Tuesday, September 22, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 12

அடுத்த நாள் சுமதியின் அலுவலகத்தில் ...

சுமதி, "விஸ்வா, உன் வேலைகளுக்கு மத்தில எதுக்கு இவ்வளவு தூரம் வந்து இருக்கே? நானே இன்னைக்கு சாயங்காலம் PMLக்கு வரலாம்ன்னு இருந்தேன். அப்படி ரொம்ப அவசரம்ன்னா ஒரு ஃபோன் பண்ணி இருந்தா நானே வந்து இருப்பேனே?"

விஸ்வா, "என் மேல உங்களுக்கு அக்கறை இருக்குன்னு நினைச்சேன். ஆனா நீங்களே என்னை இப்படி ஏமாத்துவீங்கன்னு நினைக்கலை"

சற்று நேரம் அவனை தீர்கமாக நோக்கிய வண்ணம் மௌனம் காத்த சுமதி, "ஓ, வனிதா சொன்னாளா?"

விஸ்வா, "நீங்க சொன்னீங்கன்னு சொல்லை. நீங்கதான் சொல்லி இருப்பீங்கன்னு தெரியும். நான் சிங்கப்பூர் போறதைப் பத்தி யோசிச்சுட்டு இருப்பதை உங்களைத் தவிற நான் யார்கிட்டேயும் இதுவரைக்கும் சொல்லலை"

சுமதி, "சாரி விஸ்வா. நான் உனக்கு துரோகம் செய்யணும்ன்னு வனிதாகிட்டே சொல்லலை. நானும் ரெண்டு குழந்தைங்களைப் பெத்தவ. ஒரு தாயின் ஆதங்கத்தில் வனிதா கிட்டே சொன்னேன். வசியின் நல்லதுக்காக சொன்னேன்"



விஸ்வா, "அப்படின்னா எனக்கு என் குழந்தை மேல பாசம் இல்லைன்னு சொல்லறீங்களா?"

சுமதி, "நான் ஒண்ணு கேட்பேன். அதுக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லணும் சரியா?"

விஸ்வா, "ம்ம்ம் ... "

சுமதி, "வசிக்கு இதுவரைக்கும் ஃபீவர், கோல்ட், ஸ்டமக் அப்ஸெட் இந்த மாதிரி எப்பவாவுது உடம்பு சரி இல்லாம போயிருக்கா?"

விஸ்வா, "எஸ்"

சுமதி, "அந்த மாதிரி சமயங்களில் வசியை நீ பாத்துட்டு இருந்து இருக்கியா? ஐ மீன் வனிதா இல்லாமல் நீ மட்டும் அவளை கவனிச்சுட்டு இருந்து இருக்கியா?"

விஸ்வா ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் ஸ்தம்பித்து நின்று இருந்தான்...

சுமதி, "அந்த மாதிரி சமயங்களில் விக்கி என்ன செஞ்சுட்டு இருந்தான்னு நீ கவனிச்சு இருக்கியா?"

ஒரு முறை வசிக்கு உடல் நிலை சரியில்லாத போது, "வேண்டாண்டா அவளுக்கு ரொம்ப கோல்ட் பக்கத்தில் இருந்தா உனக்கும் வந்துடும்" என்று வனிதா பல முறை சொல்லியும் விக்கி வசியின் அருகில் இருந்ததை விஸ்வா நினைவு கூர்ந்தான் ...

தொடர்ந்த சுமதி, "உன் குழந்தைங்க ரெண்டும் எந்த அளவுக்கு வனிதாகிட்டே ஒட்டிட்டு இருக்காங்கன்னு எனக்கு தெரியும். உனக்கும் அது தெரியும். அதே மாதிரி அதுங்க ரெண்டும் எந்த அளவுக்கு க்ளோஸ்-ன்னும் உனக்கு தெரியும். இருந்தாலும் நீ வசியை வனிதாகிட்டே இருந்தும் விக்கிகிட்டே இருந்தும் பிரிச்சுக் கூட்டிட்டு போகலாம்ன்னு யோசிக்க தொடங்கினே. அந்த யோசனைக்கு தொடக்கத்திலேயே ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும்-ன்னு தான் வனிதாகிட்டே சொன்னேன். ஒரு மனைவியா அவ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. ஆனா ஒரு தாயா அவ இதுவரைக்கும் எந்த தப்பும் செய்யலை. அதே மாதிரி அந்த சின்னஞ்சிறுசுக ஒரு தப்பும் செய்யலை. உங்க ரெண்டு பேருக்கு நடுவில் இருக்கும் பிரச்சனையில் அதுங்களை பிரிப்பது சரியா? நீயே சொல்லு"

சுமதியின் வார்த்தைகள் அவனை கணைகளாக தாக்க கண் கலங்கிய விஸ்வா தலை குனிந்தான்.


பல நாட்களுக்குப் பிறகு ....

டாக்டர் அமுதா தொடர்ந்து பல நாட்கள் விஸ்வாவுடன் தொடர்பு கொள்ள முயன்றும் விஸ்வா அவரிடம் பேச மறுத்து இருந்தான்.

ஃபேமிலி கோர்ட் நீதிபதியிடம் தனது கவுன்சிலிங்க் பற்றிய அறிக்கையை கொடுக்க இன்னும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு இருந்தார்.

டாக்டர் ராமை அழைத்து விசாரிக்க ராமிடமும் விஸ்வா பேசுவது இல்லை என்று அறிந்து கொண்டார்.

முதலில் வனிதா-விஸ்வா விவாகரத்தை எப்படியாவுது தடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்த டாக்டர் அமுதாவின் மனத்தில் இப்போது அது முடியுமா என்ற ஐயம் வேரூன்றத் தொடங்கி இருந்தது ...

"மேடம் Armed Forced Medical College, Pune (புனே ராணுவ மருத்துவக் கல்லூரியில்) இருந்து உங்களுக்கு கால். கனெக்ட் பண்ணட்டுமா?" என்று அவரது காரியதரிசி சொன்னதும் சற்று துணுக்குற்றார்

"ஓ.கே கனெக்ட் பண்ணும்மா" என்ற சில நொடிகளில் எதிர்முனையில் இருந்து கணீர் என்று ஒரு குரல்

"Am I speaking to Doctor Amutha?"

"எஸ். டாக்டர் அமுதா ஹியர்"

"டாக்டர், நான் கர்னல் மதுசூதன் நானும் ஒரு டாக்டர், சைக்கியாட்ரிஸ்ட்"

"ஓ! உங்களைப் பத்தி நிறைய கேள்விப் பட்டு இருக்கேன் டாக்டர். Please tell me what can I do for you?"

"மெட்ராஸ் ஸாப்பர்ஸ் சைக்கியாட்ரிஸ்ட்கிட்டே இருந்து விஸ்வாவின் கேஸ் ஃபைலை நீங்க கேட்டு வாங்கிட்டுப் போனீங்கன்னு கேள்விப் பட்டேன். அது விஷயமா உங்களை மீட் பண்ணனும்"

"பட், நான் இந்த விஷயமா பூனே வர முடியுமான்னு தெரியலை. என்ன விஷயம்ன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்"

"ஓ!" என்று வாய் விட்டுச் சிரித்த டாக்டர் மதுசூதன், "நான் இருப்பது பெங்களூரில்தான், புனேவுக்கு ஒரு வேலையா வந்து இருந்தேன். அப்போ இந்த விவரம் தெரிஞ்சுது. நாளன்னைக்கு காலையில் நான் திரும்ப பெங்களூர் வரேன். உங்களுக்கு எப்ப வசதின்னு சொல்லுங்க நான் வந்து உங்களை மீட் பண்ணறேன்"

எதற்கு ஒரு புகழ் பெற்ற ராணுவ மனோதத்துவ மருத்துவர் விஸ்வாவின் மேல் அத்தனை அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சற்று துணுக்குற்றாலும் அதை தன் குரலில் காட்டாமல், "நாளன்னைக்கே செகெண்ட் ஹாஃப் நான் ஃப்ரீதான்"

"ஓ.கே. நான் உங்களை ஒரு ரெண்டரை மணி வாக்கில் மீட் பண்ணறேன்" என்று விடைபெற்றார்

இரண்டு நாட்களுக்குப் பிறகு மதியம் சரியாக இரண்டரை மணிக்கு டாக்டர் அமுதாவின் அறைக்குள் டாக்டர் மதுசூதன் நுழைந்தார்

ஆறு அடிக்கும் மேல் உயரம். ராணுவ முறுக்கு உடலில் தெரிந்தாலும் அவர் முகத்தில் சாந்தம். கண்களின் கூர்மை.

எழுந்து நின்ற டாக்டர் அமுதா அவருடன் கை குலுப்பி அவரை எதிரே அமரச் சொன்ன பிறகு தன் இருக்கையில் அமர்ந்து, "வாங்க டாக்டர், என்னோட ஆஃபீஸுக்கு நீங்க வந்ததுக்கு நான் ரொம்பப் பெருமைப் படறேன்"

டாக்டர் மதுசூதன், "ஓ! ரொம்ப புகழறீங்க. நானும் உங்களை மாதிரி சைக்கியாட்ரி படிச்சுட்டுத்தான் வேலைக்குச் சேர்ந்தேன். நான் சேர்ந்த துறை, சந்தித்த கேஸ்கள், இவைகள் மூலம் நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அவ்வளவுதான். எனிவே நேரா விஷயத்துக்கு வரேன். விஸ்வா-வனிதா விவாகரத்து எந்த ஸ்டேஜில் இருக்கு?"

டாக்டர் அமுதா, "ஐ ஆம் சாரி டாக்டர். அதைப் பத்தி உங்ககிட்டே நான் பேச முடியுமான்னு தெரியலை. அது அவங்க ரெண்டு பேரைப் பத்தின தனிப் பட்ட விஷயம். ..." என்று இழுத்தார்

டாக்டர் மதுசூதன், "ஓ! உங்க ஃபேமிலி கோர்ட் ஜட்ஜ் உங்களை இன்னும் காண்டாக்ட் பண்ணலையா? சாரி, மத்த கவர்ன்மெண்ட் டிபார்ட்மெண்ட்களும் ஆர்மி மாதிரி செயல் படும்ன்னு நினைச்சுட்டேன். பரவால்லை" என்ற படி தான் கொண்டு வந்து இருந்த ப்ரீஃப் கேஸில் இருந்து ஒரு கவரை எடுத்தார், "எதுக்கும் இருக்கட்டும்ன்னு எனக்கு வந்த அவரோட ஆர்டர் காப்பி ஒண்ணு எடுத்துட்டு வந்தேன்" என்றபடி அதை டாக்டர் அமுதாவிடம் நீட்டினார்

அதில் ஃபேமிலி கோர்ட் ஜட்ஜ் வனிதா-விஸ்வாவின் விவாகரத்துக் கேஸ் கவுன்ஸிலிங்கிங்கில் கர்னல்-டாக்டர் மதுசனை டாக்டர் அமுதாவுக்கு ஆலோசகராக நியமிப்பதாக ஆணை பிறப்பித்து இருந்தார். வியப்புடன் அதைப் பார்த்த டாக்டர் அமுதா, "அவ்வளவு பெரிய சைக்கியாட்ரிஸ்ட் உங்களை ஏன் இந்தக் கேஸில் ...?" என்று இழுத்தார்

டாக்டர்-கர்னல் மதுசூதன், "ஓ! மறுபடி புகழ்ச்சி வேண்டாம். உண்மையில் விஸ்வாவின் மேல் ஆர்மிக்கு இருக்கும் அக்கறையினால் தான் நான் நியமிக்கப் பட்டு இருக்கேன்"

டாக்டர் அமுதா, "ஆர்மிக்கு அக்கறையா?"

டாக்டர்-மதுசூதன், "டாக்டர், நீங்க மெட்ராஸ் சாப்பர்ஸ் சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே இருந்து வாங்கின விஸ்வாவின் ஃபைலில் இருந்தது சில அடிப்படி உண்மைகள் மட்டும்தான். அது போரில் அடிபட்டு திரும்ப சிவிலியன் வேலைக்குப் போகும் ஆஃபீஸர்களைப் பத்தி பொதுவா தயாரிக்கப் பட்ட ரிப்போர்ட். மேலோட்டமான விவரங்கள் மட்டும் தான் இருந்தது"

டாக்டர் அமுதா, "ஏன்?"

டாக்டர் மதுசூதன், "விஸ்வாவின் கேஸ் ரொம்ப ஸ்பெஷல். கார்கில் போரின்போது அவனுக்கு அடிபட்ட அந்த ஆபரேஷன் ரகஸியமா வைக்கப் பட்டு இருக்கு. மேலும் அங்கே நடந்த விஷயங்கள் வெளி உலகுக்குத் தெரிஞ்சா விஸ்வாவுக்கு அவன் உடன் இருந்த பாம்பே சாப்பர்ஸ் எஞ்சினியர் சேதன் ராய்க்கு தவி ங்க ரெண்டு பேரின் குடும்பத்துக்குக் கூட ஆபத்து வரலாம்ன்னு அந்த ஆபரெஷனைப் பத்தி, விஸ்வாவைப் பத்தின விவரங்கள் எல்லாம் கான்ஃபிடென்ஷியல், ஒரு சிலர் கண்களுக்கு மட்டும்ன்னு வைக்கப் பட்டு இருக்கு. இதுக்கு மேல் நான் உங்களுக்கு விவரங்கள் கொடுக்க முடியாத நிலையில் இருக்கேன்"

டாக்டர் அமுதா, "சரி, ஆனா ஒரு சந்தேகம் டாக்டர். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆபரேஷனில் அடிபட்ட விஸ்வாவுக்கு ஏன் விருது எதுவும் கொடுக்கப் படலை. அவனை டிஸ்சார்ஜ் செஞ்ச விதம் கூட ரொம்ப சாதாரணமா இருந்தத மாதிரி இருக்கே?"



டாக்டர் மதுசூதன், "அவன் கலந்துட்ட ஆபரேஷன் ரகஸியமா வைக்கப் பட்டு இருக்குன்னு சொன்னேனே தவிற முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு சொல்லலை. போரில் கலந்துக்கும் ஒவ்வொரு நாடும் அந்த மாதிரி ஆபரேஷனில் கலந்துக்கும். அங்கே நடந்த விஷயங்கள் மட்டும்தான் ரகஸியமானது. அனேகமா வெளி உலகில் அவனோட ட்வின் ப்ரதர் ராமுக்கு மட்டும் தெரியும்ன்னு நினைக்கறேன். வீர் சேவா மெடல் மாதிரி ஒரு விருது கொடுக்கும் அளவுக்கு விஸ்வாவுக்கு நிச்சயம் தகுதி இருந்தது. ஆனா விருது கொடுக்கப் படும் போது, எதற்கு அந்த விருது அப்படின்னு விளக்கி ஸைடேஷன் எனும் பத்திரம் ஒண்ணு தயாரிக்கப் படும் அதில் ஆபரேஷனின் விவரங்கள், இடம், தேதி முதற்கொண்டு அதில் சொல்ல வேண்டி இருந்தது. அது வெளி உலகுக்கு தெரியக் கூடாதுன்னு அவனுக்கு எந்த விருதும் கொடுக்கப் படலை. ஆனா அவனுக்கு பல விதங்களில் ஆர்மி உதவி இருக்கு. என்னை இந்தக் கேஸில் கலந்துக்க வைப்பதும் அதன் காரணாத்தான்"

டாக்டர் அமுதா, "ஓ, தாங்க் யூ டாக்டர். ஆனா, உங்களுக்கு மேரேஜ் கவுன்ஸிலிங்கில் அனுபவம் இருக்கா?"

டாக்டர் மதுசூதன், "உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம். டாக்டர், இன்ஃபைடிலிடி, முறை கேடான உறவுகள், ராணுவத்தில்தான் ரொம்ப அதிகம். பல மாதங்கள் தம்பதியினர் விலகி இருக்க வேண்டிய நிர்பந்தம் அதற்கு முதல் காரணம். சில சமயங்களில் தம்பதியினர் சேர்ந்து இருக்கும் போதும் ராணுவத்துக்கே உரித்தான கேளிக்கை, கொண்டாட்டங்களினால் மனைவிகளுக்கு பிற ஆண்களுடனும் கணவர்களுக்கு பிற பெண்களுடனும் தொடர்பு ஏற்படுது. அந்தத தொடர்பு சில சமயங்களில் எல்லை மீறிடுது. மிலிடரி சைக்கியாட்ரி அளவுக்கு நான் அடல்ட் சைக்கியாட்ரியும் ப்ராக்டீஸ் பண்ணி இருக்கேன்."

டாக்டர் அமுதா, "ஓ! சாரி டாக்டர். நான் அந்தக் கோணத்தில் உங்க அனுபவத்தை அலசிப் பார்க்கலை. I am really sorry to suspect your credentials"

டாக்டர் மதுசூதன், "Never mind. இதைச் சொல்லுங்க. பொதுவா ஒரு டைவர்ஸ் கேஸில் உங்க குறிக்கோள் என்ன?"

டாக்டர் அமுதா, "முடிந்த வரை விவாகரத்தை தவிற்பது என் முதல் குறிக்கோள். அது முடியாதுன்னா தம்பதியினர் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்காமல் முடிந்த வரை நல்ல நட்புறவுடன் விலக வைப்பது. முக்கியமா குழந்தைகள் இருக்கும் போது கணவன்-மனைவி ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசும் நிலையில் இல்லைன்னா விவாகரத்து கொடுக்க நான் ஒப்புதல் கொடுக்க மாட்டேன்"

டாக்டர் மதுசூதன், "எங்க அணுகு முறை ரொம்ப மாறுபட்டது. எங்க அகராதியில் விவாகரத்து என்ற வார்த்தைக்கே இடம் இல்லைன்னு சொல்லலாம். கணவன் ஆயிரம் மைலுக்கு அப்பால் எல்லையில் இருக்கும் போது, எந்த நிமிஷமும் ஆபத்தான ஆபரேஷனுக்குப் போக தயாரக இருக்கும் போது மனைவி விவாகரத்து வாங்கிட்டுப் போனா, அந்தக் கணவனால எந்தக் காரியத்திலும் முழு மனதோடு ஈடு பட முடியாது. அப்படியே ஈடு பட்டாலும் அவங்களுக்கு சூசைடல் டெண்டன்ஸி இருக்கும் அவங்கனால மத்தவங்களுக்கு ஆபத்து. சோ, எப்படியாவுது கணவன் மனைவி ஒண்ணு சேர வைப்போம்"

முகம் மலர்ந்த டாக்டர் அமுதா, "இந்தக் கேஸில் அப்படி நடந்தா நான் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டு இருப்பேன் டாக்டர். ஆனா விஸ்வாவுக்கு வனிதா மேல் இருக்கும் கோவம், வெறுப்பு இதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போயிடுமான்னு தெரியலை"

டாக்டர் மதுசூதன், "டாக்டர், அவனை பார்த்து பேசாதவரை என்னால் திடமா சொல்ல முடியாது. இருந்தாலும் என் அனுபவத்தை வெச்சு சொல்றேன் அவன் நிச்சயம் வனிதாவை வெறுக்கலை, கோவமும் வனிதா மேல் மட்டும் அப்ப்டின்னு சொல்ல முடியாது."

டாக்டர் அமுதா, "அவன் வனிதாவை வெறுக்கலைன்னு அவனே என் கிட்டே சொல்லி இருக்கான்"

டாக்டர் மதுசூதன், "சரி, முதலில் இந்தக் கேஸ் தொடங்கினதில் இருந்து நீங்க தெரிஞ்சுட்ட விஷயங்ளை சுருக்கமா சொல்லுங்
"

தொடக்கத்தில் இருந்து அந்த விவாகரத்துக் கவுன்சிலிங்கில் தான் தெரிந்து கொண்டவற்றை டாக்டர் அமுதா விளக்கினார்

டாக்டர் மதுசூதன், "சோ, கடைசியா வனிதா குழந்தைகளைப் பிரிக்க ஒப்புதல் இல்லைன்னு சொன்னதுக்குப் பிறகு அவன் இந்தக் கவுன்ஸிலிங்கில் ஈடு படலை. இல்லையா? What about Vanitha?"

டாக்டர் அமுதா, "அதற்குப் பிறகு அவளை ஒரு தரம் மீட் பண்ணினேன். விஸ்வா சைன் பண்ணிய மாற்று விவாகரத்து விண்ணப்பத்தை வனிதாவின் லாயர் கோர்டில் தாக்கல் செஞ்சு இருக்காங்க. ஜட்ஜ் கவுன்ஸிலிங்க் முடிஞ்ச பிறகு விவாகரத்துதான் ஒரே வழின்னு வரும் போது அதை தாக்கல் செய்யச் சொல்லி இருக்கார். நான் இன்னும் ஒரு மாசம் டைம் வேணும்ன்னு ஜட்ஜ்கிட்டே கேட்டு இருக்கேன். ஆனா விஸ்வா அதற்குப் பிறகு கவுன்சிலிங்க் தனக்குப் போதும் அப்படின்னோ, இதில் விருப்பம் இல்லை அப்படின்னோ எந்தத் தாக்கலும் செய்யலை. Neither has he asked his lawyer to proceed on the grounds of adultery"

டாக்டர் மதுசூதன், "He is hurt, angry and confused"

டாக்டர் அமுதா, "Very True, சோ, இந்த கவுன்ஸிலிங்கை எப்படி எடுத்துட்டுப் போகலாம்?"

டாக்டர் மதுசூதன், "முதலில் விஸ்வா என்னோடு முதல் ரெண்டு மூணு சிட்டிங்க் முடிக்கட்டும் அப்பறம் சொல்றேன். ஆனா ஒரு முக்கியமான விஷயம். நான் இந்த கவுன்ஸிலிங்கில் ஈடு பட்டு இருப்பது. ஐ மீன் உங்களுக்கு ஆலோசகராக நியமிக்கப் பட்டு இருப்பது அவங்க ரெண்டு பேருக்கும் தெரியக் கூடாது. விஸ்வாகிட்டே நான் அவன் மேல் இருக்கும் அக்கறையினால் ஈடு பட்டு இருக்கேன்னு சொல்லப் போறேன். அது உண்மையும் கூட. என் ராணுவ செல்வாக்கை உபயோகிச்சு இந்தக் கேஸைப் பத்தின விவரங்களை தெரிஞ்சுட்டேன்னு சொல்லப் போறேன். ஒரு வேளை வனிதாகூட நான் இன்டராக்ட் பண்ண வேண்டிய அவசியம் நேர்ந்தா விஸ்வாவை இதுக்கு முன்னாடி ஹாண்டில் பண்ணின ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டின் உதவியை நீங்க நாடினதா சொல்லுங்க. நான் விஸ்வாகூட பேசிட்டு இருப்பது வனிதாவுக்குத் தெரியக் கூடாது"

டாக்டர் அமுதா, "Why this cloak and dagger? இதுவும் மிலிடரி சைக்கியாட்ரியின் மாறு பட்ட அப்ரோச்சா?"

டாக்டர் மதுசூதன், "மாறு பட்ட அப்ரோச் அப்படின்னா என்ன டாக்டர்? அதற்கு முன்னால் அணுகாத கோணத்தில் அணுகறது. வனிதா தன் மேரேஜ் முறிஞ்சாலும் பரவால்லை. குழந்தைகள் கஷ்டப் படக் கூடாதுன்னு பார்க்கறா. மேரேஜ் முறியும் அளவுக்கு தப்பு செஞ்சவ வனிதா. அந்தத் தப்பை அவ உண்மையா உணர்ந்தாளான்னு எனக்கு சந்தேகம். She seems to be pragmatic. நடந்தது நடந்துடுச்சு. இனி மேற்கொண்டு என்ன? அப்படின்னு பார்க்கற மாதிரி தோணுது. ஆனா விஸ்வாவின் மனத்தில் இன்னும் நடந்த விஷயங்களினால் வந்த மனக் காயம் துளி கூட ஆறலை. இந்த சமயத்தில் இன்னொரு நபர் அவங்க கவுன்ஸிலிங்கில் ஈடு பட்டு இருக்கார்ன்னு தெரிஞ்சா ரெண்டு பேரும் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை. அதனாலதான் நான் அப்படிச் சொன்னேன்"

டாக்டர் அமுதா, "நீங்க சொல்வது ரொம்ப சரி. சோ, நான் கொஞ்ச நாள் வனிதாவை தொடர்பு கொள்ளாமல் இருக்கணுமா"

சற்று யோசித்த டாக்டர் மதுசூதன், "இல்லை. நிச்சயம் அவளை கூப்பிட்டு அவகூட பேசுங்க. விவாகரத்தில் முடியாமல் இருக்க அவ தான் செஞ்சது தப்புன்னு உணறணும். மேலோட்டமா நான் தப்பு செஞ்சுட்டேன்னு சொன்னா போதாது"

டாக்டர் அமுதா, "சோ?"

டாக்டர் மதுசூதன், "வனிதா விஸ்வாவின் மன வலியை நல்லா புரிஞ்சுக்கணும். அவ விஸ்வாவின் நிலைமையில் இருந்து இருந்தா எப்படி அவ ஃபீல் பண்ணி இருப்பான்னு யோசிக்க வையுங்க"

டாக்டர் அமுதா, "I have tried that before..." என இழுத்தார்

டாக்டர் மதுசூதன், "May be only from a woman's point of view. கொஞ்சம் மாற்றி பேச வையுங்க. ஒரு கணவனுக்கு தன் மனைவி வேறு ஒருத்தனை காதலிக்கறான்னு தெரிஞ்சா வரும் மன வேதனையை விட தன் மனைவி வேறு ஒருத்தனுடன் உடலுறவு கொண்டாள்ன்னு தெரிஞ்சா வரும் மன வேதனை அதிகமா இருக்கும். ஆனா, ஒரு மனைவிக்கு தன் கணவன் ஒரு விபசாரிகிட்டே போயிட்டு வந்தான்னு தெரிஞ்சா வரும் மன வேதனையை விட வேறு ஒருத்தியை காதலிக்கறான்னு தெரிஞ்சா வரும் மன வேதனை அதிகமா இருக்கும். That is, பொதுவா செக்ஸுக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. ஆனா, பெண்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கறாங்க. சோ, விஸ்வா வேறு ஒருத்தியை காதலிச்சா அவளுக்கு எப்படி இருக்குன்னு யோசிக்க வையுங்க"

டாக்டர் அமுதா, "வாவ், நான் அந்தக் கோணத்தில் யோசிக்கலை. நான் அவளோடு பேசறேன். But, ஜாயிண்ட் கவுன்ஸிலிங்க் ... " என்று இழுத்தார்

டாக்டர் மதுசூதன், "என் வேலை அனேகமா முழுக்க முழுக்க விஸ்வாவுடன் தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் நீங்க ஹாண்டில் பண்ணி இருக்கீங்க. They both are comfortable meeting you together. அதனால ஜாயிண்ட் கவுன்ஸிலிங்கை நீங்களே ஹாண்டில் பண்ணிட்டு எனக்கு அப்டேட் கொடுங்க. ஓ.கே?"

டாக்டர் அமுதா, "ஓ.கே டாக்டர். இது என் கேஸ் ஃபைல். நீங்க கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணினா ஒரு ஃபுல் காப்பி எடுத்துக் கொடுக்கறேன்"

டாக்டர் மதுசூதன், "ஃபுல் காப்பி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போ எனக்கு அதைக் கொடுங்க. நான் படிச்சுட்டு அவசியமான பகுதிகளை மட்டும் காப்பி எடுத்துட்டு உங்களுக்கு நாளை காலை அனுப்பறேன்."

இருவரும் விடை பெற்றனர்.


PMLஇன் CEO ஆக பதவி ஏற்று இருந்த விஸ்வாவின் மேஜையில் அவனுக்கு என்று ஒதுக்கப் பட்டு இருந்த தனித் தொலைபேசி சிணுங்கியது ...

விஸ்வா, "ஹெல்லோ, விஸ்வா ஹியர்" என்றவனுக்கு எதிர்முனையில் இருந்து அவன் தன் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத குரல், "ஹாய் விஸ்வா! எப்படி இருக்கே?" பதிலளிக்க அவன் மனம் பல வருடங்கள் பின்னோக்கிச் சென்றது ...

மே-1999இல் சிறிதாகத் தொடங்கிய சண்டை கார்கில் போராக மாறும் தருணம். காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையின் பதாலிக் பகுதியை பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுடன் ஆக்கிரமித்து இருந்தது.

இந்திய ராணுவம் கார்கில் செக்டருக்கு பல பகுதிகளில் இருந்தும் துருப்புக்களை சேர்த்து ஒரு ஆர்மி கமாண்ட் செண்டர் அமைத்து இருந்தது. விஸ்வா அந்தக் கமாண்ட் செண்டரில் சேர்ந்து சில நாட்களே அகி இருந்த.

அந்த இடத்தில் இருந்து பல இந்தியப் படைகள் செல்லக் கூடிய பாதையை ஹெலிகாப்டர் மூலம் வேவு பார்த்த பிறகு அப்பாதை பீரங்கிகளை எடுத்துச் செல்ல ஏற்றதா எனக் கணிக்கும் படி விஸ்வாவுக்கு ஆணை வந்தது.

பாம்பே சாப்பர்ஸ்ஸில் எஞ்சினியரான சேத்தன் ராய் மற்றும் இரு வீரர்களுடன் பின் பகுதியில் மெஷின் கன் பொருத்தப் பட்ட ஜீப்பில் அவன் சென்ற போது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இடத்தில் ஒரு ஆஃபீஸர் மற்றும் மூன்று வீரர்கள் கொண்ட ஒரு பாகிஸ்தானிய ராணுவ அணியை அவர்கள் நேருக்கு நேர் எதிர்கொண்டனர்.

அடுத்து நடந்த பத்து நிமிடத் துப்பாக்கிச் சூட்டில் விஸ்வாவின் துரிதச் செயலாலும் அவன் ஆணைகளுக்கு ஏற்ப செயல் பட்ட உடன் வந்து இருந்த இந்திய வீரர்களாலும் பாகிஸ்தானிய வீரர்கள் மூவரும் உயிரிழந்து வீழ்ந்து கிடந்தனர். அந்த ஆஃபீஸர் வலது கையிலும் இடுப்பிலும் குண்டு துளைத்து வீழ்ந்தான்.

இடதுகையால் துப்பாக்கியை எடுத்துச் சுட முடிந்த நிலையிலும் தன்னால் இனியும் விஸ்வாவின் அணியை தோற்கடிக்க முடியாது என்று உணர்ந்து தன் இடதுகையை சரணடைவது போல் உயர்த்தினான்.

விஸ்வாவுடன் வந்து இருந்த ஜவான்கள் இருவருக்கும் குண்டடி பட்டு ஒருவன் இறந்து இருந்தான். மற்றவன் செயலற்று இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை. தன் உடன் வந்து இருந்த எஞ்சினியர் சேதன் ராய் மட்டும் சிறு காயத்துடன் தப்பி இருந்தான்.

அந்த பாகிஸ்தான் ஆஃபீஸரை போர்க் கைதியாக அழைத்துச் செல்ல வாய்ப்பு இருந்தும், இறந்த சக வீரனின் சடலத்தையும் குண்டடி பட்டுச் செயலற்று இருந்தவனையும் மட்டுமே எடுத்துச் செல்ல அவர்களது ஜீப்பில் இடம் இருந்தது. சரணடைந்த பாகிஸ்தானிய ஆஃபீசரை அங்கேயே விட்டுச் செல்லலாம் என்று விஸ்வா முதலில் முடிவெடுத்தான்

சேதன் ராய், "If we leave them, and particularly if we leave him alive here then Paki troops will come to know that we came in this route (இறந்து கிடந்த எதிரி வீரர்களின் சடலத்தையும் அந்த ஆஃபீஸரை உயிருடனும் இங்கு விட்டுச் சென்றால் எதிரிகளுக்கு நாம் தேர்ந்து எடுத்து இருக்கும் பாதை தெரிய வரும்)"

விஸ்வா, "சோ, என்ன செய்யலாம்"

சேதன் ராய், "அந்த ஆஃபீஸரையும் போட்டுத் தள்ளிட்டு அவங்க எல்லார் சடலத்தையும் அவங்க ஜீப்பில் ஏத்தி இந்த மலைச் சரிவில் உருட்டி விட்டுடலாம். பாகிஸ்தான் ரோந்துப் படையோ, ஹெலிகாப்டரோ இந்த இடத்தில் இருந்து குறைஞ்சது அஞ்சு கிலோமீட்டர் தள்ளித்தான் அவங்களை கண்டு பிடிப்பாங்க"

அடிபட்டுக் கிடந்த எதிரி ஆஃபீஸரை சுடுவதைக் கோழைத்தனம் என்று நினைத்தாலும் அவனது ராணுவப் பயிற்சி வேறு வழி இல்லை என்று உணர்த்த வீழ்ந்து கிடந்தவனை துப்பாக்கியுடன் நெருங்கினன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆஃபீஸர் இடது கையால் தன் துப்பாக்கி எடுத்துச் சுட அவனது குண்டு விஸ்வாவின் கால் முட்டியைத் துளைத்தது. மறுகணம் விஸ்வா அவனது இடது கையை தன் குண்டுகளால் செயலிழக்க வைத்தான்.

இரு கைகளும் செயலிழந்து இடுப்பிலும் அடிபட்டு வீழ்ந்து கிடந்த அந்தப் பாகிஸ்தானிய ஆஃபீஸர், "ப்ளீஸ், I heard what you both spoke. நான் எதுவும் சொல்ல மாட்டேன். என் பேரண்ட்ஸுக்கு நான் ஒரே மகன். என் மேல் உயிரையே வெச்சு இருக்கும் என் மனைவி இப்போ கர்பமா இருக்கா. Please don't kill me"

அதைக் கேட்ட விஸ்வா செயலற்று உறைந்தான் ...

சேதன் ராய், "ஸாலா, உனக்குப் பொறக்கப் போற குழந்தையை உன் பேரண்ட்ஸ் பாத்துக்கட்டும். போட்டுத் தள்ளு விஸ்வா"

வேறு வழி இல்லை என்று உணர்ந்து தன் கைத் துப்பாக்கியால் எதிரி ஆஃபீஸரின் நெற்றியைக் குறி பார்த்தான். கெஞ்சிக் கதறும் கண்களோடு அந்த ஆஃபீஸர் உயிரிழந்தான்.

திறந்தபடி இறந்து கிடந்த அந்த ஆஃபீஸரின் கண்கள் விஸ்வாவின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது ...
விஸ்வாவின் உடலில் பட்ட காயங்களுக்கான சிகிச்சை முடிந்த பிறகும் அந்த ஆஃபீஸரின் இறுதிக் கெஞ்சலும் அவனது கண்களும் ஏற்படுத்திய மனக் காயம் ஆறவில்லை.

விஸ்வா ராணுவ மனோதத்துவ மருத்துவர் டாக்டர்-கர்னல் மதுசூதனனிடம் சிகிச்சைக்குச் சென்றான்.

பல நாட்கள் கவுன்ஸிலிங்க் மூலம் டாக்டர் மதுசூனனன் விஸ்வாவின் மனக் காயத்தை ஆற்றினார். அவரது அணுகு முறையும் அவர் வாதங்களும் வாழ்வின் எதார்தங்களை அவர் அவனுக்கு உணர்த்திய விதமும் விஸ்வா மிகவும் கவர்ந்தது. சிகிச்சை முடிந்த பிறகு அவருக்கு மிகவும் கடமைப் பட்டு இருப்பதாக உணர்ந்தான்.

சுய நிலைக்கு வந்த விஸ்வா, "ஹெல்லோ கர்னல்! எப்படி இருக்கீங்க?"

டாக்டர்-கர்னல் மதுசூதன், "I am fine. நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே?"



விஸ்வா, "நான் நல்லாத்தான் இருக்கேன் கர்னல்" என்றவன் மேலும் தன்னைப் பற்றிய பேச்சை வளற்காமல் தொடர்ந்து, "நீங்க ரிடையர் ஆனதாக் கேள்விப் பட்டேன். இப்போ எங்கே இருக்கீங்க?"

டாக்டர்-கர்னல் மதுசூதன், "Right here in Bangalore. இங்கே செட்டில் ஆகி ஆறு மாசம் ஆச்சு. திடீர்ன்னு உன் ஞாபகம் வந்தது. உன் கிட்ட பேசலாம்ன்னு கூப்பிட்டேன். ஈவ்னிங்க் ஃப்ரீயா?"

விஸ்வா, "ஃப்ரீதான் சொல்லுங்க"

டாக்டர்-கர்னல் மதுசூதன், "O.k meet me at 7 pm at Pipers Pavilion"

விஸ்வா, "You mean at R.S.I?"

டாக்டர்-கர்னல் மதுசூதன், "Where else in the world will there be a non-smoking air-conditioned bar with such a name?"

வாய் விட்டுச் சிரித்த விஸ்வா, "O.k Sir. See you at 7"



No comments:

Post a Comment