Monday, July 27, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 3

அன்று மாலை நான்குமணி வரை சத்யன் தூங்கவும் இல்லை தேவியின் மீதான பார்வையையும் விலக்கிக்கொள்ளவும் இல்லை, தேவியும் கட்டிலில் சாய்ந்தவாறு அவனையே பார்த்துக்கொண்டிருக்க,

அப்போது அங்கே வந்த நர்ஸ் “ ஏம்பா டாக்டர் தான் உன்னை இன்னிக்கு வீட்டுக்கு போகச்சொல்லிட்டாரே, நீ கிளம்பு , இன்னும் ஐஞ்சுநாள் கழிச்சு வந்து தையலை பிரிச்சுக்க” என்று சொல்லவும் சத்யன் சரிங்க என்று நர்ஸ்க்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டு

“ தேவி வெளிய முருகன் இருப்பான் அவனுக்கு தெரிஞ்ச ஒரு ஆட்டோ டிரைவர் இங்கே இருக்கார் அவரோட ஆட்டோவை கூட்டிக்கிட்டு வரச்சொல்லு வீட்டுக்கு கிளம்பலாம்” என்று சொல்ல, தேவி உடனே எழுந்து வெளியே போனாள்

அங்கே சுற்றிக்கொண்டு இருந்த முருகனிடம் விஷயத்தை சொல்லி ஆட்டோ எடுத்துவரச் சொல்லிவிட்டு மறுபடியும் மருத்துவமனை உள்ளே, அதற்க்குள் சத்யன் தனது பெட்சீட் சாப்பாட்டு பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு இருக்க...........



வேகமாக அவனை நெருங்கிய தேவி “ நான் வர்றதுக்குள்ள அப்படியென்ன அவசரம்” என்றவாறு அவன் கையிலிருந்த பெட்சீட்டை பிடுங்கி மடித்து பையில் வைத்தவள், ஒருகையில் பையை எடுத்துக்கொண்டு மறுகையை அவனை நோக்கி நீட்டினாள்

“ நான் மெதுவா வர்றேன் நீ முன்னால போ தேவி” என்று சத்யன் முழங்காலை லேசாக மடித்து நொண்டியபடி நடக்க, அவனை முறைத்து வாறு இன்னும் கையை நீட்டியபடி தேவி அங்கேயே நகராமல் நிற்க்க

அவளை சில விநாடிகள் பார்த்த சத்யன், அவள் கையை பிடித்து தன்னருகே இழுத்து அவள் தோளில் கைப்போட்டுக் கொண்டு நடக்க, அந்த மருத்துவமனையே அவர்களை வேடிக்கை பார்த்தது, இப்போது தேவிக்குத்தான் சங்கடமாக இருந்தது

“ சும்மா சும்மா பயப்படுவ இப்ப மட்டும் யாராவது பார்த்துட்டு எங்க வீட்டுல சொல்லமாட்டாங்களா” என்று தேவி அவனிடம் ரகசியமாக கேட்க

“ போய் சொல்லட்டும், அப்படியாவது சீக்கிரமா என்னை கல்யாணம் பண்ணிகிட்டு எங்கவீட்டுக்கு வந்து சேருவ தானே” என்று சத்யன் சத்தமாக சொல்ல

“ ஸ்.... என்ன கருவாயா சவுண்டு பலமா இருக்கு, உன் மச்சானுங்க எல்லாம் இன்னும் கொலை மட்டும் தான் பண்ணலை, மத்த எல்லாம் பண்ணிட்டானுங்க, ஒவ்வொருத்தன் மேலயும் நாலஞ்சு கேஸ் இருக்கு, அவஞைல ஜாமீன்ல எடுக்கத்தான் என்னை வக்கீலுக்கு படிக்க வைக்க ட்ரைப் பண்றானுங்க, ஜாக்கிரதை ஆமா சொல்லிட்டேன்” என்று பொய்யாய் மிரட்டியபடி அவன் கையைப்பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள் தேவி

“என்னை காப்பத்த தான் நீ இருக்கியே அப்புறம் எனக்கு என்ன கவலை” என்றவன் துணிச்சலாக அவள் தோளில் இருந்த கையை அவள் இடுப்புக்கு இறக்கி பற்றிக்கொள்ள,

“ அதானே பார்த்தேன், எடுங்க கையை, யாராவது தப்பா நெனைக்க போறாங்க ” என்ற தேவி அவன் கையை தட்டிவிட,...

“ அதெல்லாம் தப்பா நெனைக்க மாட்டாங்க, என் கால் இப்படி இருக்குறதால நீ தாங்கி பிடிச்சு கூட்டிகிட்டு போறதாதான் நெனைப்பாங்க பயப்படாத தேவி” என்ற சொன்ன சத்யன் அதிகமாக காலை நொண்டியபடி வர

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த தேவி நக்கலாக சிரித்து “ பயமா? என்க்கா? நீ பயப்படாம இருந்தா சரி” என்றவள் அவனை இன்னும் நெருங்கி நடந்தாள்

இவர்கள் வெளியே வந்தபோது , முருகன் ஆட்டோவோடு வந்து இவர்களின் அருகில் வந்தான், இருவரின் நெருக்கத்தை பார்த்து முருகன் சிரிக்க, .. அவனைப் பார்த்து தேவி “ என்னாங்கண்ணே சிரிக்கிறீங்க” என்று நேரடியாக கேட்க

“ இல்ல இந்த நாலு தையலுக்கு பையன் என்னமோ காலே உடைஞ்சு கட்டு போட்டு இருக்கிற மாதிரி சீன் போடுறான்” என்று கிண்டல் செய்தபடி அவள் கையில் இருந்த பையை வாங்கி ஆட்டோவில் வைத்துவிட்டு “ ம் ஏறி உட்காரு சத்யா” என்றவன் தேவியிடம் திரும்பி “ என்னம்மா நீ இப்படியே பஸ்ல கிளம்புறியா” என்று கேட்க

“ இல்லண்ணே நானும் வர்றேன், இவரு வீட்டுக்கு முன்னாடியே இறங்கிக்கிறேன், இவரை இறக்கிவிட்டு வரும்போது மறுபடியும் ஆட்டோவிலேயே என்னைய இங்க கொண்டு வந்துவிட்டுருங்க நான் பஸ் புடிச்சு போய்க்கிறேன்” என்றவள் ஆட்டோவில் ஏறி சத்யன் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்

முருகன் குழப்பத்துடன் சத்யனை பார்க்க, சத்யன் “இந்த புள்ள சொன்ன மாதிரியே இறக்கி விட்டுரு, ஒன்னும் பிரச்சனை இல்லை கிளம்பு முருகா” என்றான்,

உடனே ஆட்டோ கிளம்ப, முருகன் டிரைவருடன் முன்னால் அமர்ந்துகொண்டான்

கொஞ்சதூரம் போனதும் சத்யன் தேவியின் கையை எடுத்து தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு அவள் தோள்மீது சாய்ந்துகொள்ள, தேவி கண்களில் காதல் நிரைத்து அவன் தலையை கோதிவிட்டாள்

தன் நெஞ்சில் இருந்த அவள் கையை எடுத்து தன் உதட்டில் வைத்து சத்யன் சத்தமில்லாமல் முத்தமிட, தேவி முன்னால் இருப்பவர்களை கண்ஜாடை செய்து தன் கையை உருவிக்கொள்ள முயன்றாள்

சத்யன் விடாமல் உடும்புப் பிடிபிடித்து, மறுபடியும் தன் நெஞ்சில் பதித்துக்கொண்டான், அவன் பார்வை அவளை விழுங்கிக்கொண்டு இருக்க, அவன் விரல்களோ அவளின் இடுப்பை வளைத்துப் பிடித்துக்கொண்டிருந்தது
தேவியின் வெட்கமும் கூச்சமும் அவனுக்கு புதுசாக இருக்க, தன் பார்வையால் அவளை மேலும் சிவக்க வைத்தான், ஜாடையில் அவள் மடியில் படுத்துக்கொள்ளவா என்று கேட்க

அவள் உதட்டை கடித்து கண்களை உருட்டி அவனை மிரட்டினாள், சத்யன் குறும்பாக சிரித்து, பயமில்லை என்பதுபோல் உதட்டைப் பிதுக்கி காட்டினான்

கொஞ்சநேரத்தில் சத்யன் வீடு இருக்கும் தெரு வந்துவிட, ஆட்டோவை நிறுத்திய முருகன் இறங்கி கொண்டு, தேவியைப் பார்க்க, அவளோ கலங்கிய கண்களுடன் சத்யனை பார்த்தாள்

அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை தனது விரலால் சுண்டிய சத்யன் “ ஏய் இதென்ன அழுதுகிட்டு இருக்க, நான் சீக்கிரமா வந்துருவேன், நீ அழாம போ தேவி” என்று கண்களில் காதலும் குரலில் ஆறுதலுமாக சத்யன் சொல்ல

“ மறுபடியும் உங்களை பார்க்க நாளாகுமா, அதுவரைக்கும் என்னால முடியாது” என்று தேவி கலங்கிய குரலில் சொல்லும்போதே

“ அட இதுக்கு ஏன் தங்கச்சி அழுவுற, எத்தனை மணிக்கு கூட்டியாரனும்னு சொல்லு நான் ஆட்டோவுல கூட்டிகிட்டு வந்துர்றேன்” என்று ஆட்டோ டிரைவர் சொல்ல

“ அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம்ண்ணே, நெதமும் ஆட்டோ வீட்டுக்கு வந்தா எங்கம்மாவுக்கு சந்தேகம் வந்துரும்” என்று சத்யன் பயந்த குரலில் சொன்னான்

“ நான் ஏன்பா உன்வீட்டுக்கு வரப்போறேன், கரெக்ட் டைமுக்கு நீ மெதுவா நடந்து இந்த இடத்துக்கு வந்துரு நான் வந்து கூட்டிட்டு போறேன், நானும் காதல் கல்யாணம் பண்ணவன் தான் தம்பி, உங்க ரெண்டு பேர் மனசும் புரியுது, ஏதோ என்னால முடிஞ்ச உதவி, உன்னால முடிஞ்ச காசை குடு போதும்” என்று டிரைவர் பிரச்சனைக்கு தீர்வு சொன்னார்

சத்யன் சம்மதமாக தலையசைக்க,.. தேவி அரை மனதாக ஆட்டோவில் இருந்து இறங்கினாள், சத்யன் அவளை கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திவிட்டு கையைவிட, ஆட்டோ சத்யன் வீட்டுக்கு கிளம்பியது

அதன்பிறகு தினமும் மாலை மூன்றரை மணிக்கு சத்யன் ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியே வர, அந்தநேரத்தில் சத்யன் அம்மாவும் வீட்டில் இருக்கமுடியாமல் போனது, வருமானம் குறைந்து போனதால் அருகிலிருந்த அச்சாபிஸ்ல் நோட்டு தைக்கும் வேலைக்கு போக ஆரம்பித்ததால் மாலை ஆறுமணிக்கு தான் வீட்டுக்கு வந்தார் சத்யனின் அம்மா

சிலநாட்கள் ஆட்டோ டிரைவர் பாண்டியன் வந்து அழைத்து போவார், அவர் வராத நாட்களில் முருகன் வந்து சைக்கிள் சத்யனை உட்கார வைத்து கீழ்பாலம் அருகே கொண்டு போய்விடுவான்

அதன்பிறகு தேவியும் சத்யனும் பேசுவார்கள் பேசுவார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள், ஆனால் என்ன பேசினோம் என்று இருவருக்குமே தெரியாது, மறைவும் தனிமையும் கிடைத்தால் தொட்டுக்கொள்ளவும் முத்தமிடவும் இருவரும் கற்றுக்கொண்டார்கள், ஆனால் எல்லாம் அவசரமாகவே நடந்தது

இப்போதெல்லாம் சத்யனுக்கு ரொம்ப தைரியம் வந்துவிட்டது, தனது தைரியத்தை பேச்சிலும் செயலிலும் காட்டினான், அவனது துணிச்சல் தேவிக்கு பயத்தை கொடுத்தாலும், அவனுக்கு மறுப்பேதும் சொல்லமாட்டாள்

சத்யனுக்கு தேவி ஒரு தேவதை, அவனுடைய அம்மாவுக்கு பிறகு அவனுக்கு தேவி மட்டும்தான் உலகம் என்றானது, கால் சரியாகி சத்யன் வேலைக்கு போக ஆரம்பித்தான், அவன் அம்மா தனது சேமிப்பில் புது சைக்கிள் வாங்கி கொடுக்க, சரியாக மூன்றரை மணிக்கு வந்து கல்லூரியின் வாசலில் தேவிக்காக காத்துகிடந்தான்

அவனை பார்த்ததும் மலரும் தேவியின் முகம் அவளுடைய காதலின் அளவை சொல்லும், சத்யன் மீது தனது உயிரையே வைத்திருந்தாள், அவனுக்கு சிறு தலைவலி என்றாலும் ஒரு தாயாய் தவித்து கண்ணீர் விட்டாள், அவன் காதல் பேச்சு பேசினால் ஒரு காதலியாக அவனை சீண்டி விளையாடுவாள், அவன் அவர்களின் பிற்காலத்தை பற்றி பேசினால் ஒரு தோழியாக இருந்து முன்னேற்றத்திற்க்கான வழிமுறைகளை எடுத்து சொல்வாள்

இந்த சின்ன வயதில் அவளுக்கு இருக்கும் பொதுஅறிவும், திறமையும், சமயோசித புத்தியும், பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் விதமும், சத்யனை வியக்க வைக்கும், இவளுடன் உண்டானி தன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கனவுகள் கான ஆரம்பித்தான்

கல்லூரிக்கு நிறைய மட்டம் அடித்துவிட்டு, கோயில்கள், சினிமா தியேட்டர், ராஜாஜி பார்க், காந்தி மியூசியம், என்று சுற்றினார்கள், அவர்களின் நல்லநேரமோ, இல்லை கெட்டநேரமோ தெரிந்தவர்கள் கண்ணில் அதுவரை மாட்டவில்லை,

தேவியின் யோசனைப்படி காய்கறி கடையில் இருந்து வேலையை விட்டு நின்றான், ஒரு மிகப்பெரிய கேரளா காயர்போர்ட் எனும் கார்பெட் கடையில் வேலைக்கு சேர்ந்தான், அந்த வேலையின் நுனுக்கங்களை சீக்கிரமாக கற்றுக்கொண்டான், வருமானம் அதிகரித்தது தனது அம்மாவை வேலைக்கு அனுப்பாமல் நிறுத்தினான்,




தேங்காய் நார் கார்பெட்டின் ஓரம் வெல்வெட் துணியால் பார்டர் தைக்கும் வேலையை சீக்கிரமே கற்றுக்கொண்டு, பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மொத்தமாக பேசி தரைவிரிப்பு போட்டு அதன் அளவுக்கு ஏற்றபடி பார்டர் தைத்துக் கொடுத்தான்,

முதலில் தனியாக செய்த வேலையை, பிறகு நாலுபேர் சம்பளத்துக்கு வைத்து செய்தான், நல்ல வருமானம் வந்தது, தம்பிக்கும் அதே கடையில் வேலைக்கு ஏற்பாடு செய்தான், இருந்த வீட்டை காலி செய்துவிட்டு சற்று பெரிய வீட்டுக்கு குடிபெயர்ந்தான், பழைய விலைக்கு ஒரு யமாஹா பைக் வாங்கினான்

சத்யன் இந்த நாலு மாதத்தில் வாழ்க்கையிலும் காதலிலும் ரொம்ப முன்னேறியிருந்தான் இவை அத்தனையும் தேவியால் கிடைத்த வாழ்வு என்று உள்ளம் பூரித்தான், தேவிதான் எல்லாமும் என்று ஆகிப்போனான்

தேவியின் படிப்பு முடிய இன்னும் சில மாதங்களே எனும் நிலையில், ஒருநாள் தேவி சத்யனிடம் " நாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம், ஏன்னா என் படிப்பு முடிஞ்சதும், என்னை சேலம் லா காலேஜ்ல சேர்க்கப்போறதா என் வீட்டுல பேசுறாங்க சத்யா, என்னால உன்னை விட்டுட்டு போகமுடியாது" என்று கண்ணீருடன் சொல்ல

அவளுடைய கண்ணீர் சத்யனை கலங்க செய்தாலும், குரலில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு " ஏய் தேவி இதுக்கு போய் அழுவுற, இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துகிட்டு, பிறகு கல்யாணம்தான், அதுக்குள்ள உன் படிப்பும் முடிஞ்சுரும், எல்லாம் நான் பார்த்துக்கிறேன் தைரியமா இரு தேவி" என்று சத்யன் ஆறுதல் சொன்னான்

இது நடந்து நான்கு நாட்கள் கழித்து சத்யனின் அம்மா திருச்சூரில் இருக்கும் தனது சகோதரி வீட்டுக்கு கிளம்ப, அம்மாவை தனியாக அனுப்ப மனமில்லாத சத்யன், தனது தம்பியையும் கூட அனுப்பி வைத்தான்

அன்று மாலை தேவியிடம் தனது அம்மா ஊருக்கு போயிருக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு நாலு நாளைக்கு ஹோட்டலில் தான் சாப்பாடு என்று சலிப்புடன் சொன்னான்

அவனையே சிறிதுநேரம் பார்த்த தேவி " நாளைக்கு எனக்கு காலேஜ்ல முக்கியமானது எதுவும் இல்லை, நான் வேனா உங்க வீட்டுக்கு வந்து சமையல் செய்து வச்சுட்டு வர்றேன், என்னை நாளைக்கு காலையில கூட்டிட்டு போறயா?" என்று கேட்க

சிலநிமிடங்கள் யோசித்த சத்யன் " சரி காலையில ரெடியா இரு நான் எட்டரைக்கு எல்லாம் வந்து கூட்டிட்டு போறேன் " என்றான்

"அதுசரி யாராவது என்னை பார்த்துட்டு உங்கம்மா கிட்ட போட்டுக் குடுத்துட்டா, என்ன பண்றது" என்று தேவி குழப்பமாக கேட்க

"அட நீவேற இப்போ நாங்க போயிருக்க ஏரியா அதிகமா நடமாட்டம் இல்லாத ஏரியா, எல்லாம் பணக்கார ஆளுங்க, பக்கத்து வீட்டுல என்ன நடந்தாலும் வெளிய வரமாட்டானுங்க, நீ பயப்படாத " என்று சத்யன் தைரியம் சொன்னான்

மறுநாள் காலை தேவி புடவை கட்டிக்கொண்டு அவனுக்காக பாலத்துக்கு அடியில் காத்திருக்க, சத்யன் தனது பைக்கில் அவளை ஊர்கார வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் கூட்டிப்போகிறேன் என்று மதுரையில் பாதியை அவளுக்கு சுற்றி காண்பித்து தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றான்



"அழகை ரசிப்பதும், அழகியை ரசிப்பதற்கும்...

"என்ன வித்யாசம்?

"அழகை ரசிக்க காதல் இருந்தால் மட்டும் போதும்!

"அழகியை ரசிக்க வெறும் கண்கள் மட்டும் போதும்!

" பருவ மாற்றம் வந்தால் ஒரு பெண் பூப்படைகிறாள்!

" ஒரு ஆணோ தன்னை ஒரு பெண் பார்த்தவுடன் தான்..

" பருவ மாற்றமே அடைகிறான்,,

" இதுவும் கூட ஒருவகையில் காதல்தான்!

சத்யன் தேவியுடன் பைக்கை வீட்டருகே நிறுத்தும் போது பத்தரைமணி ஆகியிருந்தது, பாக்கெட்டில் இருந்து வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே போன சத்யன் திரும்பி நின்று பின்னால் வந்த தேவியை பார்த்து

“ மொதமொதல்ல வர்ற வலதுகாலை எடுத்து வச்சு வா தேவி” என்று சிரிப்புடன் சொல்ல

“ ம்ஹூம் நான் மட்டும் தனியா உள்ள வர்றதா, நீயும் வா ரெண்டுபேரும் சேர்ந்து உள்ள போகலாம்” என்று கூப்பிட

சத்யன் சிரித்தபடி மறுபடியும் வெளியே வந்து தேவியுடன் ஜோடியாக உள்ளே வந்தான்,

வீட்டை சுத்தி பார்த்தபடி தேவி வர, “ தேவி கொஞ்சம் இரு நான் பின் வழியா போய் முன்னாடி வீட்டை பூட்டிட்டு மறுபடியும் பின்னாடி வழியே வர்றேன்” என்று சத்யன் கூற

முகத்தில் திகைப்புடன் “ ஏன்,.. ஏன் முன்னாடி பூட்டனும்” என்று தேவி அவசரமாக கேட்க

அவள் திகைப்பை பார்த்து அருகில் வந்த சத்யன் அவள் கையை பிடித்து தன்னருகே இழுத்து “ ஏய் லூசு ஏன் இப்படி பயப்படுற, இந்த தெருவுல அம்மாவுக்கு தெரிஞ்சவங்க ரெண்டு மூனுபேர் இருக்காங்க, கதவு திறந்து இருக்கேன்னு யாராவது திடீர்னு வந்துட்டா என்னப் பண்றது, அதான் முன்பக்க கதவை பூட்டிட்டா பயம் இல்லாம நாம சமையல் பண்ணி சாப்பிட்டு போகலாம்” என்று அவளை அணைத்த கண்களை பார்த்தபடி சத்யன் விளக்கம் கொடுக்க
அவனுடைய வாய் பேச்சைவிட அவன் கண்கள் சொன்ன செய்திக்கு தேவி கட்டுப்பட்டு தலையை ஆட்டினாள்

தன் கைகளில் இருந்த தேவியின் உதடுகளை நெருங்கிய சத்யன், ஏதோ நினைத்துக்கொண்டு, வேகமாக அவளை விட்டுவிட்டு பின்கதவை திறந்து வைத்துவிட்டு, வெளியே போய் முன்கதவை பூட்டிவிட்டு பின்வழியாக வந்தான்
அவன் விட்டுச்சென்ற இடத்தில் தேவி இல்லை, சமையலறையில் சத்தம் கேட்க அங்கே போனான், அங்கே தேவி சமையலுக்கு என்னென்ன இருக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்

“ அம்மா ஊருக்கு போறதால எதுவுமே வாங்கி வைக்கலை தேவி , இருக்கிறத வச்சு ஏதாவது செய்து சாப்பிடலாம்,” என்றபடி அவளை நெருங்கிய சத்யன் “ என்ன தேவி எதுவுமே பேசமாட்டேன்ங்குற” என்று மெல்லிய குரலில் கேட்க
தேவி எதுவுமே பேசாமல் பம்ப் ஸ்டவ்வில் காத்தடிக்க ஆரம்பிக்க, சத்யன் இன்னும் சற்று நெருங்கி நின்று “ குடு நான் காத்தடிச்சு தர்றேன்” என்று சத்யன் அவள் கைமேல் தன் கையை வைக்க

தேவி பதட்டத்துடன் தன்கையை உருவிக்கொண்டு, திரும்பி நின்றுக்கொள்ள.... அவளின் நடவடிக்கைகள் வித்யாசமாக இருக்க அவள் தோளை பற்றி தன்பக்கம் திருப்பிய சத்யன் அவள் முகத்தை நிமிர்த்தி “ ஏய் என்னாச்சு தேவி ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க” என்று கேட்க

அவன் கண்களை பார்க்க முடியாமல் மறுபடியும் தலைகவிழ்ந்த தேவி “ இல்ல....... இந்த மாதிரி பூட்டின வீட்டுக்குள்ள நாம தனியா இருக்கிறது ஒருமாதிரியா இருக்கு” என்று தயங்கி தயங்கி பேசும் தன்னுடைய தைரியசாலி காதலியை பார்த்து சத்யனுக்கு வியப்பாக இருந்தது

“ அப்போ நீ என்னை நம்பலையா தேவி” என்று மறுபடியும் அவள் முகத்தை நிமிர்த்தி சத்யன் கேட்க

அவன் வார்த்தைகள் அவள் மனதை தொட்டிருக்க வேண்டும், அவசரமாக “ ச்சேச்சே அப்படியெல்லாம் இல்லை சத்யா, கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு அவ்வளவுதான்” என்றவள் மறுபடியும் ஸ்டவ்வை பற்ற வைக்கும் முயற்ச்சியில் இறங்கினாள்

“ அரிசி எங்க இருக்குன்னு பார்த்து எடுத்து குடு சத்யா” என்றவள் வெற்றிகரமாக ஸ்டவ்வை பற்றவைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஸ்டவ்வில் வைத்துவிட்டு அரிசிக்காக திரும்ப, பின்னால் நெருக்கமாக நின்ற சத்யன் மீது மோதிக்கொண்டாள்

ஒருகையால் அவளை அணைத்தபடி, அரிசி இருந்த பாத்திரத்தை சமையல் மேடை மீது வைத்துவிட்டு இருகைகளாலும் அவளை அணைத்த சத்யன் “ ஏன் தேவி இவ்வளவு பதட்டமா இருக்க, உனக்கு பிடிக்கலைன்னா இங்கருந்து நாம போயிரலாம்” என்று அவள் காதுகளை தன் உதடுகளால் உரசியபடி சத்யன் கேட்க



அவன் கைகளுக்குள் நெளிந்தபடி “ இல்ல போகவேனாம், ஆனா சும்மா சும்மா நீ ஏன் என் கிட்டத்துலயே வந்து நிக்கிற, அதான் எனக்கு ஒருமாதிரியா ஆவுது, நான் சமையல் பண்ற வரைக்கும் என்கிட்ட வராத” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டாள்

அவள் தள்ளியவேகத்தில் இரண்டடி பின்னால் போன சத்யன் .. அவள் உணர்வுகளை புரிந்து “ சரி நான் உன்கிட்ட வரலை நீயே சமையல் பண்ணு” என்றவன் .. கூடத்துக்கு போய் ஒரு சேரை எடுத்துவந்து சமையலறையின் மூளையில் போட்டு உட்கார்ந்துகொண்டு எதெது எங்கே இருக்கிறது என்று சொல்ல

தேவி சாதம் செய்து, காய்கறி இல்லாததால் வெறும் பருப்பு மட்டும் வேகவைத்து இறக்கி தாளித்து வைத்தாள், தொட்டு கொள்ள அப்பளம் பொரிக்க எண்ணையை காயவைத்தாள்

அறையின் புழுக்கத்தில் தேவிக்கு ஏகமாக வியர்வை வழிய, நெற்றியை புறங்கையால் துடைத்தபடி சமையல் செய்தாள் தூக்கி சொருகிய புடவையில் இடுப்பில் வியர்வை வழிய, அதை துடைக்க சத்யனின் கைகள் பரபரத்தது, அவளுடைய வெண்மை நிறத்துக்கு, அடர் ரோஸ் நிற புடவை எடுப்பாக இருக்க, ஒருமணிநேரமாக அவள் அழகை கண்களால் பருகிய சத்யன், தன்னை அடக்கிக்கொள்ள ரொம்பவே சிரமப்பட்டான்



No comments:

Post a Comment