Friday, July 24, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 17

ஒரு வாரம் கடந்தது. சனிக்கிழமை இரவு பூரணியுடன் ஹாலில் பேசி கொண்டுருந்தான் கார்த்திக்.

"அக்கா நீங்க இப்போவே ஊருக்கு போகனுமா?"

"ஆமாம் தம்பி. நாங்க ரெண்டு பேரும் இங்கே வந்து ரெண்டு மாசம் ஆக போகுது. குழந்தை ஆதுவும் பிறந்து ஒரு மாசம் ஆக போகுது.ஜனனிக்கும் இப்போ நல்லபடியா உடம்பு சரி ஆயிடுச்சு. இனிமே எங்களுக்கு இங்கே என்ன வேலை?"

"அக்கா அங்கே கோவைல யாரு இருக்கா. எதுக்கு இப்படி கால்ல சுடு தண்ணிய கொட்டுன மாதிரி உடனே போகனும்னு சொல்றிங்க. நீங்க தம்பி தம்பின்னு வார்த்தைக்கு வார்த்தை கூப்பிடுறது உண்மைனா நீங்க இன்னும் ரெண்டு மாசம் தங்கிட்டு போகணும். அதுக்கப்புறம் உங்க இஷ்டம்" என்று கோபமாக சொல்ல, பூரணி இவ்வளவு அன்பு காட்டும் இவன் வேண்டுகோளை தட்ட மனம் வரவில்லை. தன கணவர் சதானந்தனை பார்க்க, கார்த்திக் அதற்குள் அவரிடம் பேச ஆரம்பித்தான்.



"இங்க பாருங்க மாமா. எங்க மூணு பேருக்கும் உங்களை விட்டா யார் இருக்க, உங்களுக்கும் நாங்க தானே உலகம. நீங்க அங்கே கட்டாயம் இப்பவே போகனுமா. ப்ளீஸ் மாமா" என்று கெஞ்ச "சரி மாப்ளை நீ சொன்னா அதுக்கு appeal ஏது?" என்று சிரித்து கொண்டே, "ஏய் பூரணி நாம இன்னும் ரெண்டு, இல்லைஇல்லை. மூணு மாசம் இருந்துட்டு தான் போகணும்" என்று சொல்ல, சந்தோசத்துடன் தலை அசைத்தாள் பூரணி.

"என்னை தவிர எல்லார் மேலயும் இந்த மனுஷனுக்கு அக்கறைதான்" என்று சலித்து கொண்டாள் ஜனனி.

உள்ளே அவர்கள் படுக்கை அறைக்கு வந்த கார்த்திக் "ஜானு நாளைக்கி காலைல ஒரு நாலு மணிக்கு எழுப்பி விடு குளிச்சுட்டு கோவிலுக்கு போகணும்".

"எந்த கோவிலுக்கு?"

"திருவேற்காடு"

"என்ன திடீர்னு?"

"ஏற்கனவே வேண்டிகிட்டது. சீக்கிரமே முடிச்சிட்டா நல்லதுன்னு பார்கிறேன்"

"சரி எழுப்புறேன்" என்று சொல்ல, குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டி கொண்டுரிந்த ஜனனி, ஆதித்யா தூங்கிய உடன் கட்டிலில் வந்து படுத்தாள். ஏற்கனவே படுத்து உறங்கி விட்ட கார்த்திக்கை கண் கொடாமல் பார்த்திருந்த ஜனனிக்கு எப்போது உறங்கினோம் என்று தெரியவில்லை.

அலாரம் அடிக்க நாலு மணிக்கு எழுந்து கார்த்திக்கை எழுப்பி விட, "நீ தூங்கு நான் குளிச்சுட்டு கிளம்பிறேன்" என்று அவன் குளிக்க கிளம்ப, தூங்காமல் எழுந்து அவனுக்கு பால் காய்ச்சி பூஸ்ட் கலந்தாள்.

குளித்து விட்டு தலை துவட்டி வந்த கார்த்திக் அவளை கண்டவுடன் எரிச்சல் ஆனான். "எதுக்கு இந்த நேரத்ல பூஸ்ட் எல்லாம் கலக்குற,பகல் முழுக்க குழந்தை படுத்துறான். இப்பவாவது கொஞ்ச நேரம் தூங்க கூடாதா?" என்று கேட்க அவனிடம் பதில் ஒன்றும் பேசாமல் ஒரு ஓரப்பார்வை பார்த்து மென்மையாக சிரித்து விட்டு படுத்தாள்.

பூஸ்டை குடித்து விட்டு, "ஜானு கதவ தாள் போட்டுக்க" என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

காலை எட்டு மணி ஆகி விட திடுக்கிட்டு எழுந்தாள் ஜனனி.

"அய்யயோ, நல்லா தூங்கி விட்டோமே" என்று நினைத்து கொண்டே ஜனனி தொட்டிலை பார்க்க இன்னும் உறங்கி கொண்டுரிந்தான் ஆதித்யா.

பல் விளக்கி விட்டு இன்னும் கார்த்திக் ஏன் வரலை என்று யோசித்து கொண்டேவெளியே வந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. மூன்று கார்களும் அங்கே நிற்க அவளுக்கும் குழப்பம் சூழ்ந்தது. 

"வாட்ச் மேன், சார் கார் எடுத்துட்டு போகலையா"

"இல்லைமா"

"எப்படி, பஸ்ல போனாரா"

"எனக்கு தெரியலமா" எரிச்சல் ஆனாள்

"என்ன இந்த வாட்ச் மேன். ஒன்னும் தெரியலை.சரி பஸ்ல தான் போயிருக்கணும்" என்று சமாதானம் ஆனாள்.

"சரி முதல்ல இன்னைக்கு அவருக்கு பிடிச்ச வெண் பொங்கல் பண்ணலாம்" என்று ஜனனி ரெடி செய்ய மணி பத்து ஆகி விட்டது.வீட்டில் எல்லோரும் சாப்பிட அவள் மட்டும் சாப்பிடாமல் காத்திருந்தாள்.

என்ன இன்னும் ஆளை காணமேசரி அம்மா கிட்ட கேக்கலாம். தம்பிக்கு அக்காகிட்ட பாசம் ஜாஸ்தி என்று கிண்டலாக நினைத்து கொண்டே, "அம்மா உன்னோட தம்பி... அதுதான் மாப்ளை எங்க போயிருக்காரு?"

"ஏண்டி உனக்கு தெரியாதா? உன் கிட்ட சொல்லிட்டு தான கோவிலுக்கு போனார்"

"அது சரிம்மா. அவர் போனது நாலரை மணிக்கு. இப்போ பத்து ஆச்சு இன்னும் ஆளை காணமே"

"ஆமா நீ சொல்றது சரிதான்" என்று யோசித்து கொண்டே "அவர் செல் போனை போடு" என்று சொல்ல, "சுவிட்ச் ஆப்" என்று பதில் வந்தது.

பதினோரு மணி அளவில் வீட்டு வாசலில் மோகனின் சிகப்பு கலர் ஸ்விப்ட் கார் வந்து நிற்க, கார்த்திக் கதவை திறந்து இறங்கினான்.அதுவரை நெஞ்சம் பதைக்க வீட்டு வாசலுக்கும் சமையல் அறைக்கும் நடந்து கொண்டுறிந்த ஜனனி அவனை கண்டவுடன் ஓடோடி கட்டி அணைத்து கொண்டாள். 

என்ன செய்வதென்று தெரியாமல் கொஞ்சம் திகைத்த கார்த்திக் அவளை மெதுவாக விலக்கி "என்ன கண்ணம்மா? என்ன ஆச்சு?" என்று கேட்க,

"எங்க போனிங்க கார்த்திக், கோவிலுக்கு போறேன்னு சொல்லிட்டு, கார் கூட எடுக்காம.நாலரை மணிக்கு போனவர் இப்போ தான் திரும்பி வரீங்க"

அதற்குள் மோகன் உள்ளே வந்து "இரும்மா தங்கச்சி நான் பதில் சொல்லுறேன்" என்றான்.

"அம்மா அப்பா வட இந்திய கோவில்கள் டூர் போனாங்க ஞாபகம் இருக்கா?"

"எப்படி மறக்க முடியும்?"

"அப்போ நீ பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டன்னு தெரிஞ்ச உடனே கார்த்திக் பதறி போய்ட்டான். அவனால காரை கூடஓட்ட முடியல.அப்ப நான்தான் அவனை வீட்ல ட்ராப் பண்ணினேன்"



"அது தான் எனக்கு தெரியுமே அண்ணா"

"அப்போ கார்ல என் கூட வந்தப்ப உனக்கும் குழந்தைக்கும் ஒன்னும் ஆக கூடாதுன்னு, அவன் திருவேற்காடு மாரிஅம்மன் கிட்ட வேண்டிகிட்டான். அந்த வேண்டுதலை தான் இப்போ நிறைவேத்தி விட்டான்"

"சரி அண்ணா அதுக்கு ஏன் இவ்வளவு நேரம்?. கார் வேற எடுத்து போகலை. இப்போ என்னன்னா நீங்க வந்து திரும்ப ட்ராப் பன்னுரிங்க. ஒரு வேளை பஸ்ல போனார்னு வச்சுகிட்டா கூட இத்தனை கார் இருக்கும் போது அவர் எதுக்கு பஸ்ல போகணும்.எனக்கு இன்னும் புரியலை".

"அவன் பஸ்ல போனான்னு யார் சொன்னது. அவன் வேண்டுதல் கொஞ்சம் வித்தியாசமானது. உங்க ரெண்டு பேருக்கும் காயம் இல்லாம, நல்லபடியா டெலிவரி ஆனா அவன் நடந்து அம்மனை தரிசிக்க வர்றதா வேண்டிகிட்டான். நேத்தே அவன் என் கிட்ட சொல்லிட்டதால காலைல கோவில்ல வெயிட் பண்ணி கார்ல கூட்டி வந்துட்டேன்"

ஜனனி கார்த்திக்கின் காலை பார்க்க அது லேசாக வீங்கி இருந்தது.

"என்ன கார்த்தி இது. கொஞ்சம் மூடத்தனமா இல்லையா? ஏன் இப்படி பன்னுனிங்க?"

சிரிச்சு கொண்டே கார்த்திக்"ஜனனி இது உனக்கு மூடத்தனமா இருக்கலாம். ஆனா நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு. அதை நான் மதிக்கிறேன். அப்போ நான் இருந்த நிலைமைல எனக்கு யார் கிட்ட என்ன கேக்குரதுன்னு தோணல. அதனாலமாரி அம்மன் மேல என் பாரத்தை போட்டேன்.

நான் வேண்டிகிட்ட மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை இல்லாம, உனக்குநல்லபடியா டெலிவரியும் ஆச்சு. உனக்கு இந்த நம்பிக்கை இருக்கணும்னு நான் எதிர் பார்க்கலை. ஆனா என்னோட நம்பிக்கையை கிண்டல் பண்ணாதே" என்று வருத்தமாகசொல்லி விட்டு தன் வீங்கிய கால்களை இழுத்து கொண்டு உள்ளே சென்றான்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்

மோகன் "என்ன ஜனனி உனக்கு அவனை பத்தி தெரியாதா?"என்று கேட்க தலை குனிந்து நின்றாள். 

"மோகன் அண்ணா அவரை பத்தி எனக்கு தெரியும் ஆனா எதுக்கு இந்த மாதிரி இருவது கிலோ மீட்டர் நடந்து போயி வேண்டுதல் நிறைவேத்தனுமா. இப்போ பாருங்க அவர் காலை இழுத்துட்டு போறத பாத்தா மனசுக்கு கஷ்டமா இருக்கு" என்று கண் கலங்க, பூரணி அவளை தோளில் சாய்த்து "அதுக்காக நீ இப்படி பேசி இருக்க வேண்டாம். சரி சரி நீ வருத்தபடாதே. ஆனா தம்பி உங்க ரெண்டு பேர் மேலயும் வச்சுரிக்கிற பாசத்தை பார்த்தா எனக்கு பெருமையாய் இருக்கு" என்றாள்.

"நல்ல குடும்பம்" என்று சிரித்து விட்டு மோகன் அவன் வீட்டுக்கு கிளம்பினான்

நாட்கள் உருண்டோட ஆதித்யாவுக்கு ஆறு மாதம் ஆனது. சில நாட்களுக்கு முன்னால் சதானந்தன், பூரணி இருவரும் ஊருக்கு கிளம்ப, ஜனனிக்கு வாழ்க்கை கார்த்திக், ஆதித்யாவை சுற்றி சுழன்றது. ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு இருந்தாலும் இருவருக்கும் இடையில் கண்ணுக்கு தெரியாத திரை இருப்பது போல் உணர்வு ஜனனிக்கு. 

ஜனனி பல முறை அவனை தொட்டு பேச முயன்றாலும், அவன் சரியாக ரெஸ்பான்ஸ் தராததால் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி நீடித்தது. குழந்தை ஆதித்யாவின் சிரிப்பு, அழுகை, விளையாட்டு இவற்றை சுற்றியே இருவர் வாழ்கையும் சுழன்றது. 

நவம்பர் மாதத்தின் முதல் வாரம் காலை பத்து மணி அளவில் நேகாவிடம் இருந்து ஜனனிக்கு போன வந்தது"ஜானு உங்க மூணு பேரையும் பார்க்க நான் வர்றேன், நீங்க யாரும் வெளியே போயடாதிங்க" என்று சொல்ல"நாங்க எங்க வெளிய போக போறோம்.நீங்க எப்ப வேணா வாங்க" என்று சலிப்போடு சொல்ல"சரி நான் இன்னும் ஒரு மணி நேரத்ல வர்றேன்" என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.

சொன்னபடியே பதினோரு மணி அளவில் நேகா வர அவள் கூட பிரசன்னமான நடிகரும் வந்தார். கார்த்திக் அவருடன் பேசி கொண்டுருக்க, நேகா ஜனனியை தேடி அவர்கள் படுக்கை அறைக்குள் நுழைந்தாள். அங்கே குழந்தையுடன் கொஞ்சி விளையாடி கொண்டுறிந்த ஜனனியை பார்த்து, "ஏய் ஜானு நீ என்ன குழந்தையோட மட்டும் தான் விளையாடுவியா? என் கூட பேச மாட்டியா?.
ஏன் கார்த்திக் கூட என்ன பிரச்சனை?குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் உங்க ரெண்டு பேருக்கும் இடையில் இடைவெளி குறைஞ்சு இருக்கும்னு நினைச்சேன். ஆனா நீ போனில் விரக்தியா பேசின. பேசுனத பார்த்தா வேற ஏதோ பிரச்சனை இருக்கிற மாதிரி தெரியுது.என்ன கண்ணா கார்த்திக் ரொம்ப முரண்டு பிடிக்கிரானா?"என்று கேட்க, நடந்ததை ஜனனி நடந்ததை விரிவாக சொல்ல,நேகா சிரிக்க ஆரம்பித்தாள். 

"இங்க பாரு ஜானு உனக்கு விபரம் பத்தலைன்னு நினைக்கிறேன்.நான் மட்டும் அவனோட பொண்டாட்டியா இருந்துருந்தா இந்நேரம் என் காலடியில விழுந்து கிடக்க வச்சுரிப்பேன்".


"நேகா நீங்க சொல்றது என்னன்னு புரியலை". 

"கொஞ்சம் கிட்ட வர்றியா சில விஷயங்களை ரகசியமாய் தான் சொல்லணும். கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் எத்தனை தடவ தாம்பத்யம் வச்சுரிப்பிங்க"

ஜனனி நிறைய நேரம் யோசிப்பதை பார்த்து"என்னடி எத்தனை தடவைன்னு மறந்து போச்சா?" என்று கிண்டல் செய்ய

"நீங்க வேற, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தடவ கூட இல்லை"

"என்ன?" என்று நேகா அதிர்ச்சியில் வாயடைத்து பார்க்க, 

"அந்த கொடுமைய ஏன் கேக்குரிங்க, ஆரம்பத்தில நான் கொஞ்சம் முரண்டு பிடிச்சேன். அதுக்கப்புறம் நான் கர்ப்பமா இருந்ததால நோ செக்ஸ். இப்போ குழந்தை பிறந்த பின்னே ஆறு மாசமா இந்த மனுஷன் முரண்டு பிடிக்கிராறு" என்று எரிச்சலுடன் சொல்ல 

"சரி, எனக்கு கார்த்திக்கோட வீக்னெஸ் தெரியும். நீ என் கிட்ட வா உன் காதில சொல்றேன்" என்று அருகில் இழுத்து சொல்ல,கவனமாக கேட்டாள் ஜனனி.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் இருவரும் எழுந்து குழந்தையுடன் கார்த்திக், நேகாவின் புதிய பாய் பிரெண்ட் இருந்த ஹாலுக்கு வந்தனர். 

நேகா புதிய நண்பரை ஜனனிக்கு அறிமுக படுத்தி வைத்தாள்

"என் கூட ஒரு படத்ல ஜோடியாக நடித்தார். என்னை பத்தி அவர் கிட்ட எல்லா விஷயமும் சொல்லிட்டேன். அப்படியும் என்னை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு கடந்த ஒரு வருடமா காத்துகிட்டு இருக்கார். என் அம்மா, அப்பா, அண்ணன், அக்காகிட்ட தானே பேசி சம்மதம் வாங்கிட்டார். கடைசியா என்னையும் சம்மதிக்க வச்சிட்டார். அவருக்கும் படம் குறைந்து விட்டது. அதால வர்ற பிப்ரவரி மாசம் எங்களோட கல்யாணம். நீங்க ரெண்டு பெரும் என்னோட பர்சனல் பிரெண்ட்ஸ். கட்டாயம் வரணும். இல்லைனா நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று சொல்ல, 

அந்த நண்பரும் "கார்த்திக் சார், மேடம் கட்டாயம் வந்துருங்க. நேகாவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தே பெரும் பாடா போச்சு.கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா... இந்த கன்னி பையனோட சாபம் உங்களை சும்மா விடாது" என்று கிண்டல் அடிக்க அனைவரும் சிரித்தனர்.

கட்டாயம் சாப்பிட்டு விட்டு போக வேண்டும் என்று ஜனனியும், கார்த்தியும் வலியுறுத்த, நேகா தன் வருங்கால கணவனுடன் மதிய உணவை முடித்து விட்டு கிளம்பினாள்.





No comments:

Post a Comment