Friday, November 27, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 10

“ நான் அவள் பெண்மைக்குள் விழுந்து..

“ உடைந்து.. உணர்ந்து..

“ பிதுங்கி... வழிந்து...

“ பதுங்கி... பாய்ந்து...

“ நிறைந்து..... உறைந்து..

“ உருகி... தழும்பி....

“ பிறகு நான் எழுந்தபோது..

“ என்னுடன் சூரியனும் எழுந்தான்
காலை ஏழு மணியாகியும் வெளியே வராது சத்யனிடம் விவசாயம் சம்மந்தமாக ஒரு யோசனை கேட்கவேண்டும் என்ற குழப்பத்துடன் வராண்டாவில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த ராமைய்யாவை அழைத்து பஞ்சவர்ணம் “ சின்னஞ்சிறுசுக தூங்கட்டும் ராமைய்யா” என்று அந்த யோசனையை அவர் கூறி அனுப்பினார்..

ஏழரைக்கு சத்யனின் மொபைல் அழைத்தப் பிறகுதான் சத்யனுக்கு விழிப்பு வந்தது... தன்மீது பாரமின்றி கிடந்த மனைவியை அணைத்தபடியே மொபைலை ஆன் செய்து... “ யாரு?” என்றான் களைத்துப் போன குரலுடன்...

“ என்னா மாப்ள நம்பரைக்கூட பார்க்கலையா” என்ற தர்மனின் குரல் கேட்டு திகைத்து... “ இல்ல மாமா தூக்க கலக்கத்துல கவனிக்கலை” என்றான் மன்னிப்பு கோரும் குரலில்.. ஆனால் நேற்று மதியம் போல இன்று மான்சியை உதறிவிட்டு எழவில்லை சத்யன்.. அவளை இறுக்கியணைத்தபடியே உரையாடினான்...

“ தூக்க கலக்கமா? மணி எட்டாகப் போகுது மாப்ள” என்ற தர்மனின் குரலில் இருந்த கேலி அந்த கம்பீரமான ஆண்மகனை வெட்கப்பட வைத்தது... அவன் நெஞ்சில் இருந்தபடி அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த மான்சி... தன் கணவனின் வெட்கம் கலந்த அசட்டுச் சிரிப்பை ரசித்து அதற்கு பரிசாக அவன் கன்னத்தில் சத்தமின்றி முத்தமிட...



மனைவியின் முத்தத்தை ரசித்தாலும் “ ஏய் போன்ல உன் அப்பா.. சும்மாயிருக்க மாட்டியாடி ” என்ற சத்யனின் ரகசியமான காதல் அதட்டல் எதிர்முனையில் இருந்த தர்மனுக்கும் கேட்டுவிட்டது போல...

“ மாப்ள நான் பொறவு போன் பண்றேன் ” என்று சங்கடமாக சொல்லிவிட்டு வைத்துவிட்டார்

“ என்ன சொல்ல போன் பண்ணாருன்னு தெரியலையே?,, இப்ப எதுவுமே சொல்லாம போனை வச்சிட்டார்... எல்லாம் உன்னால தான்டி? உன்னை......” என்ற சத்யன் மொபைலை வைத்துவிட்டு முத்தமிட்ட அவள் உதடுகளை விரலால் பிதுக்கி குவிந்த கீழுதட்டை கவ்வி சப்பினான்....

சப்பிய உதடுகளை மனமேயில்லாமல் விட்டுவிட்டு எழுந்த சத்யன் “ ஓய் எந்திருச்சு குளிடி... அடக்கம் ஒடுக்கம் இல்லாம ஏழரை மணிவரைக்கும் எப்படி படுத்துருக்காப் பாரு” என்று கேலி செய்ய...

போர்வையை எடுத்து தன் உடலை மூடியபடி “ அய்யோ ஐயா மட்டும் என்னமோ முழுசா உடுத்திக்கிட்டு இருக்குற மாதிரி பேச்சைப் பாரு” என்றாள் மான்சி பதிலுக்கு..

மறுபடியும் அவளை நெருங்கத் தூண்டிய ஆண்மையை கையால் வருடியபடி “ ஏய் சீக்கிரமா குளிச்சிட்டு ரெடியாகு கோயிலுக்குப் போகலாம்” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்..

அதன்பின் இருவரும் குளித்துவிட்டு டிபன் சாப்பிட்டு கோயிலுக்கு ரெடியான போது.. மான்சி மறுபடியும் பாவாடை ரவிக்கையோடு நின்றாள்... சத்யன் சிரித்தபடி அவள் கையிலிருந்த பச்சைநிறப் பட்டுப்புடவையை வாங்கி “ ம் வா கட்டி விடுறேன்” என்று புடவையை பிரித்தான்... 

முந்தானையை மார்பில் போட்டு... கொசுவத்தை தனக்கு தெரிந்தார்ப்போல் கொசுவி அவள் பாவாடைக்குள் சொருகியவனின் கை அங்கே எதையோ தேடி வருடி தாமதிக்க... “ ஸ்ஸ்ஸ் கையை எடு மாமா.... கோயிலுக்கு போறோம் ஞாபகம் இருக்கா?” என்று மான்சி எச்சரிக்கை செய்ய...

“ ம்ம்” என்றபடி மெதுவாக கையை உருவியெடுத்து விரலின் நுனியை மூக்கின் அருகே கொண்டு சென்று “ ம்ஹா” என்று ஆழமாய் மூச்சை இழுத்தான் சத்யன் ..

அவன் தலையில் நறுக்கென்று குட்டிய மான்சி “ அடச்சீ கருமம்,, மொதல்ல போய் கையை கழுவிட்டு வா?” என்றாள்...

தனது புத்தம்புதிய மனைவியின் வெட்கத்தை ரசித்து “ ஓய் என்னாடி அடிக்கிற? நைட்டு நீ என்னா என்னா ஆட்டம் போட்ட?.. இப்ப என்னமோ நல்ல பொண்ணு மாதிரி நடிக்கிற எல்லாத்தையும் எடுத்து சொல்லவா? ” என்று சத்யன் போலியாக அவளை மிரட்ட...

“ அய்யோ வாயை மூடு மாமா?” என்று முகம் சிவக்க திரும்பிக்கொண்டாள்...

சத்யனுக்கு மான்சியின் இந்த வெட்கம் புதுமை.... இத்தனை நாட்களாக இல்லாத வெட்கம் இப்போது வந்து அவர்களின் காதலை அதிகப்படுத்தியது...
மனைவியின் அழகைப் பார்த்து ரசிக்கும் ஜோரில் தன் மாமனுக்கு போன் செய்யவேண்டும் என்பதை மறந்துபோனான் சத்யன்... அவர் என்ன சொல்ல வந்தார் என்பது சத்யனால் கேட்கப்படாமலேயே போனது

வேலைக்கு வந்த செல்வியின் உதவியோடு புடவையை சரி செய்துகொண்டு சத்யனுடன் கோயிலுக்கு கிளம்பினாள் மான்சி... சத்யன் தனது கார் சாவியை எடுக்க “ ம்ஹூம் பைக்ல போகலாம் மாமா” என்றாள் மான்சி..

அவள் எதற்காக சொல்கிறாள் என்று முகத்தில் கண்டுகொண்ட சத்யன் “ ம் சரி வா” என்று தனது பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்ய.. மான்சி அவன் பின்னால் ஒரு பக்கமாக கால்போட்டு அமர்ந்து அவன் இடுப்பில் கைப்போட்டு வளைத்து கொண்டாள்

மகன் பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக வண்டி ஓட்ட... பேத்தி பச்சைப்பட்டில் தங்கத்தாரகையாக அவன் பின்னால் அமர்ந்து போவதை கண்களில் நீருடன் பார்த்து ரசித்த பஞ்சவர்ணம் பக்கத்தில் நின்ற செல்வியிடம் “ ஏ புள்ள செல்வி அவுக ரெண்டு பேரும் வந்ததும் சுத்திப் போட எல்லாம் தயாரா எடுத்து வை புள்ள” என்று உத்தரவிட... ஏற்கனவே அதே யோசனையில் இருந்த செல்வி “ நானும் அதைத்தான் நெனைச்சேன் அப்பத்தா.. இதோ எடுத்து வைக்கறேன்” என்று கூறிவிட்டு சிட்டாகப்பறந்தாள் ..

கோவிலுக்குப் போன சத்யன் மான்சி இருவரையும் ஏதோ திருவிழாவில் ஊர்வலம் வரும் தெய்வங்களைப் பார்ப்பது போல் பார்த்தார்கள் ஊர் மக்கள்... விழுந்து எழுந்து கன்னத்தில் போட்டுக்கொள்ளாதது ஒன்றுதான் பாக்கி.... அன்பு மேலிட்ட சிலர் பைக்கை நிறுத்தி இருவர் நெற்றியையும் கையால் வழித்து திருஷ்டி எடுத்துவிட்டு பிறகு அனுப்பினார்கள்...

கோயில் இருந்த கூட்டம் இவர்களுக்கு வழிவிட்டு நின்றது.... கர்ப்பகிரகத்தில் இருக்கும் அம்மனுக்குப் போட்டியாக வந்து நின்ற மான்சி கண்டு எல்லோரும் வாய்ப்பிளக்க .. சிறிதுநேரம் உள்ளிருந்த அம்மன் யாராலும் கவனிக்கப்படாமல் போனது... சத்யன் கர்வமாக மான்சியை நெருங்கி நின்றுகொண்டான்

சாமி கும்பிட்டு முடித்து வெளியே வந்த இருவரும் குளக்கரையில் சிறிதுநேரம் அமர்ந்து எந்த வார்த்தையும் இன்றி ஒருவரையொருவர் காதலாய்ப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வீட்டுக்கு கிளம்பினார்கள்...

வரும் வழியில் ராமையாவின் வீட்டு வாசலில் திண்ணையில் அமர்ந்து தென்னமட்டையில் அருவாளால் விளக்குமாறு கிழித்துக்கொண்டிருந்த அவர் மனைவி இவர்களை ஆர்வமாகப் பார்க்க... பைக்கை நிறுத்தி பின்னால் திரும்பி மனைவியைப் பார்த்த சத்யன் “ மான்சி இது ராமைய்யா அண்ணன் வீடு... அவர் சம்சாரம் வெளிய நிக்கிறாங்க... வா அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரலாம்” என்று அழைத்தான்..

‘கோயிலுக்குப் போனா.. நேரா வீட்டுக்குதான் வரனும்’ என்று அம்மாச்சி சொல்லி அனுப்பியது ஞாபகம் வந்தாலும்.. சத்யனின் அழைப்பை மறுக்கமுடியாமல் “ ம் போலாம் வா” என்று பைக்கிலிருந்து இறங்கினாள்..

இருவரும் ஜோடியாக தன் வீட்டுக்குத்தான் வருகிறார்கள் என்றதும் பதட்டத்தில் தடுமாறி போட்டது போட்டபடி விட்டுவிட்டு “ சின்னய்யா சின்னம்மா வாங்க வாங்க” என்று உள்ளே அழைத்துப் போனாள் செல்வியின் அம்மா...

அன்று காலையில் கோபத்தோடு சாப்பிடாமல் ஆலைக்குப் போன வீரேனுக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை.... ஆத்திரத்தோடு தரையை உதைத்துக் கொண்டு இரைதேடும் புலியாக நடைப்போட்டான்... கோபத்தில் கண்களில் செவ்வரி கோடுகள் விழுந்து அவன் முகத்தையே கொடூரமாக காட்டியது.....

நேற்று ஒரு வேளையாக மதுரை போனவனுக்கு அவனுடன் கல்லூரி படித்த நண்பன் ஒருவன் சொன்ன செய்தி பயங்கர குழப்பத்தை ஏற்ப்படுத்தியிருந்தது “ டேய் மச்சி உன் மாமா வந்து உன் தங்கச்சியை படிக்கிறதுக்காக வெளிநாடு அனுப்ப எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாருடா... என் தம்பி வெளிநாடுல படிக்கிறது விஷயமா நான் ஆபிஸ் போயிருந்தப்ப உன் மாமா வந்திருந்தாருடா... அடுத்த வருஷம் அனுப்புற மாதிரி ரெடி பண்ணச் சொன்னாரு.” என அன்று சத்யன் பேசிக்கொண்டிருந்தை விளக்கமாக சொன்னான்...

அவனை ஒரு வாறு பேசி சமாளித்து அனுப்பிவிட்டு.. அப்போ என் தங்கச்சி குழந்தை பெத்து தந்ததும் அதை வாங்கிகிட்டு அவளை வெளிநாட்டுக்கு அனுப்ப ப்ளான் பண்ணிருக்கான்... இவனைப் போய் நல்லவன்னு நம்பி மான்சியை கல்யாணம் செய்து கொடுத்த அபபா அம்மா மீது பழியாகக் கோபம் வந்தது
அன்று மனதில் ஏகப்பட்ட குழப்பத்தோடு அம்ருதா படிக்கும் கல்லூரி வாசலிலேயே காத்திருந்தான்...

அம்ருதா,, மான்சியை பெண்கேட்ட மதுரை மில் முதலாளியின் தங்கை... தன் அப்பாவுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைக்காக அவர்கள் வீட்டுக்குப் போனபோது தன் அழகால் வீரேனின் மனதை கொள்ளை கொண்டவள்... பார்த்தவுடனெயே அவன் மனதை பறித்துக்கொண்டவள்... மான்சியை அந்த வீட்டில் கொடுத்துவிட்டு அம்ருதாவை வீரேனுக்கு மணமுடிக்க பேச்சு ஆரம்பித்ததும் வீரேன் அவளை காதலிக்கவே ஆரம்பித்துவிட்டான்... அடிக்கடி மதுரை சென்று அவள் கல்லூரி வாசலில் காத்திருந்து தன் காதலை வளர்த்தான்... அம்ருதாவும் வீட்டில் பேசி முடித்தவன் என்ற உரிமையில் அவனுடன் பழக ஆரம்பித்தாள்..

இன்நிலையில் சத்யன் மான்சியை பலாத்காரம் செய்து ஜெயிலுக்குப் போய் வந்து இறுதியில் வேறுவழியின்றி சத்யன் மான்சி இருவரின் திருமணமும் நடந்தேறியதில் வீரேனின் காதல்தான் பொசுங்கிப் போனது.. அம்ருதா அவனைப் பார்ப்பதை தவிர்தாள்... காரில் கல்லூரி வாசலில் இறங்கி.. அதே காரில் ஏறிச்சென்றாள்..

அம்ருதாவின் பாராமுகம் வீரேனை வேதனைக்குள்ளாக்கியது... வாரம் இருமுறை வந்து கல்லூரி வாசலில் காத்திருந்தவனிடம் நேற்றுதான் முகம் கொடுத்து பேசினாள் அம்ருதா... ஆனால் அதற்கு அவள் பேசாமலேயே இருந்திருக்கலாமோ என்று எண்ணி எண்ணி வேதனைப்படும் படியாக பேசினாள் அம்ருதா

“ இதோப் பாருங்க வீரேன் இனிமே என்னைப் பார்க்க வராதீங்க... எங்க வீட்டுல எனக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்க... அதனால நான் உங்களைப் பார்க்கிறது இதுவே கடைசி முறையா இருக்கும்”

“ அப்போ இத்தனை நாளா உனக்காவே காத்திருக்கேனே... என்னோட கதி?” குமுறினான் வீரேன்...

அவனை கோபமாக பார்த்த அம்ருதா “ உங்க தங்கச்சிக்கும் என் அண்ணனுக்கும் கல்யாணம் பண்றதுன்னு பேசினப்ப.. கூடவே உங்களுக்கும் எனக்கும் சம்மந்தம் பேசினாங்க... இப்போ அந்த கல்யாணம் நின்னு போச்சு.. அப்போ நமக்கு மட்டும் பண்ணி வைப்பாங்கன்னு எப்படி எதிர்பார்க்கிறீங்க.. அதுவுமில்லாம என் அண்ணனுக்கு கிடைக்காத வாழ்க்கை எனக்கும் வேனாம்... தயவுசெய்து உங்க ஊர்லயே ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க.. இனிமே என்னைப் பார்க்க வராதீங்க” என்று உறுதியாக சொல்லிவிட்டு அவள் காரில் ஏறி போய்விட... 

வீரேன் ஸ்தம்பித்து போய் வெகுநேரம் அங்கேயே நின்றிருந்தான்,, அவன் காதல் மொட்டிலேயே கருக காரணமாயிருந்த சத்யன் மீது பயங்கர வன்மத்தோடு வீட்டுக்கு வந்தவனுக்கு எரிகின்ற தீயில் எண்ணை வார்ப்பது போல தர்மன் செல்வியை இவனுக்கு மணமுடிப்பது பற்றி பேசியதும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது..

முடியாது என்று ஆத்திரத்தில் கத்தியவனை அடக்குவது போல் “ முடியாதுன்னு வெளிய போடா.. சொத்துல நயாபைசா தரமாட்டேன்.. செல்வியை கட்டுறதுன்னா வீட்டுல இரு இல்லேன்னா வெளியப் போ.. உன் மாமன் கிட்ட சொல்லி ராமைய்யாவைப் பார்த்து பேச சொல்லிட்டேன்.. எங்க முடிவுல எந்த மாற்றமும் இல்லை” என்று தீர்மானமாக தர்மன் சொல்லிவிட்டு போக...

சத்யன் தன் மாமன் என்பதை மறந்து கொலைவெறி உண்டானது வீரேனுக்கு ... அதோடு ஆலைக்கு வந்தவன் காதில் விழுந்த “ சத்யன் மான்சி இருவருக்கும் ஒத்து போகவில்லை.. சத்யன் எந்த நேரமும் வயலின் தான் இருக்கிறான்.. இரவில் வெளியேப் படுகிறான்.. மான்சியுடன் சுமுகமான உறவில்லை “ என்ற செய்திகள் இன்னும் வெறியை தூண்டியது.. பற்றாக்குறைக்கு மான்சியை வெளிநாட்டுக்கு அனுப்பும் சத்யனின் திட்டம் அவன் பழி வெறிக்கு உரம் போட்டது

என் வாழ்க்கையையும் கெடுத்து... என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுத்தவனை தீர்த்துக்கட்டாம விடக்கூடாது என்ற வெறியோடு ஆலையில் இருந்து சத்யன் வீட்டுக்கு கிளம்பினான் வீரேன்... எல்லாம் ஒன்றாய் சேர்ந்து அவனை மிருகமாக்கியிருந்தது

வரும் வழியில் ராமைய்யாவின் வீட்டு வாசலில் சத்யனின் பைக்கைப் பார்த்ததும் “ ஓ சம்மந்தம் பேச வந்துருக்கான் போலருக்கு.. இங்கருந்து நீ முழுசா வீடு போகக்கூடாதுடா மாமா ” என்ற வன்மத்தோடு தனது பைக்கை நிறுத்தி இறங்கியவன்

ராமைய்யாவின் வீட்டு வாசலில் நின்று “ டேய் எவன்டா வீட்டுக்குள்ள?.... வெளிய வாடா?” என்று உரக்க கூச்சலிட்டான் வீரேன்...

அப்போதுதான் மான்சிக்கு குங்குமம் கொடுப்பதற்காக பூஜையறைக்கு அழைத்து சென்றாள் செல்வியின் அம்மா... வீரேனின் குரலி கேட்டு வெளியே வந்த சத்யன் அவனை கோப முகத்தோடு பார்த்துவிட்டு.. ஏதோ பிரச்சனை பண்ணத்தான் வந்திருக்கான் என்று எண்ணி கொஞ்சம் சமாதானம் செய்யும் குரலில் “ என்ன வீரா இந்த பக்கம்” என்று கேட்க ...

“ ஏன்டா நீ என்ன பெரிய இவனா? என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுத்து.. இப்போ என் வாழ்க்கையையும் நாசம் பண்ணிட்டயே? உன்னை அன்னிக்கே காலி பண்ணிருக்கனும்.. மாமனாச்சேன்னு விட்டேன் பாரு அதான் தப்பு.. இப்போ என் தலையில உன் வீட்டு வேலைக்காரியை கட்டி வச்சு என் வாழ்க்கையையும் நாசம் பண்ண பார்க்கிறயா? இதுக்கு மேல உன்னை விட்டு வச்சா நான் ஆம்பளையே இல்லடா?” என்று சத்யன் மீது பாய...

சத்யன் அவனது ஆத்திரம் புரிந்து சட்டென்று அவனை பிடித்து தள்ளிவிட்டு ஒதுங்கினான்.. சத்யன் மீது பாய வந்த வீரேன் செல்வியின் அம்மா அமர்ந்திருந்த திண்ணையில் விழுந்தான்..

விழுந்து நிமிர்ந்தவன் கையில் செல்வியின் அம்மா விளக்குமாறு கிழிக்க பயன்படுத்திய அருவாள் முளைத்திருந்தது... “ உன்னை கொல்லாம விடமாட்டேன்டா” என்று மீண்டும் சத்யன் மீது பாய்ந்தான்...

செல்வியின் அம்மா கொடுத்த குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைத்துக்கொண்டு... இன்னொரு துளி குங்குமத்தை தனது தாலியில் வைத்துக்கொண்டிருந்த மான்சியின் காதில் “ உன்னை கொல்லாம விடமாட்டேன்டா” என்ற வீரேனின் உரத்த குரல் விழுந்தது ... அடுத்த நிமிடம் “ அய்யோ என் மாமா” என்று அலறியபடி வெளியே ஓடி வந்தாள் மான்சி..


வீரேன் ஓங்கிய அருவாளுடன் நெருங்க... சத்யன் தப்பிக்கும் வழியை யோசித்தபடி பின்னால் நகர... “ மாமா....” ஒருக்களித்திருந்த கதவைத்திறந்து கொண்டு ஓடிவந்த மான்சி வீரேனின் கையிலிருந்த அருவாளைப் பார்த்துவிட்டு “ வேனாம் வீராண்ணா” என்று அலறியபடி சத்யனை இறுக்கி அணைத்தாள்..

சத்யன் பதட்டத்துடன் மான்சியை விலக்கி தள்ளுவதற்குள் சத்யனின் கழுத்தை குறிவைத்து ஓங்கிய வீரேன் கையிலிருந்த அருவாள் சத்யனை அணைத்திருந்த மான்சியின் பின் கழுத்தை ஒட்டி முதுகின் மேல்புறத்தில் இறங்கியது...

வீரேன் தனது தங்கை உள்ளேயிருந்து ஓடி வருவதை பார்த்துவிட்டு தனது கையின் வேகத்தை குறைக்க நினைத்தான் தான்.. ஆனால் ஓங்கிய விசை மான்சியின் தோளில் இறங்கியதும் தான் வேகம் குறைந்தது...

ஒரு நிமிடம் சத்யனின் உலகமே ஸ்தம்பித்தது... அவன் இதயம் சில நிமிடங்கள் நின்று போய் மீண்டும் துடித்தபோது... “ மாமா நீ இங்கருந்து போயிடு” என்றபடி மெதுவாக சரிந்தாள் மான்சி..

அதன்பின் சத்யன் அலறிய அலறலில் ஊரே ஒன்று கூடியது... “ ஏன்டி இப்படி பண்ண.?. அய்யோ நான் வெட்டுப்பட்டு செத்திருப்பேனே?.. நீ ஏன்டி நாயே வந்து விழுந்த?” என்று வலியால் துடிக்கும் மனைவியை தன் நெஞ்சில் அணைத்துக்கொண்டு சத்யன் கத்தி கதறினான்...

மனைவியை மடியில் போட்டுக்கொண்டு சத்யன் விட்ட கண்ணீர் வீரேனை உலுக்கியெடுத்தது... தங்கையின் வார்த்தைகள் அவன் காதுகளில் நெருப்பு குழம்பாக விழுந்தது.... தன் ஆசை தங்கையை தன் கையாலேயே வெட்டிவிட்டோம் என்று புரிந்தபோது வீரேனுக்கு இந்த உலகமே இருண்டு போனது..

“ அய்யோ தங்கச்சி” என்றபடி அவனும் சரிந்து அவளருகில் அமர்ந்தான் வீரேன்...



அவன் கைகளை வேதனொயுடன் பற்றிய மான்சி “ வீரண்ணா மாமாவை ஒன்னு பண்ணாத?.. என்னை வேனும்னா கொன்னுடு... என் மாமாவை ஒன்னும் பண்ணாதண்ணா?.. அவர் என் உயிர் அண்....ணா” என்று சொல்லிகொண்டு இருக்கும்போதே மான்சியின் கண்கள் சொருகி ஆழ்ந்த மயக்கத்திற்கு போனாள்

மான்சியின் வார்த்தைகள் வீரேனின் நெஞ்சை குத்தி கிழிக்க... “ அய்யோ தப்பு பண்ணிட்டேனே?” என்று முகத்தில் அறைந்துகொண்டு கதறினான் வீரேன்...

கூட்டத்தில் இருந்தவர்கள் யாரோ தர்மனுக்கு போன் செய்து தகவல் சொல்ல... அவர் மீனாவுடன் காரை எடுத்துக்கொண்டு ராமைய்யாவின் வீட்டுக்கு வந்தார்...
தன் மகளின் கதியைப் பார்த்த அடுத்த விநாடி மீனா மயங்கி சரிய.. தர்மன் வீரேனை ஒரே அறை அறைந்து கீழே தள்ளினார்...

“ தூக்குடா மாப்ள ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்று மயங்கி கிடந்த மனைவியை அங்கேயே விட்டுவிட்டு காரை நோக்கி ஓடி காரில் ஏறி ஸ்டார்ட் செய்து தர்மன் தயாராக இருக்க

சத்யன் கண்களில் வழியும் கண்ணீரோடு மான்சியை கையில் ஏந்தினான்.. வீரேன் தங்கையின் கால்களைப் பற்றிக்கொண்டான்..

அப்போது அங்கே பைக்கில் வந்த தேவன் “ டேய் பாவி தங்கச்சி போய் வெட்டிட்டயேடா?” என்று வீரேனின் சட்டைப் பிடித்து இழுத்து தெருவில் தள்ளிவிட்டு மான்சியின் காலைப் பற்றி காரில் ஏற்றிவிட்டு தனது அப்பாவை நகர சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரட்டினான்

சத்யன் கட்டியிருந்த பட்டு வேட்டி முழுவதும் மான்சியின் ரத்தம் தேங்கி உறைந்தது.. மனைவியின் முகத்தை மடியில் வைத்துக்கொண்டு “ மான்சிக்கு எதாச்சும் ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்கமாட்டேன் மாமா” என்று கதறிய சத்யனுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் தர்மன் தன் மருமகனுக்காக கண்ணீர் வடித்தார்...

சத்யனும் மான்சியும் கோயிலில் இருந்து வருவார்கள்.. அவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டும் என்று எல்லாவற்றையும் எடுத்து தயாராக வைத்துக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் பஞ்சவர்ணம்
“ என் உயிரையே என் கைகளில் ஏந்தினேன்...

“ என் கைகள் உதறின...

“ என் கால்கள் பதறின...

“ என் சிந்தனை சிதறியது...

“ என் இதயம் கதறியது...

“ கண்கள் வெளிறியது...

“ என் உயிர் உருகியது...

“ அவளை இழந்தால்... பிறகு நான்? 



No comments:

Post a Comment