Saturday, November 28, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 12

ஜோயல் நர்ஸை அழைத்து “ வெளிய இந்த பொண்ணோட ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க அவங்கல்ல யாராவது ஒருத்தரை கூட்டிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு மான்சியிடம் திரும்பியவள்.. மறுபடியும் எழுந்து “ நர்ஸ் நீங்க இங்க இருங்க நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என்று வெளியே போனாள்

ஐசியூ வாசலில் நின்று “ மான்சியோட அட்டன்டர் யாராவது வாங்க” என்று ஜோயல் அழைத்த மறுநிமிடம் நாலுபேருமே அங்கே வந்தனர்... ஜோயல் அவர்களைப் பார்த்து “ மான்சிக்கு ஓரளவுக்கு கான்ஷியஸ் திரும்பிருக்கு.. நீங்க யாராவது ஒருத்தர் வந்து எங்ககூட ஒத்துழைச்சா.. இன்னும் கொஞ்சநேரத்துல மான்சிக்கு முழு நினைவும் திரும்பிடும்... யார் வர்றீங்க?” என்றதும்... மற்ற மூவரும் சத்யனைப் பார்த்தனர்



“ ஓகே சார் நீங்களே வாங்க.. ஆனா இப்படியே வராதீங்க.. அப்புறம் உங்களை இந்த நிலைமையில் பார்த்தா அந்தப்பெண் மறுபடியும் கோமாவுக்கேப் போயிடும்.. அதனால நல்லா ப்ரஷாயிட்டு நல்லா சாப்பிட்டு தைரியமா வாங்க.. உங்களோட தெளிவான முகத்தைப் பார்த்துதான்.. மான்சி தெளிவடையனும்.. அதனால ப்ளீஸ்........” என்று ஜோயல் முடிக்க..

“ மாப்ள டாக்டர் சொல்றதும் கரெக்ட்தான்... நம்ம முகத்தைப் பார்த்து அவ பயந்துடக் கூடாது.. அதனால வாங்க ஏதாவது சாப்பிட்டு தைரியமா வரலாம்” என்று வம்படியாக மருமகனை அழைத்துக்கொண்டு கேன்டீனுக்குச் சென்றார்...

தேவன் தன் அம்மாவை அழைத்துக்கொண்டு அவர்களுடன் போன கொஞ்சநேரத்தில் வீரேன் வந்து நின்றான்... “ மேடம் நான் போய் என் தங்கச்சியைப் பார்க்கலாமா?” என்று ஜோயலிடம் பனிவுடன் கேட்டான்....
ஜோயலுக்கு அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது... நெற்றிகாயத்துடன் கார்டனில் படுத்துகிடந்து விட்டு வருகிறான் போல.. சாப்பிடவில்லை என்பது அவன் முகத்தின் சோர்விலேயே தெரிந்தது... “ ஏதாவது சாப்பிட்டு வாங்களேன்.. அவங்க எல்லாரும் சாப்பிட போயிருக்காங்க” என்று சொன்னாள்...

“ பச் அதெல்லாம் வேனாங்க... நீங்க மான்சிப் பார்க்க அனுமதிச்சா அவங்க வர்றதுக்குள்ள நான் பார்த்துட்டு போயிடுவேன்” என்று கெஞ்சினான் வீரேன்..

அறிமுகமில்லாதவனிடம் சாப்பிடச் சொல்லி அதற்கு மேல் பேசுவது சரியில்லை என்று தோன்ற.. “ சரி வாங்க” என்று அழைக்கும் போதே.... தூரத்தில் சத்யன் மட்டும் வேகமாக வருவது தெரிந்தது... “ சார் மான்சியோட ஹஸ்பண்ட் வர்றார் ... நீங்க லெப்ட் சைடு ஒரு காரிடர் இருக்கும் அங்க ஓரமா நில்லுங்க.. அவர் பார்த்துட்டுப் போனதும் நீங்க போய் பாருங்க” என்று வீரேனை ஐசியூக்குள் அனுமதித்து மறைவாக அனுப்பி விட்டு. சத்யனை அழைத்துப் போனாள் ஜோயல்..

“ என்ன சார் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க? சாப்பிடலையா?” என்று விசாரித்தபடி மான்சி இருக்கும் அறைக்கு அழைத்துச்சென்றாள்

“ இல்லங்க... சாப்பிடப் பிடிக்கலை.. டீ மட்டும் சாப்பிட்டேன்... என் உயிர் இங்க இருக்கும்போது நான் எப்படிம்மா சாப்பிடுறது? ” என்றபடி ஜோயல் பின்னால் போனான்...

தடுப்பின் திரையை விளக்கி உள்ளே போய்விட்டு “ சார் ரொம்ப எமோஷனலா பேசாதீங்க.. காயம் பட்டதை ஞாபகப்படுத்தாம.. உங்களையும் அவங்களையும்ப் பத்தி மட்டும் பேசுங்க.. ஏதாவது மாற்றம் தெரிஞ்சா கூப்பிடுங்க.. நான் வெளிய வெயிட்ப் பண்றேன்” என்று கூறிவிட்டு வெளியே வந்தவள்

எதிரே வந்த வீரேனை ஜாடை செய்து தன்னுடன் தனது கேபினுக்கு அழைத்துச் சென்று நாற்காலியில் அமர்ந்து எதிர் இருக்கையை அவனுக்கு காட்டினாள்.. “ அவர் வரட்டும் பிறகு நீங்க போய்ப்பாருங்க” என்றதும் வீரேன் அமைதியாக அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்...

அமைதியாக அமர்திருந்த வீரேனின் காதுகளில் “ மான்சி ... மான்சி... என் கண்ணம்மா...உன் மாமாவைப் பாருடி” என்ற சத்யனின் வார்த்தைகள் வந்து மோதி.. உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று சேர்த்தது... அன்னியப்பெண் எதிரே அழக்கூடாது என்று உதட்டைக் கடித்து சமாளித்தான்


மனைவியின் விரல்களைப் பற்றி மெதுவாக வருடியபடி “ கண்ணம்மா என்னைப் பாருடி” என்று உருகிய சத்யனின் கண்களும் சேர்ந்து உருகியது... கண்ணீர் வழிய வழிய மனைவியின் ஒரு ஒரு விரலுக்கும் முத்தமிட்டான்.. நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கித்தள்ளினான்... காய்ந்து வரண்டு போயிருந்த மான்சியின் உதடுகளை வருடினான்..

மறுபடியும் அவள் காதருகே குனிந்து “ உன்னை குழந்தைன்னு நெனைச்சேனடி... என்மேல இவ்வளவு உயிரா இருப்பேன்னு நான் யோசிக்கவே இல்லையே மான்சி.. நான் அப்படி என்னடி உனக்குப் பண்ணேன்... நேத்து நைட் அவ்வளவு சுகத்தை கொடுத்தியே மான்சி... இப்போ எனக்கு அதெல்லாம் வேனாம்... ஆனா நீ வேனும் மான்சி.. என் நெஞ்சு மேலயே உன்னை தூங்க வைக்கிறேன். வந்துடு மான்சி... இங்க இருக்க வேனாம் வந்துடு மான்சி நாம வீட்டுக்குப் போகலாம் வந்துடுடி... எனக்கு இதெல்லாம் பார்க்க பயமாயிருக்கே மான்சி” சத்யன் பேசப பேச அவன் குரல் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்தது...

வீரேன் தன் காதுகளைப் பொத்திக்கொண்டு மேசையில் கவிழ்ந்து குலுங்கி குலுங்கி கண்ணீர்விட்டான்... ஜோயல் இயலாமையுடன் அவன் கண்ணீரை வேடிக்கைப் பார்த்தாள்... ஒரு கண்ணாடி க்ளாஸில் தண்ணீரை ஊற்றி அவன் எதிரே வைத்து “ ப்ளீஸ் கொஞ்சம் தண்ணீர் குடிங்க சார்” என்று சன்னமான குரலில் கெஞ்சினாள் ..

“ மான்சி என் அப்பா இறந்தப்ப எனக்கு கண்ணீர் மட்டும் தான் வந்தது.. அவர் விட்டுப் போன கடமையைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருந்துச்சு.. அப்புறம் சொர்ணா இறந்தப்ப சிவாவோட தகப்பனா நிறைய கடமைகள் இருந்தது.. பதினேழு வருஷம் வாழ்ந்த மனைவிக்காக கண்ணீர் மட்டும் தான் விட முடிஞ்சுது... ஆனா உனக்கு இந்த மாதிரின்னதும் இந்த உலகத்தையே அளிக்கனும்னு தோனுது.... நீ இல்லாத இந்த உலகத்துல யாருமே வாழக்கூடாதுன்னு தோனுது மான்சி.. உனக்கு முன்னாடியே நான் செத்துப்போயிடனும்னு தோனுதுடி..... என் கையெல்லாம் ரத்தம் மான்சி... நேத்து விடிய விடிய என்னை சுமந்த உன்னை... நான் சுமக்கும் போது என் கையெல்லாம் ரத்தம் மான்சி.. உன்னோட ரத்தம்.. இப்படி ரத்தம் சிந்தவா என்னை கல்யாணம் பண்ணிகிட்ட?... உன்னை இந்த நிலமையில பார்க்கவா நான் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு ஜெயில்ல இருந்தேன்?.. சொல்லு மான்சி இந்த கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்கவா என்னை விரட்டி மிரட்டி விரும்பி கல்யாணம் பண்ண?... உன்னை பூவாத் தாங்கனும்னு நெனைச்சேனே… இப்படி ஊசிப் போட்டு உடம்பெல்லாம் பொத்தலாக்கிட்டாங்களே மான்சி... நான் ராசியில்லாதவன் மான்சி நான் உனக்கு வேனாம் மான்சி.. நான் உனக்கு வேனாவே வேனாம் மான்சி ” என்ற சத்யன் அதற்கு மேல் பேசமுடியாமல் கட்டிலில் கவிழ்ந்து கதற ஆரம்பிக்க...

இங்கே எல்லாவற்றையும் கேட்ட வீரேனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது... சத்யனும் மான்சியும் உயிருக்குயிரான காதலர்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது... சத்யனின் ஒவ்வொரு வார்த்தையும் அவன் இதயத்தை குளிரச் செய்தது... மாமன் அங்கே கண்ணீர் வடிக்க இவனால் இங்கே இருக்க முடியவில்லை.. வேகமாக எழுந்து அங்கே ஓடினான்...

சத்யன் கதறியபடி இருக்கு... மெதுவாக கண்விழித்த மான்சி சத்யனின் தலைமுடியை தன் விரல்களால் வருடினாள்... சத்யன் அவள் ஸ்பரிசத்தை உணர்ந்து பட்டென்று நிமிர்ந்துப் பார்த்தான்

சத்யனைப் பார்த்து ஒரு மெலிந்த புன்னகையுடன் “ நான் உன்னை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரமா போயிடுவேன்னு நெனைச்சியா? இன்னும் ரொம்ப வருஷம் உன்கூட நான் வாழனும் மாமா... நிறையப் புள்ளைங்க பெத்துக்கனும் மாமா?” என்ற மான்சிக்கு அப்போதுதான் தன் வயிற்றுக் கருவின் ஞாபகம் வந்தது போல... “ மாமா பாப்பா மாமா?” என்று கலவரத்துடன் மெல்லிய குரலில் கேட்க...

“ எனக்கு அதைப்பத்தி கவலையில்லை... நீ நல்லானதே போதும் மான்சி ” என்று சத்யன் அவளுக்கு ஆறுதல் சொல்வதாக நினைத்து பயத்தை கிளறிவிட... வேகமாக வந்த வீரேன் பின்னால் வந்த ஜோயல்...

மான்சியை நெருங்கி கையைப்பிடித்துக் கொண்டு “ உன் குழந்தை நல்லா ஆரோக்கியமா இருக்கு,, இன்னும் ஏழு மாசத்துல கையை காலை ஆட்டிக்கிட்டு உன் பக்கத்துல கிடக்கும் மான்சி” என்று மான்சியை ஆறுதல்ப் படுத்திவிட்டு சத்யனைப் பார்வையால் எச்சரித்தாள்... சத்யன் வார்த்தையை தவறாக விட்டுவிட்டதை உணர்ந்து மன்னிப்பு கோரும் பாவனையில் தலையை குனிந்து கொண்டான்..



அப்போது தடுப்புக்கு பின்னால் இருந்து வெளியே வந்த வீரேன் “ மான்சிம்மா” என்று தீனமாக அழைக்க... மான்சி அவனைப்பார்த்து “ வீரண்ணா மாமா ரொம்ப நல்லவர் அண்ணா... அவரை ஒன்னும் பண்ணாத அண்ணா” என்று மெல்லிய குரலில் கூறியதும் வீரேன் உடைந்தான்...

தங்கையின் கால்களைப் பற்றிக்கொண்டு “ இல்லடா... நீ சொல்லவே வேண்டியதில்லை.. மாமா யாருன்னு எனக்கு இப்போப் புரிஞ்சுபோச்சு... நான்தான் முட்டாள்தனமா தப்பா நெனைச்சு முன்கோபத்தால தப்புப் பண்ணிட்டேன்... மாமாவை என்கிட்ட பேசச்சொல்லு மான்சிம்மா?” என்று தங்கையிடம் கண்ணீரோடு கெஞ்சினான்...

சத்யன் அமைதியாக அமர்ந்திருக்க... “ சார் அவங்க இவ்வளவு பேசனதே அதிகம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்” என்றாள் ஜோயல்

சத்யன் மான்சியை கவலையாய்ப் பார்க்க... அவள் சத்யனை கலவரமாய்ப் பார்த்தாள்... “ டாக்டர் என் மாமா என்கூடவே இருக்கட்டுமே ப்ளீஸ் டாக்டர்” என்று ஜோயலிடம் ஈனஸ்வரத்தில் கெஞ்சினாள் மான்சி

“ இல்லம்மா இது ஐசியூ வார்டு.. இவங்களை இவ்வளவு நேரம் அனுமதிச்சதே அதிகம்... இப்போ இவங்கப் போய்த்தான் ஆகனும்” என்று அவளுக்குப் புரியும்படி அன்பாக எடுத்துச்சொன்னாள்

“ அப்போ என்னை உடனே வார்டுக்கு மாத்துங்க.. என்கூட என் மாமா இருக்கனும் இருக்கனும் இருக்கனும் ” என்று பிடிவாதமாக மான்சி தலையை இப்படியும் அப்படியும் அசைக்க...

சத்யன் ஜோயலிடம் திரும்பி “ நீங்க வெய்ட்ப் பண்ணுங்க டாக்டர்.. நான் அவளை சமாதானம் செய்து தூங்க வச்சிட்டு வெளியப் போயிர்றேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தான்...


வீரேன் சங்கடமாக அங்கேயே நிற்க்க.... மான்சி அண்ணனைப் பார்த்து “ எல்லாம் மாமா பேசுவாரு... இப்ப நீ போ போ.. மாமா என்னை தூங்க வச்சிட்டு வரும் “ என்றவளின் குரலில் சோர்வு மறைந்து புதிய உற்சாகம்

வீரேன் சத்யனைப் பார்க்க .... சத்யன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து வீரேன் அருகில் வந்து அவன் தோளில் கைவைத்து “ வீரா உங்க மூனுபேர் மேலயும் எனக்கு எப்பவுமே கோபம் வராதுடா... இந்த கையால உங்களை எல்லாம் வளர்த்துட்டு அதே கையால என்னால அடிக்க முடியாது... ஏன்னா நீங்க எல்லாம் என் அக்கா பிள்ளைகள்.. என் அக்கா எனக்கு இன்னொரு தாய் மாதிரி... அவங்க வயித்துல பிறந்த உங்களையெல்லாம் நீங்க என்ன செய்தாலும் என்னால வெறுக்க முடியாதுடா வீரா” என்று சத்யன் சொல்ல...

“ அதான் மாமா சொல்லிட்டாருல்ல போண்ணா” என்று மான்சி வீரேனை விரட்டினாள் .. “ தங்கச்சி விரட்டுது மாமா.. நான் போய் வெளிய இருக்கேன்” என்ற வீரேன் சத்யனைப் பார்த்து அசடு வழிய சிரித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்...

வீரேன் வெளியே செல்வதற்கு முன்பு டாக்டருக்கு நன்றி சொல்ல ஜோயலின் அறையை எட்டிப்பார்க்க... ஒரு நோயாளியின் சாட்டை வாசித்துக் கொண்டிருந்த ஜோயல் அவனை நிமிர்ந்துப் பார்த்து “ என்னங்க சார் தங்கச்சி கிட்ட சமாதானம் ஆயிட்டீங்களா?” என்று புன்னகையுடன் கேட்க...

முகத்தில் சந்தோஷம் பளிச்சிட “ ஆமாங்க மேடம்.. என்னை அனுமதிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க... நைட்டு மறுபடியும் பார்க்க வந்தா அனுமதிப்பீங்களா?” என்று கேட்டான்...

ஜோயலுக்கும் மான்சிப் பற்றிய சில விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் வந்துவிட்டது...சற்றுமுன் பேசிய சத்யனின் வார்த்தைகள் அவளை ஏகமாய் குழப்பியிருந்தது... யோசனையுடன் வீரேனைப் பார்த்து “ நீங்கபோய் கேன்டீன்ல ஏதாவது சாப்பிட்டு வாங்க... நானும் உங்ககூட பேசனும்” என்றாள்..

“ ம் சரிங்க சாப்பிட்டு வர்றேன்.. காலையிலேர்ந்து ஒன்னுமே சாப்பிடலை.. இப்பதான் தங்கச்சியும் மாமாவும் பேசிட்டாங்களே.. அதனால ந்லா வயிறு நிறைய சாப்பிடப் போறேன்” என்று உற்சாகமாக சொல்லிவிட்டு வெளியேப் போனான்...

இவ்வளவு நேரம் பேசியதில் சோர்வுற்ற மான்சி அயர்வாய் கண்களை மூடிக்கொண்டாள் “ மாமா கொஞ்சநேரம் என்னைவிட்டு எங்கயும் போகாதேயேன்?” என்று அவள் குரல் தீனமாக ஒலிக்க.. சத்யன் சேரை இழுத்து கட்டில் அருகேப் போட்டுக்கொண்டு முடிந்தவரை எட்டி அவள் முகத்தருகே தன் முகத்தை வைத்து கொண்டான் விரல்களால் அவள் கூந்தலை வருடி “ தூங்குடா கண்ணம்மா” என்றான்..

“ இல்ல மாமா என்னை சீக்கிரமா வேற ரூமுக்கு மாத்தச் சொல்லு... நீ என்கூடவே இரு மாமா” என்றாள் அவனை பிரியமுடியாத வேதனையில் ...
சத்யனுக்கு அவள் மனசு புரிந்தது “ சரி காலையில டாக்டரைப் பார்த்து பேசுறேன்.. இப்ப தூங்குடா” என்று சத்யன் அன்புடன் கூறி அவளை உறங்க வைக்க முயன்றான்..

“ மாமா இன்னும் கிட்ட வாயேன்” என்று மான்சி அழைக்க... அவள் முகத்தருகே இன்னும் நெருங்கினான் சத்யன்.. அவன் கன்னத்தை தன் தளிர் விரலால் வருடி “ ரொம்ப அழுதியா மாமா?” என்று மான்சி கேட்க...

“ பின்ன... ஒவ்வொரு நிமிஷமும் செத்துப் பிழைச்சேன்டி” சத்யனின் விரல்கள் அவள் காய்ந்த உதடுகளை வருடியது... “ என்மேல உனக்கு அவ்வளவு லவ்வா மாமா?”

“ இந்த லவ்வு மசுரெல்லாம் எனக்குத் தெரியாது.. ஆனா நீ இல்லேன்னா அடுத்த நிமிஷம் நானும் இல்லை இதை மட்டும் உறுதியா சொல்வேன் ” சத்யனின் விரல்கள் ஒருக்களித்துப் படுத்திருந்த அவள் தோளில் இருந்த காயத்தை வருடியது

“ மாமா நேத்து நைட் எவ்வளவு ஜாலியா இருந்தோம் ... ஆனா இன்னிக்கு நைட்டு இப்படி ஆயிடுச்சே” மான்சியின் குரலில் ஏக்கம்..

“ ஏய் ச்சீ ... இதுக்குப் போய் வருத்தப்படலாமா? நமக்கு என்ன வயசாயிடுச்சா என்ன.. இன்னும் ரெண்டு பேருக்கும் இளமையிருக்கு... உனக்கு உடம்பு நல்லானதும் நம்ம இழந்ததை மீட்கலாம்” என்று சத்யன் அவளுக்கு ஆறுதல் சொல்ல...

“ மாமா ஒரு ரகசியம் சொல்லவா?”

தன் காதுகளை அவள் அருகில் கொண்டு சென்று “ என்ன மான்சி சொல்லு?” என்றான்..

“ அது வந்து ,.... என் டிரஸ் எல்லாத்தையும் அவுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன் மாமா” என்று ரகசியமாய் கிசுகிசுத்தவளை பார்த்து முறைத்த சத்யன் “ அடங்கமாட்டியாடி நீ” என்று செல்லமாய் கடிந்துகொண்டான்..

தன் கணவனிடம் பேசவேண்டும் என்பதற்காகவே மான்சி பெரு முயற்ச்சி செய்து விழித்திருப்பது போல் இருந்தது... அதை யூகித்த சத்யன் மெல்ல எட்டி அவள் நெற்றியில் முத்தமிட்டு.. பிறகு காய்ந்து கிடந்த இதழ்களை நெருங்கி தனது எச்சிலால் அவற்றை ஈரப்படுத்துவது போல் மென்மையாக கவ்வி சப்பிவிட்டு பிறகு எழுந்து “ தூங்குடா கண்ணம்மா” என்று காதலாய் சொல்ல..

அவனிடம் முத்தம் பெற்றப் பிறகு மான்சியின் கண்கள் தானாக மூடிக்கொண்டது..

சற்றுநேரத்தில் மான்சி உறங்கிவிட மீண்டும் நெற்றியில் முத்தமிட்டு விட்டு.. அங்கிருந்து வெளியே வந்து எதிரே வந்த ஜோயலிடம் “ தூங்கிட்டா டாக்டர்” என்று சொல்லிவிட்டுப் போனான்...







“ பெண்மை என்பது ஆண்மையை நசுக்கும்...
“ அவசியப்பட்டால் உசுப்பி எழுப்பும்.!

“ ஆண்களின் கண்களுக்கும்...
“ இமைகளுக்கும் நடுவே ஓடும்...
“ லட்சக்கணக்கான கனவுகளுக்கு...
“ பெண்ணால் மட்டுமே உயிர் தர முடியும்!

“ ஆண் வியூகம் என்றால்...
“ பெண் யுத்தக்களம்...
“ நிச்சயம் வெற்றி முளைக்கும்!

“ ஆண் திட்டம் என்றால்...
“ பெண் செயலாக்கம் சக்தி...
“ கனவுகள் ஜெயிக்கும்!

“ ஆண் ஒரு புயல் என்றால் ...
“ அவன் தகர்க்க வேண்டிய..
“ பகுதிகளை பெண் காட்டுவாள்!

“ ஆண் ஒரு நெருப்பு என்றால்...
“ அவன் பரவ வேண்டிய பாகங்களை...
“ பெண் தேடிக் கொடுப்பாள்!

“ ஆண் உலக வரைபடம் என்றால்...
“ பெண் அவற்றின் எல்லை கோடுகள்!

“ ஆணின்றி அணுவும் அசையாது என்றால் ..
“ பெண்ணின்றி எந்த ஆணும் அசையமாட்டான்! 


No comments:

Post a Comment