Monday, September 7, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 12

அவளின் பெற்றோர் வாழ்ந்ததை பார்த்தில்லை, உடன்பிறந்த அக்கா அண்ணன் இவர்களில் யாருக்கும் திருமணமாகி அவர்களின் வாழ்க்கையைப் பார்த்ததில்லை, வேறு உறவுகளும் மான்சிக்கு இல்லை, கல்லூரியிலும் நான் தாழ்த்தப்பட்டவள் என்று இவள் ஒதுங்கித்தான் இருந்திருப்பாள், இவையெல்லாம் தான் இவள் இன்னும் முதிர்ச்சியுறாததற்கு காரணம் என்று சத்யனுக்கு புரிந்தது,,

இவளை ஒரு பெண்ணாக உருவாக்கவேண்டும் அதற்கு என்ன செய்வது என்று சத்யன் யோசிக்கும் போதே, பாத்ரூம் கதவை தட்டி “ அய்ய இது என்னா நைட்டி?, ஜிப்பே இல்லையே?, வெளியே வந்து நீங்களே பாருங்களேன்” என்று மான்சி அழுவதுபோல் சொல்ல,, சத்யன் உடனே கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தான்



கருநீல நிற நைட்டி மான்சியின் உடலை கவ்விப்பிடித்திருக்க, உள்ளே அவளின் பாலூறிய தனங்கள் திமிறிக்கொண்டு இருந்தது, நைட்டியில் ஜிப்பை தேடி அலுப்புடன் “ இங்க பாருங்க இதுல ஜிப்பே இல்லை,, தம்பிப்பாப்பாக்கு எப்புடி பால் குடுக்குறது?” என்று நெஞ்சை நிமிர்த்தி அவனிடம் காட்டியபடி மான்சி சிறு குழந்தையாக மிளற்றினாள்

தன்னை மோதுவதுபோல் வந்து நின்றவளை என்ன செய்வது என்று புரியாமல், தவிப்புடன் அவளது நிமிர்ந்து பூரித்த கலசங்களை பார்த்தான் சத்யன்,, ஒரு குழந்தையை போல் மனம் படைத்தவளை இப்படி தவறாகப் பார்க்காதே என்று மனது எச்சரிக்கை செய்ய, சத்யன் கண்களை அகற்ற முடியாமல் ரொம்பவே தடுமாறினான், “ ம்ஹூம் இவள் என்னவள் தானே பார்த்தாள் என்ன தப்பு’ என்று தன்னை குற்றம்சாட்டிய தன் மனதை சமாதானம் செய்தான்

அவள் கேள்விக்கு பதில்சொல்ல வேண்டுமே என்ற நினைப்பு வர “ இல்ல மான்சி இதுல ஜிப் சென்டர்ல இல்லை,, குழந்தைக்கு பால் குடுக்குறவங்களுக்குன்னு கடையில கேட்டேன், அதனால இந்த மாடல் நைட்டி குடுத்தான், அந்த பிரில்க்கு கீழே ரெண்டுபக்கமும் ஜிப் இருக்குப்பாரு?” என்று சத்யன் மெல்லிய குரலில் சொல்ல

அந்த நைட்டியின் கழுத்துக்கு அடியில் மார்பு பகுதியில் வைத்திருந்த பிரில்லை தூக்கிவிட்டு மான்சி பார்க்க அதில் மார்புகளுக்கு நேராக இரண்டுபக்கமும் ஜிப் இருந்தது உடனே உற்ச்சாகமான மான்சி “ அட ஆமா, இது நல்ல ஜடியா,, பாப்பாவுக்கு ஈசியா பால் குடுக்கலாம்ல” என்றவள் சர்ரென வலதுபக்க ஜிப்பை இழுத்துப்பார்க்க,, உடனே வெளியே தலையை நீட்டியது அவளின் வெண்நிற பாற்க்கலசம்

அதை பார்த்ததும் சத்யனுக்கு மூளையே செயலிழந்தது போல் ஆனது ‘ அய்யோ என்னை கொல்றாளே’ என்று மனதுக்குள் அலறியபடி குழந்தையின் அருகே வேகமாக போனான் சத்யன்

மான்சி ஏதோ சொல்லிக்கொண்டு அவனை நெருங்க,, அப்போது கதவு படபடவென்று தட்டப்பட்டது,, இவருவரும் ஒருசேர திகைத்துப்போயினர்,, அவர்களின் இந்த மூன்றுநாள் வாழ்க்கையில் அவர்களைத்தேடி யாருமே வந்ததில்லை,

யாராயிருக்கும் என்று சத்யன் யோசிக்கும் போதே “ சத்யா கதவை திற” என்று பத்மாவின் குரல் கேட்கே,

‘ ஓ அண்ணியா?” என்றபடி எழுந்து கதவை நெருங்கியவன் மறுபடியும் நின்று மான்சியை பார்த்தான், அவள் திறந்து கிடந்த வலதுபக்க ஜிப்போடு அப்படியே நின்றிருந்தாள்

சத்யன் ஒரே எட்டில் அவளை அடைந்து, வெளியே பிதுங்கிய அவள் வலது மார்பை உள்ளே தள்ளி ஜிப்பை இழுத்து மூடிவிட்டு, கட்டிலில் கிடந்த டவலை எடுத்து அவள் கழுத்தடியில் போட்டு மூடிவிட்டு, அவள் தோள்களைப் பற்றி கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, ஓடிச்சென்று கதவை திறந்தான்

முதலில் உள்ளே நுழைந்த பத்மா “ என்ன சத்யா கதவை திறக்க இவ்வளவு நேரம்?” என்று கேட்டபடி வர

“ பாத்ரூம்ல இருந்தேன் அண்ணி” என்று கூறிவிட்டு நிமிர்ந்த சத்யன் விழிகள் வியப்பில் விரிய வாயைப் பிளந்தவாறு திகைத்துப் போனான்


பத்மாவுக்கு பின்னால், அவள் கணவன் கௌதம், அப்புறம் இவன் அம்மா பூங்கோதை, அப்பா ராஜதுரை, அப்புறம் பெரியப்பா பெரியம்மா, பிறகு இவன் தாய்மாமன்கள் இருவரும் அவர்களின் மனைவிமார்களும், அப்புறம் சத்யனின்மூன்று அத்தைமார்களும் அவர்களின் கணவர்கள், அப்புறம் சத்யனி தாய்வழித் தாத்தா பாட்டி, அங்கேயிருந்த இன்னும் சிலரை சத்யனுக்கே அடையாளம் தெரியவில்லை,

உள்ளே வந்த பூங்கோதை மகனை கட்டிக்கொண்டு “ சத்யா எனக்கு பேரன் பொறந்ததை சொல்லவே இல்லையேடா,, இனிமேல் நமக்கு எல்லாம் நல்லகாலம்தான்டா மகனே” என்று தனது சந்தோஷத்தை கண்ணீராக வடித்துவிட்டு பேரனைத் தேடி நகர்ந்தாள்

அடுத்ததாக அவன் அப்பா “ சத்யா என்னடா இது என்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே?,, நாம என்ன அப்பா புள்ள மாதிரியா பழகுறோம்,, நல்ல நண்பர்களாத்தானே இருக்கோம், என்கிட்டயே மறச்சுட்டியேடா” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டு பேரனைப் பார்க்க நகர்ந்தார்

அடுத்து பெரியப்பா, அவரால் பேசமுடியாமல் உணர்ச்சிவசப்பட்டு சத்யனை தோளோடு அணைத்துவிட்டு நகர்ந்தார்

பெரியம்மா,, கௌதமின் அம்மா, “ நான் கும்புட்ட தெய்வம் நம்மலை கைவிடலப்ப” என்று இரண்டு சொட்டு கண்ணீரை சத்யனின் நெஞ்சில் சிந்திவிட்டு நகர்ந்தாள்

அடுத்ததாக தாய்மாமன்கள் “ டேய் மாப்ளே ரகசியமா பெத்துட்டயேடா? ம்ம் நடத்துடா மருமகனே” என்றனர்

அடுத்ததாக சத்யனின் அத்தைகள் மூவருமே ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு சத்யனின் சட்டையை ஈரமாக்கினார்கள்

தாத்தாவும் பாட்டியும் வந்து தங்களின் கொள்ளுப்பேரனை பார்க்கும் ஆர்வத்தில் சத்யனை கண்டுகொள்ளாமல் உள்ளே போனார்கள்

மொத்தத்தில் அந்த சிறியவீடு நிரம்பி, பத்துப்பதினைந்து பேர் வெளியே நின்றார்கள்,

சத்யன் திக்பிரமை பிடித்து அப்படியே நின்றான்,

வெளியே இருந்து யாரோ “ யாருப்பா உள்ள, குழந்தையைப் பாத்தவங்க எல்லாம் வெளியே வாங்களேன்,, நாங்கல்லாம் பாக்கவேனாமா?” என்று கோபமாக குரல் கொடுக்க, வீட்டுக்குள் இருந்து இரண்டு பேர் வெளியே போய் ஐந்து உள்ளே வந்தனர்

அப்போது அவன் தோளைத்தொட்ட பத்மா “ சத்யா குழந்தையும் உன் பொண்டாட்டியும் ரொம்ப அழகா இருக்காங்கப்பா,, என் கண்ணே பட்டுரும் போலருக்கு, குழந்தை அச்சுஅசல் நீதான் சத்யா” என்று சொல்ல

“ அண்ணி என்னண்ணி இதெல்லாம்” என்று சத்யன் கூட்டத்தைப் பார்த்து கேட்க

“ அதையேன் சத்யன் இன்னும் பாதிபேரை கூட்டியாராம கிளம்பும் போது பயங்கர சண்டை, சரி அடுத்த ஷிப்ட்ல நீங்கல்லாம் வாங்கன்னு சொல்லி சமாதானம் பண்ணிட்டு வந்தேன்,, இன்னும் உன் அத்தைங்க ஊருல இருக்குறவங்க,, அப்புறம் நம்ம கிராமத்துல இருக்கிற பங்காளிகள் எல்லாம் வேற லாரி பிடிச்சு கிளம்பி வர்றாங்கன்னு சொன்னாங்க, நான்தான் ஊட்டியில நிலைமை சரியில்லை, அதனால சத்யன் குழந்தையும் பொண்டாட்டியும் கோயமுத்தூருக்கு வந்ததும் வந்து பாருங்கன்னு போன் போட்டு சொல்லி தடுத்து நிறுத்திட்டு வந்தேன், இல்லேன்னா நம்ம சாதிசனத்தால இந்த ஊட்டியே ரொம்பிருக்கும்” என்று பத்மா கூட்டத்தை எப்படி சமாளித்தாள் என்பதை பெருமையாக சொல்ல

சத்யனுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது,, அவ்வளவு இக்கட்டிலும் மான்சி சத்யனின் மனைவி என்று எல்லோரும் எண்ணியது சத்யனின் மனதுக்கு இதமாக இருந்தது,


அப்போதுதான் மான்சியின் நினைவு வர ‘அய்யோ இந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிடுவாளே’ என்ற பதட்டத்துடன் கூட்டத்தை விலக்கி கட்டிலை நெருங்கினான் சத்யன்

அவன் நினைத்தது போல் மான்சி மிரட்சியுடன் தான் அனைவரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள், அவள் முகத்தைப் பார்த்த அடுத்த நிமிடம் சத்யனின் மனம் ‘அய்யோ’ என்று பரிதவிக்க அவளருகில் போய் அமர்ந்து அவள் தோளில் கைபோட்டு வளைத்து தன் தோளில் சாய்த்து அவளின் உச்சியில் தனது கன்னத்தை வைத்துக்கொண்டான், மான்சியும் சற்று இறங்கி அவன் நெஞ்சில் தன் முகத்தை புதைத்துக்கொண்டு, லேசாக நடுங்கிய கைகளோடு சத்யனின் சட்டை காலரை பற்றிக்கொண்டாள்

சத்யன் சுற்றிலும் இருந்தவர்களை மறந்தான், அவன் கண்கள் கலங்கியது,, அவளின் பதட்டத்தை தணிவிக்கும் முயற்சியாக அவள் தோளில் இருந்த கையை சற்று அழுத்தி தனது சைகையால் ஆறுதல் சொன்னான்
இவர்களின் நிலைமை சத்யனின் அம்மாவுக்கு புரிந்தது, மகனின் தோளில் கைவைத்து “ இவ்வளவு கூட்டத்தைப் பார்த்து பயந்துட்டாப் போலருக்கு சத்யா” என்று ஆறுதலாய் கூற

தன் தாயை நிமிர்ந்து பார்த்த சத்யன் “ ஆமாம்மா,, இவளுக்கு இவ்வளவு ஜனத்தை பார்த்து பழக்கமில்லை, இவளும் இவ அம்மாவும் மட்டும்தான், அவங்களும் இப்போ இல்லை, இவ தனியாத்தான் இருந்தா, அதனால்தான் கொஞ்சம் மிரண்டுட்டா,, போகப்போக சரியாயிடும்,, ஸாரிம்மா ” என்று மான்சியின் ஒதுக்கத்துக்கு தன் அம்மாவிடம் காரணம் சொன்னான்
ஏனோ இவர்களை பார்த்த அங்கிருந்த அனைவருமே கொஞ்சம் கண்கலங்கித்தான் போனார்கள்,

அப்போது கூட்டத்தை விலக்கி உள்ளே வந்த சத்யனின் தாய்மாமன் “ அட என்னடா மாப்ளே இவ்வளவு கொழந்த புள்ளையா இருக்குது இந்த பொண்ணு, நம்ம கூட்டத்தை பத்தி முன்னாடியே நீ சொல்லி வைக்கிறது இல்லையாடா மாப்ளே” என்றவர் சத்யன் நெஞ்சில் இருந்தபடியே

அவரை நிமிர்ந்துப்பார்த்த மான்சியை பார்த்து “ என்னாம்மா இப்படிய மிரண்டு போறது, நாங்கல்லாம் உனக்கு உறவுதான், நான் உனக்கு பெரியப்பா முறை, இதோ இருக்காளே என் சம்சாரம் அவ உனக்கு பெரியம்மா முறை, அதோ நிக்கிற ரெண்டு பேரும் என் தம்பிக, அவனுங்க உனக்கு சித்தப்பா முறை, அவனுங்க பக்கத்துல இருக்குறது அவனுங்க சம்சாரம், உனக்கு சித்தி முறை, அப்புறம் இவுங்க ரெண்டு பேரும் எனக்கு அப்பா அம்மா, உனக்கு தாத்தா பாட்டி ஆகும், இன்னும் இருக்குறவங்க எல்லாருமே உனக்கு உறவு முறைதான், யாரைப்பார்த்தும் நீ பயப்படாதே, எவனாவது எதுனா சொன்னா என்கிட்ட சொல்லு, நான் ஒரு கைப் பார்த்துர்றேன்” என்று அவர் தனது பெரிய மீசையை முறுக்கியபடி எல்லோரையும் மான்சிக்கு அறிமுகம் செய்து வைத்தார்

மான்சியின் முகம் இயல்புக்கு திரும்ப, அவரின் முறுக்கிய மீசையை ஆச்சரியமாக பார்த்தாள், சத்யனிடம் இருந்து விலகி நிமிர்ந்து அமர்ந்து “ அய் உங்க மீசை நல்லாருக்கு பெரியப்பா,, உங்களை நான் மீசை பெரியப்பான்னு கூப்பிடவா? ” என்று மான்சி முகம் முழுவதும் புன்னகையோடு கேட்க

அவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது போல “ அதுக்கென்ன கண்ணு உனக்கு எப்படித் தோனுதோ அப்படி கூப்புடும்மா” என்றார் அன்புடன்

அதன்பிறகு எல்லோரும் அடுத்தடுத்து வந்து குழந்தையையும் மான்சியையும் பார்த்துவிட்டு போக,, ஒரு சிலர் குழந்தைக்கு செயின், மோதிரம், கைக்காப்பு, கால் கொலுசு, இடுப்புக்கு கொடி, என்று ஏதோவொன்றை மான்சியின் கையில் கொடுத்தனர், வாங்கி வராதவர்கள் “ கிளம்புற அவசரத்தில் மறந்துட்டேன்” என்று அசடு வழிந்தார்கள்

மான்சி அந்த பொருட்களை கட்டிலில் போட்டுவிட்டு வந்தவர்களை பற்றிய உறவுமுறையை மனதுக்குள் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தாள் 




பூங்கோதை எல்லாப் பொருட்களையும் எடுத்து ஒரு பையில் போட்டு மான்சியின் கையில் கொடுத்து “ பத்திரமா வச்சுக்கம்மா” என்று சொல்ல

சத்யன் அந்த பையை தன் அம்மாவிடமே கொடுத்து “ நீங்க வீட்டுல கொண்டுபோய் வைங்கம்மா, அப்புறமா குழந்தைக்கு போட்டுக்கலாம்” என்றான்
ம் சரியென்று வைத்துக்கொண்ட பூங்கோதை, மான்சியின் மற்றொரு புறத்தில் அமர்ந்து “ உன் பேர் என்னம்மா?, என்ன படிச்சிருக்க?, இந்தமாதிரி நேரத்துல தனியா இருக்கலாமா? முன்னாடி சத்யனுக்கு தகவல் சொல்லி வரவழைச்சு பக்கத்துல வச்சுகறது தானே?” என்று கேட்க

மான்சி பூங்கோதைக்கு பதில் கூறாமல் சத்யனைப் பார்த்து “ நீங்க சொன்னது கோயமுத்தூர் போனதும் தானே யார் கேட்டாலும் உங்ககிட்ட கேட்டுக்க சொன்னீங்க, இங்கயேவா? இப்போ இவங்களுக்கு நான் பதில் சொல்லனுமா? இல்ல நீங்களே சொல்லிக்கிறீங்களா?” என்று சத்யனை எல்லோர் முன்பும் மாட்டிவிட

சத்யனுக்கு ‘அடிப்பாவி’ என்றிருந்தாலும், அவளின் பேச்சு சிரிப்பையே வரவழைக்க பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “ எங்கயுமே நீ பேசவேண்டாம், நானே பேசிக்கிறேன்” என்றான்

“ அடேயப்பா நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன்,, நீ அழுவுறமாதிரி அழுவுன்னு,, ரெண்டு பேரும் கில்லாடிங்க தான்பா,, சரிவிட கோயமுத்தூர் வந்ததும் என் தங்கச்சி கிட்ட எப்படி விசாரிக்கனுமோ அப்படி விசாரிச்சு தெரிஞ்சுக்கிறேன் ” என்று பத்மா கூற கூட்டத்தில் மெல்லிய சிரிப்பொலி பரவியது

இடநெருக்கடியால் வந்தவர்கள் எல்லோரும் ஏதேதோ பேசி,, என்னென்னவோ உத்தரவு போட்டுவிட்டு அவரவர் கார்களில் கிளம்ப, மிச்சமிருந்தது , சத்யனின் அம்மா அப்பா, பத்மா கௌதம் இவர்கள் மட்டும் தான்

எல்லோரும் தரையில் பாய் விரித்து உட்கார்ந்து இருக்க, பூங்கோதை தன் பேரனை மடியில் வைத்துக்கொண்டு குழந்தைக்கும் சத்யனுக்கும் உள்ள ஒற்றுமையை பக்கத்தில் தன் கணவருக்கு எடுத்துச்சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தாள்,, அவரும் தன் பேரனின் கால் விரல்களை தொட்டுத்தொட்டு பார்த்து பூரித்துக்கொண்டு இருந்தார்

பத்மா கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து,, மூன்று நாட்களாகவே பிரிக்காமல் கிடந்த மான்சியின் நீண்டு கூந்தலை விரலால் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள்
சத்யன் பால்பவுடரில் காபி கலந்து எல்லோருக்கும் எடுத்துவந்து கொடுத்தான்,, காபியெல்லாம் போட்டுத்தரும் மகனை ஆச்சர்யமாக பார்த்தபடி பூங்கோதை காபியை வாங்கிக்கொண்டாள்

“ என்னா சத்யா, இந்த புள்ள தலையை கொஞ்சம் வாரிவிட கூடாதா, இப்படி சிக்காகி கெடக்கே” என்று பத்மா சலித்துக்கொள்ள

“ அய்யோ நீங்க வேற அண்ணி அவ முடியை பிரிச்சு கை வச்சா ஒரு வாரம் ஆகும்போலருக்கு, எவ்வளவு நீளம், அப்புறம் அவளுக்கு கழுத்து வழிக்கும்னுதான் பயந்துபோய் விட்டுட்டேன்” என்று சமாதானம் செய்த சத்யன் மான்சிக்கு மட்டும் கலந்த பாலை அவளிடம் நீட்ட,

அவள் வாங்காமல் வழக்கம் போல வாயை நீட்டினாள்,, அவள் விளையாட்டை ரசித்த சத்யன் சிரிப்புடன் அவள் தலையை தன்பக்கமாக வைத்து பாலை புகட்டிவிட்டு வாயை துடைத்துவிட்டான்

இதையெல்லாம் கவனித்த ராஜதுரையும் பூங்கோதையும் அவர்களின் அன்பை நினைத்து கண்கலங்க..

“ அடடா இது வேறயா,, மாமா ஊருக்கு போனதும் மில்லை வித்துட்டு உங்க புள்ளைக்கு நாலைஞ்சு கூஜா வாங்கிக் குடுங்க, பிற்காலத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்” என்று பத்மா நக்கல் செய்ய

“ ஏன்டி நான் யாருக்கும் தெரியாம செய்றதை என் தம்பி பப்ளிக்கா செய்றான்,, நீ நடத்துடா தம்பி நானும் உன் கட்சிதான்” என்று கௌதம் சொல்ல.. தன்னை மாட்டிவிட்ட கணவனைப் பார்த்து முறைத்தாள் பத்மா

“ அட அது நம்ம பரம்பரை வியாதிடா மவனுங்களா,, உங்கம்மா கூட கல்யாண ஆன புதுசுல ஒன்னுமே தெரியாமத்தான் இருந்தா , அப்புறம் நான்தான் எல்லாத்தையும் கத்து குடுத்தேன்” என்று ராஜதுரை தன் பங்கை எடுத்துவிட,,

“ அடடடடா இதுதான்டா பரம்பரைன்னு ஒரு பட்டம் குடுக்கலாம் போலருக்கே” என்று பத்மா கூற அந்த இடமே கலகலப்பானது

சத்யன் தன் அம்மாவிடம் வந்து அமர்ந்து மான்சியின் உடல்நிலையில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வந்ததும் இரண்டுநாள் கழித்து கோவைக்கு அழைத்து வருவதாக சத்யன் சொல்ல,,

“ நீ சொல்றதும் சரிப்பா, ரோடு வேற ரொம்ப மோசமா இருக்கு, இரண்டு நாள் கழிச்சே போகலாம், இப்போ அப்பாவும் கௌதமும் கோவை போகட்டும்,, நானும் பத்மாவும் இங்கயே இருந்து உங்களை கூட்டிகிட்டுப் போறோம்” என்று பூங்கோதை கூறினாள்

சத்யனுக்கு திக்கென்றது “ இல்லம்மா நீங்க இப்போ போங்க நான் மான்சியையும் குழந்தையையும் கூட்டிட்டு வர்றேன்,, இங்கே உங்களுக்கு வசதி பத்தாதும்மா” என்றான் சத்யன்

“ ஏம்ப்பா நீயே இங்க இருக்கும் போது, நான் தங்கமுடியாதா? ஆமா நீங்க ஏன் இந்த எஸ்டேட்ல வந்து தங்குனீங்க, மொதல்ல என் மருமகளையும் பேரனையும் அந்த அருணாவோட எஸ்டேட்ல இருந்து என் வீட்டுக்கு கூட்டிப்போகனும், அப்பத்தான் எனக்கும் நிம்மதி” என்று பூங்கோதை கூறியதும் 


“ நானும் அந்த காரணத்தால்தான் அந்த பெரிய வீட்டுல போய் தங்கலை,, அம்மா மான்சி யாரு, இங்கே ஏன் வந்தா, நான் எப்படி வந்தேன் என்பதையெல்லாம் நம்ம வீட்டுல வந்து விபரமா சொல்றேன்,, இப்போ நீங்களும் அப்பா கூட கிளம்புங்க,, மான்சிகிட்ட நான் நெறைய பேச வேண்டிய இருக்கு, அதுக்கு எங்களுக்கு கொஞ்சம் தனிமை வேனும் அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்று சத்யன் கெஞ்ச

“ அவன்தான் இவ்வளவு சொல்றான்ல, அவன் பொண்டாட்டி புள்ளைய இத்தனை நாள் பார்த்துக்கிட்டவன் இந்த இரண்டு நாளும் பார்த்துக்க மாட்டானா? நீ என்கூடவே வா கோதை” என்று ராஜதுரை மகனுக்கு பரிந்து வர,

“ சித்தப்பா சொல்றதுதான் சரி,, வேனும்னா ஒன்னு செய்யலாம், நீங்க வந்த காரை டிரைவரோட இங்கேயே விட்டுட்டு என் கார்ல எல்லாரும் போகலாம்,, சத்யனும் மான்சியும் குழந்தையோட அந்த கார்ல வரட்டும்” என்று கௌதம் சொல்ல,, அது எல்லோருக்கும் சம்மதமானது

வேறு வழியின்றி பூங்கோதை கண்களில் கண்ணீருடன் மகனையும் மருமகளையும் பேரனையும் விட்டுவிட்டு அரைமனதுடன் கோவைக்கு கிளம்பினாள்

மான்சியிடம் சொல்லிக்கொண்டு போக வந்த பூங்கோதையிடம் “ உங்க வீட்டுல புசுபுசு நாய்க்குட்டி இருக்குதாமே, நான் அங்க வந்ததும் அதை எனக்கு தர்றீங்களா?” என்று மான்சி குதூகலத்துடன் கேட்க

அவளின் குழந்தைத்தனத்தை ரசித்து “ அங்க இருக்குற எல்லாமே உனக்குத்தான்மா,, நீ என் பேரனோட அந்த வீட்டுக்கு வந்தாலே போதும்” என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றாள் பூங்கோதை

அவர்களை அனுப்பி கதவை சாத்திவிட்டு வந்த சத்யன், வேகமாக கட்டிலில் அமர்ந்திருந்த மான்சியை நெருங்கி அவள் முகத்தை இழுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டான்,, அவனுக்கு கொஞ்சம் படபடப்பாக இருக்க மான்சியை இன்னும் இறுக்கி அழுத்திக்கொண்டான்

மான்சியை எல்லோரும் இவன் மனைவி என்று நினைத்து பேசியதால் வந்த படபடப்பா, அல்லது மான்சி இவன் மனைவி இல்லை என்ற உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்ற நினைப்பால் வந்த படபடப்பா என்று தெரியவில்லை

ஆனால் இதற்குமேல் இவன் மான்சி பற்றிய உண்மையை மறைத்தாலும், அருணா மூலம் மான்சி யார், என் மகன் அவள் வயிற்றில் எப்படி உருவானான், என்று கட்டாயம் எல்லோருக்கும் தெரிய வரும்,, ‘ அவள் சொல்லி தெரியும் முன்பு நானே எல்லோரிடமும் சொல்லிவிடுவது தான் சரி, ஆனால் அதன்பின் வருபவைக்கு மான்சியை தயார் செய்யவேண்டும் ’ என்று சத்யன் தன் மனதில் முடிவு செய்தான்

அவனின் இறுகிய அணைப்பில் இருந்த மான்சி மெல்ல நிமிர்ந்து " உங்களுக்கு காச்ச அடிக்குதா,, உடம்பு ஏன் இப்படி சுடுது" என்று பயத்துடன் கேட்க

மேலும் அவளை பயப்படுத்த விரும்பாது விலகியவன் " இல்லம்மா கொஞ்சம் டென்ஷனா இருந்தது அதனால உடம்பு சுட்டும்” என்று சமாதானம் அவளை செய்தான்

“ ஓ ஏன் டென்ஷன் ஆனீங்க” என்று குழந்தையாய் மான்சி கேள்வி கேட்க

“ ம்ம் இரு வந்து சொல்றேன்” என்ற சத்யன் தனது பேக்கில் தேடி சிகரெட் பாக்கெட்டையும், லைட்டரையும் எடுத்துக்கொண்டு வெளியே போனான்

நிறுத்தி வைத்திருந்த காரில் இருந்து இறங்கிய டிரைவர் “ வணக்கம்யா” என்று மரியாதை செய்ய

அவனுக்கு ஒரு தலையசைப்பை பதிலாக சொல்லிவிட்டு, காருக்குள் ஏறி அமர்ந்தவன் , மூன்று நாட்களாக மறந்திருந்த சிகரெட்டை உதட்டில் பொருத்தி லைட்டரால் பற்றவைத்து சீட்டில் சாவகாசமாக சாய்ந்து புகையை ஆழமாக உள்ளிழுத்து கண்களை மூடி மூக்கின் வழியாக வெளியேவிட்டான்,

பிறகு மனதை ஒருநிலைப்படுத்தி யோசித்துப்பார்த்தான் ‘ இப்போது மான்சியிடம் அருணாவைப்பற்றியும் அவளின் துரோகத்தைப் பற்றியும் சொன்னால் நம்புவாளா? என்ற சந்தேகம் சத்யனுக்கு வந்தது,,
ஏனென்றால் அருணாவின் மீது அதிகப்படியான மரியாதை வைத்து கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் மான்சியிடம் அருணாவை பற்றி சொல்லி அது தனக்கெதிராகவே முடிந்துவிட்டால் என்ன பண்ணுவது,,

அத்தோடு மூன்று நாட்களுக்கு முன்புவரை வாழ்ந்த தன்னுடைய தரங்கெட்ட வாழ்க்கையைப் பற்றி அவளிடம் சொல்லி, அதை அவள் எப்படி ஏற்றுக்கொள்வாளோ என்ற பயமும் சத்யனுக்கு இருந்தது, அவள் மனதுக்கு எது நல்லது எது கெட்டது என்றே புரியாத போது, இப்போதே இங்கேயே எல்லாவற்றையும் பேசி, ‘ச்சீ நீயெல்லாம் மனுஷனா? போடா உன்கூட வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது

சிகரெட் புகையின் உதவியுடன் ஏதேதோ யோசித்து, என்னென்னவோ முடிவு செய்து, பிறகு அவகளை மாற்றியமைத்து, புதிப்பித்து சத்யன் இறுதியாக அவளை கோவை அழைத்துச்சென்று பிறகுதான் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று முடிவுசெய்தான், அதன்பிறகு அவள் ஏதாவது முரண்டினாள் அவளை எப்படியாவது சமாதானம் செய்துகொள்ளலாம் என்ற தைரியம் வந்தது,, இந்த முடிவுகளை முடிவுசெய்ய அவனுக்கு மூன்று சிகரெட்களின் உதவி தேவைப்பட்டது 


காரைவிட்டு ஒரு தெளிவுடன் இறங்கியவன் டிரைவரை நெருங்கி தனது சட்டை பாக்கெட்டில் இருந்து இரண்டு நூறுரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்து “ முருகா வண்டிய எடுத்துட்டுப் போய் நீ ஏதாவது சாப்பிட்டுட்டு எங்களுக்கு இட்லி மட்டும் வாங்கிட்டு வா,, அப்புறம் வீட்டுக்கு லெப்ட்சைடு ஒரு சின்ன ரூம் இருக்கும் அதுலயே ஒரு கம்பளி இருக்கும், நைட் அங்கயே தங்கிக்க முருகா” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனான்

வீட்டுக்குள் போய் பாத்ரூமுக்குள் நுழைந்து வாயை கொப்புளித்து விட்டு டவலால் வாயை துடைத்தபடியே வந்து கட்டிலில் மான்சி அருகே அமர்ந்து, குழந்தையை எட்டிப் பார்த்தான், குழந்தை தூங்கவில்லை கண்விழித்து கைகாலை அசைத்துக் கொண்டு இருந்தான்

“ எங்கப் போனீங்க பாப்பா எவ்வளவு நேரமா முழிச்சு கையையும் காலையும் ஆட்டி ஆட்டி விளையாடுது தெரியுமா? நான் பாப்பாவையே தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்ற மான்சி அவன் பக்கமாகத் திரும்பியவள் அவன்மேல் வந்த சிகரெட் வாசனையை நுகர்ந்து “ நீங்க சிகரெட் பிடிச்சீங்களா?” என்று கேட்க

சத்யன் லேசாக தடுமாறி “ ஆமாம் மான்சி கொஞ்சம் டென்ஷனா இருக்குன்னு சொன்னேன்ல, அதனால வெளியே போய் சிகரெட் பிடிச்சேன்,, ஏன்மா உனக்கு சிகரெட் வாசனை பிடிக்காதா?” என்று சத்யன் சிறிது வருத்தமாக கேட்க

“ அய்யோ யாரு சொன்னது எனக்கு சிகரெட் வாசனை பிடிக்காதுன்னு,, எனக்கு பிடிக்குமே” என்றவள் அவன் முகத்தை நெருங்கி சர்ரென மூச்சை இழுத்து அந்த வாசனையை கண்மூடி ரசித்துவிட்டு “ இதுமட்டும் இல்ல, இன்னும் புதுசா மழை பெய்யும்போது மண்ணுல இருந்து ஒரு வாசனை அது, அப்புறம் மண்ணெண்ணெய் வாசனை,

" அப்புறம் நல்லா பசியா இருக்கும்போது எங்கம்மா கடுகு தாளிக்கும் போது அந்த வாசனை ரொம்ப புடிக்கும்,, அப்புறம் லேசா மழை பெய்யும்போது எங்கம்மாவோட பழைய சேலைய போத்திகிட்டு தூங்கும்போது அந்த சேலையில வருமே ஒரு வாசனை அது பிடிக்கும்,, ஆனா அதெல்லாம் அப்போ,, இப்போ நம்ம தம்பிப்பாப்பா மேல ஒரு வாசனை வருதே அது,, அப்புறம் நீங்க என் பக்கத்துல உட்காரும்போது உங்கமேல வர்ற வாசனை அதுவும் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்குது” என்று மான்சி தனக்கு பிடித்ததை எல்லாம் பட்டியலிட்டு சொல்லிகொண்டுப் போக

சத்யன் அவள் உதடுகளோடு சேர்ந்து பேசும் அவள் கண்களையும் ரசித்துக்கொண்டே அவள் பேசுவதை கேட்டான்

“ உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்” என்று மான்சி கேட்க

“ முன்னாடி எல்லாம் எதுவும் பிடிக்காது,, இப்போ இந்த மூனு நாளா உன்னையும் இந்த செல்லக்குட்டிப் பையனையும் பிடிக்கும்” என்று சத்யன் சொல்ல

“ ம் சரி, ஆனா அருணா அக்கா நல்லவங்களாச்சே, அவங்களையும் உங்களுக்கு பிடிக்கும் தானே,, பாத்தியா என்கிட்ட பொய் சொல்லிட்டீங்களே” என்று மான்சி தலையை சிலிப்பிக்கொண்டு சினுங்க...

நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கி விட்டு “ சரி சரி அருணாவையும் பிடிக்கும், சொல்ல மறந்து போய்ட்டேன்” என்று அவளை அணைத்து சமாதானம் செய்தான்

அன்று இரவு சத்யனும் மான்சியும் சாப்பிட்டு முடித்ததும் அவளை படுக்க வைத்த சத்யன், அவளருகில் அமர்ந்து “ மான்சி உனக்கு இப்போ உடம்புக்கு பரவாயில்லையா? எதுவும் பிரச்சனை இல்லையே? ” என்று கேட்க

“ ஏன் நான் நல்லாத்தானே இருக்கேன்” என்றாள் மான்சி
“ இல்லம்மா ப்ளீடிங், எல்லாம் சரியாயிருச்ச,, ஏன்னா நாளைக்கே கோவைக்கு போகலாம்னு நெனைக்கிறேன்” என்று சத்யன் சொல்ல

எவ்வளவு குழந்தைத்தனமாக இருந்தாலும் நானும் பெண்தான் என்பதுபோல் முகத்தில் லேசாய் வெட்கச் சிவப்பு படர தலைகுனிந்து “ ம்ம் இப்போ பரவாயில்லை,, நாளைக்கு போகலாம்” என்றாள் மான்சி

“ சரி நல்லா படுத்து தூங்கு,, காலையில வெயில் ஏறவும் கோவைக்கு கிளம்பலாம்” என்று கூறிவிட்டு அவள் நெற்றியில் சற்று அழுத்தமாக முத்தமிட்டு கம்பளியால் மூடிவிட்டு வந்தான்

தனது மொபைலை எடுத்து தன் அப்பாவுக்கு போன் செய்து, ‘ மான்சி,, குழந்தையுடன், நாளையே கோவை வருவதாக கூறியவன், தன் அறைக்கு பக்கத்து அறையை மான்சிக்கும் குழந்தைக்கும் தயார் செய்து வைக்கச் சொன்னான்

பிறகு படுக்கையை விரித்து படுத்தவனுக்கு,, கோவையில் என்ன நடக்குமோ என்ற பெரிய கோள்விக் குறியுடன் தூக்கம் வந்தது 


மறுநாள் காலை மான்சிக்கு வெந்நீர் வைத்துக் கொடுத்து குளிக்கச் சொல்ல, அவள் அவனை கேள்வியோடு பார்த்து “ நோத்து அதுக்கு முதல் நாளும் நீங்கதானே குளிக்க வச்சீங்க, இப்பமட்டும் ஏன் என்னையே குளிக்கச் சொல்றீங்க?” என்று குழப்பமான குரலில் கேட்க

தன் மனநிலை புரியாமல் பேசுகிறாளே என்று நினைத்த சத்யன், இவளுக்கு பதில் சொல்றதைவிட மனசை கட்டுப்படுத்திக்கிட்டுநாமலே இவளை குளிக்க வச்சிரலாம் என்று நினைத்து “ சரி வா நானே குளிக்க வைக்கிறேன்” என்று அவளை அழைத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போனான்

உள்ளே போனதும் “ நீங்க ஒன்னும் குளிக்க வைக்க வேனாம் நானே குளிச்சுக்கிறேன், அதான் உடம்பு நல்லாயிருச்சே” என்று கூறி அவன் முதுகில் கைவைத்து வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்திக்கொண்டாள்

சத்யனுக்கு ஒரு புறம் நிம்மதியாக இருந்தாலும் மறுபுறம் ஏமாற்றமாக இருந்தது,

குளித்துவிட்டு வந்தவள் தன்னிடம் இருப்பதிலேயே விலை அதிகமான நூறுரூபாய் மதிப்புள்ள ஒரு புடவை எடுத்துக் கட்டிக்கொண்டாள்,, இருவரும் சேர்ந்து குழந்தையை துடைத்து, உடை மாற்றி, குழந்தைக்கு பசியாற்றிவிட்டு, தேவையானவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தனர்

பின்சீட்டில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு மான்சி அமர அவளுக்கு அருகே சத்யன் அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான்

அவன் தோளில் சாய்ந்தவாறே “ நான் கார்ல வர்றது இது ரெண்டாவது வாட்டி,, பர்ஸ்ட் அருணா அக்கா கூட மதுரையிலேருந்து வந்தேன்,, இப்போ தம்பிப்பாப்பாவோட உங்ககூட கார்ல கோயமுத்தூர்க்கு போறேன்,, எனக்கு சின்ன வயசுலேர்ந்தே கார்ல போகனும்னு ரொம்ப ஆசை இப்போதான் அது நிறைவேறுச்சு,, எல்லாமே அருணா அக்காவால தான்” என்றவளை ..



டிரைவரை கண்ணால் ஜாடைகாட்டி உதட்டில் விரல் வைத்து , பேசாதே’ என்பதுபோல் சைகைசெய்தான் சத்யன்,

சரியென்று விழிகளை உருட்டி பெரிதாக தலையசைத்தாள் மான்சி

சற்று நேரத்தில் இதமான காற்றின் வேகத்தில் தூக்கம் வருவதுபோல் அடிக்கடி கண்களை சிமிட்ட, அவளிடமிருந்து தன் மகனை வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டு அவளை வசதியாக தன் தோளில் சாய்த்து தூங்கவைத்தான் சத்யன்

சற்றுநேரத்தில் மான்சி தூங்கிப்போக,, அவளின் முகத்தை ரசனையுடன் பார்த்துக்கொண்டு வந்தான் சத்யன், அவளின் ஒவ்வொரு உறுப்பும் கவிதை,, ஒவ்வொரு அசைவும் கவிதை,, அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை,, அவளின் ஒவ்வொரு வார்த்தையும் கவிதை 



No comments:

Post a Comment