்னு சொன்னா. நிச்சயம் அந்தப் போஸ்டுக்கு நான் ரொம்ப சூட்டபிளானவன்னு சொல்லி எனக்கு வேணும்ன்னா அதுக்கு அப்ளை பண்ணச் சொன்னா"



அமுதா, "நீ அப்போ சேல்ஸ் எஞ்சினியராத்தானே இருந்தே? உனக்கு உன் கம்பெனியில் ப்ரொமோஷன் வந்து இருந்தா என்ன வேலைக்கு உன்னை ப்ரொமொட் பண்ணி இருப்பாங்க?"

விஸ்வா, "அஸிஸ்டண்ட் சேல்ஸ் மேனேஜர்"

அமுதா, "சோ, வனிதாவின் கம்பெனியில் அதை விட உயர்ந்த போஸ்ட்டுக்கு உன்னை அப்ளை பண்ணச் சொன்னாளா?"

விஸ்வா, "அப்படி சொல்ல முடியாது. அப்போ PMLஇன் மொத்த வருமானம் நூறு கோடிக்கும் கம்மி. நான் வேலை செஞ்சுட்டு இருந்த கம்பெனியின் டர்ன் ஓவர் கிட்டத்தட்ட அறுநூறு கோடி. சோ, ... in a sense I was quite elligible"

அமுதா, "சோ, அப்ளை பண்ணினியா?"

விஸ்வா, "I was hesitating due to my manager's threat. இன்டர்வியூவில் செலக்ட் ஆன பிறகு அவங்க என்னைப் பத்தி இந்தக் கம்பெனியில் விசாரிச்சா என் மேனேஜர் எனக்கு சரியான ரெகமெண்டேஷன் கொடுக்க மாட்டான்னு பயப் பட்டேன்"

அமுதா, "பழைய கம்பெனி கொடுக்கும் ரெகமெண்டேஷன் அவ்வளவு முக்கியமா?"

விஸ்வா, "நிச்சயமா. ஒரு வேளை என்னைப் பத்தி நல்லா தெரிஞ்ச எங்க கம்பெனியின் போட்டிக் கம்பெனி என்னை வேலைக்கு எடுத்தா பழைய கம்பெனியின் ரெகமெண்டேஷனை பத்தி கவலைப் படாம இருக்கலாம். ஆனா கெரியர்ன்னு எடுத்துட்டா அது ஒரு ப்ளாக் மார்க்தான்"

அமுதா, "விஸ்வா, இந்தக் காலத்தில் உன்னை மாதிரி யோசிக்கறவங்க ரொம்ப கம்மி"

விஸ்வா, "May be ..."

அமுதா, "ஆனா உன் அணுகுமுறை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. Go on"

விஸ்வா, "நான் ஹெஸிடேட் பண்ணறதை புரிஞ்சுட்ட வனிதா தான் எம்.டிகூட க்ளோஸா வேலை செய்யறதுனால நிச்சயம் என்னைப் பத்தி அவர்கிட்டேயும் தேவைப்பட்டா போர்ட் மெம்பர்ஸ்கிட்டேயும் அவளால என்னைப் பத்தின உண்மையை சொல்லி கன்வின்ஸ் பண்ண முடியும்ன்னு சொன்னா ... besides ... சந்திரசேகரையும் சுமதியையும் நான் முன்னாடியே மீட் பண்ணி இருக்கேன். என்னைப் பத்தி ஒரு அளவுக்கு அவங்களுக்குத் தெரியும்ன்னு சொன்னா. இருந்தாலும் என் இஷ்டம் எதுவானாலும் சரின்னு சொன்னா. ஆனா வற்புறுத்தலை"

அமுதா, "Then what did you decide?"

விஸ்வா, "I decided to give it a shot" என்றவன் முகம் மறுபடி இறுக .. "How I wish I hadn't!"

அமுதா, "ப்ளீஸ் விஸ்வா! அந்த விஷயத்தை உன் மனசில் இருந்து கொஞ்சம் ஒதுக்கி வை. கஷ்டம்தான் ஒத்துக்கறேன். ப்ளீஸ்" என்ற கெஞ்சினார். தொடர்ந்து, "என்னை உன் அக்கா மாதிரி நினைச்சுக்கோ ப்ளீஸ்"

விஸ்வா, "ஓ.கே .. சில விஷயங்களை நினைச்சுப் பார்க்கும் போது அதுக்கான காரணம் இப்போ புரியுது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அதான் ... "

அமுதா, "நான் உன் கிட்டே பழசை நினைச்சுப் பார்க்கச் சொல்லும் காரணம் புரியுது இல்லையா? உன்னைப் பொறுத்த வரை ஒரு மாசத்துக்கு முன்னாடி வரை உனக்கு எதுவுமே தெரியாது. அந்த மன நிலையை எப்படியாவுது வரவெச்சுக்கோ. ப்ளீஸ்"

விஸ்வா, "ஓ.கே. முயற்சி செய்யறேன்"

அமுதா, "That's the spirit. I know you can. தனி உணர்வுகளுக்கு எப்படி இடம் கொடுக்காம இருக்கணும்ன்னு உனக்குத் தெரியும். அதுக்காக ராணுவத்தில் பயிற்சி எடுத்துட்டு இருக்கே. நிச்சயம் உன்னால் முடியும். அதனால தான் உங்க கேஸில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு ... ம்ம்ம் ... மேல PMLஇல் சேர்ந்ததைப் பத்தி சொல்லு"

விஸ்வா, "அப்ளிகேஷனை நேரா கொண்டு போய் கொடுத்தேன். பாத்ததும் அது என்னோடதுன்னு தெரிஞ்சு வனிதாகிட்ட சந்திரசேகர் கேட்டு இருக்கார். அவ என்னைப் பத்தி சொல்லி இருக்கார். அவரோடவும் பிறகு அவரோட மாமனார் சண்முகம் சாரோட, சுமதி மேம் கூட இன்டர்வியூ நடந்தது. சுமதி மேடத்துக்கு என்னை வேலைக்கு எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அப்போ, சண்முகம் சார் என் ரிலீவலைப் பத்தியும் அதில் இருந்த சிக்கலைப் பத்தியும் விசாரிச்சார். அவர் பேசின வரை நல்ல ரெகமெண்டேஷன் இல்லாம என்னை எடுப்பதில் அவருக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சுட்டேன். ஆனா, முடிவை சந்திரசேகர்கிட்டே விட்டுட்டார்"

அமுதா, "அந்த சமயத்தில் அந்தக் கம்பெனியில் வேலையைப் பத்தி நீ என்ன நினைச்சே? Did you like it?"

விஸ்வா, "PMLக்கு சில நிரந்தர வாடிக்கையாளர்கள் இருந்தாங்க. ஆனா வளர்ச்சின்னு பார்த்தா ரொம்ப கம்மி. மார்கெட்டிங்க், சேல்ஸ் இதெல்லாம் சந்திரசேகரின் மேற்பார்வையில் இருந்தது. அவர் பேசிக்கா ஒரு எஞ்சினியர். அதுக்கு மேல் அவர் படிக்கலை. ஆனா இன்டஸ்ட்ரியில் சண்முகம் சாருக்கு நிறைய தொடர்புகள். அதன் மூலம் சந்திரசேகருக்கும் நிறையப் பேரை தெரிய வந்தது. நல்லா மேற்பார்வை செய்யக் கூடியவர். A good administrator. ஆனா அவரால புதுசா எதையும் யோசிக்க முடியாது. அப்படி யோசிச்சாலும் மாமனாருக்கு ரொம்ப பயந்தவர். வெளியில் யாருக்கும் தெரியாது. தான் புதுசா எதாவுது செஞ்சு அது நஷ்டத்தில் முடிஞ்சுடுமோன்னு அவருக்கு ரொம்பவே பயம். இதெல்லாம் வனிதா எனக்கு கொடுத்த டீடெயில்ஸ். இதை எல்லாம் வெச்சுப் பார்த்தப்ப எனக்கு என் திறமையைக் காட்ட அது ஒரு ரொம்ப நல்ல வாய்ப்புன்னு தோணுச்சு. சந்திரசேகர்கூட ஒண்ணு ரெண்டு தடவை மீட் பண்ணினதும் ஒரு நல்ல ராப்போ (rapport) வந்தடுச்சு. I thought I can do a very good job ... I really wanted that job .. ஆனா சண்முகம் சாருக்கு என்னை எடுப்பதில் இஷ்டம் இல்லைன்னு புரிஞ்சுட்டேன். அதனால சந்திரசேகர் தயங்கறார்ன்னு நினைச்சேன்"

அமுதா, "உன் ட்ராக் ரெக்கார்டுக்கு ஏன் அவர் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்"

விஸ்வா, "அவருக்கு PMLஐ பெரிசாக்கணும்ன்னு ஆசை. அப்படி விரிவாக்கம் செய்யும் போது இன்டஸ்ட்ரியில் பல கம்பனீஸ்கூட தொடர்பு கொள்ள வேண்டி இருக்கும் .. including my earlier company .. என் பழைய மேனேஜர் தயவும் வேண்டி இருக்கலாம்ன்னு நினைச்சார்"

அமுதா, "அவர் அப்படி நினைச்சது சரியா?"

விஸ்வா, "இல்லை. வேலையில் சேர்ந்ததுக்குப் பிறகு அதை அவருக்கு நிரூபிச்சும் காட்டினேன். .. அதுக்குப் பிறகு அவர் எனக்கு ஒரு விசிறி ஆயிட்டார். ஆனா அந்த சமயத்தில் அவருக்கு என்னை சேர்த்துகறதில் விருப்பம் இல்லை"

அமுதா, "இருந்தாலும் முடிவு எடுக்கும் பொறுப்பை சந்திரசேகர்கிட்டே விட்டுட்டார் இல்லையா?"

விஸ்வா, "அவரும் மாமனாருக்கு பயந்து ஹெஸிடேட் பண்ணினார். At least that is how he made it look (அப்படித்தான் அவர் நடந்து கொண்டார்)"

அமுதா, "அப்பறம் என்ன ஆச்சு"

விஸ்வா, "நான் ரொம்ப அப்செட்டா இருந்தேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு வனிதா என்கிட்டே சந்திரசேகரை தன்னால கன்வின்ஸ் பண்ண முடியும் எனக்கு நிச்சயம் அந்த வேலை வேணுமான்னு கேட்டா" என்றவன் பெருமூச்செறிந்து, "அப்போ அவ கேட்டதின் அர்த்தம் இப்போத்தான் எனக்குப் புரியுது"

அமுதா, "மறுபடியும் பாரு .. அந்த சமயத்தில் நீ யோசிச்ச மாதிரி சொல்லி ப்ளீஸ்"

கோபத்தில் முகம் சிவந்தது ... அவன் கண்கள் கலங்கின ...

அமுதா, "வந்ததில் இருந்து பேசிட்டே இருக்கோம். என்ன சாப்பிட்றே? சம்திங்க் ஹாட் ஆர் கோல்ட்?"

வனிதா, "எதுவும் வேண்டாம். கொஞ்சம் தண்ணி கொடுங்க"

அமுதா தம் மேசைக்குப் பின்னால் இருந்த பாட்டிலை எடுத்து அவனுக்கு நீட்டினார்.

அவன் குடித்து முடிக்க அவகாசம் கொடுத்த பிறகு அமுதா, "அப்பறம் என்ன நடந்தது?"

விஸ்வா, "ரெண்டு மூணு நாளைக்கு பிறகு மறுபடி அவ அதே கேள்வியைக் கேட்டா. எனக்கு அப்போ ரொம்ப் எரிச்சலா இருந்தது. கொஞ்சம் கோவமா அவரை கன்வின்ஸ் பண்ணறது உனக்கு அவ்வளவு பெரிய வேலைன்னா பண்ண வேண்டாம்ன்னு கத்திட்டேன். அடுத்த நாள் சந்திரசேகர் என்னை கூப்பிட்டுப் பேசினார். அப்போ எங்க ஆஃபீஸ் அனுப்பின ஒரு ட்ரெயினிங்க் நான் அட்டெண்ட் பண்ண வேண்டி இருந்தது. போயிட்டு வா ட்ரெயினிங்க் முடிஞ்சு வரும் போது அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடியா இருக்கும்ன்னு சொன்னார். தனக்கும் அவ்வளவு நாள் தேவைப் படும்ன்னு சொன்னார் ஆனா அதன் விளக்கம் இப்போத்தான் புரிஞ்சுது"

அந்த விஷயத்தைத் தவிற்கச் சொன்ன அமுதாவே தவறி, "என்ன விளக்கம்?"

விஸ்வா, "அடுத்த ஒரு மாசம். வாரத்துக்கு ஒரு முறை அவர் வனிதாகூட ... அவரோட ஃபார்ம் ஹவுஸுக்கு கூட்டிட்டுப் போய் ... He fucked her"

அமுதா, "ஓ! விஸ்வா, ரொம்ப சாரி. நானே அந்தப் பேச்சை எடுத்துட்டேன்" என்று மன்னிப்புக் கேட்டார்.

விஸ்வா, "பரவால்லை ... " என்று விரக்தியுடன் முடித்தான்.

இருவரிடையே மௌனம் நிலவியது ...

சற்று நேரம் யோசித்த பிறகு அமுதா, "நீ எழுதின லிஸ்டை கொடு"

மறுபடி அந்த இரு தாள்களை அவரிடம் விஸ்வா நீட்டினான். வாங்கிய அமுதா அதில் இருந்தவற்ற உறக்கப் படித்தார்

"ஏன் நாங்க சேர்ந்து வாழணும்?

1. குழந்தைகளை பிரிச்சு வளர்ப்பது சரி இல்லை
2. என் மகளை வனிதாகிட்டே இருந்து பிரிப்பது முறை இல்லை
3. என் மகனை என்னிடம் இருந்து பிரிப்பது முறை இல்லை
4. Vanitha loves me
5. Even after her betrayal I don't hate her. May be even love her to some extent

ஏன் பிரியணும்?

1. I don't trust her. திருமணம் ஒரு ஒப்பந்தம் அந்த ஒப்பந்தத்தை அவள் முறித்துவிட்டாள்.
2. வனிதா செஞ்சதை வெறுக்கறேன். அதை என்னால் மன்னிக்க முடியாது
3. என்னால் என் மனைவியை வேறு ஒருவனுடன் பகிர்ந்து கொள்ள முடியாது
4. மறுபடி அவளுடன் சேர்ந்து வாழ்ந்தால் நான் ஒரு சன்னியாசி போலத்தான் வாழ வேண்டும். ஏனெனில், என்னால் அவளை முழுவதும் திருப்திப் படுத்த முடியாது. I feel inadequate with her. அப்படிப் பட்ட ஒரு உறவு எனக்கு வேண்டாம்"

விஸ்வா, "ரெண்டாவுது லிஸ்டில் இருக்கும் ரெண்டாவுது பாயிண்ட் ... " என்று இழுத்தான்

அமுதா, "என்ன? அவளை மன்னிக்க முடியாதுன்னு எழுதி இருப்பதையா?"

விஸ்வா, "ம்ம்ம் "

அமுதா, "அதுக்கு என்ன?"

விஸ்வா, "ஐ திங்க். நீங்க சொன்ன மாதிரி நான் அவளை மன்னிக்கணும். என் குழந்தைகளின் மன நிலை பாதிக்கக் கூடாது"

அமுதா, "குட். ஏன் பிரியணும்ன்னு நீ எழுதி இருந்த எல்லாக் காரணங்களையும் உன்னால ஏற்றுக் கொள்ள முடியும்ன்னு எனக்குத் தோணுது. இருந்தாலும், I don't want to force the issue. நீங்க ஒண்ணா வாழ்ந்தா அது நிச்சயம் உன் முடிவாத்தான் இருக்கும். அதுக்கு நான் கியாரண்டி. ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே"

அமுதா, "இன்னொரு விஷயம் விஸ்வா. நீ என் கிட்டே செக்ஸ் சம்மந்தமான விவரங்களை என்னுடன் பேச உனக்கு சங்கோஜமா இருக்கு. I can understand. அந்த மாதிரி விஷயங்களைப் பத்தி நீ எனக்குத் தெரிஞ்ச வேற யாரோடாவுது, with whom I can talk பேச விருப்பமா?"

விஸ்வா, "That would be nice"

அமுதா, "எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆண் சைக்கியாட்ரிஸ்ட் இருக்கார் .. ."

அவரை இடைமறித்த விஸ்வா, "ராம் இன்னும் மூணு நாளில் திரும்பி வர்றான். அவன் கூட பேசட்டுமா? He can talk to you later. பட் .."

அமுதா, "ம்ம்ம் ... என்ன?"

விஸ்வா, "வனிதாவுக்கு அது தெரிஞ்சா..."

அமுதா, "வனிதாவுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. டாக்டர் ராமும் அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்குவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"

விஸ்வா, "சரி. நீங்க அவன் கிட்டே நேரா பேசி என்ன பேசினேன்னு கேட்டுக்குங்க"

அமுதா, "ஷ்யூர் .. " என்ற பிறகு கைக் கடிகாரத்தைப் பார்த்தவர், "நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு ஃப்ரீயா?"

விஸ்வா, "I can make myself free"

அமுதா, "சரி. நாளைக்கு நாலு மணிக்குப் பார்க்கலாமா?"

விஸ்வா, "மேம், அதுக்கு மேல் நடந்ததை இன்னைக்குப் சொன்ன மாதிரி என்னால் சொல்ல முடியுமான்னு எனக்குத் தெரியலை"

அமுதா, "அதையும் பார்ப்போமே? டோண்ட் வொர்ரி" என்று அவனுக்கு விடை கொடுத்தார்


விஸ்வாவை அனுப்பிய பிறகு தொலைபேசியில் வனிதாவின் பெற்றோரின் இல்லத்தை அழைத்தார் ..

எதிர்முனையில் சுப்ரமணியன், "Vathsala and Subbu's residence"

அவரது மனைவியின் பெயரை முதலில் சொல்லி பிறகு தன் பெயரை அவர் சொன்னது அமுதாவுக்கு மிகவும் பிடித்தது.

அமுதா, "மிஸ்டர் சுப்ரமணியன். நான் சைக்கியாட்ரிஸ்ட் அமுதா பேசறேன்"

சுப்பு, "ஓ! சொல்லுங்க டாக்டர்"

அமுதா, "நான் உங்க மனைவிகூட கொஞ்சம் பேசணும்"

சுப்பு, "இதோ. கூப்பிடறேன்"

சிறிது நேரத்துக்குப் பின்னர் .

வத்சலா, "ஹெல்லோ வத்சலா சுப்ரமணியன் ஹியர். சொல்லுங்க டாக்டர் அமுதா"

அமுதா, "நான் உங்களை நேரில் சந்திச்சு கொஞ்ச நேரம் பேசணும்"

வத்சலா, "அப்படியா என்ன விஷயமா?"

அமுதா, "நேரில் சொல்லறேனே ... "

வத்சலா, "எப்போ மீட் பண்ணலாம்?"

அமுதா, "நாளைக்கு நீங்க எப்போ ஃப்ரீ?"

வத்சலா, "ஒரு பதினோறு மணி வாக்கில்?"

அமுதா, "ம்ம்ம் ... நோ ப்ராப்ளம். சொல்லுங்க உங்களுக்கு என்னை எங்கே மீட் பண்ணறது கன்வீனியண்ட்?"

வத்சலா, "நான் உங்க க்ளிக்குக்கு வர்றேன். அதில் எனக்கு எந்தத் பிரச்சனையும் இல்லை"

அமுதா, "ஓ.கே. See you tomorrow at 11 am. அப்பறம் இன்னொரு விஷயம். நான் உங்களை மீட் பண்ணறது உங்க மகளுக்குத் தெரிய வேண்டாம்"

வத்சலா, "சரி"
~~~~~~~~~~~~

அடுத்த நாள் ...

அமுதா, "வாங்க வத்சலா. I hope you could find the place easily"

வத்சலா, "பெங்களூரில் பிறந்து வளர்ந்தவ. கண்டு பிடிப்பதில் சிரமம் எதுவும் இல்லை"

அமுதா, "ஓ! நீங்க பூர்வீக பெங்களூர் தமிழர் இல்லை? மறந்துட்டேன்"

வத்சலா, "சரி, எதுக்கு மீட் பண்ணறோம்?"

அமுதா, "ம்ம்ம் ... வனிதாவைப் பத்தி ஒரு தாயின் கண்ணோட்டத்தில் சில விவரங்கள் தெரிஞ்சுக்க ஆசைப் படறேன்"

வத்சலா, "ம்ம்ம்ம்"

அமுதா, "விஸ்வாவைத் தவிற அவளுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் யாராவுது இருந்தாங்களா?"

வத்சலா முகத்தில் பீதி படற, "எனக்குத் தெரிஞ்சு யாரும் இல்லை. அப்படி ஏதாவுது?"

அமுதா, "நோ நோ, தப்பா எடுத்துக்காதீங்க. அவ விஸ்வாவை எந்த அளவுக்கு காதலிச்சான்னு எனக்கு நல்லா தெரியும்"

வத்சலா, "அப்ப எதுக்குக் கேட்டீங்க?"

அமுதா, "சில விஷயங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். I hope you appreciate the doctor-patient confidentiality"

வத்சலா, "Of course. ஆனா இந்த விஷயத்தில் .. Both me and Subbu as well as Viswa's parents are in the dark. நாங்க எல்லாரும் ஹெல்ப்லஸ்ஸா ஃபீல் பண்ணறோம்"

அமுதா, "உங்க எல்லோருடைய ஆதங்கம் எனக்குப் புரியுது. சரி, நான் மேற்கொண்டு கேட்கலாமா?"

வத்சலா, "ப்ளீஸ் .. "



அமுதா, "யூ.எஸ்ல படிச்சுட்டு இருந்தப்ப செக்ஸ் எஜுகேஷன் இருந்ததா?"

வத்சலாவின் முகத்தில் குழப்ப ரேகைகள் படறத் தொடங்கின ...

வத்சலா, "எஸ் ... எதுக்குக் கேட்கறீங்க?"

வத்சலாவின் முகபாவத்தில் இருந்து அவர் பதட்டப் படுவது நன்றாகத் தெரிந்தது ...

அமுதா, "வத்சலா, நான் ஒண்ணு உங்களுக்கு சொல்ல விரும்பறேன். ஒரு தனி மனுஷியா இந்த டைவர்ஸ் நடக்கக் கூடாதுன்னு நினைக்கறேன். உங்க விருப்பமும் அதுதான்னு எனக்குத் தெரியும். சோ, தயவு செஞ்சு ஏன் எதுக்குன்னு கேட்காம நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லறீங்களா?"

வத்சலா முகம் இறுக, "அவளுக்கு நைந்த் க்ரேடில் இருக்கும் போது இருந்தது"

அமுதா, "அந்த வருஷக் கடைசியில் நீங்க இந்தியாவுக்கு வந்துட்டீங்க இல்லையா?"

வத்சலா, "ஆமா"

அமுதா, "பொதுவா அமெரிக்கக் குடம்பங்ளில் சின்ன வயசிலேயே bird and bees அப்படின்னு பெற்றோர் குழந்தைகளுக்கு செக்ஸைப் பத்தியும் குழந்தை பிறப்பதைப் பத்தியும் சொல்லிக் கொடுப்பாங்க. அந்த மாதிரி நீங்க வனிதாவுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா?"

பார்வை அமுதாவின் கண்களைத் தவிர்த்த படி வத்சலா, "இல்லை"

வத்சலாவின் முக பாவத்தில் இருந்தும் அது அப்பட்டமான பொய் என்பது அமுதாவுக்கு உறுதியானது ..

அமுதா, "செக்ஸ்ஸைப் பத்தி நீங்க வனிதாவுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்கலை. முதலிரவுக்கு முன் அவளுக்கு யார் அட்வைஸ் பண்ணினது?"

வனிதாவின் முதலிரவுக்கு முன் அவளிடம் பேசியது வத்சலாவின் மனக் கண்ணில் தோன்றியது ...

வத்சலா, "வனிதா, Now you are going to be with the man of your dreams"

வனிதா, "Yes mom. I am soooooooo happy"

வத்சலா, "Honey, tonight .. "

வனிதா, "எனக்குத் தெரியும்மா ... மறந்துட்டியா? My Viswa is going to make love to me"

வத்சலா, "அது மட்டும் இல்லடா. விஸ்வா இப்போ உன் கணவன்"

வனிதா, "ஓ! Please mom!! ரொம்ப வருஷமா விஸ்வா என் கணவர். எல்லாருக்கும் முன்னாடி ஆர்ய சமாஜ்ல விஸ்வா இன்ஸிஸ்ட் பண்ணினதால அந்த ஆள் ஓட்டை இங்கிலீஷ்ல ஒவ்வொரு மந்திரத்துக்கும் அர்த்தம் சொல்லி அதுக்குப் அப்பறம் விஸ்வா என் கழுத்தில் தாலி கட்டினப்ப அவர் என் கணவர்ன்னு எல்லாருக்கும் அன்னௌன்ஸ் பண்ணினேன். அவ்வளவுதான்"

வத்சலா, "டே, செல்லம்மா, நான் சொல்ல வந்ததை சொல்ல விடறையா?"

வனிதா, "சரி, சொல்லு"

வத்சலா, "விஸ்வா மனம் கோணாம நடந்துக்கணும். அவன் சந்தோஷம்தான் முக்கியம்ன்னு இரு"

வனிதா, "அது எனக்குத் தெரியும்" என்றவள் குறும்புச் சிரிப்புடன் தொடர்ந்து "அப்ப என் சந்தோஷம்?"

வத்சலா, "நான் உனக்கு சொல்லற மாதிரி அவனுக்கும் யாராவுது இப்போ சொல்லிட்டு இருப்பாங்க"

வனிதா, "What? You must be kidding! என்ன சொல்லிட்டு இருப்பாங்க?"

வத்சலா, "உன்னை எப்படி சந்தோஷப் படுத்தணும்ன்னு சொல்லிட்டு இருப்பாங்க"

வனிதா, "ப்ளீஸ் ... எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அது உனக்கும் தெரியும்.
 விஸ்வா was an army man for God sake நாங்க ரெண்டு பேரும் ஒண்ணும் தெரியாத பாப்பா இல்லைம்மா. எதுக்கு இப்படி விஸ்வாவை எம்பாரஸ் பண்ணறீங்க?"

வத்சலா, "ஹூம் ... உன் கோவத்தைப் பார்த்தா விஸ்வாவும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணி இருப்பான்னு தெரியுது. Forget I said anything"

வத்சலா, "Well ... நான் அவகிட்டே பேச ஆரம்பிச்சேன். அவ தனக்கு எல்லாம் தெரியும்ன்னு தடுத்துட்டா"

அமுதா, "ஓ.கே வத்சலா. உங்களுக்கு உங்கள் மகளின் எதிர்காலத்தில் அக்கறை இருக்கற மாதிரி தெரியலை. நீங்க போகலாம்"

வத்சலா, "How dare you? .... முதலிரவுக்கு முன்னால் அவ என் கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டா. அதுதான் நிஜம்"

அமுதா, "Of course அதுதான் நிஜம். ஆனா, எல்லாம் தெரிஞ்ச பெண்கள்கூட முதல் முதலா அம்மா அதைப் பத்தி பேசும்போது எதுவும் சொல்லாமல் கேட்டுப்பாங்க. நிச்சயம் அதற்கு முன்னாடி, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி அவளுடன் செக்ஸைப் பத்தி பேசி இருக்கீங்க" என்றவர் தன் யூகத்தை உறிதி செய்து கொள்ள தொடர்ந்து, "முக்கியமா செக்ஸுக்கும் லவ்வுக்கும் இருக்கும் வித்தியாசத்தை சொல்லிக் கொடுத்து இருக்கீங்க" என்று ஆணித்தரமாக முடித்தார்

மௌனம் நிலவியது ...

வத்சலாவின் குனிந்த தலை நிமிர்வட்தற்கு சில நிமிடங்கள் ஆகின.

நிமிர்ந்த வத்சலாவின் கண்கள் சிவந்து இருந்தன ...

வத்சலா, "She did something stupid. Didn't she?"

அமுதா, "Much more than that!"


பெருமூச்செறிந்த வத்சலா, "அப்போ அவளுக்கு பத்து வயசு இருக்கும். சுப்புவோட சக ஊழியர், நெருங்கிய நண்பர், தவிற எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கார்ல் ஸிம்ப்சனுக்கு கேன்ஸர் வந்தது. அவரும் அவர் மனைவி ஸில்வியா ஸிம்ப்சனும் எங்ககூட ரொம்ப க்ளோஸ். அவங்க மகளும் வத்சலாவும் க்ளாஸ்-மேட்ஸ். ஒரு வருஷம் தொடர்ந்து ட்ரீட்மெண்ட் நடந்தது இம்ப்ரூவ்மெண்ட் எதுவும் இல்லை. இன்னும் ஆறு மாசம் அதிக பட்சம் ஒரு வருஷம்ன்னு சொல்லி இருந்தாங்க. பாலியேடிவ் கேரில் (paliative care - அதற்கு மேல் குணமாக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் வலிகளை மட்டும் குறைக்க அளிக்கப் படும் மருத்துவ உதவி) இருந்தார் ... சுப்புவும் நானும் ரொம்ப சப்போர்டிவா இருந்தோம் ... சுப்புவும் ஸில்வியாவும் ... எப்போ தொடங்குச்சுன்னு எனக்குத் தெரியலை ... ஸில்வியாவுக்கு ஆறுதல் சொல்வதில் தொடங்கி இருக்கணும். ஒரு நாள் ஸ்கூலில் இருந்து தலை வலிக்குதுன்னு வனிதா சீக்கிரம் வீட்டுக்கு வந்து இருக்கா. வீட்டில் சுப்புவையும் ஸில்வியாவையும் ஒண்ணா படுக்கையில் பார்த்து இருக்கா"

இடைமறித்த அமுதா, "அவங்களோட நெருக்கம் உங்களுக்குத் தெரிஞ்சு இருந்ததா?"

வத்சலா, "எஸ். நேரடியா அதைப் பத்தி பேசலைன்னாலும். என்னால யூகிக்க முடிஞ்சது. ஒரு அளவுக்கு நானே சுப்புவை என்கரேஜ் பண்ணினேன்"

அமுதா, "ஏன்?"

வத்சலா, "ஸில்வியா ரொம்ப பாவம் ... அவளுக்கும் கார்லுக்கும் பதினஞ்சு வருஷம் வயசு வித்தியாசம் ... கார்லை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுட்டவ ... அவ கஷ்டப் படுவது ரொம்ப நல்லா தெரிஞ்சுது. அந்த நிலமையில் கார்லை விட்டுட்டு போனாலும் போயிருப்பா. பாலியேட்டிவ் கேரில் இருக்கும் கேன்ஸர் பேஷண்ட்ஸ் நிறையப் பேரை அவங்க சொந்த பந்தங்கள் விட்டுட்டுப் போறது எங்க ரெண்டு பேருக்கும் தெரியும். அப்படி ஸில்வியா விட்டுட்டுப் போனா உண்மையா அவளைக் குறை சொல்லவும் முடியாது. இருந்தாலும் எங்களுக்கும் கார்ல் மேல ரொம்ப பற்று இருந்தது. ஸில்வியாவுக்கு எதாவுது டைவர்ஷன் தேவையா இருந்தது."

அமுதா, "சோ, உங்க ஃப்ரெண்டுக்காக நீங்க உங்க கணவரை ..."

இடைமறித்த வத்சலா, "Not only that. எனக்கும் அப்போ தொடர்ந்த ஸர்விகல் எரோஷன் (cervical erosion - கருப்பை வாயில் வரும் வீக்கம். இதன் விளைவுகள் யோனியில் இருந்து தொடர்ந்து வஜைனல் டிஸ்சார்ஜ் - vaginal discharge - எனப்படும் நீர்க்கசிவு மற்றும் மாதவிடாய்களுக்கு இடையே சிறு இரத்தப் போக்கு மற்றும் சேர்க்கையின் போது எரிச்சல், வலி) இருந்துட்டு இருந்தது. எங்களுக்கு இடையே செக்ஸ் ரொம்ப குறைஞ்சு இருந்தது. சுப்பு கஷ்டப் படறது எனக்கு தெரிஞ்சு இருந்தது. ஃபர்ஸ்ட் டைம் அவங்க ஒண்ணு சேர்ந்ததுக்குப் பிறகு சுப்பு என் கிட்டே பேசும் போது எல்லாம் ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணறது தெரிஞ்சுது. மேலோட்டமா ஓ.கே சொன்னேன"

அமுதா, "Were you not jealous and worried that Subbu may leave you?"

வத்சலா, "I know my Subbu. It was not love but fond affection and support. ஸில்வியாவுக்கு அப்போ ஜஸ்ட் முப்பது வயசுதான். அவளும் கார்லும் எவ்வளவு க்ளோஸ்ன்னு, I mean sexually, எங்களுக்கு நல்லா தெரியும். நாங்க எல்லாம் ஒண்ணா வெளியூருக்குப் போகும் போது அவங்களை கிண்டல் செய்ய அது ஒரு ஃபேவரிட் டாபிக்"

அமுதா, "வனிதா அவங்களைப் பார்த்த பிறகு என்ன ஆச்சு?"

வத்சலா, "முதலில் ... she became histerical ... அவளோட அப்பாவை ஒரு எதிரியா பார்க்க ஆரம்பிச்சா. அப்பறம் என் கிட்டே வந்து ஒட்டிட்டா. அப்பாவை டைவர்ஸ் பண்ணிட்டு தனியா போலாம் வான்னு கத்தினா"

அமுதா, "அப்போ உங்க மகனும் கூட இருந்து இருப்பானே?"

வத்சலா, "எஸ், It only made matters worse"

அமுதா, "தென்?"

வத்சலா, "ரெண்டு குழ்ந்தைகளையும் அவர்களின் வயது வித்தியாசத்தினால் தனித் தனியே சைக்கோ தெரபிக்கு கூட்டிட்டுப் போனோம். செக்ஸ் அப்படின்னா என்னன்னு விளக்கினாங்க. அப்போ அந்த சைக்கியாட்ரிஸ்ட்தான் வனிதாவுக்கு செக்ஸ் வேற லவ் வேறன்னு சொல்லிக் கொடுத்தாங்க" என்று முடித்தார்

அமுதா, "Was she taught about sexual abstinence? (sexual abstinence - முறையற்ற உடலுறவைத் தவிர்ப்பது - குறிப்பாக இளைய தலைமுறையினர் - இப்போதும் அமெரிக்காவில் இது ஒரு சர்ச்சைக்கு உரிய விஷயம் - விவரங்களுக்க் Sex education என்ற விக்கிப்பீடியா பகுதியை காண்க)"

வத்சலா, "I guess so"

அமுதா, "மறுபடி, ஐ மீன், வயசுக்கு வந்த பிறகு அவளை அந்தத் தெரபிக்குக் கூட்டிட்டுப் போனீங்களா?"

வத்சலாவின் முகத்தில் சிறு கலவரம் தோன்றி மறைந்த பின் இல்லை என்று தலையசைத்தார்

அமுதா, "அந்த சைக்கியாட்ரிஸ்ட் மறுபடி கூட்டிட்டு வரணும்ன்னு சொல்லலையா?"



வத்சலா, "சொன்னாங்க. ஆனா நாங்க அவ சரியாயிட்டான்னு நினைச்சுக் கூட்டிட்டு போகலை"

அமுதா, "நீங்க கூட்டிட்டு போகாதது ரொம்ப பெரிய தப்பு"

வத்சலா, "Did she?"

பெருமூச்செறிந்த அமுதா, "Yes மேற்கொண்டு எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ்"

வத்சலா, "Is there anything that I or Subbu can do?"

அமுதா, "Nothing directly. ஆனா, வனிதாவிம் தயவு செஞ்சு இந்தப் பேச்சை எடுக்காதீங்க. இனிமேல் தான் அவளுக்கு நீங்க ரொம்ப சப்போர்டிவ்வா இருக்கணும். இதைப் பத்தி உங்க கணவரிடம்கூட பேசாமல் இருப்பது நல்லது" என்று விடைகொடுத்தார்



No comments:

Post a Comment