Monday, September 28, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 2

அப்போது வாட்ச்மேன் வந்து “ ஓய் சத்தி அய்யா கூப்பிடுறாரு” என்று தகவல் சொல்ல, சத்யன் பெரியவீட்டுக்குள் நுழைந்தான்

வீட்டு ஹாலில் ஏகப்பட்ட கல்யாண கூட்டம், அதில் அமுதனை தேடிய சத்யன், அவரை கண்டுபிடித்து அருகில் போனான்

அவரும் அவனை கண்டுகொண்டு “ வாலே மாப்ள, மண்டபத்துல எல்லா வேலையும் முடிஞ்சுதா?” என்று கேட்க

சத்யன் காலையில் இருந்து செய்த வேலைகள் அனைத்தையும் பட்டியலிட்டு வரிசையாக சொல்ல,, அவன் தோளை தட்டிய அமுதன் “ அதுக்குத்தாலே சொந்தக்கார பய ஒருத்தன் கூடவே இருக்கனும்ங்கறது” என்றவர் சத்யனை தோளோடு அனைத்தபடி சற்று தள்ளிப்போய் “ சத்தி நம்ம குவாலிஸ்ல பின்னாடி சரக்கு அட்டைப்பொட்டி இருபது இருக்கு, நீ காரை எடுத்துட்டு மண்டபத்துக்குப் போய் எல்லாத்தையும் ஒரு ரூம்ல இறக்கி பூட்டி சாவியை நீயே வச்சுக்க, நைட்டு நம்ம ஆளுகளுக்கு மட்டும் ஆளுக்கொரு பாட்டில் குடு, அப்புறம் நீயும் அவனுங்களோட குடிச்சுட்டு கூத்தடிக்காத, கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுல வந்து நம்ம கச்சேரியை வச்சுக்கலாம்டா சத்தி” என்றுஅவன் காதோடு ரகசியமாக சொல்ல, சத்யன் சரியென்று தலையசைத்து விட்டு கார் சாவியை வாங்கிக்கொண்டு கிளம்பினான்,



அப்போதுதான் அவனை கவனித்த சாந்தா அவன் பின்னாலேயே ஓடிவந்து “ சத்தி நீ சாப்பிட்டயாடா?” என்று அக்கரையுடன் கேட்க

அவ்வளவு உறவினர்களுக்கு மத்தியிலும் தன்னை மறக்காது விசாரித்தவளை பார்த்ததும் சத்யன் மனசுக்குள் ‘ இந்த மகராசி என்னைக்கும் இப்படியே நல்லாருக்கனும்” என்று வேண்டிக்கொண்டு “ சாப்பிட்டேன் அத்த, நிறைய வேலையிருக்கு நான் கிளம்புறேன்” என்று நகர்ந்தவனை பிடித்து நிறுத்தியவள்

அவன் சட்டைப்பைக்குள் சில நூறுரூபாய் தாள்களை வைத்து “ செலவுக்கு வேனும்னா அப்பப்போ வந்து உன் மாமாகிட்ட நிக்காதே, இதை செலவுக்கு வச்சிக்க” என்று கூறிவிட்டு திரும்பியவள், ஏதோ ஞாபகம் வந்தவளாய் மறுபடியும் வந்து “ ஏலேய் உன் அம்மா பேச்சி ஊர்ல இருந்து வந்தாச்சு நீ பார்க்கலையா” என்று கேட்க..

“ இல்ல அத்த,, எல்லாரும் மண்டபத்துக்கு தானே வர்றீங்க அங்க வச்சு பார்த்துக்கிறேன், இப்போ நேரமாச்சு நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு வாசலை நோக்கி ஓடினான் சத்யன்

அதன்பிறகு வந்த ஒவ்வொரு நிமிடமும் சத்யனின் வாழ்வில் மிகுந்த பரப்பரப்பானதாக மாறியது, ஊரில் இருந்து வந்த சொந்தங்களை வரவேற்று உட்கார வைத்தான்,

“ டேய் மச்சான் என்னடா மதுரைக்கு வந்து ரொம்ப கலராயிட்ட?” என்று பொறாமையுடன் சில நண்பர்களும்,, “ என்னடா மச்சான் இப்படி இளைச்சுட்ட?” என்ற அக்கரையான விசாரிப்புகளையும் “ ஏலேய் என்னலே பாரின் காரன் மாதிரி பேன்ட் சொக்காலாம் போட்டுருக்க?” என்ற உற்சாகம் நிறைந்த கூவல்கள் என எல்லாவற்றையும் தகுந்த பதிலோடு எதிர்கொண்டான் சத்யன்

சரியா இரவு ஏழு மணிக்கு மணமகனும் மணமகளும் அலங்காரம் செய்யப்பட்ட காரில் கந்தர்வர்கள் போல் வந்து இறங்கி ரிசப்ஷன் மேடையில் வந்து அமர்ந்தனர், மணப்பெண் உலகின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தது போல் இருந்தாள்,, ஏற்கனவே அழகாக இருந்த அவளை செயற்கையான அலங்காரங்கள் மேலும் மெருகூட்டியிருந்தது, தங்கக் குடத்து பொட்டு வைத்தாற்போல்,,

ஆராவமுதனின் மகள் இவ்வளவு அழகியா? என்று வியந்துபோய் பார்த்தனர் வந்திருந்தகிராமத்து உறவினர்கள், அதற்குள் முதல் பந்தி ஆரம்பித்து விட்டதால், சத்யன் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான், பாலா ஒரு பக்கம் ஒரு வேலை சொல்ல அவன் மனைவி இன்னொரு வேலையை சொல்லி சத்யனை கடுப்பேத்தினர்


ஆராவமுதன் சத்யன் இருவருக்குமே சொந்தக்காரன் ஒருவன் ஓடிக்கொண்டிருந்த சத்யனை பிடித்து நிறுத்தி ஒரு ஓரமாய் தள்ளிக்கொண்டு போய் “ ஏலேய் சத்தி இவ்வளவு அழகானவளை கோட்டை விட்டுட்டியேடா மச்சான், நானாயிருந்தா இந்த ஒரு வருஷத்துல இவளை கரெக்ட் பண்ணி ஒரு புள்ளையே ரெடி பண்ணிருப்பேன்” என்று சத்யனை மேலும் கடுப்பேத்தினான்

ஏற்கனவே சூடான சத்யன் இவன் வார்த்தையில் மேலும் சூடாகி “ டேய் சுப்பு,, ‘யானையை போடனும்னு ஆசையிருக்கு, ஆனா நம்ம சாமான் எட்டனுமேடா’ அதனால மூடிகிட்டு கம்முன்னு உக்கார்ந்துட்டு , அடுத்த பந்தில போய் சாப்பிடுற வழியப்பாரு” என்றான்

சத்யன் தனது மூக்கை அறுத்தது தெரியாதது போல் “ ஏன்டா மச்சான் எட்டாது எனக்கு எட்டும்” என்று போதையில் நெஞ்சை நிமிர்த்தினான் சுப்பு

சத்யனுக்கு அவன் போதையில் உளறுகிறான் என்று தெரிந்தாலும் விட்டுகொடுக்க மனமின்றி “ ஏலேய் சுப்பிரமணி,, உன்பேர்ல தான்டா பெரிசா மணியிருக்கு, ஆனா உன் மணி எப்படியிருக்கும்னு நம்ம எர்ணாகுளம் ஓமனாவை கேட்டா தெரியும்,, நீ குடுத்த காசைகூட விசிறி உன் மூஞ்சில எறிஞ்சுட்டு ஓடஓட விரட்டுனாளாமே நம்ம பசங்க சொல்லி சொல்லி சிரிச்சானுங்கடா சுப்பு ” என்று அவன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன் திரும்பி ரிசப்ஷன் மேடையை பார்த்தான்

மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாக அமர்ந்திருந்தவளின் அழகு சத்யனை கொஞ்சமும் ஈர்க்கவில்லை,, சத்யன் மதுரைக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் சேர்ந்தார்போல் நான்கு வார்த்தை கூட இவனிடம் பேசியிருக்கமாட்டாள் இந்த கர்வக்காரி,, ‘சரியான உம்னா மூஞ்சி இவளைப்பார்த்தாலே எனக்கு பிடிக்காது இவளைப் போய் கரெக்ட் பண்றதாம் ம்ஹூம் எனக்கு வேணாம்டா இந்த அழகு பிசாசு’ என்று மனசுக்குள் என்னமிட்டாலும்,, மனதின் மற்றொரு மூலையில் அந்த ரங்கேஷ்க்கு முக்கியமான இடத்துல மச்சமிருக்கு போல இல்லேன்னா இப்படியொருத்திய அசால்ட்டா தட்டிக்கிட்டு போகமுடியுமா? என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை

சட்டென்று இருக்கும் வேலைகள் ஞாபகம் வர தலையை உதறி நினைவுகளை கலைத்துக்கொண்டு தனது வேலையை கவனிக்க போனான் சத்யன்
இரவு பத்து மணியானதும் ரிசப்ஷன் முடிய மணமகனின் நண்பர்களை புக் செய்திருந்த ஹோட்டல் ரூம்களின் நம்பரைச் சொல்லி கார்களில் அனுப்பிவைத்தான்

ஒரு சிலர் மட்டும் பாட்டு கச்சேரியை ரசிக்க, மற்றவர்கள் உண்ட மயக்கத்தில் கிடைத்த அறைகளில் போய் படுத்துவிட்டனர்,, மணமக்கள் கூட விதவிதமாக போட்டோவுக்கும் வீடியோவுக்கும் போஸ் கொடுத்துவிட்டு அவரவர் அறைக்கு போய்விட்டனர்,

இரவு பதினொரு மணி சத்யனை தேடிவந்த பேச்சி அவனை இழுத்துச்சென்ற தன் கையால் சாப்பாடு போட்டுவிட்டு “ என்னடா சத்தி பெத்தவள கூட மறந்துட்ட, காலையிலேருந்து உன்னைய தேடுறேன் ஆளே கண்ல படலை” என்று வருத்தத்துடன் கூற

சோற்றை அள்ளி அவசரமாக வாயில் அடைத்தபடி “ நீவேற போம்மா, மூத்திரம் அடிக்கக்கூட நேரமில்லாத அளவுக்கு நைய வேலை வாங்குறானுங்கம்மா, இந்த கல்யாணத்தோட நானும் உன்கூடவே கிளம்பி வந்திறப்போறேன், என்னால இனிமே இங்க இருக்கமுடியாது” என்று கூறிவிட்டு சாப்பிட்ட கையை கழுவ எழுந்தான்

அவன் பின்னாலேயே வந்த பேச்சி “ அய்யோ பாபநாசம் வந்தா மறுபடியும் ஊர் சுத்த கிளம்பிடுவ சத்தி, நீ இங்கயே மாமாகூட இருடா, இப்பத்தான் உன்னை பார்க்க மனுஷனா தெரியுற, இந்த கல்யாணம் மொத்தமும் உன் தலைமையில தான் நடக்குற மாதிரி பாக்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்குடா, நீ இங்கயே இரு ராசா ” என்று கெஞ்சியபடி சத்யன் பின்னால் வந்தாள்




குழாயை திருகி கையை கழுவிய சத்யன் திரும்பி தனது அம்மாவின் புடவையில் கையை துடைத்துவிட்டு “ அப்போ நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லைன்னு சொல்றியா, நெசமாவே நீ எனக்கு அம்மாவா? இல்ல எங்கப்பனுக்கு வைப்பாட்டியா? ” என்று சத்யன் நக்கலாக கேட்க

இது அவனுடைய வழக்கமான பேச்சுதான் என்பதால் “ ஆமாவே நீ எனக்கு சக்களத்தி மவன்தான், பேசுறான் பாரு லூசுத்தனமா, உன்னைய பெத்ததுக்கு..” என்று பேச்சி சொல்லி முடிக்கும்முன்

“ என்னைய பெத்ததுக்கு நீயும் உன் புருஷனும் செகன்ட் ஷோ சினிமாவுக்கு போயிருக்கலாம்,, இல்லேன்னா எங்கப்பன் சாமியாரா போயிருக்கலாம், இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு நடந்திருந்தா கூட நானும் பொறந்திருக்க மாட்டேன், உனக்கும் நிம்மதியா இருந்திருக்கும்” என்று நக்கல் பேசியபடி வெளியே வந்தவனின் மொபைல் அழைக்க,, எடுத்து பேசினான்

சாந்தாதான் பேசினாள் “ சத்தி எங்கடா இருக்க,, சூடா ஒரு ஜக் காபி எடுத்துக்கிட்டு பொண்ணு ரூமுக்கு வாப்பா,, சீக்கிரமா” என்று அவசரமாக சொல்ல “ இதோ எடுத்துட்டு வர்றேன் அத்தை” என்று கூறிவிட்டு சமையலறை பக்கம் போனான்

எப்படித்தான் இவர்களைவிட்டு விலகிப் போக நினைத்தாலும், ஒவ்வொரு முறையும் இவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஓடுறோமே? என்று தன்னையே நொந்தபடி சமையலறை சென்று காபி போடச்சொல்லி வாங்கிக்கொண்டு மாடியிலிருந்த மணமகள் அறையின் வாசலில் நின்று கதவை தட்டினான்

ஒரு இளம்பெண் வந்து கதவைத்திறக்க, சத்யன் ஜக்கில் இருந்த காபியை அந்தப்பெண்ணிடம் கொடுக்க,, அந்தப்பெண் “ நீயே எல்லாருக்கும் சர்வ் பண்ணு” என்றுவிட்டு உள்ளே போய்விட்டாள்

சத்யனுக்கு மறுபடியும் எரிச்சலாக வந்தது, உள்ளே போய் அங்கிருந்த மேசையில் காபி கப்புகளை வைத்து காபியை ஊற்றி அங்கிருந்த எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்தான், ஒரு கப்பை எடுத்துக்கொண்டு கல்யாணப் பெண்ணை நெருங்க,

அவள் இரவு உடையில் இருந்தாள்,, சோபாவில் அமர்ந்து எதிரேயிருந்த டீபாயில் காலை நீட்டி காதில் இருந்த ஹெட்போன் வழியே ஒலித்த பாடலுக்கு தலையசைத்தபடி முகத்தில் எதையோ தடவிக்கொண்டு கண்மூடியிருந்தாள்
சத்யன் அவளை நெருங்கி “ மான்சி இந்தா காபி” என்று குரல் கொடுக்க,,

பட்டென்று கண்விழித்த மான்சி அவனைப்பார்த்து தீயென விழித்தாள்

சத்யனுக்கு அந்த பார்வையின் அர்த்தம் தெரியும்,, முன்பொருமுறை அவள் தோழிகள் முன்னாடி இவளை பெயர் சொல்லி ஒருமையில் அழைத்தபோதும் இதேபோல்தான் பார்வையால் தீயாய் சுட்டெரித்தாள், இன்றும் அதே பார்வை, ஆனால் சத்யன் அசரவில்லை “ என்ன உனக்கு காபி வேனுமா? வேனாமா? எனக்கு கீழே நிறைய வேலையிருக்கு” என்றான் அலட்சியமாக....

அவனை பார்வையால் எரித்தவள், அவன் அலட்சியத்தால் மேலும் ரௌத்திரமானது, ஆனால் உடனே பார்வையின் தீவிரம் மாறி, பார்வையாலேயே டீபாயில் காபியை வைக்குமாறு ஜாடை செய்தவள் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு பாட்டை ரசிக்க ஆரம்பித்தாள்

காபி கப்பை நீட்டியிருந்த அவள் காலுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு உடனே வெளியே வந்தான், அவனுக்கு உள்ளுக்குள் கொதித்தது, ‘எவ்வளவு திமிரு, இருடி உன் திமிரையெல்லாம் நாளைக்கு நைட்டு அந்த திருச்சிக்காறன் அடக்கிடுவான்’ என்று மனதிற்குள் நினைத்தபடி படியிறங்கினான்

ஆனால் அந்த மாப்பிள்ளையை பார்த்தால் சத்யனுக்கு ஏதோ மனஉறுத்தலாகவே இருந்தது, அவனுடைய பார்வை அவன் மனதை படம்பிடித்து காட்டியது,, மண்டபத்தில் இருந்த மணமகன் அறையில் தங்காமல் ஹோட்டலில் இருந்த நண்பர்களுடன் தங்கப்போவதாக கூறிவிட்டு ஆராவமுதன் வாங்கி வைத்திருந்த சரக்குப் பெட்டியில் இரண்டை தூக்கி காரில் வைத்துக்கொண்டு போய்விட்டான், அவனிடம் பாலாவும், ஆராவமுதனும் மாப்பிள்ளை மாப்பிள்ளை, ரொம்ப வழிவது போல சத்யனுக்கு தோன்றியது

சத்யன் அதே யோசனையோடு வந்தபோது அவனது செல் அடிக்க, சத்யன் கையில் இருந்த ஜக்கை வேறு ஒருவனிடம் கொடுத்துவிட்டு போனை ஆன் செய்து “ ஹலோ யாருங்க?” என்றான்

“ நீங்க தானே சுபம் லாட்ஜில் பத்து ரூம்கள் புக் பண்ணது?’ என்றது எதிர்முனையில் வந்த கரகரத்த குரல்

“ ஆமா, நான்தான்” என்றான் சத்யன் குழப்பத்தோடு

“ ஏம்பா நான் லாட்ஜ் மேனேஜர் பேசுறேன்,, கொஞ்சநேரத்துக்கு முன்னாடி லாட்ஜில் நடந்த ரெய்டுல நீங்க தங்கவச்ச ஆளுங்க எல்லாரும் போலீஸ் கிட்ட மாட்டிகிட்டாங்கப்பா, எல்லாரும் இப்போ தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்காங்க” என்று கூற

சத்யன் பதட்டமானான் “ ரெய்டுல ஏன் அவங்க மாட்டுனாங்க, என்ன பிரச்சனை?” என்று குழப்பமாக கேட்டான்,

“ என்னப்பா நீ புரியாதவனா இருக்க,, அவங்களோட சேர்த்து ஆறு பொண்ணுங்களும் மாட்டியிருக்காங்க, இப்போ புரியுதா ரெய்டு எதுக்குன்னு,, அவங்க எல்லோரும் கல்யாணத்துக்கு வந்தவங்க என்பதால உடனே உங்களுக்கு தகவல் சொல்றேன், உடனே யாரையாவது கூட்டிட்டுப் போய் அவங்களை வெளியே கூட்டிட்டு வாங்க,, இதுதான் விஷயம், நானே வெளியே பூத்துல இருந்து போன் பண்றேன் அதனால வச்சிர்றேன் ” என்றவன் போனை உடனே கட் செய்தான்

சத்யன் தனது செல்போனையே சிறிதுநேரம் வெறித்தான், பிறகு ‘ ச்சே மூதேவி புடிச்சவனுங்க,*** வச்சுகிட்டு சும்மா இருக்கமுடியலை போலருக்கு, இன்னிக்குத்தானா இந்த கருமத்தை பண்ணனும்’ என்று முனங்கியபடி ஆராவமுதனை தேடிப் போனான்

சமையலறையில் நின்று நாளைய சமையலில் செய்யவேண்டிய சில மாற்றங்களை பற்றி சொல்லிகொண்டு இருந்தவரை நெருங்கிய சத்யன் அவர் காதருகே குனிந்து “ மாமா ஒரு முக்கியமான விஷயம், கொஞ்சம் வெளியே வாங்க” என்று அழைக்க,, அவன் குரலில் இருந்த இறுக்கம் சூழ்நிலையை புரியவைக்க “என்னாடா விஷயம்” என்றபடி உடனே வெளியே வந்தார்

மண்டபத்தின் ஒதுக்குப்புறமாக போய் தனக்கு போனில் வந்த தகவல்களை சத்யன் சொல்ல,, முகத்தில் வெளிப்படையான அதிர்ச்சியுடன் “ அட கழுத மூளிகளா,, இங்க வந்தா இப்படி பண்ணனும்” என்றவர் நிமிடத்தில் யோசித்து, மாப்பிள்ளையின் அப்பாவை அழைத்து தனக்கு தெரிந்த தகவலை சொல்ல,

அவர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தாலும், அதை மறைத்து, “ சின்னபயலுக ஏதோ பண்ணிட்டானுக, நாம போய் ஏதாவது பேசி கூட்டிட்டு வந்திரலாம் சம்மந்தி, என் மகன் சுப்ரீம்ல இருக்குற ப்ரண்ட்ஸ் கூட இருக்குறதா கொஞ்சம் முன்னாடி தகவல் சொன்னான், அவனை தொந்தரவு பண்ணாம நாம மட்டும் போய் விஷயத்தை முடிச்சுட்டு வரலாம், வாங்க சம்மந்தி?” என்று அழைத்ததும் ஆராவமுதன் வேறு வழியின்றி அவருடன் காரில் கிளம்பினார், கூடவே சத்யனையும் அழைத்துக்கொண்டார் 


மூவரும் தல்லாகுளம் காவல் நிலையத்தை அடைந்தபோது மணி அதிகாலை இரண்டு பத்து ஆகியிருந்தது, காரிலிருந்து இறங்கி மூவரும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அங்கே இரவு பணியில் இருந்த அத்தனை பேரும் இருக்கையிலேயே உறங்கிக்கொண்டிருந்தனர்

சத்யன் ஏட்டின் தோளைத் தட்டி “ சார் சார்” என்று குரல் கொடுக்க,

அவர் நைட்டு அடித்த சரக்கின் உதவியால் ரத்தமென சிவந்த கண்களை திறந்து ஒரு ஐஜியின் தோரணையுடன் “ என்னா வேனும்?” என்று கேட்க

சத்யன் அந்த லாட்ஜின் பெயரைச் சொல்லி “ அங்க ரெய்டுல அரஸ்ட் ஆனவங்க எல்லாம் எங்க சார் இருக்காங்க?” என்று கேட்டான்

பக்கவாட்டில் இருந்த ஒரு அறையை விரல் நீட்டி காட்டிவிட்டு மறுபடியும் மேசையில் கவிழ்ந்தார் ஏட்டு

மூவரும் ஏட்டு காட்டிய அறையின் அருகே போய் கம்பிகளின் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தனர், அங்காங்கே கிடைத்த இடத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் அனைவரும் நைட்டு அடித்த போதை இன்னும் தெளியாமல் சுருண்டு படுத்திருந்தனர், ஆனால் ஒருவர் உடலிலும் சட்டையில்லை, சிலர் இடுப்பில் பேன்ட் இருந்தது சிலரிடம் அதுவுமில்லாமல் வெறும் ஜட்டி மட்டுமே இருந்து, ஒவ்வொருவரின் மீதும் செலுத்திய சத்யன் பார்வை, ஒருக்களித்து படுத்திருந்த ஒருவனிடம் வந்ததும் திகைத்து நின்றது, திகைப்பு மாறாமல் பக்கத்தில் இருந்த அமுதனை பார்த்து கண்ணால் ஜாடை செய்ய..

அவரும் சத்யன் காட்டிய இடத்தைப் பார்த்துவிட்டு திகைப்புடன் “ இது மாப்பிள்ளை ரங்கேஷ் ஆச்சே, இவரு எப்படி இங்கே? ” என்று வார்த்தையை முடிக்கமுடியாமல் திணறினார்

அதற்குள் இவர்களின் குரல் கேட்டு கண்விழித்தவர்கள் வாறிசுருட்டிக் கொண்டு எழுந்து நின்றனர், நிதானமாக எழுந்து வந்த ரங்கேஷ் இடுப்பில் நழுவிய கைலியை இறுக்கி கட்டிக்கொண்டு மற்ற இருவரையும் சட்டை செய்யாமல் தனது அப்பாவிடம் வந்து “ டாடி இந்த ஊர் போலீஸ் ரொம்ப மோசம்,, நான் இன்னாருடைய மகன்னு சொல்லியும் என்னைய விடவேயில்லை,, இத்தனைக்கும் இவனுங்க வர்றப்ப அந்த பொண்ணு கூட நான் ஒன்னும் என்ஜாய் பண்ணலை, நான் அப்பதான் முடிச்சிட்டு சோபாவில் உட்கார்ந்து தம்மை பத்த வச்சேன், என் பிரண்ட் தான் மறுபடியும் அவளை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சான், அந்த சமயத்துல வந்து அரெஸ்ட் பண்ணிட்டானுங்க டாடி, என்னோட மொபைல் பணம் எல்லாத்தையும் புடிங்கிட்டானுங்க டாடி,, மொதல்ல இவனுங்க ரூம் புக் பண்ண லாட்ஜே சரியில்லை, இதே பெரிய ஹோட்டலா இருந்தா அவ்வளவு சுலபமா ரெய்டு வராது ” என்று தனது கேவலமான சுய விளக்கத்தை தனது தந்தையிடம் கூறியதோடு அல்லாமல் லாட்ஜ் சரியில்லாததால் தான் ரெய்டு வந்ததாக குற்றத்தை ஆராவமுதன் மீது சுமத்தினான்

அப்பனுக்கும் மகனுக்கும் உள்ள அசிங்கம் பிடித்த நெருக்கம் சத்யனுக்கு அப்பட்டமாக புரிய உள்ளுக்குள் கொதிக்க பக்கத்தில் இருந்த ஆராவமுதனை பார்த்தான், அந்த மெல்லிய இருட்டில் அவரது முகம் தணல் போல் ஜொலித்தது, கோபத்தில் கண்கள் ரத்தமென சிவந்திருக்க, சத்யனின் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டு “ வாடா மாப்ளே போகலாம்” என்று சத்யனை இழுத்துக்கொண்டு அவசரமாக போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறினார்

வந்தது மாப்பிள்ளையின் அப்பா கார் என்பதால், இருவரும் அந்தநேரத்தில் ஆட்டோவிற்காக அலைந்து பிறகு மாட்டுத்தாவணிக்கு பஸ்ஸில் போய் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ராஜமுத்தையா மன்றம் வந்தபோது மணி காலை ஐந்து ஆகியிருந்தது

இருவரும் மண்டபத்துக்குள் நுழைந்தபோது ஆறு ஏழரை முகூர்த்தத்திற்கு அனைவரும் பரபரப்புடன் தயாராகிக்கொண்டு இருந்தனர்,, சத்யனுக்கு ஆராவமுதன் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது,

அவர் நேராக மணமகள் அறைக்கு சென்று கதவைத் தட்ட, சாந்தாதான் வந்து கதவை திறந்தாள், கணவரின் முகத்தை பார்த்து “ என்னங்க என்னாச்சு? உங்க முகம் ஏன் இப்படி இருக்கு? ” என்று கேட்க

மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேகமாக உள்ளே நுழைந்து கட்டிலில் தொப்பென்று அமர்ந்தார் ஆராவமுதன்,,

தலைக்கு குளித்துவிட்டு டிரையரில் தலையை உலர்த்திக்கொண்டு இருந்த மான்சி அவரருகில் வந்து அமர்ந்து “ என்னாச்சு அப்பா?” என்று கேட்க

தன் மகளின் நிர்மலமான முகத்தை ஏறிட்டவருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, ‘ எப்படி தேவதை மாதிரி பொண்ணை அந்த கேடுகெட்டவனுக்கு குடுக்க நினைச்சேனே, விடிஞ்சா கல்யாணத்தை வச்சிகிட்டு தேவிடியாள் கூட படுக்குறவன் என் மகளுக்கு புருஷனா? ம்ஹூம் இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது’ என்ற உறுதி மனதில் வர கடகடவென நடந்தவைகளை அங்கிருந்த அனைவரிடமும் சொன்னார்

அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க பாலா தன் அப்பாவின் அருகே வந்து “ அப்பா இதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க, சைலன்ட்டா கல்யாணத்தை முடிக்கலாம், அப்புறமா மாப்பிள்ளைக்கு புத்தி சொன்னா சரியாயிடுவார்” என்று கூற

ஆராவமுதன் தன் மகனை எரித்துவிடுவது போல் பார்த்தார், “ டேய் இவ உன் தங்கச்சிடா, இவளையா அந்த ராஸ்கலுக்கு குடுக்கச் சொல்ற?” என்று ஆத்திரத்துடன் கத்தியவர் “ எல்லாரும் கேட்டுக்கங்க இந்த கல்யாணம் நடக்காது, இப்படியொரு கேவலமானவனுக்கு என் மகளை தரமாட்டேன், அதனால எல்லாத்தையும் பேக் பண்ணிகிட்டு வீட்டுக்கு கிளம்புங்க” என்று சிங்கமாய் கர்ஜித்தார் 


அப்போது அந்த அறையின் வாசலில் சலசலப்பு ஏற்பட எல்லோரின் பார்வையும் அங்கே திரும்பியது, ரங்கேஷ்ம் அவன் அப்பனும் நின்றிருந்தனர், அந்த அதிகாலையில் பணத்தை இறைத்து மகனை அழைத்து வந்துவிட்டிருந்தார்

அதற்குள் கூட்டம் கூடிவிட்டிருக்க கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே வந்த அந்த பெரியமனிதன் “ சம்மந்தி இதென்ன கூச்சல்,, நடந்தது நடந்து போச்சு, எல்லாம் கல்யாணம் ஆனா சரியாயிடும், மொதல்ல எல்லாரையும் ரெடியாக சொல்லுங்க” என்றார் கூலாக

ஆராவமுதனின் கோபம் உச்சத்துக்குப் போனது " என்னய்யா நடந்தது நடந்து போச்சுன்னு சாவகாசமா சொல்ற,, இதோ பார் இன்னும் அரை மணிநேரம் உனக்கும் உன்னைச் சேர்ந்தவங்களுக்கும் டைம் தர்றேன், அதுக்குள்ள எல்லாத்தையும் எடுத்துகிட்டு திருச்சிக்கு ஓடிப்போயிருங்க, இல்லேன்னா உன் மகன் இருந்த அதே ஸ்டேஷன் ரூம்ல நான் போய் இருக்கவேண்டியிருக்கும், உங்களையெல்லாம் கொலை பண்ணிட்டு" என்று ஆக்ரோஷத்துடன் கத்தியவரைப் பார்த்து அனைவரும் பயத்துடன் ஒதுங்கினர்,

இப்போது ரங்கேஷின் அப்பனுக்கும் கோபம் வர " யோவ் சம்மந்தி யோசிச்சு தான் பேசுறியா? நாங்க போய்ட்டா அதுக்கப்புறம் உன் மகளை எவன்யா கட்டுவான், அப்படியே எவன் வந்தாலும் அவனை ஒளிச்சு கட்டிட்டுத்தான் மறுவேலை, நான் யாருன்னு உனக்கு இன்னும் சரியா தெரியாதில்லையா? ஒழுங்கா பொண்ணை ரெடி பண்ணி மணவறைக்கு கூட்டிட்டு வா, என் மகன் வந்து தாலியை கட்டுவான் " என்று அந்தாள் புலியாய் உறுமினான்

இவர்களின் பேச்சு இருக்க இருக்க வரம்பை மீறி காதுகொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு போக, மாப்பிள்ளையின் குடும்பத்தினர் எவ்வளவு தரமிழந்தவர்கள் என்பது அவர்களின் பேச்சிலேயே தெரிந்தது,

அங்கே கூடியிருந்த அனைவரும் சலசலவென்று ஆளுக்கொரு நியாயம் பேச, தாலி கட்டுற நேரத்தில் கல்யாணத்தை நிறுத்துறத விட ரங்கேஷ்க்கே மான்சியை திருமணம் செய்து வைப்பதுதான் நல்லது, இல்லையென்றால் பெண்ணுக்கு மறுபடியும் திருமணம் ஆவதே கஷ்டம் என்று ஒரு சிலர் உரக்கவே பேசினர்

அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஆராவமுதனின் தன்மானத்துக்கு விழுந்த அடியாக நினைத்தவர், அங்கிருந்த சத்யனை ஏறிட்டு நோக்கி " டேய் மாப்ளே நீ போய் குளிச்சிட்டு புதுத்துணி போட்டுகிட்டு வாடா, என் பொண்ணு கல்யாணம் எப்படி நிக்குதுன்னு பார்க்குறேன்" என்று ஆத்திரமாய் பேச..

அவர் வார்த்தைகளின் அர்த்தம் அனைவருக்கும் புரிந்தபோது அதிகமாய் அதிர்ந்தது சத்யன் தான் 'அய்யய்யோ இந்த பிசாசு கூடவா எனக்கு கல்யாணம், இவளும் இவ மூஞ்சியும், ம்ஹூம்' என்று அதிர்ச்சியில் உறைந்து அப்படியே நின்றான்

மான்சி அதைவிட அதிர்ச்சியில் இருந்து மீளாமல், சத்யனின் பக்கமாக பார்வையை திருப்பினாள், அவனைப்பார்த்த பார்வையில் அளவுகடந்த அருவருப்பும் கோபமும் இருந்தது,

சாந்தா திகைப்புடன் கணவரை நெருங்கி கைகளை பற்றி " என்னங்க நிதானமா யோசிச்சு செய்யலாமே, கொஞ்சம் அமைதியா இருங்க" என்று பயந்து பயந்து நயமாக பேச

மனைவி பற்றியிருந்த தனது கைகளை உதறி உருவிக்கொண்ட ஆராவமுதன் " இன்னும் என்னடி யோசிக்க இருக்கு, ஏன் சத்யனுக்கு என்ன குறைச்சல், இந்த பரதேசி நாயைவிட அவன் ஆயிரமடங்கு உயர்ந்தவன்,, என்னோட முடிவு இதுதான், இதுக்கு மாற்று கருத்து சொல்ல நினைச்சீங்கன்னா..........." என்று வார்த்தையை முடிக்காமல் சுற்றிலும் பார்வையை ஓட்டிவிட்டு, தன் மகளின் முகத்தில் வந்து நிலைக்கவிட்டவர் " என்னோட பிணத்தை தான் நீங்கல்லாம் பார்க்கனும்" என்றார் முடிவுடன்

அதன்பிறகு யாருமே வாயைத்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை, சாந்தா மகளுக்கு அலங்காரம் செய்யும் பெண்ணை அழைத்து " சீக்கிரமா மான்சியை ரெடி பண்ணுங்க" என்று கூறிவிட்டு பேச்சியை அழைத்து " பேச்சி நீ சத்யன் குளிச்சதும் புதுத்துணி போட்டு கூட்டிட்டு வா சீக்கிரமா போ" என்று உத்தரவிட்டாள்

ஆராவமுதன் அப்படி சொன்னதும் சத்யனும் கூட எதுவும் பேசவில்லை,, அவன் குளித்து திருமணத்திற்கு அவனுக்கு எடுத்து கொடுத்திருந்த பட்டுவேட்டி வெள்ளை சட்டையை போட்டுக்கொண்டு மணவறையில் வந்து அமர்ந்த சிறிது நேரத்தில் மான்சி முழுமையான மணப்பெண் அலங்காரத்துடன் வந்து அவனருகில் அமர்ந்தாள்

அய்யர் மந்திரம் சொல்லி தாலியை எடுத்து சத்யன் கையில் கொடுத்தபோது சத்யன் அந்த மங்களநானை கையில் வாங்கவே பயந்தான், ஆராவமுதன் முன்னே வந்து அய்யரிடம் இருந்து தாலியை வாங்கி சத்யன் கையில் கொடுத்து " ம் கட்டுடா மாப்ளே" என்று கர்ஜிக்க,

சத்யன் அரைமனதோடு தாலியை வாங்கி மான்சியின் கழுத்தில் கட்டினான், தாலியை கட்டிவிட்டு நிமிர்ந்தவன் மான்சியின் கண்களை நேராக சந்தித்தான்,, அந்த கண்களில் ஒரு புழுவைப் பார்ப்பது போன்ற அருவருப்பும், ச்சீ என்ற அலட்சியமும் நிரந்தரமாக தொக்கி நின்றது,

சத்யனும் அலட்சியத்துடன் உதட்டை பிதுக்கியவாறு திரும்பிக்கொண்டான்,,




" உனது மௌனத்தின் அர்த்தம்,,

" புரியாவிட்டாலும்,,

" உனது கண்கள் பேசும்,,

" வார்த்தைகளுக்கு,,

" என்னால் ஒரு மொழியை,,

" உருவாக்க முடியும்,,

" அந்த மொழிக்கு என்ன பெயர் வைப்பது? ..

" நீ அக்னியாய் விழிக்கும்போது..

" உன் விழி மொழியின் பெயர்- பாலைவனம் ,,

" நீ கொஞ்சலாய் சிரிக்கும்போது...

" உன் விழி மொழியின் பெயர் - தென்றல்,,

" நீ காதலாகி கசியும் போது,,

" உன் விழி மொழியின் பெயர் - பூஞ்சோலை,,

" இதில் ஏதாவது ஒரு பெயரை நிரந்தரமாக்க...

" நான் என்ன செய்யவேண்டும் சொல்? 


1 comment: