Friday, July 24, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 19

போனை எடுத்து மோகனை அழைத்தபடி மெல்ல டைனிங் ஹால் வர, அடுத்த முனையில் மோகன் போனை எடுத்தான். 

"என்னடா கார்த்திக், காலைல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?"

"அதல்லாம் ஒண்ணுமில்லை. நீ எதுக்கு கூப்பிட்ட சொல்லு"

"நாளைக்கி காமராஜர் கலை அரங்கத்தில யவன ராணி படத்தின் சில்வர் ஜூப்ளி விழா. சினிமாவை ஒட்டி சில போட்டிகள் நடத்தி இருக்கோம். அதுல பத்து பேர் வின்னர்ஸ். எல்லாருக்கும் போருர்ல நாற்பது லட்ச ருபாய் மதிப்புள்ள பிளாட், கொடுக்குறோம். மேலும் ஒரு பெஸ்ட் ஸ்லோகன் போட்டில ஒருத்தருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க போறோம்னு" சொல்ல, 

"சரிடா அதுக்கு நான் என்ன பண்றது"

"பளார்னு அரஞ்சேன்னா. முதல்ல போனை ஜனனிகிட்ட கொடு" என்று சொல்ல, 

"சரி சரி கோபபடாதே. இப்பவே கொடுக்கிறேன்"

.
"சொல்லுங்கமோகன் அண்ணா"

"என்ன பண்ணிக்கிட்டு இருக்க"

"சப்பாத்தி பண்ணிக்கிட்டு இருக்கேன்"

"இந்த நக்கல் தானே வேணாம்கிறது"

"நீ இன்னைக்கி வீட்ல ப்ரீயா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உன் புருஷன் கிட்ட பேசினா லூசு மாதிரி உலர்றான்.நான் வீட்டுக்கு வந்து விபரமாக சொல்றேன்" என்று சொல்ல

"நீங்க எப்ப வேணாம் வரலாம்னா"

"சரி போனை அந்த மடையன் கிட்ட கொடு."

"டேய் நீ எங்கயும் போய் தொலையாத. நான் ஒரு பதினோரு மணிக்கு வரேன்"

சொன்னது போல் மோகன் வந்து இறங்க, கூட பாண்டியனும் வந்தார்

இருவருக்கும் ஜனனி காபி கொடுக்க, ஜனனியை நலம் விசாரித்த பாண்டியன், ஜனனி நீயும் வாம்மா சில விஷயங்கள் பேசி முடிக்க வேண்டி இருக்குஎன்று அழைக்க குழந்தையுடன் ஜனனி அமர அருகில் கார்த்திக். 

"மோகன் நீங்க விஷயத்தை ஆரம்பிங்க"

"கார்த்திக், ஜனனி, இதுவரைக்கும் நம்மபடம் 1500 கோடி வசூலை அள்ளிடுச்சு. உங்க பங்கு 225 கோடி. கடன், நடிகர் அக்ரம் சம்பளம் போக மீதி இருநூறு கோடி. அதுக்கான காசோலை இதில இருக்கு" என்று சொல்ல, கார்த்திக் ஜனனி இருவரும் நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க,

"பாண்டியன் நீங்க சொன்னாதான் நம்புவாங்க போலிருக்கு"

"கார்த்திக் மோகன் சொல்றது உண்மை. இந்தாங்க காசோலை. மத்தபடி, நாங்க நஷ்டம் எதிர்பார்த்த எடத்ல 700௦௦ கோடிக்கு மேல லாபம் வந்துருக்கு. அதுக்கு முதல்ல உங்களுக்கு நன்றி"

"இந்த படம் ஓடின அரங்குகளில் ஒரு புதுமையான போட்டி வச்சுரிந்தோம்.அதில வெற்றி பெற்ற பத்து பேருக்கு டைரக்டர் மற்றும் கதா நாயகன் அப்படிங்கிற முறைல நீங்க தான் கொடுக்கணும். 

ஸ்லோகன் போட்டில மூணு பொண்ணுங்கள செலக்ட் பண்ணி இருக்கோம். அதுல ஒருத்தர செலக்ட் பண்ண போறது உங்க மனைவி,மற்றும் படத்தோட ஒரு கதாநாயகியான ஜனனி தான்.

முதலமைச்சர்கிட்ட கேட்டுருக்கோம். வரேன்னு சொல்லி இருக்காங்க. கட்டாயம் நீங்க வரணும். இல்லைனா இந்த பாராட்டு விழாவை கான்சல் செய்ய வேண்டி இருக்கும்"
ஜனனி, "நான் பாத்துக்கிறேன் பாண்டியான் சார். நீங்க மத்த ஏற்பாடை கவனியுங்க" என்று சொல்ல, 

மோகன் ஜனனியிடம், "இது தான் அந்த வெற்றி பெற்றவர் லிஸ்ட் மற்றும் போட்டோ. ஸ்லோகன் போட்டில செலக்ட் ஆன மூணு பேரையும் கூப்பிடுவோம், ஆனா ஒருத்தருக்கு தான் பரிசு. அதை மேடைல தான் அறிவிக்க போறோம். 

அந்த மூணு பேர் போட்டோ மற்றும் லிஸ்ட் இருக்கு. எல்லாத்தையும் ஒரு தடவ பாத்துடும்மா ஜனனி" என்று மோகன் கடைசி வார்த்தைகளை ரெண்டு தடவை அழுத்தி சொல்ல, அவளுக்கு புரிந்தது. 

"சரி அண்ணா நான் பாத்துக்கிறேன்" மோகன் பாண்டியன் இருவரும் நன்றி கூறி விட்டுகிளம்பினர்.

எதிர் பார்த்த கூட்டமோ ஆயிரத்து ஐநூறு. வந்த கூட்டமோ மூவாயிரத்துக்கும் மேல். சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் கடைசியாக வந்து விட கூட்டம் அலை மோதியது.

படத்தை வாழ்த்தி பேசிய முதல்வர், "சாண்டில்யன் என்ற எழுத்தாளர் பல தலை முறைகளை சரித்திரத்தில் மூழ்க வாய்த்த எழுத்தாளர்.அவர் கதைகளை படமாக எடுப்பது மிகப்பெரிய சவால். அவரது கதைகளில் ஒரு சிறந்த கதை யவன ராணி. அதை உலகளாவிய படமாக எடுத்து தமிழுக்கு பெருமை சேர்த்த இயக்குனர் கார்த்திக், தயாரிப்பாளர் பாண்டியன், மற்றும் படக் குழுவினர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டு. இப்போது பரிசுகளை நான் வழங்குவதை விட, இயக்குனர் கார்த்திக் வழங்குவதே சரியாக இருக்கும்" என்று சொல்ல, பலத்த கரகோஷம் எழுந்தது. 

போட்டிகளில் வெற்றி பெற்ற பத்து பேருக்கும் கார்த்திக்பரிசு தர, அதை தொடர்ந்து மோகன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து,"இப்போது யவனராணி படத்தின் சிறப்பு ஸ்லோகன் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரில் முதல் பரிசு பெறப்போகும் நபருக்கு பரிசு கொடுக்க திருமதி ஜனனி கார்த்திக்கை மேடைக்கு அழைக்கிறேன்"

"முதல் பரிசுக்கான அன்பளிப்பு ஐம்பது லட்சம் ரொக்கம். அதை பெறுபவர் பானு ரேகா" என்று ஜனனிசொல்ல கரஹோசம் நிறைய,கார்த்திக் "யார் அது" என்று பார்க்க அவனுக்கு அடையாளம் தெரிந்தது. தலை சுற்றுவது போல் இருந்ததால் அருகில் இருந்த சேரில் அமர்ந்து பானு வருவதை பார்த்தான்.கடைசியாக ஐந்து வருடங்களுக்கு முன் பார்த்தது. 

மேடை ஏறிய பானு ஜனனியிடம் நன்றி சொல்லி விட்டு பரிசு வாங்க, ஜனனி அவளிடம் பேச சொல்லி மைக்கை கொடுத்தாள்.

"தமிழக முதல்வர் அவர்களே, பெரியோர்களே தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே. எனக்கு இந்த பரிசு கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்ததில்ல. எனக்கு டைரக்டர் கார்த்திக்கோட படங்கள் ரொம்ப பிடிக்கும். யவன ராணி மட்டும் இருவது தடவ பார்த்து இருக்கேன். இந்த படத்தோட வெற்றில டைரக்டர் கார்த்திக் பங்கு மகத்தானது. அவருக்கும் அவர் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த பணம் என்னோட பசங்க படிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். என்னோட அன்பு தோழி ஜனனிக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்"

விழா இனிது முடிய, முதல்வரும் கிளம்ப, ஜனனி பானு இருந்த இடத்துக்கு வந்தாள். அதற்குள் கார்த்திக்கும் வர, பானுவின் கண்கள் கலங்கின. எல்லாரும் சென்று விட அங்கே சில பேர் மட்டும் இருக்க, பானு பேச ஆரம்பித்தாள்.

"ஜனனி உனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் நடந்த செய்தியை கேள்விப்பட்ட நான் ரொம்ப சந்தோசப்பட்டேன். நீங்க ரெண்டு பேரும் பொருத்தமான ஜோடி. யவன ராணி படத்தில நீங்க ரெண்டு பேரும் என் கண்ணுக்குள்ள நிக்கிரிங்க."

"ரவீந்தர் வரலையா?" என்று மோகன் கேட்க, எரித்து விடுவது போல் பார்த்தாள். 

ஜனனி அவள் கையை பிடித்து கொண்டே ""என்ன நடந்தது பானு?" என்று கேட்க,



"அவர் ஆப் சைட் போன எடத்துல ஒரு சிந்தி பொண்ணு மேல கை வச்சுட்டாரு. கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.என்னையும் அவங்க கூட இருக்க சொன்னாங்க. என் தன் மானம் இடம் கொடுக்கல. நான் என் ரெண்டு குழந்தைகளையும் கூட்டிகிட்டு வெளியே வந்துட்டேன். அம்மா அப்பா கோவை வர சொன்னாங்க. எனக்கு யாருக்கும் பாரமா இருக்க விருப்பம் இல்லை.அதனால இங்கேயே ஒரு தனியார் கம்பனில ரிசப்சனிஸ்டா இருக்கேன். அப்படியே வாழ்க்கை ஓடிகிட்டு இருக்கு"என்று விரக்தியாக சொல்ல,

ஜனனி பானுவிடம் "கவலை படாதிங்க. நாங்க இருக்கோம். நீங்க ஒரு நாள் ரெண்டு குழந்தைகளையும் கூட்டி கொண்டு கட்டாயம் வீட்டுக்கு வரணும் என்று சொல்லி பானுவின் போன நம்பர் வாங்கி வைத்து கொண்டாள்.

நடப்பதை பேசாமல் கவனித்து கொண்டிருந்த கார்த்திக், பானு கிளம்ப "'பை'' சொல்லி வழி அனுப்பி வைத்தான்.வீடு திரும்பும்போது கார்த்திக் பேசாமல் வர என்ன மாமா உங்களுக்கு பழைய ஞாபகம் வந்துருச்சா?" என்று கேட்க, 
""ஆமா ஜனனி ஆனா ஒன்னு மட்டும் உண்மை. நீ என் வாழ்க்கைல வந்த பின் எனக்கு கிடைசுரிக்கிற நிம்மதி, அவளை கல்யாணம் பண்ணிரிந்தா கிடைச்சுருக்காது".

மோகன் பக்கத்தில் இருந்தபடி "கார்த்திக் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? பானுக்கு இந்த பரிசு கிடைக்கும்னு முடிவு பண்ணினது ஜனனிதான். நேத்து வந்த மூணு பேர்ல பானு போட்டோவும் இருந்தது.

ஜனனி பானுவுக்கு பரிசு கிடைக்காம செஞ்சுடுவான்னு நினைச்சேன்.ஆனா பானு பத்தி மேலும் விபரங்களை விசாரிச்சு அவளுக்கு முதல் பரிசு கொடுத்து, பரிசு தொகையை ஐந்து லட்சத்தில இருந்து ஐம்பது லட்சத்துக்கு உயர்த்தியதும் ஜனனிதான்."

கார்த்திக் ஜனனியை நம்ப முடியாதஆச்சர்யத்துடன் பார்க்க, "என்ன இருந்தாலும் அவள் உங்களோட முதல் காதலி ஆச்சே. அவ கஷ்டபட்டா எனக்கு கஷ்டமா இருக்கும்""

அவன் அவளை கேள்வி குறியோடு பார்க்க"அவன் கையை எடுத்து தன் கையில் வைத்து கொண்டே சொன்னாள். ""நான் உங்களை காதலிக்கிறது மாதிரி உங்களோட உணர்வுகளையும் காதலிக்கிறேன். என்று சொல்லி கையில் முத்தம் கொடுத்தாள் 

அன்றைய இரவு கூடலுக்கு பின் கார்த்திக் மார்பில் சரிந்தபடி "மாமா உங்களுக்கு சொந்தக்காரங்க கிடையாது, எனக்கோ அண்ணன் தம்பி கிடையாது அதுனால நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன். அதுக்கு நீங்க தான் ஆதரவு கொடுக்கணும்" 

"என்ன சொல்லு"

"அது வந்து" என்று தலை குனிந்து கொண்டே "நமக்கு ஒரு குழந்தையோட நிறுத்திக்க கூடாது நிறைய பெத்துக்கணும். இந்த வீடு பூரா குழந்தைகளா இருக்கணும்" என்று ஆசையோடு சொல்ல


"அது சரி ஜானு எத்தனை பெத்துக்கலாம்னு சொல்ற"

"ஒரு பத்து.அவள் இரண்டு கைகளையும் விரித்து காண்பிக்க

"இது கொஞ்சம் over. இப்போ ஒன்னு இருக்கு இன்னொரு ரெண்டு குழந்தைகளோட நிப்பாட்டிக்கலாம். அதோட ஒவ்வொரு பிரசவமும் ஒரு பொண்ணுக்கு புது பிறப்பு மாதிரி அதுனால நான் சொல்றத கேளு"" என்று சொல்ல

"மாட்டேன். இன்னும் நாலு குழந்தைகளாவது பெத்து கொள்ள வேண்டும். உங்களுக்கு என்ன. நான் தானே கஷ்டபட போறேன்"என்று சொல்ல,
"சரி நான் சொல்லி நீ என்னைக்காவது கேட்டு இருக்கியா இதை மட்டும் கேட்க" என்று அன்போடு சலித்து கொண்டான்

"அது சரி இப்போ என்ன பண்ண போறீங்க. வீட்ல சும்மா இருந்த போரடிக்காதா?

"திரும்ப கதை எழுத போறேன். நம்மள பத்திதான்."


"ஹை, எப்போ ஆரம்பிக்க போறீங்க?"

"நாளைக்கே, அதுதான் நடிகர் அக்ரம் கொடுத்த தங்க பேனா இருக்கே"

"ஆமால்ல"

"சரி கதையோட டைட்டில் என்ன"

"கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே"

"கொஞ்சம் பெரிய டைட்டிலா இருக்கே"

"சரி சுருக்கிடலாம்"

"கேட்டதெல்லாம் நான் தருவேன். இது ஒகே யா?"

"இது சூப்பர்"" என்று சொல்லி ஜனனி சிரிக்க, குழந்தை ஆதித்யாவும் அவர்கள் சிரிப்பில் கலந்து கொண்டான்.

THE END



பின்னுரை

1. அடுத்த ஆறு மாதத்தில் கார்த்திக்கதை எழுதி வெளியிட நல்ல வரவேற்பு கிடைத்தது
2. மோகனை டைரக்டராக வைத்து கார்த்திக் படம் தயாரிக்க நடிகர் அக்ரம் நடித்து கொடுத்தார்

3. செப்டம்பர் மாதத்தில் ஜனனி கார்த்திக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததுஹரிணி தாரணி என்று பெயர் சூட்டினர்

4. சதானந்தன் பூரணி தம்பதியினர் சென்னைக்கு நிரந்தரமாக குடியேறினர்



No comments:

Post a Comment