Thursday, September 17, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 4


அடுத்த வாரம் ... விஸ்வா அமுதாவின் கவுன்ஸிலிங்க் செண்டருக்கு வருகிறான் ... 

அமுதாவின் காரியதரிசி உள்ளே செல்ல அனுமதித்த பிறகு ...

விஸ்வா, "May I come in Doctor?"

அவர் முகத்தில் எப்போதும் குடியிருக்கும் புன்முறுவலுடன் அமுதா, "எஸ் விஸ்வா, என் அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் உன்னுதுதான். please come and have a seat"

அவருக்கு எதிரே அமர்ந்த விஸ்வா அமுதா மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கு முன் தன் ஆர்கனைஸரில் இருந்து இரு பக்கங்களை அகற்றி அவற்றை அமுதாவிடம் நீட்டினான் ...

அமுதா, "ஓ! நான் உங்களுக்கு எழுதச் சொன்ன லிஸ்ட்?"

விஸ்வா, "எஸ் மேம்"

அமுதா, "நீயே வெச்சுட்டு இரு. அதை கடைசியா பார்க்கலாம். ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே"

விரக்தி படிந்த அவன் முகத்தை கூர்ந்து நோக்கிய அமுதா, "விஸ்வா, போன வாரம் வனிதா என்கிட்ட நடந்த உண்மைகளை சொன்னா ... " என்று சொல்லச் சொல்ல விஸ்வாவின் முகத்தில் சிறு வியப்பும் பிறகு கோபமும் படறுவதைக் கவனித்தவர், "ப்ளீஸ் விஸ்வா, நான் முதலில் சொன்ன மாதிரி எந்த விஷயமும் இந்த நாலு சுவத்துக்கு வெளியே போகாது. You can rest assured of that"



விஸ்வா தலையசைக்க ...

அமுதா, "விஸ்வா, அடுத்த சில சிட்டிங்க்ஸில் உங்க கல்யாணம் ஆனதில் இருந்து நடந்ததை எல்லாம் உன் கண்ணோட்டத்தில் நீ எனக்கு சொல்லணும்"

விஸ்வா, "அதை சொல்லற மன நிலையில் நான் இல்லை. நீங்க எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லறேன்"

சில கணங்கள் அவனை கூர்ந்து நோக்கிய அமுதா, "விஸ்வா, நீ படும் மன வேதனை எனக்கு புரியுது. மனசில் அப்படி ஒரு வேதனையோட, வலியோட ஒரு முடிவு எடுத்தா அது சரியா இருக்குமான்னு நீயே ஆராய்ந்து பார்க்கணும். அதுக்கு நான் உனக்கு ஹெல்ப் பண்ணப் போறேன்"

விஸ்வா, "நான் எடுத்த முடிவை மட்டும் நீங்க பார்க்கற மாதிரி தெரியுது"

அமுதா, "No. Let me make something clear about myself. I do not approve of Infidelity (முறை கேடான உறவை நான் எப்போதும் ஆதரிக்க மாட்டேன்) அதற்கு நான் சொல்லும் காரணங்கள் நீ நினைப்பதை விட முற்றும் மாறுபட்டு இருக்கும். நீ போகப் போக புரிஞ்சுக்குவே"

விஸ்வா மௌனம் காக்க ...

தொடர்ந்த அமுதா, "தவறு செஞ்ச ஒரு ஆணையும் பெண்ணையும் நம் சமுதாயம் பார்க்கும் விதம் வேற வேற. கணவன் வேற ஒருத்தி கூட தொடர்ந்து உறவு வெச்சுட்டா பெரியவங்க எல்லாம் சேர்ந்து எப்படியாவுது கணவன் மனைவியை சேத்து வெச்சுடுவாங்க. அப்படி இல்லாம அவன் விபசாரிகூட படுத்துட்டு வந்ததை மனைவி பெரியவங்ககிட்டே முறையிட்டா அவங்க 'நீ உன் புருஷனை நல்லா கவனிச்சுட்டா அவன் ஏன் வெளியில் போறான்?' அப்படி அறிவுரை சொல்லுவாங்க. ஆனா மனைவி தப்பு செஞ்சா அது சின்னத் தப்போ பெரிய தப்போ எல்லோரும் எடுக்கும் முடிவு அவளை வீட்டை விட்டு துரத்தறதுதான் ..."

இடைமறித்த விஸ்வா, "எனக்கு ஒரு ஞாயம் அவளுக்கு ஒரு ஞாயம்ன்னு நினைக்கறவன் நான் இல்லை. என் பேரண்ட்ஸ் என்னை அப்படி வளர்க்கலை"

அமுதா, "தெரியும் ... நான் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுடறேன். ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே"

அமுதா, "என்னப் பொறுத்தவரை அந்த தவறில் கணவன் மனைவி இவங்க ரெண்டு பேரில் யார் ஈடுபட்டாலும் அதை நான் பார்க்கும் விதம் ஒண்ணுதான். தவறுக்கு மன்னிப்பு பெற கணவனுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ அதே அளவுக்கு உரிமை மனைவிக்கும் இருக்கணும்ன்னு நினைக்கறேன்"

மறுபடி இடைமறித்த விஸ்வா, "நான் இந்த மாதிரி ஒரு தப்பு பண்ணி இருந்தா வனிதா என்ன தண்டனை கொடுத்தாலும் நான் நிச்சயம் ஏத்துட்டு இருப்பேன்"

அமுதா, "ப்ளீஸ், நான் சொல்ல வந்ததை சொல்ல விடு. ஓ.கே? நான் கேள்விப் பட்டவரைக்கும் எதையும் தீர்க்கமா ஆராய்ந்து செயல் படுவே. இல்லையா?"

விஸ்வா, "எஸ். இல்லைன்னா இன்னேரம் அவளைப் பத்தி ஊர் முழுக்க பேசி இருக்கும்"

அமுதா, "அது எனக்கும் தெரியும். பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வனிதாவின் எதிர்காலத்தையும் நினைச்சு இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நீ எடுத்த இந்த முடிவை நான் ரொம்ப பாராட்டறேன் விஸ்வா. இப்போ நான் சில விஷயங்களை சொல்ல விரும்பறேன். சரியா?"

விஸ்வா, "சரி"

அமுதா, "இந்தக் கவுன்ஸிலிங்கின் முக்கிய குறிக்கோள் என்னன்னு இப்போ நான் உனக்கு சொல்லறேன். அதை நீ மனசில் வெச்சுக்கணும். ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே"

அமுதா, "இந்தக் கேஸ் டைவர்ஸில் முடிஞ்சாலும் சரி, நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து வாழ்ந்தாலும் சரி, நீங்க ரெண்டு பேரும் செய்த தவறை உணறணும். அந்த மாதிரி தவறுகளை மறுபடி செய்யாம வாழும் வைராக்கியம் வரணும். அந்தத் தவறுகளை மனதார மன்னிக்கும் மனப்பக்குவம் வரணும். வர வெச்சுக்கணும். அதுக்குப் பிறகும் கணவன் மனைவியா வாழ முடியாதுன்னா நல்ல நண்பர்களாத்தான் பிரிஞ்சு போகணும். எதிரிகளா பிரியக் கூடாது"

விஸ்வா, "நான் என்ன தவறு செஞ்சேன்?"

அமுதா, "I don't know as yet. தவறு செய்யறதைத் தூண்டறதும் தவறுதானே?"

ஒரு கணம் விஸ்வாவின் முகத்தில் தோன்றி மறைந்த பதற்றத்தை அமுதா கவனித்தார் ...

விஸ்வா, "நான் எந்த விதத்திலும் அவளைத் தவறு செய்யத் தூண்டலை. எல்லாக் குடும்பத்திலும் இருப்பது மாதிரி தான் எங்க குடும்பத்தில் அவகிட்டே நடந்துகிட்டேன்"

அமுதா, "அது எனக்கு இன்னும் தெரியாது. நான் எதையும் அனுமானம் செஞ்சுக்கவும் விரும்பலை. Please understand Viswa"

விஸ்வா, "சரி, ஏன் மன்னிக்கணும்?"

அமுதா, "இப்போ, அவ மட்டும்தான் தவறு செஞ்சான்னு வெச்சுக்குவோம். நி அவளை மன்னிச்சாத்தான் அவ செஞ்ச தவறை உன்னால் மறக்க முடியும். மறந்தாத்தான் உன்னால டைவர்ஸுக்குப் பிறகு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க முடியும். அவளை நீ மன்னித்து அவ செஞ்சதை மறக்கலைன்னா உன் மனசில் இருக்கும் வலி போகாது. வாழ் நாள் முழுவதும் வலிக்கும். உன் மனசில் இருக்கும் வலியினால் உன் வாழ்க்கையை நீயே ஒரு நரகமாக்கிடுவே. Do you agree with me?"

விஸ்வா நீண்ட மௌனத்துக்குப் பிறகு பெருமூச்சுடன், "நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. ஆனா..."

அமுதா, "Hold it right there young man! இப்போ உடனே அவளை மன்னிச்சுட்டேன்னு உன்னால் சொல்ல முடியாது. I know that"

விஸ்வா, "அப்பறம் எப்படி?"

அமுதா, "விஸ்வா, இந்த கவுன்ஸிலிங்கில் மொத்தம் நாலு ஸ்டேஜஸ் (கட்டங்கள்) இருக்கு" என்று தொடங்கி ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கினார் ...

"முதல் கட்டம் ரெண்டு பேருக்கும் இருக்கும் கடும் மன வேதனையைக் குறைக்க நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். இப்போ நாம் அந்தக் கட்டத்தில் இருக்கோம்.

இரண்டாவது கட்டம் நடந்த தவறுக்கான காரணங்களை, அதை நீ வனிதாவின் கண்ணோட்டத்திலும் வனிதா உன் கண்ணோட்டத்திலும் பார்த்துப் புரிஞ்சுக்கறது.

மூணாவுது கட்டம்தான் மன்னிப்பது.

நாலாவுது கட்டம் கடந்தவைகளையும் எதிர்காலத்தையும் மனசில் வெச்சுட்டு கணவன் மனைவியா சேர்ந்து வாழறதா இல்லை நல்ல நண்பர்களா பிரிஞ்சு போறதான்னு முடிவு எடுக்கறது"

விஸ்வா மௌனம் காத்தான் ..

குரலை உயர்த்தி கண்களில் உக்கிரத்தைக் காட்டி அமுதா, "இதில் உனக்கு உடன் பாடு இல்லைன்னா You may go now"

விஸ்வா, "I agree with you"


மறுபடி முகத்தில் சாந்தம் குடிபுக அமுதா, "Now, மன்னிப்பு அப்படின்னா என்ன விஸ்வா?"

விஸ்வா, "மன்னிக்கறதுன்னா ... மன்னிப்பு கொடுக்கறது. I mean அவ செஞ்ச தவறை ஓ.கேன்னு ஒத்துக்கறது. Like accepting that it was right"

அமுதா, "ம்ம்ஹூம் ... மன்னிப்பு அப்படிங்கறது மன்னிப்பு கொடுப்பவர்களின் மனம் சம்மந்தப் பட்ட விஷயம். அவ செஞ்ச தவறினால் உன் மனம் பாதிக்கப் பட்டு இருக்கு. உன் சொத்தை மத்தவன் அனுபவிச்சுட்டானேன்னு ஒரு மன வேதனை. உனக்கு மட்டும் சொந்தம்ன்னு நீ நினைச்சதை இன்னொருத்தனுக்கு எடுத்துக் கொடுத்துட்டாளேன்னும், நீ கொடுக்க வேண்டிய சுகத்தை இன்னொருத்தன்கிட்டே வாங்கிட்டாளேன்னும் வனிதா மேல கோபம், வெறுப்பு. அதனால் உன் மனசில் அவளை பழி வாங்கணும்ன்னு, அவள் மனசில் அதே அளவுக்கு வலியை ஏற்படுத்தணும்ன்னு ஒரு negative thought இருக்கும் இல்லையா? அப்படிப் பட்ட எண்ணங்களையும் அவள் மேல் இருக்கும் கோபத்தையும் வெறுப்பையும் விட்டுடறதுதான் மன்னிப்பு. நீ அவளை மன்னிச்சுட்டேன்னா அதற்குப் பிறகு அவளை நீ வெறுக்கலைன்னு அர்த்தம். அவளுக்கு மேலும் நீ மன வலியை கொடுக்க விரும்பலைன்னு நீ உண்மையா நினைக்கறதுதான் மன்னிப்பு"

விஸ்வா, "அவளுக்கு என்ன மன வலி? All she has is guilty conscience (அவளுக்கு இருப்பது குற்ற உணற்வு மட்டும்தான்)"

அமுதா, "அவளுக்கு மன வலி இல்லைங்கறயா? நிறைய இருக்கு. அதுக்கு குற்ற உணற்வு மட்டும் காரணம் இல்லை. உன் மனசை, உன் ஃபீலிங்க்ஸை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டதை நினைச்சுக் கவலைப் படறதும் ஒரு காரணம். அன்னைக்கு உனக்கு விஷயம் தெரிஞ்சதுக்கு பிறகு அவ தற்கொலை செஞ்சுக்கலாம்ன்னு நினைச்சா. அது உனக்குத் தெரியுமா?"

பேரதிர்ச்சியால் கண்கள் விரியா விஸ்வா, "என்னது? தற்கொலை செஞ்சுக்க இருந்தாளா?"

அமுதா, "அன்னைக்கு மட்டும் டே கேர் சென்டரில் இருந்து குழந்தைங்களை கூட்டிட்டுப் போங்க நேரமாச்சுன்னு அவளுக்கு ஃபோன் வந்து இருக்கலைன்னா அவளை நீ உயிரோட பாத்து இருக்க மாட்டே"

விஸ்வாவின் முகத்தில் குழப்பம் ..

விஸ்வா, "அவளுக்கே அது அப்படிப்பட்ட தப்புன்னு தெரியும்போது Why did she do it?"

அமுதா, "ஏன்னா அவ கண்ணோட்டத்தில் தப்புன்னு நினைச்சது வேற. At least in the beginning (தொடக்கத்தில் அப்படித்தான் நினைத்தாள்)"

விஸ்வா, "அது என்ன அவ கண்ணோட்டத்தில்?"

அமுதா, "நான் உன்கிட்டே ஒண்ணு கேட்பேன். உண்மையா அதுக்கு பதில் சொல்லணும். ஓ.கே?"

விஸ்வா, "ஒ.கே?"

அமுதா, "கொலை செய்யறது தவறா சரியா?"

விஸ்வா, "Of course it is wrong"

அமுதா, "மெட்ராஸ் ஸாப்பர்ஸில் இருக்கும் சைக்கியாட்ரிஸ்ட் எனக்குத் தெரிஞ்சவர்தான். உன் ஆர்மி கேஸ் ஃபைலை முழுசும் படிச்சுட்டுத்தான் இதைக் கேட்கிறேன். Of course, நான் அந்தக் கேஸ் ஃபைலைப் படிச்சது யாருக்கும் தெரியாது. உன்னால் ப்ரூவ் பண்ணவும் முடியாது. Please think as an army man who was in Kargil combat and tell me (கார்கில் போரில் கலந்து கொண்ட ஒரு போர் வீரனாக நினைத்து இதற்கு பதில் சொல்)"

ஒரு கணம் திகைத்த விஸ்வா அமுதாவுக்கு வெளி உலகில், ராணுவம் உட்பட எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை உணர்ந்து வியந்தான் .. மௌனம் காத்தான் ..

அமுதா, "ம்ம்ம் .. Come on answer me"

விஸ்வா, "நான் என் கடமையை செஞ்சேன்"

அமுதா, "ஓ! கடமைக்காக செஞ்சா அது பரவால்லையா? பாக்கிஸ்தானைப் பொறுத்த வரை நீ ஒரு கொலைகாரன். உன் கூட வந்த எஞ்சினியரைக் காப்பாத்த பாக்கிஸ்தானிய கேப்டன் ஒருத்தரை நீ சுட்டுக் கொன்னே. அவரோட மனைவியின் கண்ணில் நீ மகா பாதகன்" என்று ஆணித்தரமாக முடித்தார்

விஸ்வாவின் முகம் வெளுத்தது ...

அமுதா, "சாரி, உன்னை கஷ்டப் படுத்தணும்ன்னு நான் இதை சொல்லலை. But do you now understand that there are two sides to a coin?"

விஸ்வா, "Yes, இருந்தாலும் அவ கண்ணோட்டத்தில் அவ செஞ்சது சரின்னு நினைக்கறாளா?"

அமுதா, "இல்லை. அவ செஞ்சதை ரெண்டு ஸ்டேஜா பிரிக்கலாம் உங்க கல்யாணம் ஆன இரண்டாம் வருஷத்தில் அவ செஞ்சதை சரின்னு நினைச்சு செஞ்சா. இப்போ ஆறு மாசமா செஞ்சதை தப்புன்னு நினைக்கறா. எனக்கு என்னவோ முன்னாடி செஞ்சதையும் தவறுன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் உணர்ந்து இருப்பான்னு தோணுது"

விஸ்வா, "எப்படி அவ சரின்னு நினைச்சு செய்யலாம்?"

அமுதா, "அதையும் பார்க்கத்தான் போறோம். சரி, உன்னால் உடனே மன்னிப்பு கொடுக்க முடியாது. அதுக்கு நாள் ஆகும்ன்னு சொனேன்இல்லையா? எப்படி மன்னிப்புக் கொடுக்கும் மனப் பக்குவம் உனக்கு வரும்ன்னு பார்க்கலாமா?"

விஸ்வா, "ம்ம்ம்"

அமுதா, "நாம் எல்லோருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு பாத்திரங்கள் (roles) இருக்கு. இப்போ உன்னை எடுத்துக்கோ. விஸ்வா ஒரு எக்ஸ்-ஆர்மி மேன். விஸ்வா ஒரு ஜெனரல் மேனேஜர். விஸ்வா ஒரு காதலன். விஸ்வா ஒரு கணவன். விஸ்வா ஒரு தந்தை இப்படி பல ரோல்ஸ் இருக்கு. இல்லையா?"

விஸ்வா, "எஸ்"

அமுதா, "வனிதாவுக்கும் அதே மாதிரி பல ரோல்ஸ் இருக்கு. எல்லாம் நீ அவகிட்டே இருந்து எதிர்பார்த்த மாதிரி ரோல்ஸ். ஒண்ணே ஒண்ணைத் தவிற. அது வனிதா ஒரு நடத்தை தவறியவள் அப்படிங்கற பாத்திரம். அடுத்த சில சிட்டிங்க்ஸில் அவளை உன் காதலியா, உன் மனைவியா, உன் குழந்தைகளுக்கு அம்மாவா மட்டும் பார்க்கணும்"

விஸ்வா, "பட் ..."

அவன் மனத்தில் இருக்கும் வலி அவனை அந்தக் கோணத்தில் காணத் தடுப்பதை உணர்ந்த அமுதா, "விஸ்வா, ஒண்ணு சொல்லு. நீ கஷ்டப் படுணும், நீ அவமானப் படுணும். அப்படிங்கற குறிக்கோளோட, குரோதத்தோட வனிதா இந்த தப்பை செஞ்சாளா?"

விஸ்வா, "இல்லை. எனக்கு தெரியாம என்னை ஏமாத்தி செஞ்சா. எனக்குத் தெரியக் கூடாதுன்னு குறிக்கோளா இருந்தாளாம்"

அமுதா, "ஸ்டில், உன்னை அவ வெறுத்தாளா. உன் மேல கோவமா இருந்தாளா?"

விஸ்வா, "I don't think so. ஆனா என்னைப் பத்தி, எங்க கல்யாணத்தின் புனிதத்தைப் பத்தி அவ மனசில் உயர்வா நினைக்கலை"

அமுதா, "இப்போ அது அவளுக்குத் தெரியும். அது அவளுக்கு ரொம்ப மனக் கஷ்டத்தைக் கொடுத்துட்டு இருக்கு. கூட உன்னைக் கஷ்டப் படுத்தினதுக்காக அவ ஒவ்வொரு நாளும் அழுதுட்டு இருக்கா. அந்தக் காரணத்தினால்தான் தற்கொலை செஞ்சுக்கலாம்ன்னு நினைச்சா"

விஸ்வா, "அவமானத்தில் செஞ்சுக்க நினைச்சு இருப்பா"

அமுதா, "நீயே இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்ன்னு சொன்னதுக்குப் பிறகு என்ன அவமானம்?"

விஸ்வா, "ம்ம்ம் .. தெரியலை"

அமுதா, "சில விஷயங்கள் உனக்குத் தெரியாதுன்னு நினைக்கறேன். எனக்கும் இன்னும் முழுசா தெரியாது. But I am going to find out. இப்போதைக்கு அவ செஞ்ச தப்பை ஒரு பக்கம் வெச்சுடுவோம். மத்த விஷயங்களில் கவனம் செலுத்தலாமா? ப்ளீஸ் இது உன் மனசுக்கும் ஆறுதலா இருக்கும்"

விஸ்வா, "ஆனா, வீட்டுக்குப் போன பிறகு அப்படி எல்லாம் இருந்த என் மனைவியா இப்படின்னு மறுபடி மனசு வேதனைப் படும்"

அமுதா, "True, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா நேத்து நைட்டு உன் மனசில் இருந்த வேதனையை விட இன்னைக்கு கொஞ்சம் குறைஞ்சு இருக்கும். அதுக்கு நான் கியாரண்டி"

விஸ்வா, "ஓ.கே"

அமுதா, "சோ, சொல்லு ... "




விஸ்வா, "2002, ஃபெப்ரவரி பத்தாம் தேதி எங்க கல்யாணம் நடந்தது. அதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நான் ஆர்மில இருந்து ரிஸைன் பண்ணிட்டு" என்றபின் ஒரு பப்ளிக் செக்டார் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அதில் சேர்ந்து இருந்ததாகச் சொன்னான்.

அமுதா, "சோ, From a governtment employee you became a public sector employee. ஏன், தனியார் நிறுவனங்களில் முயற்சி செய்யலையா?"

விஸ்வா, "செஞ்சேன் ... கிடைக்கலை. More over, இந்தக் கம்பெனியில் என் ராணுவ அனுபவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் அதிகமான க்ரேடில் செலக்ட் பண்ணினாங்க. ஸோ, அதில் சேர்ந்தேன். ஆனா சேர்ந்து ஆறு மாசத்தில் ஏண்டா அந்த வேலையில் சேர்ந்தோம்ன்னு ஆயிடுச்சு. ரொம்ப வருத்தப் பட்டேன்"

அமுதா, "என்னது இது விஸ்வா? நான் கதை கேட்டுட்டு இருக்கேன். நீ வெறும் அவுட்லைன் கொடுப்பேன்னு சொன்னா எப்படி" என்று சிலாகித்து, "இப்போத்தான் கல்யாணம் ஆனதைப் பத்தி பேசினோம். அதுக்குள்ளே ஆறு மாசம் ஜம்ப் பண்ண வேண்டாம். ஹனிமூனுக்கு எங்கே போனீங்க?"

விஸ்வா, "மால்டீவ்ஸ். அந்த ட்ரிப் எங்க ரெண்டு பேர் பேரண்ட்ஸும் சேர்ந்து எங்களுக்குக் கொடுத்த கிஃப்ட்"

அமுதா, "வாவ், What a lovely place isn't it? நல்லா சுத்திப் பாத்தீங்களா? நிறைய பொழுது போக்கு விளையாட்டுக்கள் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்து இருப்பாங்களே?"

விஸ்வா, "எஸ், ரொம்ப அழகான ரிஸார்ட். ஆனா, நாங்க சாயங்காலம் கடற்கரையில் நடப்பதைத் தவிற எந்த பொழுது போக்கு விளையாட்டிலும் கலந்துக்கலை"

அமுதா, "ஏன்?"

விஸ்வா, "Most of the time we were in bed"

அவனையும் அறியாமல் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் விலகி உதட்டோரம் சிறு புன்னகை மலர்ந்தது

வாய்விட்டுச் சிரித்த அமுதா, "அதுக்கு இங்கேயே எதாவுது ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி இருக்கலாம்னு உங்க பேரண்ட்ஸ் சொல்லலையா?"

விஸ்வா, "கிண்டல் பண்ணினாங்க. ஆன நாங்க We enjoyed the surroundings அப்படின்னு சொன்னதுக்குப் பிறகு எதுவும் சொல்லலை"

அமுதா, "எப்படி எஞ்சாய் பண்ணினீங்க?"

விஸ்வா, "அதான் சொன்னேனே. முக்கால் வாசி நெரம் படுக்கையில் தான் இருந்தோம்"

அமுதா, "செக்ஸில் உங்களுக்கு முன் அனுபவம் இருந்ததா?"

பதில் சொல்ல விஸ்வா சிறிது நெளிந்தான், பிறகு "நோ! எங்க ரெண்டு பேருக்கும் அது தான் ஃபர்ஸ்ட் டைம்"

அமுதா, "உங்க ரெண்டு பேரில் யார் ஆக்டிவ் பார்ட்னர்?"

விஸ்வா, "அப்போ எல்லாம் நான் தான் ஆக்டிவ் பார்ட்னர். ரெண்டு வருஷம் முடியும் போதுதான் ... "

அமுதா அவன் எதைக் குறிப்பிட வருகிறான் என்பதை உணர்ந்து இடைமறித்து, "விஸ்வா, Let us not jump the gun. அந்த விஷயத்தை எடுக்க வேண்டாம். ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே"

அமுதா, "சோ, நீதான் ஆக்டிவ் பார்ட்னர். ஆனா, வனிதாவுக்கு செக்ஸில் எல்லா விவரமும் தெரிஞ்சு இருந்ததா. இல்லை நீ சொல்லிக் கொடுத்தியா?"

விஸ்வா, "அப்போ அவளுக்கு அவ்வளவா தெரிஞ்சு இருக்கலை"

உடலுறவு பற்றி தன்னிடம் பேச அவன் சங்கோஜப் படுவதை அமுதா உணர்ந்தார் ..

மேலும் அவனிடம் அந்தப் பேச்சை தவிர்த்து, "அந்த சமயம் வனிதாவுக்கும் ப்ரொமோஷன் கிடைச்சு இருந்தது இல்லை?"

கேட்டபின் அந்தக் கேள்வியை, அவள் பணியைப் பற்றி, கேட்டு இருக்கக் கூடாதோ என்று நினைத்தார்.

ஆனால் விஸ்வா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், "ம்ம்ம் ... அவ மிஸ்டர் சந்திரசேகருக்கு Executive Assistantஆ ப்ரொமோட் ஆனா"

அமுதா, "Executive assistant அப்படின்னா என்ன விஸ்வா? செகரடரி மாதிரியா?"

விஸ்வா, "No no! அதுவும் ஒரு மேனேஜரியல் பொஸிஷன் தான். நிறைய நிர்வாக பொறுப்புக்களை எம்.டியின் சார்பா செய்யறவங்கதான் எக்ஸிகியூடிவ் அஸிஸ்டண்ட்ஸ். And she was good at it"

அமுதா, "ஓ! நீங்க எங்கே தங்கி இருந்தீங்க? அப்பவே தனிக்குடித்தனம் வெச்சுக் கொடுத்துட்டாங்களா?"

விஸ்வா, "இல்லை. அப்போ நாங்க என் பேரண்ட்ஸ் கூட ஜாயிண்ட் ஃபேமிலியா இருந்தோம்"

அமுதா, "உங்க ரெண்டு பேரின் பேரண்ட்ஸும் பக்கத்து பக்கத்து வீட்டில. ரொம்ப ஜாலியா இருந்து இருக்குமே? வனிதாவுக்கு ஒரு வேலையும் இருந்து இருக்காதே?"

விஸ்வா, "அப்படி இல்லை. நாங்க ஹனிமூன் போயிட்டு வந்த அடுத்த நாளில் இருந்து எங்க ரெண்டு பேரின் தேவைகள் முழுக்க வனிதா பொறுப்பு ஏத்துட்டா. சமையலிலும் ப்ரேக்ஃபாஸ்ட் அல்லது டின்னர் அவ செய்வா. அம்மா அத்தை ரெண்டு பேரும் உதவிக்கு வர வேண்டாம்ன்னு தடுத்துடுவா"

அமுதா, "ஓ, நல்லா சமைப்பாளா?"

விஸ்வா, "முதலில் கொஞ்சம் சுமாராத்தான் சமைப்பா. பட், சீக்கிரம் கத்துகிட்டா"

அமுதா, "எப்போ தனிக் குடித்தனம் போனீங்க?"

விஸ்வா, "கல்யாணம் ஆகி நாலு மாசத்துக்குப் பிறகு"

அமுதா, "எதுக்கு?"

விஸ்வா முகத்தில் சோர்வு படற, "நான் தான் அதற்குக் காரணம்"

அமுதா, "ஏன் விஸ்வா? கொஞ்சம் விளக்கித்தான் சொல்லேன்"

விஸ்வா, "It all started with Ram coming back ... அவன் சரியா எங்க கல்யாணம் ஆன சமயத்தில் திரும்பி வந்தான். அவன் திரும்பி வர்றதுக்கு முன்னாடியே அவன் யூ.கேல இருந்தப்ப செய்த ரிஸர்ச் அவன் பப்ளிஷ் பண்ணின பேப்பர்ஸ் இதைப் பத்தி அடிக்கடி பேச்சு வரும். அவன் திரும்பி வந்தப்ப அவனுக்கு ரொம்ப வரவேற்பு. பெரிய பெரிய ஆஸ்பத்திரிகளில் அவனை கன்ஸல்டண்ட் ஆக கூப்பிட்டாங்க."

அமுதா, "ஆனா, பணத்தைப் பத்தி கவலைப் படாம மறுபடி NIMHANSஇல் சேர்ந்ததைப் பத்தி பேப்பரில் கூட நியூஸ் வந்தது. இல்லையா?"

விஸ்வா, "ஆமா. திரும்பி வந்து வேலையில் சேர்ந்த பிறகும் அல் மோஸ்ட் வாரத்தில் ரெண்டு மூணு தடவையாவுது எதாவுது அவனை பாராட்டி பேச்சு வந்துட்டே இருக்கும்" என்ற பிறகு அவன் தலை குனிந்து சிறிது நேரம் மௌனம் காத்தான்.

அமுதா, "So you were feeling jealous. Am I right?"

அவமானத்தில் தலை குனிந்த விஸ்வா, "Yes!"

அமுதா, "சின்ன வயசில் இருந்து உங்க ரெண்டு பேருக்கும் இடையே எப்படிப் பட்ட உறவு இருந்தது?"

விஸ்வா, "சின்ன வயசில் இருந்து .. We had sibling rivalry ... நாங்க ரெண்டு பேருமே நல்லா படிப்போம். ஆனா நான் ஒரு ஆல்-ரவுண்டர். அதனால அவனுக்கு என் மேல் ரொம்ப பொறாமை இருந்தது. அவன் வெளியில் சொல்லலை. ஆனா, I sort of could feel it. அவனுக்கு AIMSஇல் இடம் கிடைச்சு எனக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைக்காம போனப்போ நான் அவனைப் பாத்து பொறாமைப் பட ஆரம்பிச்சேன். ஆனா ஒன்ஸ் நான் என்.டி.ஏவில் சேர்ந்ததும் ... I became alright. ஆனா, எங்க கல்யாணம் ஆன புதுசில் என் வேலையும் எனக்கு பிடிக்காம இருந்தது. சேர்ந்த உடனே ரிஸைன் பண்ணிட்டு வேற வேலை தேடவும் முடியாத நிலை"

அமுதா, "ஏன்?"

விஸ்வா, "அடிக்கடி வேலையை மாத்தறது சரியில்லைன்னு அப்பா சொன்னார். எனக்கும் அவர் சொல்லறது சரின்னு பட்டது. அந்த பொஸிஷனில் பொதுவா ரெண்டு வருஷம் அல்லது அதிக பட்சம் மூணு வருஷத்தில் ப்ரொமோஷன் கிடைக்கும். அதனால் ப்ரொமோஷன் கிடைக்கும் வரை பல்லைக் கடிச்சுட்டு இருக்கலாம்ன்னு நானும் வனிதாவும் முடிவு எடுத்தோம்"

அமுதா, "ஓ, நீ வனிதாகூட உன் வேலையைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவியா?"

விஸ்வா, "Of course! She knew me better than myself (என்னைப் பத்தி என்னைவிட அவளுக்கு நல்லா தெரியும்)" சொல்லி முடித்த பின்னரே தான் என்ன சொன்னோம் என்று அவன் உணர்ந்ததை அவன் முகம் காட்டியது. தலை குனிந்தான்

அமுதா, "ம்ம்ம் ... அப்போ என்ன நடந்தது?"

விஸ்வா, "ராமைப் பத்தி அடிக்கடி வீட்டில் பேசிக்கும் போது எனக்கு கொஞ்சம் எரிச்சலா இருக்கும். வெளியே காட்டிக்க மாட்டேன். ஆனா வனிதா ... She spotted my discomfort very early .. அடிக்கடி வெளிப்படையா இல்லாம எனக்கு ஹர்ட்டிங்கா இல்லாத மாதிரி ரொம்ப நாசூக்கா எனக்கு அட்வைஸ் பண்ணுவா. ஒன்ஸ், வீட்டில் எல்லாம் ஒண்ணா உக்காந்து சாப்பிடும் போது போது ராமைப் பத்தி பேச்சு வந்தது. உடனே அவ வேலையைப் பத்தி சாப்பிடும் போது வேண்டாம் வேற எதாவுது பேசலாமேன்னு எல்லாருக்கும் மூஞ்சியில் அடிக்கற மாதிரி சொன்னா. மத்தவங்க அவளுக்கு ராம் மேல பொறாமைன்னு நினைச்சாங்க. ஆனா நான் தான் ராம் மேல பொறாமையா இருந்தேன். ஒரு நாள் க்ளப்பில் ஒரு பார்ட்டி இருந்தது. அப்பாவின் ஃப்ரெண்ட்ஸ், அதில் நிறையப் பேர் டாக்டர்ஸ், வந்து இருந்தாங்க. அந்த பார்ட்டி முடியற வரைக்கும் அடிக்கடி ராமைப் பத்தி யாராவுது பேசிட்டே இருந்தாங்க. நான் அன்னைக்கு கொஞ்சம் அதிகம் குடிச்சுட்டு ஏதோதோ பேசிட்டேன். வனிதா லேடீஸ்கூட பேசிட்டு இருந்தால அது அவளுக்கு தெரியலை. அவ என்னை கவனிக்கும் போது அப்பா என்னை அங்கே இருந்து வெளியே இழுத்துட்டு வந்துட்டு இருந்தார். அப்பாவை தடுத்து அப்பாகூட வனிதா பெரிசா சண்டை போட்டா ... God! when she wants to, she can make people just shut up and listen to her ... அப்பா வாயடைச்சுப் போயிட்டார். அடுத்த நாளே நாங்க தனிக் குடித்தனம் போக நாங்க முடிவெடுத்தோம். வீட்டில் எல்லோருக்கும் வருத்தம். பட், we did it"

அமுதா, "சோ, உனக்காக அவ பழியை வாங்கிட்டாளா?"

விஸ்வா, "எஸ்"


அமுதா, "பட், நான் அவகூட பேசினப்போ நீயும் ராமும் ரொம்ப நெருக்கம்ன்னு சொன்னாளே?"

விஸ்வா, "அதுக்கும் வனிதாதான் காரணம். தனிக் குடித்தனம் வந்த பிறகு .. தன்னால் தான் நாங்க பிரிஞ்சு வந்துட்டோம்ன்னு ராம் ரொம்பவே கஷ்டப் பட்டான். நானும் ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா உக்கார வெச்சு அவதான் எங்க ரெண்டு பேரின் தப்பையும் சுட்டிக் காட்டி மறுபடி எங்க ரெண்டு பேருக்கு நடுவில் க்ளோஸ்னஸ் வர வெச்சா. From that point we never looked back. நான், வனிதா, ராம் மூணு பேரும் ஒரு டீம். அவங்க ரெண்டு பேருமா சேர்ந்து ... they made me feel better"

அமுதா, "வாவ்! என்ன செஞ்சாங்க?"

விஸ்வா, "நிறைய ... அதற்குப் பிறகு எந்த அக்கேஷனா இருந்தாலும் ராமோ வனிதாவோ என் பக்கத்திலேயே இருப்பாங்க. எல்லார்கிட்டேயும் ராம் என்னைப் பத்தி ரொம்ப பெருமையா வார் ஹீரோன்னு இன்ட்ரொட்யூஸ் பண்ணுவான். He used to always make me feel good. .. எனக்கு தன்னம்பிக்கை வரணும்ன்னு இன்னொரு காரியமும் செஞ்சாங்க"

அமுதா, "என்ன?"

விஸ்வா, "வார்ல அடிபட்டு மூணு வருஷம் ஆகி இருந்தாலும் என்னால் முன்ன மாதிரி ஸ்ட்ரெயின் எடுத்துக்க முடியலை. எனக்கு முன்ன மாதிரி ஸ்போர்ட்ஸில் கலந்துக்க முடியலைன்னு ரொம்ப வருத்தமா இருக்கும். அதே சமயம் டாக்டர் சொன்னபடி ஃபிஸியோ தெரபி எக்ஸர்ஸைஸ் பண்ணவும் சோம்பேறித்தனம். என்னை இம்ப்ரூவ் பண்ணறதை அவங்க ரெண்டு பேரும் ஒரு ப்ராஜெக்டா எடுத்துட்டாங்க. 2003 மே மாசம் நடந்த மாரத்தானில் ஹாஃப் மாரத்தான் 21 கிலோ மீட்டர் ரெண்டு மணி நேரத்தில் ஓடி கம்ப்ளீட் பண்ணினேன். That really boosted my morale. I really owe that to Vanitha and Ram"

அமுதா, "என்ன செஞ்சாங்க?"

விஸ்வா, "2002 அக்டோபர் மாசத்தில் இருந்து ... அப்போதான் நாங்க மறுபடி ஒண்ணு சேர்ந்தோம் .. அப்ப இருந்து அல்மோஸ்ட் தினமும் என் ஃபிஸியோ தெரபி எக்ஸர்ஸைஸுக்கு ராம் பொறுப்பு எடுத்துட்டான். கூட தினமும் சைக்கிளிங்க் அல்லது ஸ்விம்மிங்க். அதுக்கு வனிதா பொறுப்பு எடுத்துட்டா"

அமுதா, "இதுக்கெல்லாம் உனக்கும் அவங்களுக்கும் நேரம் இருந்ததா?"

விஸ்வா, "ராம் காலைல ஆறு மணிக்கு எங்க வீட்டுக் கதவைத் தட்டுவான். அரை மணி அல்லது முக்கால் மணி நேரம் ஃபிஸியோ தெரபி எக்ஸர்ஸைஸ். அதற்குப் பிறகு சில நாள் வனிதாவுடன் சைக்கிளிங்க் போவேன். இல்லைன்னா, சாயங்காலம் ... லேட் ஈவினிங்க் .. வனிதா சீக்கிரமா டின்னர் ரெடி பண்ணி வெச்சதுக்குப் பிறகு ரெண்டு பேரும் ஸ்விம்மிங்க் போவோம்"

அமுதா, "No wonder she still has her hour-glass figure (இன்னமும் அவளது உடல் மணல் கடிகார வடிவில் இருப்பதில் வியப்பேதும் இல்லை
)"

விஸ்வா, "அது அவளுக்கு ஒரு சைட் பெனிஃபிட் அப்படின்னு ஜோக் அடிப்பா"

அமுதா, "அப்பறம் நீ மாரதான் ஓட ஹெல்ப் பண்ணினாங்களா?"

விஸ்வா, "நிறைய ... 2003 தொடக்கத்தில் என்னால் ஒன்றரை மணி நேரம் வரை தொடர்ந்து ஸ்ட்ரெயின் பண்ண முடியற அளவுக்கு என முட்டியில் பலம் வந்து இருந்தது. சில சமயம் தொடர்ந்து ரெண்டு மணி நேரம் ஸ்ட்ரெயின் பண்ணுவேன். ஆனா அடுத்த சில நிமிடங்களில் கால் முட்டி பலூன் மாதிரி வீங்கிக்கும். ஐஸ் வெச்சு க்ரேப் பாண்டேஜ் போடணும். எனக்கு மாரத்தான் ஓட ஆசையா இருந்தது. நான் ஆர்மில இருந்த சமயம் மணிக்கு பதினாலு கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து இருபது கிலோ மீட்டர் ஓடுவேன். நிறைய சமயம் ஒன்றரை மணி நேரத்தில் முடிச்சு இருக்கேன். சோ, என்னால் வேகமா ஓட முடியும் ஆனா, ரெண்டு மணி நேரத்தில் ஹாஃப் மாரத்தான் ஓடி கம்ப்ளீட் பண்ண முடியுமான்னு கொஞ்சம் மனசில் பயமா இருந்தது. ராமும் வனிதாவும் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க. ஒரு டைம் டேபிள் போட்டு ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். மூணு மாசம் ப்ராக்டீஸ் பண்ணினேன்"

அமுதா, "அமேஸிங்க்! ரேஸ்ல உன்கூட ஓடினாங்களா?"

விஸ்வா, "வனிதா லாஸ்ட் லெக்ல மட்டும் எனக்கு கம்பெனி கொடுக்க கூட ஓடி வந்தா. ராம்னால சுத்தமா ஓட முடியாது. But that guy did an amazing thing. அந்த ரேஸ் தொடங்கினதில் இருந்து ஒவ்வொரு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தையும் நான் கடக்கும் போது ரோட் சைடில் நின்னுட்டு கை தட்டி 'கம் ஆன் விஸ்வா'ன்னு சத்தம் போட்டு சியர் பண்ணினான். கரெக்டா ஒவ்வொரு இடத்துக்கும் நான் அங்கே போறதுக்கு முன்னாடி எப்படிப் போனான்னு இன்னமும் எனக்குத் தெரியாது. ஐ திங்க் அன்னைக்கு எங்க அப்பா, அம்மா, மாமா அத்தை எல்லாரும் அவனுக்கு ட்ரைவர் வேலை செஞ்சாங்க"

அமுதா, "வாவ், கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு விஸ்வா. என்ன ஒரு க்ளோஸ்னஸ் இருந்தா அப்படி பண்ணி இருப்பார். உங்க ஃபேமிலி மெம்பர்ஸும்தான்" என்றவர் முகத்தில் கேள்விக் குறியுடன் தொடர்ந்து "வனிதா லாஸ்ட் லெக்கில் மட்டும் கூட வந்தான்னு சொன்னியே? எப்படி? ரோட் சைடிலா?"

விஸ்வா, "ம்ம்ம்ஹூம் .. அவளும் ரேஸ்ல பேர் கொடுத்து இருந்தா. ரேஸ் தொடங்கினதுக்குப் பிறகு நின்னுட்டு எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தா. திரும்ப வரும் போது எனக்கு ரொம்ப ஸ்ட்ரெயினா இருக்கும்ன்னு லாஸ்ட் மூணு கிலோ மீட்டர் மட்டும் நான் ஓடும் அதே வேகத்திலே அவளும் ஓடி வந்தா. அந்த வேகத்தில் மூணு கிலோ மீட்டர் ஓடறதை ஒரு மாசம் ப்ராக்டீஸ் பண்ணினாளாம். They really made me feel great. அதற்குப் பிறகு ஒவ்வொரு வருஷமும் நான் ஓடிட்டு இருக்கேன். ஒவ்வொரு வருஷமும் ரெண்டு பேரும் அதே அளவுக்கு இல்லைன்னாலும் ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க"

அமுதா, "ம்ம்ம் .. உன்னை அவ எவ்வளவு லவ் பண்ணி இருக்கணும்?" என்று கேட்ட பின் .. அவன் அதற்கு பதிலளிக்க அவகாசம் கொடுக்காமல் தொடர்ந்து, "ஒரு சுவாரஸியமான விஷயம். நான் இதை உனக்கு சொல்லியே ஆகணும். நான் வனிதா கூட பேசும் போது உன்னை அவன் இவன்னு சொல்லிட்டு ராமை அவர் இவர்ன்னு சொன்னேன். My goodness! She really got upset you know? ரெண்டு பேரும் ட்வின்ஸ் ராமுக்கு மட்டும் தனி மரியாதை தேவையில்லைன்னு என்னை ஒரு பார்வை பாத்தாளே? அப்பா. நான் ஆடிப் போயிட்டேன். அப்பறம் அம்மா தாயே ராமை இதுவரைக்கும் எனக்கு ஒரு டாக்டராத்தான் தெரியும் இனிமேல் அந்த மாதிரி தப்பை செய்ய மாட்டேன்னு மன்னிப்பு கேட்க வேண்டியதாச்சு!"



தன் முகத்தில் தோன்றிய பெருமிதத்தை விஸ்வா மறைக்க முடியவில்லை ..

அமுதா, "அப்பறம் உன் வேலை எப்படி போயிட்டு இருந்தது?"

விஸ்வா, "அந்த ஒன்றரை வருஷமும் நரகம். எப்போடா வீட்டுக்குப் போவோம்ன்னு இருக்கும். வேலையை பத்தி ஞாபகம் வரக் கூடாதுன்னு வனிதா ரொம்ப கவனமா இருப்பா"

அமுதா, "ஏன் விஸ்வா? அவ்வளவு பிடிக்காத வேலையா?"

விஸ்வா, "வேலை எனக்கு பிடிச்சதுதான். அனா, ஆஃபீஸ் பாலிடிக்ஸ், சீனியர்ஸுக்கு ஜால்ரா போடறது, நான் செஞ்ச வேலையை என் மேனேஜர் தான் செஞ்சதா அவரோட சீனியர்ஸுக்கு சொல்லிக்கறது இந்த மாதிரி நிறைய. எனக்கு துளிகூட பிடிக்காத, நான் வெறுக்கற விஷயங்கள்"

அமுதா, "As an ex-army man I know how you would have felt. இருந்தாலும் ரெண்டு வருஷத்தில் ப்ரொமொஷன் வந்ததா?"

விஸ்வா, "ரெண்டு வருஷம் முடியும் போது ... அந்த மாரத்தான் ரேஸ் முடிஞ்ச சமயம் ... நான் ப்ரொமோஷனை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தேன் ... என் மேனேஜர் எனக்குப் ப்ரொமோஷன் கிடைக்காத மாதிரி செஞ்சுட்டான்"



No comments:

Post a Comment