Friday, September 25, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 18

கடந்த பதிவின் முடிவில் நேர்ந்த விஸ்வா-டாக்டர் மதுசூதன் சந்திப்பு தொடர்கிறது ....

டாக்டர் மதுசூதன், "ஏன் நீ அவளுக்கு வைபரேட்டர் வாங்கித் தருவதா சொன்னேன்னு யோசிச்சு பதில் சொல்லு .. "

ஏற்கனவே கலங்கி இருந்த விஸ்வாவின் கண்கள் குளங்களாகின ...

விஸ்வா, "I knew that I was not doing my job. என்னால முன்னே மாதிரி செய்ய முடியலைன்னு எனக்கே தோணுச்சு. ஆனா, என் இயலாமையை ஒத்துக்க மனசு வரலை. என் வேலை பளுவினால் டயர்டா இருப்பதா நினைச்சேன். I was irritated at myself more than Vanitha"

டாக்டர் மதுசூதன், "சரி, வனிதா டெல்லி ஃபேருக்கு சந்திரசேகருடன் போயிட்டு வந்த பிறகு உங்க ரெண்டு பேருக்கும் இடையே எவ்வளவு முறை சேர்க்கை இருந்தது?"



விஸ்வா, "ஆக்சுவலா ... ஒண்ணு ரெண்டு தடவைதான் இருந்தது ... எங்கே சீக்கிரம் முடிச்சுட்டு மறுபடி வனிதா அந்த மாதிரி சொல்லிடுவாளோன்னு எனக்குள்ளே ஒரு பயம். நிறைய தடவை எதாவுது சாக்கு சொல்லி நானே உடலுறவில் கலந்துக்காம இருந்தேன்"

விஸ்வா தலை குனிந்தான் ...

டாக்டர் மதுசூதன், "வனிதாவின் கண்ணோட்டத்தில் யோசி. கடைசியா ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தப்ப வேண்டா வெறுப்பா உடலுறவில் கலந்துட்ட மாதிரி பேசினே. நீ அப்படி சொன்னதால் மனம் புண்பட்டு வருத்தப் பட்டவளை சமாதானப் படுத்த டெல்லி ஃபேரப்போ ஜாலியா இருக்கலாம்ன்னு வாக்குக் கொடுத்தே. கடைசியில் அந்த டெல்லி ஃபேருக்கு நீ போகவே இல்லை. அவளை தனியா சந்திரசேகருடன் இருக்க விட்டே. திரும்பி வந்த பிறகும் அவளை தவிர்த்து இருக்கே ... "

அவரை மேலும் பேச விடாமல் தடுத்த விஸ்வா உறத்த குரலில், "Oh please colonel. Don't torture me"

டாக்டர் மதுசூதன், "விஸ்வா. அவ உன் மேல உயிரையே வெச்சு இருந்தா. இன்னமும் வெச்சு இருக்கா. வெறும் உடல் பசியை மட்டும்தான் சந்திரசேகர் மூலமா தீர்த்துகிட்டா. What she had with Chandrashekar was just sex not love and intimacy. அந்த காலகட்டத்திலும் நீ அவளுடன் இருக்க மாட்டியான்னுதான் ஏங்கி இருக்கா. ரொம்ப நேரம் இயங்கணும்ன்னு ஏங்கலை. உன்னுடைய காதலும் அன்னியோன்னியமும் மட்டுமே அவளுக்குப் போதுமா இருந்து இருக்கும். அந்த அன்னியோன்னியத்தையும் நீ தவிர்த்தே. இல்லையா?"

விஸ்வா மௌனம் காக்க ..

டாக்டர் மதுசூதன், "சரி, இப்போ சொல்லு நீ அந்த தகாத உறவு ஏற்படறதுக்கு நீயும் ஒரு காரணம்ன்னு புரியுதா?"

விஸ்வா, "எஸ்"

டாக்டர் மதுசூதன், "சோ விஸ்வா, உன் ட்ரீட்மெண்ட்டை மேலும் எப்படித் தொடர்வதுன்னு என்ன முடிவு செஞ்சே?"

விஸ்வா, "அதான் சொன்னேனே கர்னல். அடுத்த கட்டம் என் பார்ட்னருடன் சேர்ந்து எடுத்துக்க வேண்டியதுன்னு ... "

டாக்டர் மதுசூதன், "Please refresh my aged memory? எதுக்கு அந்த ட்ரீட்மெண்ட்?"

விஸ்வா, "To rectify my pre-mature ejaculation? செக்ஸில் கலந்துக்கும் போது சீக்கிரமா முடிக்காம இருக்க"

டாக்டர் மதுசூதன், "எதுக்கு அந்த ட்ரீட்மெண்ட்?"

விஸ்வா, "உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும் என் வாயால் சொல்ல வைக்கணும்ன்னு கேட்கற மாதிரி இருக்கு. It's O.k. அதை ட்ரீட்மெண்ட் என்பதை விட பயிற்சின்னு சொல்லலாம். நானும் என் துணையும் ஒண்ணா சேர்ந்து உடலுறவில் அவங்க சொல்லும் விதத்தில் ஈடு படணும். மொத்தம் பதினெட்டு செஷன்ஸ். ஒவ்வொரு செஷனுக்கு முன்னாடியும் ஒரு வீடியோ போட்டுக் காண்பிப்பாங்க. அந்த வீடியோவில் வருவது போல் நாங்க செக்ஸில் கலந்துக்கணும். பதினெட்டு செஷன்ஸ் முடியும் போது என் P.E ப்ராப்ளம் முழுக்க குணமாகி இருக்குமாம்"

டாக்டர் மதுசூதன், "ம்ம்ம் .... வனிதா நிச்சயம் அதுக்கு ஒத்துக்குவா ... "

விஸ்வா முகத்தில் கோபம் கொப்பளிக்க, "அப்படி ஒண்ணும் அந்த ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை"

டாக்டர் மதுசூதன், "இப்போ உனக்கு இருக்கும் ஆப்ஷன்ஸ் என்னன்னு கொஞ்சம் அலசிப் பார்க்கலாமா?"

விஸ்வா, "என்ன ஆப்ஷன்ஸ்?'

டாக்டர் மதுசூதன், "உன் வாழ்க்கையைப் பற்றிய ஆப்ஷன்ஸ்"

விஸ்வா மௌனம் காக்க ..

டாக்டர் மதுசூதன், "ஒண்ணு நீ வனிதாவுடன் சேர்ந்து வாழறது. அடுத்தது விவாகரத்து வாங்கிட்டு அவ இல்லாத ஒரு வாழ்க்கையை தொடங்கறது. இது ரெண்டிலும் செக்ஸே இல்லாத சன்னியாசியா இருக்கப் போறியா?"

விஸ்வா மேலும் மௌனம் காக்க ...

டாக்டர் மதுசூதன், "இன்னொருத்தியை மனமாற காதலிக்க நீ இருக்கும் நிலையில் உன்னால் முடியாது. காதலோடு கலந்து வரும் சுகம் இல்லைன்னாலும் செக்ஸ் என்னும் வடிகால் உனக்குத் தேவை. நான் சொல்லறது சரியா?"

விஸ்வா, "ம்ம்ம்"

டாக்டர் மதுசூதன், "கூடவே உன்னால் உன் மனைவியை, மனைவியை விடு ஒரு பெண்ணுக்குத் தேவையான திருப்திப் படுத்த முடியுமா அப்படிங்கற சந்தேகம் உன் மனசில் ஆழமா பதிஞ்சு இருக்கு. Am I correct?"

விஸ்வா, "எஸ்"

டாக்டர் மதுசூதன், "My boy, BRAIN is the biggest sex organ in human body. அது உண்டாக்கும் எண்ணங்களை மாத்தறது கொஞ்சம் கஷ்டம். ஒரு விஷயம் மனசில் ஆழமா பதிஞ்சுட்டா அது தவறுன்னு நம் மனத்தை நம்பவைக்க ஒரே வழிதான் ... "

விஸ்வா, "என்ன வழி"

டாக்டர் மதுசூதன், "நம் எண்ணம் சரி இல்லைன்னு நாமே நம் மூளைக்கு நிரூபிச்சுக் காட்டணும்"

விஸ்வா, "என்ன சொல்ல வர்றீங்க?"

டாக்டர் மதுசூதன், "உன் மனசில் ஒரு பெண்ணை திருப்திப் படுத்த முடியுமா அப்படிங்கற எண்ணம் ஆழமா பதிஞ்சு இருக்கு. அந்த எண்ணம் தவறுன்னு நீயே உன் மூளைக்கு நிரூபிக்கணும்"

விஸ்வா, "எப்படி?"

டாக்டர் மதுசூதன், "செயலில் இறங்கித்தான். டாக்டர் சொன்ன அடுத்த கட்ட ட்ரீட்மெண்டில் கலந்துட்டு .. "
விஸ்வா, "எப்படி? I don't think I have sexual feeling for Vanitha"

டாக்டர் மதுசூதன், "ஏன்?"

விஸ்வா, "அவளோடு உறவு கொள்ளணும்ன்னு நினைச்சா மறுகணம் நான் அன்னைக்கு பார்த்த காட்சிதான் என் கண் முன்னால் வருது. இவ்வளவு ஏன், even when I get the mood if I get that image and I loose my erection"

டாக்டர் மதுசூதன், "உன் மனசில் ஆழமா பதிஞ்சு இருக்கும் அந்த காட்சியை அகற்ற வேறு ஒரே ஒரு வழிதான். நீ செக்ஸில் கலந்துக்கணும். வனிதாவை விவாகரத்து செஞ்சா எப்படியும் மத்தவங்க கூடத்தானே உடலுறவு இருக்கப் போகுது? Why wait? உன் ட்ரீட்மெண்டுக்காக ஏன் நீ வேறு ஒரு பெண்ணோடு உடலுறவில் ஈடு படக் கூடாது?"

விஸ்வா, "அவ செஞ்ச தப்பை என்னை செய்யச் சொல்லறீங்களா?"

டாக்டர் மதுசூதன், "அதை தப்புன்னு எடுத்துக்காதே. ட்ரீட்மெண்ட் அப்படின்னு மட்டும் எடுத்துக்கோ"

விஸ்வா மௌனம் காக்க ...

டாக்டர் மதுசூதன், "யோசிச்சுப் பாரு. அடுத்த ரெண்டு மாசம் நான் யூ.எஸ் போறேன். சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க முடியும்ன்னு நினைச்சேன். எப்படியோ சீக்கிரம் நீ ஒரு முடிவுக்கு வா"

இருவரும் விடை பெற்றனர்.



விஸ்வா அலுவலகத்துக்குள் நுழைந்த போது அன்று ஒரு போர்ட் மீட்டிங்க் இருப்பதாகவும் விஸ்வாவும் அதில் பங்கேற்க அழைக்கப் பட்டு இருப்பதாகவும் அவனுக்கு தகவல் வந்தது ...

P.M.L.இன் கான்ஃபரென்ஸ் ரூம் ...

விஸ்வா சொன்ன நேரத்திற்கு இரு நிமிடங்கள் முன்னால் சென்று அமர்ந்தான். சற்று நேரத்தில் சண்முகம், சுமதி மற்றும் வனிதா உள்ளே நுழைந்து மற்ற இருக்கைகளில் அமர்ந்தனர்.

விஸ்வா வனிதாவின் கண்களைத் தவிர்த்து, "என்ன சார்? எதுக்கு போர்ட் மீட்டிங்கில் என்னைக் கலந்துக்க சொல்லி இருக்கீங்க?"

சன்முகம், "விஸ்வா, இவ்வளவு நாளும் இந்தக் கம்பெனியில் போர்ட் மீட்டிங்க் அப்படின்னா நான், சுமதி, சந்துரு அப்பறம் உங்க அம்மா கம்பெனியில் இருந்து நியமிக்கப் பட்ட ஆடிட்டர் இந்த நாலு பேர் மட்டும்தான் இருப்போம். நிறைய சமயம் காயத்ரி மேடமே இதில் கலந்துக்க வருவாங்க" என்று அவனுடைய தாயைப் பற்றிய அவனுக்கு இதுவரை தெரியாத உண்மையைச் சொன்னார்.

தொடர்ந்த சண்முகம், "இன்னைக்கும் தானே கலந்துக்க வர்றதாத்தான் சொல்லி இருக்காங்க. அவங்க வந்ததுக்குப் பிறகு கம்பெனி மேட்டர்ஸைப் பேசலாம். சரியா?"

விஸ்வா விட்டுக் கொடுக்க விரும்பாமல், "அது ஓ.கே சார், என்னை எதுக்கு வரச் சொல்லி இருக்கீங்க?"

சண்முகம், "சந்துரு போனதுக்குப் பிறகு கம்பெனி நிர்வாகத்திலும் அதன் முன்னேற்றத்திலும் மாற்றங்கள் தேவைன்னு உனக்கே தெரியும் விஸ்வா. சந்துருவுக்குப் பிறகு அவர் ஏத்துட்டு இருந்த பொறுப்புகளை மத்தவங்க ஏத்து நடத்தணும். அந்த மாற்றங்களை முடிவு செய்யத்தான் இந்த மீட்டிங்க்"

சற்று நேரத்தில் விஸ்வாவின் தாய் காயத்ரி வந்து அமர்ந்தார்.



விஸ்வா, வனிதா இருவரின் கண்களையும் தவிர்த்த காயத்ரி, "எஸ் சார். சொல்லுங்க உங்க போர்டில் மற்றும் நிர்வாகத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யறதா இருக்கீங்க?"

சண்முகம், "முன்னே சந்துரு மேனேஜிங்க் டைரக்டரா இருந்தார். அவர் நிர்வாகப் பொறுப்புக்களை மட்டும் கவனிச்சுட்டு இருந்தார். ஆனா கம்பெனியின் வியாபாரம் மற்றும் முன்னேற்றம் எல்லாம் விஸ்வா கையில் இருந்தது. அவருக்குக் கொடுக்கப் பட்ட பதவிக்கும் அதிகமான பொறுப்புக்களை அவரே எடுத்து செஞ்சுட்டு வந்து இருக்கார். அவரை சீஃப் எக்ஸிக்யூடிவ் ஆஃபீஸரா நியக்க முடிவு செஞ்சு இருக்கோம். தவிற சந்திரசேகரிடம் இருந்த நிர்வாகப் பொறுப்புக்களை ஏத்துக்க வனிதாவை சீஃப் ஆபரேடிங்க் ஆஃபீஸரா நியமிக்க முடிவு செஞ்சு இருக்கோம்"

அங்கு இருந்த விஸ்வா மற்றும் வனிதாவின் முகத்தில் கலவரம் தோன்ற ..

காயத்ரி, "சார், ஒரு தாயா, மாமியாரா உங்க முடிவு எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது, ஆனா இந்த கம்பெனியின் ஆலோசகரா இதை நான் எதிர்க்கறேன்"

சண்முகம், "ஏன்?"

காயத்ரி, "அவங்களோட மண வாழ்க்கை நீடிக்குமா அப்படிங்கற நிலையில் இருக்கு. கம்பெனியில் C.E.Oவுக்கும் C.O.Oவுக்கும் நடுவே சுமுகமான பழக்கம் இருக்கணும். அடிக்கடி அவங்க ரெண்டு பேரும் வேவ்வேறு விஷயங்களைப் பத்தி பேசி முடிவு எடுக்க வேண்டி இருக்கும். இவங்களோட உறவில் இருக்கும் விரிசலினால் கம்பெனியின் எதிர்காலம் பாழாயிடும்"

சண்முகம், "இல்லை மேடம். ரெண்டு பேரும் கம்பெனிக்காக உண்மையா உழைச்சவங்க. உழைச்சுட்டு இருப்பவங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பதவி மட்டும் கொடுக்கப் போறது இல்லை. இவங்க ரெண்டு பேரையும் ... இல்லை இவங்க குழந்தைகள் ரெண்டு பேரையும் பங்குதாரரா ஆக்க முடிவு செஞ்சு இருக்கோம். அந்தக் குழந்தைகள் பதினெட்டு வயசு ஆகும் வரை அவங்களுக்கு பதிலா விஸ்வாவும் வனிதாவும் போர்ட் மெம்பர்ஸா இருக்கணும். இந்தக் கம்பெனியின் எதிர்காலத்துக்கும் அவங்க குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் எந்தக் கெடுதலும் வராம செயல் படுவாங்க அப்படின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"

காயத்ரியின் கண்கள் பனித்தன ..

விஸ்வா, "எனக்கு இதில் ஒப்புதல் இல்லை"

சண்முகம், "ஏன்? ஏற்கனவே நீ இந்தக் கம்பெனிக்கு ஒரு C.E.Oவாகத்தான் செயல் பட்டுட்டு இருந்தே. உன்னைப் பொறுத்த வரை இது ஒரு பதவி அவ்வளவுதான். பொறுப்புக்கள் எதுவும் புதுசா கொடுக்கப் போறது இல்லை. So I don't think there is any reason for your objection. unless ... வனிதாவல் அந்தப் பொறுப்பை எடுத்து நடத்த முடியாதுன்னு நினைக்கறையா?"

விஸ்வா, "Not at all .. இந்தக் கம்பெனியின் நிர்வாகத்தைப் பத்தி வனிதாவை விட நல்லா தெரிஞ்சவங்க யாரும் இல்லை"

சண்முகம், "அப்பறம் ஏன் உன்னால் ஒத்துக்க முடியாது?"

விஸ்வா, "அம்மா, ஐ மீன் ஆடிட்டர் மேடம் சொன்ன அதே காரணம்தான்"

சண்முகம், "நாங்க உன் குடும்ப விஷயத்தை ஆஃபீஸில் பேசச் சொல்லலை. அப்படிப் பேசினா ஆஃபீஸ் வேலை கெடும்" என்று சிலாகித்த பிறகு தொடர்ந்து, "ஆஃபீஸ் விஷயங்களைப் பத்தி பேசறதில் என்ன இருக்கு? நீயே சொன்ன மாதிரி இந்தக் கம்பெனியின் நிர்வாகத்தைப் பத்தியும் ஃபைனான்ஸைப் பத்தியும் வனிதாவை விட யாருக்கும் நல்லா தெரிஞ்சு இருக்க முடியாது. மத்த எல்லா விஷயங்களையும் நீதான் பாத்துக்கறே. விஸ்வா, யோசிச்சுப் பார்த்தா நாங்க எடுத்து இருக்கும் முடிவு சரியானதுன்னு உனக்கே விளங்கும்"

விஸ்வா, "அப்பறம் எதுக்கு என் குழந்தைகள் பேரில் ஷேர்ஸ்?"

சண்முகம், "நானும் சுமதியும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் ரொம்ப கடமைப் பட்டு இருக்கோம். கூடவே எங்களை அறியாம ரொம்ப கஷ்டத்தையும் கொடுத்து இருக்கோம். நாங்க பட்ட கடனுக்கு பதிலா, நாங்க கொடுத்த கஷ்டத்துக்கு ஒரு சின்ன பரிகாரமா இந்த பங்குகளை கொடுக்க முடிவு எடுத்தோம்"

விஸ்வா மௌனம் காக்க ..

சண்முகம், "சரி, மத்த கம்பெனி விவகாரங்களைப் பத்தி பேசலாமா?" என்று பேச்சை மாற்ற அந்த போர்ட் மீட்டிங்க் தொடர்ந்தது.

விஸ்வா P.M.Lஇன் C.E.Oஆகவும் வனிதான் அதன் C.O.Oஆகவும் பதவி ஏற்றனர்.

வாரம் ஒரு முறை விஸ்வா நடத்தும் ரிவ்யூ மீட்டிங்கில் சந்திரசேகரின் இடத்தில் வனிதாவும் பங்கேற்கத் தொடங்கினாள் ...

விஸ்வா கெஸ்ட் ஹவுஸிலும் வனிதா அவர்களது வீட்டில் குழந்தைகளுடன் வசிப்பது வழக்கமானது. வாரம் சில நாட்களில் விஸ்வா அவர்களது வீட்டு சென்று குழந்தைகளுடன் விளையாடுவான். வனிதாவிடம் அதிகம் பேசாமல் இருப்பினும் அந்த நாட்களில் குழந்தைகளுடன் இரவு உணவை வீட்டில் அருந்திய பிறகு கெஸ்ட் ஹவுஸுக்கு திரும்புவான்.

அவர்கள் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை குழந்தைகளைச் சுற்றி மட்டுமே இருந்தது. அவ்வப்போது வீட்டுப் பராமறிப்பிலும் ஈடுபடுவான். 


ஒரு நாள் ...

விஸ்வா தன் அலுவலக அறைக் கதவு தட்டப் படுகிறது

விஸ்வா, "எஸ், கம் இன்"

கதவை சற்றே திரந்த சந்திரசேகரின் முன்னாள் காரியதரிசி சந்தியா தலையை நீட்டுகிறாள், "மே ஐ கம் இன் சார்?"

விஸ்வா, "எஸ் வாங்க. என்ன விஷயம்?"

சந்தியா, "உங்க கூட தனியா பேசணும்"

விஸ்வா, "நீங்க ஃபோனில் அப்படி சொன்னதால்தான் நான் உங்களை இப்போ வரச் சொன்னேன். உக்காருங்க. என்ன விஷயம்?"

சந்தியா, "I want to apologise to you. உங்க கிட்டே மன்னிப்புக் கேட்க வந்தேன்"

விஸ்வா, "எதுக்கு?"

சந்தியா, "முன் அனுபவம் இல்லாத என்னை சந்திரசேகர் சார்தான் என் மேல் பரிதாபப் பட்டு வேலைக்கு எடுத்தார். இந்தக் கம்பெனி முன்னேறுவது உங்களால்தான் அப்படின்னு சேர்ந்த கொஞ்ச நாளிலேயே புரிஞ்சுட்டேன். நிர்வாகத்துக்கு அவர் முன்னேற்றத்துக்கு நீங்க அப்படின்னு அவரே எங்கிட்டே சொல்லி இருக்கார். நான் வேலைக்கு சேர்ந்து ஆறு மாசத்துக்குப் பிறகு தான் அவருக்கும் வனிதா மேடத்துக்கும் இருக்கும் தொடர்பு தெரிய வந்தது. முதலில் உங்க மேல் அவ்வளவு மதிப்பும் மரியாதையும் வெச்சு இருப்பவர் எப்படி இப்படி நடந்துக்க முடியும்ன்னு நினைச்சேன். இருந்தாலும் அவங்க ரெண்டு பேரையும் பத்தி உங்ககிட்டே எதுவும் சொல்ல மனசு வரலை."

விஸ்வா, 'பார்க்க இவ்வளவு அழகா இருக்கா ஒரு வேளை இவளையும் அந்த ஆள் வளைச்சுப் போட்டு இருப்பாரோ' என்று எண்ணி பிறகு, "ஏன் சொல்ல மனசு வரலை? உன் வேலை போயிடும்ன்னா இல்லை உனக்கும் அவருக்கும் இருந்த உறவு முறிஞ்சுடும்ன்னா?"

அவன் ஒருமைக்குத் தாவியதைப் பொருட்படுத்தாமல் கண் கலங்கிய சந்தியா, "உங்களுக்கு நேர்ந்த அனுபவம் உங்களை அப்படி யோசிக்க வைக்குது. நீங்க நினைக்கற மாதிரி எந்த உறவும் எனக்கும் சந்திரசேகர் சாருக்கும் எப்பவும் இருந்தது இல்லை"

தன் தவறை உணர்ந்த விஸ்வா, "சாரி! என் மனசில் இருக்கும் கோபம் என்னை அப்படிப் பேச வெச்சுது. அதுக்காக நான் உன் கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கறேன். இதைச் சொல்லத் தான் தனியா பேசணும்ன்னு கேட்டியா?" என சகஜமாக ஒருமையில் தொடர்ந்தான்.

சந்தியா, "இல்லை. வனிதா மேடம் என்னை உங்களுக்கு P.Aவா நியமிச்சு இருக்காங்க. விஷயம் தெரிஞ்சும் உங்க கிட்டே மறைச்சு இருக்கேன். நான் உங்களுக்கு P.Aவா இருக்க உங்களுக்கு சம்மதமான்னு தெரிஞ்சுக்கலாம்ன்னுதான் கேட்டேன்"
சற்று நேர யோசனைக்குப் பிறகு

விஸ்வா, "எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. உனக்கு விஷயம் தெரியும்ன்னு வனிதாவுக்குத் தெரியுமா?"

சந்தியா, "தெரியாதுன்னு நினைக்கறேன். சந்திரசேகர் சாருக்கும் தெரியாது"

விஸ்வா, "உனக்கு எப்படித் தெரிய வந்தது?"

சந்தியா, "எங்கிட்டே இருந்து சந்திரசேகர் சார் கெஸ்ட் ஹவுஸ் சாவியை வாங்கிட்ட பிறகு சந்திரசேகர் சாரும் வனிதா மேடமும் காரில் ஒண்ணா போயிட்டு ரெண்டு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பி வர்றதைப் கவனிச்சு இருக்கேன்"

விஸ்வா, "வேறு யாருக்காவுது இந்த விஷயம் தெரியுமா?"

சந்தியா, "I don't think so. என்னதான் அவங்க ரெண்டு பேரும் அப்படி நடந்துகிட்டாலும் அவங்க ரெண்டு பேர் மேலயும் கம்பனியில் இருக்கறவங்களுக்கு எல்லாம் ரொம்ப மரியாதை. அப்படி நடந்துக்கக் கூடும்ன்னு யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டாங்க"

விஸ்வா, "உனக்கு இந்த விஷயம் தெரியுங்கறதை வனிதாகிட்டே சொல்லாதே"

சந்தியா, "உங்ககிட்டே நான் ஒரு பர்சனல் விஷயம் கேட்கலாமா?"

விஸ்வா, "என்ன?"

சந்தியா, "வனிதா மேடத்துக்காக இல்லைன்னாலும் உங்க ரெண்டு குழந்தைகளுக்காகவாவுது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்."

விஸ்வா, "சேர்ந்து ஃப்ரெண்ட்ஸா குழந்தைகளுக்கு பேரண்ட்ஸா வாழ முடியும் ஆனா கணவன் மனைவியா வாழ முடியுமான்னு தெரியலை"

சந்தியா, "ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?"

விஸ்வா, "சாரி. அது ரொம்ப பர்சனலான விஷயம்"

சந்தியா, "அப்படின்னா சீக்கிரம் வனிதா மேடத்துக்கு விவாகரத்து கொடுத்து அவங்களுக்கு வேற ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுங்க"

விஸ்வா, "என் குழந்தைகளை வேற ஒருத்தனுக்கு விட்டுக் கொடுக்கச் சொல்லறியா?"

சந்தியா, "எத்தனை வருஷம் ஆனாலும் அவங்க உங்க குழந்தைகள்தான். அவங்க எதிர்காலத்தில் உங்களுக்கு அக்கறை இருந்தா அதைச் செய்யுங்க. ஆண் துணை இல்லாமல் குழந்தையை வளர்க்கறதைப் பத்தியும் அப்பா இல்லாமல் போனாலும் அந்த ஸ்தானத்தில் ஒருத்தர் இல்லாமல் வளரும் குழந்தையைப் பத்தியும் எனக்கு நல்லா தெரியும்"

விஸ்வா, "ஏன்?"

சந்தியா, "என் குழந்தைக்கு ஏழு மாசம் ஆன போது என் வீட்டுக்காரர் ஆக்ஸிடெண்டில் இறந்துட்டார்"

விஸ்வா, "ஓ! ஐ அம் சோ சாரி"

சந்தியா, "இப்போ ஒன்றரை வருஷம் ஆச்சு"

விஸ்வா, "நீ வேற கல்யாணம் ஏன் இன்னும் செஞ்சுக்கலை? இன்னும் உன் கணவரை நினைச்சுட்டு இருக்கியா?"

சந்தியா இல்லையென தலையசைத்த படி, "சாரி, ரொம்ப பர்சனலான விஷயம்" என்றபடி அவசரமான எழுந்து அந்த அறையை விட்டுச் சென்றாள்.
அவள் மேல் தனக்கு ஒரு ஈர்ப்பு வருவதை விஸ்வா உணர்ந்தான்.

ஒரு வாராந்திர மீட்டிங்கில் ...

விஸ்வா, "ஓ.கே எவ்ரிபடி, டிஸ்கஸ் பண்ண வேற எதாவுது விஷயம் இருக்கா?"

வனிதா, "எஸ், outstanding receivables, sales policy and purchase policy இதில் எல்லாம் சில மாற்றங்கள் கொண்டு வரணும்"

விஸ்வா, "எல்லா பாலிஸிஸும் ஒழுங்கத்தானே இருக்கே. எதுக்கு மாத்தணும்"

வனிதா, "சொல்லறேன். கஸ்டமர்களுக்கு க்ரெடிட் கொடுப்பது. வசூல் செய்வது. இந்த பொருப்புகளை சேல்ஸ் டிபார்ட்மென்ட் மட்டும் கவனிச்சுட்டு இருக்காங்க. நிறைய தரம் கஸ்டமர் கிட்டே இருந்து வர வேண்டிய பாக்கி இருந்தாலும் மேலும் ஆர்டர்ஸ் அக்ஸெப்ட் பண்ணிட்டு ஷிப்மெண்டும் போகுது. நமக்கு தேவையான அளவுக்கும் அதிகமா வர வேண்டிய பாக்கி இருந்தாலும் மாசக் கடைசியில் செலவுகளுக்கு பேங்கில் கடன் வாங்கறோம். I want to put some control"

விஸ்வாவுக்கு கீழ் பணியாற்றும் சேல்ஸ் மேனேஜர் சற்றே நெளிந்தபடி, "புதுசா வந்து இருக்கும் கஸ்டமர்ஸ் கைவிட்டுப் போயிடக் கூடாதுன்னு சில சமயம் அந்த மாதிரி நடக்கும்"

வனிதா, "நாலு வருஷத்துக்கு முன்னாடி அவங்க எல்லாம் புதுசா ஆர்டர் கொடுத்தாங்க. நாலு வருஷமா தொடர்ந்து நம்ம கிட்டே இருந்து மட்டும் தான் அவங்க வாங்கறாங்க. நாம் சப்ளை செய்யும் சில ப்ராடெக்ட்ஸ் நாம் கொடுக்கும் தரத்தோடு வேறு யாரிடமும் நாம் கொடுக்கும் விலையில் அவங்களுக்கு கிடைக்காது. இருந்தாலும் அவங்களுக்கு நாம் முப்பது நாள் க்ரெடிட் கொடுக்கறோம். நாம் சப்ளை செய்வது முக்கால் பாகத்துக்கும் மேல் கேபிடல் கூட்ஸ். யாரும் கேபிடல் கூட்ஸுக்கு அந்த அளவுக்கு க்ரெடிட் கொடுக்கறது இல்லை"

சேல்ஸ் மேனேஜர், "எப்பவாவுது ஒரு முறை வாங்கும் கம்பெனிகள் கிட்டே கறாரா பேசி அட்வான்ஸ் கொடுத்தாத்தான் சப்ளை பண்ணுவோம்ன்னு சொல்லலாம். ஆனா வாடிக்கையா வாங்கிட்டு இருப்பவங்க கிட்டே க்ரெடிட் கொடுத்தே ஆகணும்"

விஸ்வா, "யாருக்கெல்லாம் அந்த மாதிரி க்ரெடிட் கொடுக்கறோம்?"

சேல்ஸ் மேனேஜர், "இப்போ புதுசா வந்து இருக்கும் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனிகள் நாடு முழுக்க நிறைய ப்ராஞ்ச் திறந்துட்டே இருக்காங்க. மாசம் ஒண்ணு ரெண்டு ஆர்டர் கொடுக்கறாங்க"

விஸ்வா, "யூ மீன் புது ஃபேக்டரியில் செய்யும் மாஸ் வேயிங்க் ஸ்கேல்ஸா?"

சேல்ஸ் மேனேஜர், "எஸ்"

வனிதா, "அந்த ப்ராடக்ஸுக்குத் தேவையான உபரிப் பொருட்களை வாங்கும் போது அந்த ஜாப்பனீஸ் கம்பெனி நமக்கு எந்த க்ரெடிட்டும் கொடுப்பது இல்லை. முழுக்க முழுக்க நம் கைப் பணத்தைப் போட்டு தயாரிச்சு அதை க்ரெடிட்டில் விக்கறோம்"

விஸ்வா, "மாசக் கடைசியில் பேங்குக்குப் போகக் கூடாது. I agree. இருந்தாலும் க்ரெடிட் கொடுக்கலைன்னா எவ்வளவு மிச்சம் படுத்த முடியும்?"

வனிதா, "திட்டமிடாத உபரிச் செலவுகளைக் குறைக்கணும்ன்னு தினக் கூலி ஆட்களை எடுக்கக் கூடாதுன்னு முடிவு எடுத்து இருந்தோம். இருந்தாலும் சில நாட்களில் ஷிப்மெண்ட்ஸ் ஜாஸ்தியா இருக்கும் போது ஆள் பலம் இல்லாம கஷ்டப் படறதா ஃபேக்டரி மேனேஜர் எத்தனையோ தரம் முறையிட்டு இருக்கார்"

விஸ்வா, "அதுக்கும் க்ரெடிட் கொடுக்காம இருக்கறதுக்கும் என்ன சம்மந்தம்?"

வனிதா, "நாம் பேங்குக்குக் கட்டும் வட்டிப் பணத்தில் தேவையான ஆட்களை தேவையான சமயங்களில் தினக் கூலிக்கு எடுத்துக்கலாம். இல்லைன்னா, அப்படி தினக் கூலியில் எடுப்பதற்கு பதிலா முழு நேர வேலைக்கே இன்னும் பத்து பேரை எடுக்கலாம்"

அங்கு இருந்த ப்ரொடக்ஷன் மேனேஜரின் முகம் மலர்ந்தது ...

வனிதா யோசிக்கும் கோணத்தையும் அதை அவள் விளக்கிய விதத்திலும் வியந்து ஒரு நிமிடம் பேச்சற்று தன் வாழ்க்கைத் துணையின் அறிவுக் கூர்மையில் லயித்தான் ...

அவன் கண்களை கூர்ந்து நோக்கிய வனிதா, "சோ?"

விஸ்வா சுதாரிக்க சில கணங்கள் ஆகின ..

விஸ்வா, "சரி, பர்சேஸ் பாலிஸியைப் பத்தி என்ன பேசணும்?"

வனிதா, "புது ஃபேக்டரியில் உற்பத்தி செய்யும் மாஸ் வேயிங்க் ஸ்கேல்ஸுக்குத் தேவையான உபரிப் பொருட்கள் வாங்கறதைப் பத்தி"

விஸ்வா, "கஸ்டமர்கள் கிட்டே நாம் க்ரெடிட் கொடுக்க முடியாதுன்னு சொல்லலாம். ஆனா நம் ஜாப்பனீஸ் பார்ட்னர்ஸ் கிட்டே க்ரெடிட் கொடுன்னு கேட்க முடியாது. அட்வான்ஸ் கொடுத்து பொருட்களை வாங்கறதா ஒப்புதல் கொடுத்து இருக்கோம்"

வனிதா, "தெரியும். நாம் அவங்க கிட்டே க்ரெடிட்டில் வாங்க முடியாது. ஆனா ஏன் தேவைக்கும் அதிகமா உபரிப் பொருட்களை வாங்கி ஸ்டாக்கில் வைக்கறோம்? நாம் போட்ட அதே ஒப்பந்தத்தில் ஏர் ஃப்ரைட் மூலம் அனுப்பும் உபரிப் பொருட்களை பதினைந்து நாட்களிலும் கப்பல் மூலம் அனுப்பும் பொருட்களை ஒரு மாதத்திலும் நமக்கு டோர் டெலிவரி கொடுக்க அவங்க ஒத்துட்டு இருக்காங்க. இருந்தாலும் எதுக்கு நம்மிடம் எப்பவும் மூணு மாத உற்பத்திக்குத் தேவையான உபரிப் பொருட்கள் எப்பவும் ஸ்டாக்கில் வைக்கணும்?"

பர்சேஸ் மேனேஜர், "சண்முகம் சார் கவனிச்சுட்டு இருந்த காலத்தில் இருந்து எப்பவும் மூணு மாச ப்ரொடக்ஷனுக்குத் தேவையான ரா மெடிரியல்ஸ் வெச்சு இருப்பது வழக்கம்"

வனிதா, "லோகல் ரா மெடிரியல்ஸ் சப்ளையர்க்ளிடம் நமக்கு அந்த மாதிரி ஒப்பந்தம் இல்லை. சில சமயங்கள் ரா மெடிரியல்ஸ் இல்லாததால் உற்பத்தி தடை பட்டுப் போகுதுன்னு அப்படி முடிவு எடுத்தாங்க. ஆனா அதே வழக்கத்தை இந்த ஜாயிண்ட் வெஞ்சரிலும் நாம் கடை பிடிக்கத் தேவை இல்லை"



விஸ்வா, "இதில் எவ்வளவு பணம் மிச்சப் படுத்தலாம்?"

வனிதா, "ஒரு வருஷத்தில் முடிக்கலாம் அப்படின்னு நினைச்ச ஃபேக்டரி விரிவாக்கத்தை ஆறு மாதத்தில் முடிக்கும் அளவுக்கு பணம் மிச்சமாகும். We can push our bottom line up by at least 3%"

விஸ்வா, "வாவ். Let's do it then"

பர்சேஸ் மேனேஜர், "எப்படி நம் பர்சேஸ் பாலிஸியை மாத்தணும்?"

சேல்ஸ் மேனேஜர், "எப்படி நம் சேல்ஸ் க்ரெடிட் பாலிஸையை மாத்தணும்?"

வனிதா, "க்ரெடிட் பாலிஸி, மேனுஃபாக்சரிங்க், ரா மெடீரியல் ப்ரொக்யூர்மெண்ட் இதில் எல்லாம் என்னென்ன மாற்றங்கள் செய்யணும்ன்னு ஒரு ப்ரெஸெண்டேஷன் ப்ரிபேர் பண்ணி இருக்கேன். நீங்க பாருங்க. அடுத்த ரிவ்யூ மீட்டிங்கில் டிஸ்கஸ் பண்ணலாம்"

விஸ்வா, "எதுக்கு அடுத்த மீட்டிங்க் வரை தள்ளிப் போடணும்? அதையும் டிஸ்கஸ் பண்ணி க்ளோஸ் பண்ணிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகாது"

வனிதா, "நோ, வீட்டில் என் குழந்தைகள் எனக்காக காத்துட்டு இருப்பாங்க. தவிற, இன்னைக்கே முடிவு எடுத்தாலும் அந்த முடுவுகளை செயல் படுத்த ஒண்ணு ரெண்டு மாசம் ஆகும். So, I see no point in rushing our decision" என்ற படி எழுந்து நின்றாள்.

விஸ்வா கடந்த நான்கு வருடங்களில் பல முறை உடனடித் தேவை இல்லாதவற்றில் பல மணி நேரங்கள் தன் அலுவலகத்தில் கழித்து தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் செலவு செய்ய வேண்டிய நேரத்தை வீணாக்கியதை எண்ணி வெட்கினான். 




No comments:

Post a Comment