Tuesday, September 15, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 28



பிறகு அருணாவிடம் திரும்பி “ என்ன விஷயம் அருணா,, எதுவாயிருந்தாலும் நேரடியாக சொல்லு, எங்களால முடிஞ்சா செய்றோம்” என்று பெருந்தன்மையோடு கூறியதும், சத்யனும் சற்று அடங்கினான், ஆனால் மான்சியை அணைத்த கைகளை எடுக்கவில்லை

அருணாவும் ராஜதுரையை நேரடியாக பார்த்து “ அங்கிள் எப்படி வாழனும்னு எனக்கு வாழ்க்கை பாடத்தை சொல்லிகொடுத்த இந்த பிள்ளைகளை விட்டுட்டு இனிமேல் இருக்கமுடியாது, மூனுபேர்ல எனக்கு யாராவது ஒரு குழந்தையை குடுங்க, நான் நல்லமுறையில் அவனை வளர்த்து ஆளாக்குறேன், நிச்சயமா உலகே வியக்கும் வண்ணம் நல்லவனாக வளர்ப்பேன் அங்கிள், ப்ளீஸ் என்னை நம்பி எனக்கு ஒரு மகனை வளர்க்க கொடுங்க” என்று இரைஞ்சுதலோடு அருணா கேட்க



ராஜதுரைக்கு முன்பே சத்யன் “ ஏய் பிள்ளையே வேனாம் மான்சியை எங்கயாவது கொண்டு போய் விட்டுடுங்கன்னு என்கிட்ட சொன்னவளுக்கு இப்போ திடீர்னு பிள்ளை பாசம் வந்துருச்சா, ஆனா உன்னைமாதிரி நான் இல்லை அருணா என் மனைவியும் பிள்ளைகளும் எனக்கு உயிர் மாதிரி, இவங்கல்ல ஒருத்தர் இல்லேன்னாலும் நான் இல்லை,, உன்னை பார்த்த அதிர்ச்சியவே மான்சியால தாங்கமுடியலை இதுல பிள்ளையை வேற உனக்கு தரனுமா,, என் மான்சி இதையெல்லாம் தாங்கமாட்டா அருணா, அவ குழந்தை மாதிரி, அதோட எந்த சமயத்திலயும் நான் என் பிள்ளைகளை உனக்கு தரமுடியாது அருணா, நீ கிளம்பலாம்” என்று கோபமாக சத்யன் கூறியதும்

தலைகுனிந்து அமர்ந்திருந்த அருணா கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்து “ சத்யா என் நிலைமையைப் புரிஞ்சுக்க, நான் சொல்றதை கேளு , எனக்கும் உனக்கும் நடந்த கல்யாணம் ஒரு பிழை சத்யா, அந்த பிழையை திருத்தும் முயற்சியா நான் இங்கே வரலை, உனக்கே தெரியும் ஆரம்பத்தில் இருந்தே நமக்குள்ள ஒரு அன்டர்ஸ்டான்டிங் இல்லை, ஒருத்தரையொருத்தர் நேசிச்சு ஒரு நிறைவான தாம்பத்யம் நடத்தனும்னு நாம ரெண்டு பேருமே முயன்றதில்லை, என்னோட அழகு உன்னை கவரலை, உன்னோட கம்பீரம் என்னை ஈர்க்கலை, பெரியவங்க சுயநலத்திற்காக ஏற்படுத்திய இந்த பந்தத்தில் நாமலும் சிலநாட்கள் வாழ்ந்து பார்த்தோம், அதுவும் நமக்கு பிடிக்காததால் கௌரவமாக ஒதுங்கி ஒரே வீட்டுல தனித்து வாழ்ந்தோம், அதனாலேயே எனக்கு குழந்தைங்க மேலயும் ஆசையே இல்லாமபோச்சு, அதற்கேத்த மாதிரி என் வயித்தையும் கடவுள் சுருக்கிட்டான், ஆனா இவ்வளவு நாளா நான் அதுக்காக வேதனைப்படவோ அழவோ இல்லை, இந்த பிள்ளைகளை பார்த்தபின் ஒவ்வொரு நாளும் ஊமையாய் அழுகிறேன் சத்யா, என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேனும்னு நான் சொன்னது இந்த பிள்ளைகளின் அன்புக்காகத்தான்,, மற்றபடி நம்மோட உறவை நான் புதுபிச்சுக்க நினைக்கலை, எனக்கு எப்பவுமே அந்தமாதிரி ஆசைகள் தோன்றியதே கிடையாது, அது உனக்கே தெரியும் சத்யா, அப்படியிருக்க மான்சி என்னைப்பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை,

" எதற்கோ நான் ஏற்படுத்திய பந்தம் இன்னிக்கு மான்சியை உன் மனைவியா வாழ வச்சிருக்கு, நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழக்கூடாதுன்னு நான் நெனைச்சிருந்தா அதை எப்பவோ செய்திருப்பேன், இவ்வளவு நாள் காத்திருந்து இப்போ அதை செய்யனும்னு அவசியம் இல்லை, உன் எதிரில் குறிகிப்போய் கையேந்தி நிற்கும் இந்த நிமிஷம் கூட எனக்கு நீ புருஷன் என்ற உணர்வே எனக்கு வரலை சத்யா, மான்சியோட புருஷன் கிட்டதான் கையேந்தி நிற்க்கிற மாதிரி இருக்கு,, எனக்கு தெரியும் மான்சியும் நீயும் ரொம்ப உயிரா வாழுறீங்கன்னு உங்களை பிரிக்கவோ விலக்கவோ நான் இங்கே வரலை, இன்னொன்னும் சொல்றேன் கேளு, இவ்வளவு நாளா நீ கேட்ட விவாகரத்தை கூட இப்போ நான் தரத்தயாராக இருக்கேன், எனக்கு தேவை அருணா சத்யமூர்த்தி என்ற பெயர் இல்லை, என்னை தாயாக உணருவதற்கு ஒரு பிள்ளை வேனும் சத்யா ப்ளீஸ் புரிஞ்சுக்க ” என்று இறுதியாக அருணா முடிக்கும்போது அவ்வளவு நேரம் தேங்கியிருந்த கண்ணீர் பொலபொலவென கொட்டியது


யாரும் எந்த பதிலும் கூறாமல் அந்த வீடே அமைதியாக இருக்க மான்சி சத்யனது அணைப்பிலிருந்து விலகி அமர்ந்தாள், இப்போது அருணாவின் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளிர்விட மான்சியைப் பார்த்து “ மான்சி முதல் மகன் அசுவத்தாமனை உருவாக்கியது நான் என்பதை மறந்திருக்கமாட்ட, அன்னிக்கு பிள்ளையின் அருமை தெரியாமல் உன்னோடு சேர்த்து நான் உருவாக்கின பிள்ளையையும் உதறிவிட்டு போனேன், இன்னிக்கு அதே பிள்ளைக்காக உன்கிட்ட கையேந்தி நிற்க்கிறேன், இப்போ நீ வாழும் வாழ்க்கை என்னால் கிடைச்சது என்பதை நீ மறந்திருக்கமாட்ட, அதுக்கு ஏதாவது எனக்கு நன்றிக்கடனாக செய்ய நினைச்சா உன்னோட மூன்று மகன்களில் எனக்கு ஒருத்தனை கொடுத்து என் வரண்டு போன வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்ப்படுத்து மான்சி” என்று அருணா மான்சியைப் பார்த்து உருக்கமாக வேண்டினாள்

அதுவரை கணவனின் அணைப்பில் தனது பதட்டத்தை தனிவித்த மான்சி நிமிர்ந்து அமர்ந்து “ அக்கா நீங்க சொல்றது எல்லாம் சரிதான், இந்த வாழ்க்கை உங்களால் கிடைச்சதுதான், இன்னும் அதை நீங்க தட்டிப்பறிக்கவும் நினைக்கலை தான்,, அதுக்காக என் உயிரை கேட்டாக்கூட நான் தருவேன் அக்கா, ஆனா பிள்ளைகள் அவரோட சொத்து அக்கா அதை அவர் உரிமையில்லாம நான் எப்படி தருவேன், என் பிள்ளைகளை என்னைவிட நீங்க நல்லா வளர்ப்பீங்கன்னு தெரியும், ஆனா அதுக்காக அவரோட உயிரா நேசிக்கிற பிள்ளைகளை என்னால தரமுடியாது அக்கா, என்னை மன்னிச்சுடுங்க” என்று மான்சி கைகூப்பி கண்ணீருடன் கூறினாள்

அவளருகே இருந்த சத்யன் மான்சியின் கூப்பிய கரங்களை விலக்கிவிட்டு தன் தோளில் ஆதரவாய் சாய்த்துக்கொண்டான், அவனுக்கு மான்சி கண்கலங்கினாலே தன் இதயத்தை யாரோ கசக்குவது போலிருக்கும், இன்றோ அவளின் கண்ணீரைப் பார்த்ததும் அருணாவின் மீது கோபம்தான் வந்தது

பட்டென்று சோபாவில் இருந்து எழுந்த சத்யன் “ அருணா நீ சொல்ற எதுவுமே நடக்காது, நீ கிளம்பலாம்” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி கைகாட்டினான்

அருணாவும் தன்மானம் மிக்கவள் தானே அவன் சொன்ன அடுத்த விநாடி எழுந்து “ அப்போ நான் சொன்ன எதையுமே நீங்க யாருமே நம்பலை, இட்ஸ் ஓகே, நான் கிளம்புறேன், எதை, எப்படி, என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும்” என்று பட்டென்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்

யாருமே அவளை தடுக்கவில்லை, ராஜதுரை மட்டும் யோசனையுடன் அருணாவையே பார்த்துக்கொண்டிருந்தார்,

அதன்பிறகு அந்த வீட்டில் எல்லாமே இயல்பு மாறாமல் அப்படியே நடந்தது, ஆனால் மனதுக்குள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள், மான்சிக்கு அருணா ஏதாவது கேஸ் போடுவாங்களோ என்று பயம்,, சத்யனுக்கு அருணா நிச்சயமா தொழில் ரீதியாக தன்னை டார்ச்சர் பண்ணுவாளோ என்று உணர்வு, அய்யோ நல்லாருந்த குடும்பத்தில் இப்படியெல்லாம் நடக்குதே என்று அன்றாடம் ஆயிரம் கடவுளை வேண்டினாள் பூங்கோதை,

ஆனால் ராஜதுரை மட்டும் எதற்கும் அஞ்சாமல் தன்வேலைகளை பார்த்தபடி இருந்தார்

பத்மாவும் கௌதமும் வெளியூரில் இருந்ததால் பூங்கோதை அவர்களுக்கு போன் மூலமாக தகவல் சொன்னதும், பத்மா உடனே பதட்டத்துடன் ராஜதுரைக்கு போன் செய்து பேசினாள், அவர் சொன்ன தகவல்கள் அவளுக்கு திருப்தியாக இருக்கவும் “ உங்களுக்கு என்ன தோணுதோ அதன்படி செய்யுங்க மாமா” என்று தைரியமாக கூறி போனை வைத்தாள் ,

அந்த வாரம் முழுக்க எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக போக, ஞாயிற்றுக்கிழமை காலை சத்யன் கையில் காபி கப்பும் மறுகையில் பேப்பருமாக சாவகாசமாக சோபாவில் அமர்ந்திருக்க, மான்சி பேப்பரில் தலைப்பு செய்தியை பார்க்கும் சாக்கில் அவன்மீது சாய்ந்து அமர்ந்திருந்தாள், 





பூங்கோதை காலை டிபனுக்காக கிச்சனில் சமையல்காரருடன் பேசிக்கொண்டு இருக்க, ராஜதுரை தோட்டத்தில் இருக்கும் விளையாட்டு திடலை எப்படி மாற்றியமைப்பது என்று பேரன்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்,

அப்போது வீட்டின் போர்ட்டிகோவில் அருணாவின் கார்வந்து நிற்க கையில் ஒரு பெரிய பேக்கும் , பின்னால் வந்த டிரைவர் இரண்டு சூட்கேஸ்களையும் எடுத்துவருவதை தோட்டத்தில் இருந்தபடியே பார்த்துவிட்டு ராஜதுரை தனக்குள் புன்னகைத்தபடி வீட்டுக்குள் வந்தார்

குமார் பெட்டிகளை ஹாலில் வைத்துவிட்டு பணிவுடன் நிற்க, அவர்களை பார்த்துவிட்டு சத்யனும் மான்சியும் திகைப்புடன் எழுந்துவிட்டனர், ராஜதுரை சாவகாசமாக வந்து சோபாவில் அமர்ந்து “ என்னம்மா அருணா பெட்டியெல்லாம் எடுத்துட்டு வந்திருக்க” என்று கேட்டார், அவர் குரலில் இதுவரை இல்லாத சினேகபாவம்

தன் கையில் இருந்த பேக்கை கீழே வைத்துவிட்டு தனது தோளில் இருந்த கைப்பையை திறந்து அதிலிருந்து கணமான ஒரு கவரை எடுத்த அருணா அதை ராஜதுரையிடம் கொடுக்க, “ என்ன கவர்ம்மா இது” என்று கேட்டுவிட்டு கையில் வாங்கினார் ராஜதுரை

“ என்னோட கம்பெனிகள் சம்மந்தப்பட்ட டாகுமெண்ட்ஸ் அங்கிள், எல்லாத்தையும் நீங்க கௌதம் அண்ணா, சத்யன், மூனுபேரும் கவனிச்சுக்கனும்னு பதினைந்து வருஷத்துக்கு பவர் எழுதி எடுத்துட்டுட்டு வந்திருக்கேன், அதன் பிறகு அஸ்வத்தாமன், அபிமன்யு, அனிருத்தன், மூனுபேர் கிட்டயும் எல்லா பொருப்புகளையும் குடுத்துடனும் அதுவரைக்கும் நீங்க மூன்றுபேரும் தான் எல்லாவற்றுக்கும் கார்டியன்,, அப்புறம் நான் இருந்த வீட்டை கம்பெனி கெஸ்டவுஸா மாத்திட்டேன், எல்லா வருமானங்களையும் எப்படி முறைப்படுதுவது என்று விளக்கமாக எழுதியிருக்கேன் அங்கிள்” என்றாள் திகைத்துப்போய் நின்றிருந்த சத்யன் மான்சியிடம் வந்து மற்றொரு கவரை எடுத்துக்கொடுத்து

“ இது உங்க ரெண்டுபேருக்கும் ரொம்ப தேவையானது, அதாவது நான் விவாகரத்துக்கு சம்மதிச்சு என்னோட கையெழுத்துப் போட்ட பத்திரம்,, இப்போ உங்களுக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை, நான் யாரையும் ஏமாத்தவும் இல்லை, இந்த ஒருவாரமா இதைத்தான் ரெடி பண்ணேன், இல்லேன்னா எப்பவோ இங்கே வந்திருப்பேன் ” என்ற அருணா மறுபடியும் ராஜதுரையின் அருகில் வந்து

“ அங்கிள் இப்போ என்மேல உங்க எல்லாருக்கும் நம்பிக்கை வந்திருக்கும், இனிமேல் நான் இந்தவீட்டில் தான் தங்கப் போறேன், குழந்தைகளை பார்த்துக்குற ஒரு கவனர்ஸாக, அதாவது பிள்ளைகளை பார்த்துக்குற ஒரு ஆயாவாக இருக்கப்போறேன், மான்சிக்கு சத்யனை கவனிக்கத்தான் நேரமிருக்கும், அப்போ நான் பிள்ளைகளை கவனிச்சுக்கறேன்,எனக்கு தங்க ஒரு அறையும் சாப்பாடும் போட்டா போதும், என் மகன்களை கவனிச்சுகிட்டு நான் இங்கேயே இருந்துக்கிறேன், உங்க யாருக்கும் இதுல எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நெனைக்கிறேன் ” என்று அருணா சொல்ல, அவள் எவ்வளவுதான் தீர்கமாக பேசினாலும் அவள் குரலில் இருந்த ஏதோவொன்று அனைவரின் இதயத்தையும் உலுக்கியது,,

பிள்ளையில்லாதவள் என்ற சொல் அவளை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பது அவளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிந்தது

ராஜதுரை சத்யனைப் பார்த்தார், அவன் இதையெல்லாம் நம்பமுடியாதவனாக திக்பிரமையுடன் நின்றான், ராஜதுரை தனது பார்வையை மான்சியிடம் திருப்பினார், அவள் கண்களில் வழக்கமான கனிவு அன்பும் கண்ணீராய் பொங்கியது, ஒரு பெண்ணுக்கு பெண்ணாய் அருணாவின் உணர்வுகளை புரிந்துகொண்டு மான்சி தனது மாமனாரிடம் பார்வையாலேயே அனுமதி கேட்க, அவர் செய் என்பதுபோல கண்களை மூடித் திறந்தார்

மான்சி பக்கத்தில் இருந்த சத்யனின் தோளைத் தொட்டாள், அவன் எதுவுமே பேசாமல் சோபாவில் பொத்தென்று அமர்ந்தான்,

அப்போது தோட்டத்தில் இருந்து ஓடிவந்த பிள்ளைகள் அருணாவை பார்த்துவிட்டு “ ஆன்ட்டி” என்று ஓடிவந்து அருணாவின் கால்களை கட்டிக்கொள்ள,, அருணா முகமெல்லாம் சிரிப்பும் சந்தோஷமுமாக அனிருத்தனை தூக்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்டு மற்ற இருவரையும் கால்களோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்

அப்போது அவர்களை நெருங்கிய மான்சி “ ஏய் பசங்களா இனிமேல் ஆன்ட்டின்னு எல்லாம் கூப்பிடக்கூடாது, பெரியம்மான்னுதான் கூப்பிடனும், இனிமேல் பெரியம்மா உங்ககூடதான் தங்கப் போறாங்க, அவங்க பெட்டியை எடுத்துக்கிட்டு உங்க ரூமுக்குப் பக்கத்து ரூம்ல எடுத்துட்டுப் போய் வைங்க” என்று பிள்ளைகளுக்கு சொல்ல,

மூவரும் ஒரே கோரசாக “ ஹய் பெரியம்மா இனிமே எங்ககூடவே இருக்கப்போறாங்க” என்று குதித்தபடி சக்கரம் வைத்த அருணாவின் பெட்டிகளை தள்ளிக்கொண்டு போனார்கள்,


அருணா மான்சியை பார்த்து கண்கலங்கி கையெடுத்துக் கும்பிட, மான்சி அவள் கையைப்பிடித்து “ என்ன அக்கா இதெல்லாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு பிள்ளைகளுக்கு பக்கத்து அறைக்கு அழைத்து போனாள்

ராஜதுரை திருப்தியான ஒரு புன்னகையுடன் அங்கே நின்றிருந்த குமாரின் தோளில் கைப்போட்டு “ ம் உன் பேர் என்னப்பா?” என்று விசாரித்தபடி வெளியே போனார்

இருதரப்பிலும் சேதமின்றி பிரச்சனை சுமுகமாக முடிந்ததில் மகிழ்ந்து போன பூங்கோதை என்ன இனிப்பு செய்யலாம் என்று யோசித்தபடி சமையலறைக்குள் போனாள்

கையில் ஆறிப்போன காப்பி கப்புடன் அப்படியே அமர்ந்திருந்தான் சத்யன்,,


இது நடந்த நாற்பதாவது நாள் கோவையின் மிகச்சிறந்த மகப்பேறு மருத்துவமனையின் வளாகத்தில் ராஜதுரை குறுக்கும் நெடுக்குமாக நடக்க, பூங்கோதை பேரன்களை பக்கத்தில் அமர்த்திக்கொண்டு பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்,, குமார் கேன்டீனில் இருந்து வாங்கிவந்த பிஸ்கெட் பாக்கெட்களை பிரித்து பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுத்தபடி நொடிக்கொருதரம் லேபர் ரூம் வாசலைப் பார்த்தபடி இருந்தான்

லேபர் ரூமில் மான்சி வலியால் துடிக்க, அருணா ஒருபக்கமும் சத்யன் மறுபக்கமும் நின்றுகொண்டு மான்சியைவிட அதிகமாக துடித்து கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தனர், மான்சியின் கால்களுக்கு நடுவே கவிழ்ந்திருந்த பெண் டாக்டர் நிமிர்ந்து பார்த்து “ ஏன் சத்யா என்ன இது உங்க ரெண்டு பேரோட தொல்லையா போச்சு, குழந்தை பெத்துக்குற மான்சியே ஓரளவுக்கு அமைதியா இருக்காங்க, நீங்க ரெண்டுபேரும் என்னன்னா வந்ததுலருந்து கண்ணை கசக்கிகிட்டு எங்களை டென்ஷன் ஆக்குறீங்க” என்று சத்யனையும் அருணாவையும் பார்த்து எரிச்சலுடன் சொல்ல,,,

சட்டென்று தனது கண்ணீரை முந்தானையால் துடைத்த அருணா,, “ சத்யா ஏன் இப்போ கண்கலங்குற, மான்சிக்கு ஒன்னும் ஆகாது, நீ வேனா கொஞ்சநேரம் வெளிய இரு நான் மான்சி கூட இருக்கிறேன்” என்று அருணா சொல்ல

தலையசைத்து மறுத்த சத்யன் “ இல்லை அருணா மான்சிக்கு டெலிவரி ஆகும்போது நான் கூடவே இருக்கனும், இல்லேன்னா ரொம்ப வருத்தப்படுவா, நான் இங்கேயே இருக்கேன் நீ வேனா வெளிய போய் பசங்க ஏதாவது சாப்பிட்டாங்களான்னு பாரு ” என்று சொன்னதும்

“ ஆமாம் காலையிலேயே எதுவும் சரியா சாப்பிடலை சத்யா,, நான் போய் பசங்களை பார்க்கிறேன்” என்று அவசரமாக வெளியே ஓடினாள் அருணா
அவளைப்பார்த்ததும் பரபரப்புடன் நெருங்கியவர்களை “ இன்னும் குழந்தை பிறக்கலை” என்று தகவல் கூறிவிட்டு மகன்களை அருகே போனாள்

பிள்ளைகளை பிஸ்கெட் சாப்பிடவைத்து தண்ணீர் குடிக்க வைத்தவள் “ பாப்பா பிறந்ததும் பார்த்துட்டு நாமெல்லாம் தாத்தா கூட வீட்டுக்கு போகலாம், அப்பாவும் பாட்டியும் மட்டும் அம்மா கூட இருப்பாங்க, இங்கேயே இருக்கேன்னு பிடிவாதம் பண்ணக்கூடாது சரியா?” என்று மகன்களுக்கு சொல்லிவிட்டு மறுபடியும் அறைக்குள் செல்ல எழுந்தவளை அப்போதுதான் வந்த பத்மா வந்து பற்றிக்கொண்டாள்

“ என்னாச்சு அருணா? டாக்டர் என்ன சொல்றாங்க?” என்று பதட்டத்துடன் வினவினாள்

“ இன்னும் பத்து நிமிஷத்துல ஆயிடும்னு டாக்டர் சொன்னாருக்கா, இந்த சத்யா வேற அங்கேயே நின்னு கண்ணை கசக்குது டாக்டர் திட்டுறாங்க” என்று அருணா பத்மாவிடம் சொல்ல

“ அவன் எப்பவுமே இப்படித்தான் மான்சிக்கு ஒன்னுன்னா தாங்கமாட்டான்” என்ற பத்மா பூங்கோதையின் அருகில் போய் அமர்ந்தாள்

அப்போது லேபர் அறைக்குள் இருந்து “ அம்மா” என்ற மான்சியின் அலறல் கேட்க, அதைத் தொடர்ந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது, அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் அருணா அவசரமாக அறைக்குள் ஒடினாள்

அவளைப்பார்த்ததும் சத்யன் கண்கலங்க “ அருணா பெண்குழந்தை பிறந்திருக்கு” என்று சந்தோஷமாக கூறினான்

நர்ஸ் குழந்தையை துடைத்து துணியில் சுற்றி எடுத்துவந்து அருணாவிடம் நீட்ட, அருணா கண்கள் கண்ணீரில் தத்தளிக்க சத்யனையும் மான்சியையும் பார்த்தாள், மான்சி முகத்தில் களைப்புடன் கண்களை மூடித்திறந்து ‘வாங்குங்க’ என்பது போல் ஜாடைசெய்ய,, “ குழந்தையை வாங்கு அருணா” என்றான் சத்யன்

அருணா நடுங்கும் கைகளுடன் அந்த பச்சிளம் குழந்தையை வாங்கி தன் நெஞ்சோடு அணைத்தாள், பிறகு குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு மறுபடியும் நிமிர்ந்து சத்யனைப் பார்த்து “ அன்னலட்சுமி அம்மா வந்து பிறந்திருக்காங்க சத்யா” என்று கூற,, சத்யனும் ஆமாம் என்று தலையசைத்தான்

நர்ஸ் சத்யன் அருணா இருவரையும் வெளியே போகச்சொல்ல, சத்யன் மான்சியின் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்துவிட்டு வெளியே வந்தான்,,

அருணா மகளை நெஞ்சோடு அணைத்தபடி அறையிலிருந்து வெளியே வந்தாள்,, மலடி என்ற அருணாவின் வாழ்க்கைக்கு இன்னொரு சுப ஸ்வரமாய் அன்னலட்சுமி வந்து பிறந்திருந்தாள் 





" என் வாழ்க்கையின் கவிதைகளில்..

" எப்பொழுதும் ஒரு நிலவு இருக்கிறது!

" என் வாழ்க்கையின் நிம்மதியில்...

" எப்பொழுதும் ஒரு புல்வெளி இருக்கிறது!

" என் வாழ்க்கையின் தெய்வீகத்தில்..

" எப்பொழுதும் ஒரு குழந்தையின் உள்ளங்கை இருக்கிறது!

" என் வாழ்க்கையின் அச்சத்தில்..

" எப்பொழுதும் ஒரு பூனையின் கண் இருக்கிறது!

" என் வாழ்க்கையின் விடியலில்..

" எப்பொழுதும் ஒரு செங்கதிரின் சிவப்பு இருக்கிறது!

" என் வாழ்க்கையின் ஓய்வில்..

" எப்பொழுதும் ஒரு அடிவான மேகம் இருக்கிறது!

" என் வாழ்க்கையின் அவசரத்தில்..

" எப்பொழுதும் ஒரு அடர்ந்த புழுதி இருக்கிறது!

" என் வாழ்க்கையின் சுகங்களில்..

" எப்பொழுதும் ஒரு உழைப்பாளியின் வியர்வை இருக்கிறது!

" என் வாழ்க்கையின் தத்துவத்தில்..

" எப்பொழுதும் ஒரு தேன்கூடு இருக்கிறது!

" என் வாழ்க்கையின் புன்னகையில்..

" எப்பொழுதும் இருக்கின்றது,

" ஒரு மழலையின் ஆனந்த சிரிப்பொலி!! 





முற்றும்


No comments:

Post a Comment