Thursday, November 12, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 21

மான்சி வெட்கத்துடன் விலகியதும், ‘கெடுத்தியேடா பாவி’ என்பதுபோல் அரவிந்தனை முறைத்தான் சத்யன்

மான்சி அவர்களுக்கு காபி போடுவதற்காக எழுந்திரிக்க.. அப்போது கையில் காபி இருந்த பாத்திரத்தோடு ரமா உள்ளே நுழைந்தாள் “ காபியா போடப்போற,, நான் போட்டு எடுத்துட்டு வந்துட்டேன் மான்சி, நீ நாலு டம்ளர் மட்டும் எடுத்துட்டு வா” என்றபடி அனுசுயாவின் அருகில் அமர்ந்தாள்

மான்சி எடுத்து வந்த டம்ளர்களில் காபியை ஊற்றி எல்லோரிடமும் கொடுத்தவள் “ சத்யா பத்திரிகை வைக்கிற வேலை எல்லாம் முடிஞ்சுது தானே? இன்னைக்கு பந்தல்காரனுக்கு சொல்லனும்னு சொன்னியே? பார்த்து சொல்லிட்டயா?” என்று கேட்க..

“ ம் சொல்லியாச்சுக்கா, எல்லா வேலையும் முடிஞ்சது, நாளைக்கு சமையலுக்கு தேவையான பொருளையெல்லாம் வாங்கனும், நாளைக்கழிச்சு காய்கறி, வாழைமரம் வாங்கனும்,அதோட மறுநாள் கல்யாண மண்டபத்துலதான் வேலை” என்று சத்யன் சொல்லிவிட்டு தயக்கமாக ரமாவைப் பார்க்க....

எதையோ கேட்க தயங்குகிறான் என்பதை அவன் பார்வையிலேயே புரிந்துகொண்ட ரமா “ என்ன சத்யா பணம் ஏதாவது குறையுதா? எதுவாயிருந்தாலும் கேளு?” என்று கூறியதும்...

“ இல்லக்கா பாக்யாவுக்கு இன்னும் நாலு பவுன் வளையல் வாங்கனும், நானும் எங்கங்கயோ கேட்டுப் பார்த்துட்டேன், பணம் ரெடியாகல, எனக்கு வேற எங்கயும் கடன் கேட்டும் பழக்கமில்லை,.. அதான் துரை சார் கிட்ட கேட்கலாம்னு..... நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா” என்று தயங்கித்தயங்கி சொல்லிமுடிக்கு முன்னே..



“ வளையல் தான் வாங்கியாச்சே சத்யா? நீயும் அப்பாவும் பத்திரிகை வச்சிட்டு வந்தீங்களே அன்னைக்குத்தான் காலையில நானும் மான்சியும் தான் அருணுக்கு போன் பண்ணி பாக்யாவோட கை அளவு அவகிட்ட கேட்கச் சொல்லி, அப்புறம் நான் பழக்கமா வாங்குற நகை கடையில போய் ஆர்டர் பண்ணிட்டு வந்துட்டோம், அறுபத்தஞ்சாயிரம் கட்டியாச்சு, இன்னும் முப்பத்திரெண்டாயிரம் நாளைக்கு கட்டிட்டு வளையலை வாங்கிட்டு வரவேண்டியதுதான், அந்த முப்பத்திரெண்டாயிரம் கூட ரெடியா இருக்குன்னு சொன்னாளே? ஏன் மான்சி உன்கிட்ட சொல்லலையா? நீ தானே பணம் குடுத்தனுபினதா நான் நெனைச்சேன்?” என்று குழப்பமா ரமா சொல்லிக்கொண்டே போக....

திக்கென்று அதிர்ந்த சத்யன் “ நான் பணம் குடுக்கலையே?” என்றவன் திரும்பி ‘ ஏது பணம்?” என்று மான்சியிடம் பார்வையாலேயே கேட்டான்

‘ அய்யோ இந்தக்கா இப்பபோய் இப்படி சொல்லி மாட்டிவிட்டுட்டாங்களே?’ என்று கலவரத்துடன் சத்யனை பார்த்தவள், அவன் பார்வையில் இருந்த நெருப்பு சுட்டுவிடுமோ என்று பயந்தவள் போல அவசரமா அரவிந்தன் அருகேபோய் நின்றுகொண்டாள்..

அவள் பார்வை ‘ ஏதாவது சொல்லேண்ணா?’ என்பதுபோல் அரவிந்தனை கெஞ்சியது..

‘ நீ அமைதியா இரு நான் பேசிக்கிறேன்’ என்று பார்வையாலேயே அவளுக்கு பதில் சொன்ன அரவிந்தன் “ சத்யா நான்தான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணேன், உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்” என்று நிலைமையை சமாளிக்க...

சத்யன் அரவிந்தன் சொன்னதையே காதில் வாங்கவில்லை, அவன் பார்வை மான்சியைவிட்டு இம்மிகூட அசையாமல் அப்படியே இருக்க,, மான்சி மெதுவாக அவனருகே வந்து அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள் 

பற்றிய அவள் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டு “ ம் சொல்லு ஏது பணம்?” என்றான் குரலில் கடுமை ஏறியிருந்தது...

மான்சி விழிகளில் தேங்கிய நீர் விழட்டுமா? வேண்டாமா? என்று தளும்பி தத்தளித்தது “ நான் கம்பெனியில வேலை பார்க்கும்போது மாசாமாசம் வாங்குற சம்பளத்துல அங்கயே ஒரு அக்காகிட்ட ஒருலட்ச ரூபா ஏலச்சீட்டு நாற்பது மாசமா கட்டினேன், நான் வேலைக்கு போகாம நின்னதும் மீதி மூனு சீட்டையும் அரவிந்த் அண்ணன் கட்டினாரு, அது இந்த மாசம் கடைசி சீட்டு எடுத்து பணத்தை என்கிட்ட குடுத்தாரு, நீங்க பாகிக்கு வளையல் வாங்க பணம் இல்லேன்னு அருண்கிட்ட போன்ல பேசினதை கேட்டேன், சரி இந்த பணத்தோட இன்னும் கொஞ்சம் பணம் போட்டு வளையலை வாங்கிடனும்னு அண்ணன் கிட்ட சொன்னேன்,

"அப்புறம் கம்பெனியில மாசாமாசம் சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பாங்க, போனவாரம் நீங்க வெளியப் போனதுக்கப்புறம் கம்பெனிக்குப் போய் நானும் அண்ணனும் மேனேஜர் கிட்ட பேசி அந்த பணத்தையும் வாங்கிட்டு வந்தோம், எல்லாம் சேர்த்து ஒரு லட்சத்து இருபத்தஞ்சாயிரம் வந்தது, அதுல வளையல் போக மீதி பணத்துல...” என்று நிறுத்திவிட்டு சத்யனின் முகம் இளகி இருக்கிறதா என்று பார்த்தாள்..

ம்ஹூம் அந்த முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு உணர்ச்சிகள் துடைக்கப் பட்டிருந்தது.. “ மீதிப் பணத்துல?” என்று அவள் பாதியில் விட்டதை சத்யன் தொடங்கிக் கொடுக்க...

“ அவளே பயந்து போயிருக்கா.. நீவேற ஏன்பா இன்னும் கொடையுற? நான்வேற வகைத் தெரியாம உளறித் தொலைச்சிட்டேன்... மீதிப் பணத்துல உனக்கு ஒரு மோதிரம் வாங்கினா சத்யா” என்று ரமா கூறிவிட்டு சத்யனின் தோளில் கைவைத்து “ உனக்கு உதவனுமேன்னு ஆர்வத்துல சொல்லாம பண்ணிட்டா.. மான்சியை திட்டாதே சத்யா?” என்று கெஞ்சதலாய் சொன்னாள் ..

“ அதானே இதுக்குப்போய் ஏன் திட்டனும்... வேனும்னா கொஞ்சநாள் கழிச்சு வட்டிப் போட்டு எட்டு பவுனா வாங்கி மான்சிக்கு குடுத்துடுங்க,, கணக்கு சரியாபோயிரும்” என்று அனுசுயாவும் தன் பங்கிற்கு மான்சிக்கு ஆதரவாக கூறினாள்

“ என்னாது நாலுக்கு வட்டிப் போட்டு எட்டு பவுனா? அனு எனக்கு பிற்காலத்தை நெனைச்சா இப்பவே கண்ணை கட்டுதே” என்று பலத்த அதிர்ச்சி அடைந்தவன் போல அரவிந்தன் கூறியதும்

அனுசுயாவும் ரமாவும் சிரித்துவிட்டனர்,, சத்யன் மான்சி இருவரின் முகத்திலும் கூட புன்னகையின் ரேகைகள்,, மெதுவாக அவள் விரலை வருடிய சத்யன் “ அது உன்னோட சேமிப்பு மான்சி அதை நீ பாக்யாவுக்கு தர்றதில் எனக்கு சம்மதமில்லை” என்று மெதுவாக சொன்னான்


அதுவரை விழிகளில் தேங்கிய நீர் பொட்டென்று கன்னத்தில் உருண்டு விழ “ அப்போ எனக்குஉங்களோட கஷ்டங்களில் பங்கெடுத்துக்க உரிமையில்லையா? பாக்யா என் நாத்தனார் தானே? அவளுக்கு ஒரு அண்ணியா நான் இதைக்கூட செய்யக்கூடாதா? எனக்குத்தான் நீங்க இருக்கீங்களே. அப்புறம் இந்த பணம் எதுக்குங்க?” என்று மான்சி விம்மலுக்கிடையே சத்யனை கேள்வியால் துளைக்க...

அப்போதுதான் சத்யனுக்கு தன் வார்த்தைகள் அவளை எவ்வளவு பாதிக்கும் என்று புரிந்தது, அவன் சொன்னதன் பொருள்.. உனக்கும் என் குடும்பத்துக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லாமல் சொல்வது போலல்லவா? துயரத்துடன் விம்மியவளை இழுத்து அணைத்து “ ஸாரிம்மா தெரியாம சொல்லிட்டேன், அது உன் குடும்பம் நீ என்ன செய்தாலும் எனக்கு ஓகே.. இனிமே நான் அதிலே தலையிட மாட்டேன் போதுமா?” என்று அவளை அணைத்து சமாதானப்படுத்தினான் சத்யன்

அங்கிருந்த மற்ற மூவரும் பிரச்சனை சுமூகமானதில் நிம்மதி பெருமூச்சு விட, அரவிந்தன் “ அய்யோ அக்கா நாங்க வந்ததுலேருந்து இப்புடித்தான் பொண்டாட்டியை பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப் பிடிச்சுக்கிறான், இவன் இம்சை தாங்கலை” என்று போலியா சலித்தபடி ரமாவிடம் சொன்னவன் “ அனு இதுக்குமேல என்னால இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கமுடியாது வா நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று மையலாக மனைவியை அழைத்தான்

சத்யன் சிரித்தபடி அரவிந்தனுக்கு ஏதோ பதில் திரும்பிய அதே சமயம் சத்யனின் மொபைல் அடிக்க, அரவிந்தனிடன் பேசுவதை தவிர்த்து மொபைலை எடுத்துப் பார்த்தான்

உடனேயே அவன் முகம் மாற ஆன் செய்யாமல் “ மாப்பிள்ளையோட நம்பர்” என்றான் திகைப்புடன்

“ மாப்பிள்ளைன்னா... ராமுவோட நம்பரா?” என்றனர் எல்லோரும் ஏககாலத்தில்...

அண்ணன் பெயரைக் கேட்டதும் அதுவரை சிரிப்பும் சந்தோஷமுமாக இருந்த அனுசுயாவின் முகம் கலவரமடைய முகத்தை மூடிக்கொண்டு விசும்ப ஆரம்பித்தாள், அரவிந்தன் சங்கடமாக மனைவின் கையைப் பற்றிக்கொள்ள.. மான்சி “ ஸ்ஸ் அழாதீங்க அண்ணி, எல்லாம் சரியாயிடும்” அனுசுயாவுக்கு ஆறுதல் மொழிகள் சொன்னாள்

ரிங்டோன் நின்றுவிட்டு மறுபடியும் ஒலிக்க சத்யன் எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி எச்சரிக்கை செய்துவிட்டு மொபைலை ஆன்செய்து “ சொல்லுங்க ராம் எப்படியிருக்கீங்க?” என்று சம்பிரதாயமாக ஆரம்பித்தான்..

“ நான் நல்லாத்தான் இருக்கேன் சத்யன்” என்றவனின் குரலில் பதட்டம் “ சத்யா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும், நீங்க எங்க இருக்கீங்க?” என்று ராம் கேட்டதும்..

சத்யனின் இதயம் தொண்டையாருகே வந்துபோனது “ எ...ன்ன விஷ..யமா பேசனும் மாப்ளே?” என்று தடுமாறினான்..


சிலநிமிட அமைதிக்குப் பிறகு “ நேத்து காலையிலேருந்து அனுசுயாவை காணோம் சத்யன் .. எனக்கு இந்த நிச்சயதார்த்தத்தில் இஷ்டமில்லை,, என் மனசுக்குப் பிடிச்சவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன், என்னை தேடாதீங்கன்னு” லட்டர் எழுதி வச்சிட்டுப் போயிருக்கா.. நேத்து ஈவினிங் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனதுதான் எனக்கே தெரிஞ்சது, அப்பாவும் ஊரில் இல்லை, அம்மா அழுதுகிட்டே இருக்காங்க, வெளியே சொல்லாம நேத்து அவ போகும் இடமெல்லாம் தேடினேன் சத்யன், இன்னிக்கு காலையிலேர்ந்து அவளோட ப்ரண்ட்ஸ் ரெண்டு மூனுபேர் கிட்ட நிலைமையை விசாரிச்சேன், அவங்க என்ன சொல்றாங்கன்னா, அனுவுக்கு அந்த மாதிரி காதலோ காதலனே கிடையாதுன்னு உறுதியா சொல்றாங்க, அவங்கல்லாம் சொன்னதுல இருந்து எனக்கும் ரொம்ப பயமாயிருக்கு சத்யன், அதான் உங்க டிப்பார்ட்மெண்ட் மூலமா ஏதாவது பண்ணலாமான்னு உங்களை பார்க்கனும்” என்று சொல்லவதை பதட்டத்துடன் ராம் சொல்லி முடிக்க..

அவன் சொல்லும் போது இடைஇடையே வெறும் ம்ம் என்று மட்டும் சொல்லிவந்த சத்யன் அவன் சொல்லி முடித்ததும் ஒரு அண்ணனாக அவன் மனம் ராமுவுக்காக துடித்தது, அவனுடைய கலவரத்துக்கு காரணம் நாம்தான் என்ற குற்றவுணர்வு தலை தூக்க, சில நிமிடங்கள் கண்மூடி யோசித்த சத்யன் பட்டென்று கண் திறந்து “ ராம் நீங்க கவலைப்படாதீங்க, அவங்க இருக்குற இடம் எனக்குத் தெரியும், உடனே நீங்க நான் சொல்ற இடத்துக்கு வாங்க, எல்லாத்தையும் விவரமா சொல்றேன்” என்று கூறிவிட்டு வரவேண்டிய முகவரியையும் சொல்லி “ இப்போ யார்கிட்டயும் தகவல் சொல்லாதீங்க ராம், நாம நேரில் பேசினதுக்கப்புறம் சொல்லிக்கலாம்” என்ற எச்சரிக்கையுடன் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான்

“ என்ன ஆச்சு சத்யா?,, இப்ப எதுக்கு அவர இங்க வரச்சொல்லிருக்க?” என்று கலவரத்துடன் ரமா கேட்க..

“ இல்லக்கா இதுக்கு மேலயும் மறைக்கிறதில் அர்த்தமில்லை, மாப்ள ரொம்ப பயந்துபோய் இருக்காரு, அதனால் எல்லாத்தையும் பேசிர்றது நல்லது” என்றவன் கவலையுடன் அழுதுகொண்டிருந்த மனைவியின் கையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த அரவிந்தனிடம் திரும்பி “ அரவிந்தா நான் சொல்ற வரைக்கும் இங்கயே இரு, நான் கூப்பிடும்போது வெளிய வந்தா போதும்” என்று கூற . அரவிந்தன் சரியென்று தலையசைத்தான்

“ மான்சி நாம கதவை சாத்திட்டு வெளிய மாடியில வெயிட்ப் பண்ணுவோம், மாப்ள வந்தா காத்தோட்டமா அங்கயே உட்கார வச்சு பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு எழுந்தவன் இருந்த இரண்டு சேரையும் வெளியே காம்பவுண்ட் சுவர் ஓரமாக போட்டுவிட்டு வந்தான்

“ அக்கா நீங்க துரை சாருக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொல்லி கொஞ்சம் சீக்கிரமா வரச்சொல்லுங்க” என்று ரமாவிடம் சொன்னதும் “ சரி சத்யா இதோ போறேன்” என்று கீழே ஓடினாள் ரமா ..

பதட்டமாக அமர்ந்திருந்த அனுசுயாவின் எதிரில் அமர்ந்த சத்யன் “ நீ கவலைப்படாதம்மா, கவலைப்படும்படி எதுவும் நடக்காது, ஏன்னா ராமுவுக்கு ஓரளவுக்கு எங்க விஷயம் தெரியும்.. பாகி சொல்லிருக்கா.. அதனால அவரும் உங்கப்பா வந்ததும் பேசி இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்துறதுன்னு முடிவு பண்ணிருந்தார், ஆனா நீ எங்ககிட்ட சொன்ன மாதிரி அரவிந்தனை காதலிச்சதா சொல்லவேண்டாம், ஏன்னா அவர் மனசு சங்கடப்படும், அவருக்கும் பாக்யாவுக்கும் நடக்கவிருக்கும் கல்யாணம் நிக்கக் கூடாதுன்னுதான் இந்த முடிவு எடுத்ததா சொல்லு, உங்களைப் பொருத்தவரைக்கும் அதுதானே உண்மை, ஒருத்தரையொருத்தர் விரும்பினது அதுக்கு பிறகுதானே, அதனால முதல் உண்மையையே உன் அண்ணன் கேட்க்கும் போது சொல்லு அதுதான் நம்ம எல்லாத்துக்கும் நல்லது ” என்று நிலைமையைத் தெளிவாக எடுத்துச்செல்ல

அரவிந்தன் அனுசுயா இருவருக்குமே அதுதான் சரியென்று தோன்றியது
சற்றுநேரத்தில் துரையும் வந்துவிட அவர்கள் எல்லாவற்றையும் கலந்து பேசும்போதே மறுபடியும் ராமுவிடமிருந்து போன் வந்தது , சத்யன் ஆன் செய்ததுமே “ நீங்க சொன்ன தெருவுக்கு வந்துட்டேன் சத்யா” என்று ராம் தகவல் சொல்ல..

“ தெரு உள்ள வாங்க ராம் பதினோராவது நம்பர் வீடு, நான் வெளியவே நிக்கிறேன் வாங்க” என்று சொல்லிவிட்டு செல்லை ஆப் செய்தவன் “ ராம் வந்தாச்சு, நான் போய் கூட்டிட்டு வர்றேன், நீங்க ரெண்டு பேரும் உள்ளயே இருங்க ” என்று அரவிந்தனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு கீழே போனான்

கீழே போன சற்றுநேரத்தில் ராமுவை பார்த்து அழைத்து வந்தான், தங்கையைத் தேடி அலைந்ததில் ராமு ரொம்பவே சோர்ந்து போயிருந்தான், நேற்று சொல்லியிருக்கலாமோ? என்ற குற்றவுணர்ச்சியுடன் மாடிக்கு அழைத்துவந்தான் சத்யன்

மாடியில் போட்டு வைத்திருந்த சேர் ஒன்றில் துரை கதிரை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, சத்யன் அடுத்தச் சேரை இழுத்து ராமுவின் அருகே போட்டு “ உட்காருங்க ராம்” என்றான்

ராம் அமர்ந்ததும் ... வீட்டைப் பார்த்து “ மான்சி கொஞ்சம் தண்ணி கொண்டு வா” என்று குரல் கொடுக்க.. மான்சி தண்ணீர் சொம்புடன் வந்தாள்...

அவளிடமிருந்து தண்ணீரை வாங்கி ராமுவிடம் கொடுத்த சத்யன் “ இது மான்சி, பாக்யா சொல்லிருப்பாளே?” என்றவன் துரையின் மடியில் இருந்த கதிரை காட்டி “ இவன் என் பையன் கதிரவன்” என்று அறிமுகம் செய்தான்.

ராமுவுக்கு இருந்த பதட்டத்தில் எதுவும் சொல்ல முடியாமல், மான்சியைப் பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்துவிட்டு, குழந்தையை நோக்கி கையசைத்துவிட்டு “ அனுசுயா எங்க இருக்கான்னு தெரியும்னு சொன்னீங்களே சத்யன். எங்க இருக்கா?” என்று உடனே ஆரம்பித்தான் ராம்

“ சொல்றேன் ராம்” என்றவன் துரையை அறிமுகம் செய்த சத்யன் “ நீங்க எங்க எல்லாரையும் மன்னிக்கனும் ராம்” என்று ஆரம்பித்தான்...

‘ ஏன்?’ என்ற பார்வையுடன் ராம் பார்க்க..

சத்யன் எப்படி சொல்வது என்று புரியாமல் துரையைப் பார்த்துவிட்டு, பிறகு ஒரு முடிவுடன் பேச ஆரம்பித்தான் “ ராம் உங்களுக்கு மான்சியைப் பத்தி பாக்யா சொல்லி தெரிஞ்சிருக்கும், உங்க தங்கச்சியோட எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தால் மான்சியோட வாழ்க்கை மட்டுல்ல, என் வாழ்க்கை அனுசுயா வாழ்க்கை இப்படி மூனுபேர் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகியிருக்கும், அதனால இந்த நிச்சயத்தை நிறுத்த உங்களை சந்திச்சுப் பேசனும்னு நெனைச்சேன், ஆனா நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னு நெனைச்சு உங்க கல்யாணம் பாதிக்காதவாறு அனுசுயாவைப் பார்த்து நிலைமையை சொல்லலாம்னு நாங்கல்லாம் முடிவு செய்தோம்” என்று சத்யன் சொல்லும் போதே குறுக்கிட்ட ராம்..

“ நாங்கல்லாம்னா யார் யார் சத்யன்?” என்று குழப்பத்துடன் கேட்க...

“ நான் துரை சார், அவரோட ஒய்ப் ரமா, அப்புறம் என் ப்ரண்ட் அரவிந்தன்” என்று உண்மையைச் சொன்னான் சத்யன்..

பிறகு அவனை கையமர்த்தி விட்டு துரை... அனுசுயாவை மூவரும் சந்தித்து தங்களது கோரிக்கையை வைத்த வரைக்கும் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொன்னார், “ அப்புறம் அனுசுயா போன் பண்ணும்னு வெயிட் பண்ணோம் ராம், ஆனா நேத்து மதியம்தான் தகவல் தெரிஞ்சது அனுசுயா கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு” என்று துரை முடித்ததும்




சற்றுநேரம் அமைதியாக இருந்த ராம் “ அப்போ கல்யாணம் முடிஞ்சுபோச்சா?” என்று கனத்த இதயத்துடன் சத்யனைப் பார்த்து கேட்க...

“ ஆமாம் ராம்.. நிச்சயத்தை நிறுத்தினா, உங்கப்பா உங்க கல்யாணத்தையும் சேர்த்து நிறுத்திடுவார்னு பயந்துபோய் வேற வழியில்லாம உங்க தங்கை இந்த முடிவை எடுத்திருக்காங்க, கல்யாணத் தேதியும் நெருங்கிட்டதால அவங்கலால வேற எந்த முடிவையும் யோசிக்கமுடியலை ராம் அதனாலதான் இந்த முடிவுக்கு வந்துட்டாங்க” என்று சத்யன் சங்கடமாக கூறினான் .

ராம் சிறிதுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். பிறகு வேதனை சுமந்த முகத்துடன் நிமிர்ந்து “ உங்களோட தங்கச்சி உங்களுக்காக என்கிட்ட வந்து கல்யாணத்தை நிறுத்தச்சொல்லி அழுதா... என்னோட தங்கச்சி என் கல்யாணம் நிற்க்க கூடாதுன்னு தன்னோட வாழ்க்கையையே பணயமா வச்சிட்டா, ரெண்டு பேருமே அவங்க பாசத்தை இப்படி காட்டுறாங்க, ஆனா அதனால நம்முடைய மனசு எவ்வளவு கஷ்டப்படுதுன்னு அவங்களுக்குப் புரியலை சத்யா” என்று உணர்ச்சியில் உதடு துடிக்கப் பேசிய ராம், பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து கண்களை ஒற்றிக்கொண்டான்

“ சரி எல்லாம் முடிஞ்ச பிறகு இனிமே பேசி பயனில்லை, யாரை கல்யாணம் பண்ணிகிட்டா?” என்று கேட்டான்..

சத்யன் பெரும் தயக்கத்துடன் தடுமாறி , மாடியின் கைப்பிடிச் சுவற்றில் சாய்ந்து கால் மாற்றி நின்றுகொண்டான் “ மொதல்ல நான் சொல்ற விஷயத்தை நீங்க நம்பனும் ராம்,, இந்த கல்யாணம் பத்தி எனக்கு மொதல்லயே தகவல் தெரிஞ்சிருந்தா சத்தியமா நான் உங்ககிட்ட சொல்லியிருப்பேன், ஆனா கல்யாணம் முடிஞ்சு கிட்டத்தட்ட நாலுமணி நேரம் கழிச்சு தான் எங்களுக்கு சொன்னாங்க, அதனால என்னால எதுவுமே பண்ணமுடியாம போச்சு ராம், இப்பக்கூட உங்களை கன்வின்ஸ் பண்றதைப் பத்திதான் பேசிகிட்டு இருந்தோம், அதுக்குள்ள நீங்களே கால் பண்ணிட்டீங்க” என்று தன் நிலைமையை தெளிவாக சொன்ன சத்யன் ராமின் அருகில் வந்து அவன் தோளில் ஆறுதலாக கைவைத்து

“என்னோட பிரண்ட் அரவிந்தனை தான் கல்யாணம் உங்க தங்கச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க ராம், அரவிந்தனுக்கு நண்பனோட காதலை வாழவைக்கும் வைராக்கியம், உங்க தங்கச்சிக்கு தன் நிச்சயத்தை நிறுத்தி தன் அண்ணனோட கல்யாணத்தை நடத்தவேண்டிய கட்டாயம், ஆக ரெண்டுபேரும் தன்னிச்சையா ஒரேநாள்ல பேசி முடிவு பண்ணி மறாவது நாளே ரத்னகிரி முருகன் கோயிலில் கல்யாணம் பண்ணிக்கிட்டு அன்னைக்கு மதியம்தான் எனக்கு போன் செய்து தகவல் சொன்னாங்க” என்று சத்யன் சொல்லி முடித்ததும் அங்கே பலத்த அமைதி, இரவுநேர வேகக் காற்றின் சீறலான சப்தம் மட்டும் அமைதியை கிழித்தது,

மவுனமாக அமர்ந்திருந்த ராம் நீண்ட மூச்சுடன் எழுந்து “ சரி சத்யன் நான் கிளம்புறேன்” என்று கூற

சத்யன் அவன் கையைப் பற்றிக்கொண்டு “ என்ன ராம் எதுவுமே பேசாம கெளம்பிட்டீங்க?” என்று வேதனையுடன் வருத்தமாக கேட்டான் ..


“ இல்ல சத்யன் நீங்க சொல்றதை நான் நூறுசதம் நம்புறேன், உங்க நண்பர் இப்படி பண்ணதுக்கு உங்களை நான் எதுவும் சொல்லமுடியாது, ஆனா என் தங்கச்சி பண்ணதை நினைச்சு என்னால அவ சூழ்நிலையை புரிஞ்சுக்க முடியுது, ஆனா சந்தோஷப்பட முடியலை, அவசரத்தில் தேர்ந்தெடுத்தவன் நல்லவனா கெட்டவனான்னு தெரியமா அவ வேனும்னா இருக்கலாம்?, ஆனா நான் அப்படியிருக்க முடியாதே? சரி நீங்க அவங்க முகவரி குடுங்க சத்யன் நான் போய்ப் பார்க்கிறேன்” என்று ராம் கேட்ட அடுத்த நிமிடம்...

சத்யன் அழைக்காமலேயே அறைக்குள் இருந்து ஓடிவந்த அனுசுயா ராமின் காலில் விழுந்து பாதங்களை கெட்டியாகப் பற்றிக்கொண்டு “ அண்ணா என்னை மன்னிச்சிடு, எனக்கு இருந்த நெருக்கடியில வேற வழி தெரியலை, ஆனா அவர் ரொம்ப நல்லவர் அண்ணா” என்று அழுது ராமின் பாதங்களை நனைக்க,,

திடீரென்று அனுசுயாவைப் பார்த்த அதிர்ச்சியில் ராம் அப்படியே நின்றிருந்தான்,

அனுசுயாவின் பின்னாலேயே வந்த அரவிந்தன் ராமின் பாதத்தில் கிடந்த தன் மனைவியைத் தூக்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டான், அனுசுயா அழுததை அரவிந்தனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, வாய் வார்த்தைகள் இல்லாமல் அவள் கூந்தலை வருடி, தோளை அழுத்து தன்னால் முடிந்தமட்டும் அவளை ஆறுதல்படுத்தினான்,

ராம் அவர்கள் இருவரையும் திகைப்புடன் பார்க்க.... அரவிந்தன் மனைவியை அணைத்தவாறே ராமுவை நெருங்கி “ எங்களை மன்னிச்சிடுங்க சார், நடந்ததுக்கு நானும் ஒரு காரணம்தான், என் பிரண்ட் சத்யனும், என் தங்கை மான்சியும் சேர்ந்து வாழனும்னு நான்தான் அனுவைப் பார்த்து நிச்சயத்தை நிறுத்தச்சொல்லி வற்புறுத்தினேன், அதனால அனுவும் வேற வழியில்லாம என்னை கல்யாணம் பண்ணிக்கிற முடிவை எடுத்தா, உங்களுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இப்போ நாங்க எங்களுக்காகத் தான் வாழுறோம், ஆமாம் சார் ரெண்டுபேரும் உண்மை காதலிக்க ஆரம்பிச்சிருக்கோம், அதனால நாங்க தியாகம் பண்ணிட்ட மாதிரி யாரும் எங்கமேல பரிதாபப்பட வேண்டாம் ” என்று சொல்லிவிட்டு சத்யன் பக்கம் திரும்பி

“ சத்யா நான் கிளம்புறேன்டா, நானும் ஒருவாரம் லீவு குடுத்திருக்கேன், நாளைக்கு கல்யாண மாலைக்கு சொல்லனும், எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே இருக்காங்க, எவ்வளவு ரேட் சொல்றாங்கன்னு விசாரிச்சு சொல்றேன், சரிடா நாளைக்குப் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு மனைவியோடு அங்கிருந்து நகர்ந்தவனை இருடா என்று சொல்ல சத்யனுக்கு மனசு வரவில்லை, இந்த இறுக்கமான சூழ்நிலையில் அவர்கள் அங்கிருப்பது மேலும் சங்கடத்தை தான் அதிகரிக்கும் என்பதால் சரியென்று தலையசைத்து அவர்களை வழியனுப்ப கூடவே போனான் சத்யன் 


அப்போது அங்கிருந்த அனைவரின் உள்ளமும் குளிரும்படி “ அனுவை எப்ப எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வருவீங்க மாப்பிள்ளை” என்று ராமு அரவிந்தனைப் பார்த்து கேட்டதும், துரைக்கு சந்தோஷம் தாங்கமுடியாமல் சேரிலிருந்து எழுந்து ராமை தோளோடு அரவணைத்து “ அவங்களை புரிஞ்சி ஏத்துகிட்டதுக்க நன்றிப்பா” என்று உணர்ச்சிவசப்பட்டார்

போனவர்கள் திரும்பி வர, அரவிந்தன் ராமை கையெடுத்துக்கும்பிட்டு “ கோபப்படாம எங்களை புரிஞ்சிகிட்டதுக்கு நன்றிங்க” என்றான் அனுசுயா அரவிந்தனிடமிருந்து விலகி அண்ணனை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு “ இவரு ரொம்ப நல்லவருன்னா, அதனால்தான் இவரையே கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணேன்” என்றாள்..

“ முடிவு பண்ணதுல தப்பில்ல அனு, அதை நீ என்கிட்ட சொல்லியிருக்கலாம், நானே முன்ன இருந்து கல்யாணத்தை நடத்தியிருப்பேன், சரிவிடு நடந்து முடிஞ்சு போச்சு இனிமேல் நீ நல்லாருந்தா போதும், எப்போ நம்ம வீட்டுக்கு வர்றீங்க ” என்றான் ராமு

“ இல்ல ராமு இவங்க இப்ப உங்க வீட்டுக்கு வர்றது அவ்வளவு சரியா வராது, உங்கப்பா ரொம்பவும் கோபக்காரர்னு சொன்னாங்க, அதனால அனுசுயா காதலனோட ஓடிப் போனது போனதாகவே இருக்கட்டும், உங்க கல்யாணத்துக்குப் பிறகு, நீங்களும் பாக்யாவும் அரவிந்தன் வீட்டுக்குப் போய் முறையா அழைச்சிகிட்டு வாங்க, அதுவரைக்கும் உங்க அம்மாகிட்ட வேனும்னா நடந்ததை சொல்லுங்க, உங்க அப்பாகிட்ட, அனுசுயாவுக்கு கல்யாணம் ஆனதை மட்டும் சொல்லுங்க மத்த விவரங்கள் எதுவும் வேண்டாம், பிறகு சொல்லிக்கலாம்” என்று துரை சமயோசிதமாக பேசியதும், அனைவரும் அதுதான் சரியென்று முடிவு செய்தனர்..

“ ஆனா என் கல்யாணத்துக்கு என் தங்கச்சி வரனுமே? இருக்கிறது ஒரே தங்கச்சி அவளும் கல்யாணத்துக்கு வரலைன்னா எப்படிங்க?” என்று ராம் கேட்க...

“ அனு நிச்சயம் கல்யாணத்துக்கு வருவா.. உங்கப்பா ஏதாவது பிரச்சினை பண்ணா ‘ என் தங்கச்சி இல்லாம எனக்கு கல்யாணமா? நான்தான் வரச்சொன்னேன்னு நீங்க தைரியமா உங்கப்பா கிட்ட சொல்லுங்க ராம், அதுக்கப்புறம் ஒரு பிரச்சினையும் வராது” என்று துரை அவனுக்கு யோசனை சொன்னார்

ஒருவழியாக எல்லாவற்றையும் பேசி முடித்தபோது இரவு மணி எட்டாகியிருந்தது “ சரி எங்களுக்கு நேரமாச்சு, அம்மா தனியா இருப்பாங்க ” என்று சொல்லிவிட்டு அரவிந்தன் கிளம்ப..

“ ம்ஹும் உன் பிரச்சனை உனக்கு.. நீ இவ்வளவு நேரம் தாக்குப்பிடிச்சதே பெரிய விஷயம், அம்மாவை சாக்கு சொல்லாத, அவங்க இன்னேரம் சாப்பிட்டு மாத்திரை போட்டுகிட்டு படுத்திருப்பாங்க, ம்ம் கிளம்பு கிளம்பு, ஆனா வீட்டுக்குப் போய் சாப்பிட்டு ஆரம்பிங்கடா ” என்று சத்யன் கிண்டல் செய்ய, அனுசுயா தனது வெட்கத்தை மறைக்க அரவிந்தனின் பின்னால் மறைந்தாள் 


“ அவனை ஏன்டா வார்ர.. கல்யாணம் ஆன புதுசுல எல்லாருமே அப்படித்தான், இப்ப நம்ம ராமு கூடத்தான் கல்யாணத்தன்னிக்கு நைட்டு உள்ளப் போன வெளிய வர எத்தனை நாளாகுமோ... என்ன ராமு நான் சொல்றது சரிதான?” என்று தங்களின் நக்கலுக்கு ராமுவையும் இழுத்தார் துரை

தன் அப்பாவிடம் எப்படி பேசுவது என்று யோசித்துக்கொண்டிருந்த ராம் அதே சிந்தனையில் இருந்த வாறு “ ஆமா ஆமா.. என்றுவிட்டு சட்டென்று சுதாரித்து “ அய்யய்யோ என்ன சார் இது இப்படியெல்லாம்.........” என்று சிறு தடுமாற்றத்துடன் அழகாக வெட்கப்பட்டான் ராம்

அவன் வெட்கத்தைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட, கதிரவனும் சிரித்தான்,
“ சரியண்ணா நாங்க கிளம்புறோம், அம்மாக்கு சொல்லி புரிய வைண்ணா, அவங்க பேச நினைச்சா கால் பண்ணி குடு ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு அனுசுயா தன் கணவனுடன் கிளம்பினாள்

அவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய சத்யனிடம் “ மாப்பிள்ளை எப்படி சத்யா? நல்லவர் தானே?” என்று கவலையுடன் கேட்ட ராமுவின் தோளில் ஆறுதலாய் கைவைத்த சத்யன் “ என்னைவிட நூறு மடங்கு நல்லவன் என் ப்ரண்ட்” என்று சொன்னதும் ராமுவும் நிம்மதியாக கிளம்பினான்

எல்லாம் சுமுகமாக முடிந்த திருப்தியுடன் துரையும் கீழே போய்விட, தனது அறைக்குள் நுழைந்ததும் சந்தோஷத்தில் மான்சி கையில் இருந்த மகனுடன் தூக்கி ஒரு சுற்று சுற்று இறக்கிய சத்யன் அவள் முகமெல்லாம் முத்தமிட்டு “ ஒருவழியா ஒரு பிரச்சனை தீர்ந்தது” என்று மான்சியை கொஞ்சினான்

“ ம்ம் இன்னும் உங்க அம்மா இருக்காங்களே? அவங்களும் நம்மளை ஏத்துக்கிட்டா நல்லாருக்கும்ல?” என்று மான்சி ஏக்கமாக கூற...

“ அவங்களும் சரியாயிடுவாங்க கவலைப்படாதே மான்சி, இப்பவே அவங்ககிட்ட நிறைய மாற்றங்கள் தெரியுதுன்னு அப்பா சொன்னாரு, கூடிய சீக்கிரம் அவங்களே நம்மளைத் தேடி வருவாங்கப் பாரு?” என்று மான்சியை ஆறுதல் படுத்தியவன் அவள் மனநிலையை மாற்றும் எண்ணத்தில்

“ ஆமா என் பொண்டாட்டி எனக்கு மோதிரம் வாங்கினதா சொன்னாங்களே, அப்படி எதையுமே என்கிட்ட காட்டவே இல்லையே?” என்று குறும்பாக கூறினான்..

உடனே அவனிடமிருந்து விலகிய மான்சி, குழந்தையை பாயில் கிடத்திவிட்டு பூஜை அலமாரியை திறந்து சாமி படத்தின் அருகே இருந்து ஒரு வெல்வெட் டப்பாவை எடுத்துவந்து திறந்து அதிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்து சத்யனின் விரலில் போட்டு அந்த மோதிரத்துடன் விரலுக்கு முத்த கொடுக்க,

“ ம்ம் பத்தி விரல்லயும் மோதிரம் போட்டா நல்லாருக்கும்ல?” என்றுகூறி சத்யன் சிரிக்க..


அவன் முகத்தையேப் பார்த்த மான்சி அவன் பிடரியைப் பற்றி தன்னருகே இழுத்து சத்யனின் முரட்டு உதடுகளை, தனது மென் இதழ்களால் கவ்விக்கொண்டாள், அவள் தன் வாய்க்குள் நடத்தும் காதல் விளையாட்டுக்கு ஒத்துழைத்தவாறு அவள் இடுப்பை வளைத்து தன் உயரத்துக்கு தூக்கிக்கொண்டான் ஒரு நீண்ட நிறைவான முத்தத்தில் இருவரும் தங்களை மறந்தனர்

அவள் மூச்சுவாங்க நிறுத்தியபோது, அவள் விட்ட இடத்திலிருந்து சத்யன் ஆரம்பித்தான், அவளை நெருக்கி அணைத்து முத்தமிட்டதால், மான்சியில் பால் மார்புகள் சத்யனின் நெஞ்சில் பட்டு நசுங்கி உருக ஆரம்பித்தது, முத்தமிடும் வேகத்தில் இருவருமே அதை உணரவில்லை, முதலில் உணர்ந்தது சத்யன்தான், பால் ஊறி அவன் அணிந்திருந்த பனியன் நனைந்து அதன் ஈரம் வயிற்றில் பட்டது

என்ன என்று பார்ப்பதற்காக மான்சியை விலக்கியவன், நனைந்து போன தன் பனியனையும் மான்சியையும் மாறிமாறிப் பார்க்கு... மான்சி வெட்கமாக முகத்தை மூடிக்கொண்டு வெளியே மாடியில் போய் நின்று கொண்டாள்,



சற்றுநேரத்தில் அவள் பின்னால் வ்து நின்ற சத்யன் “ ம்ஹும் எவ்வளவு வீனாப் போயிருக்கு” என்று முனுமுனுக்க, “ ச்சீ” என்று மறுபடியும் முகத்தை மூடிக்கொண்டாள் மான்சி..

நிலவின் பின்னனியில் மான்சி வெட்கம் மிகவும் அழகாக இருந்தது, பக்கவாட்டில் நின்று அவளையே பார்த்திருந்த சத்யன் நேரமாவதை உணர்ந்து, அவள் இடுப்பை வளைத்து தன்னுடன் இணைத்து “ வா சாப்பிடலாம்” என்று உள்ளே அழைத்து வந்தான்

இத்தனை நாட்களாக பகலில் கல்யாண வேலையாக சுற்றுவதும், இரவில் டியூட்டி போவதுமாக இருந்த சத்யனுக்கு, மான்சியின் முத்தம் மட்டுமே போதுமானதாக இருந்தது, ஆனால் இப்போது இரவில் அள் அருகாமையில் எப்படி கழிக்கப் போகிறோம் என்று தவிப்பாக இருந்தது சத்யனுக்கு..

அன்று இரவு கதிரவனை நடுவில் போட்டுக்கொண்டு இருவரும் ஆளுக்கொரு மூலையில் படுத்துக்கொண்டனர், மனமும் உடலும் மான்சி மான்சி என்று ஏங்கி தவித்தது . ஆனால் மான்சியின் எண்ணப்படி பாகியி்ன் திருமணம் முடியட்டும் என்று மனதை கட்டுப்படுத்தினான்,

இன்னும் மூன்றே நாட்கள் அதன்பிறகு யாருக்கும் நான் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை, முன்று நாட்கள் முடிந்தபின் என்னவென்று தெரியாமலேயே என்று தன் தவிப்புக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டான் 



No comments:

Post a Comment