Thursday, November 5, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 15

“ வணக்கம் அனுசுயா ,, நானும் சத்யனோட நண்பன்தான் உங்ககிட்ட சத்யனைப் பத்தி ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு வந்திருக்கோம் ” என்று துரை கூறியதும் அனுசுயா அவரை யோசனையுடன் பார்த்தாள்

“ என்கிட்ட என்ன பேசனும்?” என்றாள் கேள்வியாக....

ரமா முன்னால் வந்து அனுசுயாவின் கையைப்பற்றி “ சத்யனுக்கும் உனக்கும் நடக்கயிருக்குற நிச்சயதார்த்தம் பத்தி பேசனும் அனுசுயா, ப்ளீஸ் மறுக்காமல் எங்ககூட வாம்மா ” என்று குரலில் வேண்டுதலுடன் அழைத்தாள்

நெற்றியை சுருக்கி கண்களை கூர்மையாக்கிப் பார்த்த அனுசுயா நிமிடநேர யோசனைக்குப் பிறகு “ சரி வாங்க... எங்கபோய் பேசனும்?” என்றாள்

உடனே முகம் பளிச்சிட “ ஆட்டோவில வரும்போது வழியில ஒரு பூங்கா பார்த்தேன் அங்க போய் பேசலாமே?” என்றான் அரவிந்தன்



“ ம்ம் போகலாம்” என்று அனுசுயா சொல்லிவிட்டு முன்னால் நடக்க, இவர்கள் மூவரும் அவள் பின்னால் போனார்கள்

பூங்கா நடக்கும் தூரத்தில்தான் இருந்தது, இவர்கள் உள்ளே நுழையும்போது சில முதியவர்களும், மறைவான ஒரு சில இடங்களில் சில காதல் ஜோடிகளும் அமர்ந்திருந்தனர்

மொட்டை வெயிலில் அமர்ந்திருந்த அந்த காதல் ஜோடிகளைப் பார்த்து அரவிந்தன் எரிச்சலாக முனங்கிக்கொண்டு வர..

அவன் அருகில் வந்த துரை “ என்னடா மொனங்கிக்கிட்டு வர்ற ” என்று மெதுவாக கேட்க...

“ இல்லண்ணே இந்த மொட்டை வெயில்ல அப்படி என்னத்தத்தான் பேசுவானுக? காதலிக்க ஆரம்பிச்சா வெயில் கூடவா குளுகுளுன்னு இருக்கும், பார்க்குறப்ப எனக்கு எரிச்சலா இருக்கு, ” என்று நக்கலாய் கூறினான்

“ நீ என்னமோ பொறாமையில பேசுற மாதிரி இருக்கேலே? மண்டையில மசுரு இருக்குறவ பின்னித் தொங்கவிட்டுக்குறா இல்ல அள்ளியும் முடிஞ்சுக்குறா உனக்குத்தான் மொட்டையாச்சேடா மாப்ளே, அப்புறம் ஏன்லே அவங்களப் பார்த்து தீயுற” என்று பதிலுக்கு அவன் ஒல்லியாக இருப்பதால் எந்தப் பொண்ணும் அவனைப் பார்க்கவில்லை என்று துரை கேலி செய்ய...

சட்டென்று கோபமான அரவிந்தன் அப்படியே நின்று “ அண்ணே வேனாம் எத வேனும்னாலும் கிண்டல் பண்ணுங்க என் உடம்பை மட்டும் கிண்டல் பண்ணாதீங்க” என்று கறாராக பேச..

அவன் தோளில் கைப்போட்டு “ வாடா மாப்ளே இதுக்கெல்லாம் கோவப்படுற, உனக்குன்னு ஒருத்தி வரும்போது நடு ரோட்டுல உங்கந்து கூட லவ் பண்ணு இப்போ இவனுகளைப் பார்த்து வயிறு எரியாத” என்று மறுபடியும் கிண்டல் செய்தவாறு அவனை தள்ளிக்கொண்டு போனார்

இவர்களுக்கு முன்பு சென்ற அனுசுயாவும் ரமாவும் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க இவர்களும் தங்களின் பேச்சை குறைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிரில் அமர்ந்தார்கள்..

முதலில் அனுசுயாதான் பேச்சை ஆரம்பித்தாள் “ நீங்க ரெண்டுபேருமே அவர்கூடத்தான் வேலை செய்றீங்களா?” என்று கேட்க

“ இல்லம்மா நான் மட்டும்தான் சத்யன் கூட வேலை செய்றேன், அவனைவிட எட்டு வருஷம் சீனியர்,, அரவிந்தன் ஒரு லெதர் கம்பெனியில் வேலை செய்றான்,, என்றார் துரை 

“ ஓ..........” என்றவள் அடுத்து என்ன பேசுவது என்று புரியாதவள் போல தரையில் இருந்த புற்களை நகத்தால் கீறிக் கொண்டிருந்தாள்

துரை தொண்டையை கனைத்துக் கொண்டு “ சத்யனுக்கு உன்கூட நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்தில விருப்பம் இல்லைம்மா” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்

இது எனக்கு பழைய செய்தி என்பதுபோல் நிமிர்ந்து பார்த்த அனுசுயா “ அது எனக்கு முன்னமே தெரியும் சார்,, அவருக்கு என்னை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்?” என்று கூறிவிட்டு அனுசுயா தலையை குனிந்துகொண்டாள்

அவள் வார்த்தைகளில் உடனே பதட்டமான அரவிந்த் “ அய்யோ நீங்க தப்பா நெனைச்சுட்டீங்க.... உங்களைப் பிடிக்காம சத்யன் மறுக்கலை” என்று நிறுத்திவிட்டு சங்கடமாய் அனுசுயாவைப் பார்த்தான் ..

அவனை நிமிர்ந்துப் பார்த்து “ வேறென்ன காரணம்” என்றவள் அடுத்த நிமிடம் “ அவர் யாரையாவது விரும்புராறா” என்று கேட்டாள்

அவளே அப்படி கேட்டதும் இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்த துரை “ ஆமாம்மா,, ஒரு பொண்ணை விரும்புறான்மா,, அந்த பொண்ணும் ரொம்ப நல்ல பொண்ணு... ஆனா வெளிய தெரிஞ்சா தங்கச்சி கல்யாணம் நின்னுமோன்னு பயத்துல அந்த பொண்ணும் சத்யனும் ஒவ்வொரு நாளும் நரகவேதனை அனுபவிக்கிறாங்க, அதை காண பொறுக்காம தான் நாங்களே உன்னைப் பார்க்க வந்தோம்” என்று வந்த விஷத்தை ஓரளவு தெளிவாக சொல்லி முடித்தார் துரை ..
சற்றுநேரம் அமைதியாக இருந்த அனுசுயா “ அதுக்கு நான் என்ன பண்ணனும்னு நெனைக்கிறீங்க” என்று மூன்றுபேரையும் தன் பார்வையால் அளந்தபடி கேட்டாள்

ரமா அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “ ஒரு பொண்ணு நானே இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை நிறுத்தக்கோரி கேட்ககூடாது... ஆனா மான்சிக்கு சத்யனைத் தவிர வேற யாருமேயில்லை அனுசுயா,, அவ ஒரு விதவைம்மா” என்று சொல்லும்போதே ரமாவின் கண்கள் கண்ணீரை சிந்த,,

ரமாவின் வார்த்தைகள் அனுசுயாவை சரியாக தாக்கியிருந்தது “ என்னது விதவையா?” என்று திகைப்புடன் கேட்க...

“ஆமாம்மா” என்ற ரமா அதற்குப் பிறகு நிறுத்தவே முடியாத அளவுக்கு மடமடவென்று மான்சியைப் பற்றி எல்லாவற்றையும் சொல்ல,, கூடவே அரவிந்தனும் சேர்ந்து கொண்டான், முகுந்தனுடன் மான்சி பட்ட கஷ்டங்களையும் அவன் ஜெயிலுக்குப் போய் அங்கே இறந்துபோனதையும் அதற்காக சத்யன் உதவ வந்து அவர்களுக்குள் மலர்ந்த காதலையும், மான்சி காணாமல் போனது பிறகு சத்யன் கண்டுபிடித்தது என தன் கண்ணெதிரே நடந்த சகலத்தையும் அரவிந்தன் விவரமாக எடுத்துச் சொன்னான்..

அவர்கள் முடித்ததும் அங்கே ஒரு தேவையற்ற நிசப்தம் நிலவ.... அனுசுயா நீண்ட யோசனைக்குப் பிறகு “ நீங்க சொல்றதெல்லாம் சரிதான்,, அவர் என் போட்டோவைக் கூட பார்க்கலைன்னு சொன்னதுமே அன்னைக்கே புரிஞ்சுபோச்சு, நானே மறுக்கனும்னு தான் நெனைச்சேன்,, ஆனா என் அப்பாவைப் பத்தி உங்களுக்கெல்லாம் தெரியாது எனக்கும் என் அண்ணனுக்கும் இத்தனை நாளா கல்யாணம் நடக்காததுக்கு காரணமே எங்க அப்பாதான், வர்ற இடங்களையெல்லாம் கோளாறு சொல்லி சொல்லியே என்னை இருபத்தாறு வயசு வரைக்கும் கொண்டு வந்துட்டாரு, இப்போதான் அப்பா மகன் ரெண்டுபேருமே கவர்மெண்ட்ல வேலை செய்றாங்கன்னு சொல்லி இந்த இடத்தை முடிச்சார். இப்போ நான் மறுத்தேன்னு வைங்க, அடுத்த நிமிஷமே பாக்யாவோட கல்யாணமும் நிற்க்கும், ஆனா இந்த நிச்சயதார்த்தத்தை மறுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைங்கறதை நீங்க நம்பனும்” என்று அனுசுயா தனது நிலையை தெளிவாக எடுத்துச் சொன்னாள்

மறுபடியும் தேவையற்ற அமைதி, அனுசுயாவின் கருத்து நியாயமானதாக இருந்ததால் மீண்டும் என்ன பேசுவது என்று புரியாமல் மூவரும் அமர்ந்திருந்தனர், 




“ சரிங்க சார் எனக்கு நேரமாச்சு.. நான் கிளம்புறேன், என்னால் முடிஞ்ச முயற்சிகளை கடைசி நிமிஷம் வரை பண்ணுவேன் சார், என் வீட்டுலயும் சொல்லி புரியவைக்க ஏதாவது சந்தர்ப்பம் கிடைச்சா கண்டிப்பா சொல்லுவேன், ஏன்னா சம்மதமில்லாத ஒருத்தர் கூட என் வாழ்க்கை நிச்சயம் ஆகிறதுல எனக்கும் துளிகூட இஷ்டம் இல்லை சார், அதனால நீங்க தைரியமா போங்க, ஏதாவது செய்துட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்” என்று துரையைப் பார்த்து கூறிய அனுசுயா எழுந்துகொள்ள, வேறு வழியின்றி மற்றவர்களும் எழுந்தனர்
ரமா அனுசுயாவின் கைகளைப் பற்றி “ உன்னால ஒரு பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு விதி இருந்தா.. நிச்சயமா நீ ஏதாவது முடிவு பண்ணி இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்துவம்மா, இப்போ நாங்க கிளம்புறோம், ஒவ்வொரு நிமிஷமும் உன் பதிலை எதிர்பார்த்து காத்திருப்போம்ங்கறத மறக்காத அனுசுயா” என்று உணர்ச்சிகரமாக ரமா பேச.. அனுசுயா அவள் கையை ஆறுதலாக தடவிவிட்டு நடந்தாள்

எல்லோரும் பூங்காவில் இருந்து வெளியே வர “ நான் இந்த பக்கமா தையல் க்ளாஸ் போகனும்.. கிளம்புறேன்” என்று இவர்களுக்கு எதிர்திசையில் அனுசுயா செல்ல... இவர்களும் ஆட்டோவைத் தேடி கிளம்பினார்கள்

அப்போது அரவிந்தன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் வேகமாக அனுசுயாவின் பின்னால் ஓடி “ கொஞ்சம் இருங்க” என்று அவளை நிறுத்திவிட்டு தனது பாக்கெட்டில் இருந்து பேனாவும் ஒரு சீட்டும் எடுத்து அதில் தனது நம்பரை எழுதி அனுசுயாவிடம் கொடுத்து “ இது என்னோட நம்பர்ங்க, எதுவாயிருந்தாலும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க ப்ளீஸ்” என்றான்

அவனை ஆச்சர்யமாகப் பார்த்த அனுசுயா “ உங்களை பார்த்தா எனக்கு வியப்பா இருக்கு? ப்ரண்டுக்காக இவ்வளவு சிரமமெடுத்து என்னை கன்வின்ஸ் பண்றீங்களே?” என்று கேலியாக கூற...

“ இல்லங்க அவன் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை, மான்சி இல்லேன்னா அவன் உயிரையே விட்டுடுவான், அவனோட தவிப்பையெல்லாம் என் கண்ணால பார்த்தவன் நான்,, அப்புறம் அந்த பொண்ணும் இருக்காதுங்க” என்று கலங்கிய குரலில் அரவிந்தன் கூறியதும்,

அதுவரை கேலியாக முகத்தை வைத்திருந்தவள் “ ஓ ஸாரி தவறா எதுவும் சொல்லலை.. சும்மா கேலிக்கு தான் சொன்னேன், ஓகே கிளம்புங்க நான் உங்களுக்கு கால் பண்றேன்” என்று கூறிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்துபோய்விட, \

அரவிந்தன் துரையிடம் வந்து “ என்னோட போன் நம்பரை குடுத்துட்டு வந்தேண்ணே” என்றான்

இவர்கள் மூவரும் வீட்டுக்கு வந்தபோது, இவர்களுக்கு முன்பே மான்சி வந்திருந்தாள், ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு குழந்தையுடன் கீழே வந்தவள் அவர்களுடனேயே துரை வீட்டுக்குள் சென்றாள்...

மான்சியின் விழிகள் ஒரு எதிர்பார்ப்புடன் மூவரையும் பார்க்க

“ அந்த பொண்ணுகிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்லிட்டு வந்திருக்கோம் மான்சி, அவளுக்கும் இந்த நிச்சயதார்த்தத்துல இஷ்டம் இல்லையாம்,, அவளுக்கு அவங்க அப்பா மேல கொஞ்சம் பயம் இருக்கு, அதான் யோசிக்கிறா, அதனால என்ன செய்யமுடியுமோ அதை செய்துட்டு சீக்கிரமே தகவல் சொல்றதா சொல்லியிருக்கா.. வெயிட் பண்ணுவோம் மான்சி” என்று ரமா சொன்னதும்...

“ சரிக்கா” என்று யோசனையுடன் தலையசைத்தாள் மான்சி ...

“ நீ போனது என்னாச்சும்மா? சத்யனோட அப்பாவைப் பார்த்தியா?” என்று துரை கேட்க...


“ ம் பார்த்தேன் அண்ணா, என் தரப்பு நியாயம் எல்லாத்தையும் கேட்டேன், ஆனா அவரு இரண்டொரு வார்த்தை தவிர வேற எதுவுமே பேசலை, நான் பேசிட்டு அழுதுகிட்டே கிளம்புனதும் இரும்மான்னு சொல்லிட்டு அவரே ஆட்டோ பிடிச்சு என்னை ஏத்தி அனுப்புனாரு, கிளம்பும் போது ‘ உன்னை யாருன்னு தெரியா தவறா பேசினதுக்கு மன்னிச்சிடு, ஆனா என் மகனை திட்டினதுக்கோ, அறைஞ்சதுக்கோ நாங்க யார்கிட்டயும் மன்னிப்பு கேட்கனும்னு அவசியம் இல்லைன்னு’ சொல்லி அனுப்புனாரு”என்று மான்சி கூறியதும் மூவரின் முகத்திலும் சந்தோஷம் முகாமிட்டது..

“ அவரு மகனை திட்டுனதுக்கு அவரை யாரு மன்னிப்பு கேட்க சொன்னது, அவராச்சு அவர் மகனாச்சு.... உன்னை புரிஞ்சுகிட்டாருன்னா போதும் ஆட்டோல்லாம் பிடிச்சு ஏத்திவிட்டாருன்னா அவருக்கும் மனசு உறுத்த ஆரம்பிச்சிருக்கும்” என்று ரமா கூறிவிட்டு அனைவருக்கும் காபி போட கிச்சனுக்கு போனாள்

துரையும், அரவிந்தனும்,.. மான்சி மூர்த்தியிடம் பேசியதையும் அதற்கு அவர் சொன்ன பதில்களையும் விவரமாக கேட்டுக்கொண்டிருந்தபோது சத்யனும் அருணும் கேட்டைத் திறந்துகொண்டு வருவது தெரிய “ சத்யா.......... மான்சி இங்கதான் இருக்கு இங்க வா?” என்று அரவிந்தன் கூப்பிட்டதும் இருவரும் துரையின் வீட்டுக்குள் நுழைந்தனர்...

மான்சி அருணைப் பார்த்ததும் குழந்தையுடன் எழுந்து நிற்க்க,, சத்யன் அவளை நெருங்கி குழந்தையை வாங்கி தன் தோளில் போட்டுக்கொண்டு ஒரு கையால் குழந்தையை அணைத்து. மறுகையால் மான்சியை வளைத்து “ அருண் இவதான் உன் அண்ணி மான்சி, இவரு நம்ம இளவரசர் கதிரவன்” என்று தம்பிக்கு அறிமுகம் செய்து வைத்தான்

சத்யன் மற்றவர் முன்பு இப்படி தொட்டதில்லை என்பதால் மான்சி தவிப்புடன் நெளிந்தபடி தன் தோளில் இருந்த சத்யனின் கையை எடுக்க முயன்றபடி “ நல்லாருக்கியா அருண்?, எக்ஸாம் நல்லா பண்ணிருக்கியா?” என்று சன்னமான குரலில் கேட்டாள்..

அவளின் இயல்பான அனுகுமுறை அருணுக்கு பிடித்துவிட “ நல்லாருக்கேன் அண்ணி, நல்லா எழுதியிருக்கேன், கண்டிப்பா நைன்ட்டி பர்ஸன்ட் வருவேன்” என்று புன்னகையுடன் கூறிய அருண் “ குட்டிப் பையனைப் பார்க்கனும்னு சொன்னேன் அதான் அண்ணன் கூட்டிட்டு வந்தார்” என்று தான் வந்த காரணத்தை சொன்னான்

சத்யன் மான்சியின் மீது இருந்த கையை எடுத்துவிட்டு குழந்தையோடு அருணை நெருங்கி நீட்டிய அவன் கைகளில் குழந்தையை வைக்க, அதன்பின் அருண் கிளம்பும் வரை குழந்தையை வேறு யாரிடமும் தரவேயில்லை...

அனுசுயாவை சந்தித்ததைப் பற்றி துரை சத்யனிடம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ரமா எல்லோருக்கும் காபி எடுத்து வந்து கொடுக்க, அனைவரும் எடுத்துக்கொண்டனர்..

சத்யனின் மனக்குழப்பம் அவன் முகத்தில் தெரிய, துரை அவன் தோளில் கைவைத்து அழைத்து வந்து தன்னருகே அமர்த்திக்கொண்டு “ நீ எந்த கவலையும் இல்லாம பத்திரிக்கையை வச்சுக்கிட்டே வா, நடக்குறது தானா நடக்கும், முடிஞ்ச வரைக்கும் முயற்ச்சி பண்ணிருக்கோம், இனிமேல் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினா பாக்யா கல்யாணம் நின்னுபோகும்னா நாம எதுக்குடா இருக்கோம், நம்ம டிப்பார்ட்மெண்ட் மூலமா நடவடிக்கை எடுப்போம், வேற வழியில்லை.... ஆனா இது கடைசி முடிவு, அதுவரைக்கும் காத்திருப்போம்” என்று தனது முடிவை சொல்ல, சத்யன் யோசனையுடனேயே தலையசைத்தான்.

அருண் சத்யன் அருகே அமர்ந்து “ அதான் சார் சொல்றாருல்ல, கவலைப்படாதே அண்ணா, எல்லாம் சுமூகமா முடியும்” என்று கூறினான்


ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்த சத்யன் “ சரி அருண் நீ வீட்டுக்கு கிளம்பு, அம்மா தேடுவாங்க.... நானும் குளிச்சி சாப்பிட்டு டியூட்டிக்கு கிளம்பனும்,, ஆனா இங்க நடந்தது எதையுமே வீட்டுல சொல்லாத, மேலும் பிரச்சினை தான் அதிகமாகும், உள்ளதே போதும் ” என்று கூறிவிட்டு கதிரவனை வாங்கிக்கொண்டான்

“ சரிண்ணா” என்ற அருண் அனைவரிடமும் விடைபெற்று கிளம்ப,, “ இரு அருண் நானும் வீட்டுக்குத்தான் போறேன், என் வண்டி இங்கதான் இருக்கு உன்னை வீட்டுல விட்டுட்டு கிளம்புறேன்” என்று அரவிந்தனும் அருணுடன் கிளம்பினான்

சத்யன் மான்சியிடம் திரும்பி “ வா மான்சி சாப்பிட்டு டியூட்டிக்கு கிளம்பனும்” என்றுவிட்டு மாடி அறைக்கு கிளம்பினான்,

அறைக்குள் வந்து குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு திரும்பியவன் உள்ளே நுழைந்த மான்சியை இழுத்து தன் மார்போடு நொருங்க அணைத்துக்கொண்டான்,

அவள் தோளின் தன் தாடையைப் பதித்து “ நாள் நெருங்க நெருங்க ரொம்ப பயமாயிருக்கு மான்சி,, உன்னை இழந்துடுவேனோன்னு, ஆனா அப்புறம் நான் இந்த உலகத்துலேயே இருக்கமாட்டேன் மான்சி” என்று சத்யன் கரகரத்த குரலில் கூற....

அவனை அணைத்த வாக்கில் அப்படி தள்ளிச் சென்று சேரில் அமர்த்தி அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி “ ச்சே என்ன பேசுறீங்க, பார்க்கிறதுதான் போலீஸ் வேலை, ஆனா பேச்சு மொத்தம் கோழைத்தனமா இருக்கு” என்று அவன் மனநிலையை மாற்றும் விதமாக கேலியாக சொல்ல..
தன் கைகளால் அவள் இடுப்பை வளைத்து அவள் வயிற்றில் தன் முகத்தைப் பதித்த சத்யன் “ சொல்லுவடி சொல்லுவ.... காதலுக்கு முன்னாடி போலீஸ்காரனாவது ஆர்மிக்காரனாவது, எவ்வளவு பெரிய வீரனும் கோழை தான் மான்சி ” என்ற சத்யன் முகத்தை அவள் வயிற்றில் இப்படியும் அப்படியுமா புரட்டினான்

சத்யனின் சேட்டைகள் தாங்காது அவன் முகத்தை அசையவிடாமல் பற்றிக்கொண்டு மான்சி “ எனக்கு நம்பிக்கையிருக்கு, ரமா அக்கா சொன்ன மாதிரி வெயிட் பண்ணி பார்க்கலாம் ” என்றவள்.. சத்யன் கன்னத்தில் செல்லமாக தட்டி “ அதுவுமில்லாம இந்த மூஞ்சிய அந்த பொண்ணுக்கும் பிடிக்கலையாம்.. அதனால வேற வழியில்லை காலமெல்லாம் நான் இந்த முகத்தை சகிச்சுக்கனும்” என்று குறும்பாக கூறிவிட்டு மான்சி சிரிக்க...

தன் மூக்கின் அருகேயிருந்த மான்சியின் தொப்புளில் தனது மூக்கை நுழைத்து அங்கே வந்த வாசனையை நுகர்ந்து மூச்சை அழுத்தமாய் உள்ளிழுத்த சத்யன் நிமிர்ந்து மான்சியைப் பார்த்து “ அவ்வளவு கேவலமாவா இருக்கு என் மூஞ்சி” என்று கூறிவிட்டு மறுபடியும் தன் மூக்கை அவள் தொப்புளுக்கே எடுத்துச்சென்றான்

அவன் தன் உடலை தீண்டித் தீண்டி உருக்குவதை உள்ளுக்குள் உணர்ந்த மான்சி அவன் தலைமுடியை கொத்தாகப் பற்றி உயர்த்தி “ ம்ம் அங்க என்ன பண்றீங்க, மொதல்ல போய் குளிச்சிட்டு வாங்க சாப்பிட்டு டியூட்டிக்கு கெளம்புங்க” என்று தன் இடுப்பை வளைத்திருந்த அவன் கைகளை பிரித்து எடுத்துவிட்டு விலகி ஓட..

அவளைத் துரத்தி பிடித்து சுவற்றோடு அழுத்தி பின்புறமாக அணைத்து தன் உதட்டால் அவள் பிடரியை உரசி உரசி தீமூட்டியபடி “ மான்சி அதுதான் வேனாம்னு சொன்ன... சும்மா இதுமாதிரி அணைக்கிறது கிஸ் பண்றது இதெல்லாம் மட்டும் அடிக்கடி..... ப்ளீஸ்டி” என்று கிசுகிசுப்பாய் கெஞ்சினான்

அவன் பாரம் முழுவதையும் தன் முதுகில் தாங்கிய மான்சி, அவன் இடுப்புக்குக் கீழே எழும்பியிருந்த மன்மத ஆயுதத்தை தன் புட்டத்தில் உணர்ந்து, இடுப்பை முன்னால் தள்ளி சுவற்றோடு பல்லியாக ஒட்டிக்கொண்டு “ இப்படித்தான் கிஸ் பண்ணுவாங்களா? கொஞ்சம் தள்ளி நில்லுங்க?” என்று தொண்டையில் ஏதோ மாட்டிக்கொண்டது போல் அடைப்பாக பேசினாள்

அவள் சொன்னதுதான் சாக்கென்று இன்னும் அவளை முன்னால் தள்ளி அழுத்திக்கொண்டு தனது நுனிநாக்கால் அவள் வலது காதில் இருந்த சிறு ஜிமிக்கியை ஆட்டி, அதோட காது மடல்களையும் நாக்கால் தடவியபடி “ தள்ளி நின்னது போதுமா?” என்றான்

அடத் திருடா?. என்று மனதில் நினைத்தவள் “ நான் உங்களைப் பின்னால தள்ளச்சொல்லி சொன்னேன்” என்றாள் ரகசியமாக’’


“ உன் பின்னால தானடி தள்ளறேன்... இன்னுமா தள்ளனும்?” என்று கேலிபோல் தெரியாமல் அப்பாவியாக கேட்ட சத்யன் அவளை காற்றுப்புக கூட இடைவெளியின்றி நெருக்கமாக அணைத்து நின்றான்,

முன்புறம் இருந்த சத்யனின் விரல்கள் அவனுக்கு பிடித்தமான அவளின் மென் இடையை வருடிக்கொண்டு ஒரு விரலை மட்டும் தொப்புளுக்குள் குடியேற்ற முயன்றான்... பின்புறம் இடித்த அவன் உறுப்போ அவன் அடக்க நினைத்தும் அடங்காமல் அவளிடம் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்தது

மான்சிக்கு அவன் குறும்பு பேச்சும், அன்று முழுவதும் ஏற்பட்ட மனதிற்க்கு இனிய சூழ்நிலையும், சத்யனின் சீண்டல்களும், அவன் முதன்முறையாக தன்னை டி போட்டு அழைத்தது,, என எல்லாமும் சேர்ந்து அவளை சுற்றி ஒரு மாயவலை பின்ன, எங்கே சத்யன் கேட்கும் முன்பே நாமே விழுந்துவிடுவோமோ என்று அவள் மனதுக்குள் ஒரு பயத்தை உருவானது

லேசாக உடம்பை அசைத்து அவனுக்கு நடப்பை உணர்த்த முயன்றபடி “ வேனாங்க..... நேத்து நைட் சொன்னது எல்லாம் மறந்துட்டீங்களா?” என்று சங்கடமாக கேட்க..

இன்னும் விரல்களாலும் உதட்டாலும் முன்னேறியபடி “ இப்படியே வேனாம் வேனாம் சொல்லிகிட்டே இரு........ ஒரு நாளைக்கு...........?” என்ற சத்யன் பாதியில் நிறுத்திவிட்டு அவள் முதுகில் ரவிக்கை இல்லாத இடத்தை உதட்டால் தேய்த்தான்

அவன் வார்த்தையை பாதியில் விட்டது மான்சியின் ஆர்வத்தை அதிகப்படுத்த “ ஒரு நாளைக்கு................?” என்று அவனிடம் முடிக்க சொல்ல...

இவள் முதுகை பட்டு துணியால் செய்தானா பிரம்மன்? என்ற கேள்விக்கு தன் உதட்டால் பதில் தேடியபடி “ ம்ம்........... அது ............ ஒரு நாளைக்கு உன்னை ரேப் பண்ணிடுவேன்னு சொல்லவந்தேன்” என்று சத்யன் குறும்புடன் ரகசியமாக கூறியதும்

மான்சியின் உடலெல்லாம் சிலிர்த்தது, அவன் குரலாலா? இல்லை அவன் உதடுகளின் லீலையாலா? தெரியவில்லை உடலில் உள்ள நரம்புகளில் புது ரத்தம் பாய, உடலின் மொத்த ரோமங்களும் சிலிர்த்து நிமிர... அவனைவிட ரகசியமான குரலில் “ ஓய் பொறுக்கி யாரை ரேப் பண்ணுவ... என் புருஷன் போலீஸாக்கும்.... உன்னை பிடிச்சு குடுத்துருவேன், அப்புறம் அவரு உன்னை முட்டிக்கு முட்டி தட்டி எடுத்துருவாறு” என்றாள் கேலி குரலில் வழிய வழிய....

அவள் தன்னை புருஷன் என்று அழைத்ததில் குளிர்ந்து போன சத்யன் “ பெரிய புடுங்கியா உன் புருஷன், என்கிட்ட அவன் பாச்சா பலிக்காது கண்ணு ...நான் ரேப் பண்ணனும்னு நினைச்சா நினைச்சதுதான், இப்ப வேனும்னா பண்ணிக்காட்டவா?” என்றான் சத்யன் குரலில் காதலோடு....

அவன் எதிர்பார்க்காத தருணத்தில் சட்டென்று திரும்பிய மான்சி “ ஏய் என் புருஷனைப் பத்தி ஏதாவது சொன்ன.. அப்புறம் நான் பொல்லாதவளாயிடுவேன்” என்று பொய்யாய் மிரட்டி தனது நெஞ்சை உயர்த்தி காட்ட......

அது இன்னும் வில்லங்கத்தில் போய் முடிந்தது, சத்யன் பதிலுக்கு தன் உரமிக்க நெஞ்சை உயர்த்தி அவளின் மென்மையான தனங்களில் மோதி,, “ சொன்னா என்னடி பண்ணுவ? ” என்றான்

“ ம்ம் இந்த பொறுக்கியை கடிச்சு வைப்பேன்” என்று அவன் வலது தோளில் மென்மையாக கடித்தாள்

சத்யன் முற்றிலும் கிறங்கினான், அவன் தலை பக்கவாட்டில் சரிந்து “ மான்சி இந்த திருடன் போலீஸ் விளையாட்டு நல்லா இருக்குடி” என்றான் முனங்கலாக........

மான்சியிடம் இதற்கு பதில் இல்லை.... இனி இவன் காதல்தான் தன் சுவாசம் என்று புரிந்தது, ஆனால் அவன் உணர்ச்சிகளோடு விளையாடுகிறோம் என்பதும் புரிந்தது,, இதற்கு மேல் தன்னாலேயே தாங்க முடியாது என்ற முடிவோடு.. இவ்வளவு நேரம் செல்லமாக அவனை விலக்குவது போல் நடித்தவள் இப்போது உண்மையாகவே அவனை விலக்கி விட்டு பாத்ரூமுக்குள் ஓடிவிட்டாள்....

சத்யன் உணர்வுகளை அடக்க முயன்றபடி சுவற்றில் கண்மூடி சாய்ந்து கொண்டான், நடந்த உணர்ச்சி மோதலைவிட... வார்த்தை மோதல்கள் தான் அவனுக்கு பிடித்தது, இருவரும் பேசியதை நினைத்த மாத்திரத்தில் அவன் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது, தோளில் அவள் எச்சிலால் ஈரமான இடத்தை தடவினான்,, கைக்கெட்டும் தூரத்தில் சொர்க்கத்தை வைத்துக்கொண்டு தவிக்கும் தன் நிலை கொடுமையாக இருந்தது, ஆனாலும் மான்சியின் கட்டுபாடு அவனை வியக்க வைத்தது.........

சத்யன் மனதை அடக்க வழி தெரியாது சேரில் அமர்ந்தான்,, அப்போது அவனது மொபைல் ஒலிக்க, எடுத்து நம்பரைப் பார்த்துவிட்டு “ சொல்லு அருண் வீட்டுக்குப் போய்ட்டயா?” என்று கேட்டான்

“ போயாச்சு அண்ணா ” என்று உற்சாகமாக பேசிய அருண் “ அண்ணா உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் போன் பண்ணேன்” என்றான்

முதலில் புதிதாக என்ன குழப்பமோ என்று பயந்த சத்யனுக்கு அருணின் குரலில் இருந்த உற்சாகம் ஒன்றுமிருக்காது என்று ஆறுதல் சொல்ல ..........“ என்ன அருண் விஷயம்?” என்றான்

“ அண்ணா நான் இப்போ வீட்டுக்கு வந்துப் பார்த்தா, அம்மா இல்லை, பாகிகிட்ட கேட்டா.... அப்பா அம்மாவை கூட்டிக்கிட்டு தெரிஞ்சவங்களுக்கு பத்திரிகை வைக்கப் போனாராம்” என்று சொல்ல....

“ என்னடா சொல்ற” என்று நம்பமுடியாமல் திகைப்புடன் சத்யன் கேட்க... பாத்ரூமிலிருந்து வந்த மான்சி என்னவோ ஏதோவென்று பதட்டத்துடன் அவனை சைகையால் யாரென்று கேட்க... அவளுக்கு பதிலாக இரு இரு என்று கையசைத்தான்

“ ஆமாண்ணே என்னாலேயே நம்ப முடியலை... பாகி மதியம் ப்ரண்டை பார்க்க போய்ட்டு வீட்டுக்கு வந்தாளாம்... அப்போ அப்பா ஹால்ல தூங்கினாராம், அம்மா புதுசா புடவையெல்லாம் கட்டிக்கிட்டு, அப்பாவை எழுப்பினாங்களாம், அப்புறம் ரெண்டுபேரும் ஒன்னாவே பேசி சிரிச்சுகிட்டே வெளிய போனாங்களாம், பாகிதான் சொன்னா அண்ணா” என்று அருண் சொல்ல

“ அப்போ மதியம் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்திருப்பாரு, குடிச்சிருந்தாரான்னு பாகிகிட்ட கேட்டியா?” என்று சத்யன் கேட்டான்...

“ இல்லண்ணா குடிக்கவே இல்லையாம், ரொம்ப நிதானமா பேசி சிரிச்சாராம், சம்திங் ராங் அண்ணா, நீ விட்டதுல தெளிஞ்சுட்டார்னு நினைக்கிறேன் ” என்று அருண் கேலியாக சொல்லிவிட்டு சந்தோஷமாக சிரிக்க...

“ ஏய் ச்சே சும்மா இருடா... அவர் ஒன்னும் ஆரம்பத்துல இருந்து குடிகாரர் இல்லையே, நீ அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்ததும் எனக்கு மறுபடியும் கால் பண்ணு” என்று சொல்லிவிட்டு சத்யன் இணைப்பை துண்டித்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்

மான்சியைப் பார்த்து அருணிடமிருந்து வந்த தகவலை சொல்ல.. அவள் குறும்பாக சிரித்தபடி இரவு சாப்பாட்டுக்கு அப்பளத்தை பொரித்தாள்

அவளை நெருங்கிய சத்யன் “ ஏய் என்ன நான் சொல்லிகிட்டு இருக்கேன் நீ சிரிச்சுகிட்டு இருக்க,, எனக்கு அதிசயமா இருக்கு மான்சி” என்று கேட்க

சத்யனின் பார்வையைத் தவிர்த்து வேறுபக்கம் திரும்பி “ புருஷன் பொண்டாட்டியை வெளிய கூட்டிட்டுப் போனார் இதிலென்ன அதிசயம் இருக்கு” என்றாள்

சத்யன் அவளையேப் பார்த்துக்கொண்டிருக்க , “ போய் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றவளை இழுத்து தன் கைகளுக்குள் நிறுத்தி “ எங்கப்பாவுக்கு என்னாச்சு மான்சி?” என்று அவளிடமே கேட்டான்..

அவன் பிடியிலிருந்து விலகியபடி “ எனக்கென்ன தெரியும்” என்றாள் சன்னமான குரலில்..

“ உனக்குத் தெரியும்னு உன் கண்ணு சொல்லுதுடி, உனக்குதான் பொய் சொல்ல வரலையே அப்புறம் ஏன் ட்ரைப் பண்ற... ம்ம் சொல்லு உன் மாமனாரைப் போய்ப் பார்த்தியா?” என்று சத்யன் கேட்டதும் மெதுவாக தலையசைத்தாள்

“ என்ன சொன்னார்?” என்று கூர்மையுடன் கேட்க..

“ அவர் என்னத்த சொன்னாரு... நான்தான் என் தரப்பை சொல்லி நியாயம் கேட்டேன்” என்று மான்சி சொல்ல...

“ ம் அப்புறம்?”



“ அப்புறம், ஏன் உங்களை அடிச்சாங்கன்னு கேட்டேன்”

“ ம்ம்”

“ என்னை அந்தமாதிரி பேசினதுக்கு மன்னிப்பு கேட்டாரு... ஆனா உங்களை அடிச்சதுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்க முடியாதுன்னு சொன்னாரு, அவரே ஆட்டோ பிடிச்சுட்டு வந்து என்னை அனுப்பி வச்சாரு” என்று மான்சி சொல்லியதும் அவளை அமைதியாக அணைத்துக்கொண்டான் சத்யன்

அவன் சொல்லாததை அவன் அணைப்பு சொல்ல. இதமாக அவன் நெஞ்சில் சாய்ந்து “ உங்கம்மா கிட்ட நம்மளைப் பத்தி பேசியிருப்பாரா? ” என்று கேட்டாள் மான்சி

“ ம் நானும் அதைத்தான் நினைக்கிறேன்.. ஆனா நம்மளைப் பத்தி பேசினாங்களோ இல்லையோ அவங்களைப் பத்தி பேசி ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் மான்சி” என்றவன் அவளை தள்ளி நிறுத்தி கலங்கிய கண்களுடன் “ இவ்வளவு நாளா எங்கடி இருந்த” என்று கேட்க....

மான்சி வார்த்தையால் அதற்கு பதில் சொல்லாமல் தனது ஆள்காட்டி விரலால் அவன் நெஞ்சைத்தொட்டு காட்டினாள்

தொட்ட விரல்களை பற்றி உதட்டில் அழுத்திக்கொண்ட சத்யன் “ நீ எனக்கு கிடைச்ச வரம்டி” என்றான் உணர்ச்சி பூர்வமாக....



No comments:

Post a Comment