Tuesday, July 21, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 10

ஜனனிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்று முடிவு செய்து மொட்டை மாடியில் இருந்த கார்த்திக்கை பார்க்க சென்றாள்.

கார்த்திக் ரோட்டில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க, மாடிக்கு வந்த ஜனனி தொண்டையை செருமி அவன் கவனத்தை ஈர்க்க, புன்சிரிப்புடன் அவளை நோக்கி திரும்பி "என்ன" என்று கண்களால் கேட்டான். 

அவனை கண்டு தடுமாறி பிறகு சமாளித்து "கார்த்திக் நீங்க பண்றது சரி இல்ல" என்றுஆரம்பிக்க "வெயிட் வெயிட், என்ன முதல் தடவையா கார்த்திக் அப்பிடின்னு (மாமாவை கட் பண்ணி) கூப்பிட்டு இருக்க, அதுக்கு முதல்ல தேங்க்ஸ். இப்ப சொல்லு". 

ஜனனி அவனது வசீகர பேச்சில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தாள். ஒரு வழியாக சமாளித்து "எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை, நீங்க தான் நிப்பாட்டனும்".

"

ஏன் உனக்கு பிடிக்கலேன்னா நீ நிப்பாட்ட வேண்டியது தானே
". 

"நான் சொன்னா அம்மா அப்பா கேட்கமாட்டேன்னு சொல்றாங்க. ப்ளீஸ்".
"
சரி நீ எதுக்கு இந்த கல்யாணம் வேணாம்னு சொல்ற". 

அவனை முறைத்து பார்த்து "ஏன் உங்களுக்கு தெரியாது?". அவன் புரியாமல் அவளை குழப்பமாக பார்க்க," ஆமா 
வாய்ல விரலை வைச்ச கூட கடிக்க தெரியாத பாப்பா மாதிரி மூஞ்சை வச்சிட்டா, நான் நம்பிடுவேனா?"

கார்த்திக் புரியாதவன் போல் பார்க்க ஜனனி அவனுக்கு உண்மைலே நடந்தது தெரியவில்லை என்று உணர்ந்தாள். "உண்மைலே உங்களுக்கு அன்னைக்கு நடந்தது ஞாபகம் இல்ல?" ஆவேசத்துடன் தொடர்ந்தாள்"எப்படி ஞாபகம் இருக்கும்? பாதிக்கப்பட்டது நான் தானே. உங்களோட ஆசை தீர்ந்த உடனே எல்லாத்தையும் மறந்துடுவிங்க".

கார்த்திக் அவளை ஆச்சர்யமாக பார்க்க அவள் தொடர்ந்தாள். "பார்ட்டி நடந்த இரவு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"


"எப்படி மறக்க முடியும், என் தங்கம் ஜனனி எனக்கே எனக்கு கிடைச்ச நாள் ஆச்சே", என்று கொஞ்சும் மொழியில் பேச, 

"என்னை ஒன்னும் கொஞ்ச வேணாம், அடுத்த நாள் காலைல நீங்க என்னை நேகான்னு கூப்பிட்டது ஏன்?"

" உன்னை நேகான்னு கூப்பிட்டேனா? உனக்கு மூளை ஏதும் குழம்பிடுச்சா" என்று கோபத்துடன் கேட்க, 

"ஓஹோ உங்களுக்கு அது மட்டும் நினைவில் இல்லை இப்போ சொல்றேன் கேட்டுக்கங்க. என்னை பார்த்து 'நேகா வந்து படுடின்னு'சொன்னப்ப நான் எப்படி நொறுங்கி போனேன் தெரியுமா?"

கார்த்திக்கு இப்போ புரிந்தது. எந்த பெண்ணாலும் ஏற்று கொள்ள முடியாத வார்த்தை இது என்று அவனுக்கு தெரியும், இதேமாதிரிவார்த்தையை சொல்லி நேகாவிடம் வாங்கி கட்டி கொண்டதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. இனி மேல் தப்பிக்க வாய்ப்பில்லைசரணடைய வேண்டியது தான் என்று முடிவு செய்து, "ஜானு எனக்கு உண்மைலே ஞாபகம் இல்லைடா. உன் நிலைமைல நான்இருந்தா கூட இப்படி தான் செய்திருப்பேன்".

"ஆனா அதுக்கப்புறம் எனக்கு அடி பட்டதுன்னு தெரிஞ்சபோது ஹாஸ்பிடல்ல வந்து என்னை கண் மாதிரி பாத்துகிட்ட. ஏன்?"

அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

"ஏன்னா உன் மனசில நான் இன்னும் இருக்கேன்."

"உன்னோட தன்னலம் இல்லாத அந்த அன்புக்கு, காதலுக்கு நான் என்ன கை மாறு செய்யப் போறேன்னு எனக்கு தெரியலை. நடந்ததைஎல்லாம் மறந்து என்னை மன்னிச்சிடு please", என்று கெஞ்ச ஆரம்பித்தான். 

அவளே எதிர் பாராத விதத்தில் அவள் அருகில் மண்டியிட்டு அவள் குழைந்த அடி வயிற்றில் தன் தலை வைத்து கண்ணீர் விட்டு கெஞ்சஜனனியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. 

அவன் சொன்னது அனைத்தும் உண்மை என்று புரிய, அவன் தலையில் கை வைத்து தடவி கொடுத்து, "ப்ளீஸ் எந்திரிங்க, உங்களைநம்புறேன்".


அவளின் உறுதி மொழி கேட்டு எழுந்த கார்த்திக் ஜனனியின் அழகிய முகத்தை தன் இரண்டு கைகளால் ஏந்தி அவள் இதழில் மென்மையாக முத்தம் இட்டு "தேங்க்ஸ்" சொன்னான். ஜனனிக்கு கூச்சம் அதிகமானது. கண்களை மூடி கொண்டாள்.

"ஏன் நன்றி சொல்றது வாயால சொன்னா போதாதா? இவனை விட்டால் இங்கேயே முதல் இரவை முடித்து விடுவான். எமகாதகன்"என்று வெட்க புன்முறுவல் பூத்து கொண்டே, கண் விழித்து, அவனை விட்டு உடனே விலகி நின்றாள்.

"என்ன நான் இவன் தொட்டாலே பலகீனம் ஆகி விடுகிறேன்" என்று தன்னை தானே நொந்தபடி, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன். "ஆனா ஒரு நிபந்தனை. இனிமே நீங்க நேகா உட்பட எந்த பெண்ணையும் தேடி போக கூடாது" 

மனதுக்குள் நானும் அதுக்கு உங்களை விட மாட்டேன்"இதுக்கு சம்மதம்னா இப்பவோ போய் என்னோட அம்மா அப்பாகிட்ட எனக்கு சம்மதம்னு சொல்லிடுவேன்".

கார்த்திக்கு நம்ப முடியாத அளவுக்கு சந்தோஷம்
"நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே. எந்த கோயில்ல சத்யம் பண்ணனும்னு கேட்க", ஜனனிக்கு சிரிப்பு தாங்கவில்லை. "இன்னொரு விஷயம் இனிமே உங்களை பெயர் சொல்லி கூப்பிடலாமா?" என்று தயங்கி கேட்க, "உனக்கு இல்லாத உரிமையா, நீ என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம், சுற்று முற்றும் பார்த்து டேய் உட்பட" என்று சொல்ல, ஜனனி குங்கும பூவாய் முகம் சிவந்தாள்.

இருவரும் ஒன்றாக மொட்டை மாடியில் இருந்து இறங்கி வர பூரணிக்கு அவள் கண்ணே பட்டு விடும் போல இருந்தது. இறங்கிய இருவரும் பூரணியுடன் சதானந்தன் அறைக்கு சென்றனர். ஜனனி முதலில் பேச ஆரம்பித்தாள். "அம்மா அப்பா எனக்கு கார்த்திக் மாமாவை திருமணம் செய்ய பரிபூரண சம்மதம். நீங்க சொன்ன மாதிரி மருதமலைல வச்சுக்கலாம். அவருக்கு ரொம்ப பிடிச்ச கோயில்"என்று சொல்ல, பூரணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். 

கார்த்திக்கு "மருதமலை தனக்கு பிடித்த கோயில் என்பது ஜனனிக்கு எப்படி தெரியும்" என்று அவளை பார்த்து கண் அசைக்க அவளோ"எல்லாம் எனக்கு தெரியும்" என்று கண்களை மூடி சைகை காண்பித்தாள். சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் அவள் எடுக்கும் அக்கறை, யார் மனதையும் புண்படுத்த குணம், தன் மன்னிக்க முடியாத தவறை மன்னித்தது, சிரித்த முகம், அவளின் அனைத்து குணாதிசயங்களும் அவனை கவர்ந்தது.




அதற்குள் மோகன் ஐந்து உதவி இயக்குனர்களுடன் கோவை வந்து சேர்ந்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்ததை அறிந்த மோகனின் மனதில் நிம்மதி. அவனுக்கு தானே தெரியும் கார்த்திக் பானுவை மறக்க எப்படி கஷ்டப்பட்டான் என்று. ஜனனியை பார்த்து வாழ்த்து சொல்லி விட்டு, அவள் காதருகில் வந்து "ரொம்ப தேங்க்ஸ்மா" என்று சொல்லி கண் கலங்க அவள் கையை பிடித்து கண்ணில் ஒற்றி கொண்டான். 

ஜனனி பதறி போய் "என்ன அண்ணா எதுக்கு இப்படி பண்ணுரிங்க" என்று கேட்க, "முதல் தடவையா கார்த்திக் வாழ்க்கைல ஒரு நல்ல விஷயம் நடக்குது. உன்ன மாதிரி ஒரு நல்ல பெண் கிடைக்கனும்னு அவன் தலைல விதி எழுதி இருக்கு அதுனால தான் அவன் பானுகிட்ட அன்னைக்கு மாட்டலைன்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, ஜனனிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், அப்படியே நின்றாள். 

"மோகன் அண்ணா அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிபட கூடிய ஆள் இல்லை" என்று அவளுக்கு தெரியும். அவர் அப்படி பேசுகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு கார்த்திக் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்க கூடும் என்று உணர்ந்தாள். தூரத்தில் இருந்து இவர்கள் இருவர் பேசியதையும் கார்த்திக் கலங்கிய தனது கண்களை யாரும் அறியாமல் துடைத்து கொண்டான்.

மோகன் கார்த்திக்கிடம் கல்யாண பிளான் பற்றி சொல்லி அவனும் ஜனனியும் ஒரு வேலையும் பண்ண வேண்டாம் என்றும் சொல்ல,மேலும் இது கோவிலில் நடக்கும் கல்யாணம் என்பதால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் முடிவு செய்யபட்டது. கார்த்திக்கிடம் இருக்கும் பணத்துக்கு பெரிய அளவில் கல்யாணம் செய்ய முடியும் என்றாலும், அவனுக்கும் ஜனனிக்கும் ஆண்டவன் சந்நிதியில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. 

திருமணம் முடிந்த உடன் அடுத்த நாள் சென்னையில் ரிசப்சன் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

கார்த்திக் ஜனனியிடம் "அம்மா அப்பா நம்மோட வந்து தங்கி இருக்கட்டும்" என்று சொல்ல, "அதை பத்தி நீங்களே பேசுங்க" என்று அவனை சதானந்தன் அறைக்கு அழைத்து வந்தாள். கார்த்திக் இருவரையும் நோக்கி "அக்கா, மாமா கல்யாணம் முடிஞ்சா கையோட நாம சென்னைக்கு போகலாம். நீங்க ரெண்டு பேரும் எங்களோட இருக்கணும். எங்களுக்குன்னு பெரியவங்க யார் இருக்கா, நீங்க கட்டாயம் கூட வரணும்" என்று கை கூப்பி கேட்க, சதானந்தன் நெகிழ்ந்து போனார். 

"இந்த காலத்தில் மாமனார் வீட்டில் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று சிந்திக்கும் மருமகன்கள் மத்தியில் இப்படி ஒரு மாப்பிள்ளையா?" என்று வியந்து நின்றார். அதற்குள் பூரணி, "சரி தம்பி நீங்க சொல்ற மாதிரி நாங்க உங்களோட வந்து சில நாட்கள் இருக்கோம். ஆனா இந்த ஊரை விட்டு நிரந்தரமா வர மனசில்லை. அதோட எங்க உடம்பில சக்தி இருக்கா வரைக்கும் நாங்க நாங்க யாருக்கும் பாரமா இருக்க விரும்பலை. எங்களை தப்பா நினைக்க வேண்டாம். ஒரு வேளை இனிமே எங்களால தனியா சமாளிக்க முடியாதுன்னு நிலைமை வந்தா உங்களை தேடி வரோம். அப்போ எங்களை பாத்துக்கங்க" என்று அன்புடன் வேண்டுகோள் விடுத்தாள். 

"சரி" என்று தலை அசைத்தபடி ஜனனியுடன் ஹாலுக்கு வந்த கார்த்திக் வீடு பத்தி சில விபரங்களை கேட்டான்.


ஜனனி அப்பா அந்த வீட்டை பத்து வருடங்களுக்கு முன் வாங்கி இருந்ததாகவும், வீடு தற்போது நல்ல நிலைமையில் இல்லை என்றும்,மழை பெய்தால் பல இடங்களில் ஒழுக கூடிய அபாயம் இருப்பதாகவும் அறிந்தான். வீடு இருக்கும் இடம் நல்ல இடம் ஆதலால் 
விலை பத்து லட்சத்துக்கு மேல் போக வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்து கொண்டான். 

தன் மனதில் சில திட்டங்கள் தோன்ற, ஜனனியிடம் அவற்றை விவரிக்க அவளும் ஆச்சர்யத்துடன் கேட்டு, அசந்து போய், அவனை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு நன்றி தெரிவித்தாள். உடனே மோகனை போனில் கூப்பிட்டு விபரம் சொல்ல அவனும் கேட்டு கொண்டு உடனே செய்வதாக உறுதி அளித்தான்.

காலை ஏழுமணி அளவில் மருதமலை முருகன் கோவில் சன்னிதானம். கார்த்திக் ஜனனிக்கு சுப்ரமணிய சுவாமி முன்னிலையில் தாலி கட்ட, கூட வந்த சதானந்தன், பூரணி, கார்த்திக் தாத்தா சின்னசாமி, மோகன் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்து தெரிவிக்க, விஜய் போனில் திருமணத்துக்கு வர முடியவில்லை என்றும் ரிசப்சனில் சந்திப்பதாக சொல்லி, ஜனனியிடமும் பேசி வாழ்த்து தெரிவித்தான்.ஜனனி "என்ன மாமா நீங்க ஏன் வரலை?" என்று சிணுங்க, சென்னை வருவதாக சொல்லி விடை பெற்றான். கார்த்திக்கு பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. சுப்ரமணிய சுவாமி சந்நிதியில், "முருகா எனக்கு எது சரியான வாழ்க்கை என்பதை அறிந்து சரியான வாழ்க்கை துணையை காண்பித்ததற்கு" நன்றி தெரிவித்தான். 



வீட்டில் நல்ல அறை எதுவும் இல்லாததால், முதல் இரவை ஹோட்டலில் ஏற்பாடு செய்யலாம் என்று பூரணி சொல்ல, கார்த்திக் மறுத்து வீட்டிலேயே ஏற்பாடு செய்ய சொன்னான். நாங்கள் இரண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம் என்று சொல்ல, பூரணிக்கு கார்த்திக் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது. சதானந்தன் தங்கி இருக்கும் அறை தற்காலிகமாக முதல் இரவு அறையாக மாற்றப்பட்டு இருந்தது. 


அடுத்த நாள் சென்னை திரும்ப மோகன் பத்து பிளைட் டிக்கெட் புக் செய்து விட்டான். மேலும் சில விஷயங்களை பேசிவிட்டு மோகன் மற்ற ஐந்து உதவி இயக்குனர்களுடன் விடை பெற்று ஹோட்டலில் தங்க சென்றனர்.



No comments:

Post a Comment