Saturday, November 28, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 14

மதுரை பொண்ணு என்ற வார்த்தையை கேட்டதுமே வீரேனின் முகம் மாறியது.. எல்லாம் அவளால் வந்தது தான் என்று ஆத்திரம் வந்தது... “ நான் அதுக்கப்புறம் அம்ருதாவை மறக்க முடியாம வாரத்துக்கு ரெண்டு முறை மதுரைக்கு போய்ட்டு வருவேன்.. ஆனா மான்சி விஷயம் தெரிஞ்சதும் அம்ருதா என்கூட பேசுறதை நிறுத்திட்டா.. என்னிக்காவது ஒருநாள் பேசுவான்னு நேத்திக்கு முதல் நாள் கூட அவ காலேஜ் வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தேன்” என்று வீரேன் சொல்லவும்..

ஜோயல் அமைதியாக இருந்தாள்... அவள் விரல்கள் எதிரேயிருந்த வெற்றுத்தாளில் பென்சிலால் கோடு கிழித்துக்கொண்டிருந்தது... குனிந்த தலையை நிமிராமலேயே “ அப்போ நீங்க அம்ருதாவை ரொம்பலவ் பண்றீங்க... சீக்கிரமா அவங்கஉங்களை புரிஞ்சுக்கனும்னு வாழ்த்துறேன் வீரேந்தர்” என்றாள்.. ஒரு மாதிரி வரண்ட குரலில்..

வீரேனுக்கும் அவள் குரலில் தெரிந்த மாற்றம் உரைத்தது.. அவள் பென்சிலால் கிழித்த கோடுகளைப் பார்த்தான்.. பேப்பரே கிழியும் அளவிற்கு தாறுமாறாக கோடு கிழித்திருந்தாள்..

வீரேனின் முகத்தில் லேசான புன்னகை “ நீங்க வாழ்த்து சொல்லவேண்டிய அவசியம் இல்லைங்க... ஏன்னா அவ எனக்கு தேவையும் இல்லை... கடைசியா அவளைப் பார்த்தப்பவே அவ அண்ணன் வாழமுடியாத வீட்டுல தனக்கு வாழ விருப்பமில்லைனு சொல்லிட்டா... அவளுக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் பண்ணிட்டாங்களாம்.. அவ சொன்னதுக்கப்புறம் தான் எனக்கே ஒரு விஷயம் புரிஞ்சுதுங்க? ” என்று வீரேன் நிறுத்தியதும்..

என்ன புரிந்தது? என்பதுபோல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஜோயல்... அவள் முகம் தெளிவாக இருந்தது

“ அந்த மதுரைக்காரனோட கணக்கு எங்க வீட்டு சொத்து வெளிய போகக்கூடாது.. அதாவது பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்தா மொத்தமும் அவங்க கைல இருக்குற மாதிரி தான,,.. அந்த கணக்குல தான் இருந்திருக்கான்னு எனக்கு இப்போப் புரியுதுங்க.. நீங்களே சொல்லுங்க.. உண்மையான அன்பு உள்ளவளா இருந்திருந்தா யார் எதிர்த்தாலும் என்கூட வந்திருப்பாளே? அவளுக்கு அப்படியெல்லாம் இல்லைப் போலங்க ” என்று தான் காலங்கடந்து கண்டுபிடித்ததை இப்போது பெருமையாக சொல்லிக்கொண்டான் ..

“ ஓ....... அப்போ நீங்க ரொம்ப பெரிய பணக்காரங்களா?” இது ஜோயல்...

“ அட ரொம்பல்லாம் இல்லைங்க... எல்லாமே எங்க தாத்தா கொடுத்தது தான்.. நாங்க ஏழைப் பணக்காரங்கன்னு வித்தியாசம் பார்க்க மாட்டோம்... உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? என் தம்பிக்கு கல்யாணம் பண்ணப்போற பொண்ணு எங்க மாமா வீட்டுல வேலை செய்யுற செல்விதான்.. எங்கப்பா அம்மா முடிவு பண்ண கல்யாணம் இது தெரியுமா? எங்க வீட்டுல பணத்தை பெரிசா நெனைக்கமாட்டாங்க ” இதையெல்லாம் ஏன் இவளுக்கு சொல்கிறோம் என்று புரியாமலேயே சொன்னான் வீரேன்

அவன் சொன்னப் பிறகு அங்கே பெரும் அமைதி... ஜோயல் எதுவும் பேசாமல் தன் பக்கத்தில் இருந்த பிளாஸ்கை திறந்து அவளுக்கு ஒரு டம்ளரிலும்.. வீரேனுக்கு பிளாஸ்க் மூடியிலும் டீயை ஊற்றி அவனருகே நகர்த்தி வைத்தாள்... இவள் எடுத்துக்கொள் என்று கூறவுமில்லை.. அவன் டீ கப்பை எடுக்க தயங்கவும் இல்லை. டீயை எடுத்து இருவரும் உறிஞ்சினர்...


வீரேன் குடித்து முடித்து டீ கப்பை வைக்கும்போது அவள் முகத்தைப் பார்த்து “ என்னைப்பத்தி இவ்வளவு சொல்லிருக்கேன்.. நீங்க இன்னும் உங்க பெயரை கூட சொல்லலை? ” என்று வருந்துவது போல் கூறினான்...

முகத்தில் பளிச்சிட்டப் புன்னகையுடன் “ நீங்க கேட்டா தானே சொல்லமுடியும்? என் பெயர் ருத்ரா ஜோயல்.... MBBS முடிச்சிட்டு, சர்ஜனா ப்ராக்டீஸ் பண்ணிகிட்டு இருக்கேன் ” என்றாள்..

அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் இருவருமே மவுனம் காத்தனர்.. அவள் முகத்தை நேரடியாக பார்க்கக்கூட முடியாமல் வேறு எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தபடி அமர்ந்திருப்பது வீரேனுக்கு சங்கடமாக இருந்தது... மெல்ல எழுந்து “ சரி நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு திரும்பினான்...

“ ஒரு நிமிஷம் இருங்க” என்று ஜோயலின் குரல் தடுத்தது..... வீரேன் நின்று திரும்பினான்

“ எல்லாம் சொன்னீங்க வீரேன்? உங்க தங்கச்சிய யார் வெட்டுனது? ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம அருவாளால வெட்டுற அளவுக்கு மான்சிக்கு யார் விரோதி? நீங்க ஏன் உங்க தங்கச்சிகிட்டயும் மாமாகிட்டயும் மன்னிப்பு கேட்டீங்க? இதையெல்லாம் சொல்லாம போறீங்களே வீரேன்? ” புருவங்கள் முடிச்சிட கூர்மையாக கேட்டாள் ஜோயல்..

இவளுக்கு விஷயமே தெரியாமத்தான் என்கூட இவ்வளவு நேரம் பேசினாளா? என்ற கேள்வி எழ... பல விநாடிகள் யுகங்களாக கழிய... கால் வேர்பிடித்து நின்றிருந்தான்... பிறகு ஒரு முடிவுடன் அவளைப் பார்க்காமல் தரையைப்பார்த்து “ நான்தான் என் தங்கச்சியை வெட்டினேன்... என் மாமாவ வெட்டப்போனேன் அப்போ மான்சி வந்து குறுக்கே விழுந்ததால வெட்டு மான்சி மேல விழுந்துடுச்சு... அதனால்தான் என் வீட்டுல எல்லாரும் என்னை இப்போ வெறுக்குறாங்க.. இதுக்குத்தான் நான் மான்சி கிட்டயும் மாமா கிட்டயும் மன்னிப்பு கேட்டேன்” என்று ஒரு வழியாக சரளமாக சொல்லி முடித்தான்

சிறிதுநேரம் வரை ஜோயலிடம் பதில் இல்லாமல் போகவே... நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் அதிர்ந்துபோனான்... அவள் முகம் ரௌத்திரமாக சிவந்து போயிருக்க.. உடல் தடதடவென்று உதறியது ... பலத்துக்காக மேசையில் கையூன்றி நின்றிருந்தாள்.. அவள் பார்வை வீரேனை காலில் மிதித்த அசிங்கத்தைப் பார்ப்பது போல் வீரேனை பார்த்தது...

ஊன்றியிருந்த வலது கையை எடுத்து அவனை நோக்கி நீட்டி “ இனி நிமிஷம் கூட இங்கே நிற்க்காதே... வெளியப்போ...” என்றாள் ஆத்திரமாக... ஆனால் அடக்கிவைத்த குரலில்

வீரேன் இதை எதிர்ப்பார்க்கவில்லை “ இல்லங்க நான்........ “ என்று அவளை நெருங்கினான்...

சீற்றத்துடன் நிமிர்ந்தாள் ஜோயல் “ ஏய் போ வெளியே... நீ என் கையைப் பிடிச்சிக்கிட்டு அழுதப்ப தங்கச்சி மேல இவ்வளவு பாசமானவனான்னு ஆச்சிரியப்பட்டேன்... இப்பதான தெரிஞ்சது அதுக்கு காரணமானவனே நீதான்னு... ச்சே ஒரு கர்ப்பிணி பொண்ணைப் போய் இப்படியா... உங்க மாமாவை வெட்டினாலும் அவரும் மனுஷன் தானே? ச்சே சொந்த உறவுகளைப் போய் இப்படி ..... உங்கப்பா உங்களை வெறுத்து ஒதுக்கியதில் தப்பே இல்லை” என்று கொதித்து குமுறியவள் சட்டென்று அடங்கி சூழ்நிலை உணர்ந்து.. பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்துவிட்டு “ ப்ளீஸ் என் எதிரில் வராதீங்க வெளியப் போங்க மிஸ்டர் வீரேந்திரன்” என்று தனது குரலை முடிந்தவரை அடக்கிக்கொண்டு கூறினாள்..

வீரேன் எது சொன்னாலும் எடுபடாது என்ற நிலையில் தலைகுனிந்து அமைதியாக வெளியேறினான்...



" ஆண்கள் எத்தகைய ஏவுகனைத்...

" தாக்குதல்களையும் சமாளிக்கலாம்!

" பெண்களின் கோபம் என்ற சிறு...

" தீக்குச்சித் திருவிழாவை தாங்கமாட்டார்கள்!

" ஒருத் துளி காட்டினாலே...

" ஊரே மூழ்கிப் போகும் விஷம்...

" பெண்களின் கோபம்!

" இதில் ஆண்கள் குத்துயிரின் குரல் போல...

" காற்றில் கறைந்து போவார்கள்! 



வீரேன் தலைகுனிந்து வெளியேறியதும் ஜோயல் மேசையின் மேல் அப்படியே கவிழ்ந்தாள்... காலையில் வீரேன் அவள் கையைப் பற்றிக்கொண்டு தங்கைக்காக அழுதபோது.. அந்த கம்பீரமான ஆணுக்குள் இருந்த குழந்தையைத் தான் பார்த்தாள் ஜோயல்... ஆனால் அவனுக்குள் இப்படியொரு கொடூரன் இருப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை....

அவள் கண்களில் தேங்கிய நீர் மேசையில் சொட்டியது... ‘ ச்சே இன்னிக்கு காலையில பார்த்த எவனோ ஒருத்தனுக்காக நான் ஏன் அழனும்... அவன் எப்படிப் போனால் எனக்கென்ன’ அலட்சியமாக கண்ணீரை சுண்டிவிட்டு தனது கடமையை செய்ய எழுந்தாள்..

இரவு மணி ஒன்றாகியது ரவுண்ட்ஸ் முடித்து தன் கேபினுக்கு வந்து வீரேனின் நினைவை பிடிவாதமாய் ஒதுக்கிவிட்டு மேசையில் கவிழ்ந்து படுத்தாள்.. சற்றுநேரத்தில் உறங்கியும் போனாள்...

அதிகாலை நாலு மணிக்கு ‘ மாமா .... மாமா” என்ற மான்சியின் முனங்கல் கேட்டு பதறி விழித்து எழுந்து மான்சியிடம் ஓடி “ என்னம்மா? என்ன பண்ணுது ” என்று அன்பாக கேட்க....

மான்சியின் முகம் வேதனையில் சுருங்கியது “ என்னால இப்படி ஒரு பக்கமாவே படுத்திருக்க முடியலை.. பயங்கரமா வலிக்குது” என்று முனங்கியவள் கண்களில் கண்ணீர் தேங்கியது..

ஜோயல் ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்டிருந்த நிலையில் மான்சியின் இந்த வார்த்தைகள் அவள் நெஞ்சை கிழித்தது... ‘ கொலைகார ராஸ்கல்’ என்று வீரேனை மனதுக்குள் திட்டியபடி “ கொஞ்ச நேரம் ஒரு பக்கமா சாய்ஞ்சு உட்கார்றியா மான்சி? நான் தாங்கிப் பிடிச்சுக்கிறேன்?” என்று அன்பாக சொல்லி மான்சியின் அருகில் போனாள்

மான்சி இடமும் வலமுமாக தலையை அசைத்து “ ம்ஹூம் எனக்கு என் மாமா தான் வேனும்... அவரை கூட்டிட்டு வாங்களேன் ப்ளீஸ்” என்று கெஞ்சியவளைப் பார்த்து ஜோயலின் மனம் கசிந்தது...

‘ சின்ன குழந்தை மாதிரி மனசு... இவளைப் போய் காயப்படுத்த எப்படிதான் மனசு வந்தது’ என்று வீரேன் மீது அவள் நெஞ்சில் வஞ்சம் ஏறியது... ஒரு தாயின் கருணையோடு மான்சியின் கூந்தலை கோதி “ நீ அழக்கூடாது மான்சி... இப்ப என்ன மாமா வரனும் அவ்வளவு தானே? உன் மாமாவையே வரச்சொல்றேன் போதுமா?” என்றவள்... அருகில் நின்ற நர்ஸிடம் “ வெளியே பெஞ்சில் இவங்க ஹஸ்பண்ட் படுத்திருப்பாரு... அவரை வரச்சொல்லுங்க சிஸ்டர்” என்றாள்...

சற்று நேரத்தில் சத்யன் வேகமாக வந்து ... மான்சியின் கலங்கிய விழிகளைப் பார்த்து பதறி... கட்டிலின் ஓரம் அமர்ந்து அவள் கன்னத்தை கைகளில் தாங்கி “ என்னடா கண்ணம்மா?” என்று கேட்டவனின் குரலிலும் கண்ணீர்..

“ என்னால ஒருபக்கமா படுத்திருக்க முடியலை மாமா... இங்க மிஷின் சத்தமா கேட்குது.. எனக்கு பயமாயிருக்கு.. தூக்கமே வரலை மாமா... நாம வீட்டுக்குப் போயிரலாம்..என்னைத் தூக்கிட்டுப் போயிடு மாமா” என்று கலங்கிப் போய் கூறியவளுக்கு பதில்கூற முடியாமல் சத்யன் ஜோயலைப் பார்த்தான்...

‘ நான் சொல்றேன்’ என் கண்ணால் ஜாடை செய்துவிட்டு “ இதோபார் மான்சி எட்டு மணிக்கு சீப் டாக்டர் ரவுண்ட்ஸ் வருவாரு அப்போ கேட்டுகிட்டு உன்னை ரூமுக்கு மாத்திடலாம்... அது தனி ரூம்.. உன் வீடு மாதிரி நிம்மதியா தூங்கலாம்... உன் மாமாவும் கூடவே இருப்பாரு... உனக்காக இல்லேன்னாலும் உன் வயித்துல இருக்கிற பாப்பாவுக்காக நீ தாங்கிக்கனும் மான்சி... இல்லேன்னா பாப்பாவுக்கு பலகீனமாயிடும்மா” என்று அன்பும் கருணையுமாக ஜோயல் சொன்னதும் மான்சி சற்று அமைதியானாள்

“ சார் நீங்க கட்டில்ல ஏறி நல்லா உட்கார்ந்து மான்சியை தூக்கி உங்க மார்பில் சாய்ச்சு உட்கார வைங்க... இடது பக்கமா இருக்குற மாதிரி உட்கார வைங்க... கட்டிலினெ தலைபக்கம் இருக்கும் பிளேட்டை உயர்த்தி மான்சியை உட்கார வைக்கலாம்... ஆனா காயம் கட்டிலில் அழுத்தி ரொம்ப வலியெடுக்கும்.. அதனால மான்சி எப்ப உட்கார நினைச்சாலும் யாராவது ஒருத்தர் பின்னாடியிருந்து தாங்கிக்கனும் சார் ” என்று சத்யனிடம் சொல்லிவிட்டு மான்சியை தூக்க உதவி செய்தாள்...

சத்யன் மான்சிக்குப் பின்னால் ஒரு மடித்துக் கொண்டு ஒரு காலை கட்டிலுக்கு வெளியே தொங்கவிட்டு அமர்ந்து கொண்டான்... ஜோயலும் நர்ஸும் மான்சியை மெல்ல தூக்கி சத்யன் நெஞ்சில் சாய்க்க... மான்சி சரிந்துவிடாமல் இடுப்பை சுற்றி வளைத்து தன்மீது சாய்த்துக் கொண்டான் சத்யன் ..

சரியாக மான்சியை அமர்த்திவிட்டு நிமிர்ந்த ஜோயல் “ இப்போ கொஞ்சம் பரவாயில்லையா மான்சி?” என்று கேட்க ..

“ ம்ம் இப்படி உட்கார்ந்திருக்கிறது நல்லாருக்கு... ஏன்னா பின்னாடி இருக்கிறது என் மாமாவாச்சே? அதனால வலியே தெரியாது” என்று மான்சி அந்த நிலையிலும் குறும்பு பேசினாள் ..

“ சரியான குறும்புக்காரி” அவள் கன்னத்தில் செல்லமாக தட்டிய ஜோயல் “ நீங்க ரொம்ப லக்கி சத்யன்..... உங்கமேல உயிரையே வச்சிருக்கா...இனிமேல் எதுவுமே அவகிட்ட நெருங்காதபடி கவனமாப் பார்த்துக்கங்க” என்று சத்யனிடன் சொன்னாள்

சத்யன் பெருமையாக புன்னகைத்து தலையசைக்க... மான்சி அவசரமாக கையசைத்து “ அய்யோ டாக்டர் நீங்க தப்பா சொல்றீங்க... நான்தான் ரொம்ப ரொம்ப லக்கி... என் மாமாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாது... அதுவும் என்மேல உயிரையே வச்சிருக்கு” என்று சொல்ல....

“ ம் சரி சரி ரெண்டு பேருமே லக்கி தான்... ஆமா அதென்ன புருஷனைப் போய் அது இதுன்னு கூப்பிடுற... வாங்க போங்கன்னு சொல்லமாட்டியா மான்சி?” என்ற ஜோயலுக்கு மான்சியிடம் பேசிக்கொண்டிருக்க ரொம்ப பிடித்திருந்தது... அவள்மீது ஒரு இனம்புரியாத பாசம் ஏற்பட்ட மனதை நிறைத்திருந்தது...

“ ம்ஹூம் நான் சின்ன வயசுல இருந்து அப்படித்தான் கூப்பிடுவேன்... இனிமேலும் அப்படித்தான் கூப்பிடுவேன்” என்றாள் மான்சி..

“ சரி உன் மாமா நீ எப்படி வேனும்னாலும் கூப்பிடும்மா தாயே” என்று பின்வாங்கிய ஜோயல் சத்யனைப் பார்த்து “ சார் ஆறு மணிக்கு என்னோட டியூட்டி டைம் முடிஞ்சிரும்... எட்டு மணிக்கு சீப் வந்ததும் ரூமுக்கு சிப்ட் பண்ண சொல்லி கேளுங்க.. நானும் என்னோட ரிப்போட்ல மான்சி நார்மலாத்தான் இருக்காங்கன்னு எழுதி வச்சிட்டுப் போறேன்... நைட் ஏழு மணிக்கு மறுபடியும் வரும்போது மான்சியை வந்து பார்க்கிறேன்...” என்று கூற.... சரியென்றான் சத்யன்

அவர்களை தனியாக விட்டுவிட்டு தனது கேபினுக்கு வந்த ஜோயலுக்கு சற்றுமுன் மனதை அடைந்திருந்த பாரம் மான்சியிடம் பேசியதால் குறைந்திருந்தது.. கைப்பையில் தனது பொருட்களை எடுத்து வைத்தவள்,, மேசையை ஒழுங்குப்படுத்தினாள்... வீரேன் டீ குடித்துவிட்டு வைத்த பிளாஸ்க் மூடி கழுவாமல் அப்படியே இருந்தது..

அந்த கப்பையே எடுத்து சிறிதுநேரம் பார்த்தவளுக்கு... ‘குழந்தை மாதிரி எவ்வளவு வெகுளியா பேசினானே’ என்ற வேதனை தழும்பியது... இன்னோரு விஷயமும் அவள் மனதில் ஓடியது... இவ்ள் கேட்டதும் மறைக்காமல் உண்மையை சொன்னானே... என்றும் மனம் வாதிட்டது... சற்றுநேரம் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்... அவள் மனமே அவளுக்கு எதிரியானது


ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் எனை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

மனைவியை இதமாக நெஞ்சில் தாங்கியிருந்த சத்யன்.... அவளின் உச்சந்தலையில் தனது தாடையை ஊன்றி “ மான்சி இப்போ வலி பரவாயில்லையா?” என்று கவலையாக கேட்க.... “ சுத்தமா வலியே இல்ல மாமா... நீ உன் கையை என் வயித்துல வச்சுக்கோயேன்” என்றதும் .. சத்யன் அவள் இடுப்பில் இருந்த தனது கையை எடுத்து வயிற்றில் சுற்றி அணைத்தார்ப் போல் வைத்துக்கொண்டான்

“ மாமா “ என்று மான்சி அழைக்க.... ஏதோ ரகசியம் சொல்லப்போகிறாள் என்று அவள் குரலே சொன்னது.... “ என்னடா?” என்ற சத்யனின் குரல் அதைவிட ரகசியமாக இருந்தது...

“ எனக்கு இப்போ பாப்பா வந்தது உனக்கு பிடிக்கலையா?” என்ற மான்சியின் கேள்வியில் சத்யன் சற்று குழம்பித்தான் போனான்...

“ என்ன மான்சி இப்படி கேட்கிற? எனக்கு ரொம்ப சந்தோஷம்தான் மான்சி... உனக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்?” குழப்பமான குரலில் கேட்டான்
அவன் நெஞ்சில் இருந்தவாறு தலையைத் திருப்பி அவன் முகத்தைப் பார்த்து “ நேத்து நீ ஒரு முத்தம் கூட வயித்துல குடுக்கவே இல்லை மாமா... அதான் உனக்கு பிடிக்கலையோன்னு கேட்டேன்” என்று குசுகுசுவென மான்சி சொல்ல...

சத்யனுக்கு அவள் மனம் புரிந்தது... எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் அவளின் குழந்தை மனமும் புரிந்தது.... தானும் இதுவரை குழந்தையைப் பற்றி பேசாதது சற்று உறுத்தலாக இருந்தது.. இனிமேல் அவள் வருந்தும்படி நடக்கக்கூடாது என்று நினைத்து இவனும் அவள் காதருகே குனிந்து “ தேவதை மாதிரி பொண்டாட்டியைப் பார்த்ததும் குழந்தை மறந்துபோச்சு... இனிமே மறக்காம மொதல்ல பாப்பாவுக்கு தான்” என்று ரகசியம் சொன்னபடி. அவள் வயிற்றை மென்மையாக வருடினான்

“ ஆங் அதெல்லாம் வேணாம் வேணாம்.. மொதல்ல எனக்குதான்... அப்புறம்தான் பாப்பாவுக்கு.. சரியா?” என்று பதட்டமான குரலில் மான்சி கூறியதும்.. அவள் காயத்தை மறந்து சத்யனின் அணைப்பு இறுகியது.. குனிந்து அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டு மூக்கால் உரசி “ சரிடா உனக்குத்தான் பர்ஸ்ட்” என்று கொஞ்சினான்

“ மாமா நேத்து ஞாபகமாவே இருக்கு மாமா ? எப்ப வீட்டுக்குப் போவோம்னு இருக்கு? ” ஏக்கத்துடன் வருந்தினாள் மான்சி

அணைப்பை இலகுவாக்கி இன்னும் கொஞ்சம் முன்னால் குனிந்து மெல்லிய குரலில் “ ம்ம் எனக்கும்தான் வெளியப் படுத்தா தூக்கமே வரலை... நேத்து நடந்ததை நெனைச்சிகிட்டே கண்மூடிக் கிடந்தேன்” என்ற சத்யனின் பதிலில் அவனது ஏக்கமும் ஒலித்தது

மான்சி எதுவுமே பேசவில்லை... இருவருமே அமைதியானார்கள்.. ‘ ஒருநாள் இரவு மட்டுமே அனுபவித்த சொர்க்கம் மறுநாள் பறிபோனதை இருவரும் ஒரே மாதிரியாக மனதில் எண்ணினார்கள்... இன்னும் ஏதாவது பேசி அவள் ஏக்கத்தை தூண்டிவிடக்கூடாது என்று சத்யன் அமைதியானான்... தன்னால் மாமாவின் ஏக்கத்தை போக்கமுடியவில்லையே என்று மான்சி அமைதியானாள்... இருவருமே தங்களின் இணையைப் பற்றிதான் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.. தன் வயிற்றை வருடிய சத்யனின் கையை மான்சி அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள்



சற்றுநேரத்தில் அங்கே வந்த ஜோயல் “ சார் நான் கிளம்பனும்.. மான்சியோட ரிப்போர்ட் ரெடி பண்ணி வச்சிட்டேன்... நீங்க வெளியப் போய் வெயிட்ப் பண்ணுங்க... டாக்டர் வரவும் கேட்டுகிட்டு ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க” என்ற கூறியபடி சத்யன் நெஞ்சில் இருந்த மான்சியை அக்குளில் கைகொடுத்து தன் மார்போடு அணைத்துப் பிடிக்க.. சத்யன் சட்டென்று எழுந்துகொண்டு மான்சியின் முதுகை தாங்கி படுக்கையில்க் கிடத்தினான்

“ சரி மான்சி நான் வெளிய வெயிட்ப் பண்றேன்டா” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு விலகிய சத்யனின் கையை தனது தளிர்க்கரத்தால் பற்றிய மான்சி வார்த்தைகளின்றி பார்வையால் தனது ஏக்கத்தை சொல்ல...

அந்த நிமிடம் சத்யன் அங்கே ஜோயல் இருப்பதை மறந்து சட்டென்று குனிந்து மான்சியின் உதடுகளை கவ்விக்கொண்டான்... இந்த திடீர் முத்தத்தில் ஜோயல் தான் தடுமாறிப் போனாள்...

சட்டென்று சுவர் பக்கமாக திரும்பியவள் “ ம்ம் போதும் சத்யன் சார் நானும் இங்கதான் இருக்கேன்” என்று குறும்புடன் கூறியதும் சத்யன் சுதாரித்து விலகினான்... அதற்குமேல் நிற்க்காமல் விலகி வெளியேப் போனான்..

சற்றுநேரத்தில் தனது கைப்பையுடன் வெளியே வந்த ஜோயல் சத்யனைப்பார்த்து புன்னகையுடன் தலையசைத்துவிட்டு கிளம்பினாள்...


No comments:

Post a Comment