Tuesday, November 3, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 7

வெகுநாட்களுக்குப் பிறகு சந்தோஷமாக வீட்டுக்குள் நுழைந்த சத்யனை வரவேற்கத்தான் யாருமில்லை, எல்லோரும் தூங்கிப்போயிருந்தார்கள், வெளி வராண்டாவில் படுத்திருந்த மூர்த்தியின் ஒதுங்கியிருந்த வேட்டியை புன்னகையுடன் சரிசெய்துவிட்டு கதவை திறந்து உள்ளே போனான்

இரவு முழுவதும் அழகான கனவுகள் வந்து அர்த்தராத்திரியில் இம்சித்தது, கல்லூரியில் படித்த காலத்தில் கூடு பெண்களை கண்ணியத்துடன் ரசிப்பவன் சத்யன். காரணம் அவன் வளர்ந்து சூழ்நிலை அப்படி, அப்படித்தான் இத்தனை நாட்களாக மான்சியையும் ரசித்தான், அவன் பார்வை அவள் கண்களை தாண்டி போனது கிடையாது, இன்று அவளுடன் தனியாக காரில் வரும்போதுதான் சத்யனின் மனம் முதன்முறையாக சலனப்பட்டது,

அவள் உதடுகளின் வடிவத்தை ரசித்தது, அதில் தெரிந்த ஈரத்தின் சுவை எப்படியிருக்கும் என்று அறிந்துகொள்ள துடித்தது அவன் உதடுகள், அவளின் சங்கு கழுத்தின் வளைவுக்கு கீழே இருந்த கனமான பூ மேடுகள் பக்கவாட்டில் அவன் பார்வையை இழுக்க, பார்வை அங்கே போகாமல் தடுக்க சத்யன் பட்டபாடு ம்ஹூம் ரொம்ப கஷ்டம்,



ஒருமுறை குழந்தையை தூக்க எத்தனித்த சத்யனின் விரல்கள் அவள் வெற்று இடுப்பில் உரசி அவனுக்குள் மின்சாரத்தைப் பாய்ச்சியதை நினைத்தால் இப்போதும் சத்யனுக்கு ஜிவ்வென்றது,

முதல்முறையாக தனக்கு பெண்மையின் மென்மையை உணர்த்திய அவளின் இடுப்புக்குத்தான் தனது முதல் முத்தம் அந்த நிமிடமே சபதம் செய்து கொண்டான் சத்யன்,

ரமா ஆரத்தி சுற்றுவதற்கு மான்சியின் அருகில் நிற்கச் சொன்னபோது அவள் மீது வந்த வாசம், இப்பவும் அவனால் அதை உணரமுடிந்தது.. ம்....ம் சத்யன் மூச்சை சர்ரென்று இழுத்தான்,

மான்சியின் மீதான காதல் அவன் கண்ணியத்தை தகர்த்து பார்வையையும் சிந்தனையையும் அலையவிட்டு அவளிடம் அடைக்கலம் தேடவைத்தது, தனது சொர்க்கம் மான்சிதான் என்று புரிந்து விட்டாலும் இன்னும் அந்த சொர்கத்தின் வாசல் இவனுக்காக திறக்கப்படாமல் தான் வெளியே காத்திருப்பதும் புரிந்தது, தன்னால் வெகுநாட்களுக்கு இதுபோல் காத்திருக்க முடியாது, தனது சொர்க்கத்தின் கதவைத் தட்டிவிடலாமா என்று தாபத்துடனும் சிந்திக்க வைத்தது அவனின் அளவுக்கு மீறிய காதல்

கல்லூரியில் படிக்கும் போதும் சரி, அவனுக்காக அவனின் நல்ல குணத்திற்காக என பல பெண்களின் கவனத்தை சத்யன் கவர்ந்திருந்திருக்கிறேன், சில பெண்கள் தங்களின் ஏக்கப் பார்வையை அவன் மீது வீசவும் தயங்கவில்லை, ஆனால் சத்யன் யாருக்கும் அசைந்து கொடுத்தவனில்லை, அப்படிப்பட்டவனை வெறும் மவுனத்தால் வீழ்த்திவிட்டாள் என்பது சத்யனுக்கு அதிசயமாக இருந்தது,

அவனைப் பொருத்தவரை காதல் புனிதம் என்பதெல்லாம் இல்லை, காதல்ப் பற்றி அந்தளவுக்கு அனுபவமும் இல்லை, அவன் தன்னை முழுமையாக ஒரு ஆணாக உணர்ந்த நாளில் இருந்து குடும்பத்தின் முன்னேற்றம் மட்டுமே கவனத்தில் இருந்ததால் காதல் பெண்கள் இந்த இரண்டும் அவனைவிட்டு விலகியே இருந்தது, இன்று மான்சி முழுமையாக அவனை வீழ்த்தி தன் நினைவுகளை அவனுக்குள் விதைத்து அதற்கு தனது கண்ணீரை வார்த்து பெரிய மரமாக வளர்த்துவிட்டிருந்தாள் அவளை அறியாமலேயே,

அவன் வாழ்க்கையில் முதன்முறையாக பெண்ணின் அந்தரங்ககளை காணும் ஆவலில் அவனுக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருந்தது, ஒரு ஆணுக்கு அவன் காதலியால் மட்டுமே தட்டி எழுப்பபட வேண்டிய உணர்வுகள், மான்சியின் உதவி இல்லாமலேயே அவனுக்குள் எழுந்து பேயாட்டம் போட்டன, தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு, இறுதியாக தலையணையை அணைத்துக்கொண்டு கவிழ்ந்து படுத்து அந்த சுகத்திலேயே உறங்கினான்

மறுநாள் காலை எட்டு மணிக்கு மேல் பாக்யா வந்து எழுப்பும் போதுதான் விழிப்பு வந்தது, எழுப்பியதும் என்றுமில்லாமல் பளிச்சென்று புன்னகைத்த அண்ணனைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட படி “ என்னண்ணா இன்னிக்கு இவ்வளவு நேரம் தூங்கிட்ட?” என்றபடி அவனுது பெட்சீட்டை மடித்து கட்டிலில் போட , சத்யன் தங்கையின் முகத்தைப் பார்க்க சங்கடப்பட்டு அவசரமாக வெளியே வந்தான்

மான்சி அவனை சீக்கிரம் வரச்சொன்னது ஞாபகம் வர அவசரமாக குளித்துவிட்டு வெளியே வந்தான், இன்று இரவு டியூட்டி என்பதால் மறுபடியும் மாலை வீட்டுக்கு வருவதைவிட யூனிபார்மை எடுத்து போய்விட்டால் நேராக சிறைச்சாலைக்கே போய் மாற்றிக்கொள்ளலாம் என்ற யோசனையில் ஒரு பாலிதீன் கவரில் யூனிபார்மை எடுத்து வைத்துக்கொண்டான்,

இப்போது போட்டுக்கொள்ள வழக்கத்தை விட அதிகமான நேரம் செலவுசெய்து உடையை தேர்வு செய்தான், நீலக்கலர் நேரோவ் ஜீன்ஸும் இளம்பச்சையில் ஆஷ்கலர் கோடுபோட்ட டீசர்ட்டும் அணிந்துகொண்டு அறையிலிருந்து வெளியே வந்தான்,

“ இன்னிக்கு நட் டியூட்டி தானே அண்ணா, இப்ப எங்கயாவது வெளிய கிளம்புறியா?” என்று பாக்யா கேட்க

ஜீன்ஸுடன் சாப்பிட சிரமமாக தரையில் அமர்ந்தபடி “ ஆமா பாகி இன்னிக்கு கல்யாணப் பத்திரிகைக்கு கார்டு வாங்கி பிரிண்ட் பண்ண குடுக்கனும்,, ராமு வீட்டுல பத்திரிகைல போடுற பேர் எல்லாம் குறிச்சு எடுத்துட்டு வர்றேன்னு சொன்னாங்களே? வந்தாங்களா?” என்று சத்யன் கேட்க

தட்டை வைத்து இட்லியை எடுத்து வைத்து சாம்பாரை அதில் ஊற்றிய பாக்யா, ஒரு ஓசையற்ற பெருமூச்சுடன் “ ம்ம் வந்தாங்க, நேத்து மதியம் நாலு மணிக்கு வந்து எல்லார் பேரையும் எழுதி குடுத்தாங்க, ஆனா அண்ணா மாப்பிள்ளை வீட்டுலதான் பத்திரிக்கை அடிச்சு நமக்கு குடுக்கனும், இவங்க என்ன அவங்களுக்கும் சேர்த்து நம்ம தலையில கட்டுறாங்க?” என்று சலிப்புடன் கூறினாள்

இட்லியை விழுங்கிவிட்டு தங்கையைப் பார்த்து சிரித்த சத்யன் “ விடும்மா இதெல்லாமா கணக்கு பார்க்கிறது, அவங்களுக்கு நேரமில்லாம நம்மகிட்ட சொல்லிருக்கலாம்” என்று தங்கையை சமாதானம் செய்தான்

“ ஆமா ஆமா நேரமிருக்காதுதான்” என்று எரிச்சல் பட்டவள் “ அடப் போண்ணா, வரதட்சனை வேனாம்னு சொன்னாங்களே தவிர நகையில எதையும் விட்டுவைக்கலையே இவங்க, நேத்து பாத்திரத்துக்கு ஒரு பெரிய லிஸ்ட் குடுத்திருக்காங்க, அம்மாவால எதுவுமே பேசமுடியலை, அவங்களோட பாத்திரங்களை எல்லாம் பாலீஷ் போடலாம்னு பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க, அதுக்குத்தான் விசாரிக்க போயிருக்காங்க ” என்று பாக்யா வருத்தத்துடன் பேசினாள்

“ இதோபார் பாகி, நீ கல்யாணத்தை பத்தி கனவு காணுறதோட நிறுத்திக்க, கல்யாணத்துக்கு வேண்டியதை ரெடி பண்ண வேண்டியது எங்களோட பொருப்பு, அந்த கவலை உனக்கு வேண்டாம் ஓகேயா?” என்று தங்கையை செல்லமாக அதட்டினான் சத்யன்

“ ம்ம் ” என்று மெல்லிய குரலில் கூறியவள் “ அப்புறம் இன்னோரு விஷயம்ணா” என்றாள்

தங்கையின் குரல் வித்தியாசத்தை உணர்ந்து “ என்ன சொல்லும்மா ” என்றான் சத்யன்

“ அவங்க வீட்டுப் பொண்ணு அனுசுயாவோட போட்டோவை எடுத்துட்டு வந்து குடுத்திருக்காங்க, அவங்களுக்கு உங்களைவிட வயசு அதிகமா இருக்கும் போலருக்கு அண்ணா, எனக்கும் அம்மாவுக்கும் அந்த பொண்ணை பிடிக்கவேயில்லை, அம்மா நேத்து அழுதாங்க, காலையில அருண் கூட போட்டோவை தூக்கி குப்பையில போடுன்னு கத்திட்டுப் போய்ட்டான், அம்மா மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் ஏதாவது பேசிப் பார்க்கலாம்னு சொல்றாங்க, நீ அந்த போட்டோவை பார்க்குறியா அண்ணா” என்று அழுவது போல் தங்கை பேசுவதை கேட்ட சத்யனுக்கு நெஞ்சை அடைத்தது..

இப்படி அன்பான தங்கச்சியின் வாழ்க்கை தன்னுடைய காதலால் கேள்விக்குறியாகி விடுமோ என்று கலங்கினான் “ யாரும் யார்கிட்டயும் பேசவேண்டாம் பாகி, நான் பத்திரிக்கை ரெடியானதும் எடுத்துட்டுப் போய் அவங்க வீட்டுல குடுத்துட்டு பார்த்துட்டு வர்றேன், அதுவரைக்கும் எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பாருங்க, அம்மாகிட்டயும் சொல்லிடு ” என்று சத்யன் அமர்ந்த குரலில் சொல்லும்போதே வீட்டு காலிங்பெல் அடிக்க,


பாக்யா எழுந்து போய் கதவைத்திறந்து வெளியேப் பார்த்துவிட்டு, சத்யனிடம் திரும்பி “ அண்ணா யாரோ அரவிந்தன்னு உன்னைத் தேடி வந்திருக்காங்க” என்றாள்

சத்யனுக்கு உள்ளம் துணுக்குற்றது, மான்சிக்காக தன்னுடன் அலைந்தவனுக்கு மான்சி கிடைத்த தகவலை சொல்ல தவறிவிட்டோமே என்ற சங்கடத்துடன் “ என் ப்ரண்ட் தான் உள்ள வரச்சொல்லு பாகி” என்றவன் தட்டிலேயே கைகழுவிவிட்டு எழுந்தான்

பாக்யா கதவை முழுமையாக திறந்துவிட்டு உள்ளே வர அவள் பின்னாலேயே அரவிந்தன் வந்தான், சத்யனைப் பார்த்ததும் முகத்தில் சிறு புன்னகையுடன் “ வணக்கம் சார்” என்றான்

“ எங்க அண்ணாவோட ப்ரண்ட்னு சொன்னீங்க, அப்புறம் வணக்கம் சார்னு சொல்றீங்களே?” என்று பாக்யா கேலி போல கூறிவிட்டு சத்யன் சாப்பிட்டு தட்டை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் போய்விட்டாள்

வீட்டில் எதுவும் பேசவேண்டாம் என்று ஜாடை செய்த சத்யன் “ பாகி அரவிந்தனுக்கு ஒரு கப் காபி எடுத்துட்டு வாம்மா” என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்துவிட்டு அரவிந்தன் அருகே போய் ரகசியமாக “ மான்சி கிடைச்சுட்டா, போகும்போது விபரமா சொல்றேன்” என்றான்

பட்டென்று அரவிந்தன் முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிய “ சார்” என்று சத்யன் கையை பற்றிக்கொண்டு சந்தோஷமாக குரல் கொடுக்க, அப்போது காபியுடன் பாக்யா வரவும் கையை விட்டுவிட்டு இருவருமே அவளைப்பார்த்து அசடு வழிந்தனர்

அரவிந்தனிடம் காபியை கொடுத்த பாக்யா “ என்னாச்சு? எதுக்கு அண்ணா இப்படி வழியுற?” என்று கேட்க, அதற்க்கும் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு வெளியே கிளம்ப தயாரானான்

“ பாகி அம்மா வந்தா........ நான் பத்திரிகை அடிக்க கார்டு வாங்கி பிரஸ்ல குடுத்துட்டு அப்படியே ஸ்வீட் செய்றதுக்கு சமையல்காரரைப் பார்த்து ரேட் கேட்டு அட்வான்ஸ் குடுத்துர்றேன்னு சொல்லு, மதியத்துக்கு மேல பேங்க் மானேஜர் வரச்சொன்னார் அவரையும் பார்த்து ஹவுஸிங் லோன் பத்தி விசாரிச்சுட்டு டியூட்டிக்கு போறேன், நாளைக்கு காலையிலதான் வருவேன்னு சொல்லு” என்று சொல்லிவிட்டு யூனிபார்ம் இருந்த பையை எடுத்துக்கொண்டு கிளம்ப, காபியை குடித்துவிட்டு பாக்யாவிடம் காலி டம்ளரை கொடுத்து “ காபி நல்லாருக்கு, ரொம்ப நன்றிங்க” என்று சொல்லிவிட்டு அரவிந்தனும் சத்யனோடு வெளியே வந்து அவன் பைக்கில் பின்னால் ஏறிக்கொண்டான்

பைக்கில் ஏறியதும் “ சார் மான்சியை எங்கப் பார்த்தீங்க?, இப்போ எப்படியிருக்கு? நல்லாருக்கு தானே?” என்று அவசரமாக ஆர்வத்தோடு அரவிந்தன் கேட்க

வீடு இருக்கும் தெருவை தாண்டியதும் பைக்கை ஸ்லோவ் செய்த சத்யன் “ நேத்து ஒரு கைதியை பரோல்ல ஒடுக்கத்தூர் தாண்டி ஒரு கிராமத்துக்கு கூட்டிட்டுப் போனேன்” என்று ஆரம்பித்து மான்சியை சந்தித்து அழைத்துவந்த கதையை ஒன்றுவிடாமல் அரவிந்தனிடம் சொன்னான், “ இப்போ மான்சியைப் பார்க்கத்தான் போறேன்” என்றான்

“ சரிங்க சார் அந்த அக்கா கண்டுபிடிச்சுட்டா ரொம்ப கஷ்டமாச்சே, மான்சி எதுவும் சொல்லாம இருந்தா அவங்களுக்கு எதுவுமே தெரிய வாய்பில்லை” என்று அரவிந்தன் கவலையாக கூற

“ மான்சிகிட்ட நிலைமையை சொல்லி புரியவச்சுருக்கேன், அவளா எதுவும் சொல்லமாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சத்யன் சொல்ல அதற்க்குள் துரையின் வீடு வந்துவிட்டது




சத்யன் மான்சியை பார்க்கும் ஆவலில் அவசரமாக இறங்கியவன், ஏதோ தோன்ற சட்டென்று நின்று “அப்புறம் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும் அரவிந்த், நான் உங்களை ப்ரண்ட்டாத்தான் நினைக்கிறேன், நீங்க என்னை சார்னு கூப்பிட்டா இப்போ என் தங்கைக்கு வந்தமாதிரி எல்லாருக்கும் சந்தேகம் வர வாய்ப்பிருக்கு, நம்ம ரெண்டுபேருக்கும் ஒரே வயசுதான் இருக்கும்னு நெனைக்கிறேன் அதனால என்னை சத்யான்னே கூப்பிடுங்க அரவிந்த்” என்று சத்யன் நிலைமையை விளக்க...

அரவிந்தன் சிறு புன்னகையுடன் “ பெயர் சொல்லி கூப்பிடுறது சரி சத்யா, ஆனா ப்ரண்ட்ஸ் யாராவது வாங்க போங்கன்னு பேசிக்குவாங்களான்னு பார்க்கிறவங்களுக்கு சந்தேகம் வராதா?” என்று கேலியாக கேட்டான்

சத்யன் அவனையே சிலவிநாடிகள் பார்த்துவிட்டு பட்டென்று வெடித்த சிரிப்புடன் “ சரிடா அரவிந்த் வா உன் மருமகனைப் போய் பார்க்கலாம்” என்று கூறி சிரித்தபடி அரவிந்தன் தோளிலில் கைப்போட்டுக் கொண்டு துரையின் வீட்டுக்குள் நுழைந்தான்,, வீட்டின் சமையலறையில் இருந்து நெய்யின் வாசனை மூக்கை துளைக்க,,

துரை வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு தரையில் மண்டியிட்டு சாம்பிராணி கரண்டியில் இருந்த நெருப்பை ஊதிக்கொண்டிருந்தார் , மான்சி ஹாலில் அமர்ந்து மடியில் இருந்த குழந்தைக்கு பவுடர் போட்டுக்கொண்டிருந்தாள்
இருவரும் உள்ளே வருவதை கவணித்த மான்சி அரவிந்தனைப் பார்த்து “ அரவிந்த் அண்ணா ” என்று சிறு மலர்ச்சியுடன் கூவ...

அரவிந்தன் வேகமாக மான்சியை நெருங்கி தரையில் மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளைப் பற்றிக்கொண்டு, எப்படிம்மா இருக்க, உன்னைய காணோம்னு நானும் சத்யனும் எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா?” என்று அரவிந்தன் சொல்லும்போதே அவன் கண்கள் குளமானது

அவனைப்போல மான்சியும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினாலும், சட்டென்று சுதாரித்து “ அண்ணா இந்த வீட்டு அக்காவுக்கு நடந்தது எதுவும் தெரியாது?” என்று அவனை எச்சரிக்கை செய்ய ..

அப்போதுதான் சத்யன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தவனாய், பின்னால் நின்ற சத்யனை திரும்பிப் பார்த்து “ஸாரி சத்யா, மான்சியை பார்த்ததும் நீ சொன்னது மறந்து போச்சு” என்று கூறி லேசாக சிரிக்க...

சத்யன் பதிலுக்கு சிரித்து “ நல்லவேளையா அக்கா கிச்சன்ல இருக்காங்க” என்று கூறிவிட்டு மான்சியின் அருகில் உட்கார்ந்து குழந்தைக்காக இரண்டு கையையும் நீட்டினான்,

மான்சி முகத்தில் மெல்லிய புன்னகையுடன் குழந்தையை தூக்கி சத்யனின் கைகளில் வைக்க, சத்யன் தன் நெஞ்சோடு வைத்து அணைத்து “ என்னடாச் செல்லம் குளிச்சிட்டு ரெடியா இருக்கீங்க போலருக்கு” என்றபடி குழந்தையை உச்சிமோந்து முத்தமிட...

சத்யன் பக்கத்தில் தரையில் அமர்ந்து “ யப்பா சத்யா என் மருமகனை என்கிட்ட கொஞ்சம் குடுப்பா” என்று அரவிந்தனும் இரண்டு கையையும் நீட்டினான்
“ கொஞ்சம் இரு அரவிந்த் நான் இன்னும் கொஞ்சி முடிக்கலை, அப்புறமா உன்கிட்ட தர்றேன்” என்று சத்யன் பிகு பண்ணிக்கொண்டான்

இவர்கள் இருவரும் ஒருமையில் பேசுவதை ஆச்சர்யமாக பார்த்தபடி, “ குழந்தையை குடுங்க அவன் மாமாகிட்ட கொஞ்சநேரம் இருக்கட்டும்” மகனை சத்யனிடமிருந்து பிடிவாதமாக வாங்கி அரவிந்தனிடம் கொடுத்தாள் மான்சி,,

ஆர்வத்தோடு குழந்தையை வாங்கினாலும், அரவிநதனுக்கு சத்யனைப் போல் குழந்தையை வாங்கவும் தெரியவில்லை, மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சவும் தெரியவில்லை, அவன் பயத்துடன் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு தடுமாறுவதைப் பார்த்து சத்யன் வாய்விட்டு சிரிக்க,


மான்சி அவன் அழகாகச் சிரிப்பதையே ஆச்சர்யமாக பார்த்தாள், அவனுடைய வரிசைத் தவறாத வென் பற்கள் மான்சியின் கவனத்தை பெரிதும் கவர்ந்து பார்வையை இழுத்தது,, சத்யன் சிரித்து இப்போதுதான் பார்க்கிறாள் மான்சி, ஒரு ஆணால் இவ்வளவு அழகாகக் கூட சிரிக்க முடியுமா? வாய் கோணாமல், ஈறுகள் வெளியே தெரியாமல், உதடுகள் பக்கத்து ஒன்றாக இழுத்துக்கொள்ளாமல், எதிரில் விரோதியே நின்றாலும் கூடவே சிரிக்க அழைக்கும் அழகான சிரிப்பைப் பார்த்து அப்படியே அமர்ந்திருந்தால் மான்சி

மான்சி தன்னையேப் பார்ப்பதைப் கவனித்த சத்யன், சிரிப்பை நிறுத்திவிட்டு புருவத்தை உயர்த்தி பார்வையால் என்ன என்று கேட்க..

சத்யன் அப்படி பார்வையால் கேட்டதும் தான் இவ்வளவு நேரமாக அவனையே வெறித்துக்கொண்டிருக்கிறோம் என்று மான்சிக்குப் புரிய... சத்யன்ப் பார்க்க முதன்முறையாக வெட்கத்தை பூசிக்கொண்டது மான்சியின் கன்னங்கள்
இப்போது சத்யன் அதிசயத்தைப் பார்ப்பது போல் அந்த கன்னங்களின் சிவப்பைப் பார்த்தான், இது எப்படி சாத்தியம்?, முகத்தின் அத்தனைப் பகுதிகளும் அப்படியே இருக்க இந்த கன்னங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சிவப்பு வந்தது? உதட்டுக்கு சிவப்புச் சாயம் பூசும் பெண்களுக்கு மத்தியில் இயற்கைக் கொடுத்த வரமா மான்சிக்கு இயல்பாக கன்னங்கள் சிவந்ததை எண்ணி சத்யன் அதைத் தொட்டுப் பார்க்க ஆவல் கொண்டான்

அவர்களின் ஆராய்ச்சி தவத்தை கலைப்பது போல் “ ஏம்ப்பா இந்த வீட்டுல நானும் ஒரு மனுஷன் இருக்கேன், யாராவது என்கிட்ட ஒரு வார்த்தை பேசுனா நல்லாருக்கும்” என்ற துரையின் நக்கலான குரல் மூவரையுமே அவர் பக்கம் திரும்ப வைத்தது

சத்யன் எழுந்து “ ஸாரி சார் “ என்று சங்கடமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு “ அரவிந்த் இவர்தான் துரை சார், எங்களுக்கு இந்த வீட்டுல அடைக்கலம் குடுத்த தர்மதேவதையோட கணவர்” என்று சிறிது கேலியுடன் துரை அறிமுகம் செய்ய,

“ ஆமான்டா அய்யோப் பாவம்னு வீட்டுக்கு கூட்டிவந்து ரெக்கமண்ட் பண்ணது நானு,, தர்மதேவதை என் பொண்டாட்டியா?.... நல்லாத்தான்டா ஐஸ் வைக்கிறீங்க” என்று துரை போலியாக சலித்துக்கொண்டார்

மான்சி அரவிந்தனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டதும் அரவிந்தன் எழுந்து “ வணக்கம் சார்” என்று துரைக்கு ஒரு வணக்கம் வைத்தான்..

மான்சிக்கு இதுபோன்ற சிரிப்பு, பேச்சு, கேலி, கிண்டல், எல்லாமே புதுசு, அவள் இதுவரை வாழ்ந்த உலகில் அன்புக்கு கடுமையான பஞ்சம் இருந்தது... சத்யன் காட்டியிருக்கும் இந்த புது உலகில் அன்பைத் தவிர வேறு எதுவுமில்லை, உணர்ச்சி மேலீட மகனை தன் மார்போடு அழுத்திக்கொண்டாள்

அப்போது கிச்சனில் இருந்து வந்த ரமா “ ஏங்க உங்களை சட்னிக்கு தேங்காய் துருவ சொன்னேனே துருவிட்டீங்களா?” என்று கோபமாக கேட்க...

“ இல்ல ரமா நீ தானே குழந்தைக்கு சாம்பிராணி போட நெருப்பு ரெடிப் பண்ணச் சொன்ன.. அதைதான் இவ்வளவு நேரம் பண்ணேன், கொஞ்சம் இரு இதோ துருவி தர்றேன்” என்று துரை பவ்யமாக சொல்ல..

ஆறடி உயரத்துக்கு கத்தையாய் மீசை வைத்துக்கொண்டு மத்திய சிறையே அதிரும்படி நடந்து வரும் துரை தேங்காய் துருவ ஓடுவதை கண்டு சத்யன் ஆச்சரியமாக “ அண்ணே இதுகூட நல்லாத்தாண்ணே இருக்கு” என்றதும்

“ என்னடா சத்யா நக்கல் பண்றப் போலருக்கு,, நானாவது தேங்காய்தான் துருவிக் குடுக்குறேன், நீ என்னல்லாம் பண்ணப்போறேன்னு நானும் பார்க்கத்தானே போறேன், போடாப் போடா” என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தார்

நெற்றி வேர்வையை துடைத்தபடி ரமா சோபாவில் உட்கார,, சத்யன் எதிர் சோபாவில் அமர்ந்து “ என்னக்கா ரொம்ப சிரமம் குடுக்குறமா?” என்று வருத்தமாக கேட்க...

“ ச்சேச்சே இதிலென்ன சிரமம் இருக்கு சத்யா? நாளைக்கு எங்களுக்கு ஒன்னுன்னா நீ உதவ மாட்டியா என்ன? இன்னிக்கு பால் காய்சலாம்னு நெனைச்சேன், அப்புறம் பார்த்தா குழந்தை பிறந்து இன்னிக்கு பதினோராவது நாள் ஆகுதுன்னு மான்சி சொன்னா? அதான் இன்னிக்கே குழந்தையையும் தொட்டில்லப் போட்டு பேரு வச்சிடலாம்னு ரெடி பண்ணிகிட்டு இருக்கேன், இன்னிக்கு நாளும் நல்லாருக்கு சத்யா அதான் ரெடி பண்ணிட்டேன்.. உனக்கு ஒன்னும் இதுல அப்ஜெக்ஷன் இல்லையே “ என்று ரமா கேட்க,

சத்யனுக்கு என்ன சொல்வது என்றே புரியாமல் தடுமாற்றத்துடன் “ தாங்க்ஸ் அக்கா” என்று மட்டும் சொன்னான்

“ தாங்க்ஸ் எல்லாம் எதுக்குப்பா.. ரெண்டுபேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி மாலையும் கழுத்துமா பார்க்கனும் அதுதான் எனக்கு வேனும்” என்றவள் “ சரி சத்யா மாடில ரூமை ஓரளவுக்கு க்ளீன் பண்ணிட்டேன், நீ போய் பாரு, நான் பூஜை சாமான் எல்லாம் எடுத்துக்கிட்டு வர்றேன்” என்றாள்

சரியென்று தலையசைத்த சத்யன் “ வா அரவிந்த் நாம போய் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு மான்சியிடம் பார்வையாலேயே போய் பார்த்துட்டு வர்றேன் என்று கூறி விடைபெற்று வெளியே வந்து போர்டிகோவை ஒட்டியிருந்த படிகளில் ஏறினான்

மாடியில் ஒரு மூலையில் சிமிண்ட் கட்டிடமாய் சுவர் எழுப்பப்பட்டு மேலே தென்னங்கீற்றால் கூரை வேயப்பட்டிருந்தது, சத்யன் கதவைத் திறந்து உள்ளேப் போனான், அறை கழுவி சுத்தம் செய்யப்பட்டிருந்தது, ஒரு சிறு குடும்பம் நடத்த தாராளமாக இருந்தது, அறையின் வலது மூலையில் சிறியதாக ஒரு சுவர் எழுப்பப்பட்ட சமையலுக்கு தடுக்கப்பட்டிருந்தது, அதன் எதிரே ஒரு பூஜை அலமாரி ஒன்றும் இருக்க , அறையின் இடதுபக்கம் இன்னொரு கதவு இருக்க சத்யன் அதைத் திறந்தான், டாய்லட்டுடன் கூடிய பாத்ரூம் இருந்தது
தற்சமயம் தேவையான பொருட்கள் கீழே இருந்து எடுத்துவந்து வைக்கப்பட்டிருக்க, “ வீடு குட்டியா இருந்தாலும் சூப்பாரா இருக்கு, எல்லாம் உங்க மூனுபேருக்கு இதுபோதும்” என்று அரவிந்தன் சொல்ல

அவனையும் மான்சியையும் இனைத்து அரவிந்தன் பேசியது சத்யனுக்கு சந்தோஷமாக இருக்க... “ கெஸ்ட் யாராவது வந்தா தங்கறதுக்கு ரெடி பண்ணாங்கலாம்,, அப்புறம் இப்பதான் எதுக்கு வேஸ்டா இருக்கனும்னு ஒரு கிச்சனை தடுத்து வாடகைக்கு விட நினைச்சதா துரை அண்ணன் சொன்னாரு” என்று சத்யன் சொல்லும்போதே ரமா பூஜை பொருட்களுடன் வந்தாள்


அவளைத் தொடர்ந்து மான்சி குழந்தையுடன் வர , துரை ஒரு கியாஸ் அடுப்பைத் தூக்கிக்கொண்டு வந்தார்,,

சற்றுநேரத்தில் பூஜை செய்யப்பட்டு பால் காய்ச்சப்பட்டது, பால் ஒரு சங்கில் ஊற்றி குழந்தையின் வாயில் சில சொட்டுக் விட்ட ரமா “ சத்யா உங்க குலதெய்வம் எதுப்பா, குழந்தைக்கு முதல்ல நம்ம குலதெய்வம் பேரைத்தான் வைக்கனும்” என்று கேட்க ..

சத்யன் மான்சியை நேர்ப் பார்வையாக பார்த்தான்,, மான்சி மெல்ல தலைகுனிந்து மடியில் இருந்த குழந்தையின் வாயில் வழிந்த பாலை துடைத்தபடி “ கேட்கிறாங்களே சொல்லுங்களேன்” என்றாள் மிகமிக மெல்லிய குரலில்..

சத்யன் முகத்தில் பூரிப்பு கலந்த சிரிப்பு “ திருத்தணி முருகன்தான் அக்கா எங்க குலதெய்வம்” என்றான் உரத்த குரலில்

“ அப்போ முருகன் பேரே வச்சுடலாம், நல்லப்பேரா சொல்லுங்க செலக்ட் பண்ணி வைக்கலாம்” என்ற ரமா எல்லோருக்கும் டம்ளரில் பாலை ஊற்றி கொடுத்தாள்


No comments:

Post a Comment