Wednesday, November 25, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 3


வீட்டுக்குள் நுழைந்த சத்யனின் கோலத்தைப் பார்த்து மனம் குழம்பிய பஞ்சவர்ணம் தனது அறைக்குள் போனவனின் பின்னால் போக முயன்றார், ஆனால் உள்ளே நுழைந்ததுமே சத்யன் கதவை அடைத்துவிட... கலவரத்துடன் ராமையாவைப் பார்த்தார் ...

அறைக்குள் நுழைந்த சத்யன் குளியலறையின் கதவை திறந்து உள்ளேபோய் வாளியில் இருந்த தண்ணீரை மொண்டு தலையில் கொட்டினான், எவ்வளவு குளித்தும் அவனது படபடப்பு அடங்கவேயில்லை ,, குழாயில் தண்ணீர் வருவது நின்றதும் வேறுவழியின்றி டவலை இடுப்பில் கட்டிக்கொண்டு வெளியே வந்து கட்டிலில் அமர்ந்தான்..



அவன் நடந்துகொண்டதை அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை,, அவனுக்குள் இருந்த மிருகத்தின் சுயரூபம் கண்டு அவனே அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தான்,, அடுத்து என்ன நடக்கும் என்று அவனுக்கே புரியவில்லை... இனிமேல் மான்சியின் கதியென்ன?.. ஊர் மக்கள் அத்தனை பேருக்கும் தெரிந்துவிட்டதே?... கைகளால் முகத்தில் அறைந்துகொண்டான்

அப்போது வெளியே கூடத்தில் “ அய்யய்யோ ஏஞ்சாமி என் குடி கெட்டதே” என்ற பஞ்சவர்ணத்தின் அலறல் சத்யனின் நெஞ்சை பிளந்தது... ராமைய்யா விஷயத்தை சொல்லிவிட்டார் என்று நிமிடத்தில் யூகித்தான் ..

“ சின்னய்யா கதவை தொறங்க... தொறங்கய்யா?” என்ற ராமைய்யாவின் குரலைக்கேட்டு எழுந்துபோய் கதவை திறந்துவிட்டு மறுபடியும் கட்டிலில் வந்து அமர்ந்து தலையை கையால் தாங்கிக்கொண்டான்...

அவசரமாய் நுழைந்த ராமைய்யா “ ஆளுக எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்காகளாம் முனியன் வந்து சொன்னான்,, கொஞ்சநேரத்துக்கு நான் சொல்றத கேளுங்க சாமி ” என்றவர் சத்யனின் துணிகள் இருக்கும் அலமாரியை திறந்து ஒரு பையில் சத்யனின் உடைகளை வைத்து எடுத்துவந்து சத்யன் பக்கத்தில் வைத்துவிட்டு “ தம்பி நீங்க கொஞ்சநாளைக்கு எங்கயாவது இருந்துட்டு வாங்க, நிலவரம் சரியானதும் நான் தகவல் சொல்றேன், பொறகு வாங்கய்யா” என்று கொஞ்சினார்...

வெடுக்கென்று நிமிர்ந்த சத்யன் “ அண்ணே அதுவும் என் குடும்பம் தாண்ணே... இப்படி நான் பயந்து ஓடுனா அதைவிட கேவலம் வேற எதுவும் இல்லை... என்ன நடந்தாலும் என் ஊரைவிட்டு போகமாட்டேன்,, என் அக்காவும் மாமாவும் எனக்கு என்ன தண்டை கொடுத்தாலும் சரிதான் .. ஏத்துக்கப் போறேன்” என்று சத்யன் உறுதியாக கூற..

ராமைய்யா தடாலென சத்யனின் காலில் விழுந்து “ சாமி நான் சொல்றதை கேளுங்க,, அக்கா மாமா மட்டும் அங்க இல்ல... ரெண்டு இளவட்ட பயலுகளும் இருக்காங்களே.. நீங்க போயிடுங்கய்யா” என்று கலக்கத்துடன் சொன்னார்..

பதட்டத்துடன் அவரை தூக்கிய சத்யன், அவரின் தூய்மையான அன்பை எண்ணி குமுறலுடன் அவர் கைகளில் தன் முகத்தை புதைத்து “ அண்ணே நான் ஏன் இப்படி பண்ணேன்னு எனக்கே தெரியலையே.. எனக்குள்ள இப்படி ஒரு மிருகம் இருக்கிறது எனக்குத் தெரியாம போச்சே” என்று குமுறி வெடிக்க.. வெளியே கூச்சலும் குழப்பமுமாக சத்தம் கேட்டது...

பட்டென்று தலைநிமிர்ந்த சத்யன் சிறிதுநேரம் கண்மூடி அமர்ந்திருந்தான் பிறகு தனது உடைகளை போட்டுக்கொண்டு.. ராமைய்யா தடுக்க தடுக்க கதவை திறந்து வெளியே வந்தான்,

கூடத்து தூணில் சாய்ந்து கட்டுக்கடங்காமல் வழியும் கண்ணீரை துடைக்க வழியின்றி அமர்ந்திருந்த தாயைப் பார்ர்த்து துடித்த இதயத்தை அடக்கியவாறு வாசலுக்கு வந்தான்..

ஊர் பெரியவர் நான்கு பேருடன் கிராமத்து மக்கள் சிலரும் நின்றிருந்தார்கள்.. சத்யனை கண்டதும் மணியக்காரர் அவன் பக்கத்தில் வந்து குனிந்து சின்ன குரலில் “ என்ன அப்பு இப்படி பண்ணிட்டீங்க?” என்று கேட்க .. சத்யன் எதுவும் சொல்லாமல் மவுனமாக தலைகுனிந்தான்...

“ சரி விடுங்க அப்பு... அவனுக ரெண்டுபேரும் வெட்டனும் குத்தனும்னு குதிக்கிறானுக.. உம்ம கொண்டுவந்து பஞ்சாயத்துல நிறுத்த சொல்றானுக.. நாங்க ,, இது குடும்ப விஷயம் வீட்டுக்குள்ளயே வச்சு பேசிக்கலாமுன்னு சொன்னா முடியாதுன்னு சொல்லிப்புட்டு கோயில் மேடையில உக்காந்திருக்கானுங்க, நீங்க என்ன சொல்றீக” என்று கேட்டார்..

சத்யன் யோசிக்கவேயில்லை “ நீங்க போங்க நான் வர்றேன்” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் போக... “ போகவேணாம் சின்னய்யா, சின்னப் பயலுக ஏதாவது தாருமாறா பேசிட்டா என்னப் பண்றது, வேனாம்யா” என்ற ராமையாவின் கெஞ்சலை பொருட்படுத்தாமல் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்...

சத்யன் கோயிலின் வெளியே இருக்கும் பஞ்சாயத்து மேடையருகே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியபோது ஊர் மக்கள் மொத்தமும் அங்கேதான் இருந்தார்கள், தர்மலிங்கத்தின் குடும்பத்தார் மேடையின் வலது பக்கமாக நின்றனர். ஆனால் மான்சி அங்கே இல்லை.. சத்யனைப் பார்த்ததும் வீரேனும் தேவாவும் “ டேய் உன்னைய வெட்டாம விடமாட்டோம்டா “ என்ற கூச்சலுடன் அவனை நோக்கி ஓடி வர.. ஊர் மக்கள் அவர்களை மடக்கி பிடித்தார்கள்,,

ஒரு பெரியவர் மேடையில் இருந்து இறங்கி தர்மனின் அருகே வந்து “ தர்மா பஞ்சாயத்துன்னு வந்துட்டு.. இப்படி வெட்டுறேன் குத்துறேன்னு ஓடுறது சரியில்லை, உன் மகனுங்களை அடக்கு.. இல்லேன்னா உங்களுக்குள்ள பேசிக்கங்கன்னு நாங்க விலகிப்போயிர்றோம்,, என்று கடுமையாக எச்சரிக்கை செய்ய.. தர்மன் மகன்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்தார்.. மகன்கள் இருவரும் பின்வாங்கினார்கள்..

சத்யன் அவர்களுக்கு எதிர்பக்கம் வந்து நிற்க.. ராமைய்யா எங்கிருந்தோ வந்து அவன் பக்கத்தில் நின்றுகொண்டார்,, மறுபக்கம் செவலமுத்து வந்து நின்றான்..
கூட்டத்தில் இருந்தவர்களில் சத்யனுக்கு ஆகாதவர்கள் சத்யன் மீது துப்புவதாக நினைத்துக்கொண்டு எச்சிலை காறித் தரையில் துப்ப.... சத்யனுக்கு ஆனவர்கள்,, அவன் நிலையை எண்ணி வேதனையுடன் உச்சுக் கொட்டினார்கள்...

மேடையில் அமர்ந்திருந்த பெரியவர் செம்பில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு பேச்சை ஆரம்பித்தார் “ நடந்ததைப் பத்தி விளக்கமா மறுபடியும் பேசி பிரயோசனம் இல்ல.. ஏன்னா நடந்தது என்னான்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு...அதனால அடுத்து என்ன செய்றதுன்னு மட்டும் யோசிப்போம்” என்றவர் தர்மனின் பக்கம் திரும்பி “ தர்மா. இந்த பக்கம் உன் மக... அந்தபக்கம் உன் மச்சான்.. தப்பு நடந்தது நடந்துபோச்சு,, அடுத்து என்ன பண்ணனும்னு நீ நெனைக்கிற அதை சொல்லு மொதல்ல” என்றார் 


தர்மன் வெகுநேர அமைதியாக இருக்க... சட்டென்று முன்னால் வந்த வீரேந்திரன் “ அவரு என்னய்யா சொல்றது... நான் சொல்றேன் எல்லாரும் கேளுங்க... என் தங்கச்சி வாழ்க்கையை நாசம் பண்ண இவன் இந்த ஊரைவிட்டே போகனும்... இல்லே நானும் என் தம்பியும் இவனை இந்த உலகத்தை விட்டே அனுப்புவோம்... இதுதான் எங்க முடிவு” என்று ஆக்ரோஷத்துடன் உறுமினான்..
அவன் சொல்லி முடித்ததும் அங்கே பெரும் அமைதி... தர்மனின் அமைதி அவர் மகன் சொன்னதை அவர் ஏற்பது போல் இருந்தது... தலைகுனிந்து கைகளை பின்னிக்கொண்டு நின்றிருந்தார்

சத்யன் நிமிர்ந்து தன் மாமனைப் பார்த்தான்... பிறகு மேடையில் இருந்தவர்களைப் பார்த்து.. “ நான் பொறந்த ஊரைவிட்டு போகமாட்டேன்.. என்னோட உயிர்தான் இவங்களுக்கு வேனும்னா தராளமா எடுத்துக்கட்டும்” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றான்...

மேடையில் இருந்தவர்களிடம் மெல்லிய சலசலப்பு..... உடனே மேடையில் இருந்து இறங்கிய மணியம் “ ஏய் என்னப்பா இது உசுர எடுக்குறது என்னமோ மாங்கா புளியங்கா சமாச்சாரம் மாதிரி பேசுறீங்க... ஏலேய் வீரா இன்னிக்கு பேசுறதுக்கு எல்லாமே நல்லா தாம்லே.. ஆனா பழசை நெனைச்சுப் பார்க்கனும்” என்றவர் தருமனின் பக்கம் திரும்பி “ இதோ பாரு தருமா... உனக்கு விரோதியா நிக்கிறது உன்னோட மச்சான்.. நாங்க பஞ்சாயத்து ஆளுக என்ன சொல்றோம்னா ... நம்ம சத்யனுக்கு என்ன கொறைச்சல்... அவன் மகளுக்கு கல்யாணம் பண்ணி பேத்தி பொறந்துட்டாலும் அவனும் எளந்தாரி பயதான், அது நம்ம எல்லாருக்கும் தெரியும்.. அதனால மேல மேல விரோதத்தை வளக்காம உம் மகளை அவனுக்கு கட்டிக்கொடுக்குறது தான் சரின்னு நாங்க நெனைக்கிறோம்,, உங்க ரெண்டு தரப்புக்கும் நாலுநாள் டைம் தர்றோம் அதுக்குள்ள விரோதம் தனிஞ்சு, அந்தபுள்ளையையும் ஒரு வார்த்தை கேட்டுகிட்டு முடிவெடுங்க... சொந்தபந்தத்துக்குள்ள பகை வேனாம் தர்மா” என்று சொல்லிவிட்டு அவர் மறுபடியும் மேடையில் அமர...

இதை கேட்டதும் வீரேனுக்கு ஆத்திரம் பழியாய் வந்தது “ என்னடா என் **** பஞ்சாயத்து, இவன் என் தங்கச்சிய கெடுப்பானாம் இவனுக்கே அவளை கட்டிக்கொடுக்கனுமாம்... ஏன்யா உங்க வீட்டு பொண்டுகளை நான் இதேபோல பண்ணிட்டா எத்தனை பேரை எனக்கு கட்டி வைப்பீங்க? தப்பு பண்ணவனுக்கு தண்டைய சொல்லுங்கய்யான்னா.... அவன் சொகமா வாழ வழி சொல்றீக.. இதெல்லாம் நடக்காது, என் தங்கச்சிய மதுரையில பெரிய மில் ஓனருக்கு பேசி வச்சிருந்தோம், இப்போ எல்லாம் கெட்டுச்சு, நாங்க இந்தாளை சும்மா விடுற மாதிரி இல்ல” என்று கத்தியவனை யாரும் அடக்கவே இல்லை, அவன் ஆத்திரம் எல்லை மீற சத்யனை அடிக்கும் நோக்குடன் அவன் சட்டை காலரைப் பற்றி இழுக்க...

அப்போது எங்கிருந்து வந்தாள் என்றே தெரியாமல் மீனா ஓடிவந்து மகனை இழுத்து தள்ளி விட்டு சத்யனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்து “ அடப்பாவி உனக்கு ஏன்டா இப்புடி புத்தி போச்சு” என்று அலறியபடியே அவன் முகத்தில் அறைய.. அம்மாவின் ஆக்ரோஷத்தை பார்த்து அதிர்ச்சியுடன் விலகினான் வீரேன்

சத்யன் கண்ணீருடன் அசையாமல் நின்று அத்தனை அடிகளையும் வாங்கினான்.. மீனாள் இப்படி திடீரென்று அடிக்கும் காரணம் அவனுக்கு மட்டுமே தெரியும்... எங்கே தன் மகன் தன் தம்பியின் மீது கைவைத்துவிடப் போகிறானோ என்ற பாசம் தான் அவள் அறைகளுக்கு காரணம் என்று சத்யனுக்கு மட்டுமே தெரியும்...

இப்படிப்பட்ட அக்காவுக்கு நம்பிக்கை தூரோகம் பண்ணிட்டோமே என்ற குற்றவுணர்வு மேலும் அதிகமாக “ நான் துரோகி என்னை கொன்னுடு அக்கா” என்று கதறினான் சத்யன்.., அந்த வார்த்தைக்குப் பிறகு மீனாவால் தம்பியை அடிக்க முடியவில்லை, அப்படியே தொய்ந்து சரிந்து தரையில் விழுந்தாள் ..




ஊர் மக்கள் கண்கலங்கி அதை வேடிக்கைப்பார்த்தனர்,, சில பெண்கள் வந்து தரையில் கிடந்து கதறிய மீனாவை தூக்கிக்கொண்டு அங்கிருந்து போக... ராமைய்யா சத்யனின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு அங்கிருந்து போனார்..

நான்கு நாட்கள் கெடுவில் பஞ்சாயத்து கலைந்துவிட்டாலும்,, அதன்பின் வந்த நான்கு நாட்களில் வீரேனையும் தேவாவையும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை,, இதில் வீரேந்திரனின் ஆத்திரம் தான் அதிகம்,, அதற்கு காரணம் மான்சிக்கு பார்த்திருந்த மதுரை மாப்பிள்ளையின் தங்கையை வீரேனுக்கு தருவதாக பேசியிருந்தது தான்... இன்று சத்யனால் மான்சியின் எதிர்காலம் மட்டுமல்ல, இவனுக்கு கிடைக்கவிருந்த பணக்காரப் பெண்ணும் கிடைக்காமல் போனதால் ஏற்ப்பட்ட வருத்தம்.. அதனால் சத்யனின் மேல் ஏற்ப்பட்ட வெறிக்கு தம்பியை துணைக்கு சேர்த்துக்கொண்டு சத்யனின் உடைமைகளை அழித்தான்...

மான்சி அறைக்குள்ளேயே முடங்கிக்கிடக்க,, அடுத்து என்ன? என்ற கலவரத்துடன் மீனா ஹாலின் மூலையில் சுருண்டு கிடந்தாள்,, தருமன் மகன்களை அடக்க வழிதெரியாமல்,, மகளின் கதி என்ன என்று புரியாமல் சோபாவில் முடங்கிக் கிடந்தார்...

வீரேனும் தேவாவும் சத்யனை அழிக்கமுடியாமல் ஆக்ரோஷத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தனர் .. சத்யனை அழிக்க முடியாவிட்டாலும், அவன் உடமைகளை திட்டமிட்டு அழித்தனர்,, இன்றும் அப்படித்தான், அறுவடை கழனியை குறிவைத்த நெருப்புக்கு வைக்கோல போர் இரையானது...

இதோ நாளை மாலை பஞ்சாயத்து கூடப் போகிறது,, அக்காள் மகன்கள் இருவரும் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட போவதில்லை என்று சத்யனுக்கு தெளிவாக புரிந்தது ,, எது நடந்தாலும் அதை ஏற்க்கும் நிலையில் இருந்தான் சத்யன்..

அன்று இரவு முழுவதும் உறக்கம் வராமல் அவன் மனதில் மான்சியைப் பற்றிய எண்ணங்கள் ஓடியது,, அவள் ஏன் என்னிடம் அப்படி நடந்துகொண்டாள்? அவள் வந்த பதினைந்து நாட்களும் பார்க்கும் நேரமெல்லாம் உரசிக்கொண்டும், தொட்டுத்தொட்டு பேசியபடி, சந்தர்ப்பம் கிடைத்தால் அணைத்துக்கொண்டும், ஏன் அப்படி என்னை சபலப்பட வைத்தாள்? நானும் உணர்ச்சியுள்ள மனிதன் தானே என் ஏன் அவளுக்கு புரியவில்லை? இப்போது அவள் கிளறிவிட்ட தீயை அவளைக் கொண்டே அணைக்கும் படி ஆகிவிட்டதே? என்று யோசித்து யோசித்து எந்த விடையும் தெரியாமல் தவித்து விழித்திருந்தான் சத்யன்...

ஊரே எதிர்பார்த்த மறுநாள் மாலையும் வந்தது,, அன்றுபோலவே இன்றும் எல்லோரும் கூடியிருந்தனர், தர்மனின் கார் சற்று தள்ளி நின்றிருக்க, அதற்குள்ளே மான்சி இருந்தாள், கார் கண்ணாடி ஏற்றிவிடப்பட்டிருந்தது

“ தருமா என்னப்பா முடிவு பண்ண என்று கேட்க” என்று மணியக்காரர் கேட்க... வழக்கம்போல் அவருக்கு பதிலாக வீரேன் தான் பேசினான்..

“ நாங்க அன்னைக்கு சொன்னது தாங்க... எங்க தங்கச்சி கல்யாணமே ஆகாம காலம் பூராவும் எங்க வீட்டுலேயே கிடந்தாலும் பராவாயில்லை... இந்த ஆள் ஊரைவிட்டு போகனும்.. எந்த நல்லது கெட்டதுக்கும் இந்த ஊருக்குள்ள கால் வைக்க கூடாது,, இதுதான் எங்க முடிவு” என்று தீர்மானமாய் பேசினான்...

கூட்டத்தில் பலத்த சலசலப்பு,, அதிலும் பெண்கள் மத்தியில் சலசலப்பு அதிகமாக இருந்தது.. அப்போது கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு இளம்பெண் பஞ்சாயத்து மேடையறுகே வந்தாள் “ இதோ பாருங்க பஞ்சாயத்துகாரவுலே,, இதுக்கு நாங்க யாரும் ஒத்துக்க மாட்டோம்,, அவங்க மகளை எங்கய்யாவுக்கு குடுத்தா குடுக்கட்டும் இல்லேன்னா பீரோவுல வச்சு பூட்டட்டும்.. ஆனா சின்னய்யா ஏன் ஊரைவிட்டு போகனும்னு சொல்றது நியாயமில்லை” என்று தன்னால் முடிந்தவரை உரத்த குரலில் சத்யனுக்கு சப்போர்ட்டாக பேசினாள்.. உடனே இன்னும் சில பெண்கள் அவள் சொன்னதையேத் திருப்பி சொன்னார்கள்..

சத்யன் தன்னருகில் நின்ற அந்த பெண்ணிடம் “ செல்வி உனக்கு என்ன தெரியும்,, நீ வீட்டுக்கு போ.. பெரியவங்க பேசுவாங்க” என்று மெல்லிய குரலில் அதட்டினான்..

“ இல்லய்யா நான் போகமாட்டேன்,, எனக்கு எல்லாம் தெரியும்,, நாலு நாளா எங்கப்பாரு சோறு தண்ணி இல்லாம அழுவுறது எனக்குத்தான் தெரியும்.. கரும்பு லாரிக்கும் வக்கோலுக்கு நெருப்பு வச்சவுக கிட்ட நியாயத்தை எதிர்பார்க்க முடியாததுதான்.. ஆனா நா சொல்ல வந்ததை சொல்லாம போகமாட்டேன்” என்று பிடிவாதமாக செல்வி அங்கேயே நிற்க்க...

சத்யன் ராமைய்யாவை பார்த்து “ அண்ணே செல்விய கூட்டிட்டுப் போங்க” என்றான்..

“ இல்ல தம்பி எம் மக என்னதான் சொல்லுதுன்னு பார்க்கலாமே” என்று சத்யனிடம் சொன்னவர் மகளிடம் திரும்பி “ நீ பேசு தாயி ” என்றார்...

பத்தொன்பது வயது செல்வி கூட்டத்தை ஒரு முறை பார்த்துவிட்டு “ உங்க எல்லாருக்கும் தெரியும்.. நானும் சின்னய்யாவோட மகளும் சின்னப்புள்ளைலேருந்து ஒன்னா வளர்ந்தோமுன்னு... நான் சிமி கூட எப்பவுமே அய்யா வீட்டுலதான் இருப்பேன்.. கெட்ட புத்தி உள்ளவரா இருந்தா என்னை ஒரு பார்வைகூட தப்பா பாத்தது இல்ல.. என்னையும் ஒரு மகளாதான் நெனைச்சு பேசுவாறு... அதுமட்டுமில்ல அய்யாவோட வயக்காட்டுல ஒருநாளைக்கு கிட்டத்தட்ட முப்பது நாப்பது பொம்பளைக வேலை செய்வோம்... என்னிக்குமே யாரையும் தவறா பார்த்ததும் கிடையாது பேசினதும் கிடையாது,, ஏன் முறைவுள்ளவுகல பார்த்து கூட கிண்டல் பண்ண மாட்டாரு, அப்புடியிருந்த மனுஷன் இப்படியொரு தப்பை பண்ணாருன்னா அதுக்கு தூண்டுகோளு யாருன்னு மொதல்ல தீர விசாரிங்க.. அதவுட்டுட்டு புள்ளைபூச்சிக்கெல்லாம் பயந்து எங்க அய்யாவை கைகட்டி நிக்க வச்சிட்டீகளே” என்று நீளமாய் பேசி நியாயத்தை கேட்டாள்..

செல்வி புள்ளைப் பூச்சி என்று தங்களைத்தான் சொல்றா என்று வீரேனுக்குப் புரிய “ ஏய் யாரைப்பார்த்து புள்ளைபூச்சின்னு சொல்ற... ஆளுக தராதரம் தெரியாம பேசாத” என்று கர்ஜிக்க.. அவனுக்குப் பின்னால் நின்ற தேவா செல்வியை எரித்துவிடுவது போல் முறைத்தான்..

“ யாருக்கு தராதரம் தெரியலை? உங்களுக்கா? எங்களுக்கா? அய்யாவோட அக்காள உங்க அப்பாரு கட்டலைன்னா நீங்களும் எங்கள மாதிரி அன்றாடம் கூலிக்கு ஊர் ஊரா ஓட வேண்டியதுதான்... ஏதோ அய்யா குடுத்த சொத்த வச்சு பணக்காரவுகளா ஆயிட்டீக.. ஆனா அந்த நன்றியை மறந்து எங்கய்யாவை பஞ்சாயத்துல நிறுத்துனீக பாருங்க இதை அந்த ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டான்” என்று கொதிப்புடன் பேசினாள் செல்வி.. 


அவள் வாதம் இளங்கன்று பயமறியாது என்பது போல் இருந்தது..சும்மாவே ஊரே அலறும் வாயாடி,, இன்று அவள் அய்யாவுக்கு ஒன்று என்றதும் கொதித்துப் போயிருந்தாள்,,

“ சொத்து குடுத்தா எங்க தங்கச்சிய இந்தாளு என்ன பண்ணாலும் நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருக்கனுமா?” இது தேவனின் வாதம்..

“ சும்மா இருக்க வேனாம்... ஆனா உம்ம தங்கச்சி பண்ணதையெல்லாம் கேட்டுகிட்டு அதுக்கப்புறம் பேசுங்க புதுப் பணக்காரங்களே” என்று தேவனைப் பார்த்து நக்கலாக மொழிந்தவள்.. பஞ்சாயத்து ஆட்கள் பக்கம் திரும்பி “ இங்க பாருங்கய்யா, இவுக தங்கச்சி ஊருக்கு வந்த இந்த பதினஞ்சு நாளுல, ஊருல உள்ள இளவட்டத்துக்கெல்லாம் உள்ளாற கலவரமாகி போச்சு,, ஏன்னா அவுக போட்டுருந்த துணிக அப்புடி,

" அதுலயும் நெதமும் வயக்காட்டுக்கு வந்து மாமா மாமான்னு கொஞ்சிக்கிட்டு அவரு முதுகுல கட்டி ஏறுறதும், கட்டி கட்டி பிடிச்சுக்குறதும்... மடியில படுத்துக்கறதும், சோறு சாப்பிடும்போது எனக்கும் ஊட்டிவிடு மாமான்னு சொல்லி உரசுறதும்,, இது எல்லாத்தையும் இந்த ஊரே வேடிக்கைப் பார்த்துச்சுங்க... இப்படியெல்லாம் பண்ணிப்புட்டு எங்கய்யா அடக்கமா இருக்கனும்னா அவரு என்ன முற்றும் துறந்த முனிவரா? சாமியாரா இருக்குறவுனுகளே ராவானா மாமியார் வீட்டுக்குப் போய்ட்டு டிவி டிவியா நாறுரானுங்க... இதுல எங்க அய்யா இவுக தங்கச்சி ஆடுன கூத்தையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருந்தா அப்புறம் அவரு ஆம்பிளையே இல்லையே?, அதுவும் பத்தொன்பது வயசுலயே புள்ள பெத்தவராச்சே ” என்று செல்வி உண்மைகளை அசால்டாக வீசி வீசி எறிய அதில் முதலில் அடிபட்டது காருக்குள் இருந்த மான்சிதான்... செல்வி மீது உண்டான ஆத்திரத்தில் பற்களை கடித்தாள்

“ தாய்மானாச்சேன்னு பாசத்துல அந்த மாதிரி பண்ணா அதை இப்படி பயண்படுத்துறதா? இது எந்த ஊரு நியாயம்டி ” மறுபடியும் தேவாதான் செல்வியிடம் மல்லுக்கு நின்றான்

“ எதுய்யா நியாயம்... தாய்மாமன் கிட்ட அஞ்சு வயசுல கொஞ்சலாம்.. கட்டிபிடிக்கலாம்... முதுகுல ஏறி சவாரி பண்ணலாம்,, ஏன் பத்து வயசுல கூட பண்ணலாம்,, ஆனா அதையே இருவது வயசுல பண்ணா எவன்தான் சும்மா இருப்பான், தாய்மாமன்னு எவனாவது பல்லு போன கெழவன் இருந்தா கூட உன் தங்கச்சிய தூக்கிகிட்டு எங்கயாவது மறைவா ஓடியிருப்பான்...

" சரி உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கிறேன் பதில் சொல்லுங்க?.. உங்க தங்கச்சி உங்க மேலயும் தான அம்புட்டு பாசமா இருக்கு? இன்னிக்கு வரைக்கும் உங்கப்பாரு கிட்டயோ இல்ல உங்ககிட்டயோ இந்த மாதிரி கட்டிப்பிடிச்சு, முதுகுல ஏறிகிட்டு சவாரி பண்ணறது... இந்த மாதிரியெல்லாம் நடந்துருக்கா?” என்று செல்வி உரத்து கேட்க..

பதில் சொல்லமுடியாமல் விழித்தான் தேவா... அப்பாவாயிருந்தாலும் அண்ணனாயிருந்தாலும் ஒரு அடி தள்ளி நின்றுதான் பேசுவாள் மான்சி.. ஆனால் இந்தாளுக்கிட்ட மட்டும் ஏன்?

“ என்ன பதில் சொல்ல முடியலையா?... அப்ப போங்க... வீட்டுக்குப் போய் உங்க தங்கச்சிய நாலு சாத்து சாத்துங்க... அதவுட்டு போட்டு எங்கய்யாவை ஊரைவிட்டு அனுப்பனும்னு நெனைச்சீங்க அவ்வளவுதான்... உன் தங்கச்சி ஊரே வேடிக்கைப் பார்க்க இல்லாத ஆட்டமெல்லாம் ஆடிப்புட்டு இன்னிக்கு அய்யோ போச்சே அம்மா போச்சேன்னு கத்துனா போனது வந்துடுமா? பொம்பளைன்னா இடத்துக்கு தகுந்தா மாதிரி அடக்க ஒடுக்கமா இருக்கனும், ஆனா உங்க வீட்டு பொண்ணுக்கு அதெல்லாம் தான் நீங்க கத்து குடுக்கவே இல்லையே? ” என்று மறுபடியும் நக்கலில் ஆரம்பித்து கேள்வியில் முடித்தாள் செல்வி...

ஊரே அவள் பேச்சில் இருந்த நியாயத்தில் வாய் பிளக்க... வீரேன் மட்டும் அவள் கூறியதில் இருந்த நியாயத்தில் கொதித்துப் போய் முன்னால் வந்து “ பொட்டச்சிய நியாயம் பேச விட்டுட்டு பொண்டுக பயலுக மாதிரி எல்லாரும் வேடிக்கைப் பார்க்குறீங்களா?.... ஏலேய் இந்த ஊர் பஞ்சாயத்தே எங்களுக்கு வேனாம்.. என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்” என்றவன்... “அப்பா எந்திரிங்க வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டு தனது காரை நோக்கி வேகமாக நடந்தான் ..


தர்மன் எழுந்து தன் மகன் பின்னாலேயே மவுனமாக போனார்... தேவன் தன் பார்வையால் செல்வியின் மீது நெருப்பை கக்கிவி்டு போனான்... பஞ்சாயத்து முடிவெதுவும் எட்டப்படாமல் பாதியில் முடிந்துவிட... கூட்டம் சலசலத்துக் கொண்டே கலைந்து போனது...

“ சின்னய்யா நீங்க தைரியமா போய் சாப்பிட்டு தூங்குங்க,, இவுக என்னத்த கிழிக்கிறாகன்னு பார்ப்போம்” என்று சத்யனுக்கு தைரியம் சொன்ன செல்வி “ யப்போவ் நீ அய்யா வீட்டுலயே இருந்துக்க.. நான் அம்மாகிட்ட சொல்லிக்கிறேன்” என்ற செல்வி தன் உடன் வந்த பெண்களுடன் வீட்டுக்கு கிளம்பினாள்

சத்யன் தனது பைக்கில் அமர ராமைய்யா அவன் பின்னால் அமர்ந்தார்,, வீட்டுக்குப் போகும்போது சத்யன் மனதில் ஓடியெதெல்லாம் வீரேன் கடைசியாக கூறியதுதான்.. சத்யனுக்கு வீரேனின் குணம் தெரியும்,, அவன் எதற்கும் துணிவான் என்று எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தான்..

தனது அறைக்குள் போய் முகம் கழுவி உடை மாற்றி வருவதற்குள் ராமைய்யா பஞ்சாயத்தில் நடந்தவற்றை பஞ்சவர்ணத்திடம் விளக்கமாக கூறிக்கொண்டு இருந்தார்...

“ ராமைய்யா உம் மவளா இம்பூட்டு பேசினா? அவ வாயாடியா இருந்தாலும் நாயத்த தான் பேசுவா ராமைய்யா... எம்புட்டு விஷயத்தை யோசனை பண்ணி பேசிருக்கா பாரு... இந்த சிறுக்கி இம்புட்டு சிலுப்பு சிலிப்பிப் புட்டு இப்ப எம் மவன குத்தம் சொல்றானுகளே?” என்று பஞ்சவர்ணம் அங்கலாய்த்துக் கொண்டார்...
சிறிதுநேரம் ராமைய்யாவுடன் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்துவிட்டு.. சத்யன் மனதில் ஆயிரம் யோசனைகளுடன் சாப்பிட போய் அமர்ந்தான்,,

ராமைய்யாவைப் பார்த்து “ அண்ணே நீங்களும் உட்காருங்க.. சேர்ந்தே சாப்பிடலாம்... என்னை பாதுக்காப்பு பண்ண உங்களை விட்டுட்டுப் போயிருக்கா செல்வி.. என்னா போடு போடுறாண்ணே” என்று சொன்னவனின் முகத்தில் நான்கு நாட்கள் கழித்து புன்னகையின் சாயல்..

பஞ்சவர்ணம் பேசிக்கொண்டே இருவருக்கும் தட்டுவைத்து அதில் சோற்றைப் போட்டு குழம்பை ஊற்ற... சத்யன் சோற்றை பிசைந்து அள்ளி வாயில் வைக்கப் போகும்போது “ வீட்டுல யாரு இருக்கீங்க” என்ற கட்டையான ஆண் குரல் ஒன்று கதவை தட்டியபடி கேட்க.. சத்யன் கையிலிருந்த சோற்றை மீண்டும் தட்டில் போட்டுவிட்டு எழுந்திருக்க..

அவன் கையைப் பற்றி தடுத்து “ இருங்க தம்பி நான் போய் பார்த்துட்டு வர்றேன்” என்று ராமைய்யா எழுந்து போனார்

வீட்டுக்குள் ஒரு போலீஸ் அதிகாரியும் அவருக்கு அருகில் இரண்டு கான்ஸ்டபிளும் நிற்க்க.. வீட்டுக்கு வெளியே ஒரு போலீஸ் ஜீப் நின்றிருந்தது..

ராமைய்யா திகைத்துப்போய் நின்றிருக்க... “ சத்யமூர்த்தி இருக்காரா? ” என்ற அதிகாரியின் கேள்விக்கு “ நான்தான் சார் சத்யமூர்த்தி.” என்று சத்யனே வந்து பதில் சொன்னான்

அவன் பக்கம் திரும்பிய இன்ஸ்பெக்டர் “ நீங்க தானா?’ என்று அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு “ உங்க மேல மான்சி என்ற பெண்ணை கற்பழித்து விட்டதா புகார் வந்திருக்கு, அதுவும் புகார் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமா எங்க ஸ்டேஷனுக்கு வந்திருக்கு,, அதனால உங்க கைது பண்ண வந்திருக்கோம், எங்களுக்கு நீங்க சரியானபடி ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது” என்று எச்சரிக்கையுடன் பேசினார் ..

சத்யன் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தான்,, ஆனால் வீரேந்திரன்,, கலெக்டர் வரை பிரச்சனையை எடுத்துச்செல்வான் என்று எதிர்பார்க்கவில்லை “ சார் நாளைக்கு காலையில நான் நேரா ஸ்டேஷனுக்கு வந்துர்றேனே?” என்று கேட்டான்..




No comments:

Post a Comment