Saturday, November 28, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 13

சத்யன் ஐசியூவில் இருந்து வெளியே வந்தபோது தர்மன் மீனா தேவன் மூன்றுபேரும் கேன்டீனில் இருந்து வந்துவிட்டிருந்தனர்... மூவரும் சத்யனை நோக்கி வேகமாக வந்தனர்.. மருமகன் முகத்தில் இருந்த நிம்மதி மான்சியின் ஆரோக்கியத்தை தர்மனுக்கு சொல்லாமல் சொன்னது...

“ என்ன சத்யா? மான்சிக்கு இப்போ எப்படியிருக்கு? எதாவது பேசுறாளா? ” என்று மீனா பதட்டத்துடன் கேட்டாள் ...

“ ம் நல்லாருக்கா அக்கா.... என்கிட்ட பேசினா.. இங்க இருக்க முடியாது ரூமுக்கு மாத்தச் சொல்லுங்கன்னு சொன்னா... நாளைக்கு டாக்டர் கிட்ட கேட்டு மாத்திரலாம்னு சொல்லி சமாதானம் பண்ணி தூங்க வச்சிட்டு வந்தேன்” என்று சத்யன் தெளிவுடன் சொன்னதும்.. எல்லோரும் நிம்மதியாக மூச்சுவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்...



“ அப்போ நாங்கல்லாம் மான்சி நாளைக்கு காலையிலதான் பார்க்கமுடியுமா?” என்ற தேவனைப் பார்த்து “ ஆமாம் தேவா.. நாளைக்கு டாக்டர்கிட்ட பேசி ரூமுக்கு மாத்தினதும் கொஞ்சநேரம் மான்சிகூட இருந்துட்டு அப்பாவும் அம்மாவும் கிளம்பட்டும்.. நாம ரெண்டுபேர் மட்டும் இங்கேயே இருக்கலாம்” என்றான் சத்யன்

“ நானும் இருக்கேனே சத்யா?” என்று மீனா தம்பியிடம் கேட்டாள்

“ இல்லக்கா.. மான்சி நல்லா தெளிவாத்தான் இருக்கா... அதோட நாளைக்குத்தான் செல்வி வருதே.. நாங்க மூனுபேரும் இருந்து பார்த்துக்கிறோம்... நீ போய் அங்க இருக்கிற வேலையை கவனிக்கா” என்று சத்யன் உறுதியாக மறுத்தான்

“ சத்யா நமக்கு குடுத்திருக்க ரூம்ல போய் படுக்கலாம்... யாராவது ஒருத்தர் இங்க இருந்தா போதும்” என்று தர்மன் சொல்ல..

“... நைட் மான்சி முழிச்சிகிட்டா மறுபடியும் கூப்பிடுவாங்க... அதனால நான் இங்கயே பெஞ்ச்ல படுத்துக்கிறேன் மாமா.. நீங்கல்லாம் ரூம்ல போய் படுங்க ” என்று சத்யன் சொன்னதும் ..

“ அதுவும் சரிதான் நீ இங்கயே இரு சத்யா” என்ற தர்மன் தேவனிடம் திரும்பி “ தேவா மாமனுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்து குடு... அதான் பொண்டாட்டி கூட பேசிட்டான்ல இனிமே சாப்பிடுவான்” என்று தர்மன் சொன்னதும் சத்யனின் முகத்தில் புன்னகையின் சாயல்...

“ ஆமா இப்ப சிரிடா மாப்ள.... என் மக உசுர விட உன்னை நெனைச்சு தான்டா கலங்கிப் போனேன்... உன் முகத்துல சிரிப்ப பார்த்ததும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு” என்றபடி எழுந்து ரூமுக்குப் போகலாம் என்று மீனாவை அழைத்துக்கொண்டு போனவர் .. மறுபடியும் சத்யனிடம் வந்து “ அப்புறம் மாப்ள அந்த வீரா ராஸ்கல் இங்கயே தான் சுத்திகிட்டு இருக்கான்.. மான்சி பார்க்கனும்னு சொன்னா .. கழுத்துமேலயே ரெண்டு போட்டு வெளிய அனுப்பு” என ஆத்திரமாய் கூறிவிட்டு போனார்..

ஐசியூ வார்டுக்குள் நடந்தது எதையும் சத்யன் தர்மனிடம் சொல்லவில்லை... சொன்னால் தர்மன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று சத்யனுக்குத் தெரியும்.. மருத்துவமனையில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் என்று நினைத்து அமைதியாக தலையசைத்து அவரை அனுப்பி வைத்தான்....

தேவன் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாக கூறிவிட்டு கேன்டீன் நோக்கிப் போனதும்... சத்யன் அமர்ந்திருந்த பெஞ்சில் கைகளை மடித்து தலைக்கு வைத்துக்கொண்டு கண்மூடி கால்நீட்டி படுத்துவிட்டான்....


அவன் மனம் நிர்மலமாய் இருந்தது... ‘ அய்யோ இப்படிப் பண்ணிட்டாளே?’ என்று காலையிலிருந்து தவித்துத் துடித்ததெல்லாம் மான்சி கண்விழித்ததும் இப்போது காதலாக மாறியிருந்தது.. இவ்வளவு மோசமான நிலையிலும் மான்சிப் பேசிய காதல் வார்த்தைகளும்... இறுதியாக கூறிய குறும்பு பேச்சும் சத்யனுக்கு நேற்றைய இரவை ஞாபகப்படுத்தியது... நேற்று அவள் கொடுத்த ஒத்துழைப்பும் அனுசரணையும் சத்யனுக்கு இப்போது நினைத்தாலும் சந்தோஷமாக இருந்தது... தன்மேல் மான்சி வைத்துள்ள காதலை நினைத்து சத்யனுக்கு பெருமையாக இருந்தது... ஆணாகப் பிறந்து இப்போதுதான் வாழ ஆரம்பித்திருக்கிறேன் என்று ஆசையோடு எண்ணினான்... அவளை காலமெல்லாம் காதலோடு காக்கும் வேட்கை வந்தது ..

அப்போது “ மாமா” என்ற தேவனின் அழைப்பைக் கேட்டு கண்விழித்து எழுந்து அமர்ந்தான்... கையில் இருந்த பார்சலோடு நின்றிருந்த தேவன் “ சாப்பிட்டு தூங்குங்க மாமா” என்று பார்சலை பெஞ்சில் வைத்துவிட்டு தண்ணீர் கேன் மூடியை கழட்டி வைத்துவிட்டு நிமிர்ந்தவனின் செல் அடித்தது...
மொபைலை எடுத்து ஆன் செய்துப் பார்த்து புதிய நம்பராக இருக்க “ யாரு?” என்றான் ...

“ நான் செல்வி பேசுறேன்... இது எங்கப்பாவோட நம்பர்.... சின்னம்மாவுக்கு இப்போ எப்படியிருக்கு?” என்று மறுமுனையில் கேட்ட செல்வியின் குரல் அவள் அழுகின்றாள் என்று தெளிவுபடுத்தியது...

தேவன் சத்யனைவிட்டு சற்று தள்ளிப்போய் பேசினான் “ இப்போ மான்சி நல்லாருக்கு செல்வி... மாமா உள்ளபோய் பார்த்துட்டு வந்தாரு.. அவர்கிட்ட நல்லா பேசுச்சாம்... நாளைக்கு நீ வரும்போது ரூமுக்கு மாத்திடுவாங்க” என்று தேவன் சொல்ல... எதிர்முனையில் செல்வி பதில் சொல்லாமல் கேவினாள்

பிரச்சனை தங்கள் வீட்டு வாசலில் நடந்ததால் அவள் ரொம்ப பயந்து போயிருக்கிறாள் என்று தேவனுக்குப் புரிந்தது “ ஏய் அழாத செல்வி... மான்சிக்கு ஒன்னும் இல்ல எல்லாம் சரியாப்போச்சு” குரலில் அன்பு வழிய சமாதானம் சொன்னான் தேவன்...

“ நீ சொல்லிட்ட... ஆனா இங்க எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா? முதுகுல வெட்டு விழுந்ததால உசுருக்கு எந்த ஆபத்தும் இல்லேன்னு ஊர் ஆளுக எல்லாம் பேசிகிட்டாக... ஆனா அவங்க வயித்துல இருக்குற குழந்தை எங்க சின்னய்யாவோட வாரிசு... அதுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நான் வேண்டாத சாமியில்ல... இன்னிக்கு முழுக்க அழுதுகிட்டே இருந்தேன்.. சாப்பிடவேயில்ல தெரியுமா?” தேவனிடம் உரிமையோடு தன் மனநிலையை கூறினாள் செல்வி..

தேவனுக்கு அவள் சொல்வது புரிந்தது.. மான்சியை மருத்துவமனைக்கு எடுத்துவரும் போது அவள் பிழைத்தாளேப் போதும் என்றுதான் நினைத்தார்கள்... குழந்தையைப் பற்றி யாருமே யோசிக்கவில்லை... இப்போது. மான்சியின் கருவும் காப்பாற்றப் பட்டது இரட்டிப்பு சந்தோஷம்தான்.. செல்வியின் பேச்சு தனது சின்னய்யாவின் மீது கொண்டுள்ள விசுவாசத்தை காட்டியது ...
அதான் சரியாப் போச்சே... மறுபடியும் அதையைப் பேசி கலங்க வைக்காதே செல்வி... மொதல்ல போய் சாப்பிடு” அன்பாக அதட்டினான் தேவன்...

“ நீ சாப்பிட்டயா? சின்னய்யா.. உங்க அப்பாரு. எல்லாம் ஏதாச்சும் சாப்பிட்டீகளா?” என்று கருணையுடன் கேட்டவளுக்கு “ ம்ம் எல்லாரும் சாப்பிட்டோம்” என்று பதில் சொன்னவன்

“ செல்வி எங்க வீட்டு சாவியை அம்மா. அம்மாச்சி கிட்ட குடுத்துனுப்பிருக்காங்க.. நீ அதை வாங்கிட்டுப் போய் கதவ திறந்து வலதுபக்கம் ரெண்டாவது ரூம் என்னோட ரூம்... அதைத் திறந்து செல்ப்ல என்னோட டிரஸ் இருக்கும்… என் கட்டிலுக்கடியில ஒரு பேக் இருக்கும் அதை எடுத்து என்னோடது ரெண்டு செட் துணி எடுத்து வச்சிக்கிட்டு நீ வரும்போது மறக்காம எடுத்துக்கிட்டு வா....உங்கப்பா கிட்ட சொல்லி மாமாவுக்கும் போட்டுக்க டிரஸ் எடுத்துகிட்டு வா ” என்று சத்யனுக்கு கேட்காமல் மெதுவான குரலில் கூறினான் தேவன் ...




“ அய்ய நான் உன் வீட்டுக்கெல்லாம் போகமாட்டேன் போ.. அதுவும் தனியா உன் ரூமுக்குள்ளயா ம்ஹூம் முடியாது சாமி ” செல்வி கூச்சத்துடன் சொல்ல....

“ அடியேய் லூசு மங்கம்மா... நான் உன்னை என்னோட டிரஸ் தான் எடுத்துட்டு வரச் சொன்னேன்...என்னமோ என் ரூம்ல என்கூடவே குடுத்தனம் பண்ண கூப்ட்ட மாதிரி சிலுத்துக்கிற.. சொன்னதை செய்டி” என்று காதல் கொடுத்த உரிமையில் அதட்டினான்

“ ம்ம் போறேன்... அதான் சாக்குன்னு நீ ரொம்பதான் கற்பனையை ஓடவிடாத.... என்னென்ன துணின்னு சொல்லு எடுத்திட்டு வர்றேன்” பதிலுக்கு அதட்டினாள் செல்வி..

“ என்னோட பேன்ட் சர்ட் ரெண்டு செட்.. ஒரு கைலி. ஒரு டவல்.. இதெல்லாம் ”

“ ம் சரி வேற என்ன வேனும்”

“ என்னோட பனியன் ஜட்டி ரெண்டு செட்” தேவன் கிசுகிசுத்தான்

“ ஓய் இங்கபாரு அந்த கருமத்தை எல்லாம் நான் என் கையால கூட தொடமாட்டேன்.. போ போ” செல்வி கறாராக சொன்னாள்

“ ஏய் அது போடாம எப்புடிடி பேன்ட் போடுறது... மரியாதையா எடுத்துட்டுவா” தேவன் குரலை உயர்த்தி அதட்டினான்...

“ ஏன் கால் மீட்டரு காடா வாங்கி கோமணம் கட்டிக்கயேன்.... எனக்கென்ன வந்தது” செல்வி தனது கிராமத்து குறும்புடன் பேசினாள்

“ கால் மீட்டர் துணில கோமணமா.... அடியேய் என் செல்லக்கண்ணு... எனக்கு கோமணம் கட்டி பழக்கம் இல்லடி... நம்ம கல்யாணத்துக்குப் பிறகு கட்டிக்கிறேன்... இப்ப நீ அதையெல்லாம் எடுத்துட்டு வா செல்வி... மாமா வேற பக்கத்துல இருக்காரு .. நான் ரொம்ப நேரமா போன்ல பேசினா தப்பா நெனைக்கப் போறாரு” என்று தேவன் சொன்ன மறுவினாடி...

“ அய்யய்யோ சின்னய்யா பக்கத்துல தான் இருக்காரா? நீ மொதல்ல போனை வை.. நான் நாளைக்கு எல்லாத்தையும் எடுத்துட்டு வர்றேன்” என்று பதட்டமாக கூறிவிட்டு இவன் பதில் சொல்லும் முன் இணைப்பை துண்டித்தாள் ..
தேவன் காலையிலிருந்து இருந்த இறுக்கமான மனநிலை மாறி மனம் இலகுவானது...

முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் திரும்பி சத்யனிடம் வந்தான்... சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டு மறுபடியும் பெஞ்சில் படுத்துவிட்டிருந்தான் சத்யன்

“ செல்வி அவங்க அப்பா நம்பர்ல இருந்து போன் பண்ணுச்சு மாமா... நாளைக்கு அவ வரும்போது உங்களுக்கும் எனக்கும் மாத்திக்க டிரஸ் எடுத்துட்டு வரச் சொன்னேன்” என்று கூறிவிட்டு பெஞ்சின் ஓரமாக சத்யனின் கால்பக்கம் அமர்ந்தான்..

அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சத்யன் “ ஏன்டா ஆம்பளைப் புள்ளை என்ன ஏதுன்னு வாயைத் தொறந்து சொல்லமாட்டியா? நேத்து நைட்டு செல்விதான் விஷயத்தை சொல்லிச்சு.. ஆனா நாங்க வேற ஒன்னு முடிவு பண்ணோம்.. அதனால வந்த விணைதான் இவ்வளவும்” என்று தேவனின் முகத்தை பார்க்காமல் பேசினான்..

தேவன் நெஞ்சம் படபடக்க “ என்ன மாமா சொன்னா?... நீங்க என்ன முடிவு பண்ணீங்க?” என்று சன்னமான குரலில் கேட்டான்..

ஒருக்களித்துப் படுத்து தேவன் முகத்தைப் பார்த்த சத்யன் “ நேத்து சாயங்காலம் உன் அப்பா போன் பண்ணி என்னை வரச்சொன்னார்... அக்காவுக்கும் மாமாவுக்கும் செல்வியை ரொம்ப பிடிச்சுப்போச்சு.. அதனால அவளை வீரேனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு என்னை ராமைய்யா கிட்டப் போய் பேசச்சொன்னாங்க.. நானும் நேத்து நைட்டு போய் ராமைய்யா கிட்ட பேசினேன்.. அவருக்கும் சம்மதம் தான்” என்று சத்யன் சொல்லும்போதே...


அதிர்ச்சியுடன் பெஞ்சில் இருந்து எழுந்த தேவன் “ அய்யய்யோ மாமா.. நானும்.. செல்வியும்” என்று மேலே சொல்லமுடியாமல் தடுமாறினான்...

எழுந்து அமர்ந்து தேவன் கையைப் பற்றி இழுத்து தன்னருகே அமர வைத்த சத்யன் “ நான் சொல்றதை முழுசா கேளு” என்று அவன் தோளைத் தட்டி ஆறுதல் படுத்திவிட்டு “ அப்புறம் நான் வீட்டுக்கு கிளம்புனதும் செல்வி என்னை வழியில மடக்கி உங்க ரெண்டுபேர் விஷயத்தையும் சொல்லி அழுதுச்சு...எப்படியோ செல்வி என் அக்காவுக்கு மருமகளா போகனும்... அது பெரியவனா இருந்தா என்ன சின்னவனா இருந்தா என்ன... என்கிட்ட சொல்லிட்டேல்ல நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு நான் வீட்டுக்குப் போய்ட்டேன்” என்று சத்யன் சொன்னதும்..

“ ஆனா இந்த வீரேன் எதுக்கு திடீர்னு தகராறுக்கு வந்தான்.. நானும் நைட்டு ஆயில் லோடு அனுப்ப ஆலைக்கு போய்ட்டேன்... வீட்டுல என்ன நடந்துச்சின்னு தெரியாது மாமா ” என்று குழப்பமாக கூறினான் தேவன்

“ ஆமா தேவா இன்னிக்கு காலையில வீரேன் என்னை வெட்ட வந்தப்ப செல்வியை நான்தான் அவன் தலையில கட்டுறதா சொல்லிதான் தகராறுக்கு வந்தான்... ஆக அவன்கிட்ட நைட்டே மாமா சொல்லிருப்பார் போலருக்கு.. அவனுக்கு செல்வியை கட்டுறதுல இஷ்டம் இல்லாம அந்த வஞ்சத்தை இப்படி தீர்த்துக்கிட்டான் ......

" இது எல்லாத்துக்கும் காரணம் நான்தான் தேவா... நேத்து நைட்டே மாமாவுக்கு போன் பண்ணி நீயும் செல்வியும் விரும்பும் விஷயத்தை சொல்லிருந்தா.. அவரும் இதைப்பத்தி வீரேன் கிட்ட பேசிருக்க மாட்டாரு.. அப்புறம் அப்பா காலையில எனக்கு போன் பண்ணாரு.. நான் தூங்ககிட்டு இருந்ததால கொஞ்சநேரம் கழிச்சு பண்றேன்னு சொல்லி வச்சிட்டாரு.. நானும் மறுபடியும் போன் பண்ணனும்னு நெனைச்சதை மறந்துட்டேன்.. நான் போன் பண்ணியிருந்தா காலையிலேயே எனக்கு வீரேன் வீட்டுல சண்டைபோட்ட விஷயம் தெரிஞ்சு நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருப்பேன்.. ஆக எல்லாம் என்னோட அலட்சியத்தால் வந்தது ” சத்யன் வருத்தமாக கூறிவிட்டு தலை குனிந்தான்..

மாமன் வருந்துவது மனதுக்கு கஷ்டமாக இருக்க “ இல்ல மாமா வீரேன் இந்த விஷயத்துக்காக இப்படி நடந்துகிட்டு இருக்கமாட்டான்.. அவனுக்கு இன்னும் வேற காரணங்கள் இருக்கும்.. நீங்க மனசை குழப்பிக்காம தூங்குங்க மாமா” என்றான் ஆறுதலாக..

“ ம்ம்” என்று மறுபடியும் படுத்த சத்யன்.. “ டேய் தேவா வாய் தவறிக்கூட செல்விகிட்ட சொல்லிடாத.. அப்புறம்... எல்லாம் நம்மளாலதான்னு அந்த புள்ளை மனசு கஷ்டப்படும்” என்று எச்சரிக்கை செய்தான்

“ சரி மாமா.. ” என்றவன் எழுந்துகொண்டு “நான் போய் அந்த ரூம்ல படுக்குறேன் மாமா.. எதுனாச்சும்னா எனக்கு போன் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு போனான் தேவன்


சத்யனுக்கு வெகுநேரம் உறக்கம் வரவில்லை... நேற்றைய இரவின் இனிமையான நினைவுகள் மனதை ஆக்கிரமித்தது... மான்சியை தூக்கிச்சென்று படுக்கை அறையில் கிடத்தியப் பிறகு அவள் சொன்ன வார்த்தைகளும்.. அவனுக்கு தன்னையே முழுதாக அர்ப்பணித்து கொடுத்த ஒத்துழைப்பும் ஞாபகத்திற்கு வந்து மனதுக்குள் ஏக்கத்தை விதைத்தது.. மான்சி தன்மீது இவ்வளவு காதலோடு இருப்பாள் என்று சத்யன் எதிர்பார்க்கவேயில்லை.. தனது புத்தம்புது மனைவியோடு நேற்று இரவு உறவாடிவிட்டு.. இன்று மருத்துவமனையில் கிடத்திவிட்டோமே என்று ஏங்கினான்..

மான்சியைப் பற்றி நினைக்கையிலேயே சத்யனுக்கு இன்னொன்றும் ஞாபகம் வந்தது.. என்மேல இவ்வளவு காதலோடு இருக்கிறவ.. இந்த வெட்டு என்மேல விழுந்திருந்தா எப்படித் தாங்கிருப்பா? அதுக்கப்புறம் அவ இருந்திருக்கவே மாட்டா போலருக்கே? இதை நினைக்கும்போதே சத்யன் வயிற்றில் கிலிப் பிடித்தது.. அவன் வாய் அவனயுமறியாமல் “ மான்சி” என்று ஏக்கத்தோடு அழைத்தது... சற்றுநேரத்தில் மான்சியைப் பற்றிய சிந்தனைகளுடனேயே தூங்கிப் போனான்


வராண்டாவின் ஓரம் நின்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வீரேன் மனம் மேலும் நொந்தது ... ‘ தேவனும் செல்வியும் விரும்புறது தெரியாம வெட்டியா தகராறு பண்ணி தங்கச்சிக்கே இவ்வளவு பெரிய வினையை தேடி வச்சிட்டமே’ என்று தன்னையே நொந்துகொண்டான்... மான்சி மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கிறவரு அவளை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு பண்ணதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்...என்று அவனது தெளிந்த மனது இப்போது காரணம் சொன்னது... என்ன விவரம்னு புரியாம முன் கோபத்தில்செய்த தவறு வீரேனை நெருப்பில் குளிக்க வைத்து புடம்போட்டிருந்தது...

யோசனையுடன் ஐசியூ வார்டுக்குள் நுழைந்து ஜோயலின் கேபின் உள்ளேப் போனான்... மேசையில் தலை கவிழ்ந்து கண்மூடியிருந்த ஜோயல் சத்தம் கேட்டு நிமிர்ந்து அமர்ந்து “ சாப்பிட்டீங்களா?” என்று புன்னைகையுடன் கேட்டாள்..

இவங்க ஏன் என்னை சாப்பிட வைக்கிறதுலேயே குறியா இருக்காங்க? என்ற கேள்வி மனதில் ஓட “ ம் சாப்பிட்டேங்க.... நான் போய் என் தங்கச்சிய பார்த்துட்டு வரவா டாக்டர்? ” என்று ஜோயலிடம் அனுமதி கேட்டான் வீரேன்..

“ ம் வாங்க போகலாம்” என்று ஜோயலும் உடன் வந்தாள்..
மான்சி அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்... ஜோயல் மான்சியை முறையான பரிசோதனைக்களுக்குப் பிறகு.. இறங்கும் சலைனின் வேகத்தை குறைத்துவிட்டு . போகலாம் என்பது போல் வீரேனைப் பார்த்து ஜாடை செய்தாள்...

வீரேன் தங்கையின் காயத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான்... பூபோல இருந்த உடம்புல இப்படி அடையாளம் வச்சிட்டேனே.. என்று குமுறியது அவன் மனது...

“ ம் வாங்க சார் ப்ளீஸ்” ஜோயல் மறுபடியும் சொன்னதும் அங்கிருந்து அகன்றான்..

ஜோயலின் கேபின் உள்ளே போய் இருவரும் அமர்ந்ததும் “ இனிமே என் தங்கச்சிக்கு எந்த ஆபத்தும் இல்லையே டாக்டர்?” என்று கேட்டவனைப் புன்னகையுடன் பார்த்த ஜோயல்

“ இனிமேல் எந்த ஆபத்தும் இல்லை.... ஆனா .... வெட்டு இரண்டு அங்குலம் மேலே விழுந்திருந்தா மூளைக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் நரம்பு அறுந்து உடனடியா உயிரிழப்பு ஏற்ப்பட்டிருக்கும்.. நல்லவேளை அந்த ஆண்டவன் உங்க தங்கையை காப்பாத்திட்டார்” என்று ஜோயல் சொன்னதும்..


வீரேன் காதுகளைப் பொத்திக்கொண்டு “ அய்யோ சொல்லாதீங்க டாக்டர்” என்று கண்களில் நீர் வழிய கெஞ்சினான்..

அவன் வேதனையைப் பார்த்து ‘ஏன்டா சொன்னோம்’ என்றானது ஜோயலுக்கு.. அவன் கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்துடன் “ சரி விடுங்க நடந்ததைப் பத்தி யோசிக்க வேண்டாம்... ஆமா உங்க மாமாவும் தங்கச்சியும் லவ் மேரேஜா? இவ்வளவு அபெக்ஷ்சனோட ஒரு ஜோடியை நான் பார்க்குறது இதுதான் பர்ஸ்ட் டைம்... அதனால்தான் கேட்டேன்.. நீங்க தப்பா எடுத்துங்காதீங்க சார்” என்றாள் ஜோயல்

பார்த்து சிலமணிநேரத்திலேயே இவங்க புரிஞ்சிக்கிட்ட அளவுக்கு என் தங்கச்சியையும் மாமாவையும் நான் புரிஞ்சுக்கலையே? என்ற வருத்ததுடன் “ இல்லங்க திடீர்னு ஏற்பாடு பண்ண கல்யாணம் தான்... ஆனா எனக்குகூட இப்ப நீங்க சொன்ன மாதிரிதான் தோனுதுங்க... ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் காதலிச்சு தான் ஒன்னா சேர்ந்திருப்பாங்களோன்னு தோனுதுங்க” என்று ஜோயலை மேலும் குழப்பினான் வீரேன்..

“ ப்ளீஸ் சார் கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்.. அவரு என்னடான்னா என்னோட முதல் மனைவி இறந்தப்பன்னு உங்க தங்கச்சிகிட்ட சொல்றாரு.. அப்போ மான்சி அவருக்கு செகன்ட் ஒய்ப்பா?” என்று தனது இரண்டாவது கேள்வியை கேட்டாள்..

பழகிய கொஞ்சநேரத்தில் ஜோயலின் கருணையும் அன்பும் அவளை ஒரு உறவுக்காரியைப் போல் எண்ணவைத்தது வீரேனை... இவளிடம் தனது குடும்பத்தைப் பற்றி சொல்வதில் தப்பில்லை என்ற முடிவுடன் “ சொல்றேங்க... ஆனா மொதல்ல என்னை சார் போட்டு கூப்பிடுறதை நிறுத்துங்க.. என் பேரு வீரேந்திரன்.. எல்லாரும் வீரேன்னு கூப்பிடுவாங்க... என் தங்கச்சி மட்டும் வீரண்ணா ன்னு கூப்பிடும்” என்றவன்... பிறகு இரண்டு குடும்பத்தின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து... சத்யன் மான்சியை கிணற்றில் இருந்து காப்பாற்றி உறவுகொண்டது.. சத்யன் ஜெயிலுக்குப் போனது.. அதன்பின் மான்சி கர்ப்பம் ஆனது... அவசரமாக இருவருக்கும் திருமணம் நடந்தது வரை எல்லாவற்றையும் தெளிவாக சொன்னான் வீரேன்...

ஜோயல் கொஞ்சநேரம் எதுவுமே பேசவில்லை திகைப்புடன் அப்படியே அமர்ந்திருந்தாள்... திகைப்பு களைந்தபோது அவள் கேட்ட முதல் கேள்வி “ என்னது மான்சிக்கும் சத்யன் சாருக்கும் பதினேழு வயசு வித்தியாசமா? சத்யன் சார்க்கு பேத்தி இருக்கா? அய்யோ என்னால நம்பவே முடியலை வீரேன்?” என்று கண்களை விரித்தாள்..



எந்த ஒப்பனையும் இல்லாத அவள் கண்களின் அழகை கண்டு வியந்து “ அட ஆமாங்க நம்புங்க மேடம்... எங்க மாமா ரொம்ப உழைப்பாளி... எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது... அதனால எப்பவுமே ட்ரிமா இருப்பார்... நாங்க மூனுபேரும் ஏதாவது வெளியூர் போனா அண்ணன் தம்பிங்கன்னு தான் சொல்லுவாங்க” என்று மாமா புராணத்தை பெருமையாக வாசித்தான்...

அவனை கூர்ந்துப் பார்த்த ஜோயல் “ எல்லாம் சரிதான்... நீங்க சொல்ற ஒரு விஷயத்தை என்னால ஏத்துக்க முடியாது... அதாங்க மான்சியை உங்க மாமா ரேப் பண்ணிட்டாரு என்பதை என்னால ஏத்துக்க முடியாது... ரெண்டு பேர் மனசுலயும் லவ் இல்லாம அது நடக்க வாய்ப்பே இல்லை... இப்போ இவங்களோட அன்யோன்யத்தைப் பார்க்கும் போது அப்படித்தான் எனக்கு தோனுது... இது புரியாம சொந்த மாமான்னு கூட பார்க்காம ஜெயிலுக்கு அனுப்பிருக்கீங்க? நல்லவேளையா மான்சி வயித்துல குழந்தை வந்ததால அவர் வெளிய வந்து கல்யாணம் நடந்தது.. இல்லேன்னா? ச்சே கிராமத்தில் கூடவா இப்படியெல்லாம் நடக்கும் ” என்று ஜோயல் சொல்ல சொல்ல வீரேன் அமைதியாக இருந்தான்...

சற்றுநேரம் கழித்து “ ம் அப்புறம் மீதியை சொல்லுங்க.. உங்க தங்கச்சி கல்யாணம் நின்னதால அந்த மதுரைப் பொண்ணு கூட உங்களுக்கு நிச்சயம் பண்ணதும் நின்னுபோச்சா?” என்று கேட்ட ஜோயலின் குரலில் ஆர்வம் அதிகமிருந்தது..


No comments:

Post a Comment