Thursday, November 26, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 6

“ மாமா இப்போ ஏன் வெளியப் போற?” என்ற மான்சியின் குரலில் மீண்டும் திரும்பினான்....

“ நீ போய்ட்டா இந்த துணியெல்லாம் யாரு அடுக்குவாங்க.. இதோபாரு மாமா... எனக்கு மயக்க மயக்கமா வருது... கொஞ்சநேரம் நிக்கக்கூட முடியலை, அப்புறம் நான் எப்புடி அடுக்குவேன் ” என்று உடலை நெளித்து வளைத்து ஒயிலாக நின்றவளைப் பார்த்து அப்படியே நின்றவன்...

“ சரி நீ போய் குளிச்சிட்டு வா உன் டிரஸை எல்லாம் நான் அடுக்கி வைக்கிறேன்” என்றுவிட்டு அலமாரியின் அருகே போனான் சத்யன்

‘ அப்புடி வா வழிக்கு” என்றபடி வெறும் டவலுடன் பாத்ரூமுக்குள் நுழைந்தாள் மான்சி



சத்யன் அலமாரியைத் திறந்து மான்சியின் உடைகளை நேர்த்தியாக அடுக்கியவனின் மனதில் புதுவிதமான உணர்வு... இதுவரை இவன் வாழ்க்கையில் இவன்தான் மற்றவர்களுக்கு வேலை சொல்வான்... இதுபோன்ற வேலைகள் சத்யனுக்கு புதிது.. மனசுக்குள் ஏதோவொன்று குறுகுறுக்க.. மான்சியின் உடைகளை அடுக்கினான்..

சற்றுமுன் வந்த தர்மனும் மீனாவும் மான்சியின் மற்ற உடைமைகளை காரில் எடுத்து வந்திருக்க, அந்த பைகளையும் எடுத்து அடுக்கினான் .. ஒரு பையில் மான்சியின் போட்டோ ஆல்பங்கள் இருந்தது.. அத்தனையிலும் அழகாக இருந்தாள்.. ஒரு படத்தில் பிறந்து சில நாட்களே ஆன சிறிய ஆட்டுக்குட்டியை தூக்கி முத்தமிட்டபடி இருந்தாள் மான்சி... ஆட்டுக்குட்டியை முத்தமிட்ட மான்சிக்கு இவன் முத்தம் கொடுத்தான்

அந்த படத்தை மட்டும் உருவி எடுத்து தன் சட்டைக்குள் மறைத்துவிட்டு மற்றவைகளை அடுக்கி முடிக்கவும் மான்சி குளித்துவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது...

திரும்பிய சத்யன் அதிர்ச்சியுடன் நின்றான்.... மான்சியின் உடலில் வெறும் டவல் மட்டுமே இருந்தது, டவல் சற்று அகலமாக இருந்தாலும் கழுத்துக்கு அரையடிக்கு கீழே ஆபத்தான நிலையில் தொற்றிக்கொண்டிருக்க.. சத்யனை முதன்முதலில் மயக்கிய வழவழவென்ற மான்சியின் தொடைகள் வரை ஏறி ஆபத்தை அறிவுருத்திக் கொண்டு இருந்தது அந்த டர்க்கி டவல்...

மான்சியின் மனம் எக்காரணம் அடிக்க... தயக்கமின்றி சத்யன் நின்றிருந்த அலமாரியை நெருங்கி கதவைத் திறந்தபடி ... “ மாமா என்னோட இன்னர்வேர் எல்லாம் எங்க வச்ச” என்று கேஷுவலாக கேட்க...

சத்யன் அவளையேப் பார்த்தபடி விரல் நீட்டி அலமாரியின் நடுத்தட்டை காட்டினான்,,

அதிலிருந்து தனது உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு திரும்பியவள் அதை உதறிவிட்டு போட்டு கொள்வதற்காக அப்படியே குனிய... சத்யனின் ரத்த ஓட்டம் சூடாகி கொதித்தது.. அவளை பார்க்காமல் அங்கிருந்து அவசரமாக வெளியேறினான்

“ ஓ... ஓடுறியா... ஓடு மாமா ஓடு” எனறு எண்ணி சிரித்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்தாள் மான்சி

சத்யனுக்கு அவள் மனம் தெளிவாக புரிந்தது... அதாவது இந்த மாதிரியெல்லாம் பண்ணிட்டு நான் சபலப்பட்டு தொட்டா அதை வச்சு என்னை இன்னும் கேவலமா பேச ப்ளான் பண்ணிருக்கா.. என்று தெளிவாக தப்புக்கணக்கு போட்டான் சத்யன்..



“ என் மனசு சரியில்லாத போது...

“ உன் முகத்தைப் பார்த்தால்...

“ மனசு உடனே சரியாகிவிடுகிறது...

“ ஆனால் அதுவரை சரியாக இருந்த நான்...

“ சரியில்லாமல் போய்விடுறேன்! 

சமையலறையில் மீனாவின் குரல் கேட்க.... தர்மன் செவலையனிடம் விவசாயத்தைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்... செல்வி பரபரப்பாக இங்குமங்கம் ஓடிக்கொண்டிருந்தாள்..

முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்த மீனா “ சாப்பாடு ரெடியாயிருச்சு வாங்க சாப்பிடலாம்” என்று பொதுவாக அழைத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்... அவளால் தம்பியிடம் இன்னும் சகஜமாக பேச முடியவில்லை..

“ வா சத்யா சாப்பிடலாம்” என்று சத்யனை அழைத்துக்கொண்டு சாப்பாட்டு அறைக்கு போனார் தர்மன்.. மட்டன் குருமா.. விராலமீன் குழம்பு.. மீன் வருவல்.. என்று ஏகப்பட்ட ஐட்டம் செய்திருந்தனர்

ஒரு எவர்சில்வர் கேரியரில் சாப்பாடு போட்டு ஒரு கூடையில் வைத்து ஒரு வாழைஇலையும் வைத்து செல்வியிடம் கொடுத்த பஞ்சவர்ணம் “ எலா செல்வி இத எடுத்துட்டுப் போய் வயக்காட்டுல இருக்குற உங்கப்பனுக்கு குடு” என்று கொடுத்தனுப்ப,,

“ சரி ஆத்தா” என்று கேரியரை வாங்கிக்கொண்டு வயக்காட்டுக்கு கிளம்பினாள் ...
தாவணியில் முடிந்திருந்த பொரியரிசியை அள்ளி வாயில் கொட்டியபடி ஊரைவிட்டு தள்ளி வயக்காட்டுக்கு செல்லும் ஒற்றையடிப்பாதையில் போனவள்.. சத்யனின் சவுக்குத்தோப்பை பாதி தாண்டியபோது “ ஏய் நில்லு ” என்ற ஆண்குரல் கேட்டு அப்படியே நின்றாள்..

‘ அய்யய்யோ யாருமே இல்லாத சவுக்குத் தோப்புக்குள்ள இந்நேரத்துல யாரு? ஒருவேளை கவுச்சி சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு பேய் ஏதாவது பின்னாடியே வந்துடுச்சோ’ என்று பயந்தபடி திரும்பியவள் .. அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் ‘ அடச்சே இவன் தானா?’ என்று மறுபடியும் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்

இரண்டே எட்டில் அவளை அடைந்த தேவன் “ ஏய் கூப்பிக் கூப்பிட வேகமா போற என்னடி திமிரா?” என்று கேட்க..

நின்று அவனைப்பார்த்து முறைத்த செல்வி “ இந்த டீ போட்டு கூப்பிடுற வேலையெல்லாம் என்கிட்ட வேனாம்.... ஆமா சொல்லிப்புட்டேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்

“ ஓ மேடத்தை மேடம்னு கூப்பிடனுமோ? சரி கூப்பிட்டாப் போச்சு” என்று பதிலுக்கு கேலி செய்தவன்... “ மேடம் இந்த நேரத்துல இந்தப்பக்கமா எங்கப் போறீங்க?” என்று கேட்டான்..

“ நான் எங்கப்போனா ஒனக்கு என்னவாம்? உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போய்ச்சேரு” என்று ஏளனமாக பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவளை தேவன் கையைப்பிடித்து சுண்டி இழுக்க தடுமாறிய செல்வி அவன் நெஞ்சிலேயே விழுந்தாள் .

அவள் மேலும் சரியாமல் தேவன் அவள் இடுப்பில் கைவைத்து தாங்கிப்பிடித்து தூக்கி நிறுத்த.. அவன் கையை உதறி விலகிய செல்வி அவனைப் பார்த்து நெருப்பாய் தகித்தப்படி “ யார் மேல கை வைக்கிற?,, இன்னோரு வாட்டி என்மேல கை வச்ச ஒரே சீவா சீவிடுவேன்” என்று சாப்பாட்டுக் கூடையில் இருந்த அருவாளை எடுத்துக் காட்டினாள்..

ச்சே இப்படி பிடிச்சு இழுத்துட்டமே என்று மனதுக்குள் சங்கடப்பட்டு நின்ற தேவன் அவள் அருவாளை எடுத்து காட்டியதும் வீம்பு தலைதூக்க “ ஓஓஓ.... மேடம் அருவாள் எல்லாம் பாதுகாப்புக்கு எடுத்து வந்துருக்கீங்களா?” என்றவன் அருவாள் வைத்திருந்த கையை பிடித்து முறுக்கி அவள் முதுகுப்பக்கமாக வளைத்து அவளையும் திருப்பி தன் நெஞ்சில் சாய்த்து “ இப்ப என்னடி பண்ணுவ? எங்க என்னை சீவு பாக்கலாம்?” என்று அவளிடம் சவால் விட்டவன்.. அவள் கூந்தலில் இருந்து வந்த ஒருவிதமான மணத்தில் லேசாக சொக்கிப்போய் அவள் தலையில் தன் முகத்தை அழுத்தினான்..

அவனிடம் தனது வீரம் பலிக்கவில்லை என்றதும்,, கொஞ்சம் பயந்த குரலில் “ இதோபாரு என் கையை விட்டுடு...இல்லேன்னா கத்தி யாரையாவது கூப்பிடுவேன்” என்றாள்

அவள் பயந்துவிட்டாள் என்றதும் தனது பிடியை கொஞ்சம் தளர்த்தியவன் “ என் கேள்விக்கு பதில் சொல்லு உன்னை விட்டுர்றேன்?” என்று குனிந்து அவள் காதருகில் சொன்னான்..

“ நீ என் கையை விடு கை வலிக்குது” என்று கெஞ்சினாள் செல்வி...
தனது பிடியை தளர்த்தி அவளை தன்பக்கமாக திருப்பியவன்,, கையை மட்டும் விடாமல் “ பதில் சொன்னாதான் விடுவேன்” என்றான்..

“ நீ இன்னும் கேள்வியே கேட்கலை?, அப்புறம் என்னத்த பதில் சொல்றது.” என்று சலித்துக்கொண்டவளை ரசித்தவாறு “ ஏன் நீ ஒன்னறை மாசமா கயிறு ஆலைக்கு வேலைக்கு வரலை?” என்று கேட்க...

அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள முயன்றபடி “ இதென்ன கேள்வி? அங்க வேலை செய்ய எனக்குப் பிடிக்கலை அதனால வரலை” பட்டென்று பதில் சொன்னாள்

“ அதான் ஏன் பிடிக்கலை? ஒரு வருஷமா அங்க தான வேலை செய்துகிட்டு இருந்த இப்ப மட்டும் என்னாச்சு?” என்றவனின் குரலில் ஏதோவொன்று அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது..

அவன் என்ன இருக்கு என்று கண்டுபிடிக்க முயன்றபடி “ நீங்க எங்கய்யாவுக்கு சண்டைக்காரவுக... அதனால் உங்க ஆலைக்கு வேலைக்கு வரமாட்டேன்” என்று தீர்மானமாக சொன்னவளை பரிதாபமாக பார்த்தவன்...

“ எங்களுக்கு உங்கய்யாவுக்கும் தான சண்டை... உனக்கும் எனக்கும் இல்லையே? மரியாதையா நாளையிலேருந்து வேலைக்கு வா” என்று அதிகாரம் செய்தவனை முறைத்தாள் செல்வி..

“ இந்த அதிகாரமெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்க... நான் சொன்னா சொன்னதுதான்” என்றவள் அவனை உதறிவிட்டு வேகமாக முன்னால் நடக்க...
அவள் பின்னாலேயே ஓடி வந்த தேவன் “ இதோபார் செல்வி இப்பதான் உன் அய்யாவுக்கும் என் தங்கச்சிக்கும் தான் கல்யாணம் பண்ணப் போறாங்களே.. அப்புறம் என்ன? நீ ஆலைக்கு வா ” என்று சமாதானமாக பேசினான்..

“ கல்யாணம் பண்ணிட்டா நீயும் உன் அண்ணனும் பண்ணதெல்லாம் இல்லைன்னு ஆயிடுமா? மாடு திங்கிற தீனிக்கு நெருப்பு வச்சீங்களே ச்சே” என்றவளை மறுபடியும் பிடித்து நிறுத்தி..

“அது அப்போ ஏதோ கோபத்துல பண்ணது.. இப்பல்லாம் நான் எதுவுமே செய்றதுல்ல... அது உனக்கே தெரியும் செல்வி” என்ற நயந்து வந்தான்

“ ஏன் பொய் சொல்ற,, முந்தாநேத்து உன் வீட்டு வாசப்படியில வச்சு என் முடிய பிடிச்சு இழுத்து தள்ளுனியே மறந்து போச்சா? ” நக்கலாக கேட்டாள்

“ அது .... நீ ஆலைக்கு வரலையேன்னு கோவத்துல அது மாதிரி பண்ணேன்... ஏன் எனக்கு உன்னை தொட உரிமையில்லையா?” என்று அவளை கூர்மையுடன் பார்த்து கேட்டவனை நேராகப் பார்த்து...

“ உனக்கென்ன உரிமையிருக்கு... ரெண்டு மாசத்துக்கு முந்தியாவது நீ எனக்கு சம்பளம் குடுக்குற முதலாளி இப்ப அந்த சம்மந்தம் கூட நமக்கு இல்லை... இங்கபாரு நான் இனிமே உன்னோட ஆலைக்கு வரமாட்டேன்...உங்க சகவாசமே வேனாம்... அங்க வேலை செய்றதைவிட எங்கய்யா வீட்டுல பாத்திரம் கழுவலாம்... அதனால என் வழியவிட்டு உன் வேலையைப் போய் பாரு நான் எங்கப்பாருக்கு சோறு எடுத்துக்கிட்டு போகனும்” என்றவளை அவ்வளவுதானா என்பதுபோல் பார்த்தவன் வழியைவிட்டு ஒதுங்கி நிற்க்க...

அவன் மேலும் தகராறு செய்யாமல் சட்டென்று நகன்றதும் செல்வி அவன் முகத்தைப் பார்த்துவிட்டு தன் வழியேப் போனாள்...

செல்வி நாலடி நடந்திருக்கமாட்டாள் “ செல்வி நான்கூட காலையிலேர்ந்து சாப்பிடலை,, வீட்டு எங்கப்பா கூட சண்டைப் போட்டுட்டு எங்கண்ணன் போயிட்டான், அம்மாவும் அப்பாவும் அம்மாச்சி வீட்டுக்கு போயிட்டாங்க, நான் மட்டும் சாப்பிடாம சுத்திக்கிட்டு இருக்கேன்” என்று தேவன் பரிதாபமாக சொன்னதும்.. போனதவிாட இரண்டு மடங்கு வேகத்தில் திரும்பியவள்..



“ அய்யோ ஏன்யா இன்னும் சாப்பிடலை?... தம்பியை பாத்ததும் பெத்த புள்ளைய மறந்துட்டாங்க பாத்தியா?... ச்சே வீட்டுல எதுவுமேவா செய்து வைக்காமயா ஆத்தா வீட்டுக்கு போறது... உன்னைய பட்டினிப் போட்டுட்டு அங்கபோய் உங்கப்பாவும் அம்மாவும் கறி மீனுன்னு தின்றாங்க” என்ற படபடவென்று பொரிந்து தள்ளியவள் அவனை நெருங்கி “ நீ கொஞ்சநேரம் இங்கயே இருக்கியா? நான் எங்கவீட்டுக்குப் போய் இருக்குறத போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று கேட்க...

இவ்வளவு நேரமாக வீராப்பாக பேசியவள் பசி என்றதும் ஒரு தாயாய் கருணை காட்டியதைப் பார்த்ததும் ‘ ம்ஹ்ம் இதுதான் என் செல்வி’ என்று மனதுக்குள் கர்வப்பட்டவன் “ ஏன் நீ கையில வச்சிருக்குற கேரியர்ல சாப்பாடு தான இருக்கு அதைப் போடேன் செல்வி?” என்றான்

“ம்க்கும் இது எங்கய்யா வீட்டு சாப்பாடு நீதான் அவுகளுக்கு சண்டைக்காரனாச்சே.. அப்புறம் எப்புடி சாப்பிடுவ?” என்று கவலையாக கேட்டவளைப் பார்த்து ... “ நீ குடுத்தா சாப்பிடுவேன் செல்வி” என்றான் தேவன்..

அவன் குரலில் இருந்த வித்தியாசம் செல்வியை தலைகுனிய வைத்தது கால் கட்டைவிரலால் தரையை துளையிட்டப் படி “ சரி வா சாப்பிடு” என்றவள் ஒரு மர நிழலில் கூடையை வைத்துவிட்டு இலையை எடுத்து வைத்துவிட்டு கேரியரை எடுத்தாள்...

“ அய்யோ குடிக்க தண்ணி இல்லையே?” என்றவளிடம் “ இரு என் பைக்ல ஒரு தண்ணிக்கேன் இருக்கு எடுத்துட்டு வர்றேன்” என்ற தேவன் பைக் இருந்த இடத்தை நோக்கி ஓடினான்...

என்கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு உரிமையெடுத்துக்கிறான?’ என்ற குழப்பத்தோடு கேரியரைப் பிரித்து தயாராக எடுத்து வைத்தாள்...

தண்ணீர் கேனுடன் வந்து அமர்ந்தவன் “ உங்கப்பாக்கு சாப்பாடு செல்வி?” என்றான்.. “ அது டான்னு பனிரெண்டு மணிக்கெல்லாம் எங்காத்தா எடுத்துக்கிட்டு போயிரும்,, இன்னேரம் எங்கப்பாரு சாப்ட்டிருக்கும்,, இது நைட்டுக்கு வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்தான் சாப்ட்டுருப்போம்” என்றபடி இலையில் சோற்றை பரிமாறினாள்

தேவன் அகோர பசியில் அவசர அவசரமாக சாப்பிட்டான் ... அவன் பாட்டியின் கைவண்ணத்தில் உணவு அமிர்தமாய் இறங்கியது “ மீனை பதமா பொரிக்க எங்க அம்மாச்சிய அடிச்சிக்க ஆளே கிடையாது” என்று பெருமைபேசியபடி சாப்பிட்டவனைப் பார்த்து களுக் என்று சிரித்த செல்வி....

“ அய்ய மீனு நான் பொரிச்சது” என்றதும்... “ என்னது நீயா செய்த?” என்று ஆச்சர்யப்பட்டவன், அதற்கு மேல் பேசநேரமில்லாது சாப்பிடுவதில் இறங்கினான்..

அவன் அரக்கப்பரக்க சாப்பிடுவதைப் பார்த்ததும் கண்கலங்கிப் போன செல்வி “ இம்பூட்டு பசியை வச்சுகிட்டு.. வந்ததுலருந்து ஏன் வாக்குவாதம் பண்ணிகிட்டு இருந்த?.. சாப்பாடு வேனும்னு சொல்ல வேண்டியது தான?” என்று அக்கரையாக கேட்டவளை நிமிர்ந்து பார்த்த தேவன்...

“ இந்த பசியை இன்னும் கூட என்னால தாங்கமுடியும் செல்வி.. ஆனா என் ஆலையில உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலை செல்வி,, இப்பல்லாம் நான் சரியாவே ஆலை பக்கம் போறதில்லை தெரியுமா? என்னை உனக்கு புரியவேயில்லையா? ” என்று தேவன் வருத்தமா சொல்ல....

செல்வி தன் முழங்காலில் முகத்தை அழுத்திக்கொண்டு “ உங்களுக்கும் அய்யாவுக்கும் சண்டை வந்ததும் எவ்வளவோ பேர் உங்க ஆலை வேலைக்கு வராம நின்னுட்டாங்க.. இதுல நான் மட்டும் என்ன ஒஸ்தி?’ என்று சன்னமாக கேட்டாள்

சாப்பிட்டு முடித்து எழுந்து கைகழுவியவன் “ மறுபடியும் வந்து அவள் அருகில் அமர்ந்து “ எனக்கு நீ யாருன்னு உனக்குத் தெரியலையா செல்வி?” என்று கிசுகிசுப்பாக கேட்க...

செல்வி பதிலே சொல்லாமல் பாத்திரங்களை கூடையில் அடுக்கிக்கொண்டு எழுந்தாள்..

தேவன் எழுந்திருக்காமல் அவள் கையைப்பிடித்து அவளை நகரவிடாமல் “ பதில் சொல்லிட்டுப் போ? செல்வி ” என்றான்..

இம்முறை கையை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்யாமல் “ உனக்கு நான் யாருன்னு எனக்கெப்படி தெரியும்? ” என்று பதில் கேள்வி கேட்டாள்...

“ அது எனக்குத் தெரியும்... நான் கேட்டது மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில் ... ஆலைக்கு வருவியா? மாட்டியா?”

செல்வி அவன் முகத்தைப் பார்க்காமலேயே “ ம்ஹூம் வரமாட்டேன்” என்று கூந்தல் சிலும்பி முன்நெற்றியில் விழ தலையசைத்தாள்

“ அப்ப இவ்வளவு நேரம் எனக்கு சாப்பாடு போட்டது என்கூட பேசினது எல்லாம் சும்மா தானா?” தேவனின் குரலில் நிராகரிக்கப்பட்ட கோபம்

“ அது நீ பசிக்குதுன்னு சொன்ன அதனால போட்டேன்”

“ அப்போ அவ்வளவு தான்? ” என்றவன் சற்றுநேரம் கழித்து “ சரி போ இனிமே நான் உன் வழியில வரவே மாட்டேன்” சொல்லிவிட்டு தனது பைக் நிறுத்தியிருந்த இடத்துக்கு விறுவிறுவென போனான் ..

கொஞ்சதூரம் வரை சென்ற செல்வி மறுபடியும் திரும்பி ஓடிவந்து அவன் பைக்கை ஸ்டார்ட் செய்யுமுன் சாவியை எடுத்துக்கொண்டு “ இப்ப நான் இன்னா சொல்லிட்டேன்னு இம்புட்டு கோவப்படுற? .. இத்தனை நாளா வேலைக்கு வராம இருந்துட்டு இப்போ திடீர்னு நான் வேலைக்கு வந்தா பாக்குறவக தப்பா நெனைக்க மாட்டாகளா?” என்று மெல்லிய குரலில் அவனிடமே திருப்பி கேட்டாள்..

பைக்கில் இருந்து இறங்கிய தேவன்.. “ அப்ப நான் உன்ன எப்புடி பார்க்குறது? நீயே அதுக்கு ஒரு வழி சொல்லு?” என்றான்..

குறும்புடன் அவனை நிமிர்ந்துப் பார்த்த செல்வி “ அய்யா என்னமோ இத்தனை நாளா என்னைய பார்க்காதது மாதிரி சொல்றியே? அதான் எங்கபோனாலும் எதாவது ஒரு சாக்குல என் பின்னாடியே வர்றியே? அதே மாதிரி பார்த்துட்டு போகவேண்டியது தானே? இப்ப மட்டும் என்னமோ புதுசா என்கிட்ட கேட்குற?” என்று அவன் கண்களைப் பார்த்து கேட்க...

மாட்டிக்கொண்டு அவஸ்தையில் நெளிந்த தேவன் “ அது......... உன்னை ஆலையில பார்க்க முடியாம அந்த மாதிரி வந்தேன்.. ஆனா எனக்கு அது போதாதே?” என்று கெஞ்சினான்

“ போதாதுன்னா இன்னும் என்ன வேனும்?” செல்வியின் குரல் அவளுக்கே கேட்கவில்லை..

“ எனக்கு நெதமும் உன்கூட பேசனும், இப்படி கொஞ்சநேரமாவது உன் முகத்தைப் பக்கத்துல இருந்து பார்க்கனும்” என்று காதலோடு பிதற்றினான் தேவன் ...
இருவரும் இதுவரை நேரடியாக காதலை சொல்லவில்லையே தவிர ஒருவர் மனது மற்றவருக்கு தெரியும், தேவன் கவனித்துக்கொள்ளும் ஆலையில் வேலைக்குச் சேர்ந்த போது அங்கு வேலை செய்யும் மற்ற பெண்களைப் போலத்தான் செல்வியும்.. நாளாக நாளாக அவளின் துடுக்கான பேச்சும் சுறுசுறுப்பும் தேவனை பெரிதும் கவர அவளிடம் சும்மாவேனும் ஏதாவது பேச்சுக்கொடுத்தான்... பெரிய கண்களை விரித்து, நெற்றியில் வந்து கற்றையாக கூந்தல் விழ தலையை இப்படியும் அப்படியும் ஆட்டியபடி பேசும் அவள் அழகை கண்டு மயங்கி நிற்பான், அவன் தன் காதலை உணரும் தருணத்தில் தான் குடும்பத்தில் தகராறு வந்து செல்வி வேலைக்கு வராமல் நின்று போனாள்... அவளை காணாமல் தவித்து அவள் போகுமிடமெல்லாம் மறைவாக இவனும் பின்னால் போவான்... அப்படித்தான் அன்றும் அவளைத் தேடி எங்குமே இல்லையென்றதும் பயங்கர கோபத்தோடு தன் வீட்டுக்குப் போனவன் அங்கே செல்வி நாட்டாமை பண்ணிக்கொண்டு இருக்க.. அவளைப் பார்க்க முடியாத ஆத்திரத்தில் கூந்தலைப் பற்றி இழுத்தது.. ஆனால் அதற்காக தேவன் வருந்தவே இல்லை.. எனக்கு உரிமையிருக்கு நான் பண்ணுவேன் என்று நினைத்தான் .. இன்று அவளின் இரண்டிலொன்று முடிவு தெரிந்தே ஆகவேண்டும் என்றுதான் பின்னாலேயே வந்தது..

“ சொல்லு செல்வி உன்னை எப்படி தனியா பாக்குறது?” என்று மறுபடியும் கேட்டவனை பார்த்து குறும்பாக சிரித்தவள் “ இப்ப என்னமோ நம்ம கூட நூறுபேர் இருக்குற மாதிரி பேசுற.. என்று சொல்லிவிட்டு வாய்ப்பொத்தி சிரிக்க...

“ ஏ.... செல்வீ.......... அப்பன்னா இனிமே இங்கயே பார்த்துக்கலாம்னு சொல்றியா?” என்று ஆர்வத்துடன் கேட்டான் தேவன் ...

“ அய்யோ போ போ .. நான் ஒன்னும் அப்படி சொல்லலை” என்று ஓடியவளை மறித்து நின்று...

“ நாளைக்கு இதேநேரம் இங்க வந்து உனக்காக காத்திருப்பேன் செல்வி, நீ கட்டாயம் வரனும், இல்லேன்னா எவ்வளவு நேரமானாலும் இங்கேயே இருப்பேன், வீட்டுக்கு போகமாட்டேன்... அப்புறம்.. உனக்காக நான் ஒன்னு வாங்கி வச்சிருக்கேன் , நாளைக்கு நீ வந்ததும் அதை தருவேன்” என்று தன் காதலை மறைமுகமாக சொல்லியேவிட்டான் தேவன்

சிலவிநாடிகள் மவுனத்திற்கு பிறகு ... சரியென்று தலையசைத்து விட்டு நகர்ந்தவளை மறித்து நின்ற தேவன் “ செல்வி இத்தனை நாளா உன் பின்னாடியே அலைஞ்சேனே உனக்கு இரக்கமேயில்லையா?” என்று கேட்டதும்...

“ அதான் நாளைக்கு வர்றேன்னு சொன்னேன்ல அப்புறமா ஏன் சும்மா சும்மா வழி மறிச்சு நிக்கிற ” என்று கூறியபடி குழப்பத்துடன் நிமிர்ந்தவள் தேவன் தன் உதடுகளையே தாபத்துடன் பார்ப்பதைப் பார்த்து “ ஏய் ச்சீ” என்று வெட்கத்துடன் விலகினாள்..

“ என்ன ச்சீ, வா செல்வி ஒன்னே ஒன்னுதான் ” என்று அவள் கையைப்பிடித்து இழுத்து தன் நெஞ்சில் சாய்த்தவன் அவள் திமிறி விடுபடும்முன் சட்டென்று குனிந்து அவள் இதழ்களை கவ்விக்கொண்டான்... இத்தனை நாட்களாக பார்த்துப் பார்த்து ஏங்கியது கைக்கு கிடைத்த சந்தோஷத்தை அவளை அணைத்துக்கொண்டு ஆழமாய் முத்தமிட்டான்

முதலில் மறுத்து முரண்டியவள் நேரம் செல்ல செல்ல தன் இதழ்களை பிளந்து அவன் மூச்சு தன்னோடு கலக்க வழி விட்டாள்,, நேற்றுவரை இரு துருவமாக இருந்தவர்கள் இன்று மூச்சுடன் மூச்சாக கலந்தார்கள்..

தேவன் தனது முதல் முத்தத்தில் மயங்கி ஆர்வமாய் அவளின் கீழுதட்டை கடித்துவிட,, பட்டென்று அவனிடமிருந்து தன் உதடுகளை பிடுங்கிக்கொண்டு அணைத்திருந்த அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டு வெட்கத்துடன் ஓடினாள் செல்வி...

“ ஏய் ஏய் செல்வி” என்று அவள் பின்னாலேயே ஓடிவந்த தேவன் யாரோ எதிர் திசையில் வருவதைப் பார்த்து “ நாளைக்கு மறக்காம வந்துடு காத்திருப்பேன்” என்று அவளுக்கு மட்டும் ரகசியம் சொல்லிவிட்டு கிளம்பினான்

குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நிக்க
உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நிக்க
கூறாம போனவளே குருவம்மா
பதில் கூறாம போனவளே குருவம்மா
அட வருத்தமென்ன வருத்தமென்ன பருவமா
நாம வெலகி நிக்க ரெண்டும் ரெண்டு துருவமா

குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நின்னு
உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நின்னு
பேத்தாம பேத்தி நிக்கும் மருதைய்யா
மேளங்கொட்டாம கேக்குறியே உரிமையா
உன்ன பாக்குறப்போ உள்ளூர ஒண்ணு வருதையா
நீயும் பரிசம்போட்டு ஒரசி பாக்க வருவியா

சுண்ணாம்பு வெத்தல வச்சு...ஹோய்
சாயப்பாக்கு சந்தனம் வச்சு...ஹோய்
பொண்ணு பாக்க வந்தா என்ன மாமாவே..ஹோய்

பஞ்சாங்க ஐயர வச்சு ..ஹோய்
பந்தலில நாளக்குறிச்சு..ஹோய்
கண்ணாலம் செஞ்சா என்ன மாமாவே..ஹோய்

கண்ணாலம் கட்டும் முன்னே...ஹோய்
கெட்டிமேளம் கொட்டும் முன்னே....ஹோய்
கைவிரலும் பட்டா என்ன ஆகாதோ..ஹோய்

வண்ணாத்தி பூச்சி போல...ஹோய்
வெள்ளெருக்கம்பூவ போல..ஹோய்
உன்னழக கண்டா நெஞ்சம் வாடாதா.

அடி மஞ்ச கெழங்கே சிறு இன்ப கிடங்கே
கட்டிக்கரும்பே கொடி முல்லை அரும்பே

அடி பாக்காம போனவளே குருவம்மா
ஒரு பெண்ணென வந்தது
பொன்னுல பண்ணிய உருவமா

குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நின்னு
உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நின்னு
பேத்தாம பேத்தி நிக்கும் மருதைய்யா
உன்ன பாக்குறப்போ உள்ளார ஒண்ணு வருதையா
நீயும் பரிசம்போட்டு ஒரசி பாக்க வருவியா

பெண்ணான பெண் உறங்க..ஹோய்
பொன்னுமணி கண்ணுறங்க..ஹோய்
பச்ச புல்ல போட்டு வைப்பேன் பாய் போல ஹோய்



முத்தான முத்தழகி..ஹோய்
மஞ்சமலர் கொத்தழகி...ஹோய்
முத்தம் ஒண்ணு வச்சா என்ன பூப்போலே..ஹோய்

வெட்டாம வெட்டுது கண்ணூ..ஹோய்
வெக்கம் விட்டு ஒட்டுது பொண்ணு..ஹோய்
என்ன வேணும் கண்டுபுடி மாமாவே..ஹோய்

நையாண்டி மேளத்த தொட்டு..ஹோய்
கையிரண்டில் தாளத்த தட்டு..ஹோய்
உன்னாட்டம் நானும் ரெடி மாமாவே

அடி தொட்டுப் புடிக்க புது மெட்டுப் படிக்க
அள்ளி அணைக்க கனி கிள்ளி பறிக்க
ஆத்தோரம் இடமிருக்கு வசதியா
ஒரு ஒத்தடம் வைக்க ஒத்திக பாக்க வருவியா

குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நின்னு
உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நின்னு
பேத்தாம பேத்தி நிக்கும் மருதைய்யா
மேளங்கொட்டாம கேக்குறியே உரிமையா

உன்ன பாக்குறப்போ உள்ளூர ஒண்ணு வருதையா
ஹயோ...
நீயும் பரிசம்போட்டு ஒரசி பாக்க வருவியா

அடடடட.........
குறுக்கு பாதையிலே மறிச்சு வழியில் நிக்க
உறுத்தும் இளமனசின் அருத்தம் தெரிஞ்சு நிக்க
கூறாம போனவளே குருவம்மா
பதில் கூறாம போனவளே குருவம்மா
உனக்கு வருத்தமென்ன வருத்தமென்ன பருவமா
நாம வெலகி நிக்க ரெண்டும் ரெண்டு துருவமா 


No comments:

Post a Comment