Wednesday, November 25, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 4

“ இல்லை சத்யன் , உங்களை உடனடியாக கைது பண்ணி ஜட்ஜ் அய்யா வீட்டுல ஒப்படைச்சு அவரோட அனுமதிக்கப் பிறகு தேனி கிளைச் சிறையில் ரிமாண்ட் பண்ணச்சொல்லி எங்களுக்கு உத்தரவு, நீங்க உடனே கெளம்புறது நல்லது.. இல்லேன்னா...?’ என்று முடிக்காமல் நிறுத்தினார் இன்ஸ்பெக்டர்..

ராமைய்யா கண்களில் கண்ணீர் தேங்க கலவரத்துடன் சத்யனைப் பார்த்தார்,, இவர்களை காணாமல் சமையலறையில் இருந்து வந்த சின்னம்மாவும் பஞ்சவர்ணமும் போலீஸை கண்டவுடன் கலக்கத்துடன் சத்யன் அருகே வர...



சத்யன் யோசனையுடன் ராமைய்யாவைப் பார்த்து “ அண்ணே நீங்க வீட்டுல இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கங்க, நான் இவங்க கூட போறேன், ஜட்ஜ் ரிமாண்ட் பண்ணச் சொல்லி சொல்லிட்டா பத்து பதினைஞ்சு நாள் ஆகும் நான் வர.. அதுவரைக்கும் எல்லாத்தையும் கவனமா பார்த்துக்கங்க,, செல்வியை இங்கயே வந்து ஆத்தா கூட இருக்கச் சொல்லுங்க” என்றவன் தன் அம்மாவிடம் திரும்பி

“ அம்மா உன் பேரன்களுக்கு என்னை ஜெயில்ல வச்சுப் பாக்கனும்னு ஆசைப்படுறாங்க.. நீங்க பயப்படாதீங்க, நான் போய்ட்டு கூடிய சீக்கிரமே வர்றேன்.. ஆனா நான் வர்ற வரைக்கும் இங்க இருக்குற யாரும் எதுக்காகவும் அந்த வீட்டு வாசப்படி போகக்கூடாது ” என்றவன் தன் தாய் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வீட்டிலிருந்து வெளியேறி ஜீப்பில் ஏறினான்...
சத்யன் போன பிறகுதான் பஞ்சவர்ணத்திற்கு உணர்வே வந்தது “ அய்யோ மகனே” என்று அலறி விழுந்தவரை சின்னம்மாளும் ராமைய்யாவும் தாங்கினார்கள் ...

போலீஸ் ஜீப்பில் அழைத்துச்செல்லப் பட்ட சத்யன் சின்னமனூர் ஜட்ஜ் வீட்டுக்கு அழைத்துச்செல்ல பட்டு, அவனே குற்றத்தை ஒத்துக்கொண்ட காரணத்தால் அவர் உத்தரவின் பெயரில் இரவோடிரவாக தேனி மாவட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டான்,

செய்த தவறுக்கான தண்டனையை சத்யன் மனபூர்வமாக ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்துவிட்டான்,,

மறுநாள் காலை ராமைய்யா ஊர் பெரியவர்களோடு ஒரு வக்கீலையும் அழைத்துக்கொண்டு அவனை சந்திக்க வந்த போது சத்யன் ஜாமீனில் கூட வெளியே வர மறுத்துவிட்டான்... தனக்கு அளிக்கப்படும் தண்டனையை அனுபவித்து விட்டே வருவேன் என்று அவன் பிடிவாதமாக கூறிவிட ... வேறு வழியின்றி ராமைய்யா ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினார்

சத்யனின் இவ்வளவு பிடிவாதத்திற்கு காரணம்.. சின்னமனூர் ஜட்ஜிடம் காட்டப்பட்ட புகார் மனுவில் இருந்த மான்சியின் அழகான கையெழுத்து தான்... அவளே நான் ஜெயிலுக்குப் போகனும்னு விரும்பி கையெழுத்துப் போட்டுருக்கா.. அவ ஆசைப்படியே நான் இங்க இருக்கேன்.. என்று விரக்த்தியுடன் எண்ணியபடி சிறையில் பொழுதை கழித்தான்...

வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற, இன்னும் முழுமையாக தண்டனை அறிவிக்கப்படாத நிலையில்,, சத்யன் விசாரணை கைதியாக சிறையிலேயே இருந்தான்

பஞ்சவர்ணம் மகனின் நினைவால் வாடினாலும் தன் துன்பம் வெளியே தெரிந்தால் எதிராளிக்கு அது நகைப்புக்குரியதாகிவிடும் என்ற திடத்துடன் நிமிர்ந்தார்...

சத்யன் சிறைக்கு சென்ற எட்டாவது நாள் ,, ராமைய்யா மூலமாக விஷயத்தை கேள்விப்பட்ட சத்யன் மகள் சிவாத்மிகா,, தன் கணவன் , மற்றும் மாமனாருடன் அப்பாவைப் பார்க்க தேனி சிறைக்கு வந்தாள் ...


பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தவர்களை பார்க்க வந்த சத்யனின் கோலத்தைக் கண்டு அவன் மகள் கதறிவிட்டாள்... சிமியின் மாமனார் தன் தங்கை கணவனின் நிலையை கண்டு கலங்கி போனார்... சத்யன் மகளின் முகத்தைக்கூட பார்க்க கூசி தலை குனிந்து நின்றான்

சத்யனின் கையைபிடித்து “ அப்பா உங்களைப் பத்தி எனக்கு தெரியும்பா... நீங்க என்னை பார்க்க கூச வேணாம்,, எப்பவும்போல தலைநிமிர்ந்து நில்லுங்கப்பா” என்று மகள் கூறியதும் சத்யன் தாங்கமுடியாமல் அவள் கையிலேயே முகத்தை பதித்துக்கொண்டு கதறினான்...

“ அப்பா அழாதீங்கப்பா... நான் எப்பவுமே உங்களை தவறா நெனைக்க மாட்டேன்... அம்மா கூட நீங்க எப்படி வாழ்ந்தீங்க அம்மா இறந்த பிறகு எப்படியிருந்தீங்கன்னு எங்களுக்கு தெரியும்பா... ஏதோ கெட்டநேரம் தவறிட்டீங்க.. இந்த ஒரு தவறுக்காக நீங்க இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கை பொய்யாயிடுமா என்ன? அம்மா போனப் பிறகு உங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணியிருந்தா ஏன் இவ்வளவு பிரச்சனை.. நீங்கதான் வேனாம்னு சொலலிட்டீங்க, ” என்று சிமி இன்னும் குழந்தையாய் நிலவரம் புரியாது தன் அப்பாவுக்கு ஆறுதல் சொல்ல...

அவள் மாமனார் வந்து சத்யன் கைகளைப் பற்றி “ மாப்ளே தப்பு எங்க மேலயும் இருக்கு,, நீங்க சின்ன வயசுகாரர்னு தெரிஞ்சும் உங்களுக்கு மறு கல்யாணம் பண்ணாம விட்டது எங்க தப்பு... அதனால வந்த வினைதான் இவ்வளவும்... நான் நேத்து தர்மலிங்கத்துக்கு போன் பண்ணி கேஸை வாபஸ் வாங்கச் சொன்னேன்... அதுக்கு அவர் ‘ எல்லாம் கையை மீறி போயிருச்சு, எதுவும் என் கையில இல்லை எல்லாம் என் பிள்ளைகளோட ஏற்பாடு இதுல நான் தலையிட முடியாதுன்னு சொல்லிட்டாரு,, சரி எனக்கு தெரிஞ்ச ஆளுகளை பிடிச்சு உங்களை வெளிய எடுக்கலாம்னு பார்த்தா.. நீங்க வரவே முடியாதுன்னு சொல்றீகளாம்,, அப்படியென்ன மாப்ளே வைராக்கியம்” என்று வேதனையுடன் கூறினார்

சத்யன் யாருக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை, அவன் மனதில் இருந்ததெல்லாம் ‘ நான் இங்க இருக்குறதுதான் அவளுக்கு சந்தோஷம்’ என்பதுதான்..

பதினைந்து நாள் ரிமாண்ட் முடிந்து, மறுவிசாரணைக்காக சத்யனின் ரிமாண்டை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தார்கள்,

அவனை பார்க்க வந்த ராமைய்யா.. சவரம் செய்யப்படாத முகமும், அவனது அடர்த்தியான கிராப் எண்ணையின்றி கலைந்து காற்றில் அலைய, உடல் எடை குறைந்து துரும்பாய் இருந்தவனைப் பார்த்ததும் நெஞ்சு குலுங்க கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தார்..

பஞ்சவர்ணத்தம்மாள் மகனை அந்த கோலத்தில் பார்த்தால் உயிரை விட்டுவிடுவார் என்று ராமைய்யா அழைத்து போகவில்லை

சத்யன் சிறைக்கு சென்ற நாற்பதாவது நாள் பஞ்சவர்ணம் தோட்டத்தில் வேலையாக இருக்க மீனாள் வீட்டு வேலைக்காரப்பெண் மல்லிகா பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தாள் 




“ என்ன மல்லிகா இம்பூட்டு வேகமா வர்ற” என்ற சின்னம்மாவை விலக்கி தள்ளிவிட்டு “ ஆத்தா கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றபடி பஞ்சவர்ணத்தை நெருங்கியவள் அவர் காதில் மூச்சிரைக்க மூச்சிரைக்க எதையோ சொல்ல... அதைகேட்ட பஞ்சவர்ணம் முகம் அதிர்ந்தது ..

“ என்னடி மல்லிகா நெசமாத்தான் சொல்றியா? ” என்றவரைப் பார்த்து “ ஆத்தா என் மூனு புள்ளைக மேல சத்தியமா சொல்றேன் நான் என் காதால கேட்டேன்... நீ உடனே அங்க போ ஆத்தா.. இல்லேன்னா அவுகலை தடுக்க முடியாது” என்று அந்தப் பெண் கலவரத்துடன் பஞ்சவர்ணத்தின் கையைப்பிடித்து இழுத்தாள்..

“ இரு மல்லிகா வர்றேன்” என்று அந்த பெண்ணுடன் தன் வயதை மறந்து ஓடினார் மகளின் வீட்டுக்கு...

வெகுநாட்கள் கழித்து மகளின் வீட்டு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தவரை அந்த ஊரே வேடிக்கைப் பார்த்தது... ரெண்டு குடும்பத்துக்கும் இம்புட்டு பகை இருக்கும்போது இந்த கெழவி ஏன் இங்க வந்தது என்ற கேள்வி எல்லோர் பார்வையிலும் தொக்கி நின்றது ...

பாதங்கள் கூச கதவை திறந்து உள்ளே போனவர் முதலில் கண்டது வாசற்படியில் இறங்கிக்கொண்டிருந்த மீனாவும் அவள் தோளில் சாய்ந்து கிடந்த மான்சியையும் தான்,,

தன் தாயைப் பார்த்தும் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றாள் மீனாள்... அவளுக்குப் பின்னால் கையில் கார் சாவியுடன் வந்த தருமன் மாமியாரை பார்த்துவிட்டு திகைப்புடன் நிற்க்க...

பஞ்சவர்ணம் வேகமாக வாசற்படியை நெருங்கினார்.. அவர்கள் அனைவரும் மேல்படியில் நின்றார்கள், பஞ்சவர்ணம் கீழே நின்று தனது மருமகன் முகத்தையே உற்றுப்பார்த்தார்

பிறகு இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை எடுத்து இரண்டு கையிலும் விரித்துப் பிடித்து... என்றுமே பேசியறியாத மருமகனிடம் " அய்யா சாமி ... என் குலதெய்வமே ... நான் உங்ககிட்ட மடிப்பிச்சை கேட்குறேன்னய்யா,, என் குலம் விளங்கனும் என் குடி தழைக்கனும்..என் மவனுக்கு பொறவு ஆண் வாரிசு இல்லாமப் போன என் குடும்பத்துக்கு ஆண்டவனாப் பார்த்து ஒரு வாரிசை கொடுத்துக்கான் ...அதை அழிச்சுப்புடாதீக சாமி,, உங்க கால்ல விழுந்து கேட்கிறேன் " என்று கண்ணீருடன் கதறியவர் அந்த முந்தானையை தரையில் போட்டு அதில் நெடுஞ்சான் கிடையாக விழுந்தார்..

மேல்படியில் நின்றிருந்த தர்மன் மீனா. மான்சி ஆகிய மூவர் காலிலும் கீழ் படியில் விழுந்து யாசகம் கேட்டார் அந்த முதியவள்...

தன் மாமியாரின் முகத்தைப் பார்த்துகூட பேச தயங்கும் தர்மன் தன் காலில் விழுந்த மாமியாரைப் பார்த்து அதிர்ச்சியுடன் அதே படியில் அமர்ந்தார்

வெளியே கூடியிருந்த ஊர் மக்கள் கண்களிலும் கண்ணீர்... மீனா தன் தோளில் கிடந்த மகளை உதறிவிட்டு கீழே வந்து தாயைத் தூக்கி தன் தோளில் சாய்த்துக் " அய்யோ அம்மா ஏன்மா கால்ல விழுந்த" என்று கலங்கினாள் ...

தன் பாட்டியின் நிலையை கண்டு மான்சியின் விழிகளும் குளமானது.. " அம்மாச்சி" என்று அழுதபடி இறங்கி வந்து தன் பாட்டியை மறுபக்கம் அணைத்துக்கொண்டாள்

அந்த மூன்று பெண்களின் கண்ணீரும் தர்மலிங்கத்தை கலங்க வைத்தது

மான்சி தன் அம்மாச்சியின் தோளில் சாய்ந்தபடி “ அய்யோ அழாத அம்மாச்சி ... நான் இவுக கூட போகமாட்டேன் அம்மாச்சி.. நான் பாப்பாவை எதுவும் பண்ணமாட்டேன் அம்மாச்சி ” என்று கேவினாள்..

பட்டென்று நிமிர்ந்த மீனாவின் முகத்தில் ஒரு மின்னல்... மகளின் முகத்தை கூர்ந்து பார்த்தவள்... அடுத்த நிமிடம் தாயை அணைத்திருந்ததை உதறி பிரிந்து தன் கணவனிடம் ஓடினாள்..

தர்மன் முதல்படியில் அமர்ந்திருக்க அதற்கு அடுத்த படியில் அமர்ந்து குனிந்த அவர் பாதங்களை பற்றி கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய “ இந்த கொடுமை வேனாங்க... என் தம்பிக்கு ஒரு அடுத்து ஒரு வாரிசு இல்லாம போச்சேன்னு நீ எத்தனை நாள் நீ என்கிட்ட வேதனைப்பட்டீங்க... இப்ப நீங்களே அதை அழிக்க நினைக்கிறீங்களே? எங்கம்மாவைப் பாருங்க? அவங்களுக்காக இதை இப்படியே விட்டுடுங்க” என்று அழுதபடி கூற...

தர்மன் கண்களும் கலங்கிவிட்டது “ ஏன்டி ஒரு கருவை கலைக்கனும்னு எனக்கு மட்டும் ஆசையாடி? வயித்துல குழந்தையோட இந்த புள்ளைய எத்தனை நாளைக்கு நம்ம வீட்டுலயே வச்சிருக்க முடியும்.. அதான் இந்த முடிவுக்கு வந்தேன்,, மான்சியும் சரின்னு தானே ஒத்துக்கிச்சு” என்று தனது நிலைமையை சொன்னார் தர்மன்

முகம் தெளிவாக முந்தானையால் முகத்தை துடைத்த மீனா “ அவ குழந்தைங்க... அவளுக்கு என்னா தெரியும்? அவ அண்ணனுங்க எதைஎதையோ சொன்னதும் ஒத்துக்கிட்டா... இப்ப பாருங்க அவ அம்மாச்சி கிட்ட என்ன சொல்றான்னு?” என்ற மகளைப் பற்றி கணவனுக்கு புரியவைக்க முயன்றாள்..

“ இப்ப நான் என்னதான் செய்றது மீனா? அவனுங்க வந்தா என்ன பதில் சொல்றது? எனக்கு ஒன்னுமே புரியலையே ” என்று துயரத்தோடு கூறினார்

“ என்ன புரியலை? அவனுங்க வரட்டும் என்ன வேனும்னாலும் பண்ணட்டும், அதையும் பார்த்துக்கலாம்.. அவனுங்க வர்றதுக்குள்ள மான்சிய அனுப்பிடுங்க,, அவ இங்க இருக்க வேனாம் எங்க இருக்கனுமோ அங்க இருக்கட்டும்.. அனுப்பிடுங்க... எப்ப ஒருத்தன் புள்ளைய அவ சுமக்க ஆரம்பிச்சாளோ இனி அவ நம்ம மக இல்லை.. இதை கலைச்சிட்டா மட்டும் நடந்தது இல்லேன்னு ஆயிடுமா? ஆம்பிளைக உங்க எல்லாரோட பிடிவாதத்தால நாலு சுவத்துக்குள்ள முடிக்க வேண்டிய பிரச்சனைய இப்படி ஜில்லா ஜில்லாவா நாறடிச்சிட்டீங்க.. இனிமே என் வருவன் இவளை கட்ட.... இன்னும் எவ்வளவு நாளைக்கு இவள* நம்ம வீட்டுலயே வச்சுக்க முடியும்.. ஆம்பளை பயலுகளுக்கு அவனுங்க வீராப்பு தான் பெரிசுன்னு இல்லாத ஆட்டமெல்லாம் ஆடிட்டானுங்க ,, ஆனா நம்ம பொண்ணோட மானம் நம்மக்கு முக்கியமில்லீங்களா? அவனுங்க இளவட்டப் பயலுகங்க அவனுங்களுக்கு அவனுங்க வீம்புதான் பெரிசு.. அவனுங்கள ஒதுக்கிட்டு நம்ம மகள மனசுல வச்சு முடிவு பண்ணுங்களேன் ” என்று இத்தனை நாளாக அடக்கி வைத்ததையெல்லாம் கொட்டினாள் மீனாள்

மீனாவின் குரலில் இருந்த உறுதி அவரை உலுக்கியது.. நிமிர்ந்து தன் மகளைப் பார்த்தார்.. பாட்டியின் தோளில் துவண்டு சாய்ந்திருந்தாள்.. அவளை தாங்கியிருந்த மாமியார் இன்னும் கண்களை துடைக்காமல் இவரிடம் யாசகம் கேட்கும் பார்வையுடன் நின்றதைப் பார்த்ததும் எழுந்து நின்றார்

வீட்டில் பஞ்சவர்ணத்தை காணாமல் வழியில் விசாரித்துக்கொண்டு அங்கேஅப்போது தான் வந்த செல்வியிடம் வாசலில் இருந்தவர்கள் சற்றுமுன் அங்கு நடந்ததை சொல்ல... செல்வியின் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.. கேட்டைத் தாண்டி உள்ளே வந்தவள் பஞ்சவர்ணத்தின் தோளில் இருந்த மான்சியை இழுத்து அவள் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு “ சின்னம்மா எதுவும் பண்ணிக்காதீங்க சின்னம்மா.. அய்யா வீட்டுக்கு வந்துடுங்க.. உங்களை ஒரு துரும்பு கூட தீண்டாம நான் பார்த்துக்கிறேன்.. இந்த வீடு வேண்டாம்மா.. அய்யா வீட்டுலதான் நீங்க இருக்கனும் வந்துடுங்க நாம போயிடலாம்” என்று கண்களில் கண்ணீர் வழிய வழிய மான்சியின் கையைப்பிடித்து இழுத்தாள்


மான்சி செல்வியின் கண்ணீரை வியப்புடன் பார்த்தாள்... அன்று பஞ்சாயத்தில் என்னை அவ்வளவு மட்டமாக பேசிவிட்டு இன்னிக்கு எனக்காக அழுவுறாளே?

“ என்ன சின்னம்மா அப்படி பார்க்குறீங்க,, என்னடா அன்னிக்கு பஞ்சாயத்துல நம்மளை அப்புடி பேசுனவ இப்போ இப்படி மாறிட்டாளேன்னு தான? அன்னிக்கு எங்க ஐயாவுக்காக பேசினேன்.. இன்னிக்கு எங்க அய்யாவோட வாரிசை சுமக்குற உங்களுக்காக பேசுறேன், நீங்க வந்துடுங்கம்மா” என்றவள் மறுபடியும் மான்சியின் கையைப்பிடித்து இழுத்தாள்

ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு படிகளில் இறங்கி வந்த தர்மன் மகள் அருகே வந்து “ மான்சி முடிவா சொல்லு? நீ அம்மாச்சி வீட்டுக்கு போறியா?” என்று கேட்க..

மான்சி யோசிக்காமலேயே “ நான் போறேன்பா” என்று தலையசைத்தாள்...
மகளை கூர்மையாகப் பார்த்தவர் “ அங்க நீ சும்மா போகமுடியாது தெரியுமா?” என்று மறுபடியும் கேட்க.. மான்சி புரியாமல் அவரைப் பார்த்தாள்

“ நீ அங்க போறதானால் உன் மாமனுக்கு பொண்டாட்டியா தான் போகமுடியும் மான்சி... இப்ப சொல்லு முழு மனசோட அம்மாச்சி வீட்டுக்குப் போறியா?” என்றார் தீர்மானமாக..

மான்சி இப்போது யோசித்தாள்.. இதைவிட்டால் எதற்குமே அசையாமல்,, துச்சமாக ஏற்று நிற்கும் மாமனை எப்படி பழிவாங்குவது ,, இதுதான் கடைசி சந்தர்ப்பம்.. கல்யாணம் பண்ணிகிட்டு பழிவாங்க வேண்டியதுதான்... உடனே முடிவெடுத்தாள் மான்சி “ அப்பா நான் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன், இப்போ அம்மாச்சி கூட போறேன், நீங்க போய் மாமாவை கூட்டி வந்ததும் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுங்க” என்றாள் நிமிர்வுடன்...

தர்மன் சில நொடிகள் மகளைப் பார்த்துவிட்டு,, பிறகு மாமியாரிடம் திரும்பி “ அத்தை உங்க பேத்தியை கூட்டிட்டுப் போங்க.. அவ துணிமணியை எல்லாம் ஆளுங்க கிட்ட குடுத்தனுப்புறேன்” என்று உறுதியாக கூறிவிட்டு நகர்ந்தவர்.. மறுபடியும் திரும்பி “ நாளைக்கு நானேப் போய் சத்யனை கூட்டிட்டு வர்றேன்” என்று கூற..

இப்போது செல்வி அவர் கால்களில் பொத்தென்று விழுந்து எழுந்து “ பெரியய்யா ஒரு குடும்பத்துக்கே வெளக்கேத்தி வச்சிட்டீங்க.. உங்க நல்ல மனசு யாருக்குமே வராது” என்றுவிட்டு மான்சியிடம் வந்தவள் “ வாங்க சின்னம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றவளின் கூந்தல் கொத்தாகப் பற்றி இழுத்து அந்த பக்கமாக தள்ளினான் தேவன்...

அனைவரும் அதிர்ந்து போய் பார்க்கும்போதே “ ஏன்டி யார் வீட்டுக்கு வந்து யாரை கூப்பிடுற? ஒழிச்சுக்கட்டிடுவேன்” என்று ஆக்ரோஷத்துடன் கத்தியவனை செல்வி சீற்றத்துடன் பார்த்தாள்..

“ டேய் ஏன்டா ஊரான் வீட்டு பொண்ணு மேல போய் கைவைக்கிற? நான்தான் மான்சிய போகச்சொன்னேன்.. இனிமேல் என் மக விஷயத்தில் நீங்க ரெண்டுபேரும் முடிவெடுக்க வேண்டாம்.. போய் உங்க வேலையைப் பாருங்கடா... எல்லாம் எனக்குத்தெரியும்.. என்னை மீறி எவனாவது எதுவும் செய்ய நினைச்சீங்க.. அப்புறம் பெத்த புள்ளைன்னு கூட பார்க்கமாட்டேன் வெட்டிப்போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன்” என்று கர்ஜித்த அப்பாவைப் பார்த்து தேவன் அதிர்ந்து போய் நிற்க்க...

“ நீங்க மான்சியை கூட்டிட்டுப் போங்க, நான் இல்லாம எவன் வந்து கூப்பிட்டாலும் அவளை அனுப்பாதீங்க ” என்று மாமியாரைப் பார்த்து சொல்லிவிட்டு... “ மீனா மான்சியோட துணிகளை எல்லாம் எடுத்து செல்விகிட்ட குடுத்தனுப்பு.. நான் வக்கிலைப் பார்த்து பேசிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு மகனை துச்சமாகப் பார்த்தவர்.. தனது காரை எடுத்துக்கொண்டு தர்மன் கிளம்பினார் 


மீனா இதுதான் சந்தர்ப்பம் என்பதுபோல் வீட்டுக்குள் ஓடி மான்சியின் துணிகளை ஒரு பையில் அடைத்து எடுத்து வந்து செல்வியிடம் கொடுத்து “ இப்போ இதை உடுத்திக்கட்டும்.. மிச்சத்தை எல்லாம் ஆளுககிட்ட குடுத்தனுப்புறேன்” என்றவள் “ அம்மா பெரியவன் வர்றதுக்குள்ள உன் பேத்தியை கூட்டிக்கிட்டு போயிடுமா” என்று தன் தாயிடம் சொல்ல... பஞ்சவர்ணம் தன் பேத்தியை அணைத்தவாறு அங்கிருந்து வெளியேறினார்..

செல்வி தேவனைப் பார்த்து ரௌத்திரமாய் முறைத்துவிட்டு மான்சியின் உடைகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு அவர்களுடன் போனாள்...
தேவன் அடங்கிப்போயிருந்தான்.. அவர்களை தடுக்கவில்லை...

மான்சியை தன் வீட்டுக்குள் அழைத்துப் போன பஞ்சவர்ணம் . நேராக பூஜையறைக்கு அழைத்து சென்றார்.. “ உன் தாத்தாவை கும்புட்டுக்க கண்ணு” என்று பேத்தியிடம் சொல்ல.. மான்சி அங்கிருந்த சொர்ணாம்பிகையின் படத்தையும் சேர்த்து கும்பிட்டாள்..

கொஞ்சநேரத்தில் விஷயம் ஊர் முழுக்க பரவிவிட, ஒரு பெண்கள் கூட்டமே சந்தோஷமாக பஞ்சவர்ணத்தின் வீட்டின் முன்பு கூடியது.. அதுவும் மான்சி கர்ப்பிணி என்றதும் எல்லோரும் அவளை கொண்டாடினர்

பஞ்சவர்ணம் தன் பேத்தியின் உடைகளை சத்யனின் அறையில் வைத்துவிட்டு கண்ணு நீ இங்கயே படுத்துக்கம்மா,, துணைக்கு செல்வி இருக்கட்டும்,, உனக்கு என்னா வேனுமோ செல்விகிட்ட சொல்லியனுப்பு நான் செய்து தர்றேன் கண்ணு,, எதையும் மனசுலப் போட்டு கொழப்பிக்காம இரும்மா .. இனிமே நமக்கு நல்லநேரம் தான் ” என்று தன் பேத்தியின் கூந்தலை வருடியவாறு கூறினார்

மான்சிக்கும் உடல் சோர்வாக இருந்தது... “ சரி அம்மாச்சி.. எனக்கு கொஞ்சநேரம் தூங்கனும்” என்று படுக்கையில் படுத்துக்கொண்டாள்...
மான்சியை படுக்க வைத்துவிட்டு பஞ்சவர்ணம் வெளியேறினார்.. அவர் மனமெல்லாம் சந்தோஷம் நிறைந்து இருந்தது... தனது குடும்பத்துக்கு ஒரு வாரிசு வரப்போகிறது என்ற எண்ணமே அவரை சந்தோஷப்படுத்தியது .. இனி மகன் வாழ்வில் நிம்மதியிருக்கும் என்று நினைத்து மகிழ்ந்தார்

ஆனால் அறைக்குள் படுத்திருந்த மான்சியின் மனமோ உலைக்களம் போல் கனன்று கொண்டிருந்தது... சத்யனின் துரோகம் பூவாய் இருந்த அவளை பாறையாக மாற்றியிருந்தது...

அன்று கிணற்று ரூமில் நடந்தது அவள் ஞாபகத்தில் வந்தது.. எவ்வளவு வெறியோட என்னை அந்த மாதிரி பண்ணிட்டு கடைசில பஞ்சாயத்துல தலையை குனிஞ்சுகிட்ட நல்ல பிள்ளை மாதிரி நின்னா விட்டுடுவேனா? பஞ்சாயத்து விடலாம்.. பாதிக்கப்பட்ட நான் விடுவேனா? என்று ஆத்திரத்துடன் எண்ணமிட்டாள்

அன்று சத்யன் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தது “ என் உயிரே போனாலும் பரவாயில்லை நீ இப்போ வேனும் மான்சி” என்ற வார்த்தைகளை நினைத்ததுமே அவள் முகம் குங்குமமாய் சிவக்க பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து அணைத்துக்கொண்டாள்

மான்சிக்கு தன் வீட்டில் இருக்கும் எல்லோரையும் விட சத்யன் மாமனை ரொம்ப பிடிக்கும்.. அவனது கம்பீரம், வெள்ளை வேட்டி சட்டையில் கத்தையான மீசையாய் முறுக்கிய மீசையுடன் புல்லட்டில் வரும் மாமாவை மான்சிக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் அவன் இவ்வளவு சிறு வயதில் கட்டுப்பாட்டுடன் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பதை எண்ணி மான்சிக்கு மனதுக்குள் என் மாமனைப் போல் யாருமில்லை அதிகமான கர்வம் உண்டு..


சிறு வயதில் இருந்தே சத்யனை சுற்றிய வளர்ந்தவளுக்கு படித்து முடித்து வந்ததும் அவனுடனேயே இருக்கவேண்டும் என்று தோன்ற அவனைச்சுற்றியே வந்தாள்.. தனது அருகாமையில் மாமன் தடுமாறுவான் என்பதை மான்சி உணரவேயில்லை... அவளைப் பொருத்தவரையில் மாமாவுடன் இருக்கவேண்டும் என்றுதான் நினைத்தாளே தவிர அது காதலா இல்லையா என்று இன்னமும் தெரியவில்லை...

கல்யாணத்தை நிறுத்தத்தான் கிணற்றில் விழுந்தது... அவளை காப்பாற்றிய சத்யன் அவளுடன் உறவு கொண்டபோது.. முதலில் பதறித்தான் தடுத்து போராடினாள்... ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் அவளை கட்டிப்போட்டது மட்டுமில்லாமல்.. எவளையுமே ஏறெடுத்துப் பார்க்காத என் மாமா என் அழகில் மயங்கிப்போனார் என்ற கர்வம் தான் அதிகமானது... இல்லையென்றால் என் மாமனை உதறித்தள்ள என்னால் முடியாதா என்ன என்று இப்போது நினைத்தாள் ..


இவள் அன்று விடுபட போராடிய போது “ நான் மட்டும் நெனைச்சேனா? எவளையுமே ஏறெடுத்துப் பார்க்காம இருந்தேனே, உன்கிட்ட இப்படி விழுந்துட்டேனே” “ என்னை கேவலமா நெனைக்காத மான்சி... உன் அழகுக்கு முன்னாடி நான் தோத்துட்டேன் மான்சி” “ இல்ல மான்சி இந்த நிமிஷமே என் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்கு நீ இப்போ வேனும்” என்று மாமன் தாபத்துடன் அன்று சொன்னதை இன்று நினைததாலும் மான்சியின் நெஞ்சு கர்வத்தில் நிமிர்ந்தது.. யாருக்குமே அசையாத தன் மாமனை தான் அசைத்து விட்ட கர்வம்.. ஆனால் அதன்பிறகு எல்லோரும் இவளைத் தேடி வந்ததும் கோழையைப் போல் தன்னை விட்டுவிட்டு ஓடியதை நினைத்தால் அதே நெஞ்சு ஆத்திரத்தில் கொதித்தது..

அதன்பிறகு பஞ்சாயத்திலும் அவன் அமைதியாக நின்றது மான்சியை மேலும் ஆத்திரப்படுத்தியது.. தன் மாமன் வீரன்.. தைரியமானவன், பெண்களை மதிப்பவன் என்று எண்ணியிருந்த மான்சியின் நினைப்பில் மண் விழுந்தது ன்று இரவு கூடிய பஞ்சாயத்தில் தான்..

‘ ஆமாங்க நடந்தது நடந்து போச்சு,, என் அக்கா மகளை நான் தொட்டேன்.. எனக்கு உரிமையிருக்கு தொட்டேன்,, இதுக்காக நான் யார்கிட்டயும் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை.. நான் அவ கழுத்துல தாலி கட்டப்போறேன்.. இதை யாரும் தடுக்க முடியாது” என்று தைரியமாக கூறுவான் என்று எதிர்பார்த்து மான்சிக்கு.. அவன் தலைகுனிந்து கண்ணீருடன் நின்றது தலையில் இடி விழுந்தது போலானது...

கோயிலுக்குள் இருந்து அன்றைய பஞ்சாயத்து முழுமையும் கேட்டவளுக்குள்... அப்போ வெறும் உடம்பு சுகத்தை தனிச்சுக்கத்தான் என்னை பயன்படுத்தினானா? என்ற பெறும் கேள்வி பூதகரமாய் எழுந்தது... அம்மா அவரை அடிக்கும் போதுகூட ‘நடந்தது நடந்து போச்சு மான்சியை எனக்கே குடுத்துடு அக்கா’ என்று கேட்பான் என எதிர்பார்தவளுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது...



தன்னுடன் உறவு கொண்டதையே அவமானமாக கருதி தலைகுனிந்து நிற்க்கிறான் என்பதை உணர்ந்தபோது.. அவனுக்கு விருந்தான தனது பெண்மையை அழித்துவிட வேண்டும் போல் இருந்தது மான்சிக்கு..

அடுத்த பஞ்சாயத்திலும் செல்வியை பேசவிட்டு சத்யன் கோழையாக நிற்க்க... மான்சியின் உள்ள கொதிப்பு உச்சநிலையை அடைந்தது.. தன்னை திருமணம் செய்துகொள்ள போராடுவான் தன் மாமன் என்று எதிர் பார்த்தவளுக்கு, அவனது மவுனமும் தலைகுனிவும் அவன் மீது வன்மத்தை ஏற்ப்படுத்தியது.. என்னை தன் சுகத்துக்காக மட்டுமே அனுகியிருக்கிறான் என்ற ஆத்திரம் மேலோங்கியது

அதனால்தான் அண்ணன்கள் செய்த அத்தனையையும் வன்மத்துடன் மவுனமாக பார்த்திருந்தாள்... அந்த வன்மம் தான் மாமனை வழக்கு தொடுக்க கையெழுத்துப் போடவும் வைத்தது,, அப்பவும் நான் மான்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று ஜாமீனில் வெளியே வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ‘ ஜெயிலில் இருந்தாலும் பரவாயில்லை’ திருமணம் பற்றி பேசாத அவனை எண்ணி குமுறித்தான் போனாள் மான்சி



No comments:

Post a Comment