Thursday, November 26, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 5

சிறு வயதில் இருந்தே சத்யனை சுற்றிய வளர்ந்தவளுக்கு படித்து முடித்து வந்ததும் அவனுடனேயே இருக்கவேண்டும் என்று தோன்ற அவனைச்சுற்றியே வந்தாள்.. தனது அருகாமையில் மாமன் தடுமாறுவான் என்பதை மான்சி உணரவேயில்லை... அவளைப் பொருத்தவரையில் மாமாவுடன் இருக்கவேண்டும் என்றுதான் நினைத்தாளே தவிர அது காதலா இல்லையா என்று இன்னமும் தெரியவில்லை...

கல்யாணத்தை நிறுத்தத்தான் கிணற்றில் விழுந்தது... அவளை காப்பாற்றிய சத்யன் அவளுடன் உறவு கொண்டபோது.. முதலில் பதறித்தான் தடுத்து போராடினாள்... ஆனால் அவன் சொன்ன வார்த்தைகள் அவளை கட்டிப்போட்டது மட்டுமில்லாமல்.. எவளையுமே ஏறெடுத்துப் பார்க்காத என் மாமா என் அழகில் மயங்கிப்போனார் என்ற கர்வம் தான் அதிகமானது... இல்லையென்றால் என் மாமனை உதறித்தள்ள என்னால் முடியாதா என்ன என்று இப்போது நினைத்தாள் ..



இவள் அன்று விடுபட போராடிய போது “ நான் மட்டும் நெனைச்சேனா? எவளையுமே ஏறெடுத்துப் பார்க்காம இருந்தேனே, உன்கிட்ட இப்படி விழுந்துட்டேனே” “ என்னை கேவலமா நெனைக்காத மான்சி... உன் அழகுக்கு முன்னாடி நான் தோத்துட்டேன் மான்சி” “ இல்ல மான்சி இந்த நிமிஷமே என் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்கு நீ இப்போ வேனும்” என்று மாமன் தாபத்துடன் அன்று சொன்னதை இன்று நினைததாலும் மான்சியின் நெஞ்சு கர்வத்தில் நிமிர்ந்தது.. யாருக்குமே அசையாத தன் மாமனை தான் அசைத்து விட்ட கர்வம்.. ஆனால் அதன்பிறகு எல்லோரும் இவளைத் தேடி வந்ததும் கோழையைப் போல் தன்னை விட்டுவிட்டு ஓடியதை நினைத்தால் அதே நெஞ்சு ஆத்திரத்தில் கொதித்தது..

அதன்பிறகு பஞ்சாயத்திலும் அவன் அமைதியாக நின்றது மான்சியை மேலும் ஆத்திரப்படுத்தியது.. தன் மாமன் வீரன்.. தைரியமானவன், பெண்களை மதிப்பவன் என்று எண்ணியிருந்த மான்சியின் நினைப்பில் மண் விழுந்தது ன்று இரவு கூடிய பஞ்சாயத்தில் தான்..

‘ ஆமாங்க நடந்தது நடந்து போச்சு,, என் அக்கா மகளை நான் தொட்டேன்.. எனக்கு உரிமையிருக்கு தொட்டேன்,, இதுக்காக நான் யார்கிட்டயும் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை.. நான் அவ கழுத்துல தாலி கட்டப்போறேன்.. இதை யாரும் தடுக்க முடியாது” என்று தைரியமாக கூறுவான் என்று எதிர்பார்த்து மான்சிக்கு.. அவன் தலைகுனிந்து கண்ணீருடன் நின்றது தலையில் இடி விழுந்தது போலானது...

கோயிலுக்குள் இருந்து அன்றைய பஞ்சாயத்து முழுமையும் கேட்டவளுக்குள்... அப்போ வெறும் உடம்பு சுகத்தை தனிச்சுக்கத்தான் என்னை பயன்படுத்தினானா? என்ற பெறும் கேள்வி பூதகரமாய் எழுந்தது... அம்மா அவரை அடிக்கும் போதுகூட ‘நடந்தது நடந்து போச்சு மான்சியை எனக்கே குடுத்துடு அக்கா’ என்று கேட்பான் என எதிர்பார்தவளுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது...

தன்னுடன் உறவு கொண்டதையே அவமானமாக கருதி தலைகுனிந்து நிற்க்கிறான் என்பதை உணர்ந்தபோது.. அவனுக்கு விருந்தான தனது பெண்மையை அழித்துவிட வேண்டும் போல் இருந்தது மான்சிக்கு..

அடுத்த பஞ்சாயத்திலும் செல்வியை பேசவிட்டு சத்யன் கோழையாக நிற்க்க... மான்சியின் உள்ள கொதிப்பு உச்சநிலையை அடைந்தது.. தன்னை திருமணம் செய்துகொள்ள போராடுவான் தன் மாமன் என்று எதிர் பார்த்தவளுக்கு, அவனது மவுனமும் தலைகுனிவும் அவன் மீது வன்மத்தை ஏற்ப்படுத்தியது.. என்னை தன் சுகத்துக்காக மட்டுமே அனுகியிருக்கிறான் என்ற ஆத்திரம் மேலோங்கியது

அதனால்தான் அண்ணன்கள் செய்த அத்தனையையும் வன்மத்துடன் மவுனமாக பார்த்திருந்தாள்... அந்த வன்மம் தான் மாமனை வழக்கு தொடுக்க கையெழுத்துப் போடவும் வைத்தது,, அப்பவும் நான் மான்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று ஜாமீனில் வெளியே வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ‘ ஜெயிலில் இருந்தாலும் பரவாயில்லை’ திருமணம் பற்றி பேசாத அவனை எண்ணி குமுறித்தான் போனாள் மான்சி




இறுதியாக மாமனின் வாரிசு தன் வயிற்றில் என்றதும், என்றதும் மகிழ்ந்து போனவளை அண்ணன் வீரேனின் வார்த்தைகள் தான் கலைத்தது.. ‘ அவன் இவ்வளவு கர்வமா எல்லாத்துக்கும் தயாரா இருக்குறப்ப. நீ அவன் புள்ளைய சுமந்தா எவ்வளவு கேவலம்னு யோசிச்சுப் பாரு மான்சி,, இப்படியொரு கேவலத்துக்குப் பிறகு நாங்கல்லாம் உயிரோட இருக்கனுமா? இந்த குழந்தை வேனாம் கலைச்சிடு மான்சி” என்று கொஞ்சம் கொஞ்சமாக பேசி சம்மதிக்க வைத்தான்...

சத்யன் மீது இருந்த ஆத்திரமும்,, தன் அழகு வெறும் படுக்கைக்கு மட்டும் பயன்பட்டதும் அவளை அரை மனதோடு சம்மதிக்க வைத்தது.. ஆனால் எதற்கும் கலங்காத தன் பாட்டி வந்து ஊரார் முன்னிலையில் காலில் விழுந்ததும் மான்சியின் மனம் உடனே மாறிவிட்டது...

என்னோடு கல்யாணம் வேண்டாம் ஜெயிலே மேல் என்று இருக்கும் சத்யனை கல்யாணம் செய்துகொண்டு பழிவாங்க இது ஒரு சந்தர்ப்பமாக எண்ணித்தான் துணிந்து மாமன் வீட்டுக்கு வந்துவிட்டாள்...

உன் அழகு முன்னாடி தோத்துட்டேன் மான்சி என்று சொன்னவனை கல்யாணம் செய்துகொண்டால் அதே அழகை அருகில் வைத்துக்கொண்டு என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்... என்ற சவால் மான்சியின் மனதில் எழுந்தது...

இவள் இங்கே இப்படி திட்டம் தீட்டி செயல்பட... அங்கே ஜெயிலில் சத்யனைப் பார்க்கப் போன ராமைய்யாவின் மூலமாக விஷயத்தை கேள்விப்பட்டவன் மனதில் இடியாய் இறங்கியது.. தன் குழந்தையை கலைப்பதற்காக மான்சி மருத்துவமணைக்கு கிளம்பிய செய்தி...

நான் ஜெயிலுக்குப் போகனும்னு விரும்பினவ. இப்போ என் குழந்தையை சுமப்பதைக் கூட கேவலமா நெனைக்கிறாளா? அப்போ மாமா மாமான்னு என்னையே சுத்தி வந்தது.. ... அன்னைக்கு முழுமூச்சா போராடியவள் எனக்கு அவள் வேண்டும்னு சொன்னப் பிறகு இறுதியில் என்னை அனுமதித்து விட்டு அமைதியாக கண்மூடியது எல்லாம் பொய்யா? நடிப்பா? அல்லது என்னை வயசானவன்னு ஒதுக்கிட்டாளா? என்று பல கேள்விகள் அவன் மனதை குடைந்தது..

ஆனாலும் அவன் மனசுக்கு ஒரே ஒரு ஆறுதல்.. மான்சி குழந்தையை கலைக்காமல் தன் வீட்டுக்கு வந்துவிட்டாள் என்பதுதான்.. தன் அக்காவின் கணவனும் முழு மனதுடன் மகளை அனுப்பினார் என்ற கூடுதல் செய்தி அவனை கொஞ்சம் அதிகப்படியாக சந்தோஷப்படுத்தியது..

ராமைய்யா சொன்ன ... மான்சிக்கும் தனக்கும் கல்யாணம் என்ற செய்தி மனதுக்கு இனிப்பாக இருந்தாலும்,, தன்னைப் பிடிக்காதவளுடன் நடக்கப்போகும் திருமணம் மனதுக்கு கசப்பாகவும் இருந்தது..

கல்யாணம் நடந்தாலும் .. என் குழந்தையைக் கூட வேண்டாம் என்று நினைத்தவளை எந்த சூழ்நிலையிலும் தொடமாட்டேன் என்ற வைராக்கியம் சத்யன் நெஞ்சில் உரமேறியது..

தன்னைப் பிடிக்காதவளுடன் திருமணம் வேண்டாம் என்று மனம் முரண்டினாலும்... அவள் வயிற்றில் இருக்கும் தன் வாரிசை அவள் எதுவும் செய்துவிடாமல் இருக்கவேணும் இந்த திருமணம் அவசியம் என்று நினைத்து அமைதியானான் சத்யன்

அதை ஊர்ஜிதம் செய்வதுபோல் மறுநாள் தர்மன் வக்கீலுடன் வந்த போது, அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க தைரியம் இல்லாவிட்டாலும்.. மறுத்து எதுவும் சொல்லாமல் மவுனமாக ஜாமீனில் வெளியே வந்தான்...


கோர்ட்டில் அனுமதி வாங்கி ஜெயில் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து தேனியில் இருந்து சத்யன் வீட்டுக்கு வரும்போது இரவு மணி பத்தாகியிருந்தது...

தனது காரில் சத்யனை அழைத்துவந்து இறக்கிவிட்டு விட்டு.. டிரைவர் சீட்டில் அமர்ந்து சத்யனைப் பார்க்காமல் கார் ஸ்டேரிங்கை பார்த்தபடி “ வீட்டுக்குள்ள போய் யார்கிட்டயும் எதுவும் சொல்லவேண்டாம்,, எதையும் நெனைச்சு மனசை குழப்பிக்காம அமைதியா படுத்து தூங்கு, நானும் உங்கக்காளும் காலையில வர்றோம்” என்று தர்மன் கூறியதும்...

சத்யனும் அவர் முகத்தைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தபடி சரியென்று தலையசைத்தான்...

கார் கிளம்பியதும் சத்யன் வீட்டுக்குள் நுழைய.. அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தனர் சில ஊர் பெரியவர்களும், பஞ்சவர்ணமும்... ராமைய்யா தேங்காயில் கற்பூரம் வைத்து ஏற்றி சத்யனை மூன்று முறை சுற்றி அதை வீட்டு வாசலில் சிதறுகாய் உடைக்க.. சத்யன் மவுனமாக வீட்டுக்குள் நுழைந்தான்

கிட்டத்தட்ட ஐம்பதுநாள் தாடியும்.. வெட்டப்படாத தலைமுடியும்.. குழிவிழுந்த கண்களும்.. எலும்புகள் துருத்திய தாடையும்.. உடல் மெலிவால் லூசான உடைகளும்.. யாரையும் பார்க்க திறனற்று கவிந்த தலையுமாக தன் மகனின் தோற்றத்தைப் பார்த்து பெற்ற வயிறு கலங்கினாலும்.. “ சின்னய்யா வந்ததும் யாரும் எதுவும் கேட்டு அவரை சங்கடப்படுத்திடாதீங்க” என்று ராமைய்யா ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்ததால் குமுறிய மனதை அடக்கிக்கொண்டு “ வா ராசு” என்று பாசத்தோடு அழைத்தார் பஞ்சவர்ணம்..

கூடத்தில் கால் வைத்த சத்யனின் பார்வை அவனையும் அறியாமல் மான்சியை தேடியது. மகன் மனதை புரிந்த பஞ்சவர்ணம் “ காலையிலருந்து ஒரே வாந்தியா எடுத்துகிட்டு இருந்தா .. அதனால கொஞ்சம் மயக்கமா இருக்குன்னு வேளையாவே போய் படுத்துட்டா ராசு” என்று மகனுக்கு விளக்கம் கொடுத்தார்..

சத்யன் எதுவும் பேசவில்லை.. ‘என் முகத்தைப் பார்க்கப்பிடிக்காம வரமாட்டா’ என்று மனதுக்குள் எண்ணியபடி மவுனமாக முற்றத்தில் இருந்த தண்ணீரில் கைகால் கழுவிவிட்டு உடைமாற்ற தனது அறைக்குள் நுழைந்தான்...

மான்சி தனது அறையில் தங்கியிருப்பாள் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தனது கைலியை எடுக்க இயல்பாக நுழைந்தவன் கட்டிலில் படுத்திருந்த மான்சியைப் பார்த்து திகைப்புடன் அப்படியே நின்றான்
நீலநிறத்தில் வெள்ளை கோடுகள் போட்ட லூசான காட்டன் பேன்ட் சட்டையணிந்து, கூந்தலை விரித்துப் போட்டு.. தலைக்கொரு தலையணை, நீட்டியிருந்த வலது காலுக்கு ஒரு தலையணை, மடக்கியிருந்த இடதுகாலுக்கு ஒரு தலையணை வைத்து, அந்த தலையணையை கட்டிக்கொண்டு குழந்தைபோல் உறங்கிய மான்சியைப் பார்த்தது சத்யனுக்கு இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம் பறந்து போனது

மான்சி அவனைப் பார்க்க பிடிக்காமல் வராமல் இருக்கவில்லை... உண்மையாகவே உறங்குகிறாள் என்றதும் சத்யன் மனசுக்குள் சிறு நிம்மதி...
வெகுநேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன்.... மெதுவாக கட்டிலின் கால் பகுதியை அடைந்து குனிந்து நீட்டியிருந்த அவளின் வலது காலை மென்மையாக பற்றி அதில் தனது நெற்றியை வைத்தான், பிறகு மண்டியிட்டு அமர்ந்து அவள் பாதத்தை தன் முகத்தில் அழுத்திக்கொண்டு தன் கண்ணீரால் அவள் காலை கழுவினான், அவன் மனக் கொதிப்பெல்லாம் கொஞ்சம் அடங்கியது.. அவள் காலில் அசைவு தெரிய ..அவசரமாக உதட்டை அழுத்தி உள்ளங்காலில் முத்தமிட்டு விட்டு நிமிர்ந்தான்

அவளைப் பார்த்தபடியே அலமாறியைத் திறந்து கைலியை எடுத்து பாத்ரூமுக்குப் போய் மாற்றிக்கொண்டு வந்தான், மான்சி அதே நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாள்

மறுபடியும் கட்டிலருகே வந்து அவளின் வென்பாதத்தை வருடிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தான்.. ஊர் பெரியவர்கள் காலையில் வருவதாக சொல்லி விடைபெற்றார்கள்.. சத்யன் தேனியிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டதால் படுப்பதற்காக வெளியே வந்தான் அவனுடைய கயிற்று கட்டில் தயாராக வாசலில் போடப்பட்டிருந்தது அதில் பெட்சீட்டை விரித்துக்கொண்டிருந்தார் ராமைய்யா..

சத்யன் கட்டிலில் அமர்ந்ததும் “ தம்பி படுத்து தூங்குங்க.. நான் இங்கிட்டு கீழ படுத்துக்கிறேன்” என்றவர் சத்யன் கட்டிலுக்குப் பக்கத்தில் தரையில் ஒரு பாயை விரித்து படுத்துக்கொண்டார்...


இந்த ஒன்றரை மாதமாக ஜெயிலில் நான்கு சுவர்களுக்குள் கொசுக்கடியில் தூக்கம் வராமல் தவித்தவனுக்கு.. இயற்கை காற்றுடன் தனது கட்டிலில்ப் படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்து அவன் கண்களை தழுவியது
மறுநாள் காலை ராமைய்யா எழுப்பியதும் தான் எழுந்தான் சத்யன்... எழுந்தவன் நன்றாக விடிந்துவிட்டதை அறிந்து “ இவ்வளவு நேரமா தூங்கினேன்” என்றபடி எழுந்தவன் காம்பவுண்ட் சுவற்றை ஒட்டி வேப்பமரத்தில் ஒரு குச்சியை ஒடித்து பற்களால் மென்றபடி தோட்டத்திற்கு போனான்...

தோட்டத்தில் கிடந்த கல்லில் அமர்ந்து காலாட்டியபடி பிரஷ்ஷால் பல் தேய்த்துக்கொண்டிருந்த மான்சி சத்யனைப் பார்த்ததும் அதிர்ந்து போய் எழுந்துவிட்டாள், தாடிக்குள் ஒழிந்திருந்த தன் மாமன் முகத்தைப் பார்த்து கண்கள் குளமானது, ‘ ஜெயிலுக்குப் போனா இப்படியா ஆயிடுவாங்க?’ அய்யோ மாமா... நானே உன்னைய இப்படி ஆக்கிட்டேனே ’ என்று இதயம் கசிந்தது..

சத்யன் மான்சியை நேராக ஒரு பார்வை பார்த்தான். அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரின் அர்த்தம் புரியவில்லை அவனுக்கு. “ என்னை இப்படி நாசம் பண்ணிட்டயே பாவி’ என்று கண்ணீர் விடுகிறாளா? மவுனமாக கிணற்றடிக்கு போனான்..

தோட்டத்து கோட்டை அடுப்பில் வெண்ணீர் கொதிக்க.. ஊர் நாவிதனை அழைத்து வந்தார் ராமைய்யா.. சத்யனுக்கு முடிவெட்டி முகச்சவரம் செய்யப்பட்டது... பஞ்சவர்ணம் மூன்று எண்ணை கூட்டி கலந்து எடுத்துவர செவலமுத்து வந்து சத்யனுக்கு குளிரக் குளிர எண்ணைத் தேய்த்து விட்டான்...
கல்லில் அமர்ந்திருந்த மான்சி எழுந்து உள்ளே போகவேயில்லை, வைத்துகண் எடுக்காமல் சத்யனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்,, சத்யன் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்ததால், அவளைப் பார்க்கவில்லை,

அவனின் பரந்த முதுகில் எண்ணையை வழிய விட்டு செவலையன் தேய்க்க.. அந்த எண்ணையில் தன் கன்னத்தை வைத்துத் தேய்த்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் மான்சியின் மனதில் ஓடியது,

சத்யனின் கைலியை சுருட்டி தொடையிடுக்கில் வைத்துவிட்டு அவன் கால்களை மடக்கி வைத்து அதில் எண்ணையை ஊற்றி தூணுக்கு தடவுவது போல் செவலையன் தேய்க்க... தேக்கு மரம் போன்ற சத்யன் காலில் இருந்த சுருள் சுருளான முடிகள் எண்ணையில் மின்னியது.. ‘ டேய் மாமா என்னை திரும்பி பாருடா?’ என்ற மான்சியின் கொதிப்பு அதிகமானது

சத்யனின் இரண்டு கையையும் மடித்து குறுக்காக பின்னி கழுத்தை கட்டிக்கொள்ள வைத்துவிட்டு.. அவனுக்குப் பின்னால் வந்து தனது வலதுகால் முட்டியை சத்யனின் முதுகுத்தண்டிலன் நடுவே முட்டுக்கொடுத்து, பின்னியிருந்த கைகளை பற்றிக்கொண்டு தன் வலு மொத்தத்தையும் தேக்கி சத்யனை பின்புறமாக செவலையன் மடக்க.. சத்யனின் இரு தோள்களிலும் மொல மொலவென சொடக்கு விழுந்தது,,

பிறகு சத்யனின் கையைப் பிரித்து கையை மேலே தூக்கிய செவலையன் நின்றபடி உருவி விட... “ இந்த ராஸ்கல் வேற எப்படி தேய்க்கிறான் பாரு?’ திடீரென்று செவலையன் மான்சிக்கு பரம விரோதியாகிப் போனான்

“ பின்னாடி இருந்தவ என்னப் பண்றான்னு... திரும்பி பார்க்குதாப் பாரு பிசாசு’ என்மேல ஆசை இருந்தா தான பார்க்கும்? நீ வாடா மாமா உனக்கு நான் வேடிக்கை காட்டுறேன்? என்று கொந்தளித்தது மான்சிக்கு

அதன்பின் தோட்டத்துப் பாத்ரூமில் வெண்ணீரில் தலைமுழுகி விட்டு சத்யன் வந்தபோதும் மான்சி அங்கேயே அமர்ந்திருந்தாள்... இவ ஏன் குளிக்கப் போகாம இங்கயே இருக்கா என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் அதை அவளிடம் கேட்காமலேயே உள்ளே போனான் சத்யன் ..





மான்சிக்கு ஆத்திரமாக வந்தது.. ‘ நான் உனக்காக இங்க உட்கார்ந்திருக்கேன் என்னைப் பார்க்காமலேயே போறியா? இவ்வளவு கர்வமா உனக்கு? ஆத்திரத்துடன் எழுந்து கை காலை உதறியபடி பக்கத்தில் இருந்த மரத்தில் கையால் குத்தினாள்

“ அய்யோ அய்யோ வயித்துப்புளளக்காரி இப்படி கை கால உதறலாமா?” என்று அலறியபடியே ஓடி வந்த சின்னம்மாள் மான்சியின் கையைப்பற்றி “என்னா கண்ணு இம்பூட்டு கோபம்? ” கேட்க.

“ ஏன்? கைகால உதறுனா என்ன? வயித்துல இருக்குற புள்ள வெளிய வந்து குதிச்சிடுமா என்ன? வெளிய வந்து விழுந்தா விழட்டும் எனக்கென்ன ? நான் அப்படித்தான் பண்ணுவேன்... நீ உன் வேலையைப் பாரு? ” என்று குதித்தபடி கத்தியவளை கவலையுடன்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் போனாள் சின்னம்மாள்

தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த சத்யனின் காதுகளில் “வெளிய வந்து விழுந்தா விழட்டும் எனக்கென்ன?” என்ற மான்சியின் வார்த்தைகள் நெஞ்சில் விஷம் தடவிய அம்புகளாய் இறங்கியது... சுவற்றில் சாய்ந்துகொண்டு கண்மூடி சிறிதுநேரம் நின்றான்..

வீட்டுக்குள் வந்தவன் காலை உணவை முடித்துக்கொண்டு, வெளி வராண்டாவில் வந்து அமர்ந்து ராமைய்யாவிடம் தொழில் நிலவரம் பற்றிப் பேசிவிட்டு “ சரிண்ணே நீங்க போய் வயக்காட்டுல வேலையை கவனிங்க.. மதிய சாப்பாடு செல்விக்கிட்ட குடுத்தனுப்ப சொல்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான்

கொஞ்சநேரத்தில் கூடத்தில் தர்மனும் மீனாவும் வந்திருந்தனர்.. அக்காவைப் பார்த்ததும் சத்யன் தலைகுனிய.. தம்பியின் மெலிந்த தோற்றம் மீனாவின் இதயத்தை உலுக்கியது, எதுவுமே சொல்லாமல் முந்தானையால் வாயைப்பொத்திக் கொண்டு அழுதாள்..

நல்லவேளையா... இவ தம்பிய நேத்து நைட்டு இருந்த கோலத்தைப் பார்த்திருந்தா உயிரையே விட்டுருப்பா..என்று மனதிற்குள் எண்ணிய தர்மன் “ எல்லாம் தான் தீர்ந்து போச்சே இப்ப ஏன் அழுது எல்லாரையும் சங்கடப்படுத்துற ” என்று மனைவியை அதட்டியவர்

வெள்ளை புடவையின் முந்தானையை தோளோடு மூடியபடி தூணோரமாக நின்றிருந்த மாமியாரைப் பார்த்து “ கோயில் பூசாரியைப் பார்த்து நல்லநாள் குறிச்சுக் குடுக்க சொன்னேன்.. வர்ற புதன் கிழமை நாள் நல்லாருக்காம், அன்னிக்கே நம்ம குலதெய்வம் கோயில்ல கல்யாணத்தை முடிச்சிப்புடலாம்னு இருக்கேன்... நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்..

மருமகன் முகத்தை பார்க்காமல் தலைகுனிந்தபடி “ உங்க சவுகரியப்படி செய்யுங்கய்யா, இதுல நான் சொல்ல என்ன இருக்கு ” என்றார் பஞ்சவர்ணம்
அப்போது தோட்டத்தில் இருந்து வந்த மான்சி தர்மன் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடியில் அமர்ந்து அவர்மீது ஒயிலாக சாய்ந்து சத்யனை முறைத்தபடி “ அப்பா அண்ணனுங்க ஏன் வரலை?” என்று கேட்க...

“ கூப்பிட்டுப் பார்த்தேன் வரலைன்னு சொல்லிட்டானுங்க... சரிதான் போங்கடான்னு வந்துட்டேன்” என்று சொன்ன தர்மன் “ ஆமா நீ ஏன் இன்னும் குளிக்காம உட்கார்ந்திருக்கடா?” என்று மகளிடம் கேட்டார்..

“ எங்கருந்து குளிக்குறது.. ரூமுக்குள்ள இருக்குற பாத்ரூம்ல ஷவர் இல்ல... சரி தோட்டத்துல போய் குளிக்கலாம்னு வந்தா ஒரு இளவரசனை உட்காரவச்சு சுத்தி சுத்தி வந்து என்னைத் தேய்ச்சு குளிக்க வச்சு.. யப்பப்பா என்னா பில்டப்பு குடுக்குறாங்கப்பா.. என்னவோ போருக்குப் போய் ஜெயிச்சுட்டு வந்த மாதிரி.. போனது ஜெயிலுல கம்பி எண்ணுறதுக்கு... இதுல இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. தாங்க முடியலைடா சாமி.. இன்னும் என்ன என்ன கூத்தெல்லாம் பாக்கனுமோ தெரியலை ” என்று நக்கல் என்ற பெயரில் சத்யனின் மனதை மேலும் ரணமாக்கியபடி தன் நெற்றியில் வலிக்காமல் தட்டிக்கொண்டாள்


அவளின் அலட்சியமான பேச்சு அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது... சத்யனுக்கு கூர் ஊசியாக இதயத்தில் இறங்கியது அவளுடைய நக்கல்... சத்யன் உடல் கூனிக்குறுகியது.. சுய பச்சாதாபத்தில் அடிவயிறு தடதடவென்று உதறியது, கண்களில் தேங்கிய கண்ணீரை வழியவிடாமல் மூச்சை இழுத்துப்பிடித்து கண்களிலேயே தேக்கினான்

மீனா கொதித்துப் போனாள்... வேகமாக மகளை நெருங்கி “ ஏன்டி என்ன பேச்சு பேசுற, அவனே நொந்து போய் வந்திருக்கான்” என்று எல்லோருக்கும் தெரியும்படி மகளை அதட்டியவள் யாருக்கும் தெரியாமல் “ வேனாம்மா” என்று பார்வையால் கெஞ்சினாள்

எல்லோருக்கும் காபி எடுத்து வந்த செல்வி கண்களில் திரண்ட நீருடன் “ என்ன சின்னம்மா இது?” என்றாள்

மேலும் ஏதோ பேசவந்தவள் சத்யனின் அடிப்பட்ட முகத்தைப் பார்த்து விட்டு.. விரித்துப் போட்ட கூந்தலை சிலுப்பியபடி சத்யனின் அறைக்குள் நுழைந்தாள்...

மகளின் பேச்சு தர்மனையும் பாதித்திருந்தது.. கலங்கிப்போய் நின்றிருந்த மாமியாரைப் பார்த்து “ சின்னப் புள்ள தான... போகப்போக சரியாப் போயிடும்” என்று சங்கடமாக சமாதானம் சொன்னார்...

“ நான் ஒன்னும் சொல்லலீங்க... என் மகனை என் பேத்தி எதை சொல்லவும் உரிமையிருக்கு, என் வீட்டுல ஒரு மகாராணியா அவ இருந்தா போதும்” என்றார் பஞ்சவர்ணம்...

சற்றுநேரத்தில் எல்லோரும் கொஞ்சம் இயல்பாகி கல்யாணத்துக்கு முக்கியமானவர்கள் யார் யாரை அழைப்பது என்று பேசிக்கொண்டிருக்க... செல்வி மறுபடியும் சூடாக்கி எடுத்து வந்து கொடுத்த காபியை எல்லோரும் எடுத்துக்கொள்ள...

இவர்கள் பேச்சில் கலந்துகொள்ளாமல் ஓரமாக நின்றிருந்த சத்யன் “ அவளுக்கு இதுல முழு சம்மதமான்னு கேட்டீங்களா மாமா?” என்றான் மெல்லிய குரலில் தர்மனிடம் கேட்டான்...

அவனை ஆச்சர்யமாகப் பார்த்த தர்மன் “ எல்லாம் முடிஞ்சு போச்சு இனிமே அவ சம்மதிச்சா என்ன? சம்மதிக்கலைனா என்ன?” என்றவர் “ எல்லாம் அவளுக்கும் சம்மதம்தான்” என்றார்...

சத்யன் தான் கேட்ட கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானாது என்று தன்னையே நொந்துகொண்டான்... கையிலிருந்த காலி டம்ளரை செல்வி வைத்திருந்த தட்டில் வைத்துவிட்டு வயலுக்குப் போகலாம் என்று நினைத்தவனை “ மாமா... மாமா...” மான்சியின் அலறல் பிடித்து நிறுத்தியது

கையிலிருந்த தட்டை கீழே வைத்துவிட்டு செல்வி அவசரமாக மான்சி இருந்த அறைக்கு ஓடிப்போய் பதட்டமாக “ என்னம்மா வேனும்” என்று கேட்க...


“ நீயா என் மாமன்... ஏய் போ.... போ மாமாவை இங்க வரச்சொல்லு” என்று மான்சி கத்தியது வெளியே இருந்த சத்யனுக்கு கேட்க.. எல்லோரையும் ஒருப் பார்வை பார்த்துவிட்டு அவசரமாக தன் அறைக்குள் நுழைந்தான் சத்யன்..
அவன் வந்ததும் செல்வி அங்கிருந்து வெளியேற... கொஞ்சம் தயங்கி “ என்ன ?” என்றான்



அவனை பேசவைத்த திமிருடன் நிமிர்ந்தவள் “ நீ என்ன பெரிய மந்திரியா? எல்லா அலமாரியிலயும் உன்னோட வெள்ளை வேட்டி சட்டையா இருக்கு? இப்ப என்னோட துணியை எங்க வைக்கிறது” என்று அதட்டலாய் கேட்டாள் ..

“ கொஞ்சம் இரு என் துணியை எல்லாம் ஒதுக்கிட்டு இடம் தர்றேன்” என்று மெதுவாக கூறிவிட்டு கொஞ்சம் பழைய உடைகள் இருந்தவற்றை எல்லாம் எடுத்து வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு “ இங்க அடுக்கி வச்சுக்க” என்று சத்யன் சொல்லிவிட்டு வெளியேப் போக கதவை நெருங்கினான்


No comments:

Post a Comment